வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 23, 2016

ஜகாத் கருணை அல்ல ; கடமை



ஜகாத் கடமையாகாத ஒரு சமூதாயமும் இல்லை
நபிமார்களின் கட்டளைக்குட்படுத்தப்பட்ட சமூகங்களைப் பற்றிபேசுகிற போது குர் ஆன் சொல்கிறது.
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ(5)
ஜகாத் விசயத்தில் யூதர்களுக்கான உத்தரவை இன்னொரு வசனம் தெளிவுபடுத்துகிறது.  
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ(83)
மூஸா (அலை) அவர்களின் சமூகத்தில் ஜகாத் கொடுக்க மறுத்த செல்வந்தன்
காரூனைப் பற்றி குர்  ஆன் பேசுகிறது,  
إِنَّ قَارُونَ كَانَ مِنْ قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ وَآتَيْنَاهُ مِنْ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ
إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ(76)وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنْ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ(77)قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِندِي أَوَلَمْ يَعْلَمْ أَنَّ اللَّهَ قَدْ أَهْلَكَ مِنْ قَبْلِهِ مِنْ القُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا وَلَا يُسْأَلُ عَنْ ذُنُوبِهِمْ الْمُجْرِمُونَ(78)
அவனது கஜானாக்களின் சாவியை 60 ஒட்டகைகள் சுமக்க தள்ளாடும் என முபஸ்ஸிர்கள் கூறுகீறார்கள்.
அல்லாஹ் கொடுத்ததை கொடு என்று சொல்லப்பட்ட போது இது என் அறிவால் திரட்டியது என அகம்பாவம் பேசி ஜகாத் கொடுக்க மறுத்தான். பூமிக்குள் புதையுண்டு மாண்டான், அவனது சொத்துக்களும் அழிந்தன,  
فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنْ المُنْتَصِرِينَ(81)
பெருமானார் மக்காவிலிருந்த போதும்  ஜகாத் வலியுறுத்தப்பட்டது,
ஜகாத்தில் மக்கிய்யும் உண்டு,  மதனீய்யும் உண்டு.  
ஆனால் மக்கிய்யான ஜகாத் முறைப்படுத்தப்பட்ட ஜகாத் அல்ல.
மக்காவில் நிர்பந்தமாக வாங்க இயலவில்லை.
மக்காவில் தேவைக்கு கொடுப்பதை கிடைக்கும் போது கொஞ்சம் தர்மம் செய்வது வலியுறுத்தப்பட்டது.
அன் ஆம் 141 வசனம் அன்றைய ஜகாத்தை சொல்கிறது என சில முபஸ்ஸிர்கள் கூறுகிறார்கள். وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ
وَهُوَ الَّذِي أَنْشَأَ جَنَّاتٍ مَعْرُوشَاتٍ وَغَيْرَ مَعْرُوشَاتٍ وَالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ كُلُوا مِنْ ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ(141)
தப்ஸீர் தப்ரீயில் இது ஜகாத் முறைப்படுத்தப்படுவதற்கு முந்தைய நிலை என்று கூறுகிறர்.
அறுவடையின் போது அங்கு குழுமியிருக்கும் ஏழைகளுக்கு அதில் ஒரு தேவையான ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்ற நடை முறை இருந்தது,
عن عطاء:(وآتوا حقه يوم حصاده)، قال: ليس بالزكاة، ولكن يطعم من حضره ساعتئذٍ حَصِيده .
திருக்குர் ஆனின் இன்னொரு இடத்தில் மக்காவின் மக்களை எச்சரிப்பதற்கு அல்லாஹ் முன்பொரு காலத்தில் நிகழ்ந்த உதாரணததை கூறுகிறான்.
