வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 26, 2017

" இராணுவமும் காவல்துறையும் கட்டுப்படுத்தப் பட வேண்டிய சக்திகள்."

قَالَتْ إِنَّ الْمُلُوكَ إِذَا دَخَلُوا قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً وَكَذَلِكَ يَفْعَلُونَ(34)

அல்லாஹ்வின் கிருபையால் 68 வது குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றுவிட்டது.

மக்கள் விரும்பும் ஒரு ஆட்சியாளர் மக்களை ஆளும் ஒரு ஏற்பாடு தான் குடியரசு என்பது.

நம்முடைய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அப்போதைய நாட்டின் தலைவர்கள் நினைத்திருந்தால் நமது நாட்டை “ஒரு கட்சி ஆட்சி” முறை கொண்ட தாக ஆக்கியிருக்கலாம். இப்போதும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அத்தகைய நடை முறை இருக்கிறது. 

அப்போதைய தலைவர்கள் போராடி சுதந்திரத்தை பெற்றுத்தந்தவர்களாக இருந்தாலும் கூட நாட்டின் ஜனநாயக கட்டமைப்பில் பின் வரும் சந்ததிகளில் மக்கள் அனைவரின் கருத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் மக்கள் விரும்பும் ஆட்சியாளர்களை தேர்வு செய்து கொள்ளும் நடை முறையை அமுல் படுத்தினார்கள்/

அதனாலேயே இப்போது நாட்டின் சுதந்திரத்திற்கு  எந்தப் பங்கையும் செய்யாத, தொடர்ந்து பிரச்சனைகளை மட்டுமே செய்து கொண்டிருக்கிற ஒரு கட்சி இப்போது ஆட்சியிலிருக்கிறது.

குடியரசு தத்துவத்தின் விபத்தாக அமைந்து விடுகிற இத்தகைய காட்சிகளை மக்கள் விரும்பினால் அடுத்த தேர்ந்தலில் மாற்றி விட முடியும்,

மக்களின் அதிகாரமே பிரதானமானது என்ற அடிப்படையை கொண்ட குடியரசு அமைப்பை ஏழை – எழுத்தறிவற்ற 120 கோடி மக்கள் தொடர்ந்து 68 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார்கள் என்பது இந்தியக் குடியரசு தத்துவத்தின் பெரும் சிறப்பாகும். அதனால் குடியரசு தின விழாக்கள் மிகவும் கம்பீரமாக நம்முடைய நாட்டில் கொண்டாடப்படும்.

ஆனால் இந்த ஆண்டின் குடியரசு தின விழா தமிழகத்தை பொருத்த வரை வழக்கமான கலையை – உறசாகத்தை இழந்து காணப்பட்டது. என ஊடகங்கள் கூறுகின்றன.


காரணம். கடந்த வாரம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடை பெற்ற மாபெரும் மக்கள் போராட்டத்தை – குடியரசு தத்துவத்தையும் ஜனநாயகத்தின் வலிவையும் பறைசாற்றிய எழுச்சியை மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுகிற அரசுகள் மிக மோசமான முறையில் அணுகி போராட்டக்காரர்களையும் மக்களையும் கடுமையாக துன்புறுத்தியதாகும்.

·         அமைதி வழியில் யாருக்கும் இடையீறு இல்லாமல் சுயக் கட்டுப்பாட்டோடும் ஒழுங்கோடும் போராடியவர்களை கட்டாயப்படுத்தி போராட்ட மைதானங்களை விட்டு வெளியேற்றினர். இதில் எந்த நியாயத்தையும் நீதியையை காவல் துறை கடை பிடிக்க வில்லை. ஒரு கட்டத்தில் மெரீனாவில் இருந்த இளைஞர்கள் கடலுக்கு அருகே செல்லும் நிர்பந்தததை காவல்துறை ஏற்படுத்தியது.   

·         நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இளம் பெண்கள் குடும்பத்தினர் காவல்துறையினரை மிக மோசமாக தாக்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டக்களத்திற்கு புதியவர்கள். அரசியல் கட்சியிலோ அமைப்புக்கள் இயக்கங்களைய் சார்ந்தவர்கள் அல்லர். பெண்களை நீண்ட கழிகளை வீசித் தாக்கும் காவல்துறையின் செயல் தமிழக வரலாற்றின் ஒரு கருப்பு அத்தியாயமே! அலங்கா நல்லூரில் மக்களை கலைக்க காவல் துறை நடந்து கொண்ட விதம் நிச்சயம் கண்டனத்திற்குரியது. அலங்கா நல்லுரை ஒரு பொர்க்களம் போல காவல்துறை மாற்றியிருந்தது.

