இறை
நேசர்கள் அல்லாஹ்வை நேசித்தனாலேயே இறைநேசர்கள் ஆனார்கள்.
அல்லாஹ்
நம்மை படைத்து பரிபாலிப்பவன்.
உபகாரியை
நேசிப்பது இயல்பானது. அல்லாஹ்வை விட மாபெரிய உபகாரி யார் ?
இந்த
உலகில் மனிதர்களால் கிடைத்த உபகாரங்கள் கூட அல்லாஹ்வினால் கிடைத்ததே
يقول الإمام الغزالي:(( بيان ذلك، أنا نفرض
أن شخصاً أنعم عليك بجميع خزائنه وما يملك، ومكنك فيها لتتصرف كيف شئت، فإنك تظن
أن هذا الإحسان منه، وهو غلط، فإنه إنما تم إحسانه بماله، وبقدرته على المال،
وبداعيته الباعثة له على صرف المال. فمن الذي أنعم بخلقه وخلق ماله وخلق إرادته
وداعيته؟ ومن الذي حببك إليه، وصرف وجهه إليك، وألقى في نفسه أن صلاح دينه ودنياه
في الإحسان إليك، ولولا ذلك ما أعطاك، فكأنه صار مقهوراً في التسليم لا يستطيع
مخالفته، فالمحسن هو الذي اضطره وسخره لك)).
அல்லாஹ்வை
நேசிப்பது முஃமின்களின் பர்ளு ஐன் ஆகும்.
அல்லாஹ்வை
நேசிக்கும் வழி அல்லாஹ்வை அறிந்து
உணர்வதாகும்.
قال الحسن البصري:(( إن من عرف ربه أحبه،
ومن عرف الدنيا زهد فيها
மிக ஆழ்ந்து
சிந்திக்க வேண்டிய கருத்து இது.
அல்லாஹ் நாம்
அதிகம் கேட்பதை விரும்புகிறான். மனிதர்கள் அப்படி விரும்புவதில்லை. பெற்றோர்களாக இருந்தாலும்
கூட
அல்லாஹ் அதிகம்
மன்னிப்பை விரும்புகிறான். மனிதர்கள் அப்படி விரும்புவதிலை. மனைவியாக இருந்தாலும் கூட.
குடிகாரனை பொறுத்துப்
பார்த்த மனைவி ஒரு நாள் அவன் தலையில் கல்லைத்தூக்கிப் போட்டுக் கொன்றான் என்ற செய்தி
பத்ரிகைகளில் பல முறை படித்தது.
அல்லாஹ்
நமது குறைகளை மறைக்கிறான். மனிதர்கள்
அப்படிச் செய்வதில்லை. நண்பனாக இருந்தாலும் கூட.
அல்லாஹ் நமது
தேவைகளை அறிந்து அதற்கேற்ப உதவுகிறான். மனிதர்கள் அப்படிச் செய்வதில்லை, முதலாளிக்கு
நாம் விசுவாசமாக இருந்தாலும் கூட.
.وكانَ الإنسانُ قَتوراً﴾..{الإسراء:100}
அல்லாஹ்வை நேசிப்பவர்களுக்கு
எல்லாம் கிடைக்கும் . எல்லாவற்றையும் விட முக்கியமானது அல்லாஹ்வின் லிகா எனும் தரிசனம்
கிடைக்கும்.
சொர்க்கவாசிகளிடம்
அல்லாஹ் கேட்பான், எல்லாம் கிடைத்துவிட்டதா ? அவர்கள் ஆம் என்பார்கள். இல்லை உங்களின்
ஆலிம்களிடம் கேட்டுவிட்டு வாருங்கள் என்ற் அல்லாஹ் சொல்லுவான். மக்கள் ஆலிம்களிடம்
சென்று கேட்பார்கள். நமது இனி சொர்க்கத்தில் என்ன வேண்டும். ஆலிம்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.
அல்லாஹ்வின் லிகா இன்னும் கிடைக்கவில்லையே ! மக்கள் அல்லாஹ்விடம் முறையிடுவார்கள்.
யா அல்லாஹ் உனது லிகா வேண்டும். அல்லாஹ் அவர்களுக்கு தனது லிகாவை வழங்குவான். சொர்க்க
வாசிகள் இன்பத்தில் மயங்கி நிற்பார்கள். இனி என்ன வேண்டும் என்று அல்லாஹ் கேட்பான்.
யா அல்லாஹ் உன்னை நாங்கள் பொருந்திக் கொண்டோம் என்று மக்கள் சொல்வார்கள். அல்லாஹ் சொல்வான்
உங்களை நான் பொறுந்திக் கொண்டேன். சொர்க்க வாசிகளுக்கு கிடைக்கிற அதி அற்புத மகிழ்ச்சியாக
அது அமையும்.
