மனிதாபிமானம் மிக்க
வாழ்க்கைகு இஸ்லாம் கூறும் அடிப்படைகளில் ஒன்று
1.
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ மனிதர்களிடமிருந்து முகம் திருப்பிக் கொள்ளாதே
முஸ்லிம்களாகிய நாம் நமது வாழ்க்கையை
இந்த பண்பின் அடிப்படையில் சீர் செய்து கொள்ள வேண்டும்.
சமுதாயம் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிற நிலையிலும் மனிதாபிமானம் மிக்க வாழ்க்கைக்கு நாம் இன்னும் பழகிக் கொள்ளாமல் இருக்கிறோம்.
பிறரிடமிருந்து மனிதாபிமானத்தை இன்று அதிகம் எதிர்பார்க்கிற சமுதாயமாக நாம் இருக்கிறோம்.
அந்த மனிதாபிமானம் நமக்கு வேண்டாமா ?
இன்றைய முஸ்லிம் சமுதாயம் பணம் காசு நிறைய வைத்திருப்பது. அல்லது பதவியிலோ அதிகாரத்திலோ அல்லது நலல உத்தியோகத்திலோ இருப்பதை மரியாதையான வாழ்க்கை என்று சமுதாயம் இப்போதும் நினைக்கிறது.
நமது
சமூகச் சூழலில் இதற்குத்தான் இப்போது மரியாதையும் கிடைக்கிறது.
இவற்றைய
எல்லாம் நிமிட நேரத்தில் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய சூழ்நிலைகள் வேகமாக உருவாகி வருகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
அல்லாஹ்
பாதுகாப்பானாக!
எண்ணிப்
பாருங்கள்!
பர்மாவில்
முஸ்லிம்கள் மிகவும் செல்வாக்காக வாழ்ந்தார்கள்,
பர்மா
முஸ்லிம்களின்
செல்வச் செழிப்பிற்கான அடையாளம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருக்கிற முஸ்லிம் ஊர்களில் அறியலாம்.
இந்திய
விடுதலைப் போராட்டக் கால கட்டத்தில் பர்மா முஸ்லிம்கள் மிகப்பெரும் கொடையாளிகளாக இருந்தார்கள் என்பதையும்,. பர்மாவிலிருந்து கிடைக்கிற நிதி உதவியை இந்திய விடுதலைப் போர் அதிகம் சார்ந்திருந்தது என்பதையும் வரலாறு காட்டுகிறது.
1943 ஜுலை 2 – ஆம் தேதி சிங்கப்பூரில் ‘ஆஸாத்
ஹிந்த் சர்க்கார்’ (Azad Hind Government)
என்ற இந்திய தேசிய தற்காலச் சுதந்திர அரசை நிறுவிய
நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், அவ்வரசின் நிர்வாக செலவிற்காகவும்: ’ஆசாத்
ஹிந்த் ஃபவுஜ்’ என்ற
இந்திய தேசிய ராணுவத்தை நடத்துவதற்காகவும் ரிஸர்வ் பேங்க் ஒன்றை நிறுவினார்.
அவ்வங்கிக்கான நிதியை சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற கீழை நாடுகளில் திரட்டினார். அவ்வாறு
நிதி திரட்டும் கூட்டம் உன்றை பர்மாவின் தலைநகரான இரங்கூனில் கூட்டினார்.
கூடிஇருந்த அந்நகரத்து வியாபார பிரமுகர்களிடம் நேதாஜி பேசும்போது, “தேசவிடுதலைக்காகப்
போராடும் நம் இநிதிய தேசிய ராணுவத்திற்கு அள்ளி வழங்குங்கள்” – என்று
வேண்டுகோள் விடுத்தார். வருகைதந்த வியாபாரப் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடிப்
பேசி, “எங்கள்
வருமாணத்தில் 10 சதவிகிதத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு தொடர்ந்து
வழங்குகிறோம்” என்று அறிவித்தனர். இவ்வறிவிப்பைக் கேட்ட நேதாஜி
சற்று கோபத்துடன், தாய்நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தும் எங்கள்
வீரர்கள் ஐந்து சதவிகிதம் 10 சதவிகிதம் என்று கணக்குப் பார்த்தா சிந்துகின்றனர்? என்று
பேச, கூட்டத்திலிரந்து
தலையில் தொப்பி, தாடியுடன் முதியவர் ஒருவர் மேடையை நோக்கி வருகிறார்.