எமன் நாட்டில் ஒரு செல்வந்தர் இருந்தார். பரோபகாரி. அவருடை விளைநிலத்தில் அறுவடையன்று ஊரிலுள்ள ஏழைகள் எல்லோரும் கூடிவிடுவார்கள், எல்லோருக்கும் அவர் கொடுப்பார். மீதியை தன் வீட்டுக்கு கொண்டு செல்வார். அவர் இறந்த பிறகு அறுவடைக் காலம் வந்தது, அவருடைய பிள்ளைகளுக்கு தந்தையின் பரந்த சிந்தனை இருக்கவில்லை, தந்தையை ஊதாரியாக அவர்கள் நினைத்தார்கள். இந்த ஏழைகள் எப்படி ஏதோ தாம் சம்பாதித்தை கேட்பது போல அன்றைய தினம் கூடிவிடுகிறார்களே என்று கோபப்பட்டார்கள், இந்த முறை அவர்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை என்று முடிவு செய்தார்கள், ஏழைகள் வருவதற்கு முன் இரவோடிராவாக ஆட்களை அழைத்துச் சென்று அறுவடை செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டார்கள்.  அல்லாஹ் வேறு திட்டமிட்டான். ஒரு ஆபத்தை அனுப்பினான். தோட்டம் முழுவது நாசமானது. இருட்டு நேரத்தில் தமது விளைந்து நிற்கும் தோட்டத்தை பார்க்க வந்தவர்கள் தோட்டம் கரிந்து கிடப்பதை பார்த்து சந்தேகப்படார்கள், நாம் தடம் மாறி வந்து விட்டோமோ என்று நினைத்தார்கள், அவர்களில் மூத்தவர்கள் இல்லை இது தான் நமது தோட்டம், அது அழிந்து விட்டது என்று கூறி வருத்தமுற்றார்கள்
அல்லாஹ் அற்புதமாக் கூறுகிறான்,
إِنَّا بَلَوْنَاهُمْ كَمَا بَلَوْنَا أَصْحَابَ الْجَنَّةِ إِذْ أَقْسَمُوا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ(17)وَلَا يَسْتَثْنُونَ(18)فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِنْ رَبِّكَ وَهُمْ نَائِمُونَ(19)فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ(20)فَتَنَادَوا مُصْبِحِينَ(21)
أَنْ اغْدُوا عَلَى حَرْثِكُمْ إِنْ كُنتُمْ صَارِمِينَ(22)فَانطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ(23)أَنْ لَا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِسْكِينٌ(24)وَغَدَوْا عَلَى حَرْدٍ قَادِرِينَ(25)فَلَمَّا رَأَوْهَا قَالُوا إِنَّا لَضَالُّونَ(26)بَلْ نَحْنُ مَحْرُومُونَ(27)قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُلْ لَكُمْ لَوْلَا تُسَبِّحُونَ(28)قَالُوا سُبْحَانَ رَبِّنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ(29)فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَلَاوَمُونَ(30)قَالُوا يَاوَيْلَنَا إِنَّا كُنَّا طَاغِينَ(31)
عَسَى رَبُّنَا أَنْ يُبْدِلَنَا خَيْرًا مِنْهَا إِنَّا إِلَى رَبِّنَا رَاغِبُونَ(32)كَذَلِكَ الْعَذَابُ وَلَعَذَابُ الْآخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا يَعْلَمُونَ(33)
தப்ரி விரிவுரையில் பின்வரும் செய்தி வருகிறது.
عن عكرمة، فيقوله:( لا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِسْكِينٌ ) قال: هم ناس من الحبشة كانت لأبيهم جنة كان يطعم المساكين منها، فلما مات أبوهم، قال بنوه: والله إن كان أبونا لأحمق حين يُطعم المساكين، فاقسموا ليصرمنها مصبحين، ولا يستثنون، ولا يطعمون مسكينا.
حدثنا ابن عبد الأعلى، قال: ثنا ابن ثور، عن معمر، عن قتادة، في قوله:( لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ ) قال: كانت الجنة لشيخ، وكان يتصدَّق، فكان بنوه ينهونه عن الصدقة، وكان يمسك قوت سنته، وينفق ويتصدَّق بالفضل؛ فلما مات أبوهم غدوا عليها فقالوا:( لا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِسْكِينٌ ).

