வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 18, 2018

சபரிமலை தடையும் இஸ்லாமிய விடையும்.


கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத் தில்  பதினெட்டு மலைகளுக்கு இடையே   சபரிமலையின் உச்சியில் ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது,  அடர்ந்த  காடுகளுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இறைவன் ஐயப்பனாக -பிரம்மச்சாரியாக -
உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதிக்குள்  பல கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தி மேற்கொள்ளப் படுகிற பயணம் என்பதால் கடவுளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிற பொதுச் சுபாவத்தில் ஐயப்ப வழிபாடு என்பது தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் கடந்த சுமார் 40 வருடங்களாக பிரபல மடைந்து வருகிறது.  இப்பயணத்தை மேற்கொள்கிற ஒவ்வொருவரும் கடவுளாகின்றனர் என்ற தத்த்துவம் போதிக்கப் படுகிறது.  
தென்னிந்தியாவின் முக்கிய வழிபாட்டுத்தளங்களில் ஒன்றாக கருதப்படுகிற இக்கோயிலுக்கும் ஆண்டு தோறும் சுமார் 4 கோடி மக்கள் வருவதாக உறுதி செய்யப் படாத தகவல் கூறுகிறது. இதனால் கேரள அரசுக்கு ஆண்டு தோறும் 10 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது. , இக்கோயிலை  திருவாங்கூர் தேவசம் போர்டு எனும் அமைப்பு  நிர்வகித்து வருகிறது.
இக்கோயிலில்  10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. பாரமபரியமாக கடை பிடிக்கப் படுகிற இதை எதிர்த்து கேரள இளம் வழக்கறிஞர்கள் சங்கம்  உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.  
இந்த வ்ழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு செப்டம்பர் 28ம் தேதி தீர்ப்பு வழங்கியது, தீர்ப்பில், அனைத்து வயது பெண்களும், சபரிமலையில் வழிபட அனுமதி உண்டு என்று தெரிவித்தது.

இதை எதிர்த்த சீராய்வு மனுக்களை உடனடியாக விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ள வில்லை.

சபரிமலைக் கோயில்  வருடத்தில் சில நாட்கள் மட்டுமே திறக்கப்படும். அந்த வகையில் மண்டல பூஜைக்காலம் எனப்படும் நவம்பர் மாத்த்தில் இறுதி வாரங்களில் கோயில் திறக்கப் படும். ஆகவே செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்ற பெண்களை அனுமதித்து வழங்கிய தீர்ப்பு அமுலுக்கு வந்து விடக்கூடாது என ஆர் எஸ் எஸ் அமைப்பு போராட்டம் நட்த்தி வருகிறது.