வந்தவர் நேதாஜியின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதை வாங்கிப் படித்த
நேதாஜியின் கண்களில் நீர் திரண்டது, அக்காகிதத்தில் அப்படி என்ன
தான் எழுதப்பட்டிருந்தது?
“ரங்கூன்
மாநகரில் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபார நிறுவனங்களை
இந்திய தேசிய ராணுவத்திற்காக நான் எழுதி வைக்கிறேன்”
– என்ற கொடை வாசகங்கள்
அக்காகிதத்தில் இடம் பெற்றருந்தன. அவ்வாசகங்களை எழுதிய கரங்களுக்குச்
சொந்தக்காரரான வள்ளல் முஹம்மது ஹபீப் என்ற அந்த முதியவரை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்
ஆரத்தழுவியவராக, இவர்தான் ஹிந்த் கே சேவக் (இந்தியாவின் சேவகர்) என்ற
பெருமிதத்துடன் அறிவித்தார்.**
அது
மட்டுமல்ல பிறகு எங்கு சென்ற போதும் 'நாட்டைப் பிடித்திருக்கும்
பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை' என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம்
சொல்லலானார்.
.
1982 க்குப் பிறகு பர்மாவில் ஏற்பட்ட மாற்றம் பர்மா முஸ்லிம்களை அகதிகளாக மாற்றி விட்டது.
இப்போது
பர்மாவில் முஸ்லிம்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது எனப்தை நாம் அறிவோம்.
பர்மாவில்
மட்டுமல்ல. உலகின் பணக்கார குடிமக்களாக இருந்த இராக்கியர்கள் நிலையும் அதுதான். இராக்கியர்கள் இப்போது சோதனைக் களத்தின் பலிகளாக இருக்கின்றனர்,
முஸ்லிம்
சமுதாயம் தற்போது நிராகரிப்பின் வலியை அனுபவித்து வருகிறது.
அவர்களது
இருப்பை மதிப்பாரில்லை. அவர்களது கருத்துக்கு முக்கியத்துவம் இல்லை. நாலா புறத்திலிருந்தும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களும் அநியாயமான பழிச் சொற்களும் அவமரியாதைகளும் வந்து விழுந்தவன்னம் இருக்கின்றன.
மனிதர்கள்
செல்வாக்கின் உச்சியில் பேயாட்டம் ஆடுவார்கள். அப்போது நல்ல விசயங்களை விளங்கிக் கொள்ளவோ தீயவற்றை திருத்திக் கொள்ளவோ நேரம் கிடைக்காது. அதற்கான சூழ்நிலையும் இருக்காது.
செல்வாக்கு
சரிந்து கிடக்கும் போது நிதானமாக யோசிக்கிற வாய்ப்புக் கிடைக்கும் அதற்கான புத்தியும் இருக்கும்.
முஸ்லிம்
சமுதாயம் தற்போது நல்ல விசயங்களை யோசித்து கை கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது,
உலகத்திடம் மனிதாபிமானத்திற்காக
கையேந்திக் கொண்டிருக்கிற நிலையில் மனிதாபிமானமிக்க நடவடிக்கைகள் குறித்து குர் ஆன்
கற்று த்தரும் பண்புகளை நாம் நினைவில் கொள்ளுவது பொருந்தும்.
மனிதாபிமானத்தின்
முக்கிய கோட்பாடு. மனிதர்கள் எல்லோரையும் மனிதர்களாக பார்க்க வேண்டும். யாரிடமிருந்தும்
முகந்திருப்பிக் கொள்ளக் கூடாது.
ولا تصعر خدك للناس
இரண்டு காரணங்களால்
மற்ற மனிதர்களிடமிருந்து முகத்தை நாம் திருப்பிக் கொள்கிறோம்.
