வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 25, 2018

நல் வாழ்வு


பிரமுகர்கள் பலரின் மரியாதை பறிக்கப் பட்டுவருகிறது.


எம் ஜே அக்பர் – பாஜகவிலிருந்த ஒரு முஸ்லிம் அமைச்சர்  இராஜினாமா செய்துள்ளா. அவருடை நீண்ட கால பத்ரிக்கையாளர் இஜேஜ் சரிந்துள்ளது.

திருவாளர் பிஜே மிக கேவலமான பார்வைக்கு ஆளாகியுள்ளார். 

பலத்த சிந்தனையை இது தருகிறது.அல்லாஹ் நமக்கு கொடுத்த வாழ்கை ஒரு மாபெரும் அருட்கொடை
இதை சிறப்பாக நாம் வாழ்ந்து விட வேண்டும்..
நமக்கும் பயனுள்ள பிறருக்கும் பயனளித்த ஒரு வாழ்கையாக நமது வாழ்க்கை அமைந்து விட வேண்டும்.
வாழ் நாள் அதிகரிக்க அதிகரிக்க மரியாதை அதிகரிக்கிற ஒரு வாழ்கை வேண்டும்.
சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் இறந்து போனார். (என்,டி , திவாரி)
அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். மத்திய அமைச்சராக இருந்தவர்.  ஆந்திர மாநில ஆளுநராக இருந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக நீண்ட காலமாக இந்திய அரசியல் வாதிகளில் புகழ் பெற்ற ஒருவராக திகழ்ந்தார். அவரது மரணம் பெரிய அளவில் பேசப் படவில்லை. ஒரு சாதாரண செய்தியாக முடிந்து போய்விட்டது.
காரணம் அவர் ஆந்திர மாநில முதல்வராக இருந்த போது முதிர்ந்த வயதில் பல பெண்களுடன் அவர் உல்லாசமாக இருப்பது போன்ற புகைப்படங்களும்  வீடுயோக்களும் வெளியாயின. ஒரு கல்லூரி பேராசிரியர் தனது மகனுக்கு அவர் தான் தந்தை என புகார் செய்தார். இறுதியில் டி என் ஏ டெஸ்டிற்குப் பிறகு அந்த பைய்யனை அவர் தனது மகன் என்று ஏற்க வேண்டியதாயிற்ற்கு .
புகழ் பெற்ற ஒரு அரசியல் தலைவர் கடை சி நேரத்தில் தனக்குரிய மரியாதையை இழந்தார்.
அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாக்க வேண்டும்.
சிறப்பான ஒரு வாழ்கை நமக்கு வேண்டும். இங்கும் அங்கும்.
ஏதாவது ஒரு நல்ல வகையில் நமது வாழ்வு அந்தஸ்திற்குரியதாகி விட வேட்னும்.
அபூ ஹுதைபாவின் அடிமை சாலிம் என்ற வித்தியாசமான அடை மொழியோடு  இஸ்லாமிய வரலாற்றில் ஒரு  பிரபலமான மனிதர் இருக்கிறார்.
சிரியாவின் ஒரு அடிமைச் சந்தையில் பார்ப்பதற்கு மிக விகாரமான ஒரு அடிமையை இருந்தார். அந்த அடிமையை யாரும் வாங்க முன் வரவில்லை. மதினாவிலிருந்து சென்ற ஒருவர் மலிவாக கிடைத்த்தால் அவரை வாங்கி மதீனாவில் சந்தையில் ஏலமிட்டார். அடிமையின் தோற்றத்தை பார்த்த யாரும் விலக்கு வாங்கவில்லை, நேரம் கடந்து செல்ல செல்ல  முதலாளியின் பொறுமை எல்லை கடந்தது. அடிமையை சந்தையில் தனியே விட்டு விட்டு “ யாராவது உன்னை விலை பேசினால் நீயே உன்னை விற்றுக் கொள்! எனக்கு காசை கொண்டு வந்து சேர்த்து விடு என்று சொல்லி விட்டு சென்று விட்டார். அந்த அடிமை மதினாவின் சந்தையில்  தன்னை தானே கூவி விற்ற்க் கொண்டிருந்தார்.
ஆச்சரியம்  தான்.
ثبيتة بنت يعار الأنصارية   (ரலி ) என்ற சீமாட்டி அந்த அடிமையின் அவல நிலை கண்டு இரக்கப் பட்டு அவரை விலைக்கு வாங்கினார். அவரை தனது கணவரான அபூஹுதைபா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்.

