வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 28, 2024

ஜகாத்தில் சலுகை இல்லை

அல்லாஹ் நம்முடைய மார்க்கத்தில் பல கடமைகளை கட்டாயமாக்கியிருக்கிறான்.

 فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْإِسْلَامُ أَنْ تَشْهَدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، وَتُقِيمَ الصَّلَاةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتَصُومَ رَمَضَانَ، وَتَحُجَّ الْبَيْتَ إِنِ اسْتَطَعْتَ إِلَيْهِ سَبِيلًا»

 தொழுகை, நோன்பு, ஜகாத் ஹஜ் போன்ற இந்த கடமைகளை எந்த முஸ்லிமும் மீற முடியாது. செய்தே ஆகவேண்டும்.

எனினும் இவற்றில் சிலவைகளுக்கு சில சந்தர்ப்பங்களில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

தொழுகையில் சலுகை

நின்று தொழ முடியாவிட்டால் உட்கார்ந்து தொழலாம்.

நோய் காரணமாக எழுந்து நிற்க முடியாது என்றால், அல்லது நின்றால் நோய் அதிகரித்து விடும் என்றால், உட்கார்ந்து தொழலாம். பர்ளான தொழுகையை கடுமையான காரணமின்றி உட்கார்ந்து தொழுதால் தொழுகை செல்லாது.

قال النووي رحمه الله

ولا يكفي أدنى مشقة بل المعتبر المشقة الظاهرة، فإذا خاف مشقة شديدة أو زيادة مرض أو نحو ذلك، أو خاف راكب السفينة الغرق أو دوران الرأس صلى قاعدا ولا إعادة

அதே போல ருகூவும் சுஜூதும் சைகளால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். உட்கார்ந்து தொழுபவர்கள் அந்தரத்தில் கை வைத்து ருகூஃ சுஜூது செய்ய தேவையில்லை. ரூகூவுக்காக கொஞ்சமும், சுஜூதுக்காக இன்னும் சற்று தாழ்த்தியும் தலையை குனிந்து கொண்டால் போதுமானது.

மூல நோய்க்கார்ருக்கு  பெருமானான் அறிவுரை.  

فعن عمران بن حصين -رضي الله عنه- قال : كانت بي بواسير فسألت النبي -صلى الله عليه وسلم- عن الصلاة فقال: « صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ»، (صحيح البخاري).

 நோன்பிலும் இப்படி சலுகை உண்டு,

 فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ

நோன்பு அறவே வைக்க முடியாதவர்களும், நோய் தீரும் என்று எதிர்பார்க்க முடியாதவர்களும், ஒரு நாளைக்கு 1கிலோ 600 கிராம் கோதுமையை சதகாவாக கொடுக்க வேண்டும். அதன் கிரய்த்தையும் கொடுக்கலாம். (ஹன்பி) ஷாபி மதஹ்பில் ஒரு நாளைக்கு முக்கால் லிட்டர் அரிசி  (ஒரு கையளவு) பித்யாவாக கொடுக்க வேண்டும்.   

وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ

عن ثابت البناني قال : كبر أنس بن مالك حتى كان لا يطيق الصوم قبل موته بعام أو عامين ، فكان يفطر ويطعم ن كل  يوم مسكينا .

 பித்யா கொடுக்க வசதி அற்றவர்கள் தவ்பா துஆ செய்து கொண்டால் போதுமானது.

 ஹஜ்ஜிலும் இப்படி சலுகை உண்டு.

 ஹஜ்ஜுக்கு செல்ல முடியாதவர்கள் தமக்கு பதிலாக மற்றொருவரை அனுப்பி வைக்கலாம். அல்லது தமது பிள்ளைகளுக்கு தனக்காக ஹஜ்ஜு செய்யுமாறு வஸிய்யத்து செய்யலாம்.

 وقد ثبت عنه ﷺ أنه سألته امرأة قالتيا رسول الله! إن أبي شيخ كبير، لا يثبت على الراحلة، أفأحج عنه؟ قال: حجي عن أبيك

 இவ்வாறு கடமைகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் அவருக்கு கடமையை நிறைவேற்றிய கூலியை  அல்லாஹ்  கொடுக்கிறான் .

وقد ثبت في صحيح البخاري أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا مرض العبد أو سافر كتب له ما كان يعمل صحيحا مقيما

வேலை ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு பாதி சம்பளம் தான் வழங்குகிறது. அல்லாஹ்வோ முழு கூலியையும் வழங்குகிறான்.

 ஆனால் இத்தகைய சலுகை எதுவும் ஜகாத்தில் இல்லை.

 காரணம் ஜகாத் அல்லாஹ்வுக்காக நிறைவேற்றபடுகிற அமல் என்றாலும் அதில் அடியார்களுக்கும் பங்கு இருக்கிறது . அதில் குறை வைக்க அல்லாஹ் அனுமதிப்பதில்லை.

 ஜகாத்தை கடமையாக்கிய வசனம் – அதிகாரத்தின் ஒரு மாற்றுத் தொனியில் பேசுகிறது.

خُذ مِن أَموالِهِم صَدَقَةً تُطَهِّرُهُم وَتُزَكّيهِم بِه

 நோன்பு பற்றி பேசும் போது, كتب عليكم الصيامُ  என்று கூறீயது. தொழுகை குறித்து பேசுகிற போது  إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا என்று கூறியது. அதை விட ஒரு மேம்பட்ட ஆளுமையை ஜகாத் பற்றிய வசனம் வெளிப்படுத்துகிறது. எடுங்கள்! என்கிறது. அது கொடுக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்பதை உணர்த்துகிறது.

 இந்த வசனத்தின் அருமையை கவனியுங்கள்!

 முஃமின்களிடமிருந்து கட்டாயமாக ஜகாத் வசூலிக்கப்படுகிற போது பண்க்கார்ர்களுக்க் அது மனக்கஷ்ட்த்தை அளித்து விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்காக அல்லாஹ் அடுத்து கூறுகிறான்.

 تُطَهِّرُهُم وَتُزَكّيهِم بِه

அது அவர்களது பொருளாதாரத்தை சுத்தப்படுத்தும், அவர்களது இதயத்தையும் சுத்தப்படுத்தும.

 ஜகாத் நிறைவேற்றப்படும் போது தங்களுக்கு நன்மையே என செல்வந்தர்கள் நினைக்க வேண்டும் என்ற த்த்துவம் அதில் இருக்கிறது.

 இன்று பலரும் ஏழைகளுக்கு நன்மை செய்வதற்கு தாம் ஜகாத் வழங்குவதாக நினைக்கிறார்கள். அது ஒரு வகையில் உண்மை தான்/ எனினும் அல்லாஹ் ஜகாத்தை கடமையாக்கியது பணக்கார்ர்களுக்கு நன்மை செய்வதற்காக என இந்த வசனம் கூறுகிறது.  

பெருமானாரின் ஒரு அற்புதமான் பொன் மொழ் இருக்கிறது.

ஜகாத் சொத்தை பாதுகாக்கிறது.

 حصنوا أموالكم بالزكاة، وداووا مرضاكم بالصدقة، وأعدوا للبلاء الدعاء

 ஜகாத்தை திருக்குர் ஆனின் வசனம் சதகா என்று குறிப்ப்டுகிறது. அறிஞர்கள் கூறுகிறார்கள்

 இந்த சக்தா என்ற சொல் , சித்கு என்ற வார்த்தையில் இருந்து வந்த்து. இதன் பொருள் ஜகாத் கொடுக்கிற போது முஃமின் உண்ம்மயான முஃமினாகிறார். அவருடைய் ஈமானை மெய்ப்பிக்கும் சாட்சியாக இந்த ஜகாத் அமைகிறது என்று கூறிகிறார்கள்

 இந்த தத்துவத்தை சரியாக புரிந்து கொள்ளும் தவ்பீக்கை ஜகாத் கொடுக்கும் அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் தர வேண்டும்.

 தவ்பா அத்தியாயத்தின் இந்த 103 வசனத்தை ஜகாத் கொடுக்கிற ஒவ்வொருவரும் நினைவு படுத்திக் கொள்வது நல்லது.

 இந்த வசனம் மேலும் ஒரு செய்தியை பெருமானாருக்கு சொல்லியது.

 وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَّهُمْ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ توبه ١٠٣

ஜகாத் கொடுப்பவர்களுக்கா நீங்கள் துஆ செய்யுங்கள். அது அவர்களுக்கு நிம்மதியளிக்கும்.

 எடு என்று சொல்லும் போது கடுமையை காட்டிய இறைவன். எடுக்கப்படும் போது கருணை மழையை பொழிகிறான்.

 ஜகாத் கொடுப்பவர்கள் அனைவரும் இந்த கருணை மழைக்கு சொந்தக்கார்ர்கள்.

 இங்கு மற்ற மக்களை அவர்கள் மகிழ்ச்சிப்படுத்தியது போல அல்லாஹ் அவர்களை நாளை மறுமையில் நிச்சயம் மகிழ்ச்சிப்படுத்துவான்.

சரியாக ஜகாத் கொடுப்பவர்கள் அனைவரும் பெருமானாரின் துஆ வுக்கு உரியவர்கள். இமாம்களின் துஆவுக்கு உரியவர்கள்

 இந்த ஆண்டு தங்களுடைய சம்பாத்தியத்திலிருந்து ஒரு நூறு ரூபாயை ஆவது அதற்குரிய முறையில் நிறைவேற்றிய ஒவ்வொருவருக்கும் அவ்ர்களுடைய குடும்பத்திலும் பொருளாதாரத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக! நிம்மதியையும் திருப்தியையும் தந்தருள்வானாக!

 ஜகாத்தை பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் கொடுத்தவர்களுக்கா துஅ செய்ய வேண்டும் என்கிற பண்பையும் இது கற்றுத் தருகிறது.

 ஜ்காத் யார் மீது கடமை

 ஆண்டு முழுவதும் 612 கிராம் வெள்ளிக்கு நிகரான  பணம்  48 ஆயிரம் ரூபாய் கடன் மற்றும் செலவுகள் போக இருந்தால் ஜகாத் கடமையாகும். இந்த பணம்•        

1.       கையிருப்பு

2.       கடை சரக்கு

3.       கிடைக்கும் என்ற உறுதியில் நாம் கொடுத்துள்ள  கடன;        

4.   நீண்ட கால தவனைக்கு நாம் வாங்கியிருக்கும் கடன் .

என்ற 4  வகையில் ஏதேனும் ஒரு வகையில் இருந்தாலூம் ஜகாத் கடமையாகும்.

வாடகைக்கான் பொருட்களில் ஜகாத் இல்லை. வாடகைப்பணத்தில் ஜகாத் உண்டு.

2 வகை கால் நடைகள்

ஆடு மாடு ஒட்டகை என்ற மூன்று வகை கால்நடைகளில் குறிப்பிட்ட அளவுக்கு குறிப்பிட்ட தொகை ஜகாத்தாகும்

குதிரையில் ஜகாத் இல்லை, யானையில் ஜகாத் இல்லை.

அதே போல அடிமைகளில் ஜகாத் இல்லை .

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «ليس على المُسلِم في عبدِهِ وَلاَ فَرَسهِ صَدَقَة». وفي لفظ: «إلا زكاة الفِطر في الرقيق».  [صحيح]

அன்றைய அரபகத்தில் அடிமைகளும் குதிரைகளும் பெரும் சொத்துக்களாகும். அதில் ஜகாத் இல்லை என்று பெருமானார் சொல்லி விட்டார்கள் என்றால் அதில் ஜகாத் கிடையாது தான். இதற்கு மேல் கருத்துச் சொல்ல நமக்கு அதிகாரம் கிடையாது, கூடாது.

இதில் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது. ஜகாத் ஒரு இபாதத் ஆகும். எப்படி லுஹர் தொழுகை 4 ரகாஅத் என்பதில் நாம் கருத்துச் சொல்ல முடியாதோ அது போல இது விசயத்திலும் நம் விருப்பத்திற்கு கருத்துச் சொல்ல கூடாது.

தங்கத்தில் ஜமாத் உண்டு, வைரத்தில் ஜகாத் கிடையாது. இதிலும் அப்படித்தான்.

ஜகாத் கடமையாகும் மூன்றாவது இனம் விவசாயம்

எல்லா விவசாயத்திலும் ஜகாத் கிடையாது.

தொளியுல்ல உணவாக பாதுகாக்கப்படுகிற பொருட்களின் விளைச்சலில் மட்டுமே ஜமாத் கடமையாகும்.அரிசி கோதுமை போல

தேங்காயில் ஜகாத் இல்லை. மிளகாயில் ஜகாத் இல்லை.

காரணம் இவை உணவில் பயன்படுத்தப்படுகிற பொருட்களே தவிர உணவு அல்ல.

ஒரு ஆள் பெரிய தென்னந்தோப்பு வைத்திருக்கிறார் ஆயிரக்கணக்கில் தேங்காய் கிடைக்கிறது என்றாலும் அதை அவர் வியாபாரத்திற்கு பயன்படுத்தாத வரை இத்தனை தேங்காய்க்கு இத்தனை தேங்காய் என்ற ஜகாத் கிடையாது.

வியாபாரத்திற்கு பயன்படுத்தினால் அது வியாபாரப் பொருள் என்ற வகையில் ஜகாத் கடமையாகிவிடும். இல்லை எனில் கடமை இல்லை.

கோதுமையோ அரிசியோ அப்படி அல்ல அது வியாபாரத்திற்கு பயன்படுத்தினாலும் சரி இல்ல என்றாலும் அதில் விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட சதவீத்த்தை ஜகாத்தாக கொடுக்க வேண்டும்.

இங்கேயும் நாம் கவனிக்க வேண்டியது எதில் ஜகாத் கடமையாகுமோ அதில் மட்டுமே ஜகாத் கொடுக்க

ஜகாத் கடமையாகும் நான்காவது இனம் பழங்கள்

பழங்களில் பேரீத்தம் பழம் திராட்சை பழம் ஆகியவற்றில் மட்டுமே ஜகாத் கடமையாகும்

மாதுளை, ஆப்பிள் பழங்களில் இவ்வளவு விளைச்சல் கிடைத்தால் இவ்வளவு என்ற ஜகாத் இல்லை  அவற்றை வியாபாரம் செய்தால் அது வியாபார பொருளாக கருதப்படும்

வியாபார பொருட்கள் அனைத்துக்கும்

பணத்துக்கான அளவில் ஜகாத் கொடுக்கனும்.

கடன் தொகை போக 50 ஆயிரம் ரூபாய் வியாபார பொருட்கள் வைத்திருப்பவர் ஜகாத் கொடுக்க வேண்டும்.

சொந்த உபயோகத்திற்காக ஆடி கார் வைத்திருந்தாலும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை

ஜகாத் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று 8 பிரிவினரை குர் ஆன் வகைப்படுத்தியுள்ளது.

إِنَّمَا الصَّدَقَاتُ

1.     لِلْفُقَرَاءِ பிச்சைக்கரகள்

2.     وَالْمَسَاكِينِ ஏழைகள்

3.     وَالْعَامِلِينَ عَلَيْهَا  அரசு நியமித்துள்ள ஜகாத் வசூலகர்கள்

4.     وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ இஸ்லாத்திற்கு நெருக்கமானவர்கள்

5.     وَفِي الرِّقَابِ அடிமைகளை விடுதலை செய்வதில்

6.     وَالْغَارِمِينَ கடனாளிகள்

7.     وَفِي سَبِيلِ اللَّهِ  அல்லாஹ்வின் பாதையில் நடை பெறும் நற்காரியங்கள்

8.     َاِبْنِ السَّبِيلِ பயணிகள்

இதை சொல்லி விட்டு فَرِيضَةً مِنْ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

இப்படித்தான் கொடுக்க வேண்டும் என்றும் திருக்குர் ஆன் கட்டளையிடுகிறது.

சில பேர் பிச்சைக்காரகளுக்கு ஜகாத் கொடுப்பதை குறை கூறுகிறார்கள். இது அவர்களது தனிப்பட்ட கருத்தாகும். இதற்கும் இஸ்லாமிற்கும் சம்பந்தமில்லை. 

கல்விக்கட்டணம் ,செலுத்தப்படும் பொது சம்பந்தம் பட்ட மாணவர் வழியாகவே அது தரப்பட வேண்டும்.

எந்த நிறுவனத்திற்கும் கட்டிடச் செலவுகளுக்காக மற்ற  ஊழியர் சம்பளத்திற்காக ஜகாத் கொடுக்கப்படக் கூடாது.

ஏழைகளுக்கு என்றால் ஏழை உறவினர்களே அதில் மிகப் பெருத்தமானவர்கள்

ஷாபி மத்ஹபின் சட்ட நூலான முஜ்னியில் இவ்வாறு கூறப்படுகிற்து.

ويقسمها على من تقسم عليه زكاة المال وأحب إلى ذوو رحمه إن كان لا تلزمه نفقتهم بحال وإن طرحها عند من تجمع عنده أجزأه إن شاء الله تعالى.

  ஜகாத்தை நெருங்கிய உறவினர்களுக்கு கொடுக்கிற போது தரம்ம் செய்த நன்மையும் உறவை பராமரித்த நன்மையும் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 உறவுகளுக்கு கொடுக்க கூடாது என்று இக்காலத்தில் சிலர் பேசுவதும் சுயக் கருத்தாகும். அல்லாஹ்விற்கான ஒரு வணக்கத்தில் தலையிடுவதாகும். ன்தோன்றித்தனமான கருத்தாகும்.

சேவை அமைப்புக்கள் ஜகாத் வசூலிக்கலாமா ?

சேவை அமைப்புக்களிடம் ஜகாத்தை கொடுப்பது சட்ட பூர்வமாகாது. அதாவது அப்படிக் கொடுத்து விட்டு நம்முடைய கடமை முடிந்து விட்ட்தாக நாம் கருத முடியாது. அவர்கள் அதை முறையாக உரியவர்களிடம் சேர்த்து விட்டார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவரை நமது ஜகாத் நிறைவேறாது. ஒரு சேவை அமைப்பு நாம் கொடுத்த ஜகாத்தை பாழ்படுத்தி விடுமானால் நாம் ஜகாத் கொடுத்தவர்களாக ஆக மாட்டோம்.

 நேரடியாக கொடுங்கள் அதுவே சிறந்த்து. ஷாபி மதஹபின் சட்ட நூலான பதஹுல் முஈனில் கூறப்படுகிறது.

நேரடியாக ஜகாத்தை வழங்கும் போது ஜகாத் பெறுபவர்களில் வசூலிப்போர் என்ற பிரிவு குறைந்து போய்விடும்.

ولو فرق المالك الزكاة 

ஜகாத்தை பெறுகிற வட்டம் கொடுப்பவருக்கு நெருக்கமாக வளையம்سقط سهم العامل கொண்டிருப்பதாக சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்/ அதாவது உறவுக்கார்ர்கள், மஹல்லா வாசிகள், அந்த ஊர் வாசிகள் அந்த நாட்டுக்கார்ர்கள் என்ற நெருக்கம் இதில் முக்கியமாக கருதப்பட வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.

 உரியவர்கள் உரிய முறையில் ஜகாத் கொடுக்க் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக! அதை கபூல் செய்வானாக! அவர்களுக்கு பரக்கத் செய்வானாக!

இந்த ஜகாத் கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் இனி வரும் ஆண்டுகளில் ஜகாத் கொடுக்கும் அளவு அல்லாஹ் வளப்படுத்துவானாக!

ஆமின்

 

 

 

 

 

 

 



No comments:

Post a Comment