கடந்த ஐந்ம்பதாண்டுகளில்
இல்லாத அளவு இப்போது தமிழ் நாட்டில் ஒரு பெரும் போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
(போராட்டத்தின்
சில நிகழ்வுகளை விவரிக்கவும் )
இளைஞர்கள். பெண்கள்
கர்ப்பிணிகள் தொழிலாளர்கள் மென்பொறியாளர்கள் நகரங்கள் கிராமங்கள் என தமிழகமே திரண்டு
நிற்கிறது. தமிழக மக்களின் தன்னெழுச்சியான இந்தப் போராட்டம் அகில உலகின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
எங்கும் இதே பேச்சு.
ஏறு தழுவுதல் என
பண்டைய மரபிலும், ஜல்லிக்கட்டு என மக்கள் வழக்கிலும் அறியப்பட்ட ஒரு வீர விளையாட்டிற்கு
ஆதரவாக இந்த மாபெரும் வரலாறு காணாத போராட்டம் நடக்கிறது என்று பரவலாக சொல்லப் படுகிறது.
உண்மையில் நீதி
மன்றங்களின் குளு குளு அறைகளில் உட்கார்ந்து கொண்டு மக்களின் கலாச்சாரம் பண்பாடு மனோ
உணர்வு ஆகியவற்றுக்கு எதிராக சர்வசாதாரணமாக தீர்ப்புச் சொல்லி விடுகிற நீதிபதிகளுக்கும்
மக்களுக்கும் இடையே நடக்கிற போராட்டம் இது.
ஐந்து ரூபாய்க்கு
நாய்க்கு பிஸ்கட் போட்டு விட்டு பிராணிகளின் பாதுகாவலர்களாக காட்டிக் கொள்கிறவர்கள்
ஐந்நூறு ரூபாய் சம்பாத்தியத்தில் 300 ரூபாயை மாடுகளுக்கு தீவணம் வாங்கும் விவசாயிகளின்
நடவடிக்கையை மனிதாபிமானமற்றது என்று பேசுவது முதல் தரமான போலித்த்தனம். அதைப் புரிந்து கொள்ள திறனற்றதாக நமது
நீதிமனறங்கள் மாறிவிட்டது நிதிபதிகளின் கயமைத்தனமாகும்.
நமது நாட்டில்
நீதிமன்றங்கள் கார்ப்பரேட் நிருவனங்களின் கைப்பாவைகளாகி பல மாமாங்கமாகிவிட்டது.
சுமார் 20 வருடங்களுக்கு
முன் கோவைய சேர்ந்த ஒரு வழக்கறிஞர் சொன்னார்
கோகோ கோலா பெப்ஸி
வால் மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நமது சந்தைகளை கலாச்சாரத்தை ஆக்ரமித்து வருவதாக
மக்கள் இப்போது கொதிக்கிறார்கள், உண்மையில் நாம் இதை விடவும் கவலைப் பட வேண்டிய ஒரு
செய்தி என்ன வெனில் நமது நாட்டு நீதிபதிகளை
வெளிநாட்டு தொழில் நிறுவனங்களும் அமைப்புக்களும் விலை கொடுத்து வாங்கிவிட்டன என்பதாகும்
என்றார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பீட்ட அமைப்பின் பங்கு இருக்கிறது.
ஓரினச் சேர்க்கையும்
நீதிமன்றங்களும்
தில்லி
உயர்நீதி மன்றம் 2008 அக்.15, மத்திய அரசின் மத ரீதியான வாதங்களை ஏற்க மறுத்து ஓரினச் சேர்க்கையை எதிர்ப்பதற்கான மருத்துவ ஆதாரங்களை முன்வைக்குமாறு கோரியது.
அதை தொடர்ந்து 2009,
ஜூலை 2,
ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர்,
பரஸ்பரம் விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என தீர்ப்பளித்தது. இது குறித்து உச்சநீதிமன்றத்த்திற்கு
வழக்கு வந்த போது
ஓரினச் சேர்க்கைக்கு
ஆதரவாக உச்ச நீதிமன்ற தலை மை நீதிபதி பாலகிருஷ்ணன்
கருத்துக் கூறீனார்.
