வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 16, 2024

ஹஜ் ஆசையில் அமையட்டும்.

  الحج  أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون ياأولي الألباب ) .

ஹஜ் பயணம் தொடங்கிவிட்ட்து.

திருக்குர் ஆன் ஹஜ்ஜின் மாதங்கள் என மூன்று மாதங்களை குறிப்பிடுகிறது.

الحج  أشهر معلومات

ويروى عن ابن عباس   إنها شوال وذو القعدة وعشر من ذي الحجة ، وعليه أبو حنيفة والشافعي وأحمد 

 ஹஜ் என்பது துல்ஹஜ் 8 முதல் 12 வரையிலான ஐந்து நாட்களில் நடை பெறக் கூடிய ஒரு வணக்கம் எனினும் ஹஜ்ஜுக்காக ஷவ்வால் முதலேஅதாவது ஈதுல் பித்ரு பெருநாளில் இருந்து ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முதல் நாள் வரை இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்பதால் சில மாதங்கள் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

 ஷவ்வால் மாதம் முதலே ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டலாம் என்றாலும் கூட தற்போது போக்குவரத்து வசதிகள் இலகுவாகிவிட்டதால் துல் கஃதா மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஹஜ்ஜின் அதிகாரபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன.

 இந்திய தலை நகர் தில்லியிலிருந்து மே 9 ம் தேதி முதல் விமானம் மதீனா தலை நகரை சென்று சேர்ந்து விட்டது. சுமார் முன்னூறு பயணிகள் அதில் புறப்பட்டன. ஜூம் 9ம் தேதி வரை விமானங்கள் இந்தியாவின் 10 விமான நிலையங்களில் இருந்து புறப்படும்.

 இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு 1,75 025 நபர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதில் 1.40,020 பேர் ஹஜ் கமிட்டி மூலமாகவும் 35,005 பேர் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலமாகவும் பயணமாகின்றன்னர்.  

வரும் ஞாயிற்றுக் கிழமை அதவாது 19 ம் தேதி முதல் தமிழகத்திலிரிந்து ஹஜ் பயணம் தொடங்குகிறது .

இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து சுமார் 5 ஆயிரத்து 600 ஹாஜிகள் ஹஜ் கமிட்டி மூலம் பயணம் செய்கின்றனர். அவர்களது பயணம் மே 26 ம் தேதியிலிருந்து ஆரம்பமாகின்றனது.

 அனைத்து பயணிகளுடைய ஹஜ்ஜையும் அல்லாஹ் கபூல் செய்வானாக! இலேசாக்கி வைப்பானாக!

 இந்த ஆண்டு ஹஜ்ஜை இலேசானதாகவும் பாதுகாப்பானதாக அல்லாஹ் ஆக்கியருள் வானாக!

 நம் அனைவருக்கும் அல்லாஹ் ஹஜ்ஜை நஸீபாக்குவானாக!

 ஹஜ் பயணம் ஆசைப்படுவோருக்கு கிடைக்க கூடியது.

அளவு கடந்த ஆசையிலும் ஆர்வத்திலும் நிறைவேற்றப்படக் கூடியது.

 இதில் பல சிரமங்கள் இருந்தாலும். இதன் மீது மக்களுக்கு உள்ள ஆர்வமும் ஆசையுமே இதை மிகவும் விருப்பத்திற்குரிய ஒரு நற்செயலாக இன்று வரை நிலைக்க வைத்திருக்கிறது.

 ஹஜ்ஜில் முஸ்லிம் சமூதாயம் ஆரவம் காட்டுகிற வரை கியாமத் நாள் வராது.

 قال النبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ : (لا تَقومُ السَّاعةُ حتَّى لا يُحَجَّ البَيتُ

الراويأبو سعيد الخدري | المحدثالبخاري 

 முந்தைய காலத்தில் ஹஜ்ஜுக்கான பயணம் மிக சிரம்மானதாக இருந்தது. இவ்வளவு வசதிகள் இருக்க வில்லை.

பொருளாதாரத்திலும் போக்குவரத்திலும்.