இதில் வேடிக்கை என்ன வெனில் இளம் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று முதலில் வழக்குத் தொடர்ந்த்தே அந்த அமைப்புத்தான்.
மக்களின் உணர்வு தீர்ப்புக்கு எதிராக அமைந்தவுடன் தனது நிலையை மாற்றிக் கொண்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப போராடுவது போல ஆர் எஸ் எஸ் நாடகமாடுகிறது. ‘
அதற்கேற்பவே மத்திய அரசும் ஆடுகிறது.
தேவையே இல்லாமல் -  முஸ்லிம்களை சீண்டுவதற்காக முத்தலாக் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வந்த மத்திய அரசு நினைத்திருக்குமானால் சபரி மலை விவகாரத்திலும் ஒரு அவசர சட்டம் இயற்ற்யிருக்க முடியும்.  குறைந்த பட்சம் சமூக பதட்ட்த்தை ஏற்படுத்தக் கூடிய தீர்ப்பை சீராய்வுக்கு கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க ஏற்பாடு செய்திருக்க முடியும்.
ஆனால் மத்திய அரசும் அதை பின்னால் இருந்தும் இயக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பும் இந்து மத உணர்வு தூண்டிவிடப்படுவது தான் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உதவும் – மக்கள் தங்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப் பட்டு வாழ்வாதரங்களை இழந்து கொண்டிருப்பதை மறக்க உதவும்  என்பதற்காகவே செயற்கையான ஒரு பதட்டத்தை  உருவாக்குகீறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக தமிழக மக்கள் கேளிவியே பட்டிராத தாமிரபரணி புஷ்கரம் போன்ற செயறகையான புனித விழாக்கள் ஆர் எஸ் எஸின் திட்டப்படியே அரங்கேற்றப்படுகின்றன.
கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட கட்சிகளை தவிர இந்திய அரசியல் கட்சிகள் எதுவும் ஆர் எஸ் அமைப்பின் குற்றச் செயல்களை கண்டு கொள்ளவே இல்லை.  இப்போதைய பதற்றத்திற்கும்  ஆர் எஸ் எஸ் அமைப்பும் மத்திய அரசுமே முழு காரணமாகும்.
 ஆர் எஸ் எஸ் அமைப்பு மக்களிடையே பதட்ட்த்தை உருவாக்கி ஆதாயம் தேட முயற்சிக்கிறத் என்பதற்கு ஒரு அப்பட்டமான மற்றொரு உதாரணம்
சபரி மலை வழக்கில் தீர்ப்பு வெளியான சில நாட்களில் கேரள பாஜக வின் தலைவர் முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப் பட வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கேரள உயர் நீதி மன்றம் இவ்வழக்கத்தை தொடர்ந்த வருக்குக்கும் வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்ட்து.
இந்த விவகாரத்தில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சாயம் வெளுத்து விட்ட்து . மக்ளின் உரிமை என்று தொண்ட கிழிய குரல் எழுப்பிய இக்கட்சிகள் அதை முஸ்லிம் பெண்கள் விவகாரத்தோடு மட்டும் நிறுத்திக் கொண்ட்து எத்தக்கய அயோக்கியத்தனமானது என்பது வெளிப்பட்டு விட்டது. அதே போல ஊடகங்களின் ஒரு பக்க சார்பும் அம்பலமாகிவிட்டது.
சபரி மலை போராட்ட்த்தை எவ்வளவு பெரிதாக வெளியிடுகிறார்கள் ? ஆனால் முத்தலாக் தடை சட்ட்த்திற்கு எதிராக நாடு முழுக்க முஸ்லிம்கள் திரண் டெழுந்து நட்த்திய போராட்ட்த்தை  யாராவது கண்டு கொண்டார்களா ?  இது விசயத்தில் அரசியல் சாசனம் அனுமதித்த முஸ்லிம் தனி நபர் சட்டத்தில் தலையிடுவது சரியா ? இந்தப் போக்கு தொடருமானால் நாட்டின் முஸ்லிம்கள் தங்களுக்குள்ள தனி அடையாளங்கள அனைத்தையும் விட்டுக் கொடுக்க வேண்டியது வரலாம் என்று யாராவது சிந்தித்தார்களா ? எல்லா வற்றிற்கும் மேலாக நாட்டிலே எத்தனையோ முக்கிய மான வேலைகள் இருக்க , அதை எல்லாம் விட்டு விட்டு மிகக குறைந்த விவாகரத்து சதவீத்த்தை கொண்ட முஸ்லிம்களின் பிரச்ச்னையில் இந்த அளவுக்கான கனத்த தலையீடு தேவை தானா என்பதை எவரும் பொருட்படுத்த வே இல்லை. மகளிரின் உரிமை என்ற ஒற்றை வார்த்தையில் அனைத்து நியாயங்களையும் மறைக்க முயற்சித்தனர்.
அத்தகைய சக்திகள் இப்போது  ஏன் வாய் மூடிக் கொண்டிருக்கிறார்கள். மகளிரின் உரிமைக்கு எதிரான ஆர் எஸ் எஸின் போராட்ட்த்தை வேடிக்கை பார்க்கிறர்கள் ?
நம்முடைய நாட்டில் முஸ்லிம்களின் விவகாரத்தில் எத்தகைய பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதற்கு  இதை விட வேறு சான்று தேவையில்லை.
சபரிமலை விவாகாரமும் முஸ்லிம்களும்
முஸ்லிம்களைப் பொருத்தவரை ஒவ்வொரு சமயத்திற்கும் ஒரு கோட்பாடு உண்டு. அதன் வழியே அவர்கள் செல்கிறார்கள். இதை விமர்ச்சிக்க கூடாது என்பது தான் இஸ்லாமிய வழிகாட்டுதலாகும்.
لِكُلٍّ جَعَلْنَا مِنكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا ۚ وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَاحِدَةً وَلَٰكِن لِّيَبْلُوَكُمْ فِي مَا آتَاكُمْ ۖ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ ۚ إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ (48)

