வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 11, 2016

புதிய கல்விக் கொள்கை சுதந்திரத்திற்கேற்பட்ட ஆபத்து

நாடு சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக தயாராகி வருகிற இவ்வேளையில் தற்போது தில்லியை ஆளும் மத்திய பாஜக ஆரசு கொண்டு வந்திருக்கிற புதிய கல்விக் கொள்கை பற்றி ஆரம்ப கட்ட சிந்தனையானது நாட்டின் சுதந்திர குடிமக்களை மத ரீதியாக அடிமைப்படுத்தும் ஒரு முயற்சி என்பதை இன்றைய ஜும் ஆவின் மூலம் தேரிவித்த்துக் கொள்ள விரும்புகிறோம். 

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக இப்போது இந்துதுத்துவா நமது நாட்டின் கல்வியையை காவி மயப்படுத்த முயற்சிக் கிறதூ. 

 கல்வி எந்த தீயதிட்டத்திற்கும் பலியாகாமால் பாதுகாக்கப்பட வேண்டும்.  
      
 கல்விதான் மனிதனின் அடையாளம்.
·             ஆதி மனிதரின் தனித்துவத்தை நிருபிக்க அல்லாஹ் தேர்ந்தெடுத்த வழி அது.

·        وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاء إِنْ كُنتُمْ صَادِقِينَ(31) قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ(32)قَالَ يَاآدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ(33)

கல்வியுள்ளவருக்கு உலகம் பணியும் என்பதன் அடையாளமாக மலக்குகளின் ஸ்ஜ்தா

وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنْ الْكَافِرِينَ(34)
 கல்வியாளருக்கு சிறப்பான வாழ்க்கை உண்டு என்பதற்கான முன்னுதாரனம்.

وَقُلْنَا يَاآدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا

கல்வியாளருக்கு கட்டுப்பாடுகள் உண்டு,  அதன் கீழ் இருக்கிற வரை சிறப்ப்பான வாழ்க்கை. இல்லை எனில்  ?
 وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنْ الظَّالِمِينَ(35)

கற்பிப்போர் கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதியுண்டு.
மூஸா (அலை} அவர்களிடம் ஒரு நாள் ஒரு மனிதர் உலகின் பெரிய அறிவாளி யார் என்று கேட்டார்
عن أبي بن كعب رضي الله عنه أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ :
( إِنَّ مُوسَى قَامَ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ ، فَسُئِلَ : أَيُّ النَّاسِ أَعْلَمُ . فَقَالَ : أَنَا . فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ إِذْ لَمْ يَرُدَّ الْعِلْمَ إِلَيْهِ ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ إِنَّ لِي عَبْدًا بِمَجْمَعِ الْبَحْرَيْنِ هُوَ أَعْلَمُ مِنْكَ
கிழ்ர் (அலை) விதித்த கட்டுப்பாடு.
قَالَ لَهُ مُوسَى هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رُشْدًا(66)قَالَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِي صَبْرًا(67)وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا(68)قَالَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا وَلَا أَعْصِي لَكَ أَمْرًا(69)قَالَ فَإِنْ اتَّبَعْتَنِي فَلَا تَسْأَلْنِي عَنْ شَيْءٍ حَتَّى أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا(70)
கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் கல்விப்பயணம் தடை படும்
قَالَ هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِعْ عَلَيْهِ صَبْرًا(78)
கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுமானால் கல்வி மேம்படும்.
قال النبي صلى الله عليه وسلم في قصة موسى مع الخضر : { يرحم الله موسى وددنا لو كان صبر حتى يقص الله علينا من أمرهما }

எனவே கல்வி கற்றுக் கொடுப்பவர்கள் குறிப்பிட்ட கொள்கைகள் நிபந்தனைகளோடு கற்பிப்பதில் தவறில்லை, அது ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதே! 

