வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 23, 2021

பெண்களின் திருமண வயது

தமிழில் ஒரு பழ மொழி இருக்கிறது.

வேலையற்ற நாவிதன் பொண்டாட்டி தலையை சிறைச்சானாம்.

அது போல உருப்படியாக மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுகிற திறனோ சிந்தனையோ அதற்கான ஆற்றலோ அற்ற மத்திய பாஜக அரசு தொடர்ந்து தளுக்கு மினுக்கு காட்டுகிற அர்த்தமற்ற கவர்ச்சியான செய்திகளில் மக்களின் கவனத்தை மூழ்கடிக்க நினைக்கிறது.

அப்படி ஒரு பொறுத்தமற்ற  நன்மை பயக்காத வேலையாகத்தான் இப்போது பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் காரியத்தில் இறங்கியிருக்கிறது.

இதில் பெண்களுக்கு நன்மையானது அல்ல தீமைதான் என்று மகளிர் அமைப்புக்களே கூறியிருப்பது தான் இங்கு ஹைலைட்/

ஆனாலும் அரசு பிடிவாதமாக இருக்கிறது. முஸ்லிம்களை துன்புறுத்தும் ஒரு அரசியல் உள் நோக்கம் இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் பலரும் கருதுகிறார்கள்.

இதில் இஸ்லாமிய மார்க்கத்தின் கருத்து என்ன ? இப்போது முஸ்லிம் சமுதாயம் நடந்து கொள்ள வேண்டியது எப்படி ஆகிய இரண்டு செய்திகளை இன்றைய ஜும் ஆ வில் பார்க்க இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

முதலில் நமது மத்திய அரசு கொண்டு வரவுள்ள சட்டம் குறித்து பார்ப்போம்.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 21 ஆக் உயர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாக அறிவித்தார்.

அதற்காக ஜெயா ஜேட்லி என்பவர் தலைமையிலான 10 நபர் கொண்ட குழு அறிவிக்கப் பட்டது.

இக்குழு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் பிரதமர் அலுவலகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் தன் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வேண்டும் என, அக்குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால், அக்குழுவின் அறிக்கை பொதுவெளியில் இன்னும் வெளியிடப்படவில்லை.

 

ஆனால் வேலை வெட்டிகள் ஏதுமற்ற மத்திய அமைச்சரவை இதற்கு திடீரென ஒப்புதல் அளித்த்து.

அடுத்த சில மாதங்களில் இந்தியாவிலுள்ள முக்கியமான ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ல நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்துவதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் தவறிவிட்ட குற்றச்சாட்டில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த குறுக்குச் சிந்தனையில் மத்திய அமைச்சரவை இறங்கியுள்ளது.

கடந்த 21 ம் தேதி நாடாளுமன்ற மக்களவை உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்ற விவாகாரத்தில் சம்பந்தப் பட்ட  பாஜக அமைச்சரை இராஜினா செய்யக் கோரி எதிர்க் கட்சிகள் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அந்த அமளிக்கு இடையே அரசு இந்த குழந்தை திருமண தடை சட்டத்தில் திருத்தம் செய்து இந்த மசோதாவை கொண்டுவந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் அரசின் ஜனநாயக் விரோதப் போக்கை கடுமையாக கண்டித்துள்ளனர்.

பொதுவெளி சமூகத்திடம் ஆலோசனை நடத்தாமல் இந்த மசோதா அவசர அவசரமாக கொண்டு வரப்படுவதாக கனி மொழி எம் பி கூறியிருக்கிறார். அவர் ஒரு பெண்ணிய வாதி என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த வகையான முன்னறிவிப்புமின்றி திடீரென மத்திய அரசு கொண்டு வந்துள்ளது இப்படி ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது என  சுப்ரியா சாகு என்ற எம் பி கூறியுள்ளார். அவரும் ஒரு பெண்ணிய வாதியே!

 

அரசுக்கு இதில் மக்கள் நலன் என்ற சிந்தனை  எல்லாம் கிடையாது. ஏதோ ஒரு பதற்றத்தில் அரசு இருக்கிறது மக்களை ஒரு பதற்றத்திலேயே தொடர்ந்து இருக்க வைக்க விரும்புகிறது என்பதையே இது காட்டுகிறது.