சபரி மலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது அக்கோயிலின் நடை முறைக்கு விரோதம் என்றால் உச்ச நீதிமன்றம் இது விசயத்தில் தலையிட்டிருக்க கூடாது.
சபரிமலை வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரித்த்து.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கருடன் இணைந்து தீா்ப்பை வாசித்தார்.
அப்போது, நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. சபரிமலை வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது. அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும். பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல என்று தமது சொந்தக் கருத்துக்களை மேதாவிகளைப் போல  தொரிவித்த நீதிபதிகள், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா். இந்த தீர்ப்பை ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் ஆகிய இருவரும்  அறிவித்தனா். இது விவகாரத்தில் இந்நீதிபதிகள்,  ஒரு நியாயமான ஆய்வை மேற்கொள்ள அனுமதிக்கப் பட வில்லை என்பதையே இது காட்டுகிறது.  
இந்த நான்கு நீதிபதிகளும் எந்த பெண்ணியத்தை போற்றினார்களோ அதே பெண்ணினத்தை சார்ந்த – இந்த வழக்கை விசாரித்த  5 நீதிபதிகள் கொண்ட அமா்வில் இடம் பெற்றிருந்த ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

இந்திரா மல்கோத்ரா கூறினார்.

மதரீதியான நம்பிக்கைகளில் உள்ள பிரச்சினைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சமஉரிமை என்பதுடன் மதரீதியான பழக்க வழக்கங்களை தொடா்பு படுத்தக் கூடாது. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பகுத்தறிவு கருத்துகளை மதரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி பா்க்கக் கூடாது என்று தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.    

இந்த  வார்த்தைகள் மிக முக்கிய மானவை. சமூக அக்கறை கொண்டவை. நீதிமன்ற தீர்ப்புக்கள்  பரபரப்புக்கா அமைவதை விட சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவையாக அமைய வேண்டும் என்ற நியாயத்தின்பாற் பட்டவை

மற்ற நீத்பதிகள் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாத்து துரதிஷ்ட வசமானது. இது தான் இன்று நாட்டிற்கு நேர்ந்துள்ள மிகப் பெரிய சோதனையாகும்.
சீக்கியப் பொற்கோயிலுக்குள் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தலையை மறைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இனி அது சுந்தந்திரத்திற்கு எதிரானது . தலையை மறைக்க தேவையில்லை. அப்படி எந்த விதியும் குருகிரந்த சாஹிபில் இல்லை என்று யாரேனும் வாதிடுவார்கள் எனில் உச்சநீதிமன்றம் அதில் தலையிடுமா ?
மத விவகாரங்கள் அதை சார்ந்தவர்களுக்கு உரியவை . எப்படி பகுத்தறிவு வாதிகளுக்கு மதங்களை நிராகரிக்கிற உரிமை இருக்கிறதோ அதே போல மதங்களைப்  பின்பற்றுகிறவர்களுக்கு அதன்படி வாழும் உரிமை இருக்கிறது.  பகுத்தறிவு பேசுகிறவர்கள்  அதில் தலையிடுவது அநீதியானது.
எனவே சபரிமலை விவகாரத்தில் அங்குள்ள மத அனுஷ்டான்ங்கள் என்ன கூறுகின்றனவோ அது வே பின்பற்றப் பட வேண்டும். இதில் நீதிமன்றம் தலையிட்டது  தேவையற்றது என்பதே முஸ்லிம்களின் கருத்தாகும்.
அதே நேரத்தில் இந்தப் பிரச்சனையில் முஸ்லிம் பெண்களுக்கும் பள்ளிவாசல்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோசத்தை இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்களும் நாட்டில் பிரச்சனைகளை உண்டுபண்ணுவதற்கென்றே யோசிப்பவர்களும் எழுப்புகிற போது இது விவாகாரத்தில் இஸ்லாமிய கண்ணோட்டம் என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
முதலில் மிக அழுத்தமாக நாம் பதிய வைக்கிற செய்தி :
10 வயது முதல் 50 வயதுள்ள பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு வருவது தீட்டு என்று சொல்லப் பட்டது போல பள்ளிவாசலுக்குள் பெண்கள் வந்தால் தீட்டு என்று இஸ்லாம் ஒரு போதும் சொல்ல வில்லை.
கடவுளை ஆண் என்றும் பெண் என்றும் இஸ்லாம் பிரிக்கவில்லை. இறைவன் இந்த சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதே இஸ்லாமின் கோட்பாடு . கடவுளைப் பற்றிய ஒரு தெளிவான கோட்பாடு இஸ்லாத்தில் இருப்பது போல வேறெங்கும் இல்லை.
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1اللَّهُ الصَّمَدُ (2لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ (4)

சபரிமலையில் பெண்கள் தடுக்கப் படுவதற்கான காரணம்  சுவாமிஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே . கர்நாடகாவை சேர்ந்த ஒரு நடிகை ஐயப்பன் சிலையை தொட்ட்தை ஒரு பெரும் தீட்டாக  தேவஸம் போர்டு கருதியது. கோயிலின் புனிதத்துவம் கெட்டு விட்ட்து என்று கூறி சடங்குகளை செய்தது.