கேரளாவைச் சேர்ந்த
அந்த நீதிபதி டென்மார்க்கில் பிறந்து வளர்ந்தவர் அல்ல. தென்னிந்தியாவின் கலாச்சார சூழலில்
படித்த்து வந்தவர் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக கருத்துக் கூறினார். இது விசயத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த நாஸ் என்ற கார்ப்பரேட் அமைப்பின் பங்கு இருந்தது.
கலாச்சார பண்பாடுமிக்க
ஒரு பெரிய நாட்டின் உயர் பதவியின் மீது இந்திய மக்களுக்கு ஏற்பட்ட பெரும் அருவெறுப்பு
இது.
மானுடத்தை மறுக்கும்
நாய் நரிகளின் பாதுகாவலர்கள்
இதே
போல தெருநாய்களால் ஏராளமான மனிதர்கள் மோசமான
பாதிப்புக்குள்ளாவது சர்வசாதாரணமாக இருக்கிற து
இந்தி யாவில், நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் நோய்க்கு ஆண்டு தோறும் 20 ஆயி ரம் பேர் பலியாவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
செல்லப் பிராணி யான நாய்கள் கடிப்பதன் மூலம் ரேபீஸ் நோய் ஏற்படுகிறது.
வீட்டு நாய், தெரு நாய் என எது கடித் தாலும், ரேபீஸ் நோய் நிச்சயம் பரவும் என்கின் றனர் அரசு மருத்துவர் கள். ரேத்தோ என்ற வைரஸ் கிருமியால் பரவும் இந் நோய் நாய்களின் உமிழ் நீர் மூலமாக மனித உட லுக்குள் ஊடுருவுகிறது
இந்நோய்க்கு இந்தியா வில் ஆண்டுக்கு 20 ஆயி ரம் பேரும், உலகத்தில் 55 ஆயிரம் பேரும் பலியாவ தாக இந்திய பொது சுகா தாரச் சங்கத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
இது குறித்து இச்சங் கத்தின் தமிழ்நாடு கிளைத் தலைவர் டாக்டர் இளங்கோ கூறுகையில், 95 சதவிகித ரேபீஸால் ஏற்படும் மரணங்கள் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில்தான் அதிக மாக நடக்கிறது. 15
வய துக்கு உட்பட்ட குழந் தைகள் 40
சதவிகிதம் பேர் நாய்க்கடியால் பாதிக் கப்படுகின்றனர். இந்தி யாவில் கிராமப்புற மக் கள் நாய்க்கடியால் பெரு மளவு பாதிக்கின்றனர்.
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனை களிலும் தினமும் சரா சரியாக 150 பேர் நாய்க் கடிக்கு ஏ.ஆர்.வி., தடுப் பூசி போட்டுக் கொள் கின்றனர்.
சாலைகளில் நடக்கிற
பொது மக்கள் , குறிப்பாக இரவு நேரங்களில் நடக்கிறவர்கள். பாதுகாப்பற்ற குழந்தைகள் பெருமளவில்
கொடூரமான நாய்க்கடிக்கு பலியாவதாக நடப்புக்கள் தெரிவிக்கிற நிலையில் தேர்களில் பவனிக்கிற
உயர்தட்டு மேனகா காந்திகள் புளூகிராஸ் போன்ற
வெளிநாட்டு அமைப்புக்களின் சார்பாக நின்று நாய்கள் கொல்லப்படுவதை எதிர்க்கிறார்கள்.
அவர்களின் கூற்றுக்கு நீதிமன்றங்கள் தலை சாய்க்கின்றன.
சிறுபான்மையினரின்
உரிமைகளில் தொடர்ந்து கை வைக்கும் நீதிமன்றங்கள்
இந்தியாவில் உள்ள
சிறு பான்மை சமூகத்தின் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் மற்ற சமூகங்களை விட கட்டுப்பாடாகவும்
பண்பாட்டோடும் வாழ்ந்து வருகிற நிலையில் , மற்ற சமூகங்களை விட பிரச்சனைகள் குறைந்தவர்களாக
இருக்கிற நிலையில் அவ்வாறு அவர்களது வாழ்க்கையை கட்டமைத்திருக்கிற ஷரீ அத்திற்கு எதிராக
நேரமும் வாய்ப்பும் கிடைக்கிற போதெல்லாம் சீண்டிப்பார்க்கின்றனர்.
