48 நாட்களாக காஷ்மீரின்
துயரம் தொடர்கிறது.
மக்களின் துயரம்
எத்தகையதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!
மத்திய அரசு இந்துத்துவா
மனப்பான்மையில் காஷ்மீரிகளை கொடுமைப்படுத்துகிறது என்றால். மற்ற அரசியல் கட்சிகளும்
இது குறித்து கேட்பாரில்லை.
மத்திய உள்துறை
அமைச்சர் இரண்டாவது தடவையாக நேற்று காஷ்மீர் சென்றுள்ளா.
இராணுவத்தின் துப்பாக்கிச்
சூட்டிலும் பெல்லட் ரக குண்டு வீச்சிலும் இது வரை 68 பேர் பலியாகியுள்ள நிலையில் வன்முறைக்கு
பலியானோர் என்றே இதுவரை மீடியாக்கள் கூறுகின்றன, இது நீதிக்கு செய்கிற பச்சைத் துரோகமாகும்.
காஷ்மீர் நிலவரம்
குறித்து ஆய்வு செய்ய விரும்புவதாக ஐநா சபை
வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
வெளி நாட்டு அமைப்பினரின்
கோரிக்கையை நிராகரித்து விட்டாலும் கூட அனைத்து கட்சி உறுப்பினர்களின் குழு ஒன்றை அனுப்பி
காஷ்மீரின் நிலையை மத்திய அரசு பிரச்சனைக்கு விரைவில் ஒரு நல்ல தீர்வை காண முயற்சிக்க
வேண்டும்.
காஷ்மீர் மக்களை
புறக்கணித்து நாம் காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாட முடியாது.
அல்லாஹ் காஷ்மீரிகளின்
பிரச்சனைக்கு விரைவில் நல்ல தீர்வை தந்தருள்வானாக! அவர்களது துயரினைத் விரைந்து துடைப்பானாக
அதற்கேற்ற பக்குவத்தை அரசுக்கும் அரசியல் வாதிகளுக்கும் காஷ்மீர் மக்களுக்கும் வழங்குவானாக!
பிரச்சனைகளின்
போது எப்படி தீர்வு காண்பது என்பதற்கான சிறந்த வழிகாட்டுதலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது
ஹுதைபிய்யா உடன்படிக்கை உலகிற்கு வழங்குகிறது.
இதே போன்றதொரு
துல்கஃதா மாதத்தில் ஹுதைபிய்யா உடன்படிக்கை நடை பெற்றது.
பத்று யுத்தம்
= இஸ்லாம் என்கிற சத்திய மார்க்கத்தின் வெற்றியக அமைந்தது.
பத்ஹ் மக்கா =
முஸ்லிம் சமூகத்தின் வெற்றியாக அமைந்தது.
ஹிதைபிய்யா முஹம்மது
நபி (ஸல்) அவர்களின் வெற்றியாக அமைந்தது.
கவனியுங்கள்
ஹுதைபிய்யாவை முடித்துக்
கொண்டு திரும்பும் போது இறங்கிய முழு அத்தியாயம். அல் பதஹ்
அந்து நபியே உமக்கு
தெளிவான வெற்றியை தந்தோம் என்று நபியை மட்டுமே குறிப்பிட்டு பேசுகிறது.
ஹுதைபிய்யாவிற்கு
பிறகு முஸ்லிமாவோரின் எண்ணிக்கை பெரிதும் உயர்ந்தது.
நபி (ஸல்) அவர்கள்
தன் இலக்காக கொண்டது அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வதை அல்ல.
மக்களை நல்வழிப்படுத்துவதை
அவர்களது இதயங்களை தம்மை நோக்கித்திருப்பி – அவர்களை நரகிலிருந்து காப்பாற்றுவதை நோக்கமாக
கொண்டார்கள்.
ஹுதைபிய்யா அதற்கு
சிறப்பாக வழி வகுத்தது. எனவே தான் அல்லாஹ் அதை மகத்தான் வெற்றி என்கிறான்.
எந்ந்த ஒரு பிரச்சனையயும்
ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்காமல் இரண்டாவதாக ஒரு கண்ணோட்டத்துடனுன் பார்க்கவும் அணுகவும்
தீர்வு காணவும் மக்களும் அரசுகளும் முயற்சி செய்ய வேண்டும் என்பதை ஹுதைபிய்யா உணர்த்து
கிறது.