 தப்ஸீர் ஜலாலைனின் ஓரக்குறிப்பில் (ஹாஷியாவில்) ஒரு செய்தி இடம் பெற்றிருக்கிறது. சிலர் கூறுகின்றனர், நாங்கள் எங்களுடைய  தாடி கருத்திருக்கும் போது புறப்பட்டோம். மக்காவிற்கு வந்து சேர்ந்த போது தாடி வெளுத்துவிட்டது.  

 அதே போல 1930 ல் பெட்ரோல் வளம் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்புவரை அரபு நாட்டின் நிலவரம் மிகவும் ஏழ்மையானதாகவே இருந்தது.

 அன்றைய காலத்தின் ஒரு ஹஜ் பயணி கூறுகிறார். நாங்கள் ஓரிட்த்தில் இளைப்பாற இறங்கினோம். ரொட்டி சுடுவதற்கு ஆயத்தமானோம். அப்போது அங்கு மிகவும் பசித்த கோலத்தில் ஒரு மனிதரைக் கண்டோம். அவரை விருந்துக்கு அழைத்தோம். அவர் தண்ணீர் கேட்டார். கொடுத்தோம். ரொட்டிக்கு தயாராக வைத்திருந்த மாவை ஒரு பிடி எடுத்து அந்த தண்ணீரில் அவர் கலந்து குடித்தார். பிறகு சொன்னார். இனி நான் ரொட்டி தயாராகும் வரை காத்திருக்க முடியும்.

 ஆப்கானிலிருந்து ஹஜ்ஜுக்கு சென்ற ஒருவர் கூறினார். நாங்கள் தர்பூசனி கொண்டு செல்வோம். அந்த தர்பூசனியில் சாப்பிட்டது போக மீத மிருக்கிற அதன் மேல் பகுதியை வீசி எறிந்தால் அரபு நாட்டு சிறுவர்கள் அதை எடுத்துச் செல்வார்கள். அவர்களுடைய தாய்மார்கள் அதை சமைத்து பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள்.

ஒரு தடவை ஒரு சிறுவருக்கு நாங்கள் ஒரு துண்டு தர்பூசணி கொடுத்தோம். அதை சாப்பிட்ட அந்த சிறுவர்,  முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நன்றி. அவர் இல்லை என்றால் இந்த தர்பூசணி எங்களுக்கு கிடைத்திருக்காது என்றார்.

 நினைத்துப் பார்க்கவே இதயத்தை கனக்கச் செய்கிற இது போன்ற சூழ்நிலையில் தான் பல நூறு ஆண்டுகளாக ஹஜ் பயணம் நடை பெற்றிருக்கிறது.

 அப்போது பயணம் செய்தோர் மிகுந்த ஆசையோடும் ஆர்வத்தோடும் பயணம் செய்துள்ளனர்.

  பாகிஸ்தானின் பெருமைக்குரிய ஆன்மீக சொற்பொழிவாளர் நக்ஷபந்திய்யா தரீக்காவின் குருநாதர் பீர் துல்பிகார் சாஹிப் அவர் சந்தித்த ஒரு அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார்.

 பாகிஸ்தானில் ஒரு மாடு மேய்ப்பாளர். பால கறந்து கொடுத்து பிழைப்பை நட்த்திக் கொண்டிருந்தார் .அவர் ஹஜ்ஜு செய்ய ஆசைப்பட்டார்.  கண்ணில் படுகிற ஒவ்வொரு வரிடமும் நான் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டிருப்பார். அது ஒரு வகையான பைத்தியம் போல இருக்கும். ஆனால் அவர் அப்படி ஆள் கிடையாது.

 ஹஜ்ஜுக்கு செல்ல பாஸ்போர்ட் வைத்திருக்கிறாயா என்றால் இல்லை என்பார், டிக்கட்டிற்கு காசு வைத்திருக்கிறாயா என்று கேட்டால் இல்லை என்பார் ஆனால் நான் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

 ஹஜ்ஜுக்கு புறப்பட்ட ஒருவரிடம் எப்படிப் பயணமாவது என்று கேட்டார். அவர் சொன்னார். லாஹூரிலிருந்து கராச்சிக்கு இரயிலில் செல்வேன். அங்கே துறை முகம் இருக்கிறது.  ஹஜ் ஆபீஸ் இருக்கிறது அங்கிருந்து கப்பலில் ஜித்தா செல்வேன். அங்கிருந்து மக்கா செல்வேன் என்று கூறினார்.

