வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 23, 2023

அல்லாஹ் நேசிக்கும் நோன்பாகட்டும்!

 மகத்தான ரமலான் வந்து விட்டது.

அருள் பொழியும் அம்மாதத்தின் அனைத்து நன்மைகளையும் அடைந்து கொள்ள ஆர்வமுடன் முயற்சிப்போம்.

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين، ومردة الجن، وغلقت أبواب النار، فلم يفتح منها باب، وفتحت أبواب الجنة، فلم يغلق منها باب، وينادي مناد: يا باغي الخير أقبل، ويا باغي الشر أقصر، ولله عتقاء من النار، وذلك كل ليلة» (رواه الترمذي

 நாம் நோன்பிருக்கிறோம். நோன்பின் மதிப்பு அலாதியானது.

عن سهل بن سعد الساعدي رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إن في الجنة بابًا يقال له الريان، يدخل منه الصائمون يوم القيامة، لا يدخل معهم أحد غيرهم، يقال: أين الصائمون؟ فيدخلون منه، فإذا دخل آخرهم، أغلق فلم يدخل منه أحد» (رواه البخاري ومسلم)

 வேறு எந்த பர்ளான கடமைக்கும் இப்படி ஒரு சிறப்பு சொல்லப்படவில்லை. அது நோன்பின் தனித்தன்மையை காட்டுகிறது.

 இன்னொரு ஹதீஸ் . அபூஹுரைரா ரலி அறிவிக்கிறார்கள். (புகாரி)

  يقولُ اللهُ عزَّ وجلَّ كلُّ عمَلِ ابنِ آدمَ له إلا الصيامَ فهو لِي وأنا أجزِي بِهِ إنَّمَا يتْرُكُ طعامَهَ وشَرَابَهُ مِن أجْلِي فصيامُهُ لَه وأنا أجزِي بِه كلُّ حسنةٍ بعشرِ أمثالِهَا إلى سبعمائِةِ ضعفٍ إلا الصيامَ فهو لِي وأنا أجزِي بِهِ

 யுத்த்தில் ஷஹீதாக துஆ செய்ய கேட்டுக் கொண்டவருக்கு இறுதியில் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன அறிவுரை

 يقولُ أبو أُمامةَ رَضِي اللهُ عَنه: "أنشَأ رسولُ اللهِ صلَّى اللهُ علَيه وسلَّم غَزْوًا، فأتَيْتُه، فقُلْتُ: يا رسولَ اللهِ، ادعُ اللهَ لي بالشَّهادةِ، قال: "اللَّهمَّ سلِّمْهم وغنِّمْهم"، فغزَوْنا فسَلِمْنا وغَنِمْنا، ثمَّ أنشَأ غَزْوًا آخَرَ، فأتَيْتُه فقُلْتُ: يا رَسولَ اللهِ، ادعُ اللهَ لي بالشَّهادةِ، قال: "اللَّهمَّ سلِّمْهم وغنِّمْهم"، فغزَوْنا فسَلِمْنا وغَنِمْنا، ثمَّ أنشَأ غَزْوًا آخَرَ فأتَيْتُه، فقُلْتُ: يا رسولَ اللهِ، أتَيْتُك تَتْرَى ثلاثًا أسأَلُك أن تدعوَ اللهَ لي بالشَّهادةِ، فقُلْتَ: "اللَّهمَّ سلِّمْهم وغنِّمْهم"، فغزَوْنا فسَلِمْنا وغَنِمْنا، فمُرْني يا رسولَ اللهِ بأمرٍ يَنفَعُني اللهُ به، قال: "عليكَ بالصَّومِ؛ فإنَّه لا مِثْلَ له"، قال الرَّاوي: وكان أبو أُمامةَ لا يَكادُ يُرى في بيتِه الدُّخَانُ بالنَّهارِ، فإذا رُئِيَ الدُّخَانُ بالنَّهارِ، عرَفوا أنَّ ضَيفًا اعتَرَاهم

 முஸ்லிம் உம்மத்தில் பெரும்பாலோர் ஏன் அத்தைனை பேரும் (முஸ்லிம்களீல் நோன்பை விடுவோரின் எண்ணிக்கை சதவீதக்கணக்கில் மிகவும் குறைவு)  

பெரியவர் சிறுவர் என்றில்லாமல்  முறையாக நோன்பை கடைபிடிக்கின்றனர்.