1.
தற்பெருமை
2.
கோப தாபங்கள்
இந்த இரண்டு சூழ்நிலைகளையுமே
உள்ளடக்கி இந்த வசனம் பேசுகிறது என திருக்குர் ஆனிய விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்
பிற மனிதகளை சந்திக்கிற
போது அவர்கள் யாராக இருந்தாலும் தொழிலாளியாக குடும்பத்தின் சாமாணிய உறுப்பினர்களாக
நம்மிடம் உதவி நாடி வந்திருப்பவராக அல்லது நமக்கு அறிமுகமே இல்லாதவராக இருந்தாலும்
கூட புன் முறுவலுடனும் கரிசனமான பார்வையுடனும் உரையாடுவதும் உறவாடுவதுமே மனிதாபிமானமாகும்.
அவர்களை கண்டு
கொள்ளாமல் இருப்பது அல்லது பார்க்காமல் தவிர்ப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
அல்லாஹ்வையும்
தன்னையும் புரிந்து கொள்ளாதவர்களே இப்படி நடப்பார்கள்.
தற்பெருமை என்பது
அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனே அதற்கு தகுதி படைத்தவன்.
عَنِ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ ،
يَقُولُ : الْكِبْرِيَاءُ رِدَائِي ، وَالْعَظَمَةُ إِزَارِي ،
فَمَنْ نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا أَدْخَلْتُهُ النَّارَ " .
قال - صلى الله عليه
وسلم - : (
يحشر المتكبرون يوم القيامة أمثال الذر في صور
الرجال ، يغشاهم الذل من كل مكان ، فيساقون إلى سجن في جهنم يسمى بولس ، تعلوهم
نار الأنيار ، يسقون من عصارة أهل النار طينة الخبال ) رواه الترمذي
தன்னை
சரியாக உணர்ந்து கொள்ளாதவனே பெருமை அடிப்பான்.
·
எந்த ஒரு சிறந்தவனுக்கு மேலும் ஒரு சிறந்தவன் இருக்கிறான்.
·
அதே போல எந்த ஒரு சிறப்பும் நிரந்தரமானது அல்ல.
·
எந்த ஒரு தனி மனிதனின் வாழ்க்கையும் குறை அற்றது அல்ல. குறைகள்
வெளிப்படாதவரை சரிதான். வெளிப்பட்டு விட்டாலே கட்டியிருக்கிற வேட்டியும் காற்றில் பறந்து
விடும்.
எனவே தனது எதார்த்த
நிலையை உணர்கிற யாரும் பெருமை அடிக்க முடியாது.
மிகப்பெரிய
நன்மைகளை செய்திருப்பதாக நம்புகிறவர்கள் கூட பெருமைப் பட வழியில்லை
ஹழரத் அபூபக்கர்
சித்தீக் ரலி – மஸ்ஜிதுன்னபவியை விலை கொடுத்து வாங்கிக் கொடுத்தவர்.
ஹழரத் உமர்
பின் கத்தாப் ரலி – அல்லாஹ் அவரின் நாவின் வழி பேசுகிறான் என்று பாராட்டப் பெற்றவர்.
இத்தகைய பெருமக்களே
தங்களைப் பற்றி எந்த கணத்திலும் பெருமைப் பட்டுக் கொள்ளவில்லை
எனும் போது
மானுட உலகிற்கு எத்தகைய நன்மையை செய்து கொடுத்ததற்காகவும் பெருமைப் பட்டுக் கொள்ள இடமில்லை.
‘
ஜகாத் சதகா
கொடுக்கிற , பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்கிற, அல்லது பள்ளிவாசல் கட்டிக் கொடுத்த அல்லது
வக்புகள் செய்த அல்லது பெரிய ஆலிமாக இருக்கிற யாருக்கும் பெறுமைக்கான எந்த காரணமும்
சொந்தமல்ல,
தங்களை விட
சாமாணியமாக இருக்கிற யாரையும் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல உரிமையோ தகுதியோ
இல்லை.
