வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 03, 2016

இந்துத்துவாவை எதிர் கொள்ளும் வழி 1 இஹ்ஸான் மனிதர்களை ஈர்க்கும் பேரழகு!



نَبِّئْنَا بِتَأْوِيلِهِ إِنَّا نَرَاكَ مِنْ الْمُحْسِنِينَ

இறைத்தூதர் யூசுப் அலை அவர்கள் மிக அழகானவர்.
திருக்குர் ஆன் அவரது அழகை தெரிவிக்கப் பயன்படுத்திய செய்தி அதி அற்புதமானது,
ஒரு அழகை வர்ணிக்க யாரும் கற்பனை செய்து பார்த்திராத விதம் அது,
கையில் ஆப்பிளையும் கத்தியையும் வைத்திருந்த பெண்கள் யூசுப் அலை அவர்களின் அழகில் மயங்கி ஆப்பிளை அறுப்பதற்கு தில் தமது கைகளை அறுத்துக் கொண்டனர் ,
فَلَمَّا رَأَيْنَهُ أَكْبَرْنَهُ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلَّهِ مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ

وفي حديث الإسراء والمعراج قوله عليه الصلاة والسلام : ثم عُرِج بي إلى السماء الثالثة فاستفتح جبريل ، فقيل : من أنت ؟ قال : جبريل . قيل : ومن معك ؟ قال : محمد صلى الله عليه وسلم . قيل : وقد بُعِث إليه ؟ قال : قد بُعث إليه ، ففتح لنا ، فإذا أنا بيوسف صلى الله عليه وسلم إذا هو قد أُعْطِي شطر الحسن . رواه مسلم

நபி யூசுப் அலை அவர்களுடை உடல் மட்டுமல்ல; அவருடை குணமும் மிக மிக அழகானது,

முகம் பார்க்கும் கண்ணாடியில் நாம் நம்மைப் பார்த்துக் கொள்வது போல  முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு  யூசுப் அலை அவர்களது வாழ்வு முகம் பார்க்கும் கண்ணாடியை போல தன்னைப் பார்த்துக் கொள்ள பயன்பட்டது.

மக்கா வெற்றியின் மிக முக்கியமான வரலாற்றுப் பொழுதில் நபி (ஸல்) அவர்கள் மக்கா வாசிகளை மன்னிப்பதற்கு பயன்படுத்திய சொல் யூசுப் (அலை) அவர்கள் தம் சகோதரர்களிடம்  கூறிய சொற்களாகும்  

قَالَ لَا تَثْرِيبَ عَلَيْكُمْ الْيَوْم

புற அழைகைப் பார்த்து  பெண்கள் கையை வெட்டிக் கொண்ட செய்தியை விட அவரது அக அழகை பெருமானார் (ஸல்) அவர்கள் பயன்படுத்திக் கொண்ட விதம் இன்னும் மகத்தானது.

வெளிப்படையான தோற்ற அழகிற்கு அதிக முக்கியத்துவம் தருகிற காலம். இது.  ஆண்களும் கூட அழகு படுத்திக் கொள்ள அதிகம் செலவிடுகிற காலம்.

தோற்ற அழகு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது வீணானது. குண அழகிற்கு அதை விட முக்கியத்துவம் தர வேண்டும்.

யூசுப் அலை அவர்களது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம் அது.

தோற்ற அழகு யூசுப் அலை அவர்களுக்கு பிரச்சனைகளையே ஏற்படுத்தியது,

சகோதரர்களின் பொறாமையால் கிணற்றில் போடப்பட்ட துயரம்
பெண்களின் சதிகளுக்கு இலக்கான துன்பம்
நியாயமின்றி சிறை செல்ல வேண்டிய நிர்பந்தம் என அடுக்கடுக்கான பிரச்சனைகள் எழுந்தன.

ஆனால் அந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட அவருடை குண இயல்பே அவருக்கு உதவியது.

தீமையைக் கண்டு  விரண்டு ஓடும் அவரது ஒழுக்கம் அவரது சட்டையை பின்புறமாக கிழிய வைத்தது. அதுவே அவரை அவப்பெயரிலிருந்து காப்பாற்றியது.

وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِيصَهُ مِنْ دُبُرٍ وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَى الْبَابِ قَالَتْ مَا جَزَاءُ مَنْ أَرَادَ بِأَهْلِكَ سُوءًا إِلَّا أَنْ يُسْجَنَ أَوْ عَذَابٌ أَلِيمٌ(25)قَالَ هِيَ رَاوَدَتْنِي عَنْ نَفْسِي وَشَهِدَ شَاهِدٌ مِنْ أَهْلِهَا إِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنْ الْكَاذِبِينَوَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنْ الصَّادِقِينَ(27)فَلَمَّا رَأَى قَمِيصَهُ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ إِنَّهُ مِنْ كَيْدِكُنَّ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ

எகிப்து நாட்டின் அமைச்சரின் திட்டத்தால் அவர் நிர்பந்தமாக சிறை செல்ல நேர்ந்தது.

அதிலிருந்து விடுபடவும் அவருக்கு அவரது இயல்புகளோ உதவியது.

சிறைக்கூடத்தில் சக கைதிகள் இருவர் அவரைத் தேடி வந்தனர், இருவரும் அரசாங்க ஊழியர்கள்.

அவர்கள் கண்ட கனவு அவர்களை யூசுப் நபியிடம் அழைத்து வந்தது என பலரும் நினைக்கின்றனர்.

அல்ல ;
அல்லாஹ் வேறு காரணத்தை கூறுகிறான்.

وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا وَقَالَ الْآخَرُ إِنِّي أَرَانِي أَحْمِلُ فَوْقَ رَأْسِي خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ                               نَبِّئْنَا بِتَأْوِيلِهِ إِنَّا نَرَاكَ مِنْ الْمُحْسِنِينَ

யூசுப் அலை முஹ்ஸினாக இருந்ததே அவரை நோக்கி கைதிகள் வருவதற்கு காரணமாக இருந்தது.

உம்மை நாங்கள் அறிவாளியாக பார்க்கிறோம் என்றோ அல்லது குறி சொல்பவராக கனவுக்கு விளக்கம் அறிந்தவராக பார்க்கிறோம் என்றோ கைதிகள் சொல்ல வில்லை.

கனவுக்கு விளக்கம் சொல்லும் கலை அவருக்கு தெரியும் என்பது அவர்களுக்கு தெரியும் வாய்ப்பும் இல்லை,

கைதிகள் தம் கனவை யூசுப் அலை அவர்களிடம் சொல்லுகிற போது சாதாரணமாக வேண்டப்பட்டவர்களிடம் கனவை பரிமாறிக் கொள்வது போலத்தான் பேசுகின்றனர்.


وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا وَقَالَ الْآخَرُ إِنِّي أَرَانِي أَحْمِلُ فَوْقَ رَأْسِي خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ نَبِّئْنَا بِتَأْوِيلِهِ إِنَّا نَرَاكَ مِنْ الْمُحْسِنِينَ

نَبِّئْنَا بِتَأْوِيلِهِ  என்பது தெரிஞ்சா சொல்லுங்க என்பது போன்றது தான்.

(எகிப்து மன்னர் தம கனவுக்கு விளக்கும் கேட்கும் போது يُوسُفُ أَيُّهَا الصِّدِّيقُ أَفْتِنَا فِي سَبْعِ بَقَرَاتٍ   என்று சொல்வதை கவனிக்கவும். )

யூசுப் அலை முஹ்ஸினாக – உபகாரியாக -  இருந்ததே கைதிகள் அவரை நோக்கி வர காரணமாக இருந்தது.


உபகாரமாக நடந்து கொள்வது  மக்களை ஈர்க்கும் ஒரு பிரதான உத்தி என்பதையும் சிக்கலான கால கட்டத்திலும் அந்த குணததை கடை பிடிக்க வேண்டும் என்பதையும்  இந்த வரலாறு நமக்கு இன்றளவும் பாடமாக தருகிறது.

இந்திய முஸ்லிம்களான நாம் உபகாரி முஸ்லிம் என்ற நற்பெயரை நோக்கி நகர்வது இந்துதுத்துவா உருவாக்கும்  பிரச்சனையை எதிர் கொள்வதற்கான முக்கிய வழியாகும்.

