வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 07, 2017

பொறுப்பற்ற செயல்கள்

இஸ்லாம் முஸ்லிம்களுக்கு நன்மைக்கான பல்வேறு நடவடிக்கைகளை பழக்கப்படுத்தியிருக்கிறது.
1.   முஸ்லிம்கள் இனவாதம் பேசக்கூடாது.
இனவாதம் என்றால் என்ன ?
குடும்பம் நிறம், மொழி, நாடு என்ற வகையில் தங்களை உயர்ந்தவர்களாக கருதிக் கொள்வது. அதே அடிப்படையில் தாங்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்துவது.
இப்படி  இனவாதம் பேசுகிறவர்களும் அவர்களுக்கு உதவுகிறவர்களும் கிணற்றில் விழும் ஒட்டகையின் வாலை இறுகப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று பெருமானார் (ஸல்) கூறினார்கள்.
وعن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال من نصر قومه على غير الحق فهو كالبعير الذي ردي فهو ينزع بذنبه . رواه أبو داود
 وعن  واثلة بن الأسقع قال قلت يا رسول الله ما العصبية ؟ قال أن تعين قومك على الظلم رواه أبو داود . 
وعن  جبير بن مطعم أن رسول الله صلى الله عليه وسلم قال ليس منا من دعا إلى عصبية وليس منا من قاتل عصبية وليس منا من مات على عصبية . رواه أبو داود . 

