வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 09, 2017

கோழைகள் களமாடும் அரசியல் பெரும் ஜனநாயக கவலை

ஒரு விசித்திரமான கட்டத்தில் தமிழக அரசியல் இருக்கிறது .
இதில் தமிழக மக்களுக்கு ஏற்பட வேண்டிய இயல்பான வருத்தமும் கோபமும் என்ன வெனில் ?
7 கோடி மக்கள் வாக்களித்து ஒரு கட்சியை ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள், மிகப்பெரிய ஜனநாயக இயர்ந்திரம் அதற்காக வேலை செய்கிறது, கோடிக் கணக்கான மக்கள் கண் துஞ்சாது உழைக்கிறார்கள். பல கோடிகள் செல்வாகிகின்றன, இத்தனைக்குப் பின்னாலும் இவற்றோடு துளியும் சம்பந்தம் இல்லாத தினகரன் என்பவர் முதலமைச்சராலேயே சார் என்று அழைக்கப்படுகிறார். அவரது விரலசைவிலும் கண்ணசைவிலும் தமிழக எம் எல் ஏக்கள் எம்பிக்கள் இருக்கிறார்கள். தமிழகத்தை ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ரவுடிகள் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரே நிர்பந்திக்கப்படுகிறார்.
ஜனநாயகத்திற்கு இதை விட பெரிய சோகம் வேறு என்னவாக இருக்க முடியும் ?  
தனது மனைவியைக் காணவில்லை என கிருஷ்ணராயபுரம் எம்.எல்.. கீதாவின் கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

மக்களுக்கு சேவையாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட எம் எல் ஏக்களும் எம்பிக்களும், கட்சி அலுவலத்திலிருந்து சொகுசு ஓட்டல்களுக்கு கட்டாயமாக ஓட்டிச் செல்லப்படுகிறார்கள். பொள்ளாச்சியிலிருந்து பாலக்காட்டிற்கு வண்டிகளில் ஏற்றிச் செல்லப்படுகிற அடிமாடுகளின் ஞாபகம் வருகிறது. எத்தகையோரிடம் மக்களின் அரசு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது பாருங்கள், வெள்ளை வேட்டி முறுக்கான சட்டை அணிந்து கொள்ள இவர்களுக்க் என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வி எழுகிறதல்லவா ?
ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்கள் உண்மையில் தலை குணிய வேண்டிய சந்தர்ப்பம் இது !
அமைச்சர்கள் எம் எல் ஏக் கள் என்போர் அரசியல் களத்தின் போராளிகள் அல்லவா ? அவர்கள் இப்படியா இருப்பது ?
அரசியல் எனும் களத்தில் அதன் அங்கத்தினர்கள் போராளிகளாக இருக்க வேண்டும்.
அறிஞர்கள் சொல்வார்கள்
போராட்டத்தின் அடிப்படையே வீரம் தான்.
قال بعض الحكماء: (جسم الحرب: الشَّجَاعَة، وقلبها: التدبير، ولسانها: المكيدة، وجناحها: الطاعة، وقائدها: الرفق، وسائقها: النصر
அந்த வீரர்கள் ஓடி ஓளிய கூடாது.  கருத்துக்களை பேசத் தயங்க கூடாது. பணிவையும் கனிவையும் வெளிப்படுத்த தயங்கக் குடாது . சத்தியத்திற்கான ஆதரவை தெரிவிக்காதிருக்கவும் கூடாது, எந்த நிலையிலும்.  

சிக்கலான ஆபத்தான கட்டங்களில் திறந்த இதயத்துடன் பிரச்சனைகளை அணுகுவதுதான் வீரம் என வீரத்திற்கு இலக்கணம் வகுத்தவர்கள் கூறினார்கள்
حد الشَّجَاعَة سعة الصدر، بالإقدام على الأمور المتلفة

 கோழைத்தனத்திற்கு வீரத்திற்கு வித்தியாசம் என்ன ?
 وقال ابن القيم: (الجبن والشَّجَاعَة غرائز وأخلاق، فالجبان يفر عن عرسه، والشجاع يقاتل عمَّن لا يعرفه
இன்றைய நமது மாநிலத்தின் நிலைமை எப்படி இருக்கிறது ? . இந்தக் கோழைத்தனத்தை வார்த்தைகளில் வடித்து சொல்ல முடியுமா ?
அற்பமான அரசியல் வாழ்வுக்காக வீரத்தை விலை பேசி விற்பவர்களுக்கு அபூபக்கர் ரலி அவர்கள் கூறிய அற்புதமான அறிவுரை
மரணத்தை ஆசைப்படு உனக்கு வாழ்க்கை கிடைக்கும்.
قال أبو بكر رضي الله تعالى عنه لخالد بن الوليد: (احرص على الموت، توهب لك الحياة

