ஹஜ்ஜுப் பெருநாளுக்காக
காத்திருக்கிறோம்.
இபுறாகீம் அலை
அவர்களது அற்புத வாழ்வை மீண்டும் ஒரு நினைவு படுத்திச் செல்கிறது இந்தப் பெருநாள்.
அந்த அற்புத வாழ்வு
ஒவ்வெரு கோணத்திலும் நிகழ்காலத்தில் வாழும் முஸ்லிம் உம்மத்திற்கு புதுப் புது சிந்தனைகளையும்
வழிகாட்டுதலையும் தரக் கூடியதாகும்.
இபுறாகீம் அலை
அவர்களது வாழ்வின் சிறப்பாக வெளிப்பட்ட மன உறுதியை இந்தப் பெருநாளில் நாம் நினைவு கூர்கிறோம்.
இபுறாகீம் நபி
உலுல் அஜ்ம்களில் ஒருவர்
உலுல்
அஜ்ம் உறுதி மிக்க நபிமார்கள் என ஐந்து நபிமார்கள் குறிப்பிடப் படுகிறார்கள்
1.
நூஹ் அலை
2.
இபுறாகீம் அலை
3.
மூஸா அலை
4.
ஈஸா அலை
5.
முஹ்ம்மது நபி
(ஸல்
உலுல் அஜ்ம் என்றால் சத்திய சன்மார்க்கத்தின் பிரச்சாரப் பயணத்தில்
மிக அதிகப்படியான சோதனைகளை எதிர் கொண்டவர்கள் என்று பொருள்.
திருக்குர்
ஆன் இந்த ஐவரையும் ஒன்றாக ஒரு வசனத்தில் குறிப்பிடுகிறது.
وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ
وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ
وَأَخَذْنَا مِنْهُمْ مِيثَاقًا غَلِيظًا)
இந்த ஐவரில் முதல் இடத்தில் முஹம்மது நபி (ஸல் அவர்களும் அடுத்த்தாக இபுறாகீம் அலை அவர்களும் இடம் பெறுகிறார்கள்
وأولي العزم إطلاقاً هو سيدنا محمد -عليه الصلاة والسلام- اتفاقاً، ثم
إبراهيم ثم موسى عليهما السلام، واختلفوا في التفضيل بين نوح وعيسى عليهما السلام.
இபுறாகீம் அலைஅவர்களின்
மன உறுதி அசாத்தியமானது,
சிலை வணக்கத்திற்கு
எதிராக தந்தையிடமே வாதம் செய்தார். தவறை உறுதியாக சுட்டிக் காட்டினார்.
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ
أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ(74)
சிலைகளை விமர்ச்சிக்க
வேண்டாம் என மக்கள் அவரை எச்சரித்தனர். மிக அற்புதமாக பதிலளித்தார்.
நீங்கள் அல்லாஹ்வையே
பயப்படாத போது எந்த ஆதரமும் அற்ற சிலைகளுக்கு நான் ஏன் பயப்பட வேண்டும் என்றார்
وَحَاجَّهُ قَوْمُهُ قَالَ أَتُحَاجُّونِي فِي
اللَّهِ وَقَدْ هَدَانِي وَلَا أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِ إِلَّا أَنْ يَشَاءَ رَبِّي
شَيْئًا وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا أَفَلَا تَتَذَكَّرُونَ(80)وَكَيْفَ أَخَافُ
مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُمْ بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ
بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(81)
அவரது மன உறுதி
அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. கருத்துக்களை புரிந்து கொள்ள முயற்சிக்காத மக்களுக்கு
காட்சி வடிவில் புரிய வைக்க முயற்சிக்கிறார்.