என்ன அருமையான உவமை ? எத்தகைய ஆழ்ந்த தத்துவம் ?
)இது இஸ்லாமின் தனித்துவம். நாம் இதை அழுத்தமாக கடை பிடிக்க வேண்டும்.(
2.   ஒற்றுமைக்கான வழிமுறைகளை எதார்த்தமயமானதாக ஆக்கியிருக்கிறது. எந்த தலைவரும் குறையே இல்லாதவறாக இருக்க முடியாது. ஒரு குறையைச் சொல்லி தலைமை விட்டு விலகி விட வேண்டாம் என மார்க்கம் அறிவுறுத்தியிருக்கிறது.
இந்த வகையில் மார்க்கம் முஸ்லிம்களை பழக்கப்படுத்தியுள்ள இன்னொரு முக்கிய அம்சம்
3.   முஸ்லிம் உம்மதில் ஒவ்வொரு தனி நபரும் தனக்கு சமுதாய  கூட்டுப் பொருப்புக்களும் சில உண்டு என்பதை உணர வேண்டும்.
அவற்றை அவர் கடை பிடிக்க வேண்டும். தவறினால் அனைவரும் குற்றவாளிகளாகிவிடுவர்.
இதை பர்ளு கிபாயா என்று சட்ட அறிஞர்கள் வகைப்படுத்துவார்கள்.
ஒரு நன்மையை யாருமே செய்யாவிட்டால் அனைவருமே குற்றவாளிகளாகிவிடுகிறார்கள்
இதற்கு எதிர் தரப்பில் இன்னொரு கருத்தையும் முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.
4.   நாம் தனிப்பட்டு செய்கிற செயல்களால் மொத்த உம்மத்தும் பாதிப்படைந்து விடக் கூடாது.  
அந்தச் செயல்கள் நன்மையைப் போலவே தெரிந்தாலும் கூட
உஹது யுத்த்த்தின் வழியாக முஸ்லிம் உம்மத்திற்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த மிகப் பெரும் பாடம் இது,
ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு ரமலான் பிறை 17 வெள்ளிக்கிழமை நடை பெற்ற பத்று யுத்த்த்தில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தான்.நமது குழந்தைகளுக்கு கூட இது தெரியும்.
ஹிஜ்ரீ மூன்றாம் ஆண்டு ஷவ்வால் பிறை 15 சனிக்கிழமை நடை பெற்ற உஹது யுத்தத்தில் ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வெற்றியையே கொடுத்தான். ஆனால் கிடைத்த வெற்றி சிறிது நேரத்தில் பறிபோனது.
காரணம் பெருமானார் (ஸல்) அவர்கள் மலைக்கனவாயை காவல் காப்பதற்காக நிறுத்தியிருந்த நபித்தோழர்களில் சிலர் பெருமானாரின் உத்தரவை சரியாக கவனிக்காமல் யுத்தம் முடிந்து விட்ட்து என்று கீழே இறங்கி வந்த்தே யாகும்.
ஒரு சிலரின் நடவடிக்கை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் மிகப் பெரிய சோகத்திற்குள் தள்ளியது.
70 சஹாபாக்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள்.
உஹது யுத்தத்தில் முஸ்லிம்கள் இழந்த்து சாமாணிய மனிதர்களை அல்ல. மகத்தான பெருமக்களை இழந்தோம்.
ஹம்ஸா ரலி அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் ரலி முஸ் அப் பின் உமைர் ரலி போன்ற முக்கியமான சஹாபாக்கள்  கொல்லப் பட்டிருந்தார்கள்.
ஹம்ஸா ரலி பெருமானாரின் சிறிய தந்தை என்று கூறப்பட்டாலும் அவருக்கும் பெருமானாருக்கும் ஓரிரு வயது வித்தியாசமே இருந்த்து. இருவரும் ஒன்றாக ஒரு பெண்மணியிடத்தில் பால் குடித்தார்கள். அதனால் பெருமானாரும் ஹம்சா ரலி அவர்களும் பால் குடிச் சகோதரர்களாக- அண்ணன் தம்பிகளாகவும் திகழ்கிறார்கள். பெருமானாருக்கு இருந்த ஒரே சகோதர் ஹம்ஸா (ரலி). பெருமானாரை அபூஜஹ்ல் திட்டிவிட்டான் என ஒரு பெண்மணி ஹம்ஸாவிடம் கூறீனார். அப்போதே பெருமானரை ஏற்று ஈமான கொண்டார். அப்போதிருந்து பெருமானாருக்கு பாதுகாப்பாக இருந்தார். பத்று யுத்தத்தில் முஸ்லிம்களின் வெற்றிக்கு ஹம்ஸா ரலி அவர்களின் தலைமையே காரணம் என என மக்காவின் காபிர்கள் நினைத்தனர். அதனாலேயே அவரை கொல்வதற்கென தனியாக ஆளை அழைத்து வந்தனர்.
கூலிக்கு அழைத்து வரப்பட்ட  வஹ்ஷீ (ரலி) ஒரு பாறையின் மறைவிலிருந்து ஈட்டியை எறிந்தார் ஹம்ஸா ரலி அவர்களின் தொப்புள் வழியாக பாந்த அந்த ஈட்டி அவரைச் சாய்த்தது. அவரை கொல்வதற்கு ஆளை அழைத்து வந்த ஹிந்தா (ரலி) ஹம்ஸா ரலி அவர்களின் இதயத்தைப் பிளந்து ஈரலை எடுத்து கடித்து துப்பினார். அவரது நரம்புகளை உருவி காதுக்கும் மூக்கிற்கும் வளையமாக அனிந்து கொண்டார்.    
அப்துல்லாஹ் பின் ஜஹ்ஸ் ரலி அவர்களின் மூக்கையும் காதுகளையும் தனியே வெட்டி எடுத்து ஒரு கயிற்றில் கோர்த்து வைக்கப்பட்டிருந்த்து.
அப்துல்லாஹ்பின் ஜஹ்ஷ் நபி அவர்களின் மைத்துனர். பெருமானாரின் துணைவி அன்னை ஜைன்ப் ரலி அவர்களின் சகோதரர். பெருமானாரின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதிகளில் ஒருவர்.
முஸ் அப் ரலி அவர்கள் மக்காவின் பெரும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளை. இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்காக  அனைத்தையும் துறந்தவர்.
அவரது உடலை கபனிட போதிய ஆடை இருக்க வில்லை. தலையை மூடினால் கால் வெளியே தெரிந்தது. காலை மூடினால் தலை வெளியே தெரிந்தது.
இஸ்லாமிய வரலாற்றின் மிகவும் துக்கமயமான நிகழ்வு அது.
உம்மத் நினைத்து நினைத்து அழும் வரலாறு இது. சஹாபாக்களே முஸ் அப் ரலிக்கு ஏற்பட்ட இந்நிலையை நினைத்து நினைத்து அழுவார்கள்.
يقول خبّاب بن الأرت:
[هاجرنا مع رسول الله صلى الله عليه وسلم في سبيل اله, نبتغي وجه الله, فوجب أجرنا على الله.. فمنا من مضى, ولم يأكل من أجره في دنياه شيئا, منهم مصعب بن عمير, قتل يوم أحد.. فلم يوجد له شيء يكفن فيه الا نمرة.. فكنا اذا وضعناها على رأسه تعرّت رجلاه, واذا وضعناها على رجليه برزت رأسه, فقال لنا رسول الله صلى الله عليه وسلم:" اجعلوها مما يلي رأسه, واجعلوا على رجليه من نبات الاذخر"..]..
 