 முஸ்லிம்களின் நோன்பு அனைவரையும் கவர்கிறது. தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பு வைக்கிறீர்கள். எச்சில் கூட விழுங்குவதில்லையாமே என்று ஆச்சரியப்படுகிறார்கள். டென்மார்க்கில் 22 மணி நேர நோன்பாமே என்று வாய்ப்பிளக்கிறார்கள்.

 முஸ்லிம்களோ இந்த ஆச்சரியப்படுதல்களில் மயங்கி விடாமல் நோன்பை சரியாக கடைபிடிக்க வேண்டுமே என்று கவலைப்படுகிறார்கள்.

 இரவு குறைவாக இருக்கிற நாடுகளில் நிறைவாக தஹஜ்ஜுத் தொழு முடிவதில்லையே என்று வருத்தப்படுகிறார்களே தவிர நோன்பு சிரமப்படுத்துவதாக நினைப்பதே இல்லை.

 முஸ்லிம்களின் நோன்பை பாராட்ட மனமில்லாத சிலர் இதிலென்ன அதிசயம் இது எங்களை பார்த்து காப்பி அடித்தது தான் என்று சிறு பிள்ளைகளைப் போல பேசுகிறார்கள்.

கிருத்துவர்கள் என்பதாக் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகம் அவர்கள் என்ன சொன்னாலும் பிரசுரிக்கிறது.

 ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகம் வெளியிட்டுள்ள ஒரு நூல் The New Faces of Christianity: Believing the Bible in the Global South.  

 Jenkins, Philip (2006).  என்பவர் எழுதியது..

 சிரியன் கிருத்துவர்களிடமிருந்து தான் நோன்பு நடைமுறையை முஸ்லிம்கள் அறிந்து கொண்டனர்  என்று அதில் அவர் கூறுகிறார்.

 நமக்கு அதில் ஆட்சேபனை ஒன்றும் இல்லை.

 ஏனெனில் திருக்குர் ஆன் நோன்பு என்பதை முந்தைய சமூகத்தினரும் கை கொண்டு வந்த வழக்கம் என்று தான் கூறுகிறது.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ.

 இன்னும் சொல்லப்போனால் முந்தைய சமூகத்தினருக்கு இருந்த அளவு சிரம்ம் முஸ்லிம்களுக்கு இல்லை.

 இரவு நேரங்களில் மனைவியோடு உறவு கொள்ளும் அனுமதி முஸ்லிம்களுக்கு உண்டு.

 இது பற்றி பேசுகிற திருக்குர் ஆனிய வசனம் أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَىٰ نِسَائِكُمْ ۚ 

என்று கூறுகிறது.

இதிலுள்ள أُحِلَّ لَكُمْ எனும் வார்த்தை இது முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமான சலுகை என்பதை காட்டுகிறது.

  عن ابن عباس ، قال : إن الناس كانوا قبل أن ينزل في الصوم ما نزل فيهم يأكلون ويشربون ، ويحل لهم شأن النساء ، فإذا نام أحدهم لم يطعم ولم يشرب ولا يأتي أهله حتى يفطر من القابلة ، فبلغنا أن عمر بن الخطاب بعدما نام ووجب عليه الصوم وقع على أهله ، ثم جاء إلى النبي صلى الله عليه وسلم فقال : أشكو إلى الله وإليك الذي صنعت . قال" وماذا صنعت ؟ " قال : إني سولت لي نفسي ، فوقعت على أهلي بعد ما نمت وأنا أريد الصوم . فزعموا أن النبي صلى الله عليه وسلم قال" ما كنت خليقا أن تفعل " . فنزل الكتاب( أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم )

 அதே போல முந்தைய சமூகங்களில் நோன்பு வைத்தால் பேசுவதற்கு கூட தடை இருந்த்து என சில விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்

 إذا صاموا لا يتكلمون احدا الا بالرموز والاشارات

 அதனால் தான் மர்யம் அம்மையார் நான் நோன்பு வைத்திருக்கிறேன் பேச முடியாது என்றார்கள்

  إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَٰنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا 

 இது போன்ற பல சவுகரியங்கள் முஸ்லிம்களுக்கு தரப்பட்டிருக்கின்றன என்றாலும் முஸ்லிம்களின் நோன்பு வைக்கும் உணர்வும் மரபும் முந்தைய எந்த சமூகத்திற்கும் ஒப்பானதல்ல.

 இது கிருத்துவர்களிடமிருந்து காப்பி அடிக்கப்பட்ட பழக்கம் என்று சொல்வதெல்லாம் நகைப்பிற்குரியது.

 ஏனெனில் கிருத்துவர்கள் லெந்து கால விரதம் என்ற பெயரில் குட் பிரைடே வுக்கு முந்தைய நாற்பது நாட்கள் நோன்பு வைக்கிறார்கள்.

 அந்த வழக்கம் அனைத்து கிருத்துவர்களிடமும் பொதுவானதாக இல்லை/

 முதலில் கிருத்துவ மத்தின் ஆதி கோட்பாடா என்ற கேள்வியிலேயே சந்தேகம் இருக்கிறது.

 கிபி ஐந்தாம் நூற்றாண்டிற்கு பிறகே இந்த வழக்கம் ஏற்பட்ட்து

 ஆரம்ப காலத்தில் திருச்சபைகள் குட்பிரைடே வுக்கு முன்னதாக ஓரிரு நாட்கள் நோன்பிருந்தனர்.

 பெரிய குற்றம் செய்தவர்கள் மட்டும் ஆறு வாரங்கள் நோன்பிருக்கும் பழக்கம் பின்னர் உருவாக்கப்பட்டது.

 இதிலும் இடையில் வருகிற 6 ஞாயிறுளும் நோன்பு கிடையாது.

 நோன்பு என்றால் வழக்கமாக உண்ணும் உணவை குறைத்துக் கொள்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இறைச்சியை தவிர்த்துக் கொள்வர்.

 நோன்பு என்பதை பிரார்த்தனை என்றும் ஏழைகளுக்கு உதவுதல் என்று பிற்காலத்தில் மாற்றிக் கொண்டனர்.

 இந்த நோன்பு நடைமுறையை முஸ்லிம்களின் நோன்போடு ஒப்பிடுவது எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பதே கேள்விக்குரியாக இருக்கும் போது அதிலிருந்து காப்பி அடிக்கப்பட்ட்து தான் என்று சொல்வது எவ்வளவு அறிவீனமானது?

 முஸ்லிம்களிடன் இஸ்லாமிய நோன்பு பசியை தாகத்தை தாங்கிக் கொள்வதற்கு அப்பால் வேறு பல கட்டுப்பாடுகளையும் எதிர்பார்க்கிறது.

 عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «الصيام جُنة فلا يرفث ولا يجهل، وإن امرؤ قاتله أو شاتمه فليقل: إني صائم مرتين» (البخاري ومسلم).

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «من لم يدع قول الزور والعمل به، فليس لله حاجة في أن يدع طعامه وشرابه» (رواه البخاري).

  இமாம் கஸ்ஸாலி ரஹ் கூறுகிறார்கள்.

 நோன்பு என்றால் தர்கு விட்டு விடுதலாகும்.

 நோன்பு என்பது பத்து உறுப்புக்களின் கட்டுப்பாடாகும்.

தலையிலுள்ள 5 உறுப்புகள் அதிலொன்று எலும்பு இல்லாத்து.

தலைக்கீழுள்ள 5 உறுப்புக்ள் அதிலுமொன்று எலும்பு இல்லாத்து.

 இரண்டு கண்கள்

இரண்டு காதுகள்

ஒரு நாவு

இரண்டு கைகள்

இரண்டு கால்கள்

மர்ம உறுப்பு

 இவற்றில் எதை எல்லாம் விட்டு விட வேண்டுமோ அவை அனைத்தையும் விட்டுவிடுவதுதான் நோன்பு

 وروى جابر عن أنس عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أنه قال خمس يفطرن الصائم الكذب والغيبة والنميمة واليمين الكاذبة والنظر بشهوة

 இமாம் கஸ்ஸாலி மேற்கோள் காட்டுகீறார்கள்.

 சுப்யான் அத் தவ்ரீ அவர்களிடம் நோன்பாளி புறம் பேசினால் நோன்பு முறிந்து விடும்

முஜாஹித் ரஹ் அவர்களின் கருத்துப்படி பொய் பேசினால் நோன்பு முறிந்து விடும்.

 وقد قال سفيان الغيبة تفسد الصوم

وروى ليث عن مجاهد خصلتان يفسدان الصيام الغيبة والكذب

 நல்லவேளையாக நமது இமாம்கள் இப்படி சட்டம் சொல்ல வில்லை என்றாலும்

 தீய செயல்களோடு நோன்பு வைத்து பயனேதும் இல்லை என்று ஹதீஸ்கள் சொல்வதை நினைவில் வைப்போம்.

 நோன்பின் விளைவை திருக்குர் ஆன் இப்படிக் கூறுகிறது.

 لَعَلَّكُمْ تَتَّقُونَ என்பதன் பொருள் நீங்கள் தீமைகளை விட்டு விலகிக் கொள்ள கூடும் என்றும் ஒரு பொருளுண்டு

 தக்வா என்றாலே மறுமையில் தீங்கு ஏற்படுத்தக் கூடியவைகளை விட்டு விலகிக் கொள்ளுதல் என்று இமாம் பைளாவி கூறுகிறார்கள்.

 முஸ்லிம்கள் ரமலானில் நோன்பின் நடைமுறைகளை பரிபூரணமாக கடைபிடிக்க முயல் வேண்டும்.

 ஒரு காலத்தில் ஏதேனும் ஒரு காரணத்தினால் நோன்பு வைக்காதவர்கள் நோன்பு வைத்தவர்களைப் போலவே நடந்து கொள்வார்கள். பொது வெளியில் உண்னவோ சாப்பிடவோ மாட்டார்கள்.

 இதுவே இஸ்லாமிய நடைமுறையாகும் .

 நோன்பு நேரத்தில் நோன்பு வைக்காத்தை வெளிப்படுத்துவது பாவகரமானது என மார்க்கம் கூறுகிறது.

 عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيُّ رَضِيَ الله عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «بَيْنَما أَنَا نَائِمٌ إِذْ أَتَانِي رَجُلانِ، فَأَخَذَا بِضَبْعَيَّ، فَأَتَيَا بِي جَبَلا وَعْرًا، فَقَالا: اصْعَدْ فَقُلْتُ: إِنِّي لا أُطِيقُهُ فَقَالا: إِنَّا سَنُسَهِّلُهُ لَكَ فَصَعِدْتُ حَتَّى إِذَا كُنْتُ فِي سَوَاءِ الْجَبَلِ إِذَا بِأَصْوَاتٍ شَدِيدَةٍ، قُلْتُ: مَا هَذِهِ الأَصْوَاتُ؟ قَالُوا: هَذَا عُوَاءُ أَهْلِ النَّارِ ثُمَّ انْطَلَقَا بِي، فَإِذَا أَنَا بِقَوْمٍ مُعَلَّقِينَ بِعَرَاقِيبِهِمْ، مُشَقَّقَةٍ أَشْدَاقُهُمْ، تَسِيلُ أَشْدَاقُهُمْ دَمًا، قَالَ: قُلْتُ: مَنْ هَؤُلاءِ؟ قَالَ: هَؤُلاءِ الَّذِينَ يُفْطِرُونَ قَبْلَ تَحِلَّةِ صَوْمِهِمْ».

 எனவே இப்புனித மிகு ரமலானில் நாம் நோற்கிற நோன்பை பசியை தாகத்தை தாங்கிக் கொள்கிறோம் என்று உலகம் புகழ்ந்தாலும் அல்லாஹ் புகழ்கிற நோன்பாக அது அமையுமாறு பார்த்துக் கொள்வோம்.

 عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ قَالَ يَوْمًا ، وَحَضَرَ رَمَضَانُ:

( أَتَاكُمْ رَمَضَانُ شَهْرُ بَرَكَةٍ ، فِيهِ خَيْرٌ يَغْشَاكُمُ اللَّهُ فَيُنْزِلُ الرَّحْمَةَ وَيَحُطُّ فِيهَا الْخَطَايَا ، وَيُسْتَحَبُّ فِيهَا الدَّعْوَةُ ، يَنْظُرُ اللَّهُ إِلَى تَنَافُسِكُمْ وَيُبَاهِيكُمْ بِمَلَائِكَةٍ ، فَأَرُوا اللَّهَ مِنْ أَنْفُسَكُمْ خَيْرًا ، فَإِنَّ الشَّقِيَّ كُلَّ الشَّقِيِّ مَنْ حُرِمَ فِيهِ رَحْمَةَ اللَّهِ ) .

 இப்புனித மிகு ரம்லானில் இயன்ற வரை நன்மைகள் செய்வோம்.

இயன்ற வரை தீமைகளை விட்டு விலகி நிற்போம்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

No comments:

Post a Comment