வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 25, 2024

இஸ்லாமிய குடியரசின் அடிப்படை

இன்று உலகில் 57 முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன. அவற்றில் பலதில் மன்னராட்சி முறையும், சிலதில் தேர்தல் ஜனநாயக நடைமுறையும், மற்ற சிலதில் சர்வாதிகார அரசுகளும் நடைபெறுகின்றன..

இந்த முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைக்க கூடிய ஒரு வலிமையான அரசு தலைமை இல்லை.

ஆனால் ஒரு நூறு வருட்த்திற்கு முன்பு வரை அதவாது 1922 வரை அவ்வாறு ஒருங்கிணைத்து நின்ற ஒரு அமைப்பு இருந்தது. அந்த அமைப்புக்கு கிலாபத் என்று பெயர்.

கீபி 632 ம் ஆண்டில் கலீபா அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களிலிருந்து அந்த கிலாபத்  தொடங்கியது. 1922 ல் துருக்கிய உதுமானிய ஃகலீபா இரண்டாம் அப்துல் மஜீத் அவர்கள் வரை  அது  நிலை நின்றது. சுமார் ஆயிரத்து முன்னூற்று தொண்ணூறு  ஆண்டுகள் இஸ்லாமிய பேரரசு நடை பெற்றது. இந்த காலகட்டத்தில் உலகின் நடவடிக்கைகளை தீர்மாணிப்பவர்களாக முஸ்லிம்களின் அரசு இருந்தது. நிலப்பரப்பிலும் நீர் வழியிலும் முஸ்லிம்களின் அனுமதியின்றி பெரிதாக எதுவும் நடக்க முடியாது என்ற சூழல் இருந்தது.

உலகில் ஒரு மதம் சார்ந்த சாம்ராஜ்யமாக முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் நிலைத்து நின்றது போல வெறெந்த அரசுகளும் எதுவும் பெயர் பெற்றதில்லை.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பெரிதாக இருந்த்து தான் ஆனால் கிருத்துவ மதம் சார்ந்த அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய அரசாக இருக்க வில்லை. பிரான்ஸ் ரஷ்யா போன்ற பல ஐரோப்பிய கிருத்துவ நாடுகள் பிரிட்டிஷ் அரசுக்கு வெளியே நின்றன. ஏன் எதிர்த்து நின்றன என்று சொன்னால் கூட மிகையில்லை.

அந்த வகையில் முஸ்லிம்களின் கிலாபத் என்பது உலக வரலாற்றில் தன்னிகரற்றது ஆகும்.

கிலாபத் எப்படி இருந்தது.

கிலாபத் நிலை நின்றது என்றால் முஸ்லிம்கள் ஒரே அரசாக இருந்தன என்று பொருள் அல்ல; உலகின் பல பாகங்களிலும் நடை பெற்ற முஸ்லிம் அரசுகள் ஒரு தலைமையின் கீழ் கட்டுப்படுவதாக உறுதியளித்து நின்றன.

இந்தியாவில் முகலாய மன்னர்கள் தனியான அரசாட்சி  செய்தார்கள். எனினும் துருக்கி கலீபாவுக்கு தங்களது நல்லெண்ணத்தையும் கட்டுப்படுதலையும் வெளிப்படுத்தினர். அம்மன்னர்களை கவுரவிக்கிற வகையில் கலீஃபா ஏதேனு அன்பளிப்புகளை அனுப்பி வைத்தால் அது தங்களுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரமாக அம்மன்னர்கள் நினைத்தனர். 

இந்த ஒருங்கிணைப்பின் காரணமாக உலகில் வளர்ந்து வந்த எந்த சக்தியும் முஸ்லிம்களின் அரசுகளுக்கு இடையூறு அளிக்க அஞ்சின.

செங்கிஸ்தான் சீனாவை அடுத்துள்ள பல பகுதிகளையும் வெற்றி கொண்டான். இஸ்லாமிய ஆட்சிப் பகுதிக்குள் கால் வைக்க தயங்கினான் என்பது தான் வரலாறு. தேவையற்று அவனது கோபத்தை எல்லையிலிருந்த முஸ்லிம் அரசர் சீண்டியதால் தான் அவன் இஸ்லாமிய பிரதேசங்களை ஆக்ரமித்தான்.

முஸ்லிம்களின் இந்த கிலாபத் என்பது இஸ்லாம் என்ற அடிப்படையில் இருந்த்து.

பல பகுதிகளின் ஆட்சியாளர்கள் வெவ்வேறு இனம் மொழி சார்ந்தவர்களாக  இருந்த போது இஸ்லாம் என்ற ஒற்றை சொல்லில் ஒன்றிணைந்து நின்றனர். அதுவே முஸ்லிம்களின் பெரும் பலமாக இருந்தது.

தாத்திஸ்ஸ்லாஸில் யுத்தத்திற்கு அம்ரு பின் ஆஸ் ரலி அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் தலைராக நியமித்தார்கள். சில நூறு பேர் கொண்ட படையாக அது இருந்த்து. எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்த்தால் துணைக்கு வேறு படையை அனுப்புமாறு அம்ரு ரலி கடிதம் எழுதினார்கள். அதனடிப்படையில் அபூ உபைதா ரலி அவர்களின் தலைமையில் இரண்டாயிரம் பேர் கொண்ட ஒரு படையை பெருமானார் (ஸ்ல) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அந்த இரு படையும் சந்தித்துக் கொண்ட போது யார் தலைவர் என்ற பிரச்சனை எழுந்த்து. படையினர், அபூஉபைதா ரலி அவர்களே தலைவராக இருக்க வேண்டும் என்று விரும்பினர்.

அம்ரு ரலி அவர்கள் “ நான் தான் தலைவர், எனக்கு துணையாகத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று கூறினார். அப்போது அபூஉபைதா ரலி அவர்கள் , நான் மதீனாவிலிருந்து கிளம்பும் போது இறுதியாக பெருமானார் (ஸ்ல) அவர்கள் என்னிடம் “. நீங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் போது, மோதிக் கொள்ளாதீர்கள்  என்று கூறினார்கள். அதனால் நீங்கள் எனது தலைமையை ஏற்காவிட்டால் நான் உங்களது தலைமையை ஏற்பேன் என்று சொன்னார்.

قال موسى بن عقبة في " مغازيه " : غزوة عمرو بن العاص هي غزوة ذات السلاسل من مشارف الشام ، فخاف عمرو من جانبه ذلك ، فاستمد رسول ص: 9 ] الله - صلى الله عليه وسلم - ، فانتدب أبا بكر وعمر في سراة من المهاجرين ، فأمر نبي الله عليهم أبا عبيدة ، فلما قدموا على عمرو بن العاص قال : أنا أميركم ، فقال المهاجرون : بل أنت أمير أصحابك ، وأميرنا أبو عبيدة . فقال عمرو : إنما أنتم مدد أمددت بكم . فلما رأى ذلك أبو عبيدة بن الجراح ، وكان رجلا حسن الخلق ، لين الشيمة ، متبعا لأمر رسول الله - صلى الله عليه وسلم - وعهده ، فسلم الإمارة لعمرو .

இந்த இஸ்லாமிய  இயல்பு தான் இஸ்லாமிய அரசுகளை இணைத்தது.

அப்படி இணைந்து நின்ற இஸ்லாமிய அரசு உலக வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக புகழ் பெற்று நின்ற பேரரசுகளை நடுங்க வைத்த்து.

ரோமப் பேரரசு உலகின் பாரம்பரிய பேரரசுகளில் ஒன்று. அதனுடன் ஒப்பிடுகிற போது முஸ்லிம்களின் அரசு என்பது கத்துக்குட்டி அரசு.

ஆனால் தங்களது இஸ்லாமிய சகோதரத்துவத்தின் மூலம் முஸ்லிம்கள் அனைத்தையும் தங்களது காலடியில் வைத்திருந்தனர்.

ஹழ்ரத் முஆவியா ரலி அவர்களின் ஆட்சி காலத்தில் முஸ்லிம் படைகளின் ஒரு பயணம் செய்த போது ரோம் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் முஸ்லிம் வீர்ர் ஒருவரை கண்ணத்தில் அறைந்து விட்டார். இதை அந்த வீர்ர் ஃகலீபா முஆவியா ரலி அவர்களிடம் முறையிட்டார்.

வரலாறு ஒரு ஆச்சரியகரமான நிகழ்வை காட்டுகிறது.

முஆவியா ரலி அவர்கள் இதற்கு சரியாக பதிலளிக்க முடிவு செய்தார்கள். இதற்கான ஆட்களை தேர்வு செய்தார்கள்.

அந்த ரோம அமைச்சர் மிக ஆச்சரியமான முறையில் அவருடைய ஊரிலிருந்து கடத்தப்பட்டு  டமாஸ்கஸுக்கு கொண்டு வரப்பட்டார். கலீபாவின் சபையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட அவரது கண்ணத்தில் முஸ்லிம் வீர்ரை அறையுமாறு முஆவியா ரலி அவர்கள் கூறீனார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. அதன் பின் முஆவியா ரலி அவர்கள் கூறினார்கள். உங்களை சிறை பிடிக்க  வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. எங்கள் வீர்ர்களை தொட்டால் ரோம அமைச்சரை எங்களது சபைக்கு கொண்டு வந்து கண்ணத்தில் அறைய்யா முடியும் என்று உனது அரசருக்கு தெரிவிப்பதே என்னுடைய நோக்கம் என்று சொல்லி அத்த் அமைச்சரை மரியாதையாக திருப்பி அனுப்பி வைத்தார்கள்.

இந்த வலிமை மிக சிக்கலான காட்ட்த்திலும் தொடர்ந்தது.

துருக்கிய உதுமானிய ஆட்சியின் கீழ் அரபுலகம் இருந்த போது துருக்கிய அரசு பெரும் கடனில் சிக்கியிருந்த்து. அப்போது புகழ் மிக்க அரசார் இரண்டாம் அப்துல் ஹமீது ஆட்சியில் இருந்தார். அது இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம். அதாவது 1900 களின் ஆரம்பம். அந்த காலகட்டத்தில் தான் யூதர்களுக்கு ஒரு அரசு வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வந்தது. தியோடர் ஹெர்சல் Theodor Herzlயூதர்களுக்கான  ஒரு அரசை அமைக்கும் தீவிர திட்டத்தில் இருந்தார். அவர் துருக்கிய கலீபாவை சந்தித்து , நான் துருக்கியின் கடன் மொத்தத்தையும் அடைத்து விடுகிறேன் எங்களுக்கு பாலஸ்தீனில் ஒரு நிலப்பகுதியை ஒதுக்கிக் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அப்துல் ஹம்தூ அதற்கு சம்மதிக்க வில்லை. பாலஸ்தீனர்கள் எங்களது சகோதரர்கள் அந்த நிலம் அவர்களுடையது. அதை நான் தர முடியாது என்று மறுத்துவிட்டார்.

 வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. அன்றைய துருக்கியின் கடன் பிரச்சனைக்கு தீர்வு காண்பது மிக முக்கியமானதாக இருந்தது. துருக்கி அதன்பிறகு சில காலங்களில் வீழ்ச்சியடைந்த்தற்கு அதன் பொருளாதார பலவீன்ங்கள் கூட ஒரு காரணம்.

 அத்தகைய சூழலிலும் கலீஃபா அப்துல் ஹமீது தனது சகோதரர்களை விட்டுக் கொடுக்க வில்லை.

 இதுதான் இஸ்லாமிய இயல்பு.

 நாம் அனைவரும் முஸ்லிம்கள். முஸ்லிம்கள் அனைவரும் சகோதர்ர்கள் என்ற தத்துவமே இஸ்லாமிய கிலாபத்தின் அடிப்படையாக இருந்தது.

 இந்த சகோதரத்துவத்தை தகர்ப்பதில் பிரிட்டிஷ் கார்ர்கள் வெற்றி கண்டார்கள். இந்தியாவில் எப்படி இந்துக்களையும் முஸ்லிம்களை பிளவு படுத்தி தங்களது காரியத்தை சாதித்துக் கொண்டார்களோ அதே போலத்தான் முஸ்லிம்களாக இன ரீதியாக பிரிப்பதில் வெற்றிகண்டார்கள்.

 அரபியர் துருக்கியர் என்ற வேறுபாட்டை அரபுலகிற்குள் பரப்பினார்கள். இதற்காக பல்வேறுபட்ட உளவாளிகளை அரபு நாடுகளுக்குள் அனுப்பினார்கள். அந்த உளவாளிகளில் சிலர் முஸ்லிம்களாகிவிட்டவர்கள் போல அரபு நாடுகளுக்குள் சென்று இஸ்லாமிய சிற்றர்ர்சர்கள் மற்றும் கவர்னர்களுக்கு நெருக்கமாக்கினார்கள். அந்த உளவாளிகள் அரசர்களின் ஆலோசகர்களாக மாறி தப்பான ஆலோசனைகளை வழக்கினார்கள்.

 இவ்வாறு அரபு நாட்டுக்கு பிரிட்டிஷாரின் உளவு ஆலோசகராக சென்றவர்களில் ஒருவர்தான் டி லாரன்ஸ்

 அவர் ஐரோப்பாவிலிருந்து நடந்தே மக்காவிற்கு சென்றார். மக்கா கவரனரின் ஆலோசகர் ஆனார். இஸ்லாமிய கிலாபத்திற்கு எதிராக அரபு ஆட்சியாளர்களை திசை திருப்புவதில் வெற்றி கண்டார்.

 அவருடைய வரலாற்றை தான் லாரன்ஸ் ஆப் அரேபியா என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்தார்கள். ஆங்கில் திரைப்பட உலகில் மிகப்பெரிய சாதனை செய்த திரைப்படம் அது.

 முஸ்லிம்கள் தங்களுடைய இஸ்லாமிய சகோதரத்துவத்தையும் இஸ்லாம் கொடுத்த வலிமையையும் மறந்து விட்டு அன்னிய ஆலோசர்களுக்கு அடிமைப்பட்ட போது பிளவுகள் ஏற்பட்டன. அதுவே முஸ்லிம்கள் பலவீனமடைய காரணமாயிற்று.

 وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ (46)    

 

 இதில் துருக்கியின் பங்கும் முக்கியமானது.

முதல் உலக யுத்த்தில் துருக்கி தோற்றுப் போன போது இஸ்லாமிய நாடுகள் தனி அரசுகளாக சிதறின. அப்போதும் கூட ஓரளவில் அவை துருக்கியை பற்றிய மரியாதையில் தான் இருந்தன. ஏனெனில் துருக்கிய கலிபாக்கள் அவ்வளவு மரியாதையுடையவர்களாக இருந்தார்கள். எனினும் துருக்கியில் ஏற்பட்ட மக்களுடைய மனமாற்றம் துருக்கி தானாக தனக்கிருந்த கிலாபத்தின் தகுதியை அழித்துக் கொண்ட்து.

ஆம்! முதல் உலக யுத்த்த்திற்கு பிறகு துருக்கியில் கமால் அத்தாதுர்கின் தலைமையில் அமைந்த அரசு – இஸ்லாமிய தலைமை வேண்டாம் என்று தூக்கி எறிந்த்து. துருக்கிக்கான பாராளுமன்றம் என்ற ஒன்றை உருவாக்கிக் கொண்டது. இதனால் தான் இஸ்லாமிய கிலாபத் அடையாளம் காணாமல் போனது என்று வரலாறு சொல்கிறது.

அங்கும் இஸ்லாம் கைவிடப்பட்ட்தே காரணமாகும்.

இப்போது துருக்கியில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, துருக்கி தனது தகுதியை உணர்ந்து ஒரு இஸ்லாமிய தலைமை ஏற்படுவதற்கான  முயற்சியில் முனைப்பு காட்டுகிறது.

ஆனால் அதற்கான சாத்தியங்கள் தூரமாகிக் கொண்டே செல்கின்றன.

முஸ்லிம்களும் இஸ்லாமிய அரசுகளும் இஸ்லாமின் கோட்பாட்டிலிருந்து மிக வேகமாக விலகிச் சென்று வருகின்றன.

சமீபத்தில் சவூதியின் இளவரசர் சவூதி நாட்டில் மதுக்கடைகளை திறக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

நவூது பில்ல்லாஹ்

நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம். முஸ்லிம்கள் இஸ்லாமிய வாழ்வியலின் அடிப்படைக்கும் முஸ்லிம் சகோதரத்துவ சிந்தனைக்கும் திரும்பி வர அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

நாமும் நமது சக்திக்கு உட்பட்ட அளவில் இஸ்லாமிய வாழ்வியலையும் முஸ்லிம் சகோதரத்துவ மனப்பான்மையையும் கடைபிடிப்போம்.

நிச்சயமாக உள்ளூரி அளவில் நாம் கடைபிடிக்கிற அந்த சகோதரத்துவம் உலக அளவில் மாற்றங்கள் ஏற்பட காரணமாக அமையும்.

இன்றைய நிலையில் முஸ்லிம்களின் பெரிய தெவை இஸ்லாமிய சகோதரத்துவத்தின் மாண்பை உளமாற உணர்ந்து அதற்கேற்ப செயல்படுவதே ஆகும்.

வரலாற்றின் மிக தீட்சண்யமான மனிதர்களில் ஒருவரான ஹழ்த் உமர் ரலி அவர்கள் கூறினார்கள்.

இஸ்லாமிற்கு பிறகு சிற்ந்த நன்மை என்பது ஒரு சாலிஹான சகோதரனை பெற்றுக் கொள்வதாகும்

நம்மை சுற்றியுள்ள முஸ்லிம்களை சகோதரர்களாக்கிக் கொள்வோம். அது இஸ்லாமின் வலிமைக்கு மிக முக்கிய அம்சமாகும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைய நிறைவாக நினைவூட்டுகிறேன்.

قول رسول الله صلى الله عليه وسلم: «يوشك أن تتداعى عليكم الأمم كما تداعى الأكلة على قصعتها، قالوا: أمن قلة نحن يومئذ؟ قال: بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل، ولينزعن الله من صدور عدوكم المهابة منكم، وليقذفنَّ في قلوبكم الوهن، قالوا: وما الوهن؟ قال: حب الدنيا وكراهية الموت»، رواه أبوداوود.

முஸ்லிம்களிடையே சகோதரத்தும் மிளிர அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

 

 

No comments:

Post a Comment