அல்லாஹ் கொடுத்ததை வாரி வழங்குகிறவர்களுக்கு மேலும் தரப்படும் . ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும். கொடுக்காவிட்டால் ஆபத்துக்களை வரவழைப்பதாகிவிடும்

இந்த தத்துவம் ஆதியிலிருந்தே போதிக்கப்பட்டது , எல்லா சமூகத்திற்கும் எல்லா சந்தர்ப்பத்திலும்.

மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைந்த பிறகு திட்டமிட்ட வடிவிலான கட்டாய  ஜகாத்  ஹிஜ்ரீ இரண்டாம் வருடம் கடமையாக்கப்பட்டது.

தவ்பா அத்தியாயத்தின் 103 வசனம் ஜகாத்தை கடமையாக்கி புதிய நிர்பந்த வடிவத்தில்

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلاتَكَ سَكَنٌ لَهُمْ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ} التوبة /103

இந்த ஆயத் இறங்கிய பிறகு செல்வந்தர்களிடம் ஜகாத்தை வசூலிக்க பெருமானார் (ஸல்) ஆட்களை அனுப்பினார்கள்.

نزلت آية الصدقة «خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها..» فأرسل الرسول (ص) رجلين الى ثعلبة لأخذ الصدقة منه، ولما أخبراه مقالة الرسول (ص) قال لهما: هذه أخت الجزية. وامتنع عن دفعها، فرجع الرجلان الى النبي (ص) فلما رآهما قال لهما: يا ويح ثعلبة ويا ويح ثعلبة ما فعله ثعلبة.

ஜகாத் இஸ்லாத்தின் பிரதான கடமையாக வலியுறுத்தப்பட்டது,

 قال البي صل الله عليه وسلم  بنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّداً رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ 

ஒருவரை முஸ்லிம் என்று ஏற்பதற்கான அடையாளமாக ஜகாத் அடையாளமிடப்பட்டது,

·        فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
·        فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ (11

ஜகாத் தரமறுப்பவர்களோடு யுத்தம் நடத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

عن ابن عمر رضي الله عنهما ، ان رسول الله صلى الله عليه وسلـم قـال : أمرت أن أقاتل الناس حتى يـشـهــدوا أن لا إلــه إلا الله وأن محمد رسول الله ، ويـقـيـمـوا الصلاة ، ويؤتوا الزكاة ؛ فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام ، وحسابهم على الله تعالى )

பெருமானார் (ஸல்) அவர்கள் வபாத்தான போது சில  وصل علييهم  என்ற குர் ஆனின் வாசகத்தை குறிப்பிட்டு இப்போது துஆ செய்கிற நபி இல்லை எனவே ஜகாத் தர முடியாது என வாதிட்ட போது அவர்களோடு யுத்தம் செய்ய அபூபக்கர் ரலி தயாரானார்கள்.


عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قالَ: لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللّهِ - صلى الله عليه وسلم - وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ بَعْدَهُ، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ، قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لأَبِي بَكْرٍ رضي الله عنهما: كَيْفَ تُقَاتِلُ النَّاسَ، وَقَدْ قَالَ رَسُولُ اللّهِ - صلى الله عليه وسلم - "أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لاَ إِلٰهَ إِلاَّ الله. فَمَنْ قَالَ: لاَ إِلٰهَ إِلاَّ الله فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلاَّ بِحَقِّهِ، وَحِسَابُهُ عَلَى الله؟" فَقَالَ أَبُو بَكْرٍ: وَالله لأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاَةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ، وَالله لَوْ مَنَعُونِي عِقَالاً كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللّهِ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهِ. فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رضي الله عنه: فَوَالله مَا هُوَ إِلاَّ أَنْ رَأَيْتُ الله عَزَّ وَجَلَّ قَدْ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ.فَعَرفتُ أَنَّهُ الْحَقُّ

ஜகாத் கொடுப்பதை ஈமானிய சுவைய அறிந்து கொண்டதன் அடையாள்ம  என்றும் பெருமானார் (ஸல்) சொன்னார்கள்.

