வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 16, 2017

என் பணி கடன் செய்து கிடப்பதே!

நெறியே தருதல் நின்கடன்காண்
          நின்னைப் பணிதல் என்கடனே.

எனக்கு வழி காட்டுதல் உன் கடமை , உன்னைப் பணிந்து கிடப்பதே என் கடமை எனக் கடவுளை வாழ்த்திப்பாடினார் திருநாவுக்கரசர்

அதையே காலப் போக்கில் என் கடன் பணி செய்வதே என்று மக்கள் மாற்றி கூறிவந்தார்கள்.

இப்போது நம்மை ஆட்சி செய்கிற அரசுகளோ என் பணி கடன் செய்து கிடப்பதே என்று புது விதிகளை எழுதிவருகிறார்கள் .

நேற்று தமிழக பட்ஜெட்டை வாசித்த தமிழக நிதியமைச்சர் நடப்பு நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட் மதிப்பு 1.59 லட்சம் கோடி என்று தெரிவித்தார். அதே நிதியமைச்சர் தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை ரூ.3 லட்சம் கோடி (ரூ.3,14,366 கோடி) ஆக இருப்பதாக குறிப்பிட்டார்

அதாவது நமது மொத்த பட்ஜெட் தொகையை விட இரண்டு மடங்கு நமது கடன் தொகை இருக்கிறது.

அதாவது இரண்டாயிரம் ரூபா கடன வச்சுக்கிட்டு ஆயிரம் ரூபாயுக்கு நாம் திட்டம் போடுகிறோம்.

அதுவும் எப்படி திட்டம் போடுகிறோம்.

•  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு
•  முதலீடு ஊக்குவிப்பு திட்டத்திற்கு ரூ.1,295 கோடி ஒதுக்கீடு
•  6 லட்சம் விலையில்லா ஆடுகள் வழங்க ரூ.182 கோடி ஒதுக்கீடு.
•  ஏழை பெண்களுக்கு 25 ஆயிரம் கறவை பசுக்கள் வழங்கப்படும்.
•  1 லட்சம் பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க ரூ.200 கோடி.
•  விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ. 490 கோடி
•  நகர்ப்புற புத்துணர்வு திட்டத்துக்கு ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக

கடனை குறைக்கும் திட்டங்களுக்கு பதிலாக மேலும் கடனை வளர்க்கும் திட்டங்கள் கூச்சமில்லாமல் போடப்படுகின்றன.
அரசு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்வதாக சொல்லும் பட்டியலை படிக்கிற போது கேலிச் சிரிப்புத்தான வருகிறது.

வேளாண் துறைக்கு ரூ.1680.73 கோடி நிதி ஒதுக்கீடு
* மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி நிதி ஒதுக்கீடு
* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,010 கோடி நிதி ஒதுக்கீடு
* ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.3,009 கோடி நிதி ஒதுக்கீடு
* நீர் வளத்துறைக்கு ரூ.4,791 கோடி நிதி ஒதுக்கீடு
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.988 கோடி நிதி ஒதுக்கீடு
  ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்திற்கு ரூ.3,100 கோடி,
  சாலை பாதுகாப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
  நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.13,996 கோடி ஒதுக்கீடு
* காவல்துறையினர் வீட்டு வசதிக்கு ரூ. 450 கோடி ஒதுக்கீடு:
* விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு
* மின்சாரம்- எரிசக்தித் துறைக்கு ரூ.16,998 கோடி ஒதுக்கீடு >
  கால்நடை பராமரிப்பிற்கு ரூ.1,161 கோடி நிதி ஒதுக்கீடு
* திருமண உதவித் திட்டங்களுக்கு ரூ.723 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு
* விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு
* வருவாய் பற்றாக்குறை ரூ.15,931 கோடி என மதிப்பீடு