இத்தனை சோகத்திற்கும் சில சஹாபாக்களின் தன்னிச்சையான நடவடிக்கையே காரணம்
உஹது யுத்த்தின் வரலாற்றை கால்ந்தோறும் முஸ்லிம் உம்மத் உற்று கவனிக்க வேண்டும் அந்த நிகழ்வுகளையும் விளைவுகளையும் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.    
ஆலு இம்ரான் அத்தியாயத்தின் 60 வசனங்கள் உஹது யுத்தத்தின் தாக்கத்தை பேசுகின்றன.  
பத்று யுத்த்தில் முஸ்லிம்களுக்கு செய்த உதவியை அல்லாஹ் அப்போது சொல்லிக் காட்டவில்லை. உஹது யுத் தத்தின் தோல்விக்குப் பிறகே சொல்லிக் காட்டினான்.
உஹது யுத்த்த்தின் பெரும் பாடம்.
ஒரு சிலர் தன்னிச்சையாக செய்யும் செயல்கள் அவர்களை மட்டுமே பாதிப்பதில்லை. ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பாதித்து விடக் கூடும்.
அந்த பாதிப்பு மிகவும் கடுமையானதாகவும் இருக்கலாம்.
இப்போது பர்மாவில் வாளும் ரோகிங்க்யா முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோகமும் அத்தகையதே!
பர்மா ஒரு சின்ன நாடு, பங்களாதேஷின் எல்லையில் இருக்கிறது. பர்மாவில் புத்த மதத்தவர்கள் அதிகம்.
அங்கே கனிசமாக முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். பாரம்பரியமாக!
அவர்கள் ரோகிங்யா என்ற ஒரு தனி அடையாளம் கொண்டவர்கள்.
ஆனால் பர்மாவில் இருக்கிற புத்தமத வெறி கொண்ட மக்களும் இராணுவமும் அவர்களை பங்களாதேஷிகள் என்று கூறுகிறது. அவர்களை தங்களது குடிமக்கள் அல்ல என்றே கூறுகிறார்கள். குடிமக்களுக்கான எந்த அடையாளமும் வசதி வாய்ப்பும் அவர்களுக்கு கிடையாது, சொந்த நாட்டிலேயே மோசமான அகதிகளாக அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
உலகிலேயே மிகப் பரிதாபத்திற்குரிய் மக்கள் ரோகிங்கியாக்களே என நா சபையே கூறுகிறது.
கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்னாள் ரோகிங்கய முஸ்லிம்களுக்கு எதிரான பர்மீய இராணுவத்தின் கொடூர நடவடிக்கைகள் உலகிற்கு தெரியவந்தன. உலகமே கண்டித்தது.
ஆனால் எந்த பய்னும் நிகழ வில்லை. பர்மாவில் இருந்த இராணுவ அரசு மாறி ஜனநாயக அரசு வந்த பிறகும் பர்மீய மக்களின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை.
உலகில் ஜனநாயக உரிமைக்காக போராடி புகழ் பெற்ற ஆங்க்சியான் சூயீ வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கிறார் அவரும் கூட ரோகிங்கிய முஸ்லிம்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை.
இந்த நிலையில் கடந்த மாதக் கடைசியிலிரிந்து பர்மீய இராணுவம் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூர தாக்குதல்களை தொடுத்திருக்கிறது.
பச்சிளம் குழந்தைகளையும் பெண்களையும் கோடூரமாக் கொலை செய்கிறது, மக்கள் வாழ்விடங்களை தீ வைத்து கொளுத்துகிறது.
சில நூறு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து தங்களது நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.
கடந்த இரண்டு மூன்று நாட்களில் மட்டும் 35 ஆயிரம் பேர் பங்களாதேஷில் குடியேறியிருக்கிறார்கள் என பி பி சி கூறுகிறது.
ஊடங்கள் வழியாக நாம் பார்க்கிற காட்சிகள் இதயைத்தை கசக்கிப் பிழிகின்றன.  
(ஊடகங்களில் பொய்யாக சில பழைய புகைப்படங்களும் வீடியோக்களும் தவறான தகவலகளும் வருகின்றன. முஸ்லிம் இளைஞர்கள் வழக்கம் போலவே உணர்ச்சி வசப்பட்டு அவற்றின் உண்மை நிலை அறியாமல் பரப்பி வருகிறார்கள்)
பர்மிய முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க எந்த வல்லரசும் வரவில்லை.