அல்லாஹ்வின்
திருப்தியை விட வேறு பெரிய நிஃமத் இல்லை.
அபூபக்கர்
ரலி அவர்கள் முரட்டு ஆடை அணிந்திருக்க. ஜிப்ரயீலும் மற்ற மலக்குகளும் அதே ஆடை அணிந்தனர்.
رواه البغوي في تفسيره، ونقله عنه ابن كثير، عن ابن عمررضي
الله عنهما قال: كنت عند النبي صلى الله عليه وسلم، وعنده أبو بكر
الصديق،وعليه عباءة قد خلها في صدره بخلال، فنزل جبريل، فقال: ما لي أرى أبا بكر عليه عباءة قد خلها
في صدره بخلال؟! فقال: أنفق ماله علي قبل الفتح، قال: فإن الله يقول: اقرأ عليه
السلام، وقل له: أراضٍ أنت عني في فقرك هذا أم ساخط؟ فقال رسول الله صلى الله عليه
وسلم: "إن الله يقرأ عليك السلام، ويقول لك: أراضٍ أنت عني في فقرك هذا أم
ساخط؟" فقال أبو بكر رضي الله عنه: أأسخط على ربي عز وجل إني عن ربي راض، إني
عن ربي راض.
وذكر القرطبي الحديث بزيادة وهي: قال: "فإن الله يقول لك: قد رضيت عنك كما أنت عني راض، فبكى أبو بكر، فقال جبريل عليه السلام: والذي بعثك يا محمد بالحق لقد تخللت حملة العرش بالعبي منذ تخلل صاحبك هذا بالعباءة.
وذكر القرطبي الحديث بزيادة وهي: قال: "فإن الله يقول لك: قد رضيت عنك كما أنت عني راض، فبكى أبو بكر، فقال جبريل عليه السلام: والذي بعثك يا محمد بالحق لقد تخللت حملة العرش بالعبي منذ تخلل صاحبك هذا بالعباءة.
நரகவாசிகளுக்கு
கிடைக்கும் துன்பங்களில் பெரியது அவர்களை அல்லாஹ் திரும்பியும் பார்க்க மாட்டான் என்பது.
قَالَ اخْسَئُوا فِيهَا
وَلَا تُكَلِّمُونِي(108)
- முஃமினூன்
وَلَا يُكَلِّمُهُمْ اللَّهُ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ
يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ(77) ஆலூ இம்ரான்
அல்லாஹ்வை சரியாக
அறிந்து கொண்டால் அவனது பெயரைத் தவிர வேறு
பெயரை உச்சரிக்க நாவிற்கு நேரமிருக்காது.
அல்லாஹ்வை நேசிக்கும்
வழிகளில் ஒன்று அவனது பெயரை அதிகமாக கூறுவதாகும்.
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا
அல்லாஹ்வின்
பெயர்கள் அஸ்மாவுல் ஹுஸ்னா என்று அழைக்கப்படுகிறது. அது பிரேம் போட்டு மாட்டி வைத்துக்
கொள்வதற்கல்ல. அந்தப் பெயர்கள் அனைத்திலும் நாம் அல்லாஹவை அழைக்க வேண்டும் என்பதற்காகவே
.
அஸ்மாவுல் ஹுஸ்னா
99 என்று பரவலாக சொல்லப்படுவது ஒரு ஹதீஸில் அப்படி தொடர்ச்சியாக இடம் பெற்றது என்பதனால்
ஆகும்.
99 பெயர்கள்
தான் அல்லாஹ்விற்கு இருக்கிறது என்பது அதன் பொருள் அல்ல.
அல்லாஹ்விற்கு
ஏராளமான பெயர்கள் உண்டு. நான் அனுபவிக்கும் ஒவ்வொரு இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
ஏற்ப அவனுக்கு பெயர்கள் உண்டு.
கஃபாவின்
சுவரில் யா ஹன்னான் (மென்மையானவன்) யா மன்னான் (உதவியாளன்) என்று அல்லாஹ்வின் இரு பெயர்கள் உண்டு. ஆனால் அது அஸ்மாவுல்
ஹுஸ்னாவில் இல்லை.
அல்லாஹ்வின்
பெயர்களில் அல்லாஹ் என்பது பெயராகும் . மற்றவை அனைத்தும் அல்லாஹ்வின் சிபாத் எனும்
தன்மைகளைப் பற்றிய அடையாளமாகும். அல்லாஹ்வின் சிபாத்துக்களுக்கும் எல்லை இல்லை. அது
போல அவனது பண்புப் பெயர்களுக்கும் எல்லை இல்லை.