சபரி மலைப் பிரச்சனைக்கு காரணம் இந்து சமய நெறியில் உள்ள குழப்பமே காரணமாகும்.

இஸ்லாமிய நெறியின் தெளிவுதான் மக்காவில் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலிலும் மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலிலும் ஜெரூசலத்தில் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலிலும் மதீனாவில் குபா பள்ளிவாசலிலும் பெண்களை அனுமதித்த்து .இன்றளவும் முஸ்லிம் சமூகம் இதை அனுமதித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பள்ளிவாசலின் சிறப்பம்சங்கள் முஃமின்களுக்கு பொதுவானவை இவற்றை அடைந்து கொள்ள இங்கு முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் செல்ல்லாம். தடை யேதும் இல்லை.

ஆனால் இவற்றில் ஆண் பெண் ஒன்றாக கலந்து செல்வதில் சில ஒழுக்க வரையரைகள் உண்டு.

 ஆண்களுடன் கலந்து பெண்கள் தவாபு செய்ய தடுக்கப் பட வில்லை எனினும் பெண்கள் ஆண்களின் நெருக்கடிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் உண்டு.

தொழுகை நேரத்தில் இரு பிரிவினரும் தனித்தனியாகவே அணிவகுத்து நிற்க வேண்டும் என்ற சட்டம் உண்டு.

மற்ற பள்ளிவாசல்களைப் பொருத்த வரைக்கும் கூட  பெண்கள் பள்ளிவாசலுக்குள் வரலாம் எந்த தடையும் இல்லை. இப்போதும் கூட மதரஸாக்களுக்காக சொற்பொழிவுகளுக்காக , அது போல பள்ளிவாசல்களின் திறப்பு விழாக்களின் போது புதிய பள்ளிவாசல்களை காண்பதற்காக பெண்கள் பள்ளிவாசல்களுக்குள் அனுமதிக்கப் படுகிறார்கள்.

அது மட்டுமல்ல  பயணப் பாதைகள், கடைவீதிகளில் இருக்கிற பள்ளிவாசல்களில் பெண்கள் தொழுவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன.

இது தவிர உண்டான பள்ளிவாசல்களில் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை என்று பொதுவான ஒரு கருத்து இருக்கிறது.  உண்மையில் அனுமதிக்கப் படுவதில்லை என்பதை விட பெண்கள் வரத் தேவையில்லை என்று கூறப்பட்டதே எதார்த்தமாகும்.

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது மாற்று மத்த்தைச் சார்ந்த பெண்களுக்கும் கூட பள்ளிவாசல்களில் இடமளிக்கப் பட்ட பல புகைப்படங்களும்  சமூக ஊடகங்களில் வெளிவந்தன.

எனவே பள்ளிவாசல்கள் பெண்களுக்கு தடுக்கப் பட்ட வை அல்ல. தவிர்க்கப் பட்டவை .

முஸ்லிம்கள் ஐ வேளை தொழ வேண்டும். இது வே முஸ்லிம்களின் மிக முக்கிய கடமையாகும்.

ஒவ்வொரு நேர தொழுகைக்கும் பெண்கள் பள்ளிவாசல்களுக்கு வரத் தேவை . அவர்கள் தம் வீடுகளில் தொழுது கொள்வதே சிறப்பானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகளை கவனித்துப் பாருங்கள் என்ன அற்புதமான அமைப்பில் அவை அமைந்திருக்கினற்ன.

قال النبي -صلى الله عليه وسلم-: (لا تمنعوا إماء الله مساجد الله، وبيوتهن خير لهن، وليخرجن تفلات) أي: غير متزينات ولا متطيبات [رواه أحمد وأبو داود]،

பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது தீட்டல்ல. ஆனால் அவர்கள் வீட்டில் தொழுது கொள்வது நல்லது.

நபியின் காலத்திலும் பெண்கள் பொதுவாக வழக்கமாக பள்ளிக்கு வருவது நடைமுறையில் இருக்க வில்லை.

மார்க்கத்தை கற்றுக்க் கொள்ள வேண்டிய தேவை இருந்த்தால் மஸ்ஜிதுன்னபவியில் இரவில் பெண்கள் அனுமதிக்கப் பட்டார்கள்.

 وفي الصحيحين وغيرهما: (إذا استأذنت نساؤكم بالليل إلى المسجد فأذنوا لهن)


இஸ்லாமின் தொடக்க காலத்தில் ஆண்களைப் போலவே  பெண்களும் பள்ளிவாசல்களுக்கு வருவதற்கு அனுமதிக்கப் பட்டார்கள்.  
ஆண்கள் சிறுவர்களின் வரிசைக்குப் பின்னால் அவர்களுக்கான வரிசை ஒதுக்கப் பட்ட்து. அப்போது எந்த திரையும் இருக்க வில்லை.