அதே போல நமக்கும்
பிற சகோதரனுக்கும் இடையே ஏதேனும் கோப தாபங்கள் இருந்தால் , அதன் பிறகு அவர்கள் நம்மை
நாடி வருகிற போது முகத்தை திருப்பிக் கொள்வதும் மனிதாபிமானமல்ல.
عن مجاهد في قوله: (وَلا
تُصَعِّرْ خَدَّكَ للنَّاسِ) قال: هو الرجل بينه وبين أخيه حنة فيعرض عنه.
இந்த உலகில் எத்தனை நாள் வாழ்ந்து விட போகிறோம். எத்தனை நாள் நமது ஜம்பம் எடுபடக்கூடும் என்று யோசிக்க வேண்டும். மிக கடுமையான எதிரிகள் கூட நிமிட நேர தொடர்பில் சுமூகமாகியிருக்கிறார்கள் என்பதை நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த உலகில் வெறுப்பின் அடிப்படையில் அல்ல அன்பின் அடிப்படடயில் வாழவே பிறந்திருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும். இதற்காக விட்டுக் கொடுப்பதற்கு
மார்க்கத்தில் அதிகம் நன்மை இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
: قال رسول الله ـ صلى
الله عليه وسلم
والذي
نفسي بيده، لا تدخلون الجنة حتى تؤمنوا، ولا تؤمنون حتى تحابوا، ألا أدلكم على ما
تتحابون به؟ افشوا السلام بينكم ) رواه الترمذي
.
وعن أبي هريرة ـ رضي الله عنه ـ قال: قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ: ( تفتَح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس، فيُغفر لكل عبد مسلم لا يشرك بالله شيئاً، إلا رجلاً كانت بينَه وبين أخيه شحناء، فيقال: أنظِروا هذين حتى يصطلحا، أنظروا هذين حتى يصطلحا ) رواه مسلم .
وعن أبي هريرة ـ رضي الله عنه ـ قال: قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ: ( تفتَح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس، فيُغفر لكل عبد مسلم لا يشرك بالله شيئاً، إلا رجلاً كانت بينَه وبين أخيه شحناء، فيقال: أنظِروا هذين حتى يصطلحا، أنظروا هذين حتى يصطلحا ) رواه مسلم .
قال الباجي: " يعني - أخروا الغفران لهما حتى يصطلحا ".
وعن أبي أيوب الأنصاري ـ رضي الله عنه ـ قال:قال رسول الله - صلى الله عليه وسلم -: ( لا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث يلتقيان فيعرض هذا ويعرض هذا، وخيرهما الذي يبدأ بالسلام ) رواه البخاري .
நல்லிணக்கத்தோடு
நடப்பதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் மார்க்கத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட
காரியங்களாகும்.
وقال الأوزاعي: " ما خطوةٌ
أحبُ إلى الله ـ عز وجل ـ من خطوة في إصلاح ذات البين، ومن أصلح بين اثنين كتب
الله له براءةً من النار
" .
மனிதாபி
மான வாழ்க்கையில் தற்பெருமை ஆகாது. அதற்கு மாற்றமாக பணிவும் கருணையும் எதார்த்தமான
செயல்பாடுகளில் பங்கேற்பதும் அவசியமாகும்.
மனித
குலத்தின் மகத்தான பெருமைக்குரிய பெருமானார் (ஸல்) அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை
வரலாறு காட்டுகிறது.