ஆனால் அதே நேரத்தில் தீய நோக்கத்தோடு கல்வி கற்கவும் கூடாது கற்பிக்கப்படுதலும் கூடாது,

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:  ((مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللَّهِ عَزَّ وَجَلَّ لَا يَتَعَلَّمُهُ إِلَّا لِيُصِيبَ بِهِ عَرَضًا مِنْ الدُّنْيَا لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ يَعْنِي رِيحَهَا)) [أبو داود عَنْ أَبِي هُرَيْرَةَ]
·         உலக நோக்கம் என்பது சமூக சிந்தனையற்ற நோக்காகும்.
عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:  ((مَنْ طَلَبَ الْعِلْمَ لِيُجَارِيَ بِهِ الْعُلَمَاءَ أَوْ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ أَوْ يَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ أَدْخَلَهُ اللَّهُ النَّارَ))[ الترمذي عن كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ]2578
அறிஞர்களை தாழ்வுபடுத்துவது, அல்லது சாமாணிய மக்களை முட்டாள்களாக்குவது , அல்லது  மக்களை தம் பக்கம் தப்பான முறையில் ஈர்ப்பதற்காக கல்வி கற்பவர்கள் குற்றவாளிகள் என்கிறது இந்நபி மொழி.

இன்றைய கல்விக் கோட்பாடுகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கண்டித்த அதே போங்கில் இருப்பதை நாம் பார்க்கிறோம்,

சட்டக் கல்வி சட்டத்தை வளைக்கவும்
மருத்துவக் கல்வி மக்களை மேலும் நோயாளிகளாக்கவும்
வணிகவியல் கல்வி மக்களை சுரண்டவுமே
கற்பிக்கப்படுகின்றன, இதுவே நோக்கமாகாவும் மாறிவிட்டது.

ஒரு பேஸ்ட கம்பெணி இந்தியா முழுக்க வெற்றிகரமாக விற்கப்பட்ட நிலையில்கிராமங்களில் கூட மக்கள் அதை பயன்படுத்த ஆரம்பித்த சூழலில்அதன் விற்பனையை மேலும் அதிகரிக்க உயர் கல்வி படித்த ஒரு தொழிலாளி சொன்ன யோசனை இது. 
எல்லா இடத்திலும் வித்தாச்சு. புதுசா மார்கெட் பிடிக்க இடம் ஏதும் இல்லை. பேஸ்டின் டியூபின் மூடியை சற்று பெரிதாக்கி விடுவோம். அப்போது பேஸ்ட் சீக்கிரம் தீர்ந்து விடும். மக்கள் திரும்ப வாங்குவார்கள். 

அதே கம்பெணி, முதல் முறையாக தன்னுடைய பற்பசையை அறிமுகப்படுத்திய போது உப்புக் கரியிலா பல் துலக்குகிறீர்கள் ?  என்று கேலியாக கேள்வி கேட்டு அதனால் பற்கள் பாதிக்கப்படுவதாக கூறியது, இப்போது அதே நிறுவனம் உங்களது பற்பசையில் உப்பு இருக்கிறதா என்று கேள்வி கேட்டு பேஸ்டை விற்கிறது.

மக்களுக்கு நன்மை செய்யனும் என்ற சிந்தனையை விட மக்களை ஏமாற்றனும் அவர்களிடமிருந்து பணம் பறிக்கனும், அவர்களை தம்மிடமே தக்க வைக்கனும் என்பதற்காக அறிவு பயன்படுத்தப்படுகிறது. அதற்காகவே அறிவு கற்கவும் கற்பிக்கவும் படுகிறது.

என்ன வேதனை இது ?

இதனால் ஏற்படுகிற பின்விளைவுகளின் கனத்தை கற்பனை செய்து பார்த்தால்இதற்கெல்லாம் தண்டனை நரகமே என்று சொன்ன பெருமானாரின் கூற்று எவ்வளவு சரியானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கல்வியில் சிறிதளவிலான அல்லது மேல்பூச்சான தீய நோக்கம் கூட தவறு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நமது கல்வியால் பணக்காரர்களை நெருங்கி பயன்பெற்றுக் கொள்வோம், ஆனால் மார்க்க காரியங்களில் அவர்களை விட்டு விலகி விடுவோம் என்று சொல்பவர்கள் தப்பிக்க முடியாது.  முள் மரத்திலிருந்து முள்ளைத் தவிர பறிப்பதற்கு எதுவும் இல்லை.

عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
إِنَّ أُنَاسًا مِنْ أُمَّتِي سَيَتَفَقَّهُونَ فِي الدِّينِ وَيَقْرَءُونَ الْقُرْآنَ وَيَقُولُونَ: نَأْتِي الْأُمَرَاءَ فَنُصِيبُ مِنْ دُنْيَاهُمْ وَنَعْتَزِلُهُمْ بِدِينِنَا وَلَا يَكُونُ ذَلِكَ كَمَا لَا يُجْتَنَى مِنْ الْقَتَادِ إِلَّا الشَّوْكُ كَذَلِكَ لَا يُجْتَنَى مِنْ قُرْبِهِمْ إِلَّا قَالَ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ كَأَنَّهُ يَعْنِي الْخَطَايَا))[ ابن ماجه عَنْ ابْنِ عَبَّاسٍ ]


எனவே கல்வி பெறுவதற்கும் கற்பிப்பதற்கும்  நன் நோக்கம் மட்டுமே இருக்க வேண்டும். அப்படிய் இருந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

நம்முடைய நாட்டில் 11 கோடி பள்ளி மாணவர்களும் 6 கோடி கல்லூரி மாணவர்களும் கல்வி பயில்கிறார்கள்.

இம்மாபெரிய சமூகத்திற்கு என்ன மாதிரியான கல்வியை எப்படிப் போதிப்பது என்பதில் ஒரு பெரும் ஆய்வு நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு சரியான தீர்க்கமான முடிவு இதுவரை எட்டப்படவில்லை.

அதற்கு காரணம் நாட்டின் எதார்தத சூழ்நிலையை கருத்தில் கொள்ளாலம் மத்திய அரசில் இருப்போர் தமது விருப்பத்தை ஒட்டு மொத்த தேசத்தின் மீதும் திணிக்க முற்பட்டதே ஆகும்.  காங்கிரஸ் ஆட்ச்யில் இருக்கிற போது அது தன்னுடைய சித்தாந்தையும் இப்போது பாஜக ஆட்சியில் இந்துத்துவாவும்  கல்வி என்ற பெயரில் திணிக்கப்படுகிறது. இதுவே கல்வித்துறையில் பல் வேறு குழப்பங்களுக்கு காரணமாகும்.

கல்வி குறித்த சர்ச்சைகள் ஆரவாரமாக பேசப்படும் பின்னர் அது புஸ்வானமாகிவிடும்.

நாடு சுதந்திரம் பெற்ற போது 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி என்ற திட்டம் முக்கியத் தீர்மாணமாக இயற்றப்பட்டது . அது அரசியல் சாசணத்தில் இந்தியப் பிரஜையின் அடிப்பை உரிமையாகவும் கூறப்பட்டது, ஆனால் இது வரை அந்த இலக்கு முழுமையாக எட்டப்பட வில்லை.

ஆளும் வர்க்கத்தின் கருவியாகக் கல்வி: எதார்தமும் சூழ்ச்சிகளும் 

நம்முடைய நாடு ஒரு நாடல்ல, பல கலாச்சார சிறப்புக்களை உள்ளடக்கிய ஒரு யூனியன் ஆகும். நம்முடைய பெரிய நாட்டில் கல்வி கற்பித்தல் சம்பந்தமாக பண்பாடு கலாச்சார ரீதியாக பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு பட்ட நடைமுறைகள் வழக்கில் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்ததந்த மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை களுக்கேற்ப கல்வியின் வாய்ப்புக்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டியிருக்கிறது.

நம்முடைய நாட்டில் பண்டைய பல தலைமுறையாக கல்வி ஒரு குறிப்பிட ஜாதி அல்லது பிரிவினருக்கு மட்டுமே உரியதாக கருதப்பட்டது, கல்வி கற்பதிலிருந்து அடித்தட்டு மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர், அடித்தட்டு மக்கள் அதிகம் படிக்காமல் அவர்களது குலத்தொழிலையே கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது, இதன் மூலம் மக்களில் ஒரு பிரிவினரை தீண்டத்தகாதவர்களாக தாழ் நிலையிலேயே வைத்திருக்க முடியும் என்று உயர் ஜாதியினர் கருதினர்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அம்பேத்கார் பெரியார் போன்றோர் சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வுப் புரட்சியின் பயனாக அடித்தட்டு மக்களிடமும் கல்வி கற்கும் சிந்தனை வளர்ந்தது,

அத்தகைய சூழலில் அவர்களை படிக்க வைப்பதற்காக சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு, உதவித் தொகைகள், மதிப்பெண் சலுகைகள் உள்ளிட்ட சில திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன, இதன் பயனாக அடித்தட்டு மக்கள் மேம்பாடு காண வழி ஏற்பட்டது,

இன்று பல உயர்  பதவிகளிலும் தாழ்ந்தப்பட்ட பிரிவினர் இடம் பிடித்துள்ளதை பார்க்கிறோம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநிலத்தின் சமூக சூழலுக்கு ஏற்ப கல்வி திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இதில் சில குறைபாடுகள் இருந்தாலும் தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் அடித்தட்டு மக்களின் மேம்பாடு என்ற கனவு ஓரளவு நனவாகியே வந்தது.