அரசியல் சாசனம்
வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நீதிபதிகள் மேற்கத்திய ஊடகங்கள்
அல்லது மேட்நாட்டு அமைப்புக்களின் கருத்துக்கு ஆட்பட்டு மக்களின் பொது உணர்வுக்கு எதிராக
– அடிப்படை உரிமைகளை அடாவடியாக பறித்து தீர்ப்பளிக்கின்றனர்.
இந்திய சமூகங்களிலேயே
முஸ்லிம் சமூகத்தில் தான் விவாகரத்து குறைவு. அதற்கு இஸ்லாமிய ஷரீஅத்திதின் தலாக் நடைமுறைகளே
காரனமாகும். இந்த எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமால் ஏதேனும் ஒரு வழக்கு கிடைத்து
விட்டால் அதை வைத்துக் கொண்டு ஷரீஅத் சட்டத்திற்கு எதிராக கருத்துப் பேசுவதை ஒரு புரட்சி
போல சில நீதிபதிகள் தீர்ப்பளிக்கின்றனர்.
அடிப்படையிலான
நீதியை மீறி விட்டு சட்டத்திற்கும் அல்லது நாகரீகத்திற்கும் ஷரீஅத்திற்குமான போராட்டமாக
அதை சித்தரிக்கின்றனர்.
ஜமாத் அமைப்புக்கள்
மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கிற நன்மைகள் ஏராளம். இதை மக்களோடு நேரடி தொடர்பில்
இருக்கிற காவல் துறை அமைப்புக்களும் வருவாய் அமைப்புக்களும் நன்றாக அறிவார்கள். ஆனால்
இந்த ஜமாத்துக்களை ஏதே குரூரமான அமைப்புக்களைப் போல பல நேரங்களிலும் நீதிமன்றங்கள்
சித்தரிக்கின்றன.
அரசியல் சாசனம்
வழங்கியிர்க்கிற உரிமைகளின் அடிப்படையிலேயே ஜமாத்துக்கள் செயல்படுகின்றன. நீதிமன்றங்களோ அவற்றை சட்டத்திற்கு எதிரானவை அல்லது போட்டியானவை என்பது போல காட்ட முயல்கின்றன.
ஜமாத் அமைப்புக்களை
விட நீதிமன்றங்களில் தற்போது உட்கார்ந்திருப்பவர்கள் சுத்தமானவர்களா ? அதிக நீதியுணவு கொண்டவர்களா ? தாம் சார்ந்த மக்களின்
மீது அதிக கருணை கொண்டவர்களா?
நீதிபதிகள் இது
பற்றி சிந்திப்பதே இல்லை.
நேற்று ஒரு வர்
இது பற்றி பேசுகிற போது கொச்சையாக ஒரு செய்தியை கூறினார் என்றாலும் அதுவெ எதார்த்தமானது.
எங்களுக்கு ஜமாத்து
அமைப்புகளின் தீர்ப்பே வெண்டும். ஏன் தெரியுமா எங்களது பெண்களை நாங்கள் வக்கீல்களுக்கும்
காவல் துறையினருக்கும் வப்பாட்டிகளாக்க விரும்ப வில்லை என்றார். நீதிமன்றங்களை நாடிச்
செல்கிற பெண்களில் பலருடைய நிலையை அசலாக பிரதிபலித்த வார்த்தைகள் அவை.
நீதிமன்றங்களின்
இத்தகைய எல்லை மீறிய போக்கிற்கு உச்சபட்ச உதாரணம்
தான் ஜல்லிக்கட்டுக்கு தடை
உதட்டுச் சாயத்தின்
அளவுக்கு கூட சமூகத்தினோடு தொடர்பில்லாத அமைப்புக்கள் கூறும் போலித்தனமான வாதங்களின்
பின்னே செல்கிற நீதிபதிகளின் குரூரமான தீர்ப்பு அது.
ஜல்லிக்கட்டு தமிழ்
மக்களின் பாரம்பரியமான ஒரு அடையாளம் என்பதை நீதிபதிகள் சிந்திக்கவே இல்லை. காளைகளோடும்
மாடுகளோடும் இயல்பான தொடர்பு கொண்ட மக்களின் விளையாட்டு அது என்பதை அவர்கள் கவனிக்கவில்லை.
தங்களின் தீர்ப்பு எத்தகைய பெரும் சமூகத்தின் மனோ உணர்வுகளை காயப்படுத்தப் போகிறது
என்று யோசிக்க வில்லை.
இன்று திரள்கிற
இம்மாபெரும் கூட்டங்கள் மத்திய மாநில அரசுகளின் நயவஞ்சக போக்கிறகு சம்மட்டி அடி கொடுக்க
கொடுத்தவை என்பது மட்டு மல்ல சட்டம் என்ற பெயரில் எல்லை மீறுகின்ற நீதிமன்றங்களின்
தலையில் குட்டு வைப்பவையுமாகும்.
இந்தக் கட்டத்தில்
அரசியல் வாதிகள் மிக கடுமையாக விமர்ச்சிக்கிற அல்ல மிக கேவலாமக விமர்ச்சிக்கப்படுகிற
நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். முன்னெப்போது இல்லாத அளவிற்கு மரியாதை அற்ற ஏச்சுக்கு
ஆட்சித் தலைமைகள் ஆளாகியிருக்கின்றன.
இந்த தாக்குதல்களுக்கு
உண்மையில் இத்தகைய தீர்ப்புக்களை வழங்கிய நீத்பதிகளுக்கும்
ஒரு பங்கு உண்டு. அவர்களும் சமூக அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.
அதே நேரத்தில்
நியாயமான ஓரு காரியத்திற்காக போராடுகிற மக்கள் மீது ரவுடிகளைப் போல தாக்குதல் நடத்திய
காவல்துறையினர் சிலரும் விசாரனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இப்போதைய இந்தப்
போராட்டத்திற்கான முக்கிய தூண்டுதல்களில் ஒன்று அலங்கா நல்லூரில் ஜல்லிக் கட்டு ஆர்வலர்கள்
மீது காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதல்களும் அதையும் தாண்டி வழக்குகளை
பதிவு செய்ததுமாகும்.
கோவையில் சசிகுமார்
படுகொலையை அடுத்து பெரும் கலவரங்களில் ஈடு பட்ட கலவரக்காரர்களை ஒடுக்குவதற்கு தடியை
தூக்காத காவல் துறை கலாச்சாரத்தை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்மம்
காட்டியது தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகும்.
காவல்துறை ஆட்சியிலிருப்பவர்களின்
அடியாட்களாக மாறிவிட்டதையே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.
போராட்டக்க்காரர்களை
போர்க்குற்றவாளிகளைப் போல காவல்துறை நடத்துகிறது.
மக்களுக்கு போராட்டம்
செய்கிற அதிகாரமும் உரிமையும் இருக்கிறது. அதற்கு காவல்துறையின் அனுமதி வேண்டும் என்பது
ஓரளவுகளில் மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியது.
மக்களுக்கு எதிராக
தடியை தூக்குகிற எந்த ஒரு போலீஸ் காரரும் இனி சமூக அரங்கில் குற்றவாளியாக நிறுத்தப்பட
வேண்டும்.
இத்தைய கோரிக்கைகளை
வலியுறும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டம்
நிச்சயம் வெற்றி பெரும்.
அது வெற்றி பெறுகிறதோ
இல்லையோ மக்கள் இந்தப் போராட்டத்தின் மூலம்
நாங்கள் இன்னும் மனிதர்களாகத்தான் வாழ்கிறோம் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
நீதிக்காக போராட
வேண்டியது மக்களின் அடிப்படை கடமையாகும்.