நமது நாட்டில் இந்துத்துவ சக்திகள் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்,
அவர்கள் உருவாக்கும் ஒவ்வொரு சர்ச்சையும் அந்த வெறுப்புணர்வை வளர்க்கும் மறைமுகமான் ஒரு திட்டத்தை இலக்காக கொண்டே அமைந்திருக்கிறது.
பசு மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று சொல்லி ஒருவரைக் கொலை செய்ததன் மூலம் முஸ்லிம்கள் தான் பசுக்களுக்கு எதிரானவர்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி பசுக்களை போற்றும் மக்களிடம் முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவது
உண்மையில் இந்தியாவிலிருந்து அதிக மாட்டுக்கறியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிற அல் கபீர் என்கிற நிறுவனம் இந்துக்களுக்குச் சொந்ததமானது. அது போல பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள்
முத்தலாக் பிரச்சனையை உருவாக்கி ஷரீஅத் பெண்களுக்கு எதிரானது  அறிவுலகில் வெறுப்புணர்வை ஏற்படுத்துவது
உண்மையில் நம் நாட்டில் துன்பப்படும் பெண்களின் சதவீதம் அதிகமாக இருப்பது  இந்துச் சமூகத்திலேதான். விவாகரத்து வழக்குகள் குடும்ப நல நீதிமன்றங்களில் வழிந்து கிடக்கின்றன.
பெங்களூருவில் பெருகி வரும் விவாகரத்து வழக்குகளால் மூன்று புதிய குடும்ப நல நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்ரிகை குறிப்பிடுகிறது (ஜனவரி 2015)
இந்த வழக்குகள் யாருடையவை என்ற கணக்கெடுக்க அரசு ஒரு சிறு முயற்சி செய்யுமானால் சீர்திருந்த வேண்டியது யார் என்பது தெரிய வரும்.
ஆனால் அரசும் அதன் பின்னணியில் இருந்து செயல் படும் ஆர் எஸ் எஸ் அமைப்பும் அதற்கு ஆதரவான மீடியாக்களும் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை பரப்புவதன் மூலம் வெறுப்புணர்வை வளர்க்கும் முயற்சியை தீவிரமாக செய்து வருகின்றன.
இந்தச் சூழலில் முஸ்லிம்கள் தம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் அன்பையும் நன்மதிப்பையும்  தேடிக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது அவசியத் தேவையாக இருக்கிறது.
இயல்பாகவே முஸ்லிம்கள் பிறசமூகத்தவருடன் இணக்கமாகவும் அன்பாகவும் சகோதரத்துவ உண்ர்வோடும் பழகுகிறவர்கள் தான் என்றாலும் இன்றைய கால கட்டத்தில் அதன் தேவை இன்னும் அதிகரித்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது ஒவ்வொரு  சொல்லிலும் செயலிலும் நடவடிக்கையிலும் அது வெளிப்படவேண்டும் .
காசு பணத்தால் நம்மால் முடிந்த உதவியை சகோதர சமுதாயத்தில் சிரமப்படுகிறவர்களுக்காக நாம் தர வேண்டும்.
எங்களது பள்ளிவாசலில் குறைந்தது 2 மாதத்திற்கு ஒரு ஜும் ஆ வின் வசூல் சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் மருத்துவ உதவிக்காக வழங்கப்படுகிறது. எந்த வித அலட்டலும் இல்லாமல்.
மருத்துவ மனைகளில் ஏழை நோயாளிகள் மத்தியில் இந்தச் செய்தி பரவியிருக்கிறது. பெரிய மருத்துவ செலவு என்றல் கரும்புக்கடை பள்ளிவாசலுக்கு சான்றுகளுடன் சென்றால் அவர்களே வசூல் செய்து மருத்துவ மனைக்கு செக்காக பணம் கொடுத்து விடுவார்கள் என்பது.
தேவையுடையோருக்கான உதவிக்கு கிடைக்கும் கூலி அது யாராக இருந்தாலும் அபரிமிதமானது.
((الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل الصائم النهار)) رواه البخاري.

عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ جَاءَتْنِي مِسْكِينَةٌ تَحْمِلُ ابْنَتَيْنِ لَهَا فَأَطْعَمْتُهَا ثَلَاثَ تَمَرَاتٍ فَأَعْطَتْ كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا تَمْرَةً وَرَفَعَتْ إِلَى فِيهَا تَمْرَةً لِتَأْكُلَهَا فَاسْتَطْعَمَتْهَا ابْنَتَاهَا فَشَقَّتْ التَّمْرَةَ الَّتِي كَانَتْ تُرِيدُ أَنْ تَأْكُلَهَا بَيْنَهُمَا فَأَعْجَبَنِي شَأْنُهَا فَذَكَرْتُ الَّذِي صَنَعَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ اللَّهَ قَدْ أَوْجَبَ لَهَا بِهَا الْجَنَّةَ أَوْ أَعْتَقَهَا بِهَا مِنْ النَّارِ-- . الصحيحين

