ن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال: اذكروا محاسن موتاكم، وكفُّوا عن مساويهم.
قال أبو عيسى الترمذي : هذا حديث غريب،
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முன்னாள் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் அல்ஹாஜ் இ.அஹ்மது சாஹிப் அவர்கள் 01/02/2017 ம் தேதி புதன் கிழமை அதிகாலை மரணம் அடைந்த செய்தி நமக்கு அதிர்ச்சியளிக்கின்றது இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
31 ம் செவ்வாய்க்கிழமை தேதி நடை பெற்ற கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் கல்ந்து கொண்ட அவர் நாடாளுமன்ற கூடத்திலேயே மயங்கி விழுந்தார். தொடர்ந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர் அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணியள்வில் இறையடி சேர்ந்தார்.
வாழ்க்கையை போலவே மரணமும்
மாணவர்களை விரும்பிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டார்ஜிலிங்கில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கிற போதே மயங்கி விழுந்தது போல ஆட்சி மன்றங்களில் மக்கள் பணியாற்றுவதில் அலாதியான ஈடுபாடும் நன் மதிப்பும் கொண்ட அஹ்மது நாடாளுமன்ற கூடத்திலேயே மயங்கிச் சரிந்தது அவரது வாழ்க்கை பயணத்திற்கு சிறப்பான முடிவுரையை தந்திருக்கிறது.
كما تعيشون تموتون وكما تموتون تحشرون ، என்பார்கள் அரபிகள். ஒரு சிறந்த அரசியல் வாதியாக வாழ்ந்த அஹ்மது வின் இறுதிப பயணம் அரசியலின் தலைமைக் கூடாரத்திலேயே நிகழ்ந்து விட்டது.
ப.ஜ.க. வின் அவமதிப்பு
பதவியிலிருக்கும் எம் பி இறந்து விட்டால் அன்றை தினம் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை விடப்படுவது தான் இது வரை இருந்துவந்த மரபு. ஆனால் தற்போதைய அரசு ஒரு எம்பிக்கு தர வேண்டிய மரியாதையை தராமல் தனது சமயக் காழ்ப்புணர்வின் சுய ரூபத்தை வெளிப்படுத்தி விட்டது. அஹ்மது இறந்த 1 ம் தேதி நாடாளுமன்றத்திற்கு விடுமுறை விடாமல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டது.
உப்புச் சப்பில்லாத - எந்த வகையிலும் கவனிக்கத்தக்க எந்த அசம்சமும் இல்லாத பட்ஜட்டை அடுத்த நாளுக்கு அதாவது பிப்ரவரி 2 ம் தேதிக்கு தள்ளிப் வைப்பதில் குடி ஒன்றும் முழுகிப் போய்விடாது. பிப்ரவரி முதல் தேதியிலேயே பட்ஜெட்டை அறிவித்து விட்டோம் என்ற
வெற்று
பெருமைய நிலை நாட்டிக் கொள்வதற்காக ஒரு எம் பிக்கு தர வேண்டிய மரியாதை மத்திய அரசு தரவில்லை. முஸ்லிம் சமூகத்தை மத்திய அரசு அவமதித்த பன்னூறு நிகழ்வுகளில் இதையும் ஒன்றாக பாஜக கட்சி கருதலாம்.
ஆனால் அஹ்மது எம்பியின் அரசியல் வரலாறு பாஜகவின் அரசியல் வரலாற்றை விட ஆழமானது. அழுத்தமானது. நாடாளுமற ஜனநாயகத்தில் பெருமைக்குரியது.
ஈ அஹ்மதுவின் மரணத்தை சராசரியான ஒரு எம் பி அல்லது ஒரு தலைவரின் மரணமாக இந்திய நாடாளுமன்றம் எடுத்துக் கொள்ள முடியாது.
ஈ அஹ்மது நாடாளுமன்றத்தின் சாதனை மனிதர்களுல் ஒருவர்.
1.
1991 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஏழு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இ அஹ்மது 2004ல் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.
அதற்கு முன்பு
சிறிது காலம் ரயில் துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு துறையின் இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
சிறிது காலம் ரயில் துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு துறையின் இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
2.
