வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 21, 2024

ரமலான் தரும் உற்சாகம் பாவமன்னிப்பு

 மலானில் பாஸிட்டிவ் அம்சங்கள் நிறைந்த ஒரு மாதமாகும். மக்களுக்கு ஆழமான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகிற ஒரு மாதமாகும்.

ரமலான் முஸ்லிம்களின் ஆன்மாவையும் சக்தியையையும் பலவீனப்படுத்துகிற ஒரு மாதம் அல்ல. பலப்படுத்துகிற மாதமாகும்.

முஸ்லிம்களின் வரலாற்றில் பிரம்மாண்டமான பல வெற்றிகள் ரமலான் மாதத்தில் தான் கிடைத்திருக்கின்றன.

غزوة بدر، وكانت في السابع عشر من رمضان من السنة الثانية للهجرة.
وفتح مكة، كانت في العاشر من شهر رمضان من السنة الثامنة للهجرة.
ومعركة القادسية، كانت في رمضان سنة خمسة عشر للهجرة بقيادة سعد بن أبي وقاص.
وموقعة حطين، كانت في رمضان سنة 584 هـ بقيادة صلاح الدين

ومعركة عين جالوت كانت في رمضان سنة 685 بقيادة السلطان قطز، والقائد العسكري بيبرس..
ثم حرب رمضان 1973 -أو حرب أكتوبر- كان في رمضان سنة 1393هـ، وفيها تمكنت القوات العربية المسلمة من الانتصار على القوات الصهيونية الغاصبة، فعبرت الجيوش العربية قناة السويس وحطمت أسطورة "الجيش الإسرائيلي" الذي لا يقهر

பத்று வெற்றி ஹிஜ்ரீ 2 ரமலான்

மக்கா வெற்றி ஹிஜ்ரீ 8 ரமலான்.

காதிஸிய்யா யுத்த்த்தில் பாரசீகர்களை வென்றது. ஹிஜ்ரி 15 ரலமானில்

ஹித்தீன் யுத்தத்தில் சலாஹுத்தீன் அய்யூபி சிலுவை யுத்தக் கார்ர்களை வென்றது 584 ரமலானில்

அய்னு ஜாலூத் யுத்தத்தில் தாதாரியர்களை வென்றது ஹிஜ்ரி 658 ரமலானில்

ஆக்ரமிப்பு இஸ்ரேல் எகிப்திடமிருந்து சினாய் தீபகற்ப பகுத்தியை கைப்பற்றறி இருந்த்து. அதை எகிப்து நாடு 1973 ம் ஆண்டு ரமலானில் இஸ்ரேலோடு சண்டையிட்டு மீட்டது.  அது அக்டோபர் 6 தேதி நடந்த்து. அந்த பெயரில் இப்போது எகிப்தில் ஒரு நகரம் இருக்கிறது.  

அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்களின் வெற்றி வரலற்றோடு ரமலான் பிணைந்திருக்கிறது.

இப்போது இருக்கிற சில சிக்கல்களை அல்லாஹ் இந்த ரமலானில் நீக்கியருளவானாக!

-----------------------

ரமலான் வெற்றியை மட்டுமல்ல முஸ்லிம்களுக்கு பெரும் நம்பிக்கையையும் தருகிற மாதமாகும்.

நேற்றைய செய்தி தாளில் உள்ளத்தகை உருக்கும் ஒரு செய்தி.ز 

கோவையில் குடும்பத்தோடு 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தந்தை தாய் கல்லூரியில் படிப்படை முடித்த மகள், 9 வது படிக்கும் மகள் என நான்கு பேரும் சய்னைடு பவுடர் சாப்பிட்டு மரணித்துள்ளனர்.

புகைப்படத்தில் பார்த்தால் அவர்களுடை வீடு பெரிய ஜமீன் தார் பங்களா மாதிரி தெரிகிறது.

உண்மையில் அவர்கள் வசதியானவர்கள். சமீபத்தில் மனைவி பெயரில் அவர் பல கோடி செலவு செய்து பங்களா கட்டியிருக்கிறார். மனைவி பெயரில் 20 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்.