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُعَاوِيَةَ الْغَاضِرِيَّ حَدَّثَهُمْ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " ثَلاثٌ مَنْ فَعَلَهُنَّ فَقَدْ طَعِمَ طَعْمَ الإِيمَانِ : مَنْ عَبَدَ اللَّهَ وَحْدَهُ ، فَإِنَّهُ لا إِلَهَ إِلا اللَّهُ ، وَأَعْطَى زَكَاةَ مَالِهِ طَيِّبَةً بِهَا نَفْسُهُ زَائِدَةً عَلَيْهِ فِي كُلِّ عَامٍ ، وَلَمْ يُعْطِ الْهَرِمَةَ ، وَلا الرَّدِيئَةَ ، وَلا الشَّرَطَ اللَّئِيمَةَ ، وَلا الْمَرِيضَةَ ، وَلَكِنْ مِنْ أَوْسَطَ مَا لَكُمْ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَسْأَلْكُمْ خَيَّرَهُ ، وَلَمْ يَأْمُرْكُمْ بَشَرِّهِ ، وَزَكَّى عَبْدٌ نَفْسَهُ " ، فَقَالَ رَجُلٌ : وَمَا تَزْكِيَةُ الْمَرْءِ نَفْسَهُ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : " يَعْلَمُ أَنَّ اللَّهَ مَعَهُ حَيْثُ كَانَ " .

ஜகாத் கொடுக்காவிட்டால் கிடைக்கும் தண்டனையை மிக கடுமையாக குறிப்பிட்டார்கள்
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ صَاحِبِ ذَهَبٍ وَلَا فِضَّةٍ لَا يُؤَدِّي مِنْهَا حَقَّهَا إِلَّا إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ صُفِّحَتْ لَهُ صَفَائِحَ مِنْ نَارٍ فَأُحْمِيَ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَيُكْوَى بِهَا جَنْبُهُ وَجَبِينُهُ وَظَهْرُهُ كُلَّمَا بَرَدَتْ أُعِيدَتْ لَهُ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ حَتَّى يُقْضَى بَيْنَ الْعِبَادِ فَيَرَى سَبِيلَهُ إِمَّا إِلَى الْجَنَّةِ وَإِمَّا إِلَى النَّارِ.. صحيح مسلم
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، أَنَّ امْرَأَةً مِنْ أَهْلِ الْيَمَنِ أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِنْتٌ لَهَا ، فِي يَدِ ابْنَتِهَا مَسَكَتَانِ غَلِيظَتَانِ مِنْ ذَهَبٍ ، فَقَالَ : " أَتُؤَدِّينَ زَكَاةَ هَذَا ؟ " قَالَتْ : لَا , قَالَ : " أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ ؟ " , قَالَ : فَخَلَعَتْهُمَا فَأَلْقَتْهُمَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ : هُمَا لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- النسائى

எதற்கு நாம் ஜகாத் கொடுக்கவேண்டுமோ அதற்குரிய ஜகாத்தை அறிந்து நாம் கொடுத்து விட வேண்டும். நாமாக கற்பனை செய்து கொண்டு கொடுப்பதல்ல ஜகாத் என்பது.
நான் வகை சொத்துக்களில் ஜகாத் கடமையாகும்
1.   தங்கம் வெள்ளி நாணயங்கள்
2.   உயிரினங்களில் ஆடு மாடு ஒட்டகை
3.   விளை பொருட்களில் பாதுகாக்கப்படுகிற தானியங்கள் மற்ற உணவு பொருட்கள்
4.   வியபாரப் பொருட்கள்

இவற்றில் வைரங்களுக்கு ஜகாத் கிடையாது.
அதே போல் யானை குதிரைக்கு ஜகாத் கிடையாது
அதே போல் தரிசாக கிடக்கிற நிலங்களில் ஜகாத் இல்லை, அது எவ்வளவு மதிப்புடையதாக இருந்தாலும்.