இதை கவனமாக கேட்டுக் கொண்ட அந்த மாட்டுக்காரர் லாஹூர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தார். டிக்கட் எடுக்காமே ரயில் பெட்டியில் ஏறினார். அவரை கவனித்த ரயில்வே காட் நீங்கள் டிக்கெட் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார் நான் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும் என்பதை தவிர வேறு எதுவும் அவர் சொல்லவில்லை அந்த காட் அவர் மீது இரக்கப்பட்டு நீங்கள் இந்த ரயில் பெட்டியில் பயணம் செய்வதாக இருந்தால் அதற்கு டிக்கெட் பெற வேண்டும் சரி என்னோடு என்னுடைய பெட்டியில் வந்த அமர்ந்து கொள் என்று சொல்லி அமர வைத்தார். அங்கிருந்து அவர் கராச்சி நகரத்திற்கு சென்றார் அங்கு அவர் ஹஜ்க்கு செல்லக்கூடிய அலுவலகத்திற்கு சென்று அதை நோட்டமிட்டார் எல்லோரும் பாஸ்போர்ட் மற்றும் டிக்கட்  சகிதம் கப்பலில் ஏறுவதை பார்த்தார். இந்த கப்பலில் எப்படி ஏறுவது என்று யோசித்தார்.

அங்கு போர்ட்டர்கள் பயணிகளின் சாமாண்களை கப்பலில் ஏற்றிக் கொண்டிருந்தனர். போர்ட்டர் யூனிபார்ம் அணிந்தவர்களை அதிகாரிகள் செக் செய்யாமல் அனுமதிப்பதை பார்த்தார். ஒரு போர்டரிடத்திலே உங்களுடைய ஆடையை எனக்குத் தாருங்கள் நான் உங்களுக்கு பதிலாக சாமான்களை கப்பலுக்குள் எடுத்துச் செல்கிறேன் கடைசியில் இந்த ஆடையை உங்களுக்கு அனுப்பி விடுகிறேன் என்று சொன்னார்

 அவ்வாறே அந்த போர்டடர் ஒப்புக்கொண்டார். ஓரிரு முறை கப்பலுக்குள் சரக்குக்ளை எடுத்துச் சென்ற இவர் கடைசியில் கப்பலுக்கு தங்கி யூனிபார்மை மற்றொருவர் மூலமாக கொடுத்தனுப்பி விட்டார்.

 கப்பலில் ஒருவரிடம் அவர் நட்பு ஏற்படுத்திக் கொண்டார் அவரிடத்தில் ஜித்தா துறைமுகம் வரும்போது எனக்கு சொல்லுங்கள் என்று சொன்னார். இரவு நேரத்தில் கப்பல் ஜித்தா துறை முகத்தை அடைந்த்து. உறங்கிக் கொண்டிருந்த அவரை அந்த நண்பர் எழுப்பி இதோ வந்துவிட்டது என்றார். கொஞ்சமும் யோசிக்காமல் ஜித்தா துறைமுகத்திற்கு அருகிலே அவர் கடலில் குதித்தார் அவரை எழுப்பி விட்ட நண்பருக்கு மிகவும் கவலையாகி விட்டது உறங்கிக் கொண்டிருந்தவரை நாம் எழுப்பி விட்டோம் அவர் கடலில் குதித்து விட்டாரே என்ன ஆகுமோ என்று அவர் பதறினார் ஆனாலும் ஒன்று செய்ய முடியவில்லை.

 கீழே விழுந்தவர் தட்டு தடுமாறி கரையில் வந்து ஒதுங்கினார் சிறிது நேரம் மயக்கமற்றிருந்தவர் எழுந்து பார்த்தபோது கரையில் பயணிகளை பரிசோதிக்கப்படுவதும் அவர்கள் உள்ளே அனுப்பப்படுவதும் தெரிந்தது. அதைச் சுற்றி வேலி கட்டப்பட்டிருந்தது.