சமாதான் உடன்படிக்கான
வழிகளை காண்பதும். அதில் இறங்கிப் போவதும். தோல்வியோ பின்னடைவோ அல்ல. அது மகத்தான்
வெற்றிக்கான படிக்கட்டு என்பதை ஹுதைபிய்யாவைப் போல உணர்த்தும் தகுதி வேறு எதற்கும்
இல்லை.
தன்னுடைய ஒட்டகம்
திடீரென கீழே படுத்த எழுந்திருக்க மறுத்த போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆப்ரகாவின் யானைப்படைய
தடுத்த இறைவன் இதை தடுத்திருகிறான். மக்காவின் காபிர்கள் இனி எந்த ஒப்பந்ததிற்கு அழைத்தாலும்
அதை ஏற்றுக் கொள்வேன்
ஹுதைபிய்யாவின்
மைதானத்தில் ஏராளமான வாழ்வியல் தீர்வுகள் உள்ளன. மக்கள் அவற்றை புரிந்து பயன்படுத்திக்
கொள்வார்களானால் நிச்சயமாக நன்மையடைவார்கள்.
ஹுதைபிய்யா
ஹிஜ்ரி 6 ம் ஆண்டு துல்கஃதா
மாதத்தில் ஹுதைபிய்யா உடன்படிக்கை எழுதப்பட்டது.
முதல் பார்வையில்
முஸ்லிம்களின் வரலாற்றில் அது ஒரு தோல்வி போல தெரிந்தாலும் அரபுலகில் இஸ்லாம்
தடையின்றி பரவ அதுவே காரணமானது. அல்லாஹ் அதை பத்ஹுன் அழீம் என்று கூறினான்.
ஹுதையபிய்யாவிற்கு பிறகு பெருமானார் (ஸல்)
அவர்கள்மதீனாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த் போது தான் சூரத்துல் பதஹ் முழுமையாக
அருளப்பட்டது.
அந்த அமைதி உடன்படிக்கை, யுத்தங்களை விட மகத்தான பலனை முஸ்லிம்களுக்கு கொடுத்தது.
ஹிஜ்ரீ 6 ம் ஆண்டு உடன்படிக்கை கையெழுத்தான போது
பெருமானாருடன் 1400மட்டுமே இருந்தனர். ஹிஜ்ரி 8 ல் மக்கா வெற்றிக்காகபெருமானார் புறப்பட்ட
போது 10 ஆயிரம் பேர் பெருமானாருடன் இருந்தனர். இரண்டே
ஆண்டுகளில் முஸ்லிகளின் எண்ணிக்கை
பன்மடங்கு பெருகியிருந்தது.
முஸ்லிம் சமுதாயம் படித்தறிய வேண்டிய ஏராளமான செய்திகள் ஹுதைபிய்யா
உடன்படிக்கையில் உள்ளன.
ஒரு விசயத்தை ஆக்கப்பூர்வமாக பார்ப்பது எப்படி என்ற ஒரு
மாற்றுச் சிந்தனையை முஸ்லிம்களுக்கு அது வழங்கியது.
ஹுதைபிய்யாவிற்கான காரணம்.
ஹிஜ்ரி 6 ம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் கஃபாவை தவாபு செய்வது போல கனவு கண்டார்கள்.
நபிமார்களின் கனவு வஹ்யின் ஒரு அம்சம் என்பதால் பெருமானார்(ஸல்) அவர்க ள் உம்ராவிற்கு
தயாராகுமாறு தோழர்களிடம் கூறினார்க்ள்.
மக்காவாசிகளுடன் சுமூக உறவு இல்லாத சூழலில்
உம்ராவுக்குச் செல்வது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று கருதிய சில தோழர்கள்
கிளம்பவில்லை. பெருமானாரின் உத்தரவுக்கு எந்த சலனமும்
இன்றி கட்டுப்பட்ட தோழர்கள் 1400 பேர் அண்ணலாருடன் புறப்பட்டார்கள்.
வழியில் ‘துல ஹுலைஃபா’ என்ற இடத்தில்; உம்ராவிற்காகஆடை அணிந்து கொண்டார்கள். மக்காவை நெருங்கிய போதுகாலித் பின் வலீதின் தலைமையில் காபிர்கள்முஸ்லிம்களை தடுக்க தயாராக இருப்பதாக செய்திகிடைத்தது.
நபி (ஸல்) அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தங்களதுபயணத்தைத் தொடர்ந்தார்கள்.
