வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 22, 2024

அல்லாஹ்வை நேசிக்கும் வழிகள்

  وَإِذْ أَخَذَ رَبُّكَ مِن بَنِي آدَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ ۖ قَالُوا بَلَىٰ

 அல்லாஹ் ஆதம் அலை அவர்களை இந்த உலகில் படைப்பதற்கு முன் ஆலமுல் அர்வாகில் அவரது முதுகில் தனது குத்ரத்தின் வலது கையை வைத்தான். அதிலிருந்து ஏராளமான மனிதர்கள் வெளிப்பட்டார்கள் . அனைவருடைய முகமும் வெண்மையாக இருந்தது. பிறகு தனது குத்ரத்தின் இட்து கையை வைத்தான். அதிலிருந்து ஏராளமான மனிதர்கள் வெளிப்பட்டார்கள்அவர்களுடை முகம்  கருப்பாக இருந்த்துபிறகு அவர்களிடம் பேசினான். أَلَسْتُ بِرَبِّكُمْ என்று கேட்டான்.

 எல்லொரும் என்ன பதில் சொல்வது என்று திகைத்துப் போய் நின்றனர். முதல் முதலாக முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் தனது அமுத வாய் திறந்து بَلَىٰ என்றார்கள். அதன் பிறகு பட்டப்புகள் அனைவரும் அவ்வாறே கூறினர்.

 அதனால் பெருமானார் அவர்கள் முஅல்லிம் அவ்வல் ஆகிறார்கள்.

 மனித ரூஹுகள் அனைத்தும் அல்லாஹ்வை பார்த்தன. அல்லாஹ்விடம் பேசின.

 பார்வையும் பேச்சிலும் காதல் வளர்கிறது.

 இதனால் ஒவ்வொரு மனித இதயத்திலும் அல்லாஹ்வின் மீது ஆசை – விதை போல விழுந்திருக்கிறது.

 இதனாலேயே இந்த  ஆசை மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. மலக்குகளுக்கு இந்த காதலிக்கும் வாய்ப்பு கிடையாது.  

 அல்லாஹ்வின் மீதான நேசம் தான் மனித இதயத்தில் உள்ள நேய உணர்வின் மூலமாகும்.  

 இந்த நேசத்தின் அடிப்படையிலேயே மக்கள் இந்த உலக்கில் மற்றவை அனைத்தின் மீதும் நேசம் கொள்கிறார்கள்.

 இந்த உலகில் நாம் எதை நேசிக்கிறோமோ அது சரியானதாக இருந்தால் அந்த நேசம் அனைத்தும் அல்லாஹ்வை நேசிப்பதில் தான் நிறவைடையும்.

 மகன் இஸ்மாயீல் அலை அவர்களின் மீதான நேசம் இபுறாகீம் நபிக்கு அல்லாஹ்வின் நேசத்தை நிறைவு படுத்தியது போல்

 மஹப்பத்திற்கும் ஹப்பத்

 எந்த ஒரு மனிதரும் அவர் நேசிப்பதன் மீதான பற்றை அதிகப்படுத்திக் கொள்ள விரும்புவார் அல்லவா ?  அதற்காக சில முயற்சிகளையும் தியாகங்களையும் செய்வார் அல்லவா ?

 அது போல ஆதியில் நம் இதயத்தில்ல் கருவான அல்அலாஹ்வின் மீதான் நேசத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 அந்த நேசம் பொருத்தமான இதயத்தில்  செழிப்பாக வளர்கிறது. விதை பொருத்தமான நிலத்தில் விளைவது போல

 மஹப்பத்திற்கும் ஹப்பத் திற்கும் பொருத்தமான சூழ்நிலை அவசியம.

 அல்லாஹ்வின் மீதான் நேசம் ஒரு இதயத்தில் பரிபூர்ணமாக இடம் பெறுமானால் இந்த உலகின் வேறு எது பற்றிய சிந்தனையும் தேவையற்றதாக தோன்றும்.