 

அரசின் திட்டத்தை முஸ்லிம் எம் பிக்க கடுமையாக எதிர்த்துள்ளார்கள்.

 

IUML இன் E.T. முகமது பஷீர் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார், இது தனிமனித சுதந்திரம் குறித்த அரசியலமைப்பின் 25 வது பிரிவை மீறுகிறது. இந்த மசோதா நாட்டில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இது சமய தனிநபர் சட்டங்கள் மீதான தாக்குதல் என்று கூறினார்.

 

AIMIM இன் அசாதுதீன் ஓவைசி, இந்த மசோதா பிற்போக்குத்தனமானது என்று உறுபடக் கூறினார். 18 வயது நிரம்பியவர்கள் பிரதமரைத் தேர்ந்தெடுக்கலாம், இன்னொரு ஆணுடன் உறவில்  இருக்கலாம் மற்றும் பாலியல் உறவில் ஈடுபடலாம்.எனும் போது கணவனை தேர்ந்தெடுக்க மட்டும் 21 வயது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

 பெண்களின் வேலை வாய்ப்பு இந்தியாவில் சோமாலியாவை விடக் குறைவு என்பதை சுட்டிக்காட்டினார். இது கவனிக்க வேண்டிய ஒரு கருத்தாகும்.

 மாதர் சங்கம் என்ன சொல்கிறது.

"பெண்களின் திருமண வயதை உயர்த்துவது பெண் தன் வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்யும் உரிமைமீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே இருக்கும். இந்திய அரசியல் சாசனம் பெண்களுக்கு அளித்துள்ள தனிப்பட்ட உரிமையை இது பறித்துவிடும். அரசு இந்த நடவடிக்கையைக் கைவிடவேண்டும்" என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

மாதர் சங்கங்கள் மத்திய அரசின் இந்த முயற்சியை அதன் காவித்திட்டத்தின் ஒரு அங்கம் என்று கூறுகின்றன.

 மதம் மாறிய திருமணங்களை தடுக்கவும், சாதிய ரீதியாக 'சாதி மறுப்புத் திருமணங்களை' தடுக்கவும் இதில் உள்நோக்கம் இதில் உண்டு. சாதிய, மதவாத சக்திகளுக்கு ஆதரவாக இந்த சட்டம் இருக்கக்கூடும்.முஸ்லிம் திருமணச் சட்டத்தில் பெண்களின் திருமண வயது 16 என இருக்கிறது. இதன்மூலம், முஸ்லிம்களை குறிவைக்கின்றனர். என்றும் அவர்கள் கூறுகின்றன.

இந்த சட்டம் அமுலுக்கு வந்தால் என்ன ஆகும். ?

தண்டனை

குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006-இன் படி குறைந்தபட்ச வயதுக்கு கீழ் உள்ள ஆண் அல்லது ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தால் அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த தண்டனைக்கு தங்களுக்கு வேண்டாதவர்களை உட்படுத்துவதே மத்திய் அரசின் நோக்கம் இதுவும் ஒருவகையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல மக்களை துன்புறுத்தும் ஒரு சாடிஸ்ட் ஏற்பாடாகும்.

திருமண வயதை கட்டாயமாக இவ்வளவுக்குள் தான் அல்லது இத்தனைக்குப் பிறகு தான் என்று வரையறுக்கும் சட்டம் என்பது பொருத்தமற்றது என்பதே இஸ்லாமின் உறுதியான கோட்பாடாகும். எந்த வயது வரையிலும் திருமணம் செய்து கொள்ளலாமெறு அனுமதிக்கிற இஸ்லாம் எந்த வயதிலும் திருமணத்தை நடத்தவும் அனுமதிக்கிறது.

இதுவே இயற்கையானதும்  பெண்களுக்கு மட்ட்டுமல்லாது பொதுவாக மனித வாழ்கைக்கு நன்மையானதுமாகும்.

இஸ்லாம் குழ்ந்தை திருமணத்தை அங்கீகரிக்கிறது. நன்றாக கவனிக்கவும் கட்டாயமல்ல. செய்து வைத்தால் கூடும்.  