عن أسماء بنت أبي بكر قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من كان منكن يؤمن بالله واليوم الآخر فلا ترفع رأسها حتى يرفع الرجال رءوسهم كراهة أن يرين من عورات الرجال

 قال سهل بن سعد : كان الناس يصلون مع النبي - صلى الله عليه وسلم - وهم عاقدو أزرهم من الصغر على رقابهم فقيل للنساء لا ترفعن رءوسكن حتى يستوي الرجال جلوسا رواهما البخاري 


ஹிஜ்ரீ ஐந்தாம் வருடம் பர்தாவின் வசனம் அருளப் பட்ட பிறகு பெண்களுக்கான தனி வாசல் நடை முறை அமுல் படுத்தப் பட்டது.  

அதன பிறகு பெண்கள் வீடுகளிலேயே தொழுது கொள்வது சிறப்பு என அறிவுறுத்தப் பட்டது.

 فعن أم حميد امرأة أبي حميد الساعدي رضي الله عنهما : ( أنها جاءت النبي صلى الله عليه وسلم فقالت : يا رسول الله إني أحب الصلاة معك قال : قد علمت أنك تحبين الصلاة معي ، وصلاتك في بيتك خير لك من صلاتك في حجرتك ، وصلاتك في حجرتك خير من صلاتك في دارك ، وصلاتك في دارك خير لك من صلاتك في مسجد قومك ، وصلاتك في مسجد قومك خير لك من صلاتك في مسجدي ، قال : فأمرت فبني لها مسجد في أقصى شيء من بيتها وأظلمه فكانت تصلي فيه حتى لقيت الله عز وجل ) . رواه أحمد ( 26550 ) . وصححه ابن خزيمة في " صحيحه

وعن عبد الله بن مسعود رضي الله عنه ، عن النبي صلى الله عليه وسلم قال : ( صلاة المرأة في بيتها أفضل من صلاتها في حجرتها ، وصلاتها في مخدعها أفضل من صلاتها في بيتها ) رواه أبو داود ( 570 ) والترمذي

பெண்களுக்கென்று மஸ்ஜிதுன்னபவியில் தனி வாசல் வைக்கப் பட்ட்து.

 عن ابن عمر رضي الله عنهما، أن النبي صلى الله عليه وسلم قال: لو تركنا هذا الباب للنساء. قال نافع: فلم يدخل منه ابن عمر حتى مات. 

وفي الصحيحين من حديث عائشة -رضي الله عنها -: (لو رأى ما رأينا لمنعهن من المسجد كما مُنعت بنو إسرائيل

பெண்கள் வேளை தொழுகைக்கும் பள்ளிவாசலுக்கு வருவதில் இருக்கிற சிரமம்  , புனிதப் பள்ளிகளை தவிர மற்ற சகஜமான இடங்களில்  ஆண் பெண் கலப்பினால் ஏற்படக் கூடிய விபரீதங்கள் ஆகியவற்றை கருத்தி ல் கொண்டே பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது சிறப்பனதல்ல என்று இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் கூறினார்கள் . அதே நேரத்தில் ஒரு பெண் அப்படி வந்து தொழுது விட்டால் அவளது தொழுகை செல்லும் என்றும் கூறினார்கள்

أن صلاة المرأة بالنساء جماعة غير مستحب، وكرهها أصحاب الرأي، وإن فعلت أجزأهن

எனவே  பெண்களை பள்ளிவாசலுக்குள் அனுமதிப்பது குறித் து இனி யாரும் புதிதாக புரட்சி பேசத் தேவையில்லை.

சபரிமலைப் பிரச்சனையில் அவர்களது சமய நம்பிக்கை என்ன சொல்கிறதோ அது பின்பற்றப் பட்ட்டும்

ஒரு வேளை இந்து சமயத்திற்குள் சீர் திருத்தம் வந்து அவர்கள் பெண்களை அனுமதிப்பது குறித்து தீர்மாணிப்பார்கள் என்றால் அவர்கள் மக்கா மதீனா போன்ற இஸ்லாமின் புனிதத் தளங்களின் முன் மாதிரியை தாரளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் இஸ்லாமிய மார்க்கத்தில் தீர்வு இருக்கிறது. எளிமையான ஆரோக்கியமான தீர்வு அது.
காரணம். இது அல்லாஹ்வின் மார்க்கம். மனித இயல்புகளுக்கேற்ற மார்க்கம்.








2 comments: