பொங்கல்
திருக்குர் ஆனின்
சில அத்தியாயங்களை அதிகமாக ஒதி வர பெருமானார் (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இந்த சூராக்களை
ஓத்வதற்கான தூண்டுதலை ஏற்படுத்த நபி (ஸல்) அவர்கள் பல்வேறு இலாபங்களைச் சொல்லியிருக்கீறார்கள்.
அவற்றில் ஒன்று
சூரா வாக்கிஆ ( 56 வது சூரா) இரவு தோறும் இதை ஓதினால் வருமை தீண்டாது எனக் கூறினார்கள்/
·
عن ابن
مسعودرضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ
سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبداً. وكان ابن
مسعود يأمر
بناته بقراءتها كل ليلة.
·
عن عائشة أنها قالت للنساء: "لا تعجز إحداكن أن تقرأ سورة
الواقعة
·
روي عن مسروق بن الأجدع أنه قال: من سره أن يَعْلَمَ علم الأولين والآخرين وعلم الدنيا
والآخرة فليقرأ سورة الواقعة
இந்த அத்தியாயங்களில்
ஆய்வு செய்த அல்லாமா அபுல் ஹஸன் அலி நத்வி அவர்கள் இந்த அத்தியாயங்களில் கூறப்பட்ட
செய்திகளுக்கும் நமது அன்றாட வாழ்க்கைக்கும் ஒரு இரகசிய தொடர்பு உண்டு என்று கூறுகிறார்கள்.
நமது வாழ்க்கையின்
அடிப்படையிலான நல்ல தத்துவங்கள் கால ஓட்டத்தில் தடம் மாறிப் போய்விடாமல் காப்பாற்றுவதற்கு
இவ்வாறு சிறப்பித்துச் சொல்லப்பட்ட அத்தியாயங்கள் உதவி செய்கின்ற என அல்லாமா அவர்கள்
கூறுவார்கள்.
அன்றாடம் நாம்
ஓதுகிற சூரத்துல் வாக்கிஆ இன்றைய தினம் நாம் புரிந்து தெளிந்து கொள்ள வேண்டிய ஒரு அவசியமான
வழிகாட்டுதலை தருகிறது.
இன்று தமிழகம் பொங்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி
வருகிறது.
பொங்கல் பண்டிகை நான்கு நாள்
பண்டிகையாகும்
இன்று மார்கழி மாதம் கடைசி நாளன்று போகிப் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது.
அந்நாளில், பழையன கழித்து புதியன
புகுத்தல் வழக்கம் வீடுகளில் உள்ள பழையவற்றை மாற்றி புதியவற்றை அமைப்பார்கள்.
நாளை தை மாத முதல் நாள்
பொங்கல் கொண்டாடப்படுகிறது
உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை
மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
நாளை மறுநாள் மாட்டுப் பொங்கள்
அன்றைய தினம் உழவுக்கு உதவிய மாடுகளை சுத்தம்
செயது அழகு படுத்திப் பார்ப்பர்.
அதற்கடுத்த நான்காம் நாள் நாளை காணும் பொங்கள் என்றும்
கொண்டாடுகிறார்கள்
மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று
சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர்.
இந்த விழாக்களைப் பொறுத்தவரை ஒரு எதார்த்தமான
உண்மை என்னவெனில் பாரம்பரியமாக விவசாயத்தை வாழ்க்கையாக கொண்ட இந்திய சமூகம், பாடுபட்டு
உழைத்து செழித்த பயிரை அறுவடை செயத பிற்கு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளும்
ஒரு இயல்பான விழாவாக இது இருந்துள்ளது.
பிற்காலத்தில் இதில் சூரிய வழிபாடு இந்திரன்
கிருஷ்ணன் போன்ற தெய்வப்பெயர்களை இணைத்து விட்டு இதற்கு மதச்சாயம் பூசுவிட்டனர். சூரியனையும்
மாடுகளையும் அறுவ்டை செய்த கதிர்களையும் வழிபடுகிற பழக்கத்தை ஏற்படுத்தி விட்டனர்.
அதனால் பொங்கல் விழா என்பது நாத்திகர்களாலும்
ஆத்திகர்களாலும் வெவ்வேறு காரணங்கள் கூறி இவ்விழாக்கள் கொண்டாடப்படுகின்றன,
தமிழகத்தில் நீண்ட நாள் விடுமுறையை தருகிற
ஒரு விழாவாக தற்போது இந்த பண்டிகை அமைந்திருக்கிறது.
மக்களின் இயல்பான மகிழ்ச்சிக்கான ஒரு விழா
தெளிவான கடவுட்கோட்பாடு இல்லாத காரணத்தால் குழப்பாமான ஒன்றாக மாறிவிட்டது,
விவசாயத்திற்கு நல்ல நிலம் தேவை. தண்ணீர் தேவை
, விதை தேவை , கடும் உழைப்பும் உபகரணங்களும் தேவை வெளிச்சம் தேவை
ஆதி தமிழர்கள் இவற்றுக்கு நன்றி மாத்திரமே
செலுத்தினர். இவற்றை வழிபட வில்லை.
பிற்காலத்தில் தான் தண்ணீருக்காக இந்திரணையும்,
வெளிச்சத்திற்காக சூரியனையும்.. உழவிற்கு உதவும் மாடுகளையும் தெய்வமாக கொண்டாடுகிற
பழக்கம் ஏற்பட்டது.
உண்மையில் நிலம் தண்னீர் விதை வெளிச்சம் போன்ற அனைத்திற்கும் மேலாக அல்லஹ்வின் உதவியும்
நாட்டமும் தேவை.
இவை எவற்றினாலும் அல்ல. அல்லாஹ்வின் உதவியினாலேயே
பயிர்கள் செழிக்கின்றன.
அல்லாஹ் சூரத்துல் வாக்கிஆவில் மிகச் சாதரணமாக
அழுத்தமாகவும் கேட்கிறான்.
أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ(63)أَأَنْتُمْ
تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ(64)لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلَلْتُمْ
تَتَفَكَّهُونَ(65)إِنَّا لَمُغْرَمُونَ(66)بَلْ نَحْنُ مَحْرُومُونَ(67)أَفَرَأَيْتُمْ
الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ(68)أَأَنْتُمْ أَنزَلْتُمُوهُ مِنْ الْمُزْنِ أَمْ نَحْنُ
الْمُنزِلُونَ(69)لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ(70)أَفَرَأَيْتُمْ
النَّارَ الَّتِي تُورُونَ(71) أَأَنْتُمْ أَنشَأْتُمْ
شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ(72)نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا
لِلْمُقْوِينَ(73)فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ(74)
உழவுத்தொழிலை, தண்னீரை , வெளிச்சத்திற்காக சூரியனை வழிபடுகிற அனைவருக்குமான
கேள்வியை இந்த வசனங்கள் அழுத்தமாக முன் வைக்கின்றன.
உழவுத் தொழிலில் யாருடைய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ?
விவசாயி என்ன செய்கிறான். ? நிலத்தை சீர் செய்கிறான்.!
விதை போடுவதற்காக ஏர் உழுகிறான். விதை போடுகிறான். தண்னிர் விடுகிறான். அவ்வளவே!
விளைச்சலின் பிரதான அம்சமான விதையை வெடிக்கச் செய்து
செடியாக வெளியே கொண்டு வரும் பிரதானப் பணியில் அவனது பங்கு எதுவும் இல்லை!
அதனால் தான் அல்லாஹ் கேட்கிறான். முளைப்பிப்பது யார் ?
أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
இந்த
வசன அமைப்பில் நுட்பமாக கவனிக்க வேண்டிய செய்தி
உழவனின்
பங்கை அல்லாஹ் மறுக்க வில்லை.
நீங்கள்
உழுகிறீர்கள் அதைப பற்றி கூறுங்கள்
என்கிறார்; أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ
இதில் ஹர்ஸ் என்பது மக்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
ஹர்ஸ் என்பது நிலத்தை நிலத்தை சீர்
செய்து நடவு செய்வதாகும். விளைச்சலைப் பற்றி பேசுகிற போது அல்லாஹ் அதை தன்னுடன் இணைக்கிறான்.
நீங்களா அதற்கு காரணம் என்று கேட்கிறான்.
أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
இப்னுகுர்துபி ரஹ் கூறுகிறார்கள்
وأضاف الحرث إليهم
والزرع إليه تعالى, لأن الحرث فعلهم ويجري على اختيارهم, والزرع من فعل الله تعالى
وينبت على اختياره لا على اختيارهم.
இதனால்
தான் நபி (ஸல்) அவர்கள்
கூறுவார்கள் . நான்
நடவு செய்தது என்று சொல்லுங்கள். நான் விளைச்சல் செய்தது என்று கூறாதீர்கள்/
روى أبو هريرة عن النبي صلى الله عليه وسلم
أنه قال: (لا يقولن أحدكم زرعت وليقل حرثت فإن الزارع هو الله
முளைப்பிக்கும்
சக்தி குறித்து திருக்குர் ஆன் அடுத்து மிகவும்
மிக அழுத்தமான கேள்வியையும் விளைவுகளையும்
முன் வைக்கிறது . அல்லாஹ்வை பற்றிய பயத்தை பிரமாதமாக ஊட்டுகிற வசனங்கள் இவை
சரியான முளைப்பு
கிடைக்காமல் அல்லாஹ் தடுத்து விடுகிற சில சந்தர்ப்பங்கள் உண்டா இல்லையா ? அந்த எதார்த்த
சூழ்நிலையின் கையறு நிலையை அல்லாஹ் படம் பிடிக்கிறான்.
لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلَلْتُمْ تَتَفَكَّهُونَ(65)إِنَّا
لَمُغْرَمُونَ(66)بَلْ نَحْنُ مَحْرُومُونَ(67)
உங்களது
முயற்சியை நான் வெறும் கூளமாக
ஆக்கிவிட்டால்
நீக்கள் அதிர்ந்து நின்று விடுவீர்கள் என அல்லாஹ்
கூறுகிறான்.
நாங்கள்
கடன்பட்டவர்களாகிவிட்டோம் என்று பதறு வீர்கள்
எங்களுக்கு
கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய்விட்டதே என புலம்புவீர்கள்
அல்லாஹ்வின்
இந்த எதார்த்தமான எச்சரிக்கைகள் இன்று எந்த அளவு நிதர்சனமாகியிருக்கிறது என்பதை நாம்
அறிந்து கொள்கிறோம்.
அல்லாஹ் தான்
விளைச்சலைத் தருகிறான் என்பதை உணர்ந்து கொள்கிற அதே நேரத்தில் அவ்வாறு நஷ்டப்பட்டு
நிற்கிற விவசாயிக்கு ஆறுதல் தருவதற்கு மாவட்ட மாநில மத்திய அரசுகள் எது வும் தயாராக
இல்லை என்கிற வருத்தத்தையும் இந்த பொங்கள் சமயத்தில் நாம் நினைவு கூற வேண்டியவர்களாக
இருக்கிறோம். \
இந்த ஆண்டு ஒரு சில நாட்களில் தொடர்ச்சியாக சுமார் 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை கொண்டிருக்கிற சுழ்நிலையை பதிரிகைகள் விவரிப்பதை படித்திருப்பீர்கள்.
தென்னிந்தியாவின்
நெற்களஞ்சியமான தஞ்சை தடுமாறி நிற்கிறது என தி ஹிந்து தமிழ் பத்ரிகை கூறுகிறது. வரலாறு
காணாத வரட்சியும் விவசாயிகளின் தற்கொலைகளும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அது விவரிக்கிறது.
(ஜனவரி 12
சாகுபடியை இழந்து
தவிக்கும் திருவாரூர் விவசாயிகள் என்ற தலைப்பில் 11 ம் தேதி ஒரு கட்டுரையை வெளியாகி
இருந்தது.
பாளையங்கோட்டை
புதுக்குடி அசோககனின் அதிர்ச்சி முடிவை படித்துப் பாருங்கள்
100 ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்கிறார்கள். சண்முகம் உயிர்
துறந்த அதே பாளையக்கோட்டை கிராமத்தில் இந்த ஆண்டு மீண்டும் ஒரு உயிரை காவு
வாங்கியிருக்கிறது இந்த ஆண்டின் வறட்சி.
பாளையக்கோட்டை புதுக்குடி கிராமத்தைச்
சேர்ந்த விவசாயி அசோகன். இந்த ஆண்டு 6 ஏக்கர் நிலத்தில் நேரடி விதைப்பு மூலம் நெல் சாகுபடி
செய்தார். எதிர்பார்த்தபடி ஆற்றில் தண்ணீர் வரவில்லை. பருவமழையும் பொய்த்தது.
பயிரை இனி காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அசோகன் இழந்து விட்டார்.
இந்நிலையில், திடீரென பெய்த ஒரு சிறுமழையால் பயிருக்கு
கொஞ்சம் தண்ணீர் கிடைத்தது. இந்த தண்ணீர் போதாது. ஆனாலும், வயலுக்கு உரம் கொடுத்து பயிரை எப்படியாவது காப்பாற்றி விட
வேண்டும் என்று அசோகனின் மனம் பதைபதைத்தது.
கையில் பணம் இல்லை. மத்திய அரசின் பண மதிப்பு
நீக்க நடவடிக்கையால் கடன் கொடுக்கக் கூடிய நிலையில் ஊரில் யாரும் இல்லை. வீட்டில்
இருந்த சொற்ப அளவு தங்க நகையை எடுத்துக் கொண்டு உள்ளூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ்
வங்கிக்கு ஓடினார் அசோகன்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதை அவரது மூத்த மகன் கலைவாணன்
விவரிக்கிறார். “அது டிசம்பர் மாதம் 1-ம் தேதி. அப்பா நகையை எடுத்துச் சென்று இங்குள்ள ஐ.ஓ.பி. வங்கியில்
ரூ.14 ஆயிரத்துக்கு அடகு
வைத்தார். அந்த பணத்தை கொண்டு வயலுக்கு உரம் வாங்கி வந்து விடலாம் என்ற எண்ணத்தில்
நீண்ட நேரம் வங்கியில் வரிசையில் நின்றிருக்கிறார். மாலை வரை பணம் கிடைக்கவில்லை.
நகையை அடகு வைத்ததற்கான ரசீது மட்டும் கொடுத்த வங்கி அதிகாரிகள், வங்கியில் பணம் இல்லை என்றும், மறுநாள் வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறும் கூறி விட்டனர்.
ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய அப்பா, இரவு முழுவதும் தூங்காமல் மறுநாளாவது பணம் கிடைத்து விடுமா
என்பது பற்றியும், வயலில் ஈரம் காய்வதற்குள் உரம் போட்டுவிட
முடியுமா என்பது பற்றியும் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் காலை சாப்பிட
கூட இல்லாமல் 8 மணிக்கெல்லாம் வங்கியின் முன்னே வரிசையில்
போய் நின்றார். நீண்ட நேரம் வரிசையிலேயே காத்திருந்தார். சுமார் 10.30 மணி அளவில், நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கமடைந்த அவர் அதே இடத்தில் சரிந்து
கீழே விழுந்திருக்கிறார். அந்த இடத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை காரில் ஏற்றி
மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக
டாக்டர்கள் கூறி விட்டனர். அப்பா சாகுபடி செய்த பயிர்கள் முழுவதும் கருகி, சாகுபடியே அழிந்து விட்டது. பயிர்கள் மட்டும் சாகவில்லை.
பயிர்கள் சாகும் முன்னே எங்கள் அப்பாவும் செத்து விட்டார்” என்று கண்ணீருடன் கூறினார் கலைவாணன்.
வறட்சியின் கோரம் 56 வயதில் அசோகனின் உயிரை பறித்து சென்று விட்டது. எனக்கு 80 வயதாகிறது. என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு வறட்சியை பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை” என்கிறார் காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன்.
“ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டால் டெல்டாவில் குறுவையும், தாளடியும் சாகுபடி நடக்கும். ஒருவேளை அணையில் போதிய நீர் இருப்பு இல்லாமல் தாமதமாகத் திறக்கப்பட்டால் சம்பா நெல் சாகுபடி நடைபெறும். ஆனால் ஒரு பருவம் கூட நெல் சாகுபடி இல்லாத ஒரு ஆண்டை என் வாழ்நாளில் இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறேன். நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் சாகுபடி செலவை ஈடுகட்டும் அளவுக்கு கூட மகசூல் இல்லை. இதனால் மனமுடையும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், ‘அய்யோ எல்லாம் போச்சே’ என்ற அதிர்ச்சியில் உயிரைத் துறப்பதும், எங்களை மேலும் மேலும் துக்கத்தில் ஆழ்த்துகிறது.
“ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டால் டெல்டாவில் குறுவையும், தாளடியும் சாகுபடி நடக்கும். ஒருவேளை அணையில் போதிய நீர் இருப்பு இல்லாமல் தாமதமாகத் திறக்கப்பட்டால் சம்பா நெல் சாகுபடி நடைபெறும். ஆனால் ஒரு பருவம் கூட நெல் சாகுபடி இல்லாத ஒரு ஆண்டை என் வாழ்நாளில் இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறேன். நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் சாகுபடி செலவை ஈடுகட்டும் அளவுக்கு கூட மகசூல் இல்லை. இதனால் மனமுடையும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், ‘அய்யோ எல்லாம் போச்சே’ என்ற அதிர்ச்சியில் உயிரைத் துறப்பதும், எங்களை மேலும் மேலும் துக்கத்தில் ஆழ்த்துகிறது.
இது ஒரு உழவனின்
நாடு முழுவதும் உள்ள ஏராளமான நடுத்தர ஏழை விவசாயிகளின்
கதை இது.
இந்த விவசாயின்
உயிரழப்பு காரணமானவர்கள் யார் என்பது ஆராயப்பட வில்லை. அந்த கொடூர காரணங்கள் அடையாளப்படுத்தப்பட
வில்லை. விவசாயிகளின் துயர் துடைப்பிற்கான
சரியான வழிகள் கண்டறியப்பட வில்லை.
ஜல்லிக்கட்டுக்காக
போராடுவதற்கு நாடே திரண்டிருக்கிறது.
என்ன வகையான
சூழல் இது. ?
வேட்டியே காற்றில்
பறந்து போகிற போது தலைப்பாகைகாக போராட்டம் நடத்து கிறார்களா ?
அல்லது உண்மையான
விவசாயிகளின் பிரச்சனையை மறக்கடிப்பதற்காக நடத்தப்படுகிற நாட்கமா ? தெரியவில்லை.
விவசாயிகளுக்கு
ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை வைத்திருக்கிறார்/
விவசாயிகளின்
பிரச்சனையால் பொங்கல் கொண்டாட்டத்தையே தவிர்க்கலாம் என திரைப்பட பிரமுகர் தங்கப் பச்சான்
கோரிக்கை விடுத்திருப்பதில் ஓரளவு நியாயம் இருக்கவே செய்கிறது.
விவசாயிகள் தமது உழைப்பையும் இயறகையின் உதவியையும் எதிர்ப்பாப்பதை விட அல்லாஹ்வின் உதவியையும் சக்தையையும் அதிக நாட வேண்டும். தப்ஸீ ர் குர்துபியில் வருகிறது. والمستحب
لكل من يلقي البذر في الأرض أن يقرأ بعد الاستعاذة "أفر أيتم ما تحرثون"
الآية, ثم يقول: بل الله الزارع والمنبت والمبلغ, اللهم صلي على محمد, وارزقنا ثمره,
وجنبنا ضرره, وأجعلنا لأنعمك من الشاكرين, ولآلائك من الذاكرين, وبارك لنا فيه يا رب
العالمين. ويقال: إن هذا القول أمان لذلك الزرع من جميع الآفات: الدود والجراد وغير
ذلك, سمعناه من ثقة وجرب فوجد كذلك. ومعنى "أأنتم تزرعونه" أي تجعلونه زرعا.
وقد يقال: فلان زراع كما يقال حراث,
அல்லாஹ் பாதுகாப்பான
மழையை தந்தருள்வானாக! நமது விளை நிலைங்களை செழிக்கச் செய்வானாக! நமது விவசாயிகளுக்கு
பரக்கத் செய்வானாக அவர்களது கஷ்டங்களை குறைத்து தேவையான நிவாரணங்களை தருவானாக! விவசாயிகளின் கஷ்டத்தை போக்கும் உண்மையான சிந்தனையை
அல்லாஹ் அரசியல் வாதிகளுக்கு தருவானாக!
உயிரிழந்த விவசாயிகளின்
குடும்பத்திற்கு அல்லாஹ் தகுந்த ஆறுதலை தந்தருள்வானாக!
அதே போல நாட்டு
மக்கள் சத்தியத்தை சரியான உணர்ந்து கொள்ள அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
பொங்கள் பண்டிகை
என்பது இயல்பாக விவசாய சமுதாயம் அனுபவிக்கிற ஒரு மகிழ்ச்சி. அதை தவறான கண்ணோட்டத்திற்குள்
இழுத்து விடும் தீமையிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக!
விளைச்சலுக்கு
தண்ணீர் அவசியம் அதை யார் தர முடியும் ?
அல்லாஹ் அல்லவா
?
أَفَرَأَيْتُمْ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ(68)أَأَنْتُمْ
أَنزَلْتُمُوهُ مِنْ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ(69)لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ
أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ(70
அல்லாஹ் நமக்கு தேவையான தண்ணீரரை பாதுகாப்பான முறையில் தந்தருள்வானாக!
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ
عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا إِلَّا كَانَ مَا أُكِلَ مِنْهُ لَهُ صَدَقَةً وَمَا سُرِقَ مِنْهُ لَهُ صَدَقَةٌ وَمَا أَكَلَ السَّبُعُ مِنْهُ فَهُوَ لَهُ صَدَقَةٌ وَمَا أَكَلَتْ الطَّيْرُ فَهُوَ لَهُ صَدَقَةٌ وَلَا يَرْزَؤُهُ أَحَدٌ إِلَّا كَانَ لَهُ صَدَقَةٌ
وعن أبي أيوب الأنصاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : ما من رجل يغرس غرسا إلا كتب الله له من الأجر قدر ما يخرج من ثمر ذلك الغرس . أخرجه أحمد
عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : إن قامت الساعة وفي يـد أحدكم فسيلة فإن استطاع أن لا تقوم حتى يغرسهـا فليغرسها – அஹ்மது
وعن رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم قال : سمعت رسول الله صلى الله عليه وسلم بأذني هاتـين يقول : من نصب شجرة فصبر على حفظها والقيام عليها حتى تثمر كان له في كل شيء يصاب من ثمرها صدقة عند الله عز وجل أخرجه أحمد
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ
عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا إِلَّا كَانَ مَا أُكِلَ مِنْهُ لَهُ صَدَقَةً وَمَا سُرِقَ مِنْهُ لَهُ صَدَقَةٌ وَمَا أَكَلَ السَّبُعُ مِنْهُ فَهُوَ لَهُ صَدَقَةٌ وَمَا أَكَلَتْ الطَّيْرُ فَهُوَ لَهُ صَدَقَةٌ وَلَا يَرْزَؤُهُ أَحَدٌ إِلَّا كَانَ لَهُ صَدَقَةٌ
وعن أبي أيوب الأنصاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : ما من رجل يغرس غرسا إلا كتب الله له من الأجر قدر ما يخرج من ثمر ذلك الغرس . أخرجه أحمد
عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : إن قامت الساعة وفي يـد أحدكم فسيلة فإن استطاع أن لا تقوم حتى يغرسهـا فليغرسها – அஹ்மது
وعن رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم قال : سمعت رسول الله صلى الله عليه وسلم بأذني هاتـين يقول : من نصب شجرة فصبر على حفظها والقيام عليها حتى تثمر كان له في كل شيء يصاب من ثمرها صدقة عند الله عز وجل أخرجه أحمد
No comments:
Post a Comment