இந்நிலையில் மாநிலங்களின் முழு அதிகாரத்திலிருந்த கல்வியை 1978-இல் அரசமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் செய்து கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு அப்போதைய மத்திய அரசு மாற்றியது, அன்றிலிருந்து கல்வித் துறையில் மத்திய அரசின் தலையீடு அதிகமாகி விட்டது.

சமீபத்தில் மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடை பெறும் இறுதி நேரத்தில் தமிழகத்தில் நடை முறையில் உள்ள கவுன்சிலிங்க நடை முறைக்கு மாற்றமாக ஒரு தேசிய நுழைவுத் தேர்வு என்ற திட்டத்தை உச்ச நீதிமன்றம் அமுல் படுத்தக் கோரியதற்கு இந்தச் சட்ட திருத்தம் ஒரு காரணமாகும்.

உண்மையில் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால் தமிழகத்திலுள்ள சாமாணிய மக்கள் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் 1985-ஆம் ஆண்டு ஒரு புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. இதுபற்றி தேசிய அளவில் விவாதம் ஒன்பது மாதங்கள் நடைபெற்றது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கல்வி வல்லுநர்கள், நிர்வாகிகள் மற்றும் பல்துறை சார்ந்த விற்பன்னர்கள் விவாதத்தில் பங்கேற்றனர்.
அப்போதைய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் புதிய கல்விக் கொள்கையை 8.5.1986 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நாடாளுமன்றம் இரண்டு நாள்கள் கூடி புதிய கல்விக் கொள்கையின் மீது விவாதம் நடத்தி ஒப்புதல் அளித்தது.

அந்தக் கல்விக் கொள்கையில் முக்கியமாக இரண்டு திட்டங்கள் இடம் பெற்றன,
1.      தேசியக் கல்வி முறையை உருவாக்குதல்,
2.      கல்வித் துறையில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், குறைபாடுகளை நீக்குதல்
அப்போதிருருந்தே தேசியக் கல்வி முறை என்பது மிகச் சிக்கலான ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது, இந்தியாவில் ஆதிக்க சாதிச் சிந்தனையை அனைத்து மக்கள் மீதும் திணிக்கிற ஒரு ஏற்பாடாகவே அந்தச் சொல் இன்று வரை பயன்படுத்தப்படுகிறது.

தேசிய கல்விக் தெளிவான சிந்தனை எதுவும் இதுவரை ஆய்வு செய்யவோ தீர்மாணிக்கவோ படவில்லை

இந்த நிலையில் தான் தற்போதை மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கை என்ற மோசடியான பெயரை பயன்படுத்தி “ஒரு இந்தியா ஒற்றைக கலாச்சாரம்  அதாவது இந்து மதச் சார்பு என்ற ஆர் எஸ் எஸின் சிந்தனையில் அடிப்படையில் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள மத மொழி வாரி சிறுபான்மையினரின் தனி அடையாளங்களை அழித்தொழித்து இந்துத்துவாவின் அடிப்படையான சனாதன ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை மறைமுகமாக நிறுவ முயற்சி செய்கிறது.

எனவே நாடு முழுவதிலும் சிறந்த கல்வியாளர்களும் சமூக அமைப்புக்களும் இந்தக் புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்,

புதிய கல்விக் கொள்கை இன்னும் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட வில்லை. தீர்மாணமாக வரவும் இல்லை.

இதற்காக சில அறிவிப்புக்களை  2015 ஜனவரியில் வெளியிட்டது . நாடு முழுவதிலும் மக்களிடம் கருத்துக் கேட்கப்படும் என்று  மோடி அரசு அறிவித்தது,

பிறகு நாடு முழுவதும் 2.75 லட்சம் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், வலைதளம் மூலம் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாகவும், அதைத் தொகுத்து அறிக்கை தருவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் அந்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது, இந்தக் குழுவிற்கு முன்னாள் அமைச்சகச் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் ஐவரை நியமித்தது,  இவர் ஆர் எஸ் எஸின் சித்தாந்தி ஆவார். இவர் தவிர குழுவில் நியமிக்கப்பட்ட நான்கு பேரும் கல்வியாளர்கள் அல்ல. அரசின் சொல்கேட்டு நடக்க வேண்டிய ஐ ஏ எஸ் அதிகாரிகள் ஆவர்.

இந்த ஐவர் குழு தயாரித்த அறிக்கை 2016 ஏப்ரல் 30 அன்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் அளிக்கப்பட்து. அந்த அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேசியக் கல்விக் கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள் (Some Inputs for Draft National Education Policy - 2016) என்ற தலைப்பில் ஓர் ஆவணத்தைத் தனது வலைதளத்தில் வெளியிட்டு, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.
2016 ஆகஸ்ட் 16 வரை ஆசிரியர், மாணவர், பெற்றோர், கல்வியியல் செயல்பாட்டு அமைப்பினர், அரசியல் கட்சியினர் என அனைவரும் ஆவணத்தைப் படித்து ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் மத்திய அரசுக்கு வழங்கிட முன்வருமாறு அரசு கோரியுள்ளது.
இணைய தளத்தில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய கொள்கைக் கான வரைவுத்திட்டம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் முழு திட்டத்தையும் உட்கொண்டிருக்கிறது.  இது வே நாட்டிலுள்ள சமூக நல்லிணக்க சக்திகளுக்கு மிகவும் கவலை அளித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 28 ம் தேதி பத்ரிகைகளில் ஒரு செய்தி பிரசுரமானது,
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்து ஜூலை 26 ம் தேதி  பாஜகவின் தாய் அமைப்பான, இந்துத்துவாவை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நேற்று 6 மணிநேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
வித்யா பார்தி, அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத், ராஷ்டிரிய சாய்க்சிக் மகாசங், பாரதிய சிக்ஷான் மண்டல், சான்ஸ்கிர்ட் பார்தி, சிக்ஷா பசோ அந்தோலன், விக்யான் பார்தி, இதிஹாஸ் சங்கல்யான் யோஜனா ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் டெல்லி குஜராத் பவனில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலர் கிருஷ்ண கோபால், பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையின் போது உடன் இருந்துள்ளனர்
இதனால் முழுக்க முழுக்க இந்துத்துவா சிந்தனையோடு மக்களிடையே வெருப்புணர்வை விதைத்து பகைமை தூண்டுகிற அதே நேரத்தில் இந்து சமூகத்திலிருக்கிற அடித்தட்டு மக்களை முன்னேற விடாமல் தடுக்கிற சதித்திட்டத்தோடு இப்புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிடுகிறது என்பது உறுதிப்படுத்துகிறது. .
கடந்த ஓராண்டில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாஜகவினர் ஏற்படுத்திய செயற்கையான சர்ச்சை , ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலாவின் மரணம், சென்னை ஐஐடியில் அம்பேத்கர்- பெரியார் படிப்பு மையத்திற்கு தடை போன்றவற்றில் அரசியல் தலையீடுகள் வெளிப்படையாக தெரிந்தன. அரசியல அதிகாரத்தைப் பயனபடுத்தி இந்துத்துவாவை எல்ல இடத்திலும் திணிக்கும் மத்திய அரசின் முயற்சி அப்பட்டமாக வெளிப்பட்டது.  
புதிய கல்வி கொள்கையும் நாட்டின் முன்னேற்றத்திலோ நாட்டு மக்களின் நலனிலோ அக்கறை கொண்டதாக இல்லாமல் மோடி அரசின் கொள்கைக்கு  ஏற் வடிவமைக்கப்பட்டுள்ளதையே வெளிப்படுத்துகிறது.
அரசு நடத்தியதாக சொல்லும்கருத்துக் கேட்பு: நடத்திய விதமும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பக்கல்வியில் பதிமூன்று தலைப்புகளிலும் உயர்கல்வியில் இருபது தலைப்புகளிலும் ஓரிரு பக்கங்களை ஒதுக்கி  ஒவ்வொன்றிற்குக் குறிப்புகள் கொடுத்து சுமார் ஐந்திலிருந்து 20 கேள்விகள் வரை கேட்கப்பட்டுள்ளது. அந்தக் கேள்விகளுக்கான பதில்களை கருத்துக் கூறுவோர் தமது சுய அறிவிலிருந்து கூற முடியாத வகையில்ஆம் / இல்லைவகையில் மல்டிபிள் சாய்ஸ்கேள்விகளாக கேட்கப்பட்டுள்ளன, இதன் மூலம் அரசு விரும்பும் பதில்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தாக வேண்டிய நிர்பந்தத்தை  கருத்து கூறுவோருக்கு ஏற்படுத்தி தனக்கு வேண்டிய பதிலை மட்டும் பெறுவதற்காகான் சாதுரியத்தைக் மோடி அரசு கையாண்டுள்ளது.
சிறுபான்மையினருக்கான கல்வி உரிமைகள் எந்த வகையிலான பின் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று கேட்டு விட்டு மோசம் மிக மோசம் என்ற இரண்டு சாய்ஸ்கள் தரப்பட்டு அதில் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க கூறுவது போன்ற கீழ்த்தரமான தந்திரங்களை அரசு கையாண்டுள்ளது,
இதே அடிப்படையிலேயே
தாய் மொழி வழிக் கல்வி ,5 லிருந்து 8 ம் வகுப்பு கல்வி வரை கட்டாய தேர்ச்சி  போன்ற அம்சங்களிலு கேள்விகள் அமைக்கப்பட்டு ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களை ஒப்புதல் பெறுவதற்கு நடத்தப்பட்ட மாபெரும் நாடகம் தான் இந்தக் கருத்துக் கேட்பு அமைந்துள்ளது.
கருத்துக் கேட்பு நடை முறை குறித்து ஆரம்பத்தில் அரசு கூறும் போது முதலில் ஆன் லைன் மூலமாக கருத்துக் கேட்பு. அதன் பின்னர் சுமார் இரண்டு லட்சத்து அறுபதாயிரம் கிராமங்கள், முப்பதாயிரம் ஒன்றியங்கள், அறுநூறு மாவட்டங்கள் முப்பது மாநிலங்கள் ஆகிய மையங்களில் கருத்துக்கேட்பும் அதன் பின்னர் ஏழு மண்டலங்களில் தொகுப்பும் அதைத் தொடர்ந்து மத்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆலோசனையும் செய்யப் பட்டது. பின்னர் ஒரு செயல்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டு அதன் முன் ஒரு தொகுக்கப்பட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு அனைத்தையும் தொகுத்து ஒரு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு Central Advisory Board on Education (CABE) முன் வைத்து விவாதித்து நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப் படும் என அறிவித்தது.
ஆனால் நடந்தது என்ன?  அரசு  இறுதிக் கெடு கொடுத்த நாளில் பத்து சதவீதக் கருத்துக்கள் கூட வரவில்லை. பல மாநிலங்கள் இந்த முறையில் எந்தவிதமான கூட்டமும் நடத்தியதாகத் தகவல் இல்லை. பேருக்கு ஒன்று இரண்டு நடத்தி இருக்கின்றன. பல மாநில அரசாங்கங்கள்  தங்களது நிலையைத் இன்னும்  தெரிவிக்கவேயில்லை. எனவே கருத்துக் கேட்பு என்ற துவக்க நிலை மாபெரும்  தோல்வியைச் சந்தித்துள்ளது.
எனவே கருத்துக் கேட்பு என்பது பெரிதும் தோல்வியை சந்தித்த நிலையில் அரசு கொல்லைப் புற வழியாக இணைய தளத்தில் தற்போதைக்கு தனது பயங்கர திட்டத்தில் ஒரு பக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
புதிய தேசியக் கல்விக் கொள்கையின் முடிவாக 21 தலைப்புகளில் 143 கொள்கை முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
1.   ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தாய்மொழி அல்லது வட்டார மொழியில் கல்வி வழங்கலாம். அதற்கு மேல் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
2.      சமஸ்கிருதத்தை பள்ளிக் கூடங்களில் கற்பிப்பதற்கு வசதி செய்யப்படும். பல்கலைக் கழக நிலையில் அம்மொழியைக் கற்பதற்கு மிகவும் தாராளமான வசதிகள் அளிக்கப்படும். இது சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்கும் ஒரு திட்ட முன்வடிவேயாகும்.
இந்தியை கட்டாயப்படுத்தும் முயற்சியின் ஒரு அங்கமாக நாடு முழுவது மத்திய அரசு நிருவனங்களில் ஆங்கிலம் இந்தி மட்டுமே பயன்படுத்தப்படுவதை நீங்கள் பார்க்கலாம்.