1991 முதல் 2014
வரை ஐ.நா சபையில் 10 முறை இந்தியாவின் பிரதிநிதியாக பங்குக் பெற்றவர். இ. அஹ்மது .
3.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வளைகுடா (ஜிசிசி) நாடுகளுக்கு இவரை தனது சிறப்பு பிரதிநிதியாக அனுப்பி வைத்தார்.
திறமையானவர்
பல
சந்தர்ப்பங்களிலும்
எம் பிக்கள் அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கை கூட வாசிக்கும் திறன் இருக்காது.
இ அஹ்மது தனக்கு
கிடைத்த இந்த வாய்ப்புகளையெல்லாம் சிறப்பான முறையில் பயன்படுத்தி பல்வேறு உலக நாடுகள் குறிப்பாக அரபு நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையான உறவுகள் மேம்பட திறம்பட பாடுபட்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இ அஹ்மது தற்போது எதிர்க்கட்சி வரிசையிலிருந்த போதும் ஆளும் கட்சியான பஜக கூட அவரது ஆலோசனைகளை பெறுவது துண்டு.
அனைத்து தரப்பினரிடமும் மரியாதை
அஹ்மது எம் பி முஸ்லிம் லீக் என்ற ஒரு சிறுபான்மையின அரசியல் கட்சியின் எம்பியாக இருந்த போதும் இந்திய நாட்டின் அனைத்து உயர் தலைவர்களிடமும் சரளமாக அணுகும் திறன்படைத்தவராவார். அனைவராலும் கண்ணியமாக பார்க்க்கப்பட்ட ஒரு அந்தஸ்து அவருக்கு இருந்தது., அதனாலேயே கேரளாவில் எதிரெதிர் துருவமாக கேரளாவில் செயல்படக் கூடியவை காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் ஒன்றாக சேர்ந்து பட்ஜெட் அமர்வை தள்ளி வைக்க கோரியது.
அஹ்மது என்ற அரசியல்வாதியின் ஆளுமையின் வெளிப்பாடு அது.
எனினும் மத்திய அரசு இறுகி மனத்தோடு அந்த கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்துவிட்டது..
7
முறை நாடாளுமன்ற உறுப்பினராக தெர்ந்த்டுக்கப்பட்டு சுமார் கால் நூற்றாண்டுகளாக இந்திய நாடாளுமன்றத்தை அலங்கரித்தவர்.. ஐந்து முறை சட்ட மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். மாநில அமைச்சராகவும் மத்திய அமைச்சராகவும் நாட்டுப் பணியாற்றிய ஒரு வரின் மரணத்தை சாமாண்ய மாக எடுத்துக் கொள்வது நாடாளுமன்ற பாரம்பரியத்தை மதிக்கிற யாரும் செய்யாத செயலாகும்.
ஒரு முன்மாதிர்யான நாடாளுமன்ற வாதியாக உதாரணம் காட்டப்படுவதற்கு தகுந்தவர் ஈ அஹ்மது, அவரது அந்தஸ்தை புறக்கணிப்பதன் மூலம் தனது முன்னோடிகளில் ஒருவரை நாடாளுமன்றம் தவறவிட்டு விட்டது.
பட்ஜெட் உரை தள்ளி வைக்கப்பட்டு அஹ்மது எம்பியின் வாழ்வும் மரணமும் பேசப்பட்டிருக்குமானால் நாட்டின் பழுத்த பாராளுமன்ற வாதியின் சாதனைகள் அரசியல் அரங்கை சுத்தம் செய்திடும் ஒரு மகத்தான பங்களிப்பை செய்திருக்கும். இளைய தலைமுறைக்கு ஒரு சிறப்பான அரசியல் வாழ்வின் பாடத்தையும் உணர்ச்சியையும் வழங்கியிருக்கும்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அருமை தெரிந்தவர்களுக்கல்லவா அதன் பாரம்பரியத்தை செழிக்கச் செய்தவர்களைப் பற்றிய அருமை தெரியும். பஜகவினருக்கு மத துவேஷத்தை தவிர வேறென்ன
தெரியும். ?
முஸ்லிம் சமுதாயத்தின் கவனத்திற்கு
தற்போதைய மத்திய அரசு ஈ அஹ்மதுவின் மரணத்திற்கு உரிய மரியாதை தராமல் போகலாம் முஸ்லிம் சமுதாயம் அஹ்மதுவின் வாழ்க்கயிலிருந்து படிப்பினைகளை பெற்றுக் கொள்ளாமல் போகக் கூடாது.
ஒரு மரணம் சில சந்தர்ப்பங்களில் ஒரு பெரும் பாரம்பாரியத்தின் இழப்பாக அமைந்து விடக் கூடும். (அல்லாஹ் பாதுகாப்பானாக!
பெருமானாரின் மரணம் நபித்துவ பாரம்பரியத்திற்கு முடிவு கட்டியதல்லவா ?
பெருமானார்
(ஸல்) அவர்களின் வபாத்திற்கு பிறகு ஒரு சஹாபி பெண்மணி அதிகம் அழுதார். அபூபக்க உமர்
ரலி ஆகியோர் நபி யின் மரணம் இயறகையானது தானே என்று அவருக்கு ஆறுதல் கூறிய போது அந்த
அம்மையார் கூறினார். அது எனக்கு தெரியும்.
நான் நபியோடு வஹி முடிந்து விட்டதே என்பதை நினைத்து அழுகிறேன் என்று சொன்னார்.
பல
அறிஞர்களின் இறப்பும் அவர்களோடு சேர்ந்து பல துறைகளையும் கொண்டு சென்றுள்ளது.
ஆயிஷா
ரலி அவர்களின் வபாத்து இல்முல் அன்சாப் எனும் பாரம்பரியங்களைப் பற்றிய கலையை கொண்டு
சென்று விட்டது.
அபுத்துபைல்
ரலி அவர்கள் வபாத்தான போது அது சஹாபி பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இமாம்
அஹ்மது பின் ஹன்ப்ல வபாத்தான போது அது ஹதீஸ் துறையின் ஆழ்ந்த புலமையின் முடிவாக அமைந்தது.
இமாம்
கஸ்ஸாலி ரஹ் அவர்கள் வபாத்தானபோது அது இஸ்லாமிய ஆன்மீகத்தின் ஆழ்ந்த ஞானத்தை முடிவுக்கு
கொண்டு வந்தது.
இமாம்
சுயூத்தி வபாத்தான போது அது இஸ்லாமிய பொது அறிவுக் களஞ்சியின் முடிவாக அமைந்தது.
இது
போன்ற இழப்புக்களை ஈடு செய்ய முடியாத இழப்புக்கள் என்று நாம் கூறுகிறோம்.
இந்திய
முஸ்லிம் சமூகத்திற்கு ஈ அஹ்மது எம் ப் யின் மரணமும் அப்படிப்பட்ட ஒன்று தான்.
சமுதாயத்தின்
பிரச்சனைகளுக்காக = அது போல கேரள மாநிலத்தின் தேவைகளுக்காக நயமாக வாதாடி தேவைகளை நிறைவேற்றிக்
கொடுப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அழுது ஆர்ப்பாட்டம் செய்து அல்ல. அமைதியான வழியில்
அவரது கம்பீரமான கண்டிப்பன குரலே தேவையை பெற்றுத்தந்து விடும்.
அதில்
தான் அவரது தலைமைப் பண்பு அடங்கியிருந்தது. சரியான அர்தத்தில் ஒரு தலைவரக அவர் இருந்தார்.
இந்திய
அரசியலில் இத்தகைய ஆளுமைகளைப் பார்ப்பது அறிது.
வெற்று
சவாடல்கள் விடுவது. கூட்டத்தை கண்டால் மட்டும் உதார் காட்டுவது , மக்களுக்கு தேவைப்படும்
சந்தர்ப்பத்தில் மறைந்து கொள்வது போன்ற போலி தலைமைத்துவத்தின் அடையாளங்கள் எதுவும்
அஹ்மதுவிடம் இல்லை.
கோவையில்
போலீஸ்காரர் செல்வராஜ் அல் உம்மாவைச் சார்ந்த சிலரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து காவல்
துறை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் வரன்முறை அற்ற அக்கிரமத்தை கட்டவிழ்த்து விட்டது.
கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. சுமார் 19 இளைஞர்கள் பலியானார்கள்.
அப்போது
இஸ்லாமிய பெயர் தாங்கிய அல் உம்மா தமுமுக ஜாக் போன்ற இயக்கங்கள் முஸ்லிம் சமூகத்தை
தமது அடவாடித்தனத்தால் கட்டுப் படுத்தி வைத்திருந்தன. 19 ஜனாஸாக்களும் அவர்களின் கட்டுப்பாட்டில்
இருந்தன.
அவர்களைத்
தவிர வேறு யாரும் சமூகத்திற்காக உழைக்க வில்லை என்ற அநாகரீகமான கோபத்தை அவர்களில் ஒவ்வொருவரும்
முக்கிற்கு மேல் வைத்திருந்தனர்.
அதனால்
அப்போதைய முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் யாரும் அந்த ஜனாஸாக்களைப் பார்க்கவோ அதற்குப்
பின் நடந்த வன்முறைகளில் முஸ்லிம் சமூகம் பட்ட துயரங்களை துடைக்கும் நடவடிக்கைகளில்
இறங்கவோ முடியவில்லை. காரணம் இந்த இயக்கம் சார்ந்தவர்கள் மற்றவர்கள் அவர்களை அனுமதிக்க
மாட்டார்கள் என்ற சூழ்நிலையை உருவாக்கியிருந்ததாகும். தமிழ் நாடு முஸ்லீம் லீக் தலைவர்
அப்துஸ் ஸமத் சாஹிபோ தேசிய லீக் தலைவர் அப்துல்
லத்தீப் சாஹிபோ மற்ற எந்த தலைவர்களும் களத்திற்கு வர வில்லை. ஒட்டு மொத்த கோவை நகரமும் மயான அமைதியில் இருந்தது, இந்துதுவ
சக்திகளின் வன்முறை வெறியாட்டங்களினால் பல நூறு கோடி முஸ்லிம்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
முஸ்லிம்கள் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருந்தனர்.
பள்ளிவாசல்கள் பலவும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. போலி வீரம் காட்டிய தலைவர்கள் முஸ்லிம்கள்
பகுதிக்குள் புஜபராக்கிரமம் காட்டிய தை தவிர முஸ்லிம்கள் பலகீனமாக இருந்த பகுதிக்குள்
செல்வதைப் பற்றி சிந்திக்க கூட சக்தியற்றவர்களாக இருந்தனர். அரசு நிர்வாகத்துடன் பேசும்
திறன் எவருக்கும் இருக்க விஉல்லை . இந்த தீடீரென்று சம்பந்தமே இல்லாமல் அஹ்மது எம்
பி கோவைக்கு வந்தார். ரெஸிடென்சி ஹோட்டலில் தங்கியிருந்தார். அவரும் முஸ்லிம் பகுதிக்குள்
நுழைய வேண்டாம் என காவல் துறை எச்சரிக்கை செய்திருந்தது. அவர் வந்த செய்தி கேட்டு ஜமாத்தினர்கள்
அவரை பார்க்கச் சென்றனர். ஊரே பற்றிக் கொண்டு எரிகிற போது ஸ்டார் ஹோட்டலில் உட்கார்ந்து
இவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி என்போன்றோர் மனதில் எழுந்தது. ஆனால் அவரது
அறைக்குள் நுழைந்த போது அது மிகவும் சூடாக இருந்தது. அஹ்மது கலெக்டருடன் கம்ஷனருடன்
நிலமையை கண்காணிக்க வந்த மாநில அமைச்சர்களுடன் சர்வ சாதராணமக கடும் குரலில் அதே நேரத்தில்
மரியாதையான முறையில் சரமாரியாக போராடிக் கொண்டிருந்தார். மாவட்டக் கலெக்டரிடம் “ நீ
பூமார்க்கெட் பள்ளிவாசலுக்கு போய் பார்த்த்து விட்டு வந்து பதில் சொல்! “ இன்னினின்ன
இடங்களில் கடைகள் தீவைக்கப்பட்டிருப்பதை கவனிக்கவில்லையா ? அவரது கேள்விக்கனைகள் ஏவுகணைகள்
போல் எழுந்தன, ஆட்சித்தலைவரும் மாநில அமைச்சர்களும் அவரது அனுபவத்திற்கு முன் குழந்தைகளைப்
போல நின்று பதிலளித்ததையும் அவரது பாதுகாப்புக்கு முக்கித்துவம் அளித்ததையும் பார்த்தேன்.
ஒரு
தலைவரை நேரடியாக பார்த்த அந்த அனுபவம் வாழ்க்கையில் இன்று வரை மறக்க முடியாதது.
கோவை
நகர முஸ்லிம்களை மேலும் பாதிப்புக்கு ஆளாகாமல் பாதுகாத்ததில் அஹ்மதுவுக்கு முக்கியப்
பங்கு உண்டு.
அஹ்மது
தனது சொந்தக் காசில் கோவைக்கு வந்ததை பின்னர் அறிந்து கொண்டேன். கோவையின் நிலவரங்களை
பத்ரிகைகளில் படித்தும் தொலைக்காட்சியில் பார்த்தும் அதிர்ச்சியடைந்த பிறகு தன்னால்
தில்லியில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றார் அஹ்மது.
பெரும்
வியாபாரிகள் அவரை சுற்றி நின்ற போதும் பாதிக்கப்பட்ட மக்களையும் ஜமாத்துக்களையும் சந்திக்க
ஆசைப்பட்டார்.
ஜனாஸாக்கள்
வைக்கப்பட்டிருக்கிற கோட்டைப் பகுதிக்குள் அவர் செல்ல வேண்டாம் என ஆட்சித்தலைவரும்
அமைச்சர்கள் அறிவுறுத்தினர். காவல்துறை அவரை அந்தப் பகுதிக்குள் தொடர்ந்து வர முடியாது
என்று கூறிவிட்டது. நீங்கள் உள்ளே வரத் தேவையில்லை. ஜமாத்துக்கள் என்னுடன் இருக்கின்றன
என்று கூறிவிட்டு எந்த சலனமும் இல்லாமல் ஜனாஸாவை பார்வையிட அஹ்மது வந்தார்.
·
தலைவர் எங்கிருந்து எப்படி பேசி சமுதாயத்திற்கு உதவ முடியுமோ
அதை சத்தமில்லாமல் ஒரு கடமை போல செய்தது.
·
அதிகார வர்க்கத்துடன் நிர்வாகத்துடனும் உறவாட வேண்டிய முறையில்
உறவாடியது.
·
அனைத்து தரப்பினரும் மதித்தாக வேண்டிய ஒரு அந்தஸ்தை ஏற்கெனவே
பெற்றிருந்தது.
·
கடமையை செய்து விட்டு பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் நடந்து
கொண்டது.
இன்னும்
அவருடன் பழகியிருந்தால் இரு தலைமையின் ஆளுமை அம்சங்களை இன்னும் விரிவாக பட்டியலிட்டிருக்க
முடியும்.
ஒரு
மாணவனாக அவரது காலடியில் உட்கார்ந்து
அரசியல் பழக வேண்டும் என்ற
ஆசை எனக்கு எழுந்ததை இன்று
வரை மறக்க வில்லை.
அல்லாஹ் அவரது
பிழைகளை மன்னித்து உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக!
அவரது மறைவை
ஒரு காலியிடமாக ஆக்கிவிடாமல் அவரை பின் தொடர்ந்த பல தலைவர்களை தந்தருள்வானாக!
அருமையான அவசியமான பதிவு. இக்கட்டான இத்தருனத்தில் அன்னாறது மறைவு இசுலாமிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. நூறு தலைவரை இழந்ததைப் போன்று மனது கணக்கிறது அல்லாஹ் அன்னாறது உயர்ந்த பணியை ஒப்புக் கொள்வானாக.ஆமீன்.
ReplyDelete