ஆனால் அது ஒரு நன்மைக்காக இருக்க வேண்டும்.  பொருத்தமாகவும் இருக்க வேண்டும்.

قال ابن قدامة رحمه الله في "الشرح الكبير

" فأما الإناث : فللأب تزويج ابنته البكر الصغيرة التي لم تبلغ تسع سنين بغير خلاف إذا وضعها في كفاءة . قال ابن المنذر : أجمع كل من نحفظ عنه من أهل العلم أن نكاح الأب ابنته الصغيرة جائز إذا زوجها من كفء ،

நபி (ஸல்) அவர்கள் 6 வயதில் ஆயிஷா அம்மாவை திருமணம் செய்து கொண்டார்கள். அவர் வயதுக்கு வந்த பிறகு தன்னுடன் சேர்த்துக் கொண்டார்கள். அதாவது மதீனாவுக்கு வந்தவுடன்

وقد تزوج النبي صلى الله عليه وسلم عائشة رضي الله عنها وهي بنت ست سنين ، وأُدخلت عليه وهي بنت تسع . رواه البخاري ( 4840 ) ومسلم ( 1422 ) .

لا يزوج الأب الصغيرةً إلا بمقتضى المصلحة الراجحة التي يراها لها 

அதில் மிகப்பல நன்மைகள் இருந்தது.

ஆயிஷா அம்மா அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களை மிக நுனுக்கமாக கவனித்து 2210 ஹதீஸ்களை அறிவித்தார்கள். அது மார்க்கத்திற்ன் கால்வாசி சட்டங்களுக்கு மூலமாக அமைந்தது. அவர்களது வாழ்வு வரலாற்றை வென்று நிலைத்திருக்கிறது.  

ஆனால் வயதிற்கு வருவதற்கு முன் உடலுறவு கூடாது.

لكن لا يُدخل الرجل بزوجته بالصغيرة إلا إذا كانت بحيث تطيق الجماع ، وهذا يختلف باختلاف الأزمنة والأمكنة والبيئات .

இஸ்லாமிற்கும் உலகில் மற்றுள்ள சமூகங்களிலும் குழந்தை திருமணத்தில் முக்கியமான ஒரு வித்தியாசம் உண்டு

பருவ வயதடையும் போது சிறு வயது திருமணங்களை ஏற்கவும் மறுக்கவும் தம்பதிகளில் இருவருக்கும் உரிமை உண்டு

குழ்ந்தை திருமணம்

திருமணம் விவகாரத்தில் இஸ்லாமின் இன்னொரு கோட்பாடு மிக முக்கியமானது.

திருமணத்திற்கான தேடல் வந்த்தும் சீக்கிரமாக திருமணம் செய்து விட வேண்டும் தாமதிக்க கூடாது.

وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (32)

  يا معشر الشباب ، من استطاع منكم الباءة فليتزوج ، فإنه أغض للبصر ، وأحصن للفرج ، ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء " . أخرجاه من حديث ابن مسعود .

 جاء في السنن - من غير وجه - أن رسول الله صلى الله عليه وسلم قال" تزوجوا ، توالدوا ، تناسلوا ، فإني مباه بكم الأمم يوم القيامة " وفي رواية" حتى بالسقط 

عن علي بن أبي طالب قال النبي :
يا عليُّ ! ثلاثةٌ لا تُؤخِّرْها : الصلاةُ إذا أَتَتْ ، والجنازةُ إذا حَضَرَتْ ، والأيِّمُ إذا وجَدَتْ كُفْوًا  : البيهقي 

திருமணம் செய்து குடும்பத்தை நட்த்த முடியுமா என்று யோசிப்பவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது இந்த நபி மொழி

عن أبي هريرة ، رضي الله عنه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم" ثلاثة حق على الله عونهم : الناكح يريد العفاف ، والمكاتب يريد الأداء ، والغازي في سبيل الله " . رواه الإمام أحمد

\ஒரு இரும்பு மோதிரத்தை கொண்டாவது திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்கள் பெருமானார் (ஸ்ல) அவர்கள் சம்பாதித்து வீடு கார் வாங்கிய பிறகு திருமணம் செட்ய்து கொள்கிறேன் என்ற சிந்தனைக்கு சாட்டையடி இது

திருக்குர் ஆன் ஒதக் கற்பிப்பிபதை மஹராக வைத்து பெருமானார் திருமண செய்து வைத்தார்கள்.

