வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 08, 2024

மிஃராஜ் மார்க்கத்தின் அடிவாரம்.

நேற்றைய முன்தினம் நம்முடைய பள்ளிவாசல்களில் மிஃராஜ் இரவின் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

ஆதம் அலை அவர்களது காலத்திலிருந்து 6 ம் நூற்றாண்டு வரை வானத்திற்கு மனிதர்கள் ஏறிச் செல்ல முடியும் என்ற சிந்தனை கற்பனை கூட செய்யப்படாத செய்தியாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணம் மனித வரலாற்றில் முதன் முறையாக இந்த கற்பனைய தகர்த்தது. அதுவும் இதற்கான கால எல்லைகளை உடைத்து தகர்த்தது.

மிஃராஜில் கவனிக்க வேண்டிய ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன. அதில் அந்த வரலாற்றுக்கு அப்பால் கவனிக்க வேண்டிய சில செய்திகளை இங்கு நினைவூட்டுகிறேன்.  

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் 50 வது வயதில் ரஜப் 27 ம் இரவில் மக்காவிலிருந்து பைத்துல் முகத்த்ஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக நின்று தொழவைத்தார்கள். அதன்பிறகு வானங்களையும் பிரபஞ்சத்தின் எல்லையாக இருக்கிற சித்ரத்துல் முன்தஹாவை கடந்து தனியாக சென்று அல்லாஹ்வை சந்தித்தார்கள். அல்லாஹ்வோடு பேசினார்கள். தொழுகையை கடமையாக பெற்றுக் கொண்டு திரும்பி வந்தார்கள். இவை அனைத்தும் இரவின் கொஞ்ச நேரத்தில் நடைபெற்றன.

திருக்குர் ஆனின் அற்புதமான இலக்கிய செழுமைக்கு ஒரு சான்றாக ஒரே வசனத்தில் மிஃராஜ் நடை பெற்ற நேரம் இடம் அதன் நோக்கம் அனைத்தும் ஒரே வசனத்தில் பேசப்பட்டுள்ளது.

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ

 இந்த நிகழ்வு பெருமானார் (ஸல்) அவர்களுக்கு தனிப்பட்டு கிடைத்த மரியாதையாகவும் அதே நேரத்தில் முஸ்லிம்களின் ஈமானுக்கு ஒரு பெரும் சோதனையாகவும் அமைந்தது..

இந்த நிகழ்வை நிரூபிக்க ஏராளமான ஆதரங்களை அல்லாஹ் வைத்திருந்தான்.

புராக்கில் மின்னல் வேக பயணம்

பெருமானார் (ஸல்) அவர்கள் பயணம் செய்த வாகனத்திற்கு புராக் என்று பெயர், பர்க் என்றால் மின்னல் என்று அர்த்தம். மிஃராஜ் மிக குறைந்த நேரத்தில் - மின்னல் வெட்டி மறையும்  பொழுதிற்குள் நடந்து முடிந்து விட்டது .என்ற கருத்தை இது குறிக்கிறது.

இவ்வளவு வேகமான பயணத்தில் சாதாரணமாக நாம் எதையும் நிதானமாக பார்க்கவோ நினைவில் வைக்கவோ முடியாது.

100 கீமி வேகத்தில் காரில் சென்றால் சாலையில் இருந்தவற்றை கவனிக்க முடியுமா ?  ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்திற்கு இடையில் அவர்கள் பார்த்து அனுபவித்த பல செய்திகளை நிதானமாக கூறினார்கள்

மிஃராஜ் பயணத்தின் போது பெருமானார் (ஸல்) ஒரு கப்ரை கடந்து சென்றார்கள், அதிலிருந்து மிக சுகந்தமான நறுமணம் வந்து கொண்டிருந்தது. இது யாருடைய கப்ரு என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இது பிர்அவ்னுக்கும் அவனுடைய குடும்பத்திற்கும்  நறுமண தைலம் பூசுகிற பெண்மணியின் மண்ணறை. அந்த பெண் பிர் அவ்னின் பணியாளராக இருந்த போதும் அவனை நம்பாமல் மூஸா அலை அவர்களை நம்பினார் என ஜிப்ரயீல் அலை அவர்கள் கூறினார்கள்.