·         போராட்டததை கலைப்பதற்காக போராட்டக்காரர்கள் மீது அசிங்கமான அவதூறுகளை காவல்துறை அள்ளிவீசியது வீசிக் கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சர் ஒருவரும் அவரது கட்சியினரும் மக்களின் எழுச்சியை பொருத்துக் கொள்ள முடியாமல் – தங்களுடை வஞ்சக முகத்தை மக்கள் புரிந்து கொண்டுவிட்டதை கண்டு எதுவும் செய்ய சக்தியற்ற நிலையில் போராட்டக் களத்தில் முஸ்லிம்கள் தொழுததை ஒரு சமூக விரோத செயலாக காட்ட முயல்கிறார். இந்தியாவின் இளைய சமுதாயம் அவர்களை சரியாக புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். சென்னையில் மெரினாவில் போராட்டக் களத்தில் உட்கார்ந்திருக்கிறேன். சுற்றி இளைஞர்களும் குடும்பத்தினர்களும் திரண்டிருக்கின்றனர், எதேச்ச்சையாக எனக்கு முன்னாள் ஒரு இளைஞன் பிடித்திருந்த வாசகத்தை கவனித்தேன், மொள்ளமாரி மோடி என்று எழுதியிருந்தது. தமிழக எம்பிக்களை சந்திக்க கூட மறுத்தது ஏன் என்ற கேள்வி அதில் இருந்தது. இந்த கோபம் எதார்த்தமானது. இதை பாஜக புரிந்து கொள்ள மறுப்பது. அல்லது இதை திசை திருப்பது அவர்களது இய்ல்பான அரசியல் பாணி. போராட்டக் காரர்களை பாஜக விமர்ச்சிப்பது அவர்களுக்கு விழுந்திருக்கிற அடியினால் ஏற்பட்ட அலரல். ஆனால் அனைத்து தரப்பினருக்கும்  பொதுவான ஒரு மத்திய அமைச்சர் மததுவேஷம் தொனிக்கிற வார்த்தைகளை பிரயோகிப்பது அவர் ஏற்றுக் கொண்டிருக்கிற உறுதிமொழிக்கு எதிரானது. மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அமைச்சரான பிறகும் கூட அவருக்கு  இன்னும் பொறுப்பு வரவில்லை என்பதை காட்டுகிறது.. ஒரு அரசியல் வாதியாக அவருடைய கருத்து பெரிதும் கவனத்திற்குரியதல்ல.. ஆனால் தமிழக காவல்துறை தலைவர் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவி விட்டதாக அப்பட்டமாக அபாண்டத்தை மக்கள் மீது சுமத்துகிறார். இது எந்த வகையிலும் ஜீரணித்துக் கொள்ளக் கூடியது அல்ல. மக்கள் வரிப்பணத்தில் அதிகாரத்திற்குரிய இடத்திலிருக்கிற ஒரு அதிகாரி மக்களை சர்வசாதாரனமாக அவதூறுக்குக்குள்ளிவிடுவது குடியரசு முறைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் ஆகும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு செய்தி, போராட்டம் நடை பெற்ற மைதானம் எதிலும் அலங்கா நல்லூரைத் தவிர வேறு எங்கும் வன்முறை ஒரு சிறிதளவிலும் ஏற்பட வில்லை. போராட்டக்களத்திற்கு வெளியே காவல்துறை தலையிட்ட இடங்களில் மட்டுமே வன்முறை வெடித்துள்ளது.

·         போலீஸ் நடவடிக்கையின் நான்காவது பெரிய அவலம் போராட்டத்தை திசை திருப்ப காவல்துறையே சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டது ஆகும். அல்லாஹ் எதையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது ஆன்மீகம். கேமரா எதையும் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது இன்றைய தொழில் நுட்பம் , அந்த தொழில் நுட்பத்தின் உபகாரத்தால் வாகங்களுக்கு தீவைக்கிற கல்வீசுகிர வீடுகளுக்கு புகுந்து அக்கிரமம் செய்கிற பெண்களை தேவையின்றி தாக்குகிற சமூக விரோதிகளைப் போல நடந்து கொள்கிற காவல் துறையின் அட்டகாசங்கள் அனைத்தும் பதிவாகி சமூக வளைத்தளங்களில் உலாவருகின்றன.

காவல் துறை என்பது ஆட்சியாளர்களின் உத்தரவிற்கு கட்டுப்படக் கூடியதே! 10 மணிக்குள் எப்படியாவது போராட்டத்தை நீ தடுத்து விட வேண்டும் இல்லையேல் தண்ணி இல்லாக் காட்டுக்கு சென்று விட வேண்டியது தான் என அமைச்சர்கள் உத்தரவிட்டு விட்டு ஒன்றுமறியா பிள்ளைகளைப் போல சட்டமன்றத்திற்குள் போய் உட்கார்ந்து கொண்டார்கள். காவல் துறை அந்தக் கட்டளை நிறைவேற்ற கிரிமினல்களின் மனோ நிலையை கை எடுத்துக் கொண்டது.

எய்தவர்கள் இருக்க அம்பை நோவானேன் என்பதற்கேற்ப காவல் துறையை எப்படி குறை சொல்லலாம் என்பது ஒரு வாதத்திற்காக பேசலாம். ஆனால் சட்டத்திற்கும் நீதிக்கும் பதில் சொல்ல கடமைப்பட்ட காவல் துறை எல்லை மீறி நடந்து கொண்டதை  ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்க வரலாற்றின் மிக கருப்பு அத்தியாயங்களை எழுதிவிட்ட காவல்துறை அதற்கான பழியை மக்கள் மீதும் சமூக அமைப்புக்கள் மீதும் திருப்பி விட முயற்சிப்பது காவல்துறையின் மரியாதையை மேலும் சீர்குலைக்கவே செய்யும்.

காவல் துறை தலைவர் ஜார்ஜ் அவர்களின் பேட்டி  மிகவும் டிபளோமேட்டிக்கான வார்த்தையில் இருந்தாலும் அது காவல்துறையின் ஒரு அகோர முகத்தையே வெளிப்படுத்தியது, மக்களிடம் தவறாக நடந்து கொண்ட காவல் துறையின் அடி நிலை வீரரிடம்  மட்டுமல்ல உயர் நிலையிலும் கூட காவல்துறை இப்படித்தான் இருக்கிறது என்பதை வெளிச்சமாக்கிவிட்டது.

காவல்துறையினரின் மோசமான நடவடிக்கைகள் அப்பட்டமாக வீடியோ காட்சிகளில் தெரிகிறது. அது பற்றி விசாரிக்கப்படும் என்கிறார். விசாரித்தறியப்பட வேண்டிய சமூக விரோத சக்திகளின் ஊடுறுவல் என்ற வாதத்தை உறுதியான குற்றச்சாட்டாக முன் வைக்கிறார்.மக்களின் போரட்டத்தை  காவல்துறை ஒடுக்கிய விதம் மட்டுமல்ல. அந்தப் போராட்டத்தை களங்கப்படுத்தப் படுத்த காவல் துறை மேற்கொள்கிற அவதூறுப் பிரச்சாரமும் இன்றைய தமிழகத்தின் முக முக்கியமான சர்ச்சையாக நடந்து வருகிறது. இந்த சர்ச்சைகள் ஒரு சிறந்த தீர்வை தரும் வரை தொடர வேண்டும் அப்போதுதான் இனி இது போன்ற விபத்துக்கள் நடப்ப்பதிலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்.  

மிக எச்சரிக்கையாக இருந்தால் அன்றி காவல் துறை இராணுவம் போன்ற பாதுகாப்புத்துறையினரை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியாது என  திருக்குர் ஆன்  கூறும் வழிகாட்டுதல்கள் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகவும்  கவனிக்க வேண்டிய ஒன்றாகும்

இந்த எதார்த்ததமான உண்மையை உலகிற்கு உணர்திய பெருமை சபா நாட்டு அரசி பல்கீஸ் அம்மையாரைச் சாரும், மிக வும் புத்தி சாலியான மக்கள் மீது  அக்கறை கொண்ட அரசி அவர்.

சுலைமான் அலை அவர்களின் கடிதம் கிடைக்கிறது.  பல்கீஸ் அம்மையார் அரச பிரதாணிகளிடம் ஆலோசனை செய்கிறார். சுலைமான் படை யோடு வந்தால் வரட்டும் நாங்கள் ரெடி தான் என அவர்கள் கூறுகிறார்கள்.

قَالَتْ يَاأَيُّهَا المَلَأُ إِنِّي أُلْقِيَ إِلَيَّ كِتَابٌ كَرِيمٌ(29)إِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِاِسْمِ اللَّهِ الرَّحْمَانِ الرَّحِيمِ(30)أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ(31)قَالَتْ يَاأَيُّهَا المَلَأُ أَفْتُونِي فِي أَمْرِي مَا كُنتُ قَاطِعَةً أَمْرًا حَتَّى تَشْهَدُونِي(32)قَالُوا نَحْنُ أُوْلُوا قُوَّةٍ وَأُولُوا بَأْسٍ شَدِيدٍ وَالْأَمْرُ إِلَيْكِ فَانظُرِي مَاذَا تَأْمُرِينَ(33)

ஆனால் வீராவேஷத்தில்  ஒரு படை எடுப்புக்கு அறை கூவல் விடுத்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொண்ட பல்கீஸ் அரசி தனது மகோன்னதமான தீர்மாணத்தை விவரிக்கிறார்.

قَالَتْ إِنَّ الْمُلُوكَ إِذَا دَخَلُوا قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً وَكَذَلِكَ يَفْعَلُونَ(34)

இராணுவமும் காவல் துறையும் ஒரு இடத்தில் நுழைந்தால் அது இப்படித்தான் நடந்து கொள்ளும். பொதுவாக,

மேலதிகாரி இவ்வாறு உத்தரவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. களத்தில் பொதுவாக இறக்கி விட்டால் இராணுவத்தினருடையவும் காவல் துறையினருடையவும் நடவடிக்கை இப்படித்தான் இருக்கும்.

எந்த புனித இராணுவமும் தேவையற்று மக்களை துன்புறுத்தும். பெண்களை கற்பழிக்கும். தீ வைக்கும் , சீர் குலைக்கும்.  

இது இராணுவத்தின் இயல்பு.

ஹர்ரா யுத்ததின் போது மதீனா நகருக்கு வெளியே பல நூறு பேர் கொல்லப்பட்டார்கள். பல பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்று வரலாறு சொல்கிறது.

இராணுவத்தின் எல்லை மீறுதலுக்கு மிக கொடூரமான ஒரு உதாரணம் , கர்பலாவில் ஹுசைன் ரலி அவர்கள் கொல்லப்பட்டது  ஆகும்.

உமையாயா கலீபா யஜீது, ஹுசைன் ரலி அவர்களை கொல்ல உத்தரவிடவில்லை,  கூபாவின் ஆளுநராக இருந்த உபைது பின் ஜியாதும் வரும் அப்படி உத்தரவிடவில்லை, எப்படியாவது யஜீதுக்கு பை அத் பெறும்  வேலையை முடிக்க வேண்டும் அதை முடிக்காமல் ஹுசைன் ரலி அவர்களை மதீனா திரும்ப அனுமதிக்க கூடாது என்ற உத்தரவே கர்பலாவில் மிக கொடூராமான கற்பனையும் செய்து பார்த்திட முடியாத பெரும் சோகத்தை நிகழ்த்தியது. شمر بن ذي الجوشن  என்ற படைத்தளபதியின் கொடூரம் எந்த ஆறுதலுக்கும் உட்படுத்த முடியாத நிகழ்வுகள் அரங்கேறிடச் செய்தது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரர் அவரது உம்மத்தை சார்த ஒருவராலேயே வரலாறே பதை பதைக்கிற வகையில் கொல்லப்பட்டார்கள்.

வரலாற்றில் இது போல ஏராளமான நிகழ்வுகள் உண்டு,

ஆட்சியிலிருப்பவர்கள் தமது இராணுவம் எவ்வளவு தான் உத்தமமாக இருந்தாலும் அதன் லகானை உமர் ரலியை போல எப்போது ம் கையில் வைத்திருக்க வேண்டும். ஆட்சியாளரின் கையில் இருக்கும் சாட்டையே இராணுவத்தை கட்டுப்படுத்தி வைக்கும்.

எல்லை மீறுதல்களுக்கான கடும் தண்டனைகளும் அதே அளவிற்கு நிகரான அறிவுரைகளும் காவல்துறைக்கு சொல்லப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

படைக்கு வீரு கொண்டு புறப்பட்ட அலி ரலிக்கு பெருமானார் நிதானத்தை போதித்து அவர் செய்ய வேண்டியதை தெளிவாக சொல்லிக் கொடுத்தார்கள். \

روى البخاري ومسلم في صحيحهما، عن سهل بن سعد رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال يوم خيبر: «لأعطين الراية غداً رجلاً يفتح الله على يديه»، قال: فبات الناس يدوكون ليلتهم أيهم يعطاها، فلما أصبح الناس غدوا على رسول الله صلى الله عليه وسلم كلهم يرجو أن يعطاها، فقال صلى الله عليه وسلم: «أين علي بن أبي طالب؟»، فقالوا: يشتكي من عينيه يا رسول الله، قال: «فأرسلوا إليه فأتوني به»، فلما جاء بصق في عينيه ودعا له فبرأ حتى كأن لم يكن به وجع، فأعطاه الراية، فقال: علي يا رسول الله أقاتلهم حتى يكونوا مثلنا؟ فقال: «انفذ على رسلك حتى تنزل بساحتهم ثم ادعهم إلى الإسلام وأخبرهم بما يجب عليهم من حق الله فيه فوالله لئن يهدي الله بك رجلاً واحداً خير لك من أن يكون لك حمر النعم» (رواه البخاري: [3498]، ومسلم: [2406]).

அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் இராணுவத்திற்கு செய்த உபதேசம் வரலாற்றுப் புகழ் பெற்றது,

ن أبا بكر الصديق بعث جيوشا إلى الشام ، فخرج يمشي مع يزيد بن أبي سفيان ، وكان أمير ربع من تلك الأرباع . فزعموا أن يزيد قال لأبي بكر : إما أن تركب ، وإما أن أنزل . 

 
فقال أبو بكر : ما أنت بنازل ، وما أنا براكب . إني أحتسب خطاي هذه في سبيل الله . ثم قال له : إنك ستجد قوما زعموا أنهم حبسوا أنفسهم لله ، فذرهم وما زعموا أنهم حبسوا أنفسهم له . وستجد قوما فحصوا عن أوساط رءوسهم من الشعر ، فاضرب ما فحصوا عنه بالسيف ، وإني موصيك بعشر : لا تقتلن امرأة ، ولا صبيا ، ولا كبيرا هرما ، ولا تقطعن شجرا مثمرا ، ولا تخربن عامرا ، ولا تعقرن شاة ، ولا بعيرا ، إلا لمأكلة . ولا تحرقن نحلا ، ولا تفرقنه ، ولا تغلل ، ولا تجبن . 

ஆட்சியாளர்களை ப் போல வே மக்களும் இராணுவம் மற்றும் காவல் துறையின் விசயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,

எந்த நாட்டு இராணுவமும் காவல்துறையும் அக்கிரமம் செய்யத் தயங்காது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் நமது இராணுவத்தையும் காவல்துறையை நேர்வழியில் செலுத்துவானாக!
 அதை வழி நடத்துகிறவர்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!
யா அல்லாஹ் எங்களது தவறுகள் காரணமாக எங்கள் மீது இரக்கம் காட்டாத அதிகாரிகளை ஏவி விடாதே!

என பிரார்த்திப்போம் அதே நேரத்தில்

காவல் துறை மக்களின் மீதுஅற வழியில் போர்டிய போராட்டக் காரர்கள் மீது நியாயமற்ற அக்கிரமான நடவடிக்கையை மேற்கொண்டது, அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

தனது செயலை நியாயப்படுத்துவதற்காக ஜனநாயக வழியில் போராடியவர்கள் மீது சமூக விரேத பட்டத்தை அவதூறாக கூறுவதை காவல்துறையும் அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும் .

அது நீதி தேவனுக்கு எந்த வகையிலும் பொறுக்காத வார்த்தையாகும்.


1 comment:

 1. அல்ஹம்து லில்லாஹ்

  அருமையான கருத்தமைப்பு
  கோவை வார மழைச்சாரலில் சருமத்தை பரவசப்படுத்தும் ஒரு செய்தித்துளி நிச்சயம் இருக்கும்.
  இன்று ஊற்றெடுத்த அந்த அருவித்துளியில் வசீகரித்த வாசகத்துளி

  அல்லாஹ் எதையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது ஆன்மீகம். கேமரா எதையும் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது இன்றைய தொழில் நுட்பம் ,

  ReplyDelete