பொருளாதார இஹ்ஸானுக்கு பல வழிகள் உண்டு
கடன் கொடுப்பது
கடனை தள்ளுபடி செய்வது  கால தவனையை நீட்டிக் கொடுப்பது
عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
"
حُوسِبَ رَجُلٌ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ فَلَمْ يُوجَدْ لَهُ مِنْ الْخَيْرِ شَيْءٌ إِلَّا أَنَّهُ كَانَ رَجُلًا مُوسِرًا وَكَانَ يُخَالِطُ النَّاسَ وَكَانَ يَأْمُرُ غِلْمَانَهُ أَنْ يَتَجَاوَزُوا عَنْ الْمُعْسِرِ فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: نَحْنُ أَحَقُّ بِذَلِكَ مِنْهُ تَجَاوَزُوا عَنْهُ".

கல்விக்கட்டணம் செலுத்துவது, இது போல இன்னும் பல வழிகள் உண்டு.
சகோதர சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் நமது உபகாரத்தின் கரங்கள் நீளவேண்டும்.
இஹ்ஸானுக்கே பல வழிகள் உண்டு,
உபகாரம் என்பது பெருளாதாரத்தில் மட்டும் செய்வதல்ல,
யூசுப் நபி (அலை) அவர்கள் சிறையில் முஹ்ஸினாக இருந்தது காசு பணத்தால் அல்ல, அதற்கான சாத்தியம் சிறையில் இல்லை.
உடலால் உபகாரம்
قال رسول الله صلى الله عليه وسلم في الحديث المتفق عليه:
[
كُلُّ سُلَامَى مِنْ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ يَعْدِلُ بَيْنَ الِاثْنَيْنِ صَدَقَةٌ وَيُعِينُ الرَّجُلَ عَلَى دَابَّتِهِ فَيَحْمِلُ عَلَيْهَا أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ وَكُلُّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَى الصَّلَاةِ صَدَقَةٌ
وَيُمِيطُ الْأَذَى عَنْ الطَّرِيقِ صَدَقَةٌ

பெருமானார் (ஸல்) அவர்கள் உபகாரத்தின் வழியை திறந்து விட்டுள்ளார்கள், இதில் இன்றைய கால கட்டத்தின் தேவையை அறிந்து செயலபடுவது நமது பொறுப்பு.

குணத்தால் உபகாரம்

பழகும் விதத்தாலே கூட உபகாரியாக இருக்க முடியும்,
சிரித்த முகத்துடன் நலன் விசாரிப்பதும் சுக துக்கங்களை செவியேற்பதும் ஒரு உபகாரமே!
யூசுப் அலை அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும் முடங்கி இருக்க வில்லை. சக கைதிகளுடன் கலந்து பழகினார்கள். நட்பு பாராட்டினார்கள். சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டார்கள், தேவையான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

நியாயமான  நேர்மையான வியாபாரம் – வேலைகளுக்கு நியாயமான கூலி பெறுதல் – கூலிக்கு நியாயமாக வேலை செய்தல் – தொழிலில் விசுவாசமாக இருத்தல் என ஒவ்வொரு முஸ்லிம் கடை பிடிக்கும் தர்மமும் முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மையாக அமையும் .  

இந்தோனேஷியா இன்று உலகில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் நாடாக திகழ்கிறது. அங்கு ஆட்சியாளர்கள் மூலம் இஸ்லாம் செல்ல வில்லை.

குஜராத்திலிருந்து சென்ற 9 வியாபாரிகள் தமது நியாயமான வியாபாரத்தின் மூலமும் இஸ்லாமிய பற்றுமிக்க வாழ்க்கையின் மூலமுமே இஸ்லாமிய புரட்சியை அம்மக்களிடம் ஏற்படுத்தினார்கள்.

இந்துதுத்துவா உருவாக்கும் விரோதச் சிந்தனை முஸ்லிம்களின் வியாபாரத்தை முடக்கும் திட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பது இன்று ஆட்சி நிர்வாகத்திலிருக்கிற அனைவருக்கும் தெரிந்த இரகசியம், அதே வியாபார தளத்தை முஸ்லிம்கள் தமக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு வியாபார நிறுவனத்தின் முஸ்லிம் ஊழியர் தமது சிறப்பான இஸ்லாமிய பண்புகள் மூலம் அந்நிறுவனத்தின் தலைமையிடம் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு இடத்தை ஏற்படுத்த முடியும்.

