வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 10, 2016

செல்லாக் காசு

நமது நாட்டில் இரண்டாவது முறையாக மக்களின் புழக்கத்தில் இருந்த நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சுதந்திர இந்தியாவில் 1978 ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் கள்ள நோட்டை ஒழிக்கப்போவதாக கூறி 10 ஆயிரம் 5000 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தார்.

நமது நாட்டில் ரூ. 10,000 நோட்டை 1938ம் ஆண்டு வெள்ளையர் அரசு அறிமுகப்படுத்தியது. அதன் புது வடிவம் பின்னர் 1954ல் வெளியானது.
1078 ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமராக பதவிக்கு வந்தபோது 1000, 5000, 10,000 ஆகிய ரூபாய் நோட்டுக்களை ஒழித்தார். அது அப்போது பெரும் பரபரப்பாக இருந்தது.

இந்த நோட்டுக்கள் பெரும் பணக்காரர்களின் கைகளில் மட்டுமே புழங்கி வந்த நோட்டுக்கள். அதனால் மெரார்ஜி தேசாயின் தடை சாமாணிய மக்களை பாதிக்க வில்லை.

மொரார்ஜி தேசாய் குஜராத்காரர் .
இப்போதைய பிரதமரும் குஜராத் காரர் 

இவர் மக்களின் பொதுப் புழக்கத்தில் இருந்த ஆயிரம் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என திடீரென அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை பொதுமக்களை பெரிதும் சிரமத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
நாட்டின் பொருளாத அடிப்படையை பற்றிய பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது

பொதுவாக இது போன்ற நடவடிக்கை முறைகேடான பணப் பரிவர்த்தனைகளை - இலஞ்சம் ஊழல் பணப்பதுக்கல் கறுப்புப் பணம்  ஆகியவற்றை கட்டுப்படுத்தும் என்று பெரிதாக விளம்பரப் படுத்தப் பட்டாலும் இவற்றின் பெரும் பலன் என்ன என்பது கேள்விக்குரியானதாகும் .

இந்திய நாட்டின் மிக முக்கியப் பிரச்சனை நம்முடை பணம் அந்நிய நாட்டில்
முடக்கப்பட்டிருக்கிறது.

கறுப்பு பணம் எவ்வளவு
கடந்த 2009-10 மற்றும் 2010-11ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் காட்டப்படாத வருமானம், பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
வறுமை எவ்வளவு
இந்தியாவில் எட்டு மாநிலங்களில் 42 கோடியே 10 லட்சம் பேர் வறுமையில் தவிப்பதாக ஐ.நா. சபையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 42.1 கோடி பேர் வறுமையில் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள 26 பின்தங்கிய நாடுகளில் உள்ள மொத்த ஏழைகளின் எண்ணிக்கை 41 கோடி. இந்திய ஏழைகளின் எண்ணிக்கை அதையும் தாண்டியுள்ளது. அதாவது, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள், இந்தியப் பெண்களில் பாதி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் ஐ.நா. ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலுள்ள கருப்பு பணத்தை மீட்டு வந்தால் என்ன செய்திருக்க முடியும்

நம் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து, வெளிநாட்டில் பதுக்கியுள்ள பணம், 1,500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உள்ளதாகவும்இந்த பணத்தை மீட்டால், நாம் 30 ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட முடியும் அல்லது இந்த பணத்தை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பல இலட்சங்கள் பிரித்து கொடுக்க முடியும் என்றும் பொதுவாக பலரும் பேசினர்.

நம்முடைய பிரதமர் ஆட்சிக்கு வருவதற்கு முன் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கிற கருப்பு பணத்தை ஒரு வருடத்தில் மீட்டு ஒவ்வொரு குடிமகனுடைய கணக்கிலும் 16 இலட்சம் போடுவோம் என்றார்.

அந்தப் பேச்சு வெறும் பேச்சாக போச்சு.

வெளிநாட்டிலுள்ள கருப்புப் பணத்தை மீட்க சக்தியற்ற அரசு இப்போது மீண்டும் அதிரடியாக 500 ஆயிரம் ரூபாய்களை அரசு திடீரென முனறிவிப்பின்றி நள்ளிரவில்  தடை செய்துள்ளது.

பல ஆயிரம் கோடிகளை வைத்திருப்போருக்கு செய்திகள் முன்னரே சென்று விட்டன என்பதையும் பாரதீய ஜனதா கட்சியினருக்கு 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் முன்பே வழங்கப்பட்டுள்ளன என்பதையும் மீடியாக்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் அரசாங்கத்தின் இந்த திட்டம் சாமாணிய நடுத்தர வியாபாரிகளையும் பொது மக்களையும் துன்புறுத்துகிற ஒரு ஏற்பாடாகவே அமையும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்த நடவடிக்கையினால் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் இந்திய நாணயங்களை பற்றி ஒரு பொதுவான அவநம்பிக்கை ஏற்படும் என அவர்கள் கூறுகிறார்கள்.

இவ்வாறு செல்லாக் காசு பற்றி அறிவிப்புக்குப் பின் மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு துன்பங்கள் கதை கதையாக பேசப்படுகிறது. அவற்றில் மிக வேதனையான ஒரு செய்தியை இன்றை மீடியாக்கள் வெளியிட்டுள்ளது.
(ஒன் இந்தியா )

ஆயிரம் ரூபாய் மாற்ற முடியாத அதிர்ச்சியில் வங்கி வாசலில் பெண் மாரடைப்பில் மரணம்

(http://tamil.oneindia.com/news/india/woman-dies-shock-outside-bank-gorakhpur-266871.html)
ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிக்குப் போய் மாற்ற முடியாத அதிர்ச்சியில் பெண் ஒருவர் வங்கி வாசலில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரை சார்ந்தவர் தித்ரஜி ,40. இவர் சலவை தொழிலாளி. இவர் தன்னிடம் உள்ள இரு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வங்கி அதிகாரிகள் , பணத்தை இரண்டு நாட்களுக்கு மாற்ற முடியாது என்று கூறியிருந்தனர். இதனை தவறாக புரிந்து கொண்ட, தித்ரஜி வங்கியில் இருந்து ஒருவித பதற்றத்துடன் வெளியேறினார். செல்லாத நோட்டுக்களை வைத்து என்ன செய்வது என்று யோசித்த அந்தப் பெண்ணுக்கு மயக்கமாக வந்தது. வங்கியின் உள்ளே இருந்து வாசல் அருகே வரும்போது மாரடைப்பு ஏற்பட்டது. சுருண்டு விழுந்த அவர் உடனே உயிரிழந்தார் ,அவரது கையில் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் வங்கி பாஸ்புக் அருகேயே சிதறிக் கிடந்தன. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தித்ரஜியின் உறவினர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள் தித்ரஜியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே மத்திய அர்சின் இந்த நடவடிக்கை ஒரு அரசியல் ஸ்டண்ட் என்றும் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் தன்னுடைய அரசின் மீது தொடர்ச்சியாக வந்து விழும் களங்கங்களை துடைப்பதற்காகவும் உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்து வருகிற தேர்தலில் அரசின் கையால் ஆகாத இயல்பை மறைப்பதற்காக அரசு இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியி பாடிபில்டர் இமேஜை ஏற்படுத்த முயல்கிறது என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற ஆவலில் மக்களில் சிலர் இதற்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்றாலும் அரசு அதற்கேற்ற மற்ற நடவடிக்கைகள் எதையும் எடுப்பதில்லை என்பதை வெளிப்படுத்தவே செய்கின்றனர். மாறாக பெரும் நிறுவனங்களுக்கு அரசு காட்டுகிற தாராளச் சலுகைகளில் தற்போதைய மத்திய அரசே ஊழலில் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற கருத்தை ஊர்ஜிதப் படுத்துகிறது.

மத்திய அரசின் பி எஸ் என் எல் கடந்த சில மாதங்களாக மிக மோசமான சர்வீஸ் செய்கிறது அதே நேரத்தில் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்திற்கு ஆதரவாக அரசின் சார்பு அமைப்பான டிராய் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஏர்டெல் டொக்கோமோ போன்ற நிறுவணங்களின் மீது  தண்டனையாக தீர்ப்பளிக்கிறது.

உண்மையில் ஊழலை ஒழிக்க அரசு நினைக்குமானால ஊழலில் ஈடுபடுவோரை தண்டிக்க அரசு தனிப்பட்ட அக்கறை செலுத்தலாம். ஊழலில் பிடிக்கப்படுவோர் அல்லது ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்படுவோருக்கு எதிராக அரசு அதிரடி அறிவிப்புக்களை கொண்டு வரலாம்.

அரசு ஊழியர்கள் அரசியல் வாதிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும் திடீர் வழி முறைகளை யோசிப்பதோடு ஊழலை தடுப்பதற்கான நிரந்த ஏற்பாடுகளைப் பற்றி சிந்தித்திருக்கலாம்.

இதே போல பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோரை தனிமைப் படுத்தி தண்டிக்கு  கடுமையான வழி முறைகளை யோசித்திருக்கலாம். அதை விடுத்து சுய தம்பட்டத்திற்காக பொதுமக்களை அநாவசியமாக துன்புறுத்துகிற வேலையில் அரசு இறங்கியிருக்கிறது.

இந்திய பெருளாதார அமைப்பை பற்றி இந்திய மக்களையே அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.  

சில குற்றவாளிகள் கூட தப்பித்துக் கொண்டு போகட்டும் ஆனால் நிரபராதிகள் தொல்லை அனுபவித்து விடக் கூடாது என்பது அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க வேண்டும்.

ஆனால் தற்போதைய அரசின் நடவடிக்கை எத்தனை கோடி நிரபராதிகள் வேண்டுமானால் துன்பம் அடையட்டும் சில குற்றவாளிகள் தப்பிக் கொள்ளக் கூடாத் என்ற பாணியில் அமைந்திருக்கிறது.

குற்றத் தடுப்பு நடை முறைகளை அறியாத அல்லது மக்களின் துயரம் குறித்து அக்கறைப் படாத அல்லது விளம்பரத்திற்காக வாழும் அரசாங்கத்தின் நடவடிக்கை இது

நாம் அல்லாஹ்விடம் கையேந்துகிறோம். எங்களது ஆட்சியாளர்களை எங்கள் மீது கருணகாட்டுகிறவர்களாக ஆக்குஅவர்கள் எங்களிடம் இரக்கமற்று நடந்து கொள்ள அனுமதித்து விடாதே!

அரசாங்கத்தின் இந்த திடீர் துக்ளக் தர்பார் நடவடிக்கையும் அதற்குப் பின்னர் உண்டான நிகழ்வுகளும் பலத்த பல் வேறுபட்ட சிந்தனைகளை உண்டு பண்ணுகின்றன.

1.       நமது வசதி வாய்ப்புக்கள் திடீரென முடக்கப்படும் அபாயம் எப்போதும் எல்லா விசயத்திலும் உண்டு,

தற்போதை அரசின் அறிவிப்பால் எல்லா வசதி இருந்தும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழல்கள் ஏராளமாக ஏற்பட்டன.

2.   ஐநூறு ரூபாய நோட்டுக்கள் பல இருந்தன. இரவுப் பயணத்தில் பசித்தது ஒரு பிஸ்கட் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்க முடியலை.
3.   இரயில் டிக்கட் வாங்க முடியாமல் பயணம் பாதியில் முடிந்தது.

அதனால் பெருமானார் (ஸல்) அவர்கள் எப்போதும் இப்படி பிரார்த்தனை செய்வார்கள்

  اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ))-     -  ஸஹீஹ் முஸ்லிம்

அதனால் கிடைத்திருக்க்கிற நிஃமத்துக்களுக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பை கொடு எனவும் அல்லாஹ்வை பிரார்த்திக்க்  வேண்டும்

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ- سورة الأحقاف، الآية: 15

சில விசயங்களில் நமது எந்த முன்னெச்சரிக்கையும் பயனளிக்காது என்றாலும் முன்னெச்சரிக்கை பயணளிக்கிற விசயங்களில் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்.

1.  பயணங்களில் சில்லரை வைத்திருப்பது
2.  ஆரோக்கியமாக இருக்கிற போதே உடல் நலத்தை பேணிக் கொள்வது
3.  உணவுகளில் கட்டுப்பாடு
4.  பொதுவாக சிரமங்களை தாங்கிக் கொள்ளும் மனோ நிலையில் இருப்பது.
5.     وَلَمَّا أَصَابَتْكُمْ مُصِيبَةٌ قَدْ أَصَبْتُمْ مِثْلَيْهَا قُلْتُمْ أَنَّى هَذَا قُلْ هُوَ مِنْ عِنْدِ أَنْفُسِكُمْ} [آل عمران: 165]، وقال بشكل عام في سورة الشورى: {وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ} [الشورى: 30
6.  சுன்னத் நபில் தொழுககளை அதிகமாக தொழுது கொள்வது- பர்ளுகளில் ஏற்படும் குறைபாடுகளை அடைக்க அவை உதவும்
7.  ஆரோக்கியமான காலத்தை இபாதத் செய்தால் ஆரோக்கியமற்ற காலத்திற்கு அது உதவும்.
8.  கல்விச்சாலைகளுக்கு செல்லும் பிள்ளைகள் விசயத்தில் எச்சரிக்கையாக இருப்பது
9.  மருந்து மாத்திரைகளை சாப்பிடும் விசயத்தில்
இது போல இன்னும் நிறைய உண்டு
என பல வழிகளிலும் முன்செச்சர்க்கையும் முன்னேற்பாடுகளும் திடீரென ஏற்படும் அசெளகரியங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.

அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பின் மற்றொரு பாடம்

ஒரு பொருள் அதன் மதிப்பை இழக்குமானால் அது வெறும் குப்பையாகி விடும்.

மொரார்ஜி தேசாய பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக ஆக்கி அறிவிப்பு வெளியிட்டதற்கு அடுத்த நாள் மக்கள் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுத்தாள்களை சுருட்டி சுருட்டு போல குடித்த காட்சி பத்ரிகைகளில் வெளியாகி இருந்தது.

மனிதர்கள், அறிஞர்கள், செல்வந்தர்கள் , பதவியிலிருப்போர் முதியவர்கள் அந்தஸ்திற்குரியவர்கள் யாராக இருப்பினும் அதற்கேற்ற மரியாதையான நடவடிக்கைகளை கைவிடுவார்கள் எனில் குப்பைக் கூடைக்கு அனுப்பப் படுவார்கள்.

1.   பிரார்த்தனை ஏற்கப்படுபவர் என்ற அந்தஸ்து பெற்றிருந்த பல்கம் பின் பாகூரா மூஸா அலை அவர்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்த போது நாயினும் கேவலமானவர் ஆனார்.

இன்று நள்ளிரவிலிருந்து 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் தாள்கள் வெற்றுத்தாள்களாகி விடும் என்று பிரதமர் கூறினார்.

அனைத்து மக்களுக்கும் நன்மையை யோசிக்காத அரசியல் வாதிகளும் இப்படித்தான் வெற்றுத்தாள்களாகியிருக்கிறார்கள் என்பதை அரசியல் வாதிகள் நியாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் .

3 வது பாடம்

ஒரு வண்ண பேப்பரை அரசாங்கத்தின் அங்கீகாரம் மதிப்பு மிக்கதாக ஆக்குகிறது.
அந்த அங்கீகாரத்தை அரசு இரத்து செய்யுமானால் அது குப்ப கூளமாக
மாற்றிவிடுகிறதுஅது முன்னர் எவ்வளவு மதிப்பு மிக்கதாக இருந்தாலும் சரி.

நமது ஈமானும் அமல்களும் தர்மமங்களும் பொதுச் சேவைகளும்  எத்தனை எத்தனை உயர்வாக இருந்தாலும் அல்லாஹ்வின் அங்கீகாரத்தை பெறததவறுமானால் அது செல்லாக் காசாகிவிடும்.

جاء في مسند احمد ان الرسول صلى الله عليه وسلم قال لَأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ بِيضًا فَيَجْعَلُهَا اللَّهُ عَزَّ وَجَلَّ هَبَاءً مَنْثُورًا قَالَ ثَوْبَانُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا جَلِّهِمْ لَنَا أَنْ لَا نَكُونَ مِنْهُمْ وَنَحْنُ لَا نَعْلَمُ قَالَ أَمَا إِنَّهُمْ إِخْوَانُكُمْ وَمِنْ جِلْدَتِكُمْ وَيَأْخُذُونَ مِنْ اللَّيْلِ كَمَا تَأْخُذُونَ َلَكِنَّهُمْ أَقْوَامٌ إِذَا خَلَوْا بِمَحَارِمِ اللَّهِ انْتَهَكُوهَا


இப்போது செல்லாத நாணயங்களை மாற்றிக் கொள்ள அவகாசம் வழங்கியிருக்கிறது.

அதிகப்படியான பணத்தை வரி கட்டி அல்லது விளக்கம் கூறி  சரி செய்து மாற்றிக் கொள்ள முடியும்.

தவனையளிக்கப்படாத , வரி கட்டவோ சரிக்கட்டவோ முடியாத நாளை நாம் அஞ்சிக்கொள்ளவோம் . அல்லாஹ் கிருபை செய்வானாக!2 comments:

  1. யாஅல்லாஹ் எங்களுக்கு ஈருலகிலும் வெற்றியை தருவாயாக

    ReplyDelete
  2. அல்லாஹூ அக்பர்.,

    சரியான கட்டுரை ,

    ReplyDelete