 அந்த வேலிக்கு அருகிலே துறைமுக அதிகாரியின் வீடு இருந்தது அந்த வீட்டை அ அவர் எட்டிப்பர்த்த வீட்டுக்கு உள்ளே இரண்டு பேர் ஒரு மாட்டிலிருந்து பால் கறப்பதற்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த மாட்டிடம் அவர்களால் பால் கறக்க முடியவில்லை

 அந்தப் பணியாளர்களை கை தட்டி அழைத்த அவர்  பணியாளர்களிடத்தில் செய்கையால் என்னை அனுமதித்தால் நான் பால் கறந்து தருகிறேன் என்று சொன்னார் அந்த வீட்டின் எஜமானி இதை பார்த்துக் கொண்டிருந்தார் அவருடைய குழந்தைகளுக்கு சீக்கிரம் பால் தேவைப்பட்டது அதனால் தன்னுடைய கணவரிடத்திலே சொல்லி இந்த நபரை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

 இவர் அனுமதிக்கப்பட்டார்/ அவர் உள்ளே சென்று தனக்கு தெரிந்த வித்தை பயன்படுத்தி அந்த மாட்டிடம் இருந்து வழக்கத்திற்கு அதிகமான பாலை கலந்து கொடுத்தார் அந்த வீட்டு எஜமானிக்கு மிகவும் ஆச்சரியமாகிவிட்டது.அவர் மக்காவில் இருந்த அவருடைய தந்தைக்கு இந்த செய்தியை சொல்லி அனுப்பினார்

 அவருடைய தந்தைக்கு மக்காவில் ஒரு பெரிய மாட்டுத் தொழுவம் இருந்தது அவர் மாட்டுக்காரரை  என்னிடத்தில் அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார் அதன்படி இந்த நபர் மக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அங்கு சென்று அவர் பால் கறந்த போது அவர்களுக்கு முன்பு கிடைத்தை விட அதிகப்படியான பால் மிக சீக்கிரத்தில் கிடைத்துவிட்டது இதை கண்டு ஆச்சரியமடைந்த அந்த முதலாளி நீ இங்கேயே தங்கிக் கொள் என்று கூறினார் அதற்கு அவர் நான் ஹஜ் செய்ய வேண்டும் என்றார் திரும்பத் திரும்ப ஹஜ் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பதை கேள்விப்பட்ட அந்த முதலாளிக்கு இவருடைய மனோநிலை புரிந்து விட்டது நான் உன்னை ஹஜ் செய்ய ஏற்பாடு செய்கிறேன் நீ அதற்குப் பிறகு இங்கே தங்கிக் கொள் என்றார் அப்போது அவர் என்னுடைய குடும்பம் லாஹூரில் இருக்கிறதே என்றார் அவ்வளவுதானே உன் குடும்பத்தை நான் இங்கே வரவழைக்கிறேன் என்று சொல்லி அந்த முதலாளி அவருடைய குடும்பத்தை அங்கு வரவழைத்தார். அந்த ஆண்டு தன்னுடைய குடும்பத்துடன் அந்த மாட்டுக்கார்ர் ஹஜ்ஜு செய்தார்.

அவர் கஃபாவில் தவாபு செய்த போது கப்பலில் அவருக்கு ஜித்தா துறை முகம் வந்து விட்டது என்று அடையாளம் காட்டிய நபர் அவரைப் பார்த்தார். ஆச்சரியமடைந்து மகிழ்ச்சியாக அவரை சந்தித்த அவர் அவரிடம் விபரம் கேட்டார். வெளியே வாருங்கள் என்று சொல்லி அவரை அழைத்துச் சென்ற மாட்டுக்கார்ருக்காக வெளியே ஒரு கார் காத்திருந்தது. அந்த காரில் நண்பரை அழைத்துச் சென்று நடந்த விபரங்களை கூறிய மாட்டுக்காரர் நான் கஃபாவுக்கு வர ஆசைப்படுவதை கண்ட எனது முதலாளி இந்த காரையும் எனக்கு தந்து விட்டார் என்று கூறினார்.

ஹஜ்ஜுக்கு ஆசைப்படுகிறவர்களுக்கு அல்லாஹ் எப்படியாவது அந்த வாய்ப்பை வழங்கிவிடுகிறான். அவர்களின் ஆசைக்கு ஏற்ப மேலும் அதிகமான நல்ல வாய்ப்புக்களையும் வசதிகளையும் அல்லாஹ் செய்து கொடுக்கிறான் என்பது இந்த நிகழ்வின் கருத்தாகும்.