முஸ்லிம்களைத் தடுக்க வேண்டுமென்று காலித் பெரும்முயற்சி செய்தார். தனது குதிரைப்படையை முஸ்லிம்கள்பார்க்கும் தூரத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்.
தங்களுடைய வழியில் காலித் படையுடன் நிற்பதைப் பார்த்தநபி (ஸல்) அவர்கள் தன்யீம்வழியாக மக்கா செல்லும்முக்கிய நேரான பாதையை விட்டுவிட்டு வேறுவழியைத்தேர்ந்தெடுத்தார்கள். மலைகளுக்கிடையில்கற்களும், பாறைகளும் நிறைந்த கரடு முரடானபாதைவழியே, அதாவது வலப்பக்கம் ‘ஹம்ஸ்’ என்ற ஊரீன்புறவழியான ‘ஸனிய்யத்துல் முரார்’ வழியாக ஹுதைபிய்யாசெல்லும் வழியில் பயணத்தைத் தொடங்கினார்கள். இவ்வழி கீழ்ப்புறமாக மக்கா செல்லும் வழியாகும். தான் நின்றுகொண்டிருந்த வழியை புறக்கணித்து விட்டு இஸ்லாமியப்படை வேறு வழியில் செல்கிறார்கள் என்று தொpந்தவுடன்,தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த காலித்குறைஷிகளை எச்சாpப்பதற்காக மக்காவிற்குவிரைந்தார்.
நபி (ஸல்) அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்து‘ஸனிய்யத்துல் முரார்’ என்ற இடத்தை அடைந்தவுடன்அவர்களது வாகனம் அங்கு மண்டியிட்டு உட்கார்ந்து விட்டது.
மக்கள் அதை மிரட்டியும் அது எழுந்திருக்காமல் பிடிவாதம்பிடித்தது. அப்போது நபி (ஸல்) 'எனது ஒட்டகம் ‘கஸ்வா’முரண்டு பிடிப்பதில்லை! அது அத்தகையகுணமுடையதுமல்ல!என்றாலும் யானைப் படைகளைத் தடுத்த அல்லாஹ் இதையும்தடுத்துவிட்டான் எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோஅவன் மீது ஆணையாக! அல்லாஹ்
மேன்மைபடுத்திய வற்றைக் கண்ணியப்படுத்தும் வகையில் எந்த ஒரு திட்டத்தை குறைஷிகள் என்னிடம் கேட்டாலும் நான் அவர்களுக்குஅத்திட்டத்தை நிறைவேற்றிக்கொடுப்பேன்” என்று கூறிவிட்டுதனது ஒட்டகத்தை அதட்டவே அது குதித்தெழுந்தது.நபியவர்கள்தனது பாதையைத் திருப்பி ஹுதைபிய்யாவின் இறுதியிலுள்ள‘ஸமது’ என்ற கிணற்றுக்கு அருகில் தங்கினார்கள்.
அங்கு முஹம்மது (ஸல் அவர்களுக்கும் மக்காவின் காபிர்களுக்கும் இடையே நடை பெற்ற உடன்படிக்கை வரலாற்றின் போக்கை திசை மாற்றியது.
முஸ்லிம்களீன் மீது ஒரு அநீதமான திட்டத்தை திணித்த போதும்
காபிர்கள் வெற்ற பெற வில்லை
ஒரு உயர்ந்த நோக்கிற்காக தற்காலிகமான ஒரு தீர்வை ஏற்றுக்கொண்ட போது
முஸ்லிம்கள் தோற்றுவிடவில்லை.
வரலாற்றின் இந்த அற்புதமான பாடத்திலிருந்து காஷ்மீரை ஆளும்
தரப்பும் காஷ்மீர் மக்களும் பாடம் பெற வேண்டும்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் மீது அநீதியான திட்டங்களை
திணிக்கும் எந்த அரசு பிரச்ச்னைகளுக்கு ஆளாகாமல் போகமுடியாது.
அதே நேரத்தில் அரசாங்களை வன்மமாக எதர்த்ததை புரியாமல் எதிர்த்துக்
கொண்டே செல்லும் எந்த போராட்டமும் வெற்றி பெற முடியாது.
நாம் அல்லாஹ்விடம் கையேந்துவோம் எங்களது நாட்டின் ஒரு பகுதியில்
குடிமக்கள் அனுபவிக்கும் துயரிலிருந்து அவர்களை மீட்பாயாக! துயர் துடைப்பாயாக!
No comments:
Post a Comment