نبينا محمد - صلى الله عليه وسلم –
لذي كان يمر على الصبيان فيسلم عليهم ،
وكانت الأَمَةُ تأخذ بيده فتنطلق به حيث شاءت ،
وكان إذا أكل لعق أصابعه الثلاث ،
وكان يكون في بيته في خدمة أهله ،
ولم يكن ينتقم لنفسه قط ،
وكان يخصف نعله ، ويرقع ثوبه ، ويحلب الشاة لأهله ،
ويعلف البعير ،
ويأكل مع الخادم ،
ويجالس المساكين ،
ويمشي مع الأرملة واليتيم في حاجتهما ،
ويبدأ من لقيه بالسلام ،
ويجيب دعوة من دعاه ولو إلى أيسر شيء ،
وكان كريم الطبع ، جميل المعاشرة ، طلق الوجه ، متواضعاً في
غير ذلة ، خافض الجناح للمؤمنين ، لين الجانب لهم ،
وكان يقول: ( ألا أخبركم بمن يحرم
على النار ، أو بمن تحرم عليه النار ، على كل قريب هين سهل ) رواهالترمذي ،
ويقول : ( لو
دعيت إلى ذراع أو كراع لأجبت ، ولو أهدي إلي ذراع أو كراع لقبلت ) رواه البخاري ،
وكان يعود المريض ، ويشهد الجنازة ، ويركب الحمار ،
ويجيب دعوة العبد ،
فهذا هو خلق رسول الله - صلى الله عليه وسلم –
எத்தகைய பெரிய
எதிரியையும் நபி (ஸல்) அவர்கள் நேரில் சந்தித்தார்கள். யாரிடமிருந்தும் முகம் திருப்பிக்
கொள்ள வில்லை,
அரபு நாட்டின்
பேரரசராக உயர்வு பெற்ற நிலையிலும்.
ஒரு நன்மைக்காக
பெருமானார் (ஸல்) அவர்கள் முகம் திருப்பிய போதும் அல்லாஹ் அதை ஏற்கவில்லை.
عَبَسَ وَتَوَلَّى أَن جَاءَهُ الأَعْمَى
முகந்திருப்பிக்
கொள்ளாதே என்பது பிறரை விட்டு முகத்தை திருப்பிக் கொள்வதை மட்டும் அல்ல. அவர்களது தேவையை
மற்றவர்களின் வசதியை கண்டு கொள்ளாத நடவடிக்கைகளுக்கும் பெருந்தும்.
பொது இடங்களில்
அடுத்தவரின் இருக்கையை ஆக்ரமிப்பது
வாகணங்களை நிறுத்துகையில்
மற்றவர்களின் வசதியை பெருட்படுத்தாமல் நடப்பது .
வரிசையில் காத்திருக்காமல்
முந்திச் செல்வது.
தனக்குப் பின்னால்
அடுத்தவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை பொருட்படுத்தாமல் இருப்பது.
அடுத்தவர்களின்
உணர்வுகளுக்கு மதிப்பளிக்க பெருமானார் (ஸல்) அவர்கள் நிறைய அறிவுறுத்தியுள்ளார்கள்.
عن جابر رضي الله عنه قَالَ: قَالَ النبيُّ صلى الله
عليه وسلم: «مَنْ أكَلَ ثُومًا أَوْ بَصَلًا فَلْيَعْتَزلنا، أو
فَلْيَعْتَزِلْ مَسْجِدَنَا». متفق عَلَيْهِ.
ஜும் ஆ நாளில் மக்களின் தோள்களைத் தாண்டிச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்
ஜகாத் கொடுத்து
விட்டு சொல்லிக் காட்டக் கூடாது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا
صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ
அடுத்தவர்களின்
உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய் இடங்களில் அவற்றை புறக்கணிக்கும் காரியங்கள் அனைத்தும்
மக்களிடமிருந்து முகந்திருப்பிக் கொள்ளுதல் என்பதில் அடங்கும், அவை அனைத்தும் மனிதாபிமானற்ற
செயல்களாகும்.
மக்களை விட்டு
விலகி வாழ்வதும் அவர்களை விட்டு முகந்திருப்பிக் கொள்வதாகும்.
பணம் அல்லது பதவி
வருகிற போது மக்களோடு கலந்திருப்பதை பலரும் தவிர்த்து விடுகிறார்கள்.
முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்திகளில் ஒருவராக இருந்த போதும் மக்களோடு
கலந்திருப்பதை அவர்களது இன்ப துன்பங்களில் பங்கேற்பதையே வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
فقد كان عليه الصلاة والسلام على سفرٍ مع أصحابه،
فأمَرَهم بِطهو شاة، فقال أحدهم: عليَّ ذبحُها، وقال آخر: عليَّ سلخُها، وقال
ثالث: عليَّ طَبخُها، فقال الرسول -صلّى الله عليه وسلّم-: "وَعَلَيَّ جمع
الحطب"، فقالوا: يا رسول الله نكفيك العمل، فقال: عَلِمتُ أَنَّكُم تكفونني،
ولكنّ أكره أَن أتَميَّز عليكم، فإنّ الله سبحانه وتعالى يكره من عبده أن يراه
مُتَميِّزاً بين أَصحابه".