إِذْ
قَالَ لأَبِيهِ وَقَوْمِهِ مَا هَذِهِ التَّمَاثِيلُ الَّتِي أَنْتُمْ لَهَا عَاكِفُونَ،
قَالُوا وَجَدْنَا آبَاءَنَا لَهَا عَابِدِينَ، قَالَ لَقَدْ كُنتُمْ أَنْتُمْ وَآبَاؤُكُمْ
فِي ضَلالٍ مُبِينٍ، قَالُوا أَجِئْتَنَا بِالْحَقِّ أَمْ أَنْتَ مِنْ اللاعِبِينَ،
قَالَ بَل رَبُّكُمْ رَبُّ السَّمَاوَاتِ وَالأَرْضِ الَّذِي فَطَرَهُنَّ وَأَنَا عَلَى
ذَلِكُمْ مِنْ الشَّاهِدِينَ، وَتَاللَّهِ لأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَنْ تُوَلُّوا
مُدْبِرِينَ فَجَعَلَهُمْ جُذَاذاً إِلا كَبِيراً لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ،
قَالُوا مَنْ فَعَلَ هَذَا بِآلِهَتِنَا إِنَّهُ لَمِنْ الظَّالِمِينَ، قَالُوا سَمِعْنَا
فَتًى يَذْكُرُهُمْ يُقَالُ لَهُ إِبْرَاهِيمُ، قَالُوا فَأْتُوا بِهِ عَلَى أَعْيُنِ
النَّاسِ لَعَلَّهُمْ يَشْهَدُون، قَالُوا أَأَنْتَ فَعَلْتَ هَذَا بِآلِهَتِنَا يَاإِبْرَاهِيمُ،
قَالَ بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا فَاسْأَلُوهُمْ إِنْ كَانُوا يَنطِقُونَ، فَرَجَعُوا
إِلَى أَنفُسِهِمْ فَقَالُوا إِنَّكُمْ أَنْتُمْ الظَّالِمُونَ ثُمَّ نُكِسُوا عَلَى
رُءُوسِهِمْ لَقَدْ عَلِمْتَ مَا هَؤُلاءِ يَنطِقُونَ، قَالَ أَفَتَعْبُدُونَ مِنْ
دُونِ اللَّهِ مَا لا يَنفَعُكُمْ شَيْئاً وَلا يَضُرُّكُمْ، أُفٍّ لَكُمْ وَلِمَا
تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ أَفَلا تَعْقِلُونَ،
அவரது உறுதி
மிக்க நடவடிக்கைகள் சிலை வணங்குவதில் இலயித்து சிந்தனையை இழந்த மக்களுக்கும் , அவர்களை
ஆட்சி செய்து கொண்டிருந்த அரசனுக்கும் கோபத்தை ஏற்படுத்துகிறது. தனது கருத்துக்களை
முன் வைத்த அதே உறுதியோடு மன்னனின் எதிர்ப்பையும் எதிர் கொண்டார்.
· கிமு 2019 லிருந்து சுமார் 400 ஆண்டுகளாக இராக்கை ஆட்சி செய்தஅன்றைய இராக்கிய முரட்டு மன்னன் நம்ரூது அவரை நெருப்பில் போட உத்தரவிட்டான்,
அந்த
நெருப்புக் குண்டத்திற்கே தனி வரலாறு உண்டு.
· أنهم شرعوا يجمعون
حطباً من جميع ما يمكنهم من الأماكن،
· فمكثوا مدة يجمعون
له،
· أن المرأة منهم
كانت إذا مرضت تنذر لئن عوفيت لتحملن حطباً لحريق إبراهيم.
· ثم عمدوا إلى جوبة
عظيمة، فوضعوا فيها ذلك الحطب وأطلقوا فيه النار
· ثم وضعوا إبراهيم عليه السلام في كفة منجنيق
· صنعه لهم رجل من الأكراد يقال له "هزن"
· وكان أول من صنع المجانيق، فخسف الله به الأرض، فهو
يتجلجل فيها إلى يوم القيامة.
· عن أبي هريرة قال قال: صلى الله عليه وسلم "لما
ألقي إبراهيم في النار قال: اللهم إنك في السماء واحد وأنا في الأرض واحد أعبدك".
· بعض السلف أن جبريل عرض له في الهواء فقال: يا إبراهيم
ألك حاجة؟ فقال أمّا إليك فلا
· ثم أخذوا يقيدونه ويكتفونه وهو يقول: لا إله إلا أنت
سبحانك رب العالمين، لك الحمد ولك الملك، لا شريك لك.