சத்தியப் போராட்டதில் வீரத்தோடு மரணிக்க ஆசைப்படுகிறவர்கள், வரலாற்றில் பெரு வாழ்வு வாழ்வார்கள்
கோழைகள் தாமும் கெட்டு சமுதாயத்திற்கும் ஆபத்தை விளைவிப்பார்கள்.
கோழைத்தனம் இழிவானது மட்டுமல்ல. பல தீமைகளுக்கும் காரணமாக கூடியது,
வீரம் இருக்கிற் இடத்தில் வெளிப்படைத் தன்மை இருக்கும். என்ன செய்கிறார்கள் என்பதை தெரிவித்து விட்டு அல்லது வெளிப்படையாக செய்வார்கள்.  கோழைத்தனம் இருக்கிற இடத்தில் மர்மம் கோலோச்சும். என்ன செய்கிறார்கள் என்பது வெளியே தெரியாது. ஆனால் பெரும் ஆபத்தை விளைவித்து விடுவார்கள்.
இப்னுல் கைய்யும் அல் ஜவ்ஸீ கோழைத்தனத்தின் தீமைகளை விவரிக்கிறார்.
“கோழை அனுபவிக்கும் சுகங்கள் விலங்கினத்திற்கு நிகராகனது”.
قال ابن القيم: "فإنَّ الشجاع منشرح الصدر، واسع البطان، متسع القلب، والجبان أضيق النَّاس صدرًا، وأحصرهم قلبًا، لا فرحة له ولا سرور، ولا لذة له ولا نعيم إلا من جنس ما للحيوان البهيمي، وأما سرور الروح ولذتها، ونعيمها، وابتهاجها، فمحرم على كل جبان، كما هو محرم على كل بخيل، وعلى كل معرض عن الله سبحانه، غافل عن ذكره، جاهل به وبأسمائه تعالى وصفاته ودينه، متعلق القلب بغيره"
(زاد المعاد لابن القيم 2/22
 
வீரனிடம் சுய கவுரவம் இருக்கும். உயர் குணங்கள் வெளிப்படும்
قال ابن القيم: "والشَّجَاعَة تحمله على عزة النفس، وإيثار معالي الأخلاق والشيم، 

உண்மையான் வீரத்திற்கு இப்னுல் கைய்யும் இன்னொரு விளக்கம் தருகிறார்.
“எதிராளியை அடக்கியாளும் ஆற்றல்.”

حقيقة الشَّجَاعَة، وهي ملكة يقتدر بها العبد على قهر خصمه" (الفروسية لابن القيم ص 491).
ஓடி ஓளியும் மக்கள் பிரதிநிதிகளுக்கு யார் இதை எல்லாம் எடுத்துரைப்பது.

வீரத்தின் நன்மைகளில் முக்கியமானது . நல்ல கடவுள் நம்பிக்கை. கோழைத்தனத்தின் பிரபலமான அடையாளம் பக்திக் குறைவு. அல்லது பக்தியில் போலித்தனம், கடவுள் இருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கை கோழையிடம் இருக்காது.

قال ابن القيم: "والجبن خلق مذموم عند جميع الخلق، وأهل الجبن: هم أهل سوء الظن بالله، وأهل الشَّجَاعَة والجود: هم أهل حسن الظن بالله، كما قال بعض الحكماء في وصيته: عليكم بأهل السخاء، والشَّجَاعَة، فإنَّهم أهل حسن الظن بالله،

வீரம் ஆபத்திலிருந்து காக்கும் கேடயம், கோழைத்தனம் மனிதன் தனக்கு தானே தேடிக்கொள்ளும் ஆபத்து. எதிரிக்கு செய்யும் உதவி.

என்ன அருமையான வாசகம் ?

والشَّجَاعَة جُنَّة للرجل من المكاره، والجبن إعانة منه لعدوه على نفسه،

அல்லாஹ்  போராளிகளுக்கு கூறுகிறான்.
கோழையாவீர்கள் எனில் வாழ்க்கை கொஞ்ச காலம் தான்.  

{قُل لَّن يَنفَعَكُمُ الْفِرَارُ إِن فَرَرْتُم مِّنَ الْمَوْتِ أَوِ الْقَتْلِ وَإِذًا لاَّ تُمَتَّعُونَ إِلاَّ قَلِيلاً} [الأحزاب: 16].

வீரம் இல்லாதவர்கள் ஆட்சியதிகாரத்தால் மக்களுக்கு நன்மை செய்ய முடியாது.

அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் தரத்தை நிரூபித்த நிகழ்வுகள்
1.   ஜகாத் தர மறுத்தவர்களுக்கு எதிராக அவர் காட்டிய வீரம்.

فقال أبو بكر: والله لأقاتلنّ من فرّق بين الصلاة والزكاة، فإنَّ الزكاة، حق المال، والله لو منعوني عناقاً، كانوا يؤدونه إلى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعه.
فقال عمر بن الخطاب: فو الله ما هو إلا أن رأيتُ أنّ الله عزّ وجلّ قد شرح صدر أبي بكر للقتال فعرفت أنَّه الحق) . رواه البخاري ومسلم واللفظ له .

1.   பெருமானாரின் மரணத்தை தொடர்ந்து உஸாமத்துப் ஜைது ரலி அவர்களின் படையை அவர் புறப்படச் செய்த ஏற்பாடு /


أشار  كثير من الناس على الصديق أن لا ينفذ جيش أسامة لاحتياجه إليه، فيما هو أهم لأن ما جهز بسببه في حال السلامة، وكان من جملة من أشار بذلك عمر بن الخطاب، فامتنع الصديق من ذلك، وأبى أشد الإباء إلا أن ينفذ جيش أسامة.
وقال: والله لا أحل عقدة عقدها رسول الله صلى الله عليه وسلم ولو أن الطير تخطفنا والسباع من حول المدينة، ولو أن الكلاب  جرت بأرجل أمهات المؤمنين لأجهزن جيش أسامة، وآمر الحرس يكونون حول المدينة، فكان خروجه في ذلك الوقت من أكبر المصالح والحالة تلك، فساروا لا يمرون بحي من أحياء العرب إلا أرعبوا منهم، وقالوا: ما خرج هؤلاء من قوم إلا وبهم منعة شديدة، فقاموا أربعين يوما، ويقال: سبعين يوما، ثم أتوا سالمين غانمين، ثم رجعوا فجهزهم حينئذ مع الأحياء الذين أخرجهم لقتال المرتدة وما نعي الزكاة على ما سيأتي تفصيله.

இந்த வீரம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் முஸ்லிம் உம்மத்தின் கட்டுக்கோப்ப்பிற்கும் பெரிதும் உதவின் என்பதை யாரும் மறுக்க முடியாது.  இந்த வீரம் வெளிப்படுத்தப் பட்டிருக்காவிட்டால் தொடக்க கால இஸ்லாமிய சமூகம் என்னென்ன பாதிப்புக்களைச் சந்தித்து இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது/

வீரர்களிடம் வெளிப்படும் நெஞ்சுறுதியும்  வெளிப்படைத் தன்மையும் அவர்களுக்கு மட்டும் நன்மையாக அமையாது. ஒரு பெரும் சமூகத்திற்கே உற்சாகத்தையும் வலிவையும் தரும்.
மரணத்திற்கு அஞசாத ஹிஜ்ரத்
عن علي بن أبي طالب :ما علمت أن أحدا من المهاجرين هاجر إلا مختفيا إلا عمر بن الخطاب فإنه لما هم بالهجرة تقلد سيفه وتنكب قوسه وانتضى في يده أسهما واختصر عنزته ومضى قبل الكعبة والملأ من قريش بفنائها فطاف بالبيت سبعا متمكنا ثم أتى المقام فصلى متمكنا ثم وقف على الحلق واحدة واحدة وقال لهم : شاهت الوجوه لا يرغم الله إلا هذه المعاطس من أراد أن تثكله أمه ويوتم ولده ويرمل زوجته فليلقني وراء هذا الوادي . قال علي : فما تبعه أحد إلا قوم من المستضعفين علمهم وأرشدهم ومضى لوجهه. 

மரணத்திற்கு அஞ்சாத யுத்தம்

நாங்கள் படுக்கையில் மரணிக்கும் பாரம்பரியம் அல்ல  என்றார் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி)

وخطب عبد الله بن الزبير رضي الله عنه، النَّاس لما بلغه قتل أخيه مصعب، فقال: (إن يقتل فقد قتل أبوه، وأخوه، وعمه، إنا والله لا نموت حتفًا، ولكن نموت قعصًا بأطراف الرماح، وموتًا تحت ظلال السيوف، وإن يقتل مصعب فإنَّ في آل الزبير خلفًا منه) 

இந்த உலகில் உச்சபட்சமாக என்ன நடந்து விடப் போகிறது மரணத்தை தவிர. என்ற சிந்தனையோடு சத்தியத்திற்காக போராட வேண்டும் .
குளு குளு அரைகளில் எம் எல் ஏக்கள் என்ற செய்தியை படிக்கிற போதே நமது அரசியல் துணிவு பற்றிய அவமானம் பிடுங்கித் தின்னுகிறது.  
இதில் அனைத்தையும் விட பெரிய வேடிக்கை.
டீக்கடைகளில் பேப்பர் படிக்கிறவனுக்கு கூட தெரிந்த செய்தி அமைச்சர்கள் எம் ஏக்கள் சொகுசு மாளிகையில் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருக்கிறாரக்ள் என்பது,
ஆனால் நீதிமன்றத்தில் அரசாங்க வக்கீல் சொல்கிறார் எம் எல் ஏக்கள் ஹாஸ்டலில் இருக்கீறார்கள். ஒரு நீதிபதி அதையும் ஏற்றுக் கொள்கிறார்.
இவர்கள் எல்லாம் மனித ஜாதி தானா ?  
அர்சியலோடு சேர்ந்து நிர்வாக அமைப்பும் நீதி அமைப்பும் எவ்வளவு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கான உதாரணங்கள் இவை.
வீரம் கடமையாற்ற வேண்டிய தருணத்தில் கடமையாற்ற வேண்டும் இல்லை எனில் சமுதாயம் சோதனைகளை சுமக்க வேண்டியதாகிவிடும் என்பதற்கு நவீன உதாரணமாக திகழ்கிறார் நம்முடைய மாநில முதலமைச்சர்.
இப்போது வாய்திறந்த பண்ணீர் செல்வம், இராஜினாமா செவதற்கு முன் அல்லது ஜெயலலிதா இறந்தவுடன் வாய் திறந்திருப்பாரானால் சசிகலாவும் அவருடை குடும்பமும் எப்போதோ சென்னையை காலி செய்து விட்டு மன்னார்குடிக்கு குடி பெயர்ந்திருப்பார்கள்.
ஒரு சில நாட்கள் தாமதித்த அவரது செயல்பாடு இன்று கேள்விக்குரியான கட்டத்தில் அவரை தள்ளிவிட்டது, ஜெயலலிதாவின் உற்ற வேலைக்காரி என்ற அடையாளத்தை தவிர வேறு எந்த அரசியல் பங்களிப்பும் அற்ற ஒருவர் தமிழகத்தின் முதலமைச்சராகவும் சூழல் ஏற்பட்டிருக்காது,  

செய்ய வேண்டிய வேலைய உரிய காலத்தில் செய்து முடித்து விட வேண்டும் என்பதை எல்லா விதத்திலும் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கற்றுத் தந்திருக்கிறது.
عن عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله تعالى عنه قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلى اللهِ قَالَ: (الصَّلاةُ عَلى وَقْتِها قَالَ: ثُمَّ أَيّ قَالَ: ثُمَّ بِرُّ الْوالِدَيْنِ قَالَ: ثُمَّ أَيّ قَالَ: الْجِهادُ في سَبيلِ اللهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي) متفق عليه .


நேரத்தோடு காரியம் ஆற்றிக் கொள்ள வேண்டும் பலவற்றிற்கும் இது பொருந்தும்.   
பெருமானார் (ஸல்) கூறீனார்கள்.
اغتنم خمسا قبل خمس : شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك 

அவ்வாறு பயனபடுத்திக் கொள்ளாவிட்டால் பன்னீர் செல்வத்தைப் போல பரிதாபமாக நிற்க வேண்டியது வரும்.

அல்லாஹ் நமது ஆட்சியதிரத்தில் இருப்பவர்களை கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்பானாக! நமது மாநிலத்தை குழப்பத்திலிருந்தும் குழப்ப்பத்தில் ஆட்படுத்துவோரிடமிருந்தும் பாதுகாப்பானக! அ





No comments:

Post a Comment