கடன் தொல்லையால் தற்கொலை என்று பத்ரிகையில் எழுதியிருக்கிறார்கள். ஒரு ஆச்சரியம் என்ன வென்றால் கடந்த மாதம் தான் அவர் 18 கோடி ரூபாய் கடனை அடைத்திருக்கிறார்.

இவ்வளவு கடனை திருப்பி கொடுக்க முடியுமா என்று மனைவி அடிக்கடி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதில் எழுத குற்ற உணர்வு அவர்களுக்கு தவறாக வழிகாட்டியிருக்கிரது.

எவ்வளவு பெரிய குற்றம் செய்தவருக்கும் பாவ மன்னிப்பு வழங்கப்படும் என்ற ரமலானின் செய்தி மக்களை பெரும் குற்ற உணர்வில் தவறான முடிவுக்கு போகாமல் தடுக்கும் ஒரு ஆயுதமாகும்.

திருக்குர் ஆன் எந்த மனிதருக்கும் ஊக்கம் தருகிற வார்த்தைகளை பேசுகிறது.

قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (53وَأَنِيبُوا إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ (54)

ஒரு மனிதன் இதற்கு மேல் குற்ற உணர்வுக்குள்ளாக முடியாத் என்ற நிலையில் வாழ்ந்த ஒரு மனிதருக்க் பெருமானார் (ஸல்) அவர்கள் மூலம் மன்னிப்பு வழங்கப்பட்ட்து.

 பெருமானாரின் வாசலில் வந்து கசிந்துருகி அழுது நின்றார். ஒரு இளைஞர் அவர் அழுவதை பார்த்து முஆத் ரலி அவர்களும் அழுதார்கள். பிறகு பெருமானாரிடம் வந்து சொன்னார்கள். அவரை அழைத்து அவருடைய பாவங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அல்லாஹ் மன்னிப்பான். அவனுடைய வார்த்தை அனைத்து பாவங்களையும் விட உயர்வானது என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர் சமாதானம் அடைய வில்லை. இறுதியாக பெருமானாரிடம் தனது குற்றத்தை கூறினார். நான் ஏழு வருடங்களாக கப்ருகளில் இருக்கிற் மையத்துக்களின் கபன் ஆடையை திருடி வருகிறேன். ஒரு நாள் ஒரு இளம் பெண்ணின் கபனை திருடும் போது அவளுடைய அழகு என்னை மயக்கி விட்டது. அந்த மைய்யித்தோடு நான் உறவு கொண்டு விட்டேன். அதை முடித்து நான் வெளியேறும் போது, மய்யித்துக்களின் மைதானத்தில் என்னை நிர்வாணப்படுத்தி, என்ன அசுத்தமானவாளாக ஆக்கிவிட்டவனே உன் இளமை நாசமாகட்டும் என்றூ ஒரு குரல் எனக்கு கேட்டது. அல்லாஹ்வின் தூதரே எனக்கு சொர்க்கத்தின் வாடை கூட கிடைக்காது என்று அந்த இளைஞன் கூறினான். அதில் கோபமடைந்த பெருமானார் விலகிப் போ பாவியே என்று விரட்டினார். அவர் மதீனாவின் மலைகளில் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரி அழுது புலம்பினார். அவரை மன்னித்த செய்தியை அல்லாஹ் பெருமானாருக்கு  

وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ (135) أُولَٰئِكَ جَزَاؤُهُم مَّغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ (136

 என்ற வசனத்தை இறக்கினான். அந்த இளைஞனது பாவமும் மன்னிக்கப் பட்ட்து.

 روي انّه دخل معاذ بن جبل على رسول الله صلّى الله عليه وآله وسلّم باكياً فسلّم، فردّ عليه السّلام ثم قال : ما يبكيك يا معاذ ؟ فقال : يا رسول الله انّ بالباب شابّاً طريّ الجسد، نقيّ اللون، حسن الصورة، يبكي على شبابه بكاء الثكلى على ولدها، يريد الدخول عليك.

