வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 15, 2024

பொருளாதாரம் அருளாதாரம் ஆக வேண்டுமெனில்

 கோவையில் சமீபத்தில் ஒரு தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். எம் வீ 3 என்ற ஒரு போன் அப்ளிகேசனை தொடங்கினார்அதில் பணம் கட்டி இணைகிறவர்கள் அவர்கள் அனுப்புகிற விளம்பரங்களை பார்த்தால் அதற்கு பணம் கிடைக்கும் என்று கூறினார். அதை நம்பி சுமார் 50 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இணைந்திருக்கிறார்கள்

. இதென்னடா புது வகையான மோசடியாக இருக்கிறதே! என்று பதறி காவல் துறை அவரை விசாரணைக்கு அழைத்திருக்கிறது. அவர் மூலம் சீக்கிரமாக் பணம் சம்பாதித்து விடலாம் என்று ஆசைப்பட்டவர்கள் 10 ஆயிரம் பேர் கொஞ்ச நேரத்தில் அவரை விடுவிக்க கோரி கோவையின் ஒரு பிரதான சாலையில் திரண்டு விட்டார்கள். இப்படியும் செல்வாக்குள்ள ஒரு நபர் கோவையில் இருக்கிறாரா என  நகரமே திகைத்துப் போய்விட்டது

உண்மையில் அவ்வாறு திரண்டவர்கள் எப்படியும் காசு பார்த்துவிட வேண்டும் என்ற அற்ப ஆசைக்கு பலியானவர்களே!

உலகம் பெரும் பாலும் இந்த மனோநிலைக்கு வந்து விட்டது.

இதற்கு முஸ்லிம்களும் தப்பவில்லை. அரபு நாடுகளில் காணப்படும் தலை கீழ் மாற்றங்களுக்கு என்ன காரணம் ? எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதானே?

கொள்கை கோட்பாடு கலாச்சாரம் சமுக சிந்தனைகள் அனைத்தையும் பணமாயை வென்று வருகிறது.

இந்த நிலையில் ஷஃபான் மாதம் நமக்கு ஒரு பிரேக்கை தருகிறது.

ஷஃபானில் நமது இந்த ஒருவருடத்தின் செயல்பாடுகள் அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுகின்றன.

ஒரு ரமலானுக்குப் பிறகு செய்யப்படுகிற அமல்கள் அனைத்தும் மொத்தமாக அல்லாஹ்விடம் ஷஃபானில் எடுத்துச் செல்லப்படுகிறது.

 فعن أسامة بن زيد رضي الله عنهما قال: قلت: يا رسول الله، لم أرك تصوم شهرًا من الشهور ما تصوم من شعبان، قال: «ذلِكَ شَهْرٌ يغفل الناسُ عنه بين رجبٍ ورمضان، وهو شَهْرٌ تُرفَع فيه الأعمالُ إلى رب العالمين؛ فأُحِبُّ أن يُرفَع عملي وأنا صائمٌ» رواه النسائي

 ரிஜ்கை தேடிய நமது செயல்களும் மற்ற அனைத்து காரியங்களும் நல்லதாகயும் நேர்மையானதாகவும் இருக்கட்டும். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

ரிஜ்கை தேடிச் செல்லுங்கள் என்று திருக்குர் ஆன் அறிவுறுத்துகிறது.

ٱبۡتَغُواْ مِن فَضۡلِ ٱللَّهِ

இதன் பொருள் ரிஜ்கை தேடிச் செல்லுங்கள் என்பதுதான்.

இதே வசனம் இன்னொரு உண்மையை அழுத்தமாக சொல்கிறது.

உங்களுக்கான ரிஜ்கை தேடிச் செல்லுங்கள் ஆனால் அது உங்களுடையது அல்ல. அல்லாஹ் கொடுப்பதாகும். فَضۡلِ ٱللَّهِ 

இந்த தத்துவத்தை முழுமையாக புரிந்து கொண்டதால் தான் நம்முடைய முன்னோர்களிடம் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழத பிறகு பள்ளிவாசலின் வாசலில் நின்று இப்படி துஆ கேட்கும் பழக்கம் இருந்திருக்கிறது. (குர்துபி)

كان عراك بن مالك إذا صلى الجمعة انصرف فوقف على باب المسجد فقال : اللهم إني أجبت دعوتك ، وصليت فريضتك ، وانتشرت كما أمرتني ، فارزقني من فضلك وأنت خير الرازقين .

நாம் ரிஜ்கை தேடிச் செல்கிறோம். ஆனால் ரிஜ்கை அல்லாஹ் தருகிறான்.

அல்லாஹ்தான் ரிஜ்கு தருபவன் . எப்படியும் நமக்கான ரிஜ்கை அவன் தந்துவிடுவான்.

கல்லினுள் சிறுதே ரைக்குங் கருப்பையண் டத்து யிர்க்கும்

புல்லுண வளித்துக் காக்கும்

 என்ற ஒரு தமிழ் பாடல் கருணைமிக்க இறைவனின் ரிஜ்கு வழங்கும் குணத்தை பறைசாற்றுகிறது.

வானம் பொழியவில்லை என்றாலும் நிலம், விளைய வில்லை என்றாலும் நமக்கான ரிஜ்கு நம்மை வந்து சேர்ந்து விடும் என்று இஸ்லாம் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.

அபூயஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) ஒரு ஒரு இமாமுக்கு பின்னால் நின்று தொழுதார். தொழுகைக்குப் பின் அவரை சந்தித்து முஸாபஹா செய்த அந்த  இமாம் பிஸ்தாமியிடம்உங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்.

 அவ்வளவு தான். “உங்களுக்குப் பின்னாலா நான் தொழுதேன்.   தொழுகையை திரும்ப தொழுதுவிட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு தொழுக சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து

, وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ (22) என்ற ஆயத்தை நான் அறிந்த காலத்திலிருந்து அதற்காக நான் அதிகம் கவலைப்படுவதில்லை என்று கூறீனார்.

 இந்த அளவு ரிஜ்கை பற்றியே கவலைப்படாத நிலை அனைவரிடமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் கூட கிடைக்கிற ரிஜ்கு அல்லாஹ்விடமிருந்து தான் கிடைக்கிறது என்ற சிந்தனை நம்மில் ஒவ்வொரு வரிடமும் இருக்க வேண்டியது அவசியம். நமது சந்ததிகளுக்கு அந்த சிந்தனை கொடுக்க வேண்டியதும் நமது கடமையாகும்.

அல்லாஹ் அவன் தருகிற ரிஜ்கை சிறப்பாக பெற்றுக் கொள்வதற்கு சில வழிகளை வைத்திருக்கிறான்.

மார்க்க அறிஞர்கள் அதற்கான 15 காரணிகளை வரிசைப்படுத்தியுள்ளனர்.

இவற்றில் அனைத்தையும் கடைபிடிக்கலாம். அல்லது இவற்றில் ஒன்றையாவது தொடர்ச்சியாகவும் பிடிவாதமாகவும் கடைபிடித்து வந்தால் நிச்சயமாக நமது ரிஜ்து நமக்கு விசாலமாகமாவும் எளிதாகவும் கிடைக்கும்.

  1.      தொழுகையை நிலைநாட்டுதல்குடும்பத்தை அதற்கு தூண்டுதல்

وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْأَلُكَ رِزْقًا ۖ نَّحْنُ نَرْزُقُكَ ۗ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَىٰ (132)

 முறையாகவும் நிலையாகவும் நாம் தொழுவோமானால் நமது ரிஜ்கு நம்மை சிரம்மின்றி வந்து சேரும்.

 நமது தொழுகை முறையின்றியும் நிலையின்றியும் இல்லாத போதுதான் அதற்கான பரக்கத் நம் கண்களுக்கு தெரிவதில்லை என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். 

2.   இஸ்திக்பார்

اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا

 . وعنِ ابْنِ عَبَّاسٍ رضِي اللَّه عنْهُما قَال: قالَ رَسُولُ اللَّهِ ﷺمنْ لَزِم الاسْتِغْفَار، جَعَلَ اللَّه لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مخْرجًا، ومنْ كُلِّ هَمٍّ فَرجًا، وَرَزَقَهُ مِنْ حيْثُ لاَ يَحْتَسِبُ رواه أبو داود

3 அல்லாஹ்விற்காக செலவழித்தல்

அல்லாஹ்விற்காக என்ற தூய எண்ணத்தோடு செலவு செய்யப்படும் ஒன்றுக்காக நிச்சயம் பத்து திரும்ப வரும்.