நீதிக்காக நில்லுங்கள்
என்கிறது குர் ஆன் . அது போராடுங்கள் என்ற பொருளையும் தரும். கவ்வாம் என்ற சொல் காயிம்
என்ற சொல்லை விட அழுத்தமானது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُونُواْ قَوَّامِينَ
بِالْقِسْطِ شُهَدَاء لِلّهِ وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أو الْوَالِدَيْنِ
وَالأَقْرَبِينَ إِن يَكُنْ غَنِيّاً أو فَقَيراً فَاللّهُ أَوْلَى بِهِمَا فَلاَ
تَتَّبِعُواْ الْهَوَى أَن تَعْدِلُواْ وَإِن تَلْوُواْ أو تُعْرِضُواْ فَإِنَّ
اللّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيراً
குர்துபி கூறுகிறார்
قوامين بناء مبالغة, أي ليتكرر منكم القيام
بالقسط
عن إن من
أعظم الجهاد كلمة عدل عند سلطان جائر . thirmid I
நீதி
கேட்டு வாதாடுவதும்
போராடுவதும் அவசியம் . அப்போதுதான் நீதிக்கான வாய்ப்பு பிரகாசமாகும். அத்தகைய போராட்டத்தில் ஈடுபடுவோரை
வரலாறு வாழ்த்தும்.
ஹவ்லா அம்மையார்
நீதிக்காக போராடிய பெண்மணி
நீதிக்காக நபியிடமே
வாதாடிய பெண்ணை அல்லாஹ் வரலாற்றில் பதிவு செய்தான் .
قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي
إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ(1)
هي خولة بنت خويلد. الخزرجية, كانت تحت
أوس بن الصامت أخو عبادة بن الصامت, وكانت حسنة الجسم, فراها زوجها ساجدة فنظر عجيزتها
فأعجبه أمرها, فلما انصرفت أرادها فأبت فغضب عليها قال عروة: وكان أمرا به لمم فأصابه
بعض لممه فقال لها: أنت علي كظهر أمي. وكان الإيلاء والظهار من الطلاق في الجاهلية,
فسألت النبي صلى الله عليه وسلم فقال لها: (حرمت عليه) فقالت: والله ما ذكر طلاقا,
ثم قالت: أشكو إلى الله فاقتي ووحدتي ووحشتي وفراق زوجي وابن عمي وقد نفضت له بطني,
فقال: (حرمت عليه) فما زالت تراجعه ومراجعها حتى نزلت عليه الآية.
கவ்லா அம்மையாரை
அவரது கணவர் அவ்ஸ் ழிஹார் செய்து விட்டார். அன்றைய காலத்தில் ஒரு பெண்ணை விவாகரத்து
செய்யாமல் அவரை ஒதுக்கி வைக்கிற நடைமுறைகளில் ஒன்றாக ழிஹார் ( நீ என் அம்மாவின் முதுகு
போல என்று சொல்லி ஒதுக்கி வைக்கிற விசித்திரமான நடை முறை வழக்கில்) இருந்தது. அவ்ஸ்
அவ்வாறு சொன்னார். இது விச்யத்தில் தனியாக சட்டம் எதுவும் வராத்தால் அதையே தீர்ப்பாக
நீ உன் கணவருக்கு ஹராம் என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாஹிலிய்யாவின் அந்தப்
பழக்கத்திற்கு எதிராக அந்தப் பெண் குரல் கொடுத்தார்.
அந்தக்குரலில்
தொனித்த நியயத்தின் வாசகங்களை ஆயிஷா அம்மா கூறிகிறார்கள்
وقالت عائشة رضي الله عنها: تبارك الذي
وسع سمعه كل شيء, إني لأسمع كلام خولة بنت ثعلبة ويخفي علي بعضه, وهي تشتكي زوجها إلى
رسول الله صلى الله عليه وسلم, وهي تقول: يا رسول الله! أكل شبابي ونثرت له بطني, حتى
إذا كبر سني وانقطع ولدى ظاهر مني, اللهم إني أشكو إليك! فما برحت حتى نزل جبريل بهذه
الآية: "قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله" خرجه ابن
ماجة في السنن.
என வாலிபம்
மொத்ததததயும் தின்றார். எனது வயிறு அவருக்கு பிள்ளைகளை பொழிந்து கொட்டியது. இப்போது
வயோதிக காலத்தில் என்னை விலக்கி வைக்கிறார் என வாதிட்டு தீர்த்தார்.
நீதிக்கான போராட்டம்
வெற்றி பெற்றது.அல்லாஹ் ஜாஹிலிய்யாவின் அந்த மூர்க்கத் தனத்திற்கு முடிவு கட்டினான்.