மூஸா அலை அவர்கள் தன்ன்னுடைய கப்ரில் தொழுது கொண்டிருப்பதை பெருமானார் (ஸல் அவர்கள் பார்த்தார்கள்.

மக்காவிற்கு திரும்பும் வழியில் சந்தித்த 3 பயணிகள்  குழுவினரின் பெயரை குறிப்பிட்டு அதில் நடந்த வற்றை பற்றி கூறினார்கள். சொன்னார்கள்.

 

ரவ்ஹாவில் ஒரு குழுவினர் காணாமல் போன அவர்களது ஒட்டகையை தேடச் சென்றிருந்தனர். அங்கிருந்த பாத்திரத்திலிருந்து நான் தண்ணீர் குடித்தேன். என்றார்கள். அந்தக்குழ்வினர் திரும்பி வந்த போது இதைப்பற்றி விசாரிக்கப்பட்டது. நடந்த சம்பவம் உண்மை என்று கூறிய அவர்கள். இறைவன் மீது ஆணையாக இது அதிசயம் தான் என்றார்கள்.

 

 أتيت على عير بني فلان بالروحاء، قد أضلوا ناقة لهم، فانطلقوا في طلبها، فانتهيت إلى رحالهم ليس بها منهم أحد، وإذا قدح ماء فشربت منه، فاسألوهم عن ذلك قالوا: هذه والإله آية:

 

இன்னொரு குழுவினரின் ஒட்டகை பெருமானாரை கண்டு மிரண்டது. அதிலிருந்த வெள்ளை கோடிட்ட பைகளை கொண்ட சுமை கீழே விழுந்தது.

 ثم انتهيت إلى عير بني فلان، فنفرت مني الإبل، وبرك منها جمل أحمر، عليه جُوالِق مخطط ببياض، لا أدري أكسر البعير، أم لا، فاسألوهم عن ذلك) قالوا: هذه والإله آية

மற்று மொரு  குழு  தன்ஈமில் வந்து கொண்டிருக்கிறது. அதன் முன்னணியில் வெள்ளையும் கருப்பும் கலந்த ஒரு ஒட்டகை வருகிறது. இப்போது அவர்கள் மக்காவிற்குள் வந்து விட்டிருப்பார்கள்.  

 ثم انتهيت إلى عير بني فلان في التنعيم، يقدمها جمل أورق، وها هي تطلع عليكم من الثَّنِيَّة)،

 இந்த வாசகத்தை கேட்ட வலீது பின் முகீரா. இவர் ஒரு மந்திரவாதி, அவர் சொன்னதை உண்மையா என்று விரைந்து சென்று பாருங்கள் என்று கூறினான். மக்கள் ஓடிப்போய் பார்த்தார்கள். அந்த குழுவினர் தாங்கள் பெருமானாரை பயணத்திற்கு இடையே கண்டதாக கூறினார்கள்.  

فقال الوليد بن المغيرةساحر، فانطلقوا فنظروا، فوجدوا الأمر كما قال،

 இந்த பயணத்தில் பார்த்த பைத்துல் முகத்தஸை பெருமானார் வர்ணித்துச் சொன்னார்கள்.

இரவு நேரத்தில் அதுவும் அமாவாசை (27ம் நாலின் இருட்டு வேளையில்) ஒரு முறை மட்டுமே பார்த்த பைத்துல் முகத்தஸின் அடையாளங்களை பெருமானார் அடுக்கடுக்காக சொன்னார்கள்.

                 

عن جابر بن عبد الله رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: «لما كذبني قريش قمت في الحجر فجلا الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه».

 

நரகத்தின் காவலர் மாலிக்கை பார்த்தார்கள் அவரை வர்ணித்தார்கள்/

مالك خازن النار: ولم يضحك في وجه رسول الله.فسأل جبريل لماذا لم يرهُ ضاحكاً إليه كغيره . فقال: إن مالكاً لم يضحك منذ خلقه الله تعالى ، ولو ضحك لأحد لضحك إليك

ஈஸா அலை அவர்களையும் மூஸா அலை அவர்களையும் இபுறாகீம் அலை அவர்களையும் வர்ணித்து கூறினார்கள்.

أما عيسى، ففوق الربعة، ودون الطول عريض الصدر، ظاهر الدم، جعد أشعر تعلوه صُهْبَة، كأنه عروة بن مسعود الثقفي. أما موسى فضخم آدم طوال، كأنه من رجال شنوءة، متراكب الأسنان، مقلص الشفة، خارج اللثة، عابس، وأما إبراهيم فوالله إنه لأشبه الناس بي، خَلقاً وخُلقاً.

ஈஸா (அலை) நடுத்தரத்துக்கும் கொஞ்சம் உயந்தவர்., பரந்த மார்பு கொண்டவர். உடலில் இரத்த நாளங்கள் தெரியும் அளவு வெண்மையானவர். சுருள் முடி கொண்டவர், உர்வது பின் மஸ்வூதைப் போன்றவர்

மூஸா அலை தடித்தவர் நெட்டையானவர், கூட்டத்தில் உயர்ந்த மனிதராக இருப்பார். வரிசையான பற்களை கொண்டவர், உதடு சுருங்கியவர், அவருடைய ஈறுகள் வெளியே தெரியும்., முகம் கடுகடுப்பாக இருக்கும். ‘

இபுறாகீம் அலை என்னை போன்ற தோற்றம் கொண்டவர்.

 

சித்ரத்துல் முந்தஹாவை வர்ணித்தார்கள்.

سدرة المنتهى : وهي شجرة عظيمة بها من الحسن ما لا يصفه أحد من خلق الله ، يغشاها فَراشٌ من ذهب ، وأصلها في  السماء السادسة وتصل إلى السابعة ،

பைத்துல் மஃமூரை வர்ணித்தார்கள்.

  البيت المعمور : وهو بيت مشرف في السماء السابعة وهو لأهل السماء كالكعبة لأهل الأرض ، كل يوم يدخُلُهُ سبعون ألف ملكٍ يصلون فيه ثم يخرجون ولا يعودون أبداً

 சொர்க்கத்தை பார்த்தார்கள் அதை வர்ணித்தார்கள்

   الجنة : وهي فوق السموات السبع فيها ما لا عينٌ رأت ولا أذنٌ سَمِعَتْ ولا خَطَرَ على قلب بشر مما أعدّه الله للمسلمين الأتقياء خاصة ، ولغيرهم ممن يدخل الجنة نعيم يشتركون فيه معهم

 அர்ஷை பார்த்தார்கள் அதை வர்ணித்தார்கள்

العرش : وهو أعظم المخلوقات ، وحوله ملائكة لا يعلم عددهم إلا الله . وله قوائم كقوائم السرير يحمله أربعة من أعظم الملائكة ، ويوم القيامة يكونون ثمانية .

இதுமட்டுமல்லாமல் சொர்க்கத்தில் பார்த்த காட்சிகள் பலவற்றையும் நரகத்தில் பார்த்த காட்சிகள் பலவற்றையும் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

தனது தோழார் பிலால் ரலி அவர்களின் காலடி சப்தத்தை சொர்க்கத்தில்  கேட்டதாக கூறினார்கள்.

  أن رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم قال لما أُسرِيَ بي في الجنةِ سمعت خشخشةً فقلت يا جبريلُ ما هذه الخشخشةُ قال هذا بلالٌ

 உமர் ரலி அவர்களுக்குரிய மாளிகையை பார்த்தாதக கூறினார்கள்

 عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ قَالَ: ""دَخَلْتُ الْجَنَّةَ، فَرَأَيْتُ فِيهَا دَارًا - أَوْ قَصْرًا - فَقُلْتُ: لِمَنْ هَذَا؟ فَقَالُوا: لِعُمَرَ بْنِ الْخَطَّابِ. فَأَرَدْتُ أَنْ أَدْخُلَ، فَذَكَرْتُ غَيْرَتَكَ "". فَبَكَى عُمَرُ، وَقَالَ: أَيْ رَسُولَ اللَّهِ، أَوَعَلَيْكَ يُغَارُ؟ (صحيح مسلم 2394)

 

மிஃராஜ் பயணம் ஒரு குறுகிய நேரத்தில் அமைந்தது. ஆனால் அவசர கதியில் அமையவில்லை.  அல்லாஹ்வின் பேராற்றலில் அது நிதானமான பயணங்களுக்குரிய காட்சிகளோடு தான் அமைந்தது.

அவற்றை பெருமானார் (ஸல்) அவர்கள் நினைவில் நிறுத்தி மக்களுக்கு கூறினார்கள் எனில் பெருமானாரின் சத்தியத்தன்மைக்கு வேறு என்ன சான்று வேண்டும்?

மிஃராஜை நிரூபித்த மற்றும் ஒரு ஆதாரம் மிஃராஜ் நடந்த 10 வருடங்களுக்கு பிறகு கிடைத்தது.

பைத்துல் முகத்தஸின் கதவு ஹிர்கலின் சபையில் ஒரு சாட்சியம்.

ஹிஜ்ரீ 7 ம் ஆண்டில் பெருமானார் (ஸல்( அவர்கல் அரசர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அப்படி ஒரு கடிதம் ரோம் மன்னர் ஹிர்கலுக்கு அவர் பைத்துல் முகத்தஸிற்கு வந்திருந்த போது தரப்பட்டது .

அந்த கடிததத்தை படித்த பிறகு மக்காவிலிருந்து வந்திருந்த பயணிகளிடம் பெருமானாரைப் பற்றி ஹிர்கல் விசாரிக்க நினைத்தார்.

 அப்போது மக்காவின் தலைவராக இருந்த அபூசுப்யான் (ரலி) வியாபார குழுவோடு பைத்துல் முகத்தஸில் இருந்தார். அவர்களிடம் ஹிர்கல் பலதையுக் கேட்டறிந்தார்.

 மக்கா வாசிகளால் பெருமானாரைப் பற்றி அதிருப்தியால எதையும் சொல்ல முடியவில்லை. கடைசியாக அதிருப்தியை உண்டு பண்ணுவதற்காக “அவர் ஒரு இரவில் மக்காவிலிருந்து இங்கு பைத்துல் முகத்தஸிற்கு வந்து சென்றதாக கூறினார் என்றார்கள்.

 அப்போது அங்கிருந்த பைத்துல் முகத்தஸின் தலைமை பாதிரி ஆச்சரியப்பட்டவராக எழுந்து ஒரு அற்புத சாட்சியம் அளித்தார்.

 எப்போதும் பைத்துல் முகத்தஸின் கதவை மூடுவது என் பொறுப்பு, ஒரு நாள் இரவு பைத்துல் முகத்தஸின் கதவை தன்னால் பூட்ட முடியாமல் போனது. தச்சர்களை அழைத்து பரிசோதித்தேன். அவர்களாலும் கதவை மூட முடியவில்லை. அதற்கான காரணம் தெரியவில்லை. அதனால் அன்று அப்படியே கதவை  பூட்டாமல் விட்டுச் சென்றோம். அடுத்த நாள் காலை வந்து பார்த்த போது அந்த கதவு சாதாரணமாக பூட்டிக் கொண்டது. அப்போது அதிச்யப்பட்ட தான் . நேற்றிரவு ஒரு நபிக்காக இந்த கதவு திறந்து வைக்கப் பட்டிருக்க வேண்டும் என்று தான் கருதியிருந்ததாகவும் அது இப்போதுதான் உறுதிப் படுகிறது என்றும் கூறினார்.

 அந்த பயணம் சந்தேக்கத்திற்கு இடமில்லாதவாறு மக்கள அனைவருக்கும் நிரூபிக்கவும் பாட்ட்து.

 அப்படி இருந்தும் இதை நம்புவது எளிதாக இருக்கவில்லை

இந்த நிகழ்வை பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்த காபிர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களிடமும் கூறினார்கள். இதுவரை ஓரளவுக்காவது உங்களை நம்பத்தோற்றியது. இனி உங்களை நம்புவதிற்கில்லை என்று அதுவரை பெருமானாரை மதித்து வந்த மக்காவின் எதிரிகளில் சிலர் கூறினர்.

அபூஜஹ்லும் மிஃராஜும்

இந்த ஒரு செய்தியை வைத்து மக்களிடம் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இருக்கிற மரியாதையை குறைபடுத்தி விட முடியும் என்று அபூஜஹ்ல் நினைத்தான். அவனிடம் பெருமானார் தான் ஒரு இரவில் பைத்துல் முகத்தஸுக்கு சென்று வந்ததாக கூறிய போது, நான் மக்களை கூட்டுகிறேன் அவர்களிடம் கூறுகிறீர்களா என்று அவனே கேட்டான். பெருமானார் (ஸல்) அவர்கள் சரி என்றார்கள். அவனே மக்களை ஆர்வத்தோடு கூட்டினான் மக்கள் கூடினார்கள் அக்கூட்டத்திலும் தான் பைத்துல் முகத்தஸ் வரை சென்றுவந்ததை பெருமானார் கூறினார்கள். மக்கள் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தார்கள். சிலர் கைகொட்டி சிரித்தனர். சிலர் கேலி செய்வது போல பாவனையாக தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டனர்.

பைத்துல் முகத்தஸின் அடையளங்களை பெருமானார் (ஸல்) தெளிவாக எடுத்துச் சொன்ன போது நீங்கள் சொன்ன அடையாளங்கள் சரி தான் ஆனால் இனி உங்களை அறவே நம்ப முடியாது என்றார்கள்.

 فعن عبد الله بن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: (لمَّا كان ليلةَ أُسْرِيَ بي وأصبحتُ بمكة فظعتُ بأمري، وعرفتُ أنَّ الناسَ مُكذِّبيَّ، فقعدت معتزلا حزيناً، قال: فمرَّ عدوُّ الله أبو جهل فجاء حتى جلس إليه، فقال له كالمستهزئ: هل كان من شيْءٍ؟! فقال رسول الله صلى الله عليه وسلمنعم، قال: ما هو؟ قالإنَّهُ أُسْرِيَ بي الليلة، قال: إلى أين؟ قالإلى بيت المقدس، قال: ثم أصبحتَ بين ظهرانيْنا؟! قالنعم، قال : فلم يَرَ أنَّه يكذبُه مخافةَ أن يجحدَه الحديث إذا دعا قومَه إليه، قال: أرأيتَ إن دعوتُ قومك تُحدِّثهم ما حدَّثتني؟! فقال رسول الله صلى الله عليه وسلمنعم، فقال: هيَّا معشرَ بني كعب بن لؤي، حتى قال: فانتفضتْ إليهِ المجالس، وجاءوا حتى جلسوا إليهما، قال: حدِّث قومك بما حدَّثتني، فقال رسول الله صلى الله عليه وسلمإني أُسْرِيَ بي الليلة، قالوا: إلى أين؟ قلتُإلى بيت المقدس، قالوا: ثم أصبحتَ بين ظهرانينا؟! قالنعم، قال: فمن بين مصفِّقٍ، ومن بين واضعٍ يدَه على رأسه متعجِّبًا للكذب ـ زعم ـ، قالوا: وهل تستطيع أن تنعتَ لنا المسجد؟! ـ وفي القوم من قد سافر إلى ذلك البلد ورأى المسجد ـ فقال رسول الله صلى الله عليه وسلم ـفذهبتُ أنعتُ، فما زلتُ أنعت حتى التبس عليَّ بعض النعتِ قال: فجئ بالمسجدِ وأنا أنظر حتى وضع دون دار عقالٍ أو عقيل فنعتُّهُ وأنا أنظر إليه، قال: وكان مع هذا نعتٌ لم أحفظْه، قال: فقال القوم: أما النعتُ فوالله لقد أصاب) رواه أحمد وصححه الألباني.

ஒரு சில முஸ்லிம்களும் கூட மார்க்கத்திலிருந்து விலகினர். ஆனால் அத்தகையோர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களில் யாருடைய பெயரும் தெரியவரவில்லை என்பதே அவர்கள் முக்கியமானவர்கள் அல்ல என்பதை காட்டுகிறது.

அபூபக்கர் ரலியும் மிஃராஜும்.

ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் “ முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னால் – அது என்னவாக இருந்தாலும் – நம்புவோம் என்பதில் உறுதியாக இருந்தனர்.

فقال أبو بكر : والله لئن كان قاله لقد صدق ، فما يعجبكم من ذلك فوالله إنه ليخبرني أن الخبر ليأتيه ( من الله ) من السماء إلى الأرض في ساعة من ليل أو نهار فأصدقه ، فهذا أبعد مما تعجبون منه .

அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்றாலும் இதே ஈமானில் தான் மற்ற சஹாபாக்களும் இருந்தார்க:ள்.

அன்றைய சஹாபாக்கள் மட்டுமல்ல இன்றைய நவீன உலகில் வாழ்கிற அனைத்து முஸ்லிம்களும் சந்தேகத்திற்கிடமின்றீ மிஃராஜில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வையும் நம்புகிறார்கள்..  

இதில் என்ன மாற்றம் ஏற்படவில்லை என்றாக்ல்

1.   முஸ்லிம்களில் யாரும் இது பல நாட்களில் நடந்தது என்று சொல்லவில்லை.

2.   பெருமானார் (ஸல்) அவர்கள் எப்படி மிஃராஜை பகிரங்கப்படுத்தினார்களோ அதே போல இன்று வரை முஸ்லிம் சமுதாயம் இதை பகிரங்கப்படுத்தி தனது அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய்க் கொண்டுதான் இருக்கிறது.

3.   அன்றும் சரி இன்றும் சரி இந்நிகழ்வை நிரூபிப்பதற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்ன ஆதாரம் கூறினார்கள் என்பதற்கு அதிக கவனம் செலுத்துவதில்லை.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்  கூறுகிற அனைத்தும் உண்மையே என்ற அழுத்தமான ஈமான் மட்டுமே முஸ்லிம்களின் கவனத்திற்குரியதாக அன்றும் இருந்தது. இப்போதும் இருந்து வருகிறது.

இப்போதும் கூட மிஃராஜிற்கு ஆதாரமான செய்திகளை முஸ்லிம்கள் தகவல்களாக அறிவுரைகளாக பார்க்கிறார்களே தவிர் பெருமானாரின் கூற்றை நம்புவதற்கு ஆதாரமாக பார்ப்பத்தில்லை.

மிக கவனமாக ஒன்றை நினைவூட்டுகிறேன்.

மிஃராஜிற்கு பிறகு தான் இஸ்லாமிய சட்டங்கள் அமுலாக தொடங்கின.

தொழுகை மிஃராஜிலிருந்துதான் கடமையாக்கப்பட்டது. அதை தொடர்ந்து மற்ற சட்டங்கள் கிடைத்தன.

பெருமானாரின் மீதான அழுத்தமான நம்பிக்கையை உலகிற்கு உறுதிப்படுத்திய பிறகே அல்லாஹ் இஸ்லாமிய உம்மத்திற்கான சட்டங்களை வழங்கினான்.

பெருமானாரின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலேயே சொல்லப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் இன்றும் முஸ்லிம் சமூகம் கடைபிடித்து வருகிறது.

இந்த அழுத்தமான நம்பிக்கை நமது இன்றைய தறிகெட்ட சூழ்நிலைக்கும் சிறப்பாக வழி காட்டும்.

உத்தரகாண்ட் அரசு கடந்த செவ்வாய்க்கிழமை பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு இதை நாடு முழுவதிலும் அமுல் படுத்த திட்டம் வைத்திருக்கிறது.

இந்த சட்டம் இந்துக்களின் சட்டத்தை அனைத்து மக்களின் மீதும் திணிக்கிற ஒரு முயற்சியாகும்.

இந்துக்களிலேயே ஒரு சாராரின் நடைமுறைகளை அனைத்து சாரார் மீதும் திணிக்கும் ஒரு அராஜக சட்டமாகும்.

அத்தை மகளை திருமணம் செய்வது என்பது தமிழகத்திலுள்ள இந்துக்களின் கால கால வழக்கமாக இருக்கிறது. இந்த சட்டம் அதை தடுக்கிறது.

அதே போல இந்துக்களின் கூட்டுக் குடும்ப சொத்து பற்றி ஏற்கெனவே என்ன சட்டம் இருக்கிறதோ அது அநீதியானது என்று பலரும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். அதில் இந்த பொது சிவில் சட்டம்  கை வைக்கவில்லை.

முஸ்லிம்களுடைய திருமணம் விவாகரத்து சொத்துரிமை போன்ற சட்டங்களில் முஸ்லிம்களுக்குள்ள தனியான் ஷரீஆ சட்டத்தை நாட்டின் நடைமுறையிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

மிஃராஜை நம்பபுகிற முஸ்லிம்கள் அதே அழுத்தத்தோடு அல்லாஹ் ரஸீலின் சட்டங்களின் படிதான் எங்களது வாழ்வு நடைபெறும் என்று முடிவு செய்வார்கள் எனில் நிச்சயமாக இந்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறாது.

இந்த பொது சிவில் சட்டத்திலிருந்து இது (எஸ்டி ) மலைவாழ் மக்களுக்கு பொருந்தாது என்றும் அறீவிக்கப்பட்டிருக்கிறது. ஏன் எப்றால் அரசு போடுகிற சட்டம் எதுவும் அவர்களை பாதிக்காது. அரசாங்கத்திஆல் அவர்களை மாற்ற முடியாது என்பதே காரணமாகும்.

முஸ்லிம்களும் மார்க்கத்தில் அதே மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துவார்கள் எனில் அநீதியான மக்களின் உணர்வுகளுக்கு விரோதமான சட்டங்களின் மூலம் மக்களை ஆக்ரமிக்க நினைக்கிறவர்கள் தோற்றே போவார்கள்.

இஸ்ரா நிகழ்வில் மற்றுமொரு அம்சமும் இருக்கிறது.

திருக்குர் ஆன் மிஃராஜை பற்றி பேசிய பிறகு  அடுத்த வசனத்தில் யூதர்களின் ஏற்படுத்திய குழப்பங்களை பற்றி பேசுகிறது .

وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِّبَنِي إِسْرَائِيلَ أَلاَّ تَتَّخِذُواْ مِن دُونِي وَكِيلاً

ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا

وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا

 

அறிஞர்கள் கூறுகிறார்கள். (ரஹீக்குல் மக்தூம்).

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன் யூதர்கள் தான் சிறந்த சமூகமாக கருதப்பட்டார்கள். அவர்களது கருத்து எங்கும் ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் அதிகார மமதையில் தம்மிஷ்டத்திற்கு ஆடினார்கள். சட்டங்களை சுய விருப்பத்திற்கேற்ப மாற்றினார்கள். அல்லாஹ் அவர்களை பூமியின் இழிபிறவிகளாக ஆக்கினான்.

அவர்களுக்கு ஒரு பேரிடியாக முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மிஃராஜின் வழியாக ஒரு பெரும் அந்ததஸ்தை வழங்கினான் இதன் மூலம் பெருமானார் அனைத்தையும் வென்று நிற்பார்கள் என்பதை அல்லாஹ் உறுதிப்படுத்தினான்.

முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அழுத்தமான நம்பிக்கை கொண்டு அவர்கள் காட்டிய வழியில் நிலைத்து நிற்கிற போது குழப்பம் செய்ய நினைக்கிற சக்திகள் தோற்றுப் போவார்கள்

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக  

 

 

 

 

 

 


2 comments:

  1. Anonymous6:23 PM

    MASHAA ALLAH 👌👌👍

    ReplyDelete
  2. Anonymous6:55 AM

    جزاكم الله احسن الجزاء

    ReplyDelete