وَمَا أَنفَقْتُم مِّن شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ ۖ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ (39)

4.  4 தக்வா

தக்வா வின் மிகச் சாதாரணமான ஒரு பொருள். பாவங்களை விட்டு விலகி நிற்பதாகும். பாவங்கள் இல்லாத வாழ்விலும் நிச்சயம் ரிஜ்கும் பரக்கத்தும் நிலைக்கும்.

وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَٰكِن كَذَّبُوا فَأَخَذْنَاهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ (96)

பல பெரும் செல்வந்தர்கள் இழப்புகளை சந்தித்திருப்பார்கள் எனில் நிச்சய்ம் அதில் ஏதேனும் ஒரு பாவத்திற்கு தொடர்பு இருக்கும்.

5.   5  நபிலான அதிகப்படியான வணக்கங்கள்

ஹதீஸ் குத்ஸீயில் அல்லாஹ் கூறூகிறான். என்னை வணங்க நேரத்தை ஒதுக்கு! நான் உன் இதயத்தை செழிப்பால் நிரப்புகிறேன். உன் வறுமையின் வாசலை அடைத்து விடுகிறேன்.

عن أبي هريرة رضي الله عنه أن النبي - صلى الله عليه وسلم - قال : ( إن الله تعالى يقول : يا بن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسدُّ فقرك ، وإلا تفعل ملأت يديك شغلا ولم أسد فقركرواه الترمذي وابن ماجة

நமது அன்றாட தேவைகளை சரிக்கட்ட எவ்வளவு வேலைகள் செய்கிறோம். சில பேர் அதிகாலையிலிருந்து நடு நிசி வரை உழைக்கிறார்கள்.

ஓலா பைக் ஓட்டுகிற ஒருவர் கூறினார்; ஒரு நாளைக்கு 100 150 கீமி பைக் ஓட்டுகிறோம். இந்த சாலைகள் எங்களது முதுகெலும்பை பதம் பார்த்து விடுகின்றன என்று கவலைப்பட்டார்.

இவ்வளவு கடினமாக உழைத்தும் சிரமங்கள் தீர்வதில்லை. ஆனால்  சில அதிகப்படியான வணக்கங்கள் வறுமையை போக்கிவிடும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

6.   6 ஹஜ் உம்ரா செய்வதும் ரிஜ்கிற்கு வழி வகுக்கும்

இது செலவு போல தெரியும்.  ஆனால் இதுவே பரக்கத்திற்கு காரணம் ஆகும்

ஹ்ஜ்ஜையும் உம்ராவையும்  தொட்ர்ந்து செய்யுங்கள்! அது பாவங்களை அழிப்பது போல ஏழ்மையையும் தடுக்கிறது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

قال رسول الله صلى الله عليه وسلم: (تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ، فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ، كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ، وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الْجَنَّةُ) رواه التّرمذي.

ஹஜ்ஜில் உம்ராவின் துஆ கேட்பதும் நன்மைகளுக்கு காரணம் ஆகும்.  

7.   7 உறவுகளை சேரந்து வாழுதல்அவர்களிடம் அன்புடன் பழகுதல்அவர்களுக்கு ஏற்படுகிற சோதனையில் உடன்  இருப்பது.

 عَنْ أَبِي هُرَيْرَةَ t قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺمَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ له فِي رِزْقِهِ، وأَنْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ, فَلْيَصِلْ رَحِمَهُ. أَخْرَجَهُ الْبُخَارِيُّ.

8.       பலவீன மானவர்களுக்கு உதவி செய்தல்நம்மைச் சார்ந்திருக்கிற் முதியவர்கள், ஊனமுற்றவர்கள், அநாதைகள் பெண்கள் விருந்தாளிகளுக்கு உதவிகள் செய்வது.

 

அப்படி செய்யும் ப்போது உங்களுக்கு உதவி கிடைக்கும் என நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள் .

 என்னிடம் பலவீனமானவர்களை தேடிக் கொண்டு வாருங்கள் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்

அபூதாவூதில் அபுத்தர்தாஃ ரலி அறிவிக்கிற ஒரு ஹதீஸ் உண்டு.

  ابغوني الضُّعفاءَ ، فإنَّما تُرزقونَ و تُنصرونَ بضعفائِكُمْ

 ஆகவே இத்தகையோரை சுமையாக கருதுதல் கூடாது.  பலவீனமான பிரிவினரிடம் நாம் காட்டுகிற கருணையின் காரணாமாகத்தான் அல்லாஹ் நமது பல தவறுகளை கண்டு கொள்ளாமல் விடுகிறான் என்கிறது திருக்குர்ஆன்.

 وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَىٰ ظَهْرِهَا مِن دَابَّةٍ وَلَٰكِن يُؤَخِّرُهُمْ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى ۖ

 9  தவக்குல்

அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கையை வைப்பது. அவன் கைவிட மாட்டான் என்று உறுதி கொள்வது

ومن يتوكل على الله فهو حسبه

لو أنَّكم كنتُم توَكلونَ علَى اللهِ حقَّ توَكلِه لرزقتُم كما يرزقُ الطَّيرُ تغدو خماصًا وتروحُ بطانًا

الراويعمر بن | المصدرصحيح الترمذي

 

இந்த ஹதீஸில் சிந்திப்பதற்கு ஒரு செய்தி இருக்கிஅது.

மனிதர்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டு கிளம்புகிறார்கள். பசியோடு திரும்புகிறார்கள். ஆனால் பறவைகளோ பசியோடு கிளம்பி வயிறு நிரம்பி திரும்புகின்றன. .

பறவைகள் சேர்த்து வைப்பதும் இல்லை.

அதே போல மனிதன் சம்பாதிப்பதற்காக அதிக சிரமம் எடுத்துக் கொண்டாலும் அவனால் விலங்குகள் அளவுக்கு சாப்பிட முடியாது. ஆடோ மாடோ எவ்வளவு சளிக்காமல் சாப்பிடுகின்றன ? .ஆனால் மனிதர்களுக்கோ  கொஞ்சம் சாப்பிட்ட்தும் சளித்து விடுகிறது.

பறவைகள் அல்லாஹ்வை நம்பிச் செல்கின்றன .மனிதன் தன்னை நம்பிச் செல்கிறான்.

10. 10  நன்றி செலுத்துதல்

لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ (7

م قال الشيخ ابن عطاء الله رضي اللّه عنه
( من لم يشكر النّعم ، فقد تعرّض لزوالها ، ومن شكرها فقد قيّدها بعقالها )

11. 11 வீட்டிற்குள் நுழையும் போது சிரிப்போடும் சலாம் சொல்லிக் கொண்டும் செல்ல வேண்டும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் நுழையும் அஸ்ஸலாமு அலைக்கும்! யா ஆயிஷ்! கைஃப் தீகும். என்று கூறூவார்கள் என ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

- ثلاثةٌ كلُّهم ضامنٌ علَى اللَّهِ إن عاشَ رزقَ وَكُفيَ وإن ماتَ أدخلَهُ اللَّهُ الجنَّةَ مَن دخلَ بيتَهُ فسلَّمَ فَهوَ ضامنٌ على اللَّهِ ومَن خرجَ إلى المسجِدِ فَهوَ ضامنٌ علَى اللَّهِ ومَن خرجَ في سبيلِ اللَّهِ فَهوَ ضامنٌ على اللَّهِ

الراويأبو أمامة الباهلي |أخرجه أبو داود (2494)، والبخاري

1212 . பெற்றோருக்கு உதவி

பெற்றோர்கள் இருக்கும் போது அவர்களை அனுசரித்தும் உபசரித்தும் வாழ்வது ரிஜ்கை கொண்டு வந்து சேர்க்கும்.

அவர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக துஆ செய்வது ரிஜ்கை கொண்டு வந்து சேர்க்கும்.

நம்முடைய முன்னோர்கள் சொல்வர்கள், பெற்றோருக்காக துஆ செய்யாவிட்டால் ரிஜ்கு கிடைக்காமல் போய்விடும்.  

 إِذَا تَرَكَ الْعَبْدُ الدُّعَاءَ لِلْوَالِدَيْنِ ؛ فَإِنَّهُ يَنْقَطِعُ عَلَى الْوَلد الرِّزْقُ فِي الدُّنْيَا

 13. லுஹா தொழுகை

நல்லறங்கள் தனித்தனியாக செய்யும் நன்மையை விட அனைத்தையும் ஒன்றாக பெரும் வாய்ப்பு லுஹா தொழுதால் கிடைக்கும் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

روى مسلم في صحيحه عن أبي ذر عن النبي صلى الله عليه وسلم أنه قال: يصبح على كل سلامى من أحدكم صدقة، فكل تسبيحة صدقة، وكل تحميدة صدقة، وكل تهليلة صدقة، وكل تكبيرة صدقة، وأمر بالمعروف صدقة، ونهي عن المنكر صدقة، ويجزئ من ذلك ركعتان يركعهما من الضحى.

காலையில் வியாபாரத்திற்காக தொழிலுக்காக வெளியே செல்லும் போது இரண்டு ரகாஅத்துகள் தொழுதால் அது லுஹா தொழுத்தாகிவிடும்.

தாய்மார்கள் பிள்ளைகலை பள்ளிக்கூட்த்திற்கு அனுப்பிய பிறகு கனவனை வேலைக்கு அனுப்பிய பிறகு இரண்டு ரகாஅத் தொழும் பழக்கத்தை வைத்துக் கொண்டால் ரிஜ்கு வந்து சேர வேறு எதுவும் தேவ்வயில்லை.

14. 14 வாகிஆ ஓதுதல்

عن ابن مسعود -رضي الله عنه- أن النبي صلى الله وسلم قالمن قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبداً.

15.  15 தொடர்ந்து துஆக்கள் கேட்பதும் ரிஜ்கை கொண்டு வந்து சேர்க்கும்.

நபி மூஸா அலை அவர்கள் மிக நீண்ட பயணம் செய்து எகிப்திலிருந்து மத்யன் நகர் வந்து சேர்ந்த போது தண்ணீர் எடுக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்த பெண்களுக்கு உதவிய போதும் அவர்களிடம் கொஞ்சம் உணவு கிடைக்குமா என்று கேட்கவில்லை. அல்லாஹ்விடமே துஆ செய்தார்க:

அல்லாஹ் அவர்களுக்கான சிறப்பான ஏற்பாட்டை முன் அறிமுகம் அற்ற அந்த ஊரில் செய்து கொடுத்தான்

மார்க்க அறிஞர்கள் கூறுவதுண்டு.

ஷஃபான் 15 லிருந்து ரமலான் லைலத்துல் கத்ரு இரவு வரை துஆ கேட்பதற்கான நாட்களாகும்.

லைலத்துல் கத்ர் இரவில் அடுத்த வருடத்திற்கான ஆயிளையும் ரிஜ்கையும் அல்லாஹ் தீர்மாணிக்கிறான்.அதை கருத்தில் கொண்டு அதிகமாக துஆ வில் ஈடுபடுங்கள். அது ரிஜ்கு நிறையவும் வாய்ப்பாக அமையும்.

நாம் நமக்கு தேவையான வாழ்வாதாரங்களை (ரிஜ்கை) தேடி கடுமையாக உழைக்கிறோம். அதிலேயே கவனமாக இருக்கிறோம். அதை சேமிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்கிறோம்.

அதில் ஒரு விழிப்புணர்வை பெறுவோம்.

நமது ரிஜ்கு என்பது அல்லாஹ் தருகிற கொடையாகும் என்பதை அழுத்தமாக உணர்ந்து அந்த ரிஜ்கை பெறுவதற்கு காரணமாக சொல்லப் பட்ட இந்த நற்செயல்களில் நாம் கவனம் செலுத்துவோம்.

தேவையும் முறையும் அற்ற கண்ட கண்ட வழிகளில் கவனம் செலுத்துவதை தவிர்ப்போம்.

இந்த ஷஃபான் மாத்த்தை அதற்காக சிறப்பாக நினைவில் கொள்வோம்.

  அல்லாஹ் தவ்பீக் செய்தருள்வானாக!

2 comments:

  1. Anonymous7:45 PM

    بارك الله في جهدك

    ReplyDelete
  2. Anonymous8:29 AM

    Barakallah

    ReplyDelete