நேற்று ஒரு வங்கிக்கு சென்றிருந்தேன், பணம் பெறும் கவுண்டரில் காத்திருப்போரின் எண்ணிக்கை அறிவிக்கப்படுகிற போது ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. தமிழில் இல்லை. ஒரு கிராமத்து வங்கியில் என்ன மொழி என்றே தெரியாத நிலையில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இரயில் நிலையங்கள் விமான நிலையங்களில் எந்த மாநிலத்தின் மொழியையும் விட அதிக முக்கியத்துவம் இந்தி மொழிக்கு கொடுக்கப்படுகிறது, இதனால் பிரார்ந்திய மொழி பேசும் மக்கள் தமக்கு புரியும் மொழியில் செய்திகளை பெறுவதில் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இனி சமஸ்கிருதம் இது போல நுழைக்கப்பட்டால் அது மொழி ஆதிக்கத்தை திணித்தல் என்பதாக மட்டும் இல்லாமல் மத ஆதிக்கத்தை ஏற்படுத்துதல் என்ற வகையிலும் அமையும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
3.   இந்தியப் பல்கலைக் கழகங்களை வெளிநாட்டு பல்கலைக் கழகங்களோடு இணைத்தல்
4.   சிறுபான்மையின மக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அரசு குறிப்பிடும் அளவில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது.
சுருக்கமாக கூறுவதானால் இந்தியாவில் உள்ள பன்முக தன்மையை அழித்து  இந்தியாவின் பன்முகத்தன்மை, சமூக நீதிக்கு ஆபத்த்தை ஏற்படுத்தி ஆர் எஸ் எஸின் கொள்கை நாட்டு மக்களின் மீது திணிக்கும் முயற்சியை தற்போதைய மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதில் நம்முடைய கருத்து என்ன வென்றால்
அரசாங்கம் மாறும்போதெல்லாம் ஆளுங்கட்சியின் கொள்கைகள் கல்வியில் புகுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், அரசாங்கங்கள் தாற்காலிகம்; கல்வி நிரந்தரம். எனவே கல்வி சார் கொள்கைகள் கல்வியாளர்களால் வகுக்கப்பட வேண்டும். அதில் அரசியல் தலையீடோ ஆதிக்க சாதியின் குறுக்கீடுகளோ இருக்க கூடாது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியான கல்விக்கொள்கை பொருந்தி வராது.
ஒவ்வொரு பகுதியிலும் அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகை உருவாக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு – கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களில் எந்தக் குறுக்கீடும் இருக்க கூடாது.
சுருக்கமாக கல்வி கற்பதிலும் கற்பிப்பதிலும் தீய நோக்கங்களோ திட்டங்களோ இருக்க கூடாது,
கல்வி சுத்தப்படுத்தப்பட்டாலே நாடு அறிவுடைய சமுதாயமாக தானாக மாறிவிடும்.
தற்போது மிருக பலத்தோடு நாடாளுமன்றத்தை கைப்பற்றியிருக்கிற பாஜ்க கட்சி தனது அழுக்கான தீய எண்ணம் கொண்ட சிந்தனையை நாட்டு மக்களின் மீது  தீணிக்கச் செய்யும் சாதுரியமான சதித்திட்டங்களை கவனமாக முறியடிக்கச் செய்வோம். அல்லாஹ் கிருபை செய்வானாக!
அது நாட்டின் சுதந்திரத்தை தொடர்ந்து பாதுகாத்திட முக்கிய தேவையாகும்.
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.


1 comment:

  1. புதிய கல்வி கொள்கை குறித்த ஆழமான பதிவு. அதன் எல்லா பரிமாணங்களையும் புள்ளி விவரங்களுடன் விவரித்து இருப்பது மிக அழகு. வெள்ளி மேடைகளை சமூகம் விழித்தெழும் மையப் பகுதியாக மாற்றி அமைத்ததில் முக்கியப் பங்கு உங்களுக்கு உண்டு. பழைய கதைகளை தான் ஆலிம்கள் பேசி உறங்க வைப்பார்கள் என்ற நிலையை மாற்றி புதிய சிந்தனைகளை சமூகத்திற்கு ஊட்டி உறங்க விடாமல் பண்ணுவார்கள் எனும் நிலைக்கு ஆலிம்களை உயர்த்திய உங்களின் அந்தஸ்தை அல்லாஹ் ஈருலகிலும் உயர்த்துவானாக! ஆமீன்!!

    ReplyDelete