ழிஹார் சொன்னவர்கள்
மனைவியை சேர்ந்து கொள்ள வேண்டும். ழிஹார் சொன்னதற்காக ஒன்று அடிமைய உரிமை விட்டு அல்லது அறுபது நாட்கள் நோன்பிருந்து
அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளித்து இவ்வாறு கூறிய சத்தியத்திலிருந்து மீண்டு விட வேண்டும்.
நீதிக்கான ஒரு
சிறு போராட்டம் ஒரு பெண்மணிக்கான ஆறுதலாக மட்டுமில்லாமல் பெண்ணினத்திற்கான பெரும் விடுதலையை
பெற்றுத்தந்தது
அது மாத்திரம்
அல்ல அந்த பெண்மணியை வரலாறு மறக்க முடியாது என்ற பெருமையை பெற்று தந்தது.
இந்த வசனம்
சொல்லப்படும் போதெல்லாம் ஹவ்லா அம்மையாரையும் அவரது போராட்டத்தையும் நினைவு கூர்தே தீர வேண்டும்.
இந்த போராட்டத்தால்
ஹவ்லா அம்மையாருக்கு கிடைத்த பெருமை அலாதியானது.
அமீருல் முஃமீனீன்
உமர் (ரலி) நின்று காது கொடுத்து அவரது உபதேசத்தை கேட்டார்
وقد مر بها عمر بن الخطاب رضي الله عنه في خلافته والناس معه على حمار
فاستوقفته طويلا ووعظته وقالت: يا عمر قد كنت تدعى عميرا, ثم قيل لك عمر, ثم قيل لك
أمير المؤمنين, فاتق الله يا عمر, فإنه من أيقن بالموت خاف الفوت, ومن أيقن بالحساب
خاف العذاب, وهو واقف يسمع كلامها, فقيل له: يا أمير المؤمنين أتقف لهذه العجوز هذا
الوقوف؟ فقال: والله لو حبستني من أول النهار إلى آخره لا زلت إلا للصلاة المكتوبة,
أتدرون من هذه العجوز؟ هي خولة بنت ثعلبة سمع الله قولها من فوق سبع سموات
ஹவ்லா அம்மையாரின்
போராட்டம் எவ்வளவு மெதுவாக இருந்தது என்பதை ஆயிஷா அம்மா குறிப்பிடுகிறார்கள்
في البخاري من هذا عن عائشة قالت: الحمد
لله الذي وسع سمعه الأصوات, لقد جاءت المجادلة تشكو إلى رسول الله صلى الله عليه وسلم,
وأنا في ناحية البيت ما أسمع ما تقول, فأنزل الله عز وجل: "قد سمع الله قول التي
تجادلك في زوجها".
மிக மென்மையாக
கேட்ட குரலுக்கு அல்லாஹ் செவி மடுத்தான்.
நீதிக்காக குரல்
கொடுப்பவர்களுக்கு அரசாங்கம் தர வேண்டிய மரியாதை எத்தகையது என்பதை அது புலப்படுத்துகிறது.
ஆனால் தற்போது
மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு ஆட்சியாளர்கள் கவனம் செலுத்திய விதம் மிக கேவலாமானது.
பிரதமர்
கண்டு கொள்ளவே இல்லை.
முதல்வரும்
அமைச்சரவையும் செயல்படவே இல்லை.
வெறும் மிக்சர்
திண்ணவே இலாயிக்கானவர்கள் என்ற அவப்பெயர் இப்போது போல தமிழக அமைச்சரவைக்கு முன்னெப்போதும்
ஏற்பட்டதில்லை.
தில்லிக்கு
முதல்வர் ஏன் சென்றார் என்ற கேள்வியை எழுப்பி சமூக வளைத்தளத்தில் மக்கள் எழுதும் கமெண்டுகள்
மிக உக்கிரமமானவை. தில்லியில நல்ல மிக்சர் கிடைக்குதுன்னு யாரோ சொன்னாங்களாம் என்ற
பதில் அவற்றில் ஓரளவு நாகரீகமானது. நீதிக்காக குரல் கொடுப்போருக்கு எந்த அளவு உதவி செய்ய வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது என்பதை பெருமானார் (ஸல்) அவர்களது நடவடிக்கை உணர்த்து கிறது. கவ்லா அம்மையாரின் கணவரின் மீதான தண்ட குற்றத்தை நிறைவேற்ற பெருமானார் (ஸல்) அவர்கள் உதவினார்கள்.