 பெருமானார் (ஸல்) அவர்களின் சன்னிதானத்தில் சஹாபாக்களுக்கு அந்த ஆனந்தம் கிடைத்தது. அதனால் தான் அந்த சூழலிலிருந்து கொஞ்சம் வெளியேறிய போதும் தரையில் விழுந்த மீனைப் போல சஹாபாக்கள் துடித்தார்கள்.

  نافَقَ حنظلةُ

 أنَّ حَنْظَلةَ الأُسَيْديَّ -وكان مِن كُتَّابِ رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ- قال: لَقِيَنِي أَبُو بَكْرٍ، فَقالَ: كيفَ أَنْتَ يا حَنْظَلَةُ؟ قالَ: قُلتُ: نَافَقَ حَنْظَلَةُ، قالَ: سُبْحَانَ اللهِ! ما تَقُولُ؟ قالَ: قُلتُ: نَكُونُ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ يُذَكِّرُنَا بالنَّارِ وَالْجَنَّةِ حتَّى كَأنَّا رَأْيُ عَيْنٍ، فَإِذَا خَرَجْنَا مِن عِندِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، عَافَسْنَا الأزْوَاجَ وَالأوْلَادَ وَالضَّيْعَاتِ، فَنَسِينَا كَثِيرًا، قالَ أَبُو بَكْرٍ: فَوَاللَّهِ إنَّا لَنَلْقَى مِثْلَ هذا، فَانْطَلَقْتُ أَنَا وَأَبُو بَكْرٍ حتَّى دَخَلْنَا علَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، قُلتُ: نَافَقَ حَنْظَلَةُ، يا رَسُولَ اللهِ، فَقالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: وَما ذَاكَ؟ قُلتُ: يا رَسُولَ اللهِ، نَكُونُ عِنْدَكَ، تُذَكِّرُنَا بالنَّارِ وَالْجَنَّةِ حتَّى كَأنَّا رَأْيُ عَيْنٍ، فَإِذَا خَرَجْنَا مِن عِندِكَ، عَافَسْنَا الأزْوَاجَ وَالأوْلَادَ وَالضَّيْعَاتِ، نَسِينَا كَثِيرًا، فَقالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: وَالَّذِي نَفْسِي بيَدِهِ، إنْ لَوْ تَدُومُونَ علَى ما تَكُونُونَ عِندِي وفي الذِّكْرِ، لَصَافَحَتْكُمُ المَلَائِكَةُ علَى فُرُشِكُمْ وفي طُرُقِكُمْ، وَلَكِنْ يا حَنْظَلَةُ سَاعَةً وَسَاعَةً، ثَلَاثَ مَرَّاتٍ.

الراويحنظلة بن حذيم الحنفي | المحدثمسلم | 

 நேசத்தை வளர்க்கும் வழிகள்

 ஒரு ஆச்சரியமான செய்தி அல்லாஹ்வின் மீதான நேசத்தை வளர்க்க பலரும் சொல்கிற முதல் வழி பார்வையை பாதுகாத்தலாகும்.

 முஜத்தித் அல்பஸானி.ரஹு கூறுவார்கள்  – பார்வை என்பது தொடக்கமாகும். அதன் முடிவு விபச்சாரமாமும்.

 பாவங்களே அல்லாஹ்வின் மீதான நேசத்தின் மீது கரும்புகையை பாய்ச்சுகின்றன என்பதால் அதிலிருந்து விலகிக் கொள்ளுதலை அல்லாஹ்வின் மீது நேசம் கொள்வதன் அடிப்படை அம்சமாகும். இதற்கு பார்வையை பாதுகாத்தல் பிரதானமாகும்.

 இன்றைய நாம் வாழ்கிற காலத்தில் இதனுடைய முக்கியத்துவத்தை நாம் தனியாக சொல்ல வேண்டியதில்லை.

 பார்வையை கட்டுப்படுத்துதல் என்பது சிரமமானதாக கசப்பாக தெரியலாம். ஆனால் அதற்கு பழகி விட்டால் அதை விட சளிக்காத இன்பம் வேறில்லை.   

 ஒரு அரசனுக்கு பல மகள்கள் இருந்தார்கள். அவர்கள் அவனை ஒவ்வொரு இனிப்பின் பெயராக சொல்லி அது போல நேசிப்பதாக கூறினார்கள். ஒரு பெண் மட்டும் உப்பை போல நேசிப்பதக கூறினாள். அரசர் அவளை கோபித்துக் கொண்டார்.

ஒரு நாள் அந்த பெண்னின் வீட்டிற்கு அரசர் சென்றார். அவள் நிறைய இனிப்புகளை வைத்தாள். அரசர் சொன்னார் . இனிப்பு மடுத்துப் போய் விட்டது. அப்போது அந்த மகள் சொன்னாள். அதனால் தான் தந்தையே தங்களுக்கு மடுத்துப் போக கூடாது என்பதற்காகவே நான் தங்களை உப்பை போல நேசிப்பதாக கூறினேன் என்றாள்.

 பார்வையை கட்டுப்படுத்திக் கொள்ளுதல் என்பது உப்பை போல அது அதிக சுவையாக தெரியாது என்றாலும் அது ஒரு போதும் மடுத்துப் போகாது.

 பாங்குக்கு செவியேற்பது.

 அல்லாஹ்வின் மீதான நேசத்தை பெருக்கிக் கொள்ளும் வழியாகும்.

 பாங்கு சொல்லி நிம்மதி கொடுங்கள் பிலால் என்று பெருமானார் (ஸல்) கூறுவார்கள்

قال النبي -صلى الله عليه وسلم- مُخاطباً بلال بن رباح -رضي الله عنه-: (أرِحْنا بها يا بلالُ

ஆயிஷா ரலி கூறுகீறார். பெருமானார் எங்களோடு பேசிக் கொண்டிருப்பார்கள் நாங்கள் அவருடன் பேசிக் கொண்டிருப்போம். ஆனால் பங்கு சப்தம் கேட்டுவிட்டால் எங்களை யாரென்றே தெரியாதவர் போல எழுந்து சென்று விடுவார்கள் .

كانه لا يعرفنا

 இன்னொரு ஹதீஸில் வருகிறது.

كانه لا يعرف احدا من الناس

 நாம் நேசிப்பவர்களிடமிருந்து போன் அல்லது மெஸேஜ் வருவதை நாம் நேசிப்பது போல பாங்கை நாம் நேசிக்க வேண்டும்.

 ஒளு செய்து விட்டு பள்ளிக்கு செல்வது.

 ஒளு செய்து விட்டு பள்ளிக்குள் செல்வது – இஹ்ராம் அணிந்து உம்ராவுக்கு செல்வது போல என்று அறிஞர்கள் கூறுவார்கள்.

 அல்லாஹ்வின் மீதான ஆசையில் அதிகம் நபில் தொழுவது

 பல கட்டத்திலும் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ல தவாபு களை எதிர்பார்த்து நாம் தொழுகிறோம். குபா வில் இரண்டு ரக அத் தொழுதால் ஒரு உம்ராவின் நன்மை கிடைக்கும் என்ற ஹதீஸைப் போல

உருதுவில் ஒரு கவிதையின் துண்டு இப்படி பேசுகிறது.

இஸ்கு வாலே ஹிஸாப் கியே ஜானே

 நேசிப்பவர்கள் கூலியை பற்றி கணக்குப் பார்ப்பதில்லை  

 ஷைக் அப்துல் வாஹித் ரஹி) அவர்களிடம்  சொர்க்கத்தில் தொழுகை இல்லை என்ற்று சொல்லப்பட்டதும் அழுதார். பிறகு சொன்னார்.

 ஜன்னத் மே நமாஸ் நஹீ ஹோகீ தோ

ஜன்னத் மே மஜாஹ் கியா ஹோகா

 தொழுகை இல்லை என்றால் சொர்க்கத்தில் என்ன சுவை ?

 நம்முடைய முன்னோர்கள்  நீண்ட ஸஜ்தாவில் இருப்பார்கள் என் இறைவனின் பாதத்தில் தலை வைத்திருக்கிறேன். எடுக்க மனம் வருவதில்லை. என்பார்கள்

 ஒரு ஷைகு இப்படி பிரார்த்தனை செய்வார்! இறைவா எனக்கு உனது அர்ஷுக்கு கீழே முஸல்லாவிற்கு இடம் கொடு.

 எனவே அல்லாஹ்விற்காக அதிக நபில் தொழுகைகளை தொழுவது அல்லாஹ்வை நேசிக்கும் ஒரு வழியாகும்.

அதனால்  நவாபிலுக்கான வாய்ப்பை எந்த சந்தர்ப்பத்திலும் தவற விட்டு  விட வேண்டாம்.

 அல்லாஹ்வை நேசிக்கும் மற்றொரு வழி சதகா –

 பெருமானார் அவர்கள் ரமலானில் வீசும் காற்றை விட வேகமாக தர்ம்ம் செய்வார்கள் என்று ஹதீஸ்களில் வந்திருக்கிறது.

 அல்லாஹ்வை நேசிக்கும் மற்றொரு வழி திக்ரு

 இபுறாகீம் அலை அவர்கள் ஒரு தடவை ஆடு மேய்த்துக் கொண்டு சென்றார்கள். அப்போது வழிப்போக்கன் ஒருவர்

 سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والعظمه والهيبه والقدرت والكبرياء  والجبروت

என்று கூறினார். இந்த வாசகத்தில் லாயித்துப் போன இபுறாகீம் நபி இன்னொரு முறை அதை கூறுமாறு கூறினார்கள். அப்படி சொன்னால் எனக்கு என்ன கிடைக்கும் என்று அவர் கேட்டார். இந்த ஆட்டு மந்தையில் பாதியை தருகிறேன் என்றார். அவர் மீண்டும் ஒரு முறை அதை திருப்பி கூறினார். அதை கேட்டு மீண்டு ஆவல் கொண்ட இபுறாகீம் நபி இன்னொரு முறை கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள். எனக்கு என்ன தருவீர் என்று அவர் கேட்டார். மீதி ஆடுகளையும் தருவேன் என இபுறாகீம் நபி கூறினார். அவர் மூன்றாவது முறை இந்த வாசகத்தை கூறினார்கள். அப்போதும் இபுறாஹீம் நபியின் ஆவல் அடங்க வில்லை. இன்னும் ஒரு முறை கூறுமாறு கேட்டார்கள். இப்போது என்ன தருவீர் என்று அவர் கேட்டார். உன்னிடம் இருக்கிற ஆடுகளை மேய்ப்பதற்கு ஒரு ஆள் தேவை தானே. நான் அந்த ஆடுகளை மேய்ப்பவனாக உன்னிடம் வேலை செய்கிறேன் என்றார்கள்.

அந்த வழிப்போக்கர் உரத்த குரலில் சொன்னார். நீங்கள் இபுறாகீம் தான். நான் அல்லாஹ் அனுப்பி வைத்த மலக்கு. என்றார்.

 அல்லாஹ்வை நேசிக்கும் மற்றொரு வழி

 அல்லாஹ்விற்காக அதிகம் நோன்பிருப்பது.

மக்கள் அவர்கள் நேசுப்பவர்களுக்காக சாப்பிடாமல் இருப்பதில்லையா ? அது போல  

 அல்லாஹ்வை நேசிக்கும் மற்றொரு வழி  இரவு விழிப்பது

 இறைநேசர்கள் புதிய தம்பதிகளை போல இரவை எதிர்பார்த்திருப்பார்கள்

 ஆயிஷா அம்மையாருடம் நெருங்கி படுத்திருந்த பெருமானார் இரவில் எழுந்து தொழுவார்கள் . அழுவார்கள். மழை பொழியும் சப்தப் போல அழுகை சப்தம் போல பெருமானார் (ஸல்) அவர்கள் அழுவதை நான் கேட்டிருக்கிறேன் என் ஆயிஷா ரலி கூறியுள்ளார்கள்.  .

 على عائشةَ، قال ابنُ عُميرٍ: أخبِرينا بأعجَبِ شيءٍ رأَيْتِه مِن رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم، قال: فسكَتَتْ ثمَّ قالت: لَمَّا كان ليلةٌ مِن اللَّيالي قال: (يا عائشةُ، ذَرِيني أتعبَّدِ اللَّيلةَ لربِّي)، قُلْتُ: واللهِ إنِّي لَأُحِبُّ قُرْبَك وأُحِبُّ ما سرَّك، قالت: فقام فتطهَّر ثمَّ قام، يُصَلِّي قالت: فلم يزَلْ يبكي حتَّى بَلَّ حجرَه، قالت: ثمَّ بكى، فلم يزَلْ يبكي حتَّى بَلَّ لِحيتَه، قالت: ثمَّ بكى، فلم يزَلْ يبكي حتَّى بَلَّ الأرضَ، فجاء بلالٌ يُؤذِنُه بالصَّلاةِ فلمَّا رآه يبكي، قال: يا رسولَ اللهِ، لِمَ تَبكي وقد غفَر اللهُ لك ما تقدَّم وما تأخَّر؟ قال: (أفلا أكونُ عبدًا شكورًا لقد نزَلَتْ علَيَّ اللَّيلةَ آيةٌ، ويلٌ لِمَن قرَأها ولم يتفكَّرْ فيها: ﴿ إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ 


 இப்னு உமர் ரலி வீட்டில் – பெருமானார் விருந்துண்டார்கள். அப்போது உடன் இப்னு உமரி சகோதரி  ஹப்ஸா அம்மாவும் உடன் இருந்தார்கள்–  அங்கேயே உறங்குமாறு இப்னு உமர் கேட்டுக் கொண்டார். பெருமானார் அவர்களும் ஹப்ஸா அம்மாவும் அங்கு தூங்கினார்கள். ஹப்ஸா அம்மா கூறுகிறார். இரவின் மத்தியில் பெருமானாரின் கண்களில் வழிந்த கண்ணீர் என கண்ணத்தில் கதகதப்பாக விழுந்தது. அல்லாஹ்வின் தூதரே இத் என்ன என்று நான் கேட்டேன். பெருமானார் கூறீனார்கள். உனது சகோதரர்   தஹஜ்ஜுதில் كَلَّا إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ . ( பாவிகள் மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பதிலிருந்து தடுக்கப்படுவார்கள்) என்ற ஆயத்தை ஓதிக் கொண்டிருக்கிறார். அதை கேட்டு எப்படி அழ முடியாமல் இருக்க முடியும் இறைவா ! என் சமுதாயத்தை அப்படி ஆக்கிவிடாதே என்று கேட்டு நான் அழுகிறேன் என்றார்கள்

அல்லாஹ்வை நேசிக்கும் வழிகளில் மிக எளிமையான அதே நேரம் மிகவும் எபக்டான ஒரு வழி அல்லாஹ் வாலாக்களை அதாவது அல்லாஹ்வுடைய சிந்தனையை நமக்கு ஏற்படுத்துகிறவர்களோடு அதிகம் தொடபில் இருப்பதாகும்.

கண்ணாடியை பார்த்து நாம் முக அலங்காரம் செய்து கொள்வது போல நல்ல மனிதர்களைப் பார்த்து நாம் அல்லாஹ்வின் மீதான நேசத்தை வளர்த்துக் கொள்ள முடியும்

 இவை அல்லாஹ்வின் மீதான நமது நேசத்தை வளர்த்துக் கொள்ள உதவும் சில வழிகளாகும்.

 இவற்றைல் சிலதை சில நேரங்களிலாவது கடை பிடிக்க நாம் முயற்சி செய்வோம். .

 அல்லாஹ்வை நாம் ரப்பாக ஒப்புக் கொண்டதன் காதலை வெளிப்படுத்துவோம்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

2 comments:

  1. Anonymous8:20 PM

    அற்புதமான உரை ஹஜ்ரத்!!
    தாங்களும் ஏதோவொரு காமிலான ஷைஹிடம் பைஅத் பெற்று விட்டீர்கள் என கருதுகிறேன் அல்ஹம்துலில்லாஹ்!!

    ReplyDelete
  2. Anonymous8:26 PM

    அல்ஹம்துலில்லாஹ்!சிந்தனை தூண்டும் அற்புத உபதேசங்கள்

    ReplyDelete