அல்லஹ்வின் எல்லை அற்ற அந்தப் பண்புப் பெயர்களில் ஒவ்வொன்றிலும்
அல்லாஹ்வை அழைப்பது அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமானது.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பது பழக்கம் .
اسالك
بكل ما دعاك به كل ملك مقرب او نبي مرسل او رسول مصطفى، او احد ممن خلقت
அல்லாஹ்வினுடைய
பெயர்களின் மகத்துவங்கள் பற்றி ஏராளமான நூற்கள்
எழுதப்பட்டுள்ளன, அந்நூற்களை வாசித்தால் அல்லாஹ்வின் மீது அன்பு பெருக்கெடுக்கும்.
பத்ஹுல்லா
என்ற பெயரில் ஒரு நூல் இருக்கிறது. அது ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமாக அல்லாஹ்வின்
பெயரின் பெருமைகளைப் பேசுகிறது என்கிறார்கள். துல்பிகார் சாஹிப்
அல்லாஹ்
எனும் பெயரின் மகத்துவங்கள்
அல்லாஹ்
எனும் சொல் அல்லாஹ்வின் தனித்த அடையாளச் சொல்லாகும் இது இஸ்முல் ஜலாலா என்று அழைக்கபடும்.
இந்தப்
பெயரில் எந்தச் சிலையும் அழைக்கப்பட்டதில்லை. அல்லாஹ்வை போலவே இந்தப் பெயரும் புனிதமானது.
மக்காவின்
காபிர்கள் கூட அல்லாஹ்வுக்கு எந்த சிற்பத்தையும் கற்பனை செய்ய வில்லை.
திருக்குர்
ஆனின் அத்தியாயங்கள் மூன்று வகையாக இருக்கின்றன.
அதன்
ஒவ்வொரு வசனத்திலும் அல்லாஹ் என்ற சொல் இடம் பெற்றிருக்கும் . முஜாதலா அத்தியாயம் அதற்கோர்
உதாரணம்
قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي
إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ(1)الَّذِينَ
يُظَاهِرُونَ مِنْكُمْ مِنْ نِسَائِهِمْ مَا هُنَّ أُمَّهَاتِهِمْ إِنْ أُمَّهَاتُهُمْ
إِلَّا اللَّائِي وَلَدْنَهُمْ وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنْكَرًا مِنْ الْقَوْلِ
وَزُورًا وَإِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ(2)
ذُكِرَ لفظ الجلالة في كل آية من السورة
திருக்குர்
ஆனின் அத்தியாயங்களில் இன்னொரு வகை அதன் இரண்டு அல்லது மூன்று வசனங்களுக்கு ஒரு முறை
அல்லாஹ் என்ற பெயர் இடம் பெற்றிருக்கும் .
சூரத்து அர்ரஹ்மானைப்
போல. இரண்டு அல்லது மூன்று ஆயத்துக்களுக்கு ஒரு முறை அல்லாஹ் அல்லது ரப்பு எனும் பெயர்
அதில் இருக்கும்.
மற்ற அத்தியாயங்களில்
5 அல்லது 7 ஆயத்துக்களுக்கு ஒரு முறை அல்லாஹ்வை குறிப்பிடும் பெயர் இருக்கும்.
அல்லாஹ் என்ற
பெயர் குர் ஆனில் மொத்தம் 698 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது, பிஸ்மி அவூது இரண்டிலுமுள்ளதைச்
சேர்த்தால் 700 முறை அல்லாஹ் எனும் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது,
குர் ஆனை ஓதும்
போது அல்லாஹ் அல்லது ரப்பு அல்லது ரஹ்மான் ரஹீம் எனும் சொற்கள் திரும்பத்திரும்ப இடம்
பெறுவதை அறியலாம்.
அல்லாஹ் தனது
பெயரை எங்கெல்லாம் நுழைக்க முடியுமோ அங்கெல்லாம் நுழைத்திருக்கிறான்.
அப்படி நுழைப்பதற்கான
தேவை இல்லாவிட்டாலும் கூட.
وَيَسْتَعْجِلُونَكَ بِالْعَذَابِ
என்று சொல்லி விட்டு அவர்கள் கேட்கிற வேதனை சீக்கிரமே வந்து சேரும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அல்லாஹ் தனது பெயரை அங்கே நுழைக்கிறான்.