علي بن أبي طالب أن النبي صلى الله عليه وسلم قال : ( للسائل حق وإن جاء على فرس ) أخرجه أبو داود (1665)

எனவே ஜகாத்தை அல்லாஹ்வும் ரஸூலும் எதில் நிர்ணயித்திருக்கிறார்களோ அதில் ஜகாத் கொடுக்க வேண்டும் அதே போல அல்லாஹ்வும் ரஸூலும் நிர்ணயித்து வகையில் ஜகாத் கொடுக்க வேண்டும்.

தற்காலத்தில் ஜகாத்தை நிர்ணயிப்பதிலும் ஜகாத் கொடுக்கும் முறையை நிர்ணயிப்பதிலும் தான் தோன்றித்தனமான போக்கு அதிகரித்து வருகிறது.

இது முற்றிலும் களையப்பட வேண்டும். பாடு பட்ட சேர்த்த பணத்தை செலவழிக்கிற போது அது நன்மையை தர வேண்டாமா என்பதை காரிய சித்தமுள்ளவர்கள் யோசிக்க வேண்டும்.

எனவே சுமார் 40 ஆயிரம் ரூபாயுக்கு மேல் ஆண்டு வருமானத்தில் மிச்சம் வைத்திருப்பவர்கள் தகுந்த ஆலிம்களை அணுகி தமது சொத்து விபரங்களை தெரிவித்து ஜகாத்தை எப்படி யாருக்கு கொடுக்க வேண்டும் என்கிற விவரத்தை தெரிந்து கொள்வது கடமையாகும்.

நிறைவாக 2 செய்திகளை  சொல்லி முடிக்கிறேன்,
{1} ஜகாத் என்பது செல்வந்தர்கள் ஏழைகள் மீது காட்டுகிற கருணை அல்ல. ஏழைகளுக்கு செய்ய வேண்டிய கடமையாகும்.

செல்வந்தர்களின் சம்பாத்தியத்தில் கேட்டுவருகிற ஏழைகளுக்கும் கேட்காமல் தயங்கி நிற்கிற ஏழைகளுக்கும் உரிமை இருக்கிறது என்கிறது குர் ஆன்

وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ [الذريات:19].
وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعْلُومٌ (24) لِلسَّائِلِ وَالْمَحْرُومِ (25) وَالَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ الدِّينِ (26) /سورة المعارج


செல்வந்தர்கள் தம்மிடம் யாசகம் கேட்டுகிற வருகிற ஏழைகளுக்கு முகம் சுளிக்காமல் தரவேண்டும். கேட்காமல் தயங்கி நிற்கிற ஏழைகளை தேடிக் கண்டு பிடித்தும் கொடுக்க வேண்டும் என்பதை இவ்வசனங்கள் அற்புதமாக உணர்த்துகின்றன,

(2)தொழுகை படைப்புக்கும் படைத்தவனுக்குமிடையேயுள்ள தொடர்பு
ஜகாத் படைப்புக்கும் படைப்புக்கும் இடையே உள்ள தொடர்பு
இரண்டு தொடர்பிலும் சரியாக மனிதன் இருக்க இருக்க வேண்டும் என்பதற்காகவே திருக்குர் ஆனில் 27 இடங்களில் தொழுகையையும் ஜகாத்தையும் சேர்த்தே அல்லாஹ் கூறுகிறான்,
தொழுகையாளிகளாக இருக்கிற நாம் ஜகாத் என்கிற கடமையையும் சரியாக சிறப்பாக நிறைவேற்ற அல்லாஹ் கிருபை செய்வானாக!





No comments:

Post a Comment