அபூஹுதைபா ரலி அவர்கள அவரை உரிமை விட்டு வளர்ப்பு மகனாக ஏற்றுக் கொண்டார்கள். சாலிம் பின் அபீஹுதைபா என அவர் அழைக்கப் பட்டார்.

பிறகாலத்தில் வளர்ப்பு மகன்களுக்கு புதிய சட்டம் அருளப் பட்ட போது சாலிமின் தந்தை பெயர் தெரியவில்லை. சாலிம் மவ்லா அபூஹுதைபா என அழைக்கப் பட்டார்.

كان سالم عبدًا فارسيًا
اعتقت ثبيتة سالمًا، فوالى سالم زوجها أبي حذيفة بن عتبة الذي أحبّه وتبنّاه،

ادْعُوهُمْ لِآَبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ فَإِنْ لَمْ تَعْلَمُوا آَبَاءَهُمْ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

அந்த சாலிம் குர் ஆனை மிகச் சிறப்பாக ஓதுகிறவர்களில் ஒருவராக இருந்தார்.

அவரிடமிருந்து குர் ஆனை ஓதக் கற்று கொள்ளுங்கள் என பெருமானார் (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.

عن النبي محمد، أنه قال: «استقرئوا القرآن من أربعة، ابن مسعود، وسالمًا مولى أبي حذيفة، وأبي بن كعب، ومعاذ بن جبل»

அவரை கொடுத்தற்காக  பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்கள் .

عن عائشة قالتاستبطأني رسول الله ذات ليلة ، فقال : " ما حبسك ؟ قلت : إن في المسجد لأحسن من سمعت صوتا بالقرآن ، فأخذ رداءه ، وخرج يسمعه ، فإذا هو سالم مولى أبي حذيفة ، فقال : الحمد لله الذي جعل في أمتي مثلك "

அனைத்து யுத்தங்களிலும் பங்கேற்றார், இறுதியில் பொய்யன் முஸைலமாவை எதிர்த்த யமாமா யுத்த்த்தில் அவரும் அவருடைய முதலாளி அபுஹுதைபாவும் ஷஹீதாக்கப் பட்டார்கள். ஒருவருடை கால் மற்றவரின் முகத்தில் இருந்த்து.

وقد وُجد سالم يومها هو ومولاه أبو حذيفة صرعى، رأس أحدهما عند رجلي الآخر


சந்தையில் விலை போகாத அடிமை இன்று சஹாபாக்களில் முக்கியமான ஒருவர்.

எந்த அளவு முக்கியமானவர் என்றால் ?

உமர் ரலி அவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது அவரிடம் “ உங்களை அபூபக்கர் ரலி சுட்டிக் காட்டியது போல நீங்கள் ஒருவரை எங்களுக்கு சுட்டிக் காட்டுங்கள் என சஹாபாக்கள் கேட்ட போது உமர் ரலி கூறினார்.
சாலிம் இருந்திருந்தால் அவரை கூறியிருப்பேன்.

قال: «لو أدركني أحد رجلين، ثم جعلت إليه الأمر لوثقت به سالم مولى أبي حذيفة، وأبو عبيدة بن الجراح

என்ன அருமையான வாழ்கை. ?

எல்லா வகையான பின்னடைவிலும் கூட மக்கள் தமது தரத்தால் எப்படி உயர்வை அடைந்து கொள்ள முடியும் என்பதற்கு எத்தகைய சிறந்த முன்னுதாரணம் ?

இத்தகைய ஒரு பரிசுத்தமான வாழ்கையை பெற அல்லாஹ் வழிகாட்டுகிறான்.

مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ


நற்செயல்கள் செய்பவர்களுக்கு நல் வாழ்வு கிடைக்கும்.
சில சந்தர்ப்பங்களில் அத்தகையோர் சிரமங்களை அனுபவித்தாலும் கூட.
தீயோர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் கத்திக் குத்துப் பட்டு இறந்து விடுவது போல
நல்லோர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் மருத்துவர்கள் அறுவை சிகிட்சை செய்யும் போது ஏற்படுகிற வலியையும் வேதனையையும் போல.  அதற்குப் பிறகு நன்மையே ஏற்படும்.
திக்ரினால் கிடைக்கும் மன அமைதி ;
சிறப்பான வாழ்கையின் முதல் அடையாளம் அது.
الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ أَلاَ بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
மன அமைதியை தேடி எங்கும் செல்ல தேவையில்லை. திக்ரு போது.
தற்காலத்தைய மிக முக்கியப் பிரச்சனை .  மன அழுத்தம் . என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதற்கு சிறப்பான மருந்து திக்ரு தான் என்பது பலருக்கும் புரிவதில்லை.
நம்மை நாம் பெரிதாக நினைத்துக் கொள்கிற போது டென்சன் வருகிறது. சைத்தான் தலையில் ஏறிக் கொள்கிறான்.  
அல்லாஹ்வை நினைவு கூறினால் சைத்தான் ஓடிவிடுவான்
பெருமானாரின் வாகணித்த பிராணி திமிரியது.  உடனிருந்த தோழர் சைத்தான் நாசமாகட்டும் என்றார்.  பிஸ்மில்லாஹ் சொல்லுங்கள் என பெருமானார் திருத்தினார்கள்
وكان رجل رديف النبي صلى الله عليه وسلم على دابة، فعثرت الدابة بهما فقال الرجل: تعس الشيطان! فقال له النبي صلى الله عليه وسلم: " لا تقل تعس الشيطان؛ فإنه عند ذلك يتعاظم حتى يكون مثل البيت، ولكن قل: باسم الله؛ فإنه يصغر عند ذلك حتى يكون مثل الذباب " رواه أحمد و أبو داود وهو صحيح.

தக்வாவும் பரக்க்கத்தும்.


நமது திட்டங்களால் வாழ்க்கையின் வளம் பெற்று விட முடியும் என்ற எண்ணமே நம்மிடம் மேலோங்கியிருக்கிறது.

அது சரி தான். ஆனால்  முழுவதும் சரியான சிந்தனை அல்ல.  

திட்டத்தால் பிரம்மாண்டமான வீட்டை கட்டி விடலாம். ஆனால் அதில் மதிப்பாக வாழ அல்லாஹ்வின் துணை தேவை .   

அல்லாஹ்வை பயந்து வாழ்ந்தால்பரக்கத் நிறையும்.

وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَٰكِن كَذَّبُوا فَأَخَذْنَاهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ

பய பக்தியோடு தொழுதால் வெற்றி

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ 

குர் ஆன் ஓதினால் உயர்வு

குர் ஆன் ஓதுகிறவர் நாளை கியாமத்தில் மேலே ஏறிச் செல்லுமாறு கூறப்படும்

عن عبد الله بن عمرو رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ : اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ ، كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا ، فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا

மறுமையில் கிடைக்கிற உயர்வு இந்த உலகிலும் கிடைக்கும்.

வங்கச் சிங்கம் பஜ்லுல் ஹக் இரயிலில் புறப்பட்டார். எராளமானோர் வழியனுப்பி வைத்தனர்.  சிறிது தூரம் சென்ற இரயிலில் குண்டு வெடித்த்து. ஆனால் பஜ்லுல் ஹஜ் தப்பினார்.
அன்று மாலை அவர் கூறினார். எனக்கு இரயில் பயணத்தில் குர் ஆன் ஓதும் பழக்கம் உண்டு. இரயிலில்  ஏறிய பிறகு குர் ஆனை எடுக்க மறந்த்தை நினைத்து அடுத்த நிலையத்தில் இறங்கிவிட்டேன். அல்லாஹ் என்னை பாதுகாத்தான.

இது போல ஒவ்வொரு நல் அமலுக்கும் வாழ்கையை சிறப்பக்கி வைக்கிற ஒரு இயல்பு உண்டு.

எதீமின் தலையை தடவினால் இதயம் இளகும் என்றார்கள் பெருமானார் (ஸல்)
உறவினர்களை ஆதரித்தால் புகழ் கிடைக்கும் என்றார்கள் பெருமானார் (ஸல்)
முதியோரை ஆதரித்தால் நமக்கு முதுமையில் ஆதரவு கிடைக்கும் என்றார்கள் பெருமானார் (ஸ்ல்)

இப்படி பட்டியல் தொடரும்.

நமது நற்செயல்கள் நம்முடைய வாழ்கையை மட்டும் அல்ல நமது சந்த்த்திகளுடைய வாழ்வையும் சிறப்பாக ஆக்கி வைப்பவை

என சிறப்பாக வாழ் அனைத்து நல்ல விசயங்களிலும் கவனம் செலுத்துவோம்.

சைத்தானின் வழிகள் ஒவ்வொன்றிலிருந்து விலகி நிற்போம். ‘

சோம்பல் சைத்தானிய பிரதான வலை

நற்செயல்கள் செய்வதில் காட்டப் படுகிற சோம்பல் தான் சைத்தான் வெற்றிக் கொள்கிற பிரதான இடமாகும்.

இந்த உலகில் வெற்றியடைகிற இராணுவ வீர்ர்கள்  தோற்றுப் போகிறவர்களிடம் செய்கிற முதல் பணி அவர்களின் ஆயுதங்களை கீழே போடச் செய்வதாகும்.

துப்பாக்கியை காட்டி ஹான்ஸ் அப் கையை தூக்கு என சப்தமிடுவதை நாம் பார்த்திருக்கலாம்.

சைத்தான் தனக்கு கட்டுப்படுகிற மனிதர்களிடம் முதலாவதாக முயற்சி ச்ய்கிற மனிதனின் ஆயுத்த்தை பறித்து விடுகிறான்.  சோம்பலில் மனிதனை சிறை வைக்கிறான்.

எல்லா வகையிலும் நம்மை அல்லாஹ்வை விட்டு திசை திருப்ப முயற்சிக்கிற சைத்தானின் இந்த வலையிலிருந்து தப்பித்துக் கொள்ள நாம் எல்லா நிலையிலும்  விழிப்ப்பக இருக்க வேண்டும்,

அல்லாஹ் எச்சரிக்கிறான்.

اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَأَنسَاهُمْ ذِكْرَ اللَّهِ ۚ أُولَٰئِكَ حِزْبُ الشَّيْطَانِ ۚ أَلَا إِنَّ حِزْبَ الشَّيْطَانِ هُمُ الْخَاسِرُونَ

பெருமானார் காட்டிய வழிகள்

சாப்பிடும் போது பிஸ்மி சொல்லாவிட்டால் சைத்தான் அந்த உணவில் பங்கேற்கிறான்.

عن أمية بن مخشي الصحابي رضي الله عنه قال: »كان رسول الله صلى الله عليه وسلم جالسًا ورجل يأكل فلم يسم حتى لم يبق من طعامه إلا لقمة، فلما رفعها إلى فيه قال: بسم الله أوله وآخره، فضحك النبي صلى الله عليه وسلم ثم قال: مازال الشيطان يأكل معه، فلما ذكر اسم الله استقاء ما في بطنه« رواه أبو داود والنسائي

இரவு நேரத்தில்  வீட்டு வாசலை மூடும் போது பிஸ்மி சொன்னால் அந்த் வீட்டில் சைத்தான் நுழைய முடியாது,

ஆடைகளை கழட்டும் போது பிஸ்மி சொன்னால் ஜின்களோ சைத்தான்களோ அதைப் பார்க்க முடியாது

கழிவறைக்குள் நுழகிற போது சைத்தானிடமிருந்து தப்பிக்கலாம்.

மனைவியுடன் உறவு கொள்ளும் போது பிஸ்மில்லா சொன்னால் எதிர்கால சந்தத்தில்கள் சீர் கெட்டுப் போவதிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.

இப்படி ஒவ்வொரு நிலையிலும் சைத்தானுடைய திட்டத்தையும் முயற்சியையும் நினைவில் வைத்துக் கொண்டு நற்செயல்களில் அக்கறை செலுத்தினால் நல்வாழ்வு நிச்சய்ம்.
No comments:

Post a Comment