 فقال النبي صلّى الله عليه وآله وسلّم:
ادخل عليّ الشاب يا معاذ، فأدخله عليه، فسلّم فردّ عليه السلام، ثم قال: ما يبكيك يا شاب؟
قال: كيف لا أبكي و قد ركبت ذنوباً ان أخذني الله عزّ و جلّ ببعضها أدخلني نار جهنّم، و لا أراني الا سيأخذني بها و لا يغفر لي أبداً.
 
فقال رسول الله صلّى الله عليه وسلّم:
 
هل أشركت بالله شيئاً ؟
قال: أعوذ بالله أن اُشرك بربّي شيئاً ،
قال: أقتلت النفس التي حرّم الله؟
قال: لا، فقال النبي صلّى الله عليه وَسَلَم:
يغفر الله لك ذنوبك وان كانت مثل الجبال الرواسي. فقال الشاب ، فانّها أعظم من الجبال الرواسي ، فقال النبي صلّى الله عليه وآله وسلّم : يغفر الله لك ذنوبك وان كانت مثل الأرضين السبع وبحارها ورمالها وأشجارها وما فيها من الخلق ، قال : فانّها أعظم من الارضين السبع وبحارها ورمالها وأشجارها وما فيها من الخلق.

فقال النبيّ صلّى الله عليه وآله وسلّم : يغفر الله لك ذنوبك وإن كانت مثل السماوات ونجومها ، ومثل العرش والكرسي ، قال : فانّها أعظم من ذلك.
قال : فنظر النبي صلّى الله عليه وسلّم إليه كهيئة الغضبان ، ثم قال : ويحك يا شابّ ذنوبك أعظم أم ربّك ؟
فخر الشاب لوجهه وهو يقول : سبحان ربيّ ما شيء أعظم من ربّي ، ربّي أعظم يا نبيّ الله من كل عظيم. فقال النبي صلّى الله عليه وآله وسلّم : فهل يغفر الذنب العظيم الا الرب العظيم الا الرب العظيم قال الشاب : لا والله يا رسول الله ثم سكت الشاب ، فقال له النبي صلّى الله عليه وسلّم: ويحك يا شاب ألا تخبرني بذنب واحد من ذنوبك ؟

 

قال : بلى اُخبرك ، انّي كنت أنبش القبور سبع سنين اخرج الأموات ، وأنزع الأكفان ، فماتت جارية من بعض بنات الأنصار ، فلمّا حملت إلى قبرها ودفنت وانصرف عنها أهلها وجنّ عليهم الليل ، أتيت قبرها فنبشتها ، ثم استخرجتها ونزعت ما كان عليها من أكفانها ، وتركتها متجرّدة على شفير قبرها ، ومضيت منصرفاً. فأتاني الشيطان فأقبل يزيّنها لي ويقول : أما ترى بطنها وبياضها ؟ أما ترى وركيها ؟ فلم يزل يقول لي هذا حتى رجعت إليها ، ولم أملك نفسي حتى جامعتها وتركتها مكانها ، فاذا أنا بصوت من ورائي يقول : يا شابّ ويل لك من ديّان يوم الدين ، يوم يقفني واياك كما تركتني عريانه في عساكر الموتى ، ونزعتني من حفرتي وسلبتني أكفاني ، وتركتني أقوم جنبة إلى حسابي ، فويل لشبابك من النار ، فما أظنّ انّي أشم ريح الجنة ابداً ، فما ترى لي يا رسول الله ؟

فقال النبي صلّى الله عليه وآله وسلّم : تنحّ عنّي يا فاسق انّي أخاف أن أحترق بنارك فما أقربك من النار. ثم لن يزل يقول ويشير إليه حتى أمعن من بين يديه ، فذهب فأتى المدينة فتزوّد منها ، ثم أتى بعض جبالها فتعبّد فيها ، ولبس مسحاً ، وغلّ يديه جميعاً إلى عنقه ونادى : « يا رب هذا عبدك بهلول ، بين يدك مغلول ، يا ربّ أنت الذي تعرفني ، وزلّ منّي ما تعلم سيدي ، يا ربّ أصبحت من النادمين ، وأتيت نبيك تائباً فطردني وزادني خوفاً ، فأسألك باسمك وجلالك وعظمة سلطانك أن لا تخيّب رجائي سيدي ، ولا تبطل دعائي ، ولا تقنّطني من رحمتك ».

«فلم يزل يقول ذلك أربعين يوماً وليلة ، تبكي له السباع والوحوش ، فلمّا تمت له أربعون يوماً وليلة رفع يديه إلى السماء وقال : «اللهم ما فعلت في حاجتي ؟ ان كنت استجبت دعائي وغفرت خطيئتي ، فأوح إلى نبيك ، وان لم تستجب لي دعائي ، ولم تغفر لي خطيئتي ، وأردت عقوبتي فعجّل بنار تحرقني ، أو عقوبة في الدنيا تهلكني ، وخلّصني من فضيحة يوم القيامة».

فأنزل الله تبارك وتعالى على نبيه صلّى الله عليه وآله وسلّم : (وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ (135) أُولَٰئِكَ جَزَاؤُهُم مَّغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ (136))

فلمّا نزلت هذه الآية على رسول الله صلّى الله عليه وسلّم خرج وهو يتلوها ويتبسّم ، فقال لأصحابه : من يدلني على ذلك الشاب التائب ؟

فقال معاذ: يا رسول الله بلغنا انّه في موضع كذا وكذا. فمضى رسول الله صلّى الله عليه وسلّم بأصحابه حتى انتهوا إلى ذلك الجبل فصعدوا إليه يطلبون الشاب ، فاذا هم بالشاب قائم بين صخرتين ، مغلولة يداه إلى عنقه ، قد اسود وجهه ، وتساقطت أشفار عينيه من البكاء ، وهو يقول : « سيدي قد أحسنت خلقي ، وأحسنت صورتي ، فليت شعري ماذا تريد بي ؟ أفي النار تحرقني ، أو في جوارك تسكنني ؟ اللهم انّك قد أكثرت الاحسان إليّ وأنعمت عليّ ، فليت شعري ماذا يكون آخر أمري ، الى الجنة تزفّني ؟ أم إلى النار تسوقني اللهم انّ خطيئتي أعظم من السماوات والأرض، وكرسيّك الواسع ، وعرشك العظيم ، فليست شعري تغفر خطيئتي أم تفضحني بها يوم القيامة ؟ ».

 
فلم يزل يقول نحو هذا وهو يبكي ويحثو التراب على رأسه ، وقد أحاطت به السباع ، وصفّت فوقه الطير ، وهو يبكون لبكائه ، فدنا رسول الله صلّى الله عليه وآله وسلّم فأطلق يديه من عنقه ، ونقض التراب عن رأسه ، وقال : يا بهلول أبشر فانّك عتيق الله من النار. ثم قال : صلّى الله عليه وآله وسلّم لأصحابه : هكذا تداركوا الذنوب كما تداركها بهلول ، ثم تلا عليه ما أنزل الله عزّ وجلّ فيه ، وبشّره بالجنّة 

எவ்வளவு பெரிய குற்றம் செய்தவருக்கும் அவரது குற்றவுணர்வுக்கு ஆறுதல் தருகிற செய்தி இதில் இருக்கிறது.

எனவே எத்தகைய குற்றவுணர்வுள்ளவருக்கும் மிக நம்பிக்கை அளிக்கும் வசனம் என பல சஹாபாக்களும் இந்த வசனத்தை குறிப்பிடுவார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு செய்தி,

குற்றவுணர்வுள்ளவர்களை ஒதுக்கி வைக்காமல் எனது அடியார்கள் என்று அல்லாஹ் அழைக்கிறான். قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا

மக்களுக்கு குற்றம் செய்தவனை தள்ளி வைப்பர்கள்.  தப்பு செய்கிற மகனைப் பற்றி தந்தை மனைவியிடம் “ அவன் கிட்டே சொல்லு , திருந்தலேண்ணா வீட்ட விட்டு அனுப்பிவிடுவேன். என்று பிள்ள்ளயை தள்ளி வைத்து பேசுவார். அல்லாஹ்வோ يَا عِبَادِيَ என்று அழைத்து பேசுகிறான்.

 அதனால் இந்த வசனம் பெருமானாருக்கு அதிகம் பிடித்த்த வசனமாகும்.

 سمعت ثوبان - مولى رسول الله - صلى الله عليه وسلم - يقول : سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول" ما أحب أن لي الدنيا وما فيها بهذه الآية( يا عبادي الذين أسرفوا على أنفسهم ) إلى آخر الآية ، فقال رجل : يا رسول الله ، فمن أشرك ؟ فسكت النبي - صلى الله عليه وسلم - ثم قال : " ألا ومن أشرك " ثلاث مرات . تفرد به الإمام أحمد

திருக்குர் ஆனின் மற்றொரு வசனம் மேலும் நம்பிக்கை அளிக்கிறது.

وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا 

 முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது சமூகத்தின் குற்றவாளிகளுக்கு நிச்சயம் மன்னிப் பெற்றுத்தருவார்கள் என்று ஒரு ஹதீஸ் நம்பிக்கையூட்டுகிறது.

 وفي صحيح مسلم عن ، عبد الله بن عمرو بن العاص أن النبي - صلى الله عليه وسلم - تلا قول الله تعالى في إبراهيم : فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم وقول عيسى : إن تعذبهم فإنهم عبادك ، فرفع يديه وقال : " اللهم أمتي أمتيوبكى . فقال الله تعالى لجبريل : ( اذهب إلى محمد ، وربك أعلم ، فسله ما يبكيكفأتى جبريل النبي - صلى الله عليه وسلم - فسأل فأخبره . فقال الله تعالى لجبريل : ( اذهب إلى محمد ، فقل له : إن الله يقول لك : إنا سنرضيك في أمتك ولا نسوءك ) .

 அல்லாஹ்வை பற்றி இவ்வாறூ நம்பிக்கையளிக்கிற பேச்சுக்களை பேச வேண்டும் என நபிமார்கள் அறிவுறுத்தப்பட்டார்கள்

தாவூத் அலை அவர்களுக்கு அல்லாஹ் சொன்னான். என்னை நேசி, என்னை நேசிப்பவர்களை நேசி, என் மீது மற்றவர்களுக்கு நேசத்தை ஏற்படுத்து !

 தாவூத் அலை கேட்டார்கள் இறைவா உன் மீது நேசத்தை ஏற்படுத்துவது எப்படி ?

அல்லாஹ் சொன்னான். என்னைப் பற்றி நல்லதையே பேசு, என்னைப் பற்றி  நல்லதே அவர்களுக்கு தோன்ற வேண்டும் அவ்வாறு பேசு என்று கூறீனான்,

 قال: يا داود  أحبني وأحبَّ مَن يحبني، وحبَّبني إلى عبادي، قال: يا ربِّ، إنك لتعلم أني أحبك، وأحبُّ من يحبك، فكيف أُحبِّبك إلى عبادك؟ قال: ذكِّرهم بآلائي، وبلائي، ونعمائي، يا داود،

 அல்லாஹ்வின் கருணையை பிரதானப்படுத்தி பெருமானார் (ஸல்) அவர்கள் ஏரளமாக பேசியுள்ளார்கள்.

 அதில் ஒன்று. அனஸ் ரலி அறிவிக்கிறார்கள் பெருமானார் (ஸல்) கூறினார்கள்.

அல்லாஹ் நரகிலிருந்து இருவரை வெளியே கொண்டு வருவான். அவர்களிடம் நரகம் எப்படி இருந்த்து என்று அல்லாஹ் கேட்பான். மிக கஷ்டமாக இருந்ததாக இருவரும் கூறுவார்கள். சரி திரும்பிச் செல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். ஒருவர் வேகமாக திரும்பிச் செல்வார். இன்னொருவர் திரும்பிப் பார்த்த படி மெதுவாக செல்வார். வேகமாக செல்பவனிடன் ஏன் இவ்வளவு வேகமாக போகிறாய் என்று இறைவன் கேட்பான். அதற்கு அவன் உலகில் தான் உனக்கு மாறு செய்தேன். இங்கே அப்படி மாறு செய்யக் கூடாது என்று நினைத்தேன் என்பான் நீ ஏன் திரும்பிப் பார்த்தாய் என்று இரண்டாமவனிடம் அல்லாஹ் கேட்பான். நரகிலிருந்து வெளியே வந்து விட்டால் அல்லாஹ் திருப்பி அனுப்ப மாட்டான் என்று கேள்விப் பட்டிருந்தேன். அதனால் திரும்பி பார்த்தேன் என்று அவர் கூறுவார். அல்லாஹ் இருவரையும் சொர்க்கத்திற்கு அனுப்புவான்.

بلال بن سعد ،

 يأمر الله تعالى بإخراج رجلين من النار ، قال : فيخرجان بسلاسلهما وأغلالهما ، فيوقفان بين يديه ، فيقول : كيف وجدتما مقيلكما ومصيركما ؟ فيقولان : شر مقيل ، وأسوأ مصير . فيقول بما قدمت أيديكما وما أنا بظلام للعبيد . فيأمر بهما إلى النار ، فأما أحدهما فيمضي بسلاسله وأغلاله حتى يقتحمها ، وأما الآخر فيمضي وهو يتلفت ، فيأمر بردهما ، فيقول للذي غدا بسلاسله وأغلاله حتى اقتحمها : ما حملك على ما فعلت وقد اختبرتها ؟ فيقول : يا رب قد ذقت من وبال معصيتك ما لم أكن أتعرض لسخطك ثانيا . ويقول : للذي مضى وهو يتلفت ما حملك على ما صنعت ؟ قال : لم يكن هذا ظني بك يا رب . قال : فما كان ظنك ؟ قال : كان ظني حيث أخرجتني منها أنك لا تعيدني إليها قال : إني عند ظنك بي ، وأمر بصرفهما إلى الجنة

رواه أبو نعيم في " حلية الأولياء "

அல்லாஹ்வின் மன்னிப்பு எவ்வளவு பிரம்மாண்டமானது என்று பெருமானார் (ஸல்) அவர்கள் மேலும் சொன்னார்கள்.

அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைத்து விடும் என்று சைத்தான் கூட ஆசைப்படுவான். அல்லாஹ் அந்த அளவு மன்னிப்பான் . (என்னே அற்புதமான உவமை)

والذي نفسي بيده ليغفرن الله يوم القيامة مغفرة يتطاول لها إبليس رجاء أن تصيبهوالحديث ذكره ابن كثير 

 மக்கள் அவர்கள் செய்கிற தவறுகளினால் குற்ற் உணர்வுக்கு எந்த தவறான முடிவுக்கும் போக தேவையில்லை. தவறுகளில் இருந்து விலகி, மனம் வருந்தி அல்லாஹ்வின் சன்னிதியில் கண்கலங்கி நின்றால் போதுமானது. மய்யித்தை புணர்தவருக்கும் கூட ரப்பு மனம் இறங்கிவிடுகிறான்.

 இறைவனின் அந்த மகத்தான மன்னிப்பை வாரி வழங்குகிற பொழுதுகள் இந்த ரமலனின் மத்திய பொழுதுகள்.

மக்களாகிய நமக்கு மிகப்பெரும் நம்பிக்கையளிக்கிற பொழுதுகள்.

 இந்த நிஃமத்தை உனர்ந்து நமது தவறுகளுக்காக அல்லாஹ்விடம் கையேந்துவோம்.  

 فَمَن تَابَ مِن بَعْدِ ظُلْمِهِ وَأَصْلَحَ فَإِنَّ اللَّهَ يَتُوبُ عَلَيْهِ ۗ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ (39)

 அல்லாஹ் கபூர் மட்டுமல்ல. அவனிடம் கையேந்தியதற்காக ரஹீமுமாக இருக்கிறான்.

 ஆமீன்

1 comment: