வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 07, 2024

ரமலான்و இஸ்லாமிய குடும்பங்களில் ஈமான் மலர

 நமது வாழ்க்கையில் ஈமானிய உணர்வுகளை புதுப்பித்துக் கொள்ளவும் நிலை நிறுத்திக் கொள்ளவும் ரமலான் ஒரு அற்புத வாய்ப்பாகும்.

இன்றைய காலம் எப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை பர்க்கிற்றோம்.

கடந்த் வாரத்தில் ஒரு ஆலிமுக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்த்து. அவருக்கு அறிமுகமான ஒரு பெரிய வீட்டின் பாட்டி பேசினார்.

ஹழ்ரத்! எனது இரண்டு பேத்திகளும் பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்தனர். நேற்று வீட்டிற்கு வந்தனர். இருவரும் காதலிப்பதாக கூறினர். எங்களது குடும்பம் அதிர்ச்சியடைந்தது. அதற்கடுத்து இருவரும் கிருத்துவர்களை காதலிப்பதாக கூறினர். நாங்கள் உடைந்து போனோம். அல்லாஹ்வை பயப்பட வெண்டாமா ? என்று நான் கண்டித்தேன். அதற்கு அப்பெண்கள் இருவரும் அல்லாஹ் எல்லாம் இல்லேம்மா என்று கூறினர்

எங்களது குடும்பமே தகந்த்து போய்விட்டது என்று கூறி அந்த பாட்டி அழுதிருக்கிறார்.

இது ஒரு உதாரணம் தான். இது போல பல வழிகளில்

மார்க்கத்தை கடைபிடிப்பதில் தடம் புரண்டு, இஸ்லாமிய கலாச்சாரத்தை கைவிட்டு கடைசியில் நம்பிக்கையிலேயே மோசம் போகிற அளவில் நமது சூழ்நிலைகள் மாறியிருக்கின்றன.

இந்த நிலையில் இந்த ஆண்டு புனித ரமலான் வருகிறது.

இந்த ஆண்டு ரமலான் நமது குடும்பங்களின் ஈமானிய வாழ்வை நிலைப்படுத்திக் கொள்ள உதவட்டும். அல்லாஹ் கிருபை செய்வானாக!

தீமைகளை அழிக்கவும் தடுக்கவும் ஒரு வழி

நமது வாழ்வில் தீமைகள் சிலது இருந்தாலும் உள்ளத்தூய்மையோடு நாம் செய்யும் நல் அமல்கள் அத்தகை தீமைகளின் கரைகளை அழித்து விடும் என்று நம்முடைய மார்க்கம் உறுதியளிக்கிறது.

إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين

ஒரு நபித்தோழர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்துஅல்லாஹ்வின் தூதரே நான் ஒரு பெண்மணியை முத்தமிட்டு விட்டேன் என்று கூறி அதற்கு பரிகாரமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அப்போது இந்த வசனம் அருளப்பட்டது.

 

روى الترمذي عن عبد الله قال : جاء رجل إلى النبي - صلى الله عليه وسلم - فقال : إني عالجت امرأة في أقصى المدينة وإني أصبت منها ما دون أن أمسها وأنا هذا فاقض في ما شئت . فقال له عمر : لقد سترك الله ! لو سترت على نفسك ; فلم يرد عليه رسول الله - صلى الله عليه وسلم - شيئا فانطلق الرجل فأتبعه رسول الله - صلى الله عليه وسلم - رجلا فدعاه ، فتلا عليه : وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين إلى آخر الآية ; فقال رجل من القوم : هذا له خاصة ؟ قال : لا بل للناس كافة 

நண்மைகள் தீமையை அழித்து விடும் என்ற இந்த வசனம் தொழுகை பற்றி பேசி தொடங்குகிறது.

: وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل

பகலிலும் இரவிலும் கொஞ்ச நேரம் தொழுங்கள் என்று கூறிவிட்டுத்தான் إن الحسنات يذهبن السيئات என்று கூறுகிறது.

 

இதிலுள்ள ஹஸனாத் என்ற வார்த்தைக்கு ஐவேளை தொழுகை – என பெரும்பாலான சஹாபாக்களும் தாபிஃகளும் விளக்கம் அளித்துள்ளனர்.

ذهب جمهور المتأولين من الصحابة والتابعين - رضي الله عنهم أجمعين - إلى أن الحسنات هاهنا هي الصلوات الخمس 

 

அதனால் ஐவேளை பாவம் செயத்து பற்றி பாச்சாதாபம் உள்ளவர்கள் அந்த கவலையோடு ஐ வேளை தொழுகையை கண்டிப்புடன் தொழுவார்கள் எனில் நிச்சய்ம் மன்னிப்பை பெறுவார்கள் .

 

நபி (ஸல்) அவர்களும் இதை வலியுறுத்தியுள்ளார்கள்.

 

رواه أحمد وأبو داود وغيرهما عن أبي بكر رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم قالما من رجل يذنب ذنباً ثم يقوم فيتطهر ثم يصلي ثم يستغفر الله إلا غفر الله له.

 

பாவங்கள் செய்த்தற்காக மட்டுமல்ல. பாவமில்லாத ஒரு வாழ்க்கைக்காக்வு தொழுகை ஒரு அற்புதமான வழியாகும்.

திருக்குர் ஆன் இதற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

 إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ ۗ

நபித்தோழர்களில் ஒருவர் பல பாவங்களையும் செய்வதாக சிலர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் புகர் கூறினர்.  அவர் தொழுகிறாரா? என பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் என்று பதிலளிக்கப்பட்ட்து.   ستنهاهஅந்த தொழுகை அவரை மாற்றிவிடும் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்

 

قال رجل للنبي - صلى الله عليه وسلم - : إن فلانا يصلي فإذا أصبح سرق ، قال" سينهاه ما يقول " .

 

எனவே ரமலானில் மொத்த குடும்பத்திற்கு தொழுகையை வழமையாக்கவும் கடமையாக்கவும் கட்டாயப்படுத்துவோம்.

 

நமது வீடுகளில் இளம் சிறார்களும் இளைஞர்கள் இளம் பெண்கள் தொழுகைகளில் அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதல்ல பெரிய பிரச்சினை அதை கண்டும் காணாமல் – அல்லது அதை வலியுறுத்த முடியாமல் முஸ்லிம் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்பதே இன்றைய பெரும் துரதிஷ்டமாகும்.

 

ரமலானை காரணமாக காட்டி ஐந்து வக்து தொழுகைகளையும் தராவீஹ் போன்ற நபில் தொழுகைகளையும் நமது குடும்பத்தினருக்கு உறசாகப்படுத்துவோம்.

 

இந்த ஆண்டு நீ 30 நாட்களும் நோன்பு வைத்து தரவீஹ் தொழுதுவிட்டால் நீ கேட்ட சைக்கிளை நான் வாங்கித்தருவேன் என்று ஒரு தந்தை தனது இளம் மகனுக்கு கூறீயிருக்கிறார். அல்லாஹ் அவருக்கு பரக்கத் செய்யட்டும்.

 

இது போன்ற உற்சாகப்படுத்தும் வார்த்தைகள் ஊக்கம் அளிக்கிற சொற்களில் நமது குடும்பம் ரமலானில் தொழுகையில் அதிக ஈடுபாட்டை காட்டுவதற்கு தேவையான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

 

சிறு குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தொழுகயை பக்குவமாக வலியுறுத்த திருக்குர் ஆன் வழிகாட்டுகிறது.

 

يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ

வீட்டிலுள்ள பெண்கள் தொழுகைகளை நிறைவேற்றுகிற வகையில் அவர்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும்.

 

(தொழுகைகளுக்கு சிறுவர்களை பள்ளிவாசலுக்கு அனுப்பி வைக்கிற போது பள்ளிவாசலில் அவர்கள் குறும்புத்தனமான செயல்களில் ஈடுபடாதவாறு கண்காணிக்க வேண்டும். எச்சரிக்கைகள் செய்து வழி காட்ட வேண்டும்.

 

தொழுகை நிச்சயமாக தீமைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

 

தொழுகையை முக்கியப்படுத்தலின் ஒரு அம்சம் அ

அதன் நேரம் வருவதற்கு முன்பே அதற்கான ஒரு தயார் நிலையில் இருப்பதாகும்.

ஒருவர் தொழுகையின் நேரம் வருவதற்கு முன்பே அதற்காக்க தயாராகவில்லை எனில் அவர் தொழுகையை மதித்தவர் ஆக மாட்டார் என வகீஃ பின் ஜர்ராஹ் கூறுகிறார்.

 قال وكيع بن الجراح: من لم يأخذ أُهْبَةَ الصلاة قبل وقتها لم يكن وقَّرها.

நான் முஸ்லிமானதிலிருந்து பாங்கு சொல்லப்படும் போதே ஒளுவுடன் இருப்பேன் என்று அதீ பின் ஹாதிம் ரஹ் கூறுகிறார்.

قال عدي بن حاتم: ما أُقيمتِ الصلاة منذ أسلمتُ إلا وأنا على وضوء.

எனவே ஒளு செய்வது, மற்ற வேலைகளை திட்டமிடுவதும் விழாக்கள் போன்றவற்றை அமைத்துக் கொள்வது என ஒவ்வொரு வகையிலும் தொழுகை கவனத்தில் இருப்பது போல வாழ்வை அமைத்துக் கொள்ளும் போது தொழுகைக்காகவே வாழ்கிறோம் என்ற உணர்வுடையவர்களாக அது நம்மை ஆக்கும். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

இவ்வாறு நமது கவனம் அமையும் எனில் அந்த தொழுகையை நம்மை வெளிச்சப்படுத்தும்

 

தராவீஹ் தஹஜ்ஜுத் ஆகிய இரவு நேர தொழுகைகளில் நாமும் நமது குடும்பமும் அதிக கவனம் செலுத்தட்டும்.

.

 இரவு நேர தொழுகைகளின் பலன் அலாதியானது.

 

இரவு நேர தொழுகைகள் நமது முகத்தையும் இதயத்தையும் வெளிச்சப்படுத்தும். அதுமட்டுமல்ல நமது கப்ரையும் வெளிச்சப்படுத்தும். என்றார் ஹாபிழ் இப்னு ரஜப் (ரஹி)

 

قال الحافظ ابن رجب رحمه الله: الصلاة نور مطلق، فهي نور للمؤمنين في قلوبهم وبصائرهم... وهي نور للمؤمنين في قبورهم، ولا سيما صلاةُ الليل،

 

கப்ரின் இருட்டிலிருந்து தப்பிக்க இரவின் இருட்டில் தொழுங்கள் என்றார் அபுத்தர்தாஃ ரஹ். அது சிராத்துல் முஸ்தகீம் பாலத்திலும் வெளிச்சமாகும்.

 

كما قال أبو الدرداء: "صلوا في ظُلَمِ الليل لظُلْمة القبور"، وهي في الآخرة نور للمؤمنين في ظُلُمات القيامة وعلى الصراط.

இரவு நேர தொழுகைகளை அறிவு ஞானத்தையும் விசாலப்படுத்தும்

وكذلك تكون نورًا للإنسان في قلبه تفتح عليه بابَ المعرفة لله عز وجل

சொர்க்க வாசிகளின் முகத்தில் தொழுத அடையாளம் இருக்கும் என்று திருக்குர் ஆன் கூறுகிறது . அது இரவுத்தொழுகையுடன் தொடர்புடையது என அறிஞர்கள் கூறூகிறார்கள்

قال تعالى: ﴿ سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ

எனவே குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் தராவீஹ் தஹஜ்ஜுத் தொழுகைகளில்  ஈடுபட  வைப்போம்.

 

அவர்களுக்கு மார்க்கம் கூறுகிற இந்த செய்திகளை பக்குவமாக நினைவூட்டுவோம்.

 

கூட்டு உணவும் துஆவும்

 

குடும்பத்தில் ஈமான் மலர மற்றொரு வழி குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதாகும்.

 

இந்த வழிமுறையில் குடும்ப உறுப்பினர்களிடையே நெருக்கம் அதிகரிக்கும் என்பது மனோத்த்துவ அறிஞர்களின் கருத்து.

 

நண்பர்கள் தமது நட்பை வளர்த்துக் கொள்ள கூட்டாக சேர்ந்து சாப்பிடுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள் அல்லவா ?

 

சில குடும்பங்களில் குடும்ப தலைவர்கள் மற்றும் தலைவிகளில் குடும்பத்தினருடன் சேர்ந்து உண்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. கணவன் மனைவியுடன் சேர்ந்து சாப்பிட முக்கியத்துவம் அளிப்பதில்லை பிள்ளைகள் பெற்றோர்களுடன் அமர்ந்து சாப்பிட முக்கியத்துவம் அளிப்பதில்லை.

 

ஒரு சிறந்த குடும்ப வாழ்விற்கு இது உகந்த்து அல்ல;

 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் தனது மனைவியருடனுடம் தனது பொறூப்பில் உள்ள பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள்.

 

ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் என்னுடன் அமர்ந்து சாப்பிடுவார்கள். நான் கடித்து வைத்த இறைச்சித் துண்டை நான் கடித்த அதே இட்த்தில் கடித்துச் சாப்பிடுவார்கள்.

 

பெருமானார் (ஸல்) அவர்களின் மற்றுமெரு துனைவி உம்மு சல்மா ரலி அவர்களின் மகன் கூறுகிறார்கள். நான் பெருமானாருடன் அமர்ந்து சாப்பிடுவேன். பெருமானார் (ஸல்) அர்கள் என்னிடம் பிஸ்மி சொல்லி சாப்பிடு! வலது கையால் சாப்பிடு! பக்கத்தில் இருப்பதை சாப்பிடு என்று சொல்வார்கள்.  

 

உணவில் சேர்ந்து சாப்பிடுவதும், அதே போல கூட்டாக துஆ கேட்பதும் ஈமானிய வாழ்வு சிறக்க வழிவகுக்கும்

 

திருக்குர் ஆன் கற்றுத்தருகிற துஆக்களில் ரப்பனா என்ற சொல் அதிகமாக இடப் பெற்றிருக்கும்.

 

எங்களது இறைவா என்பதன் முதல் கூட்டு குடும்பமாகும்.

 

நபி இபுறாகீம் அலை அவர்கள் கஃபாவை கட்டி முடித்த பிறகு இறைவா இதை ஏற்றுக் கொள் என்று அல்லாஹ்விடம் துஆ செய்த்தை திருக்குர் இப்படித்தான் கூறுகிறது.

 

وَ اِذْ یَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَیْتِ وَ اِسْمٰعِیْلُؕ-رَبَّنَا تَقَبَّلْ مِنَّاؕ-اِنَّكَ اَنْتَ السَّمِیْعُ الْعَلِیْمُ(127)

 

இபுறாகீம் நபி தன் மகன் இஸ்மாயீலுடன் இப்படி பிரார்த்தனை செய்தார் என்று கூறுகிறது.

 

எனவே கடும்பத்தினர் அனைவருடன் சேர்ந்து துஆ கேட்கிற பழக்கத்தை இந்த ரமலானில் நாம் அதிகப்ப்டுத்திக் கொள்ள வேண்டும்.

 

குர் ஆனிலும் ஹதீஸிலும் வந்திருக்கிற துஆக்கள் சிறப்பானவை.  மஸ்னூன் துஆ க்கள் என்று புத்தகங்கள் கிடைக்கும். அதை வாங்கி ஓதலாம்.  

 

துஆ தமிழிலும் கேட்கலாம். அல்லாஹ்வுக்கு மொழி ஒரு தடையால்ல;

 

ஒவ்வொரு குடும்ப தலைவனும் தலைவியும் சிறப்பாக துஆ கேட்க தெரிந்திருப்பது அவசியம் என்பது இபுறாகீம் நபியின் வரலாறு கற்றுத்தருகிற பாடமாகும்.

 

நோன்பு திறக்கிற நேரங்கள், சஹர் நேரங்கள் துஆவிற்கு சிறப்பான நேரங்களாகும்.

 

பள்ளிவாசலில் நோன்பு திறக்கவே பலரும் விரும்புகிறார்கள்  அதில் எந்த சிறப்பும் இல்லை. தொழுகைக்கான வசதிகள் இருக்கும் எனில் வீடுகளில் குடும்பத்தாருடன் நோன்பு திறப்பதே சிறந்ததாகும்.

 

பள்ளிவாசலில் நோன்பு திறப்பு என்பது வசதியில்லாதவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக நம்முடைய முன்னோர்கள் ஏற்படுத்திய ஒரு வழக்கமாகும். சஹ்ர் ஏற்பாடும் இப்படித்தான் ஒரு தர்மமாக ஏற்படுத்தப் பட்டது. அதை ஒரு ஆடம்பரமாகவும் – பகட்டாகவும் நாம் ஆக்கிக் கொள்ள கூடாது.

 

தேவையுடையவர்களுக்கு அல்லது நன்மையை நாடி செய்யப்படுவது தரம்ம்.

 

தேவையற்றும் தம்மை காட்டிக் கொள்வதற்காக செய்யப்படுவது வீண் விரையமாகும்.

 

ஆகவே இப்தார் மற்றும் சஹர் ஏற்பாடு செய்கிறவர்கள் எந்த நோக்கத்திற்காக இதை செய்கிறோம் என்பதை முதலில் தீர்மாணித்துக் கொள்ளவேண்டும்.

 

ஒரு செல்வந்தர் தன்னிடமிருக்கிற வசதியில் நன்மைய நாடி நோன்பாளிக்கி உணவளிக்கிறேன் என்று செய்தால் அது சிறப்பானது. ஒரு மஹல்லாவில் இருக்கிற குழுவினர், ஒரு கூட்டுறவு அல்லது நல்லுறவு ஏற்படும் என்ற எண்ணத்தில் அதில் அல்லாஹ் பரக்கத் செய்வான் என்ற சிந்தனையில் இப்தார் சஹார் ஏற்பாடு செய்தல் அது சிறப்பாகும்.  இப்தார் சஹருக்கான நன்மைகள் கிடைக்கும். எத்தனைய்ப்ப் பே சஹர் உணவுக்கு வழி இல்லாமல் இருப்பார்கள், அவர்கள் யாரிடமும் கேட்க மாட்டார்கள் . அத்தகையோருக்கு ஒரு நல்ல உணவு வழங்கவேண்டும்  என்று நினைத்தால் அதற்குரிய நன்மை கிடைக்கும்.

 

எனவே இப்தார் சஹர் போன்ற ஏற்பாடுகள் குழு உணர்வுக்காக இல்லாமல், ஒரு நல்ல இலக்கோடு செய்யப்பட வேண்டும்.

 

பள்ளிவாசலில் செய்யப்படுகிற இப்தார் ஏற்பாடுகள் மக்கள் வசதிக்காகவே செய்யப்படுகின்றன. அங்குதான் நோன்பு திறக்க வேண்டும் என்பது  கட்டாயமல்ல, அதில் அதிகப்படியான சிறப்பும் எதுவும் இல்லை.

 

நீங்கள் உங்களது குடும்பத்துடன் இப்தார் சஹர் செய்ய முடியும் எனில் அதில் குடும்பத்தோடு நல்லுறவு பாரட்டுதல் என்ற நன்மையும் சேர்ந்து கிடைக்கும்.

 

அந்த நேரத்தில் நல்ல துஆக்களை கேட்கவும் கற்பிக்கவும் மறக்க வேண்டாம்.

 

துஆக்கள் சடங்காக இல்லாமல். உறுதியானதாக இருக்க வேண்டும்.

 

ஹஜ்ஜாஜ் பின் யூசுப் – தவாப் செய்து கொண்டிருந்த போது ஒரு பார்வையற்றவர் இறைவா எனக்கு பார்வையை கொடு என்று துஆ செய்து கொண்டிருந்தார்.

ஹஜ்ஜாஜ் நான்  யார் தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்றார்.

ஹஜ்ஜாஜ் கூறீனார். நான் தான் ஹஜ்ஜாஜ், தவாப் முடிவதற்குள் உனக்கு பார்வை வரவில்லை எனில் உனக்கு மரண தண்டனை அளிப்பேன்.

பார்வையற்றவர் கதறினார். இறைவா இதுவரை பார்வை தான் பிரச்சனையாக இருந்த்து. இப்போது வாழ்க்கையே பிரச்சைனையாகிவிட்டது. எனக்கு பார்வையை தா என உருகினார்.

பார்வை கிடைத்த்து.

ஹஜ்ஜாஜ் கூறினார். என்னை ச்ந்திக்கும் வரை உங்களது நாவு கேட்ட்து.. என்னை சந்தித்த  பிறகு தான் உனது இதயம் கேட்ட்து. அதனால் தான் உனக்கு பார்வை கிடைத்தது.

 

கூட்டு துஆக்கள் ஈமானிய வாழ்வில் பிரதானமானவையாகும். அல்லாஹ் பதிலளிக்க ஏற்றவையுமாகும். ஆனால் அது பக்தியுடன் அமைய வேண்டும்.

 

திருக்குர் ஆன் ஓதுதலுல்; திக்ரு செய்தல்

 

கூட்டாக அமர்ந்து குர் ஆன் ஓதுவதும், திக்ரு செய்வதும் வீட்டில் ஈமான் மணக்கும் ஏற்பாடுகளாகும்.

 

فعن أبي هريرة رضي الله عنه أنَّ النبي صلى الله عليه وآله وسلم قال: «مَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ، يَتْلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمِ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ» أخرجه مسلم.

 

ஜகாத் சதகா போன்றவற்றில் பெண்களை  பிள்ளைகளை ஈடுபடுத்துதல்.

 

நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி நேரங்களில் வீட்டிலிருக்கிற சில திர்ஹம்களை தர்மாம் செய்து விடும்படி ஆயிஷா அம்மையாரிடம் கூறினார்கள் என்று ஹதீஸ்களில் வருகிறது.

 

பெருமானார் அவர்களின் ஒரு சுன்னத் இது. நற்செயல்களை குடும்பத்தினருக்கு பழக்கப் படுத்துவது.

 

சமீபத்தில் ஒரு குடும்பத்தின் மூத்தவர், நானே அனைவருக்குமான ஜகாத்தையும் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார். அது அவருடை ஆர்வம் அல்லாஹ் அவருக்கு அதற்கு நற்கூலி கொடுப்பான். ஆனால் இது விசயத்தில் பிள்ளைகளை பழக்கப்படுத்தும் போது அவர்களை தந்தையை போலவும் அதைவிட அதிகமாகவும் தர்ம்ம் செய்கிற மனப்பக்குவத்தை பெறுவார்கள்.

 

நம்முடைய துஆ

 

நமது குடும்பமும் சந்த்திகளும் காலமெல்லம் சத்திய வழியில் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நாம் தனியாக அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டே இருப்போம்.

 

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

இது இபுறாகீம் நபியின் துஆ

 

இந்த துஆ வை ரமலானில் அதிகமாக கேட்போம்.

 

அல்லாஹ் நம்முடைய குடும்பங்களில் ஈமான் மிளிர தவ்பீக் செய்வான்/\.

No comments:

Post a Comment