وَيَسْتَعْجِلُونَكَ
بِالْعَذَابِ وَلَن يُخْلِفَ اللَّهُ وَعْدَهُ
அதே
போல
ذلك بما قدمت أيديكم
உங்களது செயல்களால் நீங்கள் நரகிற்கு செல்கிறீர்கள் என்று சொல்லியிருக்கலாம். அல்லாஹ் அந்த இடத்தில் தனது பெயரை இணைக்கிறான்.
இது போல இன்னும்
ஏராளமான உதாரணங்களைப் பார்க்க முடியும்.
திருக்குர்
ஆனின் பொருள் அறியாதவர் யாரேனும் குர் ஆனை ஓதினால் ஆறு ஏழு பக்கங்களை ஓதுவதற்குள்ளாக
அவரது நாவில் அல்லாஹ் என்ற பெயர் திரும்பத்திரும்ப பல முறை வந்து விடும்.
மார்க்க அறிஞர்கள்
கூறுவதுண்டு.
திருக்குர்
அனை சாறு பிழிவோம் என்றால் அது அல்லாஹ் என்ற ஒரு சொட்டில் அடங்கிவிடும்,
அல்லாஹ் எனும்
வார்த்தை பாக்கியம் நிறைந்தது, அது உச்சரிக்கப்படும் இடத்தில் பிளவுகள் அகன்று நட்பும்
இணைப்பும் பெருகும்,
திருமணத்திற்காக
ஓதப்படுகிற குத்பாவில் இந்த ஆயத் இடம் பெற பெருமானார் கற்றுக் கொடுத்தார்கள்.
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ
وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً
وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَتَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ
عَلَيْكُمْ رَقِيبًا(1)
அல்லாஹ்வின்
பெயரைச் சொல்லியே நீங்கள் அதிகம் கேட்கிறீர்கள் என்ற சொல் அந்நிய ஆணைய்ம் பெண்ணையும் அன்பிற்குரிய
கணவன் மனைவியாக்குகிறது
அல்லாஹ் என்ற
சொல் பரக்கத்தும் செல்வாக்கும் மிக்கதாகும்.
பல்கீஸ் அரசியின்
சிம்மாசனத்தை அல்லாஹ் என்ற வார்த்தையை சொல்லி கண்மூடித்திறக்கும் நேரத்தில் சுலைமான்
அலை அவர்களின் முன்னிலையில் கொண்டு வந்தார் அது பற்றி அறிந்த பேரறிஞர் ஆசிப் பின் பர்கியா.
இதே அல்லாஹ்
என்ற வார்த்தையை சொல்லி ஈஸா அலை இறந்தவனை உயிர்ப்பித்தார்கள்.
قم بإذن الله
அல்லாஹ் என்ற ஒற்றை வார்த்தையில் எதிரி பிடித்திருந்த
வாளை கீழே விழச் செய்தார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்
عن جابر بن
عبد الله - رضي الله عنه - قال: ( غزونا مع رسول الله - صلى الله عليه وسلم - غزوة قِبَل نجد، فأدركنا
رسول الله - صلى الله عليه وسلم - في واد كثير العضاه (شجر فيه شوك)،
فنزل رسول الله - صلى الله عليه وسلم - تحت شجرة فعلق سيفه بغصن من أغصانها، قال:
وتفرق الناس في الوادي يستظلون بالشجر، قال: فقال رسول الله - صلى الله عليه وسلم
-: إن رجلا أتاني وأنا نائم، فأخذ السيف، فاستيقظت وهو قائم على رأسي، فلم أشعر
إلا والسيف صلتا في يده، فقال لي: من يمنعك مني؟، قال: قلتُ: الله، ثم قال في
الثانية: من يمنعك مني؟، قال: قلت: الله، فشام السيف (رده في غمده) فها هو ذا جالس، ثم لم يعرِض له رسول الله - صلى الله عليه وسلم - ولم
يعاقبه وجلس ) رواه البخاري .
முஸ்லிம் உம்மத்தின் இந்த
மகத்தான
பாரம்
பரியம்
பெருமானாரோடு
முடிந்து
விட
வில்லை
தாத்தாரிகள் முஸ்லிம்களை
அழித்தொழித்து
அவர்களை
கடும்
அச்சத்தின்
பிடியில்
சிக்க
வைத்திருந்த
கால
கட்டத்தில்
தர்பந்த்
என்ற நகருக்குள் தாத்தாரிகளின் ஒரு இளவரசனின் படை நுழைகிறது. ஊர் மக்கள் செய்தியை கேள்விப்பட்டதுமே
ஊரைக் காலி செய்து வெளியேறிவிட்டனர். இளவரசன் கொக்கரித்தான், முஸ்லிம்களின் பேடித்தனத்தைப்
பார்த்தீர்களா நம் பேரைக் கேட்டதும் ஊரைக் காலி செய்து விட்டனர் என்று சொன்னான். அவனது
பணியாளர்கள் அவனிடம் வந்து “ எல்லோரும் போய்விட்டனது இரண்டு பேர் மட்டும் பள்ளிவாசலுக்குள்
இருக்கின்றனர் என்றனர். நக்ஷபந்தீ தரீக்காவின் ஷைகுகளில் ஒருவரான் ஷைகு அஹ்மது தர்பந்தீயும்
அவரது சீடரும் இழுத்துவரப்பட்டனர். நீங்கள் மட்டும் ஏன் வெளியேற வில்லை என்று இளவரசன்
கேட்டான். நாங்கள் அல்லாஹ்வின் வீட்டிலிர்ந்தோம் என்று ஷைகு பதிலளித்தார். இதோ உன்னை
கொல்லப்போகிறேன் என்று வாளை உறுவியவன் இப்போது உன்னைப் பாதுகாப்பது யார் என்றான் வால்லாஹ்
என்றார்கள் ஷைகு அஹ்மது இளவரசனின் கையில் இருந்த பட்டாக்கத்தி கீழே விழுந்தது. தனது
இயாலாமையை மறைத்துக் கொன்டு இளவரசன் சொன்னான். உங்கள் இருவரை மட்டும் இங்கே தங்கிக்
கொள்ள அனுமதிக்கிறேன்.
நமது
நாட்டிலுள்ள ஏராளமான மக்கள் கண்ட அதிசயம் இது
காஜா
குலாம் ஹஸன் சவ்வாக அவர்கள் மூலம் ஒரு வர் இஸ்லாமை தழுவினர். இந்து அமைப்பை சார்ந்தவர்கள்
அவர் மீது குற்றம் சாட்டி கோர்ட்டில் நிற்க வைத்தனர். நீதிபதியும் ஒரு இந்து. அவராகத்தான்
முஸ்லிமானார் என ஷைக் கூறினார். இல்லை நீர்
தான் மதம் மாற்றினீர் என நீதிபதி கடுகடுத்தார். ஷைகு அவர்கள் அங்கிருந்த அதிகாரியை
நோக்கி விரல் நீட்டி இவரையும் தான் முஸ்லிமாக்கினேன் என்று சொல்லி விட்டு அல்லாஹ் என்றார்கள்
அந்த அதிகாரி கலிமா சொல்ல ஆரம்பித்தார். இப்படி அங்கிருந்த ஐந்து பேர் முஸ்லிம்கள்
ஆனபோது நீதிபதி எங்கே தானும் முஸ்லிமாகிவிடுவோமோ என பயந்து தனது அறைக்கு எழுந்து சென்றதோடு
ஷைகு அவர்களை விடுதலை செய்தார் என்ற செய்தியை துல் பிகார் சாஹிப் தனது குத்பாத்தில்
எழுதியுள்ளார்.
அல்லாஹ்
என்று அடிக்கடி கூப்பிடுவது அல்லாஹ்வின் சகல தன்மைகளையும் உள்ளடக்கி அழைகப்பதாக அமையும்.
அல்லாஹ்வின்
சிபத்துக்களை கொன்டு அவனை அழைப்பது அந்த சிபத்துக்களுக்கேற்ற நன்மையை நமக்கு பெற்றுத்தரும்
என்பது மட்டுமல்ல அல்லாஹ்வின் அன்பை நமக்குள் பெருக்கெடுக்கச் செய்யும்,
وقال
الإمام الغزالي:(( اعلم أن أسعد الناس وأحسنهم حالاً في الآخرة أقواهم حباً لله
تعالى، فإن الآخرة معناها القدوم على الله تعالى ودرك سعادة لقائه. وما أعظم نعيم
المحب إذا قدم على محبوبه بعد طول شوقه، وتمكن من مشاهدته من غير منغص ولا مكدر،
إلا أن هذا النعيم على قدر المحبة، فكلما ازداد الحب ازدادت اللذة)).
இன்ஷஆ
அல்லாஹ் அஸ்மாவுல் ஹுஸ்னாவின் சிறப்புக்களை இன்னொரு வாரம் பார்க்கலாம்.
அல்லாஹ்வை
நேசிப்பதில் ஒரு முக்கிய அம்சம் அவனது பெயரையும் அஸ்மாவுல் ஹுஸ்னாவையும் அதிகம் கூறுவதாகும்
இறைநேசர்களாவதற்கான
மிக எளிய வழிகளில் ஒன்று அது,
No comments:
Post a Comment