இது போன்ற ஆச்சரியகரமான ஏராளமான வரலாறுகளை தன்னகத்தோ கொண்டது தான் ஹஜ்ஜு.

 ஹஜ் கஃபாவை காணும் ஆர்வத்தோடும் அல்லாஹ்வின் மீதான் ஆசையோடும் நிறைவேற்றப்பட வேண்டிய வணக்கம்.

 நம்முடைய முன்னோர்கள் இப்படித்தான் மிக சிரம்மான அந்த வணக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்

 இப்போது வசதி வாய்ப்புக்கள் அதிகரித்து விட்டதால்  ஹஜ் மற்ற பயணங்களை போன்ற ஒரு பயணம் போல ஆகிவிட்டதோ என்ற அச்சம் எழுகிறது. அல்லாஹ் பாதுகாக்கட்டும்.

ஹஜ் என்ற வார்த்தைக்கு القصد ஒன்றை நாடிச் செல்லுதல் என்று பொருள். ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் அல்லாஹ்வை நாடிச் செல்கிறார்கள். 

அல்லாஹ் மட்டுமே நமக்கு எல்லாமும் ஆனவன். அவன் மட்டுமே தர முடிந்தவன். நாம் அனைவரும் அவனிடமே கேட்டுப் பெற வேண்டியவர்கள் என்தை மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்திக் கொள்ளும்  அற்புதமான ஒரு வாய்ப்பு ஹஜ்,

உமர் ரலி அவர்களின் பேரர் சாலிம் பின் அப்துல்லாஹ் தவாப் செய்து கொண்டிடுருந்தார். அன்றைய உமய்யா பேரரசர் – ஹிஷாம் பின் அப்துல் மலிக் அப்போது அங்கு இருந்தார். அரசர் சாலிமிடம் உங்களுக்கு என்ன வேனும். கேளுங்கள் என்றார். சாலிம் வேறெதுவும் சொல்ல வில்லை. இது அல்லாஹ்வின் ஆலயம் இங்கு அல்லாஹ்விடமே கேட்க வேண்டும் என்பதை உணர்த்து கிற வகையில்  பல் யஃபுதூ ரப்ப ஹாதல் பைத்தி என்ற ஆயத்தை ஓதிக் காட்டினார்.

தவாபிற்கு பிறகு அரசர் கஃபாவிற்கு வெளியே காத்து நின்றார். சாலிம் ரஹ் வெளியே வந்த போது அரசர் கேட்டார். இப்போது கேளுங்கள் உங்களுக்கு என்ன வேண்டு ?

சாலிம் கேட்டார். . தீனையா துன்யாவையா ?நான் எதை உங்களிடம் கேட்க ?

அரசர் சொன்னார். தீன் உங்களிடம் இருக்கிறது. துன்யாவில் என்ன வேண்டும் கேளுங்கள் என்றார்.

சாலிம் சொன்னார்.  உலகின் சொந்தக்காரனான ரப்பிடமே நான் துன்யாவை கேட்ட்தில்லை உலகில் எதுவும் சொந்தமில்லாத உங்களிடம் நான் என்ன கேட்பேன்.

 قال ابن عيينة : دخل هشام الكعبة ، فإذا هو بسالم بن عبد الله ، فقال : سلني حاجة . قال : إني أستحيي من الله أن أسأل في بيته غيره . فلما خرجا قال : الآن فسلني حاجة ، فقال له سالم : من حوائج الدنيا أم من حوائج الآخرة ؟ فقال : من حوائج الدنيا . قال : والله ما سألت الدنيا من يملكها ، فكيف أسألها من لا يملكها .

 நமக்கு எல்லாம் தருகிற சக்தி படைத்த  ஒரே சக்தியிடம் செல்கிறோம் என்ற உணர்வு ஒவ்வொரு ஹாஜிக்கும் வரவேண்டும்.

எந்த ஒரு ஹாஜியும் இதை உணர்ந்து கொள்ளும் போது அவருக்கு ஹஜ்ஜின் மீது ஏற்படுகிற ஆசை பேராசையாகிவிடும்..  