وروى الدارقطني من حديث قتادة أن أنس بن مالك حدثه قال: إن أوس بن الصامت
ظاهر من امرأته خويلة بنت ثعلبة فشكت ذلك إلى رسول الله صلى الله عليه وسلم فقالت:
ظاهر حين كبرت سني ورق عظمي. فأنزل الله تعالى أية الظهار, فقال رسول الله صلى الله
عليه وسلم لأوس: (اعتق رقبة) قال: مالي بذلك يدان. قال: (فصم شهرين متتابعين) قال:
أما إني إذا أخطأني أن آكل في يوم ثلاث مرات يكل بصري. قال: (فأطعم ستين مسكينا) قال:
ما أجد إلا أن تعينني منك بعون وصلة. قال: فأعانه رسول الله صلى الله عليه وسلم بخمسة
عشر صاعا حتى جمع الله له
நீதிக்காக குரல் கொடுப்போர் எத்தகைய சூழலிலும் பாதுகாக்கப்படுவார்கள் என்ற
உத்தரவாதததை குர் ஆன் தருகிறது.
பிர் அவ்னின் சபையிலேயே நீதிக்கு குரல் கொடுத்தவரை அல்லாஹ் பாதுகாத்ததாக கூறுகிறான்.
(40 : 28 முதல் 45 வரை)
وَقَالَ رَجُلٌ مُؤْمِنٌ مِنْ آلِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَانَهُ أَتَقْتُلُونَ
رَجُلًا أَنْ يَقُولَ رَبِّي اللَّهُ وَقَدْ جَاءَكُمْ بِالْبَيِّنَاتِ مِنْ رَبِّكُمْ
وَإِنْ يَكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهُ وَإِنْ يَكُ صَادِقًا يُصِبْكُمْ بَعْضُ
الَّذِي يَعِدُكُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ(28)
فَوَقَاهُ اللَّهُ سَيِّئَاتِ مَا مَكَرُوا وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ
الْعَذَابِ(45)
قال ابن كثير: المشهور
أن هذا الرجل المؤمن كان قبطياً من آل فرعون، قال السدي: كان ابن عم فرعون
பிர்
அவ்னின் உறவினராக இருந்து பிர் அவ்னை
எதிர்த்த அவரை எவ்வாறு பாதுகாத்தான்
என்பதை கூற வில்லை ஆனால்
பாதுகாத்தான் என்பது உறுதி.
ஆனால் அந்தப் போராட்டம் கட்சி, அமைப்பிற்கான விளம்பரம் போன்ற எந்த சுய நலத்திற்காகவும் இல்லாமல். அல்லாஹ்வுக்காக இருக்க வேண்டும். شُهَدَاء
لِلّهِ இதையே வலியுறுத்துகிறது .
போராட்டங்களின்
போது தங்களது பங்களை விளம்பரப் படுத்த நினைப்பவர்கள் போராட்டங்களை பலவீனப்படுத்தவே
செய்கின்றனர்.
எனவே இப்போராட்டத்தில்
கலந்து கொள்வோர் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டாம்,
நீதிக்கான போராட்டம்
என்பது நீதிக்காகவே நடக்கட்டும்.
அல்லாஹ் நீதிக்கான்
போராட்டக்காரர்களுக்கு சரியான பாதைய காட்டுவானாக! அவர்களை பாதுகாப்பானாக!
ஆட்சியாளர்கள்
நீதியின் குரலை மதித்து நடக்க அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
காலச்சூழல்+நடுநிலையுடன்
ReplyDeleteஅதிக தகவல்களுடன்....
அல் ஹம்துலில்லாஹ்.....
பாரகல்லாஹு பீக........masha allah
உண்மைகளை உள்வாங்கிய கருத்துக்கள் ...... Hatsoff ......
ReplyDeleteஅல்ஹம்து லில்லாஹ் அருமை
ReplyDelete