ஒரு பயணத்தில் சக பயணிகளிடம்   இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு இடத்தை ஏற்படுத்த முடியும்.

அப்பாஸ் அப்பாஸி என்றெருவர் மும்பையின் பத்ரிகை ஒன்றில் பணியாற்றினார். மும்பையில் தீவிர இந்துத்துவாவின் பிரச்சாரம் எப்படி இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். அப்பாஸ் நோன்பு திறப்பதற்காக அரை மணி நேரம் அனுமதி கோரினார். வேண்டா வெறுப்பாக முதலாளி அனுமதி கொடுத்தார். அப்பாஸின் வேலைக்கு வேறு ஒருவரை போட முடியாத நிர்பந்தம் அவருக்கும். அப்பாஸ் நோன்பு காலத்தில் அலுவலக நேரம் முடிந்த பின்னர் தான் அனுமதி பெற்றுச் சென்ற நேரத்தின் அளவுக்கு உழைத்தார். முதலாளி இதை கவனித்தார். அடுத்த ஆண்டு ரமலான் நெருங்கிய போது முதலாளியே நேரிட்டு அழைத்து நோன்பு திறக்க அனுமதி வழங்கினார்.

இதற்கு நேர் மாறாக ஒரு பிரபல கலைக் கல்லூரியின் தாளாளர் பெண் மணி என்னிடம் கூறினார். முஸ்லிம் மாணவர்கள் தொழுகைக்கு இடம் கேட்டனர். மாணவர்களிடம் பக்தியுணர்வு இருப்பது வரவேற்கத்தக்கது என்று நான் ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தேன் அந்த இடத்தில் சண்டை போட்டு பிரச்சனையை ஏற்படுத்தினார்கள் , அறையை மூடிவிட்டேன். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அனுமதியளித்தால் 3 மணிக்கு மேல் கல்லூரிக்கு திரும்புகிறார்கள் என்றார்.

அந்தக்  கல்லூரிக்கு பக்கத்திலிருந்த பள்ளிவாசலுக்கு வெள்ளிக்கிழமை மதியம 3 மணிக்கு நான்  சென்ற பார்த்தேன். மாணவர்கள் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.  

நமது குண இயல்புகளிலும் நடை முறையிலும் நல்ல மாற்றங்கள் வந்தே தீர வேண்டும். அது நிகழுமெனில் இந்துதுவ சக்திகளின் முயற்சிகள் முனையிலேயே தோற்றுப் போகும்.

·         பொதுவான சமூக சேவையும் தீமைகளுக்கு எதிரான போராட்டமும் இந்த வகையில் அடங்கும்.

مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ
  
அட என் பிரச்சனையே பெரிசா இருக்கு நீ வேற தொல்லை பண்ணாதே என்று மற்றவர்கள் சொல்வார்கள் எனில் யூசுப் அலை அப்படி நடந்து கொள்ள வில்லை, பிறரின் பிரச்சனைகளுக்கு செவி கொடுத்தார்கள்.
ஊருக்கு பொதுவான பிரச்சனைகளுக்கான போராட்டத்தில் பங்கேற்பது போன்ற பொது நன்மைக்கான வழிகளை கடை பிடிப்பதன் மூலம் இஹஸானின் தளத்தை நாம் விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.
நல்ல வழிகள் எதன் மூலமாவது முஸ்லிம் உபகாரி என்ற பெயரைச் சம்பாதித்தாக
அதே நேரத்தில் முஸ்லிம் உபத்திரவம் செய்பவன் என்ற பெயருக்கு கூடுமானவரை ஆளாகக் கூடாது.
பேச்சு வார்த்தைகளில் எதற்கெடுத்தாலும் கெத்து பேசுவதும் கோபப்படுவதும்  அடாவடி செய்வதும் நம்மில் சிலரது  இயல்பாக இருக்கிறது.
இது போன்ற வெறுப்பை ஏற்படுத்தும் வழிகளை  கூடுமானவரை தவிர்க்க வேண்டும்
சுருக்கமாக சொல்வதானால் முஸ்லிம் என்பவர் தோற்றத்தில் மட்டுமலல் குணத்திலும் கம்பீரமானவராக இருக்க வேண்டும்.
யூசுப் (அலை) போல .
வெறுப்பூட்டும் திட்டங்கள் சூரியனைக் கண்ட பனி போல காணாமல் போய்விடும்.










.




No comments:

Post a Comment