 இந்த் ஆண்டு ஹஜ் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள ஹாஜிகள் நம்முடைய முன்னோர்கள் ஹஜ்ஜில் வெளிப்படுத்திய ஆர்வத்தை எண்ணிப்பார்த்து தம்முடைய ஆர்வத்தை வளர்த்துக்  கொள்ள வேண்டும்.

 கிடைப்பதற்கரிய பாக்கியம் கிடைத்திருக்கிறது என்ற ஆசையோடு ஹஜ் பயணத்திற்கு தயாராக வேண்டும்.

 அப்படி ஹஜ்ஜை நிறைவேற்றினால் இந்த ஹஜ் பயணம் அவர்களுக்கு

சொர்க்கத்தை பெற்றுத்தரும்

1.    நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

عن أبي هريرة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم والحج المبرور ليس له جزاء إلا الجنة)

2.   பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்

     وعن أبي هريرة قالَ: سَمِعْتُ رسُولَ اللَّهِ ﷺ يَقولُمنْ حجَّ فَلَم يرْفُثْ، وَلَم يفْسُقْ، رجَع كَيَومِ ولَدتْهُ أُمُّهُ. متفقٌ عَلَيْهِ.

3.   ஹஜ்ஜுக்கு செலவு செய்யும் காசு பரக்கத்தானதாக ஆகும்.

ஹஜ்ஜுக்கு செலவு செய்வது ஜிஹாதிற்கு செலவு செய்வது போல எழுநூறு மடங்கு அதிக நன்மையானது.

  وفي الحديثالنفقة في الحج كالنفقة في سبيل الله بسبعمائة ضعف. رواه أحمد،

 ஹஜ் பாவத்தை மட்டும் அல்ல; ஏழ்மையையும் அழித்துவிடுகிறஹ்டு.

 وروى أصحاب السنن: (تابعوا بين الحج والعمرة، فإنهما ينفيان الفقر والذنوب، كما ينفي الكير خبث الحديد والذهب

சிரமத்திற்கும் செலவிற்கும் ஏற்ப கூலி கிடைக்கும்.

 ففي الحديث أن رسول الله  قال لعائشة لما اعتمرت من التنعيمإن لك من الأجر على قدر نصبك ونفقتك. رواه الحاكم

எனவே மதிப்பு மிக்க ஒரு பயணத்தை நமது ஆசையாலும் ஆர்வத்தாலும் அழகு படுத்துவோம். இந்த வருடம் ஹஜ்ஜு செய்ய இயலாதவர்கள் இனி வரும் காலங்களில் இந்த ஆர்வத்தோடு ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைப்படுவோம்.

 பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

أخرج أحمد والطبراني عن أبي هريرة -رضي الله عنه أن النبي -صلى الله عليه وسلم- قال:

إذا خرج الحاج حاجًا بنفقة طيبة، ووضع رجله في الغرز ( الركاب )  فنادَى: لبيك اللهم لبيك، ناداه منادٍ من السماء : لبيك وسعدَيك ( أي أجاب الله حجك إجابة بعد إجابة )، زادك حلال، وراحتك ( مركبك ) حلال، وحجُّك مبرور غير مأزور. وإذا خرج بالنفقة الخبيثة فوضع رجله في الغرز، فنادى: لبيك، ناداه مناد من السماء، لا لبيكَ ولا سعديك، زادك حرام، ونفقتك حرام، وحجك مأزور غير مأجور

 நாம் தல்பியா செல்லும் போது மலக்குகள் நமக்கு நல்ல பதிலை சொல்ல வேண்டும்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

5 comments:

  1. Anonymous10:13 PM

    Masha allah
    Barakallah

    ReplyDelete
  2. Anonymous8:34 AM

    Easy to learn

    ReplyDelete
  3. Anonymous9:43 AM

    Haj seiyyum nasibai anaittu muslimgalirkum Allah taruvaanaga

    ReplyDelete
  4. Asrar ahamed11:54 AM

    Allah anaittu muslimgalirkum hajjin nasibai arulpurivaanaga

    ReplyDelete
  5. Asrar ahamed11:54 AM

    Alhamdulillah

    ReplyDelete