ألقوه
منه إلى النار، قال: حسبنا الله ونعم الوكيل
தனது
மன உறுதியால் நெருப்புக் குண்டத்திற்குள் விழத்தயாரான இபுறாகீம் அலை அல்லாஹ்வின் உதவியை
தவிர வேறு எந்த உதவியையும்
எதிர்பார்ப்பவராக இருக்கவில்லை.
அவரது மன உறுதி
வீண் போகவில்லை. தக்க பலனை அது கொடுத்தது. உலக வரலாற்றின் தனிச் சிறப்பு மிக்க பாதுகாப்பையும்
ஆதரவையும் அவர் பெற்றார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவருக்கு கிடைத்த பாதுகாப்பு தொடர்ந்து
பேசப்படக் கூடியதாயிற்று.
இபுறாகீம் அலை
அவர்கள் ஜிப்ரயீல் அலை அவர்களது உதவியை மறுத்து விட்ட போது மழையின் மலக்கு அல்லாஹ்
தனக்கு உத்தரவிடுவான் என்று எதிர்பார்த்தார். மழை பொழிந்து அந்த கடும் நெருப்பை அணைக்க
தயாரானார்.
ஆனால் அல்லாஹ்
நேரடியாக தானே நெருப்புக்கு உத்தரவிட்டான்.
يَانَارُ
كُونِي بَرْداً وَسَلاماً عَلَى إِبْرَاهِيمَ
மனித வரலாற்றில்
மறக்க முடியாத இறை கட்டளை இது.
சுடு நெருப்பு
இதம் தரும் குளிராக மாறியது,
இபுறாகீம் நபியின்
அந்த நெருப்பு மட்டுமல்ல அகில உலகத்திலும் நெருப்பு வேலை செய்யவில்லை என வரலாறு கூறுகிறது.
· وقال كعب الأحبار: لم ينتفع أهل الأرض يومئذ بنار، ولم
تحرق منه سوى وثاقه.
இபுறாகீம்
நபியின் மன உறுதி ஒரு
இயற்கையையே மாற்றியது.
மட்டுமல்ல
திருந்தாத அவரது தந்தையே திருந்தினார்.
தண்டனையே
அவருக்கு பெரும் சுகமளித்தது.
· فعن أبي هريرة أنه قال: أحسن كلمة قالها أبو إبراهيم
إذ قال لما رأى ولده على تلك الحال: نعم الرب ربك يا إبراهيم!
· وعن المنهال بن عمرو أنه قال: أخبرت أن إبراهيم مكث
هناك إما أربعين وإما خمسين يوماً،
· وأنه قال: ما كنت أياماً وليالي أطيب عيشاً إذ كنت فيها.
ووددت أن عيشي وحياتي كلها مثل إذ كنت فيها
அல்லாஹ்வின்
மீதான நம்பிக்கையும் அதில் அடியார்கள் காட்டும் உறுதியும் ஒரு போதும் வீணாகாது.
இபுறாகீம் நபிக்கு
ஆதரவளித்த இறைவனின் உத்தரவு அதே உறுதியோடு வாழ்கிற நல்லடியார்களுக்கும் உதவியிருக்கிறது,
இராக்கின் கவர்ணராக
இருந்த கடும் போக்கு கொண்ட ஹஜ்ஜாஜ் பின் யூசுப் ஒரு பெரிய மாளிகையை கட்டி அதைப் பார்க்க
வருமாறு பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த மாளிகையை பிர் அவ்னின் மாளிகை எனக்
கூறினார் மிகச் சிறந்த தாபிஈயான ஹஸனுல் பஸரீ (ரஹ் ) அவர்கள்.
ஹஜ்ஜாஜ் ஹஸனுல்
பஸரீ அவர்களுக்கு அரச தர்பாரிலேயே மரண தண்டனை வழங்கப்படும் என அறிவித்தார்.
ஹஸனுல் பஸரீ
ரஹ் அவர்கள் ஏதோ ஓதிக் கொண்டே அரச மாளிகைக்குள் நுழைவதை காவலாளி பார்த்தார்.
ஹஸனுல் பஸரீயை
கண்டதும் கோபித்துக் கொண்டிருந்த ஹஜ்ஜாஜின் முகம் மாறியது, குரல் தணிந்த்து. ஹஸனுல்
பஸரீயை வரவேற்று தன் அருகே அமர வைத்து சில சட்டங்களுக்கு விளக்கம் கேட்டு விட்டு மரியாதையாக
அனுப்பி வைத்தார்.
வாயில் காவலாளி
ஹஸனுல் பஸரியை சந்தித்து கேட்டார். நீங்கள் வருவதற்கு முன் நிலைமை வேறாக இருந்தது.
வந்த பிறகு வேறாக மாறிவிட்டது நீங்கள் என்னவோ
ஓதிக் கொண்டு வந்த்தை நான் கவனித்தேன் என்ன ஓதீனீர்கள் என்று கேட்டார்
ஹஸனுல் பஸரீ
ரஹ் அவர்கள் கூறினார்கள். நம்ரூதின் நெருப்பை குளிர வைத்த அல்லாஹ்வின் உத்தரவை ஓதினேன்
இதே போன்ற தொரு
நிகழ்வு சஹாபாக்களின் காலத்திலேயே நடந்ததுண்டு
அபூ மூஸலிம்
அல் கவ்லானி பெருமானாரின் காலத்தில் வாழ்ந்தார். பெருமானாரைச் சந்திக்க முடியவில்லை
, சிறந்த முஸ்லிமாக இருந்தார். பெருமானாருடைய வபாத்திற்குப் பிறகு அஸ்வது என்பவர் தன்னை
நபி என்று பிரகடணப்படுத்தி தனக்கென ஒரு கூட்டத்தை அமைத்துக் கொண்டு செயல் பட்டான்.
அவனை அபூ முஸ்லிம் எதிர்த்தார். அதனால் அபூமுஸ்லிமை நெருப்புக் குண்டத்தில் தள்ளினான்
அஸ்வது. ஆனால் நெருப்பிலிருந்து எந்த தீங்கும் இல்லாமல் அபூ முஸ்லிம் வெளியேறினார்ர்.
அவரும்
يَانَارُ
كُونِي بَرْداً وَسَلاماً عَلَى إِبْرَاهِيمَ
என்ற வசனத்தையே
ஓதினார்.
அவர் மதீனாவிற்கு
வந்த போது அவரை வரவேற்று அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கு நிகராக உட்கார வைத்த உமர்
ரலி அவரை முத்தமிட்டார் .
யா அல்லாஹ்
முஸ்லிம்களிலும் இபுறாகீம் நபியை போல ஒரு வரை காட்டாமல் என்னை மரணிக்கச் செய்து விடாதே
என்ற உமர் ரலி அவர்கள் பிரார்த்தனை நிறைவேறியது.
ஈமான் கொண்ட
பிறகு மன உறுதியோடு நடந்து கொள்கிறவர்களுக்கு அல்லாஹ்வின் மகத்தான உதவி கிடைக்கிறது
என்பதற்கான சான்றுகள் இவை.
கடும் சோதனைகளுக்கு
ஆளாகி நிற்கிற முஸ்லிம் சமுதாயத்திற்கு இன்று அதிகமான மன உறுதி தேவைப்படுகிறது.
அல்லாஹ்வின் மீது
முஸ்லிம்கள் கொண்டுள்ள ஈமானானது எத்தகைய சோதனைகளையும் மன உறுதுயோடு எதிர் கொள்ளும்
சக்தியை தரக்கூடியது.
அல்லாஹ் இபுறாகீம்
நபியை வாழ்த்துகிற முஸ்லிம் சமுதாயத்திற்கு அவர்களது வாழ்க்கைப் பண்பை தந்தருள்வானாக!
(மினா கூடாரத்திலிருந்து
அப்துல் அஜீஸ் பாக்கவி)
No comments:
Post a Comment