அல்லாஹ்வை தவிர ஆதரிப்பார் யாருமற்றவரக்ளாக ரோகிங்கிய முஸ்லிமள் இருக்கிறார்கள்.
பங்களாதேஷ் நாடு ரோகிங்ய அகதிகளை ஆதரிக்கிறது. துருக்கிய அதிபர் எர்துகான் ரோகிங்கிய முஸ்லிம்களுக்காக பகிரங்கமாக குரல் கொடுக்கிறார். உதவிகளைச் செய்கிறார். நேரில் சென்று சந்திக்கிறார்.
உலகம் முழுவதிலும் முஸ்லிம்களின் நிலை பரிதாபமாக இருக்கிறதும் அதிலும் மிக மிகப் பரிதாபத்திற்குரியதாக ரோகிங்க்ய முஸ்லிம்களின் நிலை இருக்கிறது,
அல்லாஹ் ரோகிங்கிய முஸ்லிம்களைப் பாதுகாப்பானாக! அவர்களது சிக்கல்களை சீக்கிரமாக தீர்த்து வைப்பானாக! முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடுகிறவர்களின் சதிகளை முறியடிப்பானாக!
அதே நேரத்தில் இந்த தாக்க்குதலுக்கு பின்னணியாக அமைந்த காரணம் என்ன என்பதையும் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
ரோகிங்கிய முஸ்லிம்களின் உரிமைகளுக்கா ஆயுதம் தாங்கிப் போராடுகிற ஒரு குழு பர்மீய இராணுவ முகாம் ஒன்றை தீடீரென தாக்கி 16 இராணுவ வீர்ர்களை கொலை செய்திருக்கிறது. \\
அதற்கு பழி வாங்கும் நாடவடிக்கையாகவே இத்தகைய கொடூர தாக்குதல்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக நடக்கின்றன.
முஸ்லிம்களின் ஒரு குழு தமது நடவடிக்கைகளுக்கு என்ன தான் நியாயம் சொல்லிக் கொண்டாலும் அந்த நடவடிக்கையால் ஏற்படும் விலைவுகளுக்கும் அதுவே பொறுப்பேற்க வேண்டும்.
இராணுவம் கொடூரமாக நடந்து கொள்ளக் கூடியது என்று தெரிந்தும் அதற்கு எதிரான தாக்குதலை தொடுப்பது, என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என ரோகிங்கியா போராளிகள் ஏன் மறந்தார்கள் எனபது தெரியவில்லை
அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பானாக
உலகின் பல பகுதிகளிலும் இப்படித்தான் முஸ்லிம்களின் போராளிகள் என்று சொல்ல்கிக் கிறவர்கள் தங்களது நடவடிக்கையால் சமுதாயத்திற்கு பெருத்த சங்கடங்களை விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இந்த சங்கடங்களை முஸ்லிம்கள் தாங்கிக் கொள்ள வேண்டியது அவர்களது கடமை என்று நினைக்கிறார்கள்
ஒரு சமுதாயத்திற்காளி போராளி உண்மையில் தன்னால் சமுதாயம் சங்கடப்பட்டு விடக்கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
சமுதாயம் மனசஞ்சலத்திற்கு கூட ஆளாகக் கூடாது என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது குணமாக இருந்தது.
மக்கா வெற்றிக்குப் பிறகு ஒரு நாள் ஆயிஷா ரலி அவர்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கஃபாவை இடித்து விட்டு அதன் பழைய அளவில்இபுறாகீம் நபியின் அஸ்திவாரத்தில் பெரிதாக கட்டவேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் உனது சமூக மக்கள் குப்ரிலிருந்து இப்போதுதான் இஸ்லாத்திற்கு வந்திருக்கிறார்கள். அவர்களது மனம் சஞ்சலப்படுமே என விட்டு விடுகிறேன் என்றார்கள்.   
சமுதாயப் போராளிகள் எவரும் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டிய விசய்ம் இது.
அல்லாஹ் ரோகிங்யா முஸ்லிம்களுக்கு நிலையான நல்லதொரு தீர்வை தந்தருள்வானாக! பர்மாவிலுள்ள புத்தமதத்தவர்களுக்கு ஹிதாயத்தை தருவானாக! முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களது திட்டங்களை அவர்களுக்கே எதிரானதாக அல்லாஹ் ஆக்கிவிடுவானாக! உறுதி மிக்க தலைமை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு தருவானாக! முஸ்லிம் இளைஞர்களுக்கும் சமுதாய போராளிகளுக்கும் சரியான சிந்தனையையும் வழிகாட்டுதலையும் தந்தருள்வானாக!

(ஜித்தாவிலிருந்து ஷார்ஜாஷார்ஜாவிலிருந்து கோயமுத்தூருக்கான விமானப் பயணத்தில் எழுதியது. இணைய வசதி கிட்டாத்தால் ஹதீஸ் ஆயத்துக்களை பதிவிட முடியவில்லை. ஆலிம்கள் தேடி எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு. )
மேலும் சில விரிவான தகவல்களுக்குமியான்மர் அல்லது ரோஹிங்க்யா முஸ்லிம்கள் என விக்கீபீடியாவில் காண்க!)


4 comments:

  1. சிரமமான நேரத்திலும் கூட உங்களின் இந்த அரியபணி மெய்சிலிர்க்க வைக்கிறது.அல்லாஹ் உங்களின் சேவைகளை பொருந்திக்கொள்வானாக....
    ஆமீன்...ஆமீன்

    ReplyDelete
  2. Enter your comment...பயணத்திலும் ஒரு அக்கரை.அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  3. جزاك اﷲ خيرا في الدارين
    تقبل اﷲ منا ومنكم غفراﷲ لنا ولكم
    بارك اﷲ في اموركم
    لا تنساني في دعاءكم

    ReplyDelete
  4. நலமான வாழ்வை தா அல்லாஹ்

    ReplyDelete