இந்த ஒதுக்கீடுகளில் எழும் பெரும் கேள்வி என்ன வெனில் இந்த ஒதுக்கீடுகளில் அரசியல் வாதிகளுக்கான ஒதுக்கீட்டின் அளவு என்ன ? என்பதே! இந்த ஒதுக்கீடுகளில் பெரும் மகிழ்ச்சி அடைவது துறை சார்ந்த அமைச்ச்சரும் காண்டிராக்டர்களும் டெண்டர் ஒதுக்கீடு செய்யும் அதிகாரிகளுமே ஆவர் என்பது மிக எதார்த்தமான நிஜமாகும்

கோவை, திருச்சி, மதுரையில் ரூ.150 கோடி செலவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். இது போன்ற அறிவிப்புக்கள் ஆண்டு தோறும் பட்ஜட்டில் இடம் பெருகின்றன, நிதி ஒதுக்கீடும் நடை பெறுகிறது, ஆனால் இத்தைகைய திட்டங்கள் எங்காவது செயல்படுத்தப் படுகிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான கணக்கு என்றைக்காவது மக்கள் அறிந்தது ஊண்டா ? அது குறித்த கேள்விகள் உண்டா ?

பட்ஜட் என்பது மக்களை பொருத்தவரை சலுகைகளை எதிர்பார்க்கும் ஒரு அறிக்கையாகவும் வியாபாரிகளை பொருத்தவரை அரசு அதிகமாக ஏதும் பிடுங்கப் போகிறதோ என்ற அச்சமாகவும் மட்டுமே இருக்கிறது,
இந்த பட்ஜெட்டில் பற்றாக்குறை மற்றும் அரசின் கடன் பற்றிய செய்தி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது, நேற்றைய தொலைக்காட்சி விவாதங்களிலும் இது விசயம் அதிக முக்கியத்துவம் பெற்றன.
மக்களாகிய நமக்கு சில முக்கியமான வழிகாட்டுதல்கள் இதிலிருந்து கிடைக்கின்றன,
இது கிரடிட் கார்டுகள் , லோன்களின் உலகமாகிவிட்டது
பைனான்ஸ் கார்டு இல்லாத குடும்பம் இல்லை என்றாகிவிட்டது,
நம்மை கடனுக்குள் தள்ளிவிடும் அத்தனை முயற்சியும் நாசூக்காக செய்யப்படுகிறது.
நாமும் விரும்பியே சாதாரணமாக கடனுக்குள் விழுந்து விடுகிறோம். கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற அருணாசலக் கவிராயரின் பாடல்  வரிகள் அர்த்தம் அற்றதாகிவருகின்றன.

வயிறாற சாப்பிட்டு விட்டு கிரடிட் கார்டை நீட்டுவது பலருக்கும் மதிப்பாக தெரிகிறது. கடன் சொல்வது அவமானம் என்ற ஒரு சூழல் இருந்தது, இப்போது அவமானமே  மரியாதையாக மாறிவிட்டது எனில் இன்றை காலத்தின் கோலத்தை என்ன வென்று சொல்வது ?
உண்மையில் இது நல் வாழ்க்கைகான அடையாளம் அல்ல.
கடனில்லாத வாழ்க்கைக்கு ஆசைப்பட வேண்டும்
கடன் மிக எச்சரிக்கைக்குரிய ஒரு விசயம். இந்த ஒரு ஹதீஸ் போதும்.
فقال رسول الله - صلى الله عليه وسلم -: ((يُغفَر للشهيد كلُّ ذنب؛ إلا الدَّين))؛ رواه مسلم
கடன் பல அவலட்சனமான குணங்களுக்கு மனிதர்களை அழைத்துச் சென்று விடும்
فعن عائشة: أن رسول الله - صلى الله عليه وسلم - كان يدعو في الصلاة: ((اللهم إني أعوذ بك من عذاب القبر، وأعوذ بك من فتنة المسيح الدجال، وأعوذ بك من فتنة المحيا وفتنة الممات، اللهم إني أعوذ بك من المأثم والمغرم))، فقال له قائل: ما أكثر ما تستعيذ من المغرم! فقال: ((إن الرجل إذا غرِم، حدَّث فكذَب، ووعد فأخلف))؛ رواه البخاري
இன்றைய கால கட்டத்தில் கடன் அட்டைகள் போலியான ஒரு வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
கையிலிருக்கிற காசை மீறிய ஆசை தேவைக்கும் அதிகமான பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் கொண்டு போய் நிறுத்துகிறது. 
அல்லது சீக்கிரமாக வாங்கவேண்டும்  என்ற அவசர புத்தி கடனில் கொண்டு போய் நிறுத்துகிறது
இது பேராசையும் அவசர புத்தியும் மிக ஆபத்தானவை – கடனாளி ஆவதற்கு இந்த இரண்டு குணங்களும் அடிப்படை காரணங்கள்.
சமூதாயத்தைச் சார்த ஆண்கள் இளைஞர்கள் குடும்பத்தலைவிகள் என அனைத்து தரப்பினரும் இது விசயத்தில் எச்சரிக்கையோடிருப்பது அவசியம்.
வியாபாரிகள் கொஞ்சம் பணம் போட்டால் இன்னும் சற்று அதிகம் இலாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு கடன் வாங்கி விடுகிறார்கள். குடும்பத் தலைவிகள் அடுத்தவர்களைப் பார்த்து அவசரப்பட்டு கடனுக்கு வீட்டுப் பொருட்கள் வாகனங்கள் உள்ளிட்ட வற்றை வாங்கி கடனாளி ஆகிவிடுகிறார்கள்.
கடன் வாங்குகிற சமயத்தில் திருப்பி கட்டு வதை ப் பற்றி பெரிதாக கவலை இருப்பதில்லை. அல்லது திருப்பி கட்டி விட முடியும் என்ற தைரியத்தில் கடன வாங்கி விடுகிறோம்.
ஆனால் எல்லா சந்தர்ப்பமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
ஒரு கணவன் மனைவி சந்தித்தேன். இருவரும் இரண்டு ஷிப்ட் வேலை பார்க்கிறார்கள். கணவரும் மனைவியும் ஒன்றாக இருப்பதே விடுமுறை நாளில் மட்டும் தான் என்றாகிவிட்டது. அதிலும் கொஞ்ச நேரம் தான். காரணம் என்ன தெரியுமா ?
அவர்கள் இருவரும் வேலை பார்த்த காரணத்தால் கையில் ஓரளவுக்கு பணம் இருந்தது. அப்போது சிறந்த ஒரு அபார்ட்மெண்டில் வீடு வாங்க ஆசைப்பட்டு கடனுக்கு வீடும் வாங்கினார்கள். வீடு வாங்கிய பிறகு அதற்கான பணத்தை அடைக்க வேண்டிய சூழலில் இருவரும் இரண்டு ஷிப்ட உழைக்க வேண்டியதாகிவிட்டது,
கடனுக்கு பிறகு ஏற்படக் கூடிய நெருக்கடிகள் குறித்த ஒரு அச்சம் அவசியம்.
கடனை செலுத்த முடியாத பலர் மோசமான முடிவுகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பண்டைய சோழ நாட்டில் கடனை திருப்பி செலுத்தா விட்டால் கடன் கொடுத்தவர்கள் ஒன்றாக சேர்ந்து கடனாளி வசமாக சிக்குகிற ஒரு சந்தர்ப்பத்தில் அவனை சுற்றி வட்டமாக ஒரு கோடு கிழித்து விடுவார்களாம். அவன் அந்தக் கோட்டை விட்டு வெளியே வர முடியாது என்ற சமூக ஏற்பாடு அன்று இருந்திருக்கிறது. இவ்வாறு கடன் வட்டத்திற்குள் அடை படுவதை இறப்பிற்கு சமமாக அன்று கருதிருக்கிறார்கள். அவ்வாறு வட்டமிடப்பட்டு விட்டால் அதிலிருந்து கடனாளியோ அவனைச் சார்ந்தவர்களோ கடனை முழுவது மாக திருப்பி செலுத்தாத வரை வெளியே வர மாட்டார்களாம்.
அரசர்களுகளுக்கு கூட இந்த சூழல் ஏற்பட்டது என மார்க்கோ போலோ என்ற உலக சுற்றுப்பயணி கூறுகிறார்.
செந்தர் பந்தியே எனும் மன்னன்  ஒரு சந்தர்ப்பத்தில் அந்நிய நாட்டு வணிகன் ஒருவனிடம் இப்படிக் கைமாற்று வாங்கி விட்டு நழுவிக்கொண்டிருந்தான். அவன் ஒரு நாள் குதிரையில் போகும்போது கடன் கொடுத்தவ்ன் அவசர அவசரமாகத் தரையில் அவனைச் சுற்றிக் கோடு வரைய, அரசன் கட்டுப்பட்டு அப்படியே நின்றான். அரண்மனையிலிருந்து பணம் எடுத்து வந்து அடைத்து அவனை விடுவித்துப் போனார்கள். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடனை கட்டாமல் மரித்தவருக்கு தொழ வைக்க மறுத்தார்கள். (ஆரம்ப கால கட்டத்தில், பிற்காலத்தில் தானே அந்தக் கடனை அடைக்கப் பொருப்பேற்றுக் கொண்டார்கள்,)
جاء في البخاري 
عن سلمة بن الأكوع (( أن النبي صلى الله عليه وسلم أُتي بجنازة ليصلي عليها , فقال : هل عليه من دين ؟ قالوا : لا , فصلى عليها . ثم أُتي بجنازة أخرى , فقال : هل عليه من دين ؟ قالوا : نعم . قال : صلوا على صاحبكم . قال أبو قتادة : عليَّ دينه يا رسول الله , فصلى عليه )) 
குடும்பத்திற்கு தெரியாமல் கடனாளியான பல குடும்பத்தலைவர்கள் – அதே போல இளைஞர்கள் – தமது குடும்பத்தை பல கட்டத்திலும் பெரும் நெருக்கடிகளுக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கியிருக்கிறார்கள்.
கடன் குறித்து இந்த எச்சரிக்கைகளை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஆனால் வாழ்க்கையின் மிக அத்தியாவசியமான நெருக்கடிகளில் கடனை தேடிக்கொள்வது தவறில்லை.
  فالنبي مات مدينًا، وبعض صالحي الأمة من الصحابة ومَن بعدهم مات مدينًا
கடன் பெறுபவருக்கு திருப்பி கொடுக்கும் எண்ணம் இருக்க வேண்டும் . அது இருக்குமெனில் திருப்பிச் செலுத்தும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்
فعن أبي هريرة - رضي الله عنه – قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: ((مَن أخذ أموال الناس يريد أداءها، أدَّى الله عنه، ومن أخذ يريد إتلافها، أتلفه الله))؛ رواه البخاري
வசதி இருந்தும் திருப்பி செலுத்தாமல் இருப்பது அநீதியாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُؤْتَى بِالرَّجُلِ الْمُتَوَفَّى عَلَيْهِ الدَّيْنُ فَيَسْأَلُ  هَلْ تَرَكَ لِدَيْنِهِ فَضْلًا فَإِنْ حُدِّثَ أَنَّهُ تَرَكَ لِدَيْنِهِ وَفَاءً صَلَّى وَإِلَّا قَالَ لِلْمُسْلِمِينَ صَلُّوا عَلَى صَاحِبِكُمْ فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الْفُتُوحَ قَالَ أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ فَمَنْ تُوُفِّيَ مِنْ الْمُؤْمِنِينَ فَتَرَكَ دَيْنًا فَعَلَيَّ قَضَاؤُهُ وَمَنْ تَرَكَ مَالًا فَلِوَرَثَتِهِ" متفق عليه.

இன்றைய நம்முடை நாட்டு நடப்பில் வசதியான மல்லையாக்கள் பல நூறு கோடியை வங்கிகளிடம் கடனாகப் பெற்று. பல நூறு சிறு முதலீட்டாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு வெளிநாட்டில் உல்லாசமாக வாழ்கிறார்கள். வங்கிகள் அவருடை கடனை தள்ளுபடி செய்கின்றன.
இது போன்ற நிகழ்வுகளை பார்த்து விட்டு கடன் பெறுவதிலும் திருப்பி அடைப்பதிலும் நல்ல முஸ்லிம்கள் அலட்சியம் காட்டக் கூடாது.
கடனில் விழுந்து பலரும் எழுந்திருக்க முடியாத சூழல் ஏற்படும் சில கட்டங்களை நினைவு படுத்துகிறேன்.
வீடு கட்டும் போது அதிகபட்ச எச்சரிக்கை அவசியம்.
பலரும் சிரமப்பட்டு வீட்டை கட்டி விட்டு . கட்டி முடித்தவுடன் கடனை திருப்பச் செலுத்த வீட்டை விற்றிருக்கிறார்கள்.
அதிக இலாபத்த்தை நம்பி கடன் பெற்ற வியாபாரிகள் – திடீரென ஏற்டுகிற நெருக்கடிகளில் பணத்தை திருப்பி செலுத்த முடியாத சூழலில் வியாபார நிறுவனத்தையே இழந்திருக்கிறார்கள்.
ஆடம்பரமான நிகழ்ச்சிகளுக்காக கடன்பெறுகிறவர்கள் அந்த நிகழ்ச்சியிலே கூட மகிழ்ச்சியடைய முடியாதவர்களாக கடனின் சுமையால் அழுத்தம் அடைந்திருக்கிறார்கள்.
எனவே கடன் குறித்த அதிகபட்ச எச்சரிக்கை அவசியம்.
கடனை எழுதி வைத்துக் கொள்வது மிக முக்கியம் . நமக்கும் நமது சந்ததிகளுக்கும் அது நினைவூட்டுதலை தரும்.
திருமறையின் முக்கியமான உத்தரவு அது/ திருமறையின் மிக நீண்ட வசனம் இது
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلاَ يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللّهَ رَبَّهُ وَلاَ يَبْخَسْ مِنْهُ شَيْئاً فَإن كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهاً أَوْ ضَعِيفاً أَوْ لاَ يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُواْ شَهِيدَيْنِ من رِّجَالِكُمْ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاء أَن تَضِلَّ إْحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الأُخْرَى وَلاَ يَأْبَ الشُّهَدَاء إِذَا مَا دُعُواْ وَلاَ تَسْأَمُوْاْ أَن تَكْتُبُوْهُ صَغِيراً أَو كَبِيراً إِلَى أَجَلِهِ ذَلِكُمْ أَقْسَطُ عِندَ اللّهِ وَأَقْومُ لِلشَّهَادَةِ وَأَدْنَى أَلاَّ تَرْتَابُواْ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلاَّ تَكْتُبُوهَا وَأَشْهِدُوْاْ إِذَا تَبَايَعْتُمْ وَلاَ يُضَآرَّ كَاتِبٌ وَلاَ شَهِيدٌ وَإِن تَفْعَلُواْ فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُواْ اللّهَ وَيُعَلِّمُكُمُ اللّهُ وَاللّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ(282)

இன்றைய அரசுகளைப் போல பொறுப்பற்ற கடனாளியாக ஆவதிலிருந்து அல்லாஹ் நம்மையும் நமது சந்ததிகளையும் பாதுகாப்பானாக!







No comments:

Post a Comment