فقد أتى صحابيّ قد أُصِيب في عهد الرسول -صلّى الله عليه وسلّم- في ثِماره عندما ابتاعُها فَخَسِرَ بِها وَكثُرَ دينه، فقالل رسول الله -صلّى الله عليه وسلّم- لأصحابه: "تصدّقوا عليه"، فتصدّق الناس عليه، إلا أنّ ذلك لم يكفيه لِسدّ دينه، فقال رسول الله -صلّى الله عليه وسلّم- لِغُرمانِه: خُذُوا ما وجدتم، وَليس لكم إلّا ذلك".
وعن سهل بن حنيف - رضي الله عنه ـ قال : ( كان رسول الله - صلى الله عليه وسلم - يأتي ضعفاء المسلمين ويزورهم ، ويعود مرضاهم ، ويشهد جنائزهم )(الحاكم
فقد أتى صحابيّ قد أُصِيب في عهد الرسول -صلّى الله عليه وسلّم- في ثِماره عندما ابتاعُها فَخَسِرَ بِها وَكثُرَ دينه، فقالل رسول الله -صلّى الله عليه وسلّم- لأصحابه: "تصدّقوا عليه"، فتصدّق الناس عليه، إلا أنّ ذلك لم يكفيه لِسدّ دينه، فقال رسول الله -صلّى الله عليه وسلّم- لِغُرمانِه: خُذُوا ما وجدتم، وَليس لكم إلّا ذلك".
وعن سهل بن حنيف - رضي الله عنه ـ قال : ( كان رسول الله - صلى الله عليه وسلم - يأتي ضعفاء المسلمين ويزورهم ، ويعود مرضاهم ، ويشهد جنائزهم )(الحاكم
وعن أنس - رضي الله عنه ـ قال : ( كان رسول الله - صلى الله عليه وسلم - يزور الأنصار، فيسلم على صبيانهم ، ويمسح برؤوسهم ، ويدعو لهم )(النسائي) .
وقال قرة بن إياس - رضي الله عنه - : ( كان
نبي الله - صلى الله عليه وسلم - إذا جلس يجلس إليه نفر من أصحابه ، وفيهم رجل له
ابن صغير يأتيه من خلف ظهره فيقعده بين يديه ، فهلك (مات) ،
فامتنع الرجل أن يحضر الحلقة ، لذكر ابنه ، فحزن
عليه ، ففقده النبي - صلى الله عليه وسلم - فقال : مالي لا أرى فلانا؟ ، قالوا :
يا رسول الله ، بنيه الذي رأيته هلك . فلقيه النبي - صلى الله عليه وسلم - فسأله
عن بنيه ، فأخبره أنه هلك ، فعزاه عليه ، ثم قال : يا فلان أيما كان أحب إليك : أن
تمتع به عمرك ، أو لا تأتي غداً إلى باب من أبواب الجنة إلا وجدته قد سبقك إليه
يفتحه لك؟ ، قال : يا نبي الله بل يسبقني إلى باب الجنة فيفتحها لي لهو أحب إليَّ
، قال : فذاك لك ، فقالوا : يا رسول الله أله خاصة أم لكلنا ؟ ، قال : بل لكلكم )(النسائي)
عن محمد بن جبير قال: أخبرني جبير
بن مطعم : ( أنه
بينما يسير هو مع رسول الله ـ صلى الله عليه وسلم ـ ومعه الناس مقفلة من حنين ،
فعلقه الناس يسألونه ، حتى اضطروه إلى سمرة فخطفت رداءه ، فوقف النبي ـ صلى الله عليه
وسلم ـ فقال : أعطوني ردائي ، لو كان لي عدد هذه العضاه نعماً لقسمته بينكم ، ثم
لا تجدوني بخيلا ولا كذوبا ولا جبانا )(البخاري
.
)مقفلة : راجعة من حنين ، السَّمُر : شجر طويل قليل الظل صغير الورق قصير الشوك ، الرداء: ما يوضع على أعالي البدن من الثياب ، العضاه : نوع من الشجر عظيم له شوك ، النعم : الإبل والشاء ، (
)مقفلة : راجعة من حنين ، السَّمُر : شجر طويل قليل الظل صغير الورق قصير الشوك ، الرداء: ما يوضع على أعالي البدن من الثياب ، العضاه : نوع من الشجر عظيم له شوك ، النعم : الإبل والشاء ، (
மனிதாபி
மானத்தின் முதல் படி மக்களோடு
சகஜாக பழகுவதும். அவர்கள் அனைவரையுமே மனிதர்களாக
பார்ப்பதும் அவர்களை விட்டு முகம்
திருப்பிக் கொள்ளாமல் இருப்பதுமாகும்.
இன்று
உலகம் நம்மை கண்டு முகந்திருப்பிக்
கொண்டிருக்கும் நிலையை உணர்ந்து நமது
வாழ்க்கையில்
கணவன் மனைவி
பெற்றோர் பிள்ளைகள்
முதலாளி தொழிலாளர்கள்
தலைவன் தொண்டர்கள்
ஒரு சமூகம்
மற்ற சமூகத்திடம்
சில உறவினர்களிடம்
சில நண்பர்களிடம்
மன்னிப்பு கோருகிற
பழைய எதிரிகளிடம்
முகந்திருப்பிக்
கொள்கிற நடவடிக்கையை தவிர்க்க
வேண்டும் .
நாம், மனிதர்கள்
என்ற அருமையை புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்
கிருபை செய்வானாக! ரோகிங்கியா முஸ்லிம்களின் அகோரமான நிலையை பார்க்காமல் உலகம் முகம் திருப்பிக் கொண்டிருக்கிறது. ஐநா செயலாளர் அவர்களின் துன்பத்தை பற்றி பேசியதையே பெரிய சாகசமாக பதிரிகைகள் காட்டுகின்றன. ஆட்சியாளர்களின் உள்ளத்தில் அல்லாஹ் மானுட உணர்வை பதிப்பானாக! இந்தியா தன்னிடம் அடைக்கலமாகியிருக்கும் சுமார் 14 ஆயிரம் அகதிகளை 40 ஆயிரம் என்று பெருக்கிச் சொல்லி அவர்களை வெளியேற்ற துடிக்கிறது. அவர்கள் தீவிரவாதத்துடன் தொடர்புள்ளவர்கள் என்கிறது, அவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிறது, மனுஷத் தன்மையற்றவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார்கள். பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!!" என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் இந்திய மனித உரிமை ஆணையமும் ரோகிங்கியாக்களை திருப்பி அனுப்புவது மரணத்திற்கு சமானம் என்று மத்திய அரசிடம் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ் செவிடர்களை கேட்க வைக்கும் திறன் படைத்தவன்., ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களின் நாகரீகமற்ற நடவடிக்கைகளை அவர்களுக்கு உணரச் செய்வானாக! தவறான குறுகிய சிந்தனையிலிருந்து அவர்களுக்கு விசாலமான சிந்தனையை தந்தருள்வானாக!
அல்ஹம்து லில்லாஹ் சமூகத்திற்கு மிகவும் அவசியமான அவசரமான காலத்திற்கு ஏற்றமான செய்திகள்
ReplyDeleteEnter your comment...மிக அருமையான தகவல்
ReplyDeleteEnter your comment...அருமையான கருத்துக்கள். நம் வாழ்க்கையில் கடைபிடிக்க அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.ஆமீன்
ReplyDeleteஅல்ஹம்து லில்லாஹ் சமூகத்திற்கு மிகவும் அவசியமான அவசரமான காலத்திற்கு ஏற்றமான செய்திகள்
ReplyDeleteReply
அல்ஹம்துலில்லாஹ்
ReplyDelete