பெருத்தமான வரன் வந்த பிறகு திருமணத்தை தாமதிப்பது குழப்பதை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்கள்

إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ، إِلَّا تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الأَرْضِ، وَفَسَادٌ عَرِيضٌ

மிஅ ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய வாழ்வியல் தத்துவம் இது.,

 பொருத்தமான நேரத்தில் திருமணம் செய்யாவிட்டால் பெரும் பிரச்சனைகள் ஏற்படும் என்ற எச்சரிக்கை சாமாணியமானதல்ல.

 இன்று பெரும்பாலான நாடுகளில் பெண்ணின் திருமண வயது 18 ஆகத்தான் இருக்கிறது 21 வயதாக இருக்கிற பிரான்ஸ் போன்ற நாடுகளில் பாலியல் எல்லை மீறுதல்கள் என்பதும் செக்ஸ் எனும் தாம்பத்தியத்தின் உறவு மிக மோசமாக கொச்சைப் படுத்தப் பட்டிருப்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 திருமண வயதை அதிகரிக்க ஜெயா ஜேட்லீ குழு சில காரணங்களை கூறுகிறது.

 முதலாவது.

ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வயது சமமாக இருக்க வேண்டும்

உண்மையில் இது அரைகுறை சிந்தனையாகும். ஒரு 40 வயதுடைய பெண்ணை 25 வயது ஆண் திருமணம் செய்தால் ஏற்க மாட்டார்களா என்ற கேள்விக்கு அவர்க திணறிப் போவார்கள்.

 

சாதாரணமாக பெண்ணின் வயது இளமையாக இருப்பது நல்லது என்பது தான் மன தத்துவ அறிஞர்களின் கூற்றாகும்

 

காரணம் 16 வய்துப் பெண்ணுடைய பக்குவத்தை ஒரு ஆண் 21 வயதில் தான் அடைகிறான் போதிய திறனும் பக்குவமும் உடையவர்களே வயது மூத்த பெண்களை திருமணம் செய்வது நல்லது  என்று அது கூறுகிறது.

 

எனவே திருமண விவகாரத்தில் வயதில் சமத்துவம் என்பது அறவே பொருந்தாத ஒரு சிந்தனையாகும்.

 

தந்தை பெரியார் முதிர்ந்தவயதில் இளம் மணியம்மைய திருமணம் செய்து கொண்டார். அவர் ஒரு புரட்சியாளர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

ஜெயா ஜேட்லீ குழு கூறுகிற இரண்டாவது காரணம்

 

ஒரு பெண் 18 வயதில் திருமணம் செய்துகொள்ளத் தகுதியானவள் என்பது  அவள் கல்லூரி செல்வதற்கான வாய்ப்பைப் பறிக்கிறது.

 

விமர்சகர்கள் மிக கேவலாக அரசை கேட்கிறார்கள்/

 

மத்திய அரசு கட்டாய கல்வி பெறும் உரிமை 14 வயது வரை என்று தான் வைத்திருக்கிறது, அந்த 14 வய்து வரை கூட கல்வி கிடைக்காத கோடிக்கான சிறுவர்கள் நம நாட்டில் இருக்கிறார்கள். குறிப்பாக சிறுமிகள்

 

'Young Voices National Working Group'  என்ற  ஒரு ஆய்வை 15 மாநிலங்களில் 96 அமைப்புகள் சேர்ந்து தொடங்கின . அதில் 12ல் இருந்து 22 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் இதுகுறித்து  திருமண வயது  கருத்து கேட்கப்பட்டது.

.அதில் ஒரு பெண் கேட்கிறார். பிபிசி

 

எங்கள் கிராமத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் பள்ளி இருக்கிறது. அருகில் இருந்தால் நடந்து செல்லலாம். மேலும் பெண்களுக்கு பள்ளிகளுக்கு சென்று படிக்க ஆகும் பயணச் செலவுக்கு இங்கு பலரிடமும் பணம் இல்லை. அதனால் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுகிறார்கள்" என்கிறார் பிபிசியிடம் பேசிய தாமினி.

நிலமை இப்படி இருக்க கல்லூரி படிப்ப் கிடைக்க வேண்டும் என்று திருமன வயதை உயர்த்துகிறார்கள் என்ற வாதம் அப்பட்டமான மோசடியாகும்.

 

ஜேட்லீ குழு கூழும் 3 வது காரனம்

திருமண வயதை 21 ஆக உயர்த்துவதன் மூலம் தாய்-சேய் ஆரோக்கியத்தை மேம்படுத்தமுடியும்; இறப்பு விகிதத்தையும் குறைக்கமுடியும்

ஒரு ஆய்வாளர் கூறுகிறார்

"மருத்துவ ரீதியான காரணங்களை சொல்வது ஏமாற்றும் திட்டம். இந்தியாவில் 50 சதவீத கர்ப்பிணி பெண்கள் ஏன் ரத்தசோகையுடன் உள்ளனர்? அதனை ஏன் சரிசெய்யவில்லை. பேறுகால இறப்புகளை ஏன் தடுக்கவில்லை. பிரசவத்தின் போதும், அதற்கு பின்னும் ஏற்படும் ரத்தப்போக்கினாலேயே பெண்கள் இறக்கின்றனர். 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களிடையே ரத்தசோகையை சரிசெய்யாமல், எப்படி 21 வயதில் மட்டும் சரிசெய்வார்கள்?

பேறு காலத்தில் பெண்களுக்கு சரியான மருத்து உதவி கிடைக்காத்தே பெண்களின் பிரசவக கால உயிரிழப்புகளுக்கு காரணாக இருக்கிறது,

இந்த மூன்று காரணங்களுமே போலித்தனமானவை மேம்போக்கானவை

அதே நேரத்தில் இந்த சட்ட்த்தால் ஏற்படும் பாதங்கங்களை அறிஞர்களும் சாமாணிய கிராம வாசிகளும் விளக்குகிறார்கள்

இந்தியாவில் பெண்கள் போதிய அளவில் படிக்க வாய்ப்புக்கள் இல்லை எனும் போது சரியான நியாயமான வேலை வாய்ப்புக்கள் அவர்களுக்கு  குறைவு இந்தச் சூழலில் 21 வயது வரை வீட்டில் பெண்கள் தங்கியிருப்பது குடும்பத்திற்கும் பெரும் சோதனையாகும்.

இதுவே இந்தியாவின் பெரும்பாலான நிலை  

இன்னொரு வார்த்தையில் இது தான் இந்தியா

யுனிசெஃப் புள்ளிவிவரப்படி, இன்றைக்கும் இந்தியாவில் 43 சதவீத பெண்களுக்கு 18 வயதுக்குக் கீழ் திருமணம் நடைபெறுகிறது.

எனவே மத்திய அரசு கொண்டு வரும் சட்டம் இந்திய மக்களுக்கு ஒரு பெரும் சோதனையாக அமையும் .

ஒரு எதார்த்தமான அனுபவத்தை ஒரு பெண் பதிவு செய்கிறார்.

பெண்கள் வளர்ந்த பிறகு, ஒரு பாரமாகவே பார்க்கப்படுகிறார்கள்.  ஆகையால் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்தும் பரிந்துரையை நான் எதிர்க்கிறேன் என்கிறார். ஆஜ்மீரை சேர்ந்த மம்தா ஜன்கித். அவர் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, ,

இந்தியாவில் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கு 'சம்மதம் பெற' ஒருவருக்கு தகுதியான வயது 18 என்றிருக்கும் போது திருமணம் செய்வதற்கு 21 வய்து என்று நிர்ணயிப்பது என்ன அக்கிரம்ம் என்று பலரும் கொதிக்கிறார்கள்

திருமண விசயத்தில் இஸ்லாமின் வழிகாட்டுதலே நிலையானது.

மக்கள் யோசிக்கிற திட்டங்கள் பொருத்தமற்றவை அதற்கு இந்த பெண்ணின் திருமண வயதை வரையறுக்கும் சட்டங்கள் காலந்தோறும் கண்டு வந்திருக்கிற மாற்றங்களே சாட்சி

1929-ல் ராய் சாஹிப் ஹாபிலாஸ் சார்தா என்ற ஆங்கிலேயர் திருமணம் செய்ய பெண்ணுக்கு 14 வயதும் ஆணுக்கு 18 வயதும் நிறைந்திருக்கவேண்டும் என்ற சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்தார். கடும் எதிர்ப்புக்கிடையில் 1929 செப்டம்பர் 28-ம் தேதி அந்த வரைவு சட்டமானது. சார்தாவால் உருவாக்கப்பட்ட இந்தச் சட்டமே காலப்போக்கில் பெயர் மருவி சாரதா சட்டம் என்றானது.

1978-ஆம் ஆண்டில், சட்டத்திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டது.

 உலகின் நாடுகளால் இது விசயத்தில் ஒன்று பட்ட கருத்துக்கு வர முடியவில்லை.  சில நாடுகளில் 12 வயதில் பெண்கள் திருமணம் செய்து கொள்ளலாம் சில நாடுகளில் 14 வயதில் திருமணம் செய்யலாம் என்கிற நடை மூறை இப்போதும் இருக்கிறது.

 தற்போது பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்றுவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

இனி காலம் செல்லும் போது இந்த 21 வயது கூட குறைவு தான் பெண்கள் டாக்டரே படிக்கும் வரை திருமணம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று குரல்கள் வரலாம் அவை எல்லாம் மனித சமுதாயத்திற்கு நன்மை செய்யாது.

இஸ்லாமிய வழிகாட்டுதல் திருமணத்திற்கான தேவை ஏற்படும் போது திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பொதுவான விதியே சால்ச் சிறந்த்து.

இப்போது முஸ்லிம்கள் என்ன செய்யலாம்.

பல பகுதிகளிலும் அவசர திருமணங்கள் நடக்கின்றன.

எச்சரிக்கை அவசியம் பொருத்தமற்ற வரன்கள் அமைந்து விடக்கூடாது.

ஒரு வேளை அரசு சட்டமாக்கி விட்டால்

அதை நீதி மன்றத்தில் எதிர்த்து முழு மூச்சாக போரிட வேண்டும்

இந்தியாவை பொருத்தவரை இந்து சமூகமே கூட இதை எதிர்த்து போராட வாய்ப்பிருக்கிறது.

ஆனால் அரசின் சட்ட்த்திற்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.

ஏனெனில் அவசரப்பட்டு மார்க்கம் அனுமதிக்கிற வழியில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஏற்பாடுகள் செய்தால் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் அவர்களை பதிவு செய்வதில் பிரச்சனைகள் ஏறுபடும். அல்லது குடும்பக் கட்டுப்பாடுகள் செய்து கொள்ள் வேண்டிய சூழ்நிலை உருவாகும்

நேற்று ஒரு வயது குறைந்த திருமணம் நடந்த்து. ஹஜ்ரத் இப்போது குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்கிறார்களே என்ன செய்வது என்று மணப் பந்தலில் வைத்தே பெண்ணின் தகப்பனார் கேட்டார்.

இத்தகைய சிக்கல்கள் அவசியமா என்று யோசிக்க வேண்டும்

எனவே மிக அத்தியாவசியம் இல்லாம் சட்டத்தை  அவசரப்பட்டு மீறுவதை தவிர்ப்பதே நல்லது.

ஜெயஜேட்லீ அரசுக்கு அறிக்கை தருகிற போது அதில்

பெண்களின் திருமண  வயதை உயர்த்தும் சட்டம் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் உள்பட திருமணச் சட்டங்கள் அனைத்திலும் கொண்டுவர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்/

இது முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான ஒரு திட்டமிட்ட அநீதியான தாக்குதாலும்.

அக்கிரமக்கிறார்கள் இஸ்லாமின் வெளிச்சத்தை தம் வாயால் ஊதி அனைத்து விட நினைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ் தனது ஒளியை பேரொளியாக்கியே தீருவான்

அல்ஹம்து லில்லாஹ்.

 

 

 


No comments:

Post a Comment