வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 23, 2024

சதிகாரர்கள் சாதிக்க முடியாது.

இரான் அதிபரின் இப்ராஹீம் ரைஸி 20 தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த செய்தி உலக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அரசியல், அமெரிக்காவின் ஆதிக்கத்தை தாண்டிச் செல்லும் போக்கில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கும் போது ரைஸியின் இழப்பு பொதுவான மக்கள் அனைவரிடமும் ஒரு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக ரைஸி அவருடைய அபாரநடவடிக்கைகளால் உலகின் கவனத்தை கவர்ந்திருந்தார்,

இஸ்ரேலை எதிர்த்து ஹமாஸ் நட்த்தி வரும் போராட்டங்களுக்கு இரான் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்தது. இஸ்ரேலையும் அதற்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்காவையும் பகிரங்கமாக விமர்சித்தும் வந்தது

இதனாலும் இதற்கு முன்பும் அமரிக்கா விதித்த ஒரு தரப்பான தடைகள் பல வகைகளிலும் இரானுக்கு சிரமம் கொடுத்து வந்தன. இரான் தனது பேச்சை கேட்பதில்லை என்ற ஒற்றை காரணத்திற்காக அதை உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்த அமெரிக்க பகிரத முயற்சிகளை செய்து வந்தது.

ஆனால் இரான் தடைகளுக்கு அப்பாலும் இந்தியா சீனா ரஷியா இலங்கை அஜர் பைஜான் உள்ளிட்ட நாடுகளூன் நட்புறவை மேம்படுத்திக் கொண்டு அமெரிக்காவின் பொருளாதார தடைகளை செல்லாக்காசாக்கிக் கொண்டிருந்தது.

உலகின் பிரபலமான முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவிற்கு கவரி வீசுபவைகளாக இருந்த நிலையில் நீண்ட காலமாக அமெரிக்கா விதிக்கும் தடைகளுக்கு கீழ் இருந்த போதும் இரான் தனது தொடர்ச்சியான முயற்சியால் கவனிக்கத் தக்க வளர்ச்சியை கண்டிருந்தது.

ஈரானின் வளர்ச்சியும் அதன் உறுதியான் அரசியல் நிலைப்பாடும் கொள்கை ரீதியாக இரானுக்கு எதிரான முஸ்லிம் நாடுகளை கூட இரானுக்கு சார்பாக மாற்றியிருந்தன.

சமீபத்தில் இஸ்ரேல் டமாஸ்ஸில் உள்ள ஈரானின் தூதரகத்தை தாக்கி அழித்தது. இதற்கு பதிலடியாக இரான் இஸ்ரேலை நேரடியாக தாக்கியது. அதன் பிற்கு ஒரு நெருக்கடியான சூழ்நிலை நிலவிய போதும் கூட இப்ராஹீம் ரைஸீ – பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளுக்கும் மற்ற அண்டை நாடுகளுக்கும் தொடர்ச்சியாக பயணம் அந்நாடுகளில் இரான் சார்பாக நடைபெற்ம் பெரும் பணிகளில் தனது அடையாளத்தை பதிவு செய்து வந்தார். இஸ்ரேலுடனான ஒரு யுத்தத்தை எதிர்பார்த்திருந்த நிலையிலும் ரைஸி மேற் கொண்ட இப்பயணங்கள் ரைஸியை ஒரு உலக அளவில் கவனிக்கத் தக்க ஒரு தலைவராக உயர்த்தியிருந்தன.

இந்த நிலையில் தான் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகியிருக்கிறார். இன்னா லில்லாஹி

அவரது ஹெலிகாப்ட விபத்து பனி மூட்ட்த்தின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டாலும்  இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சதியாக இருக்கலாம் என்று சந்தேகம் பரவலாக இருக்கிறது.  .

தங்களுக்கு எதிரான ஒரு பகிரங்கமான சக்தியாக ரைஸி வளர்ந்து வருவதை சகித்துக் கொள்ள முடியாத இது போல வேறு யாரும் வளர்ந்து வந்து விடக் கூடாது என்று என்று மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையில் இத்தகைய விபத்தை ஆதிக்க சக்திகள் கோழைத்தனமாக திட்டமிட்டு நிகழ்த்தியிருக்கலாம் என்ற எண்ணம் வலுவாக இருக்கிறது.

ஆனால் எத்தையக தீய சதிகாரர்களும் புரிந்து கொள்ள வேண்டிய இரண்டு  அப்பட்டமான வாழ்வியல் தத்துவங்கள் இருக்கின்றன.

சதித்திட்டங்களை சிந்திக்கிற எவருக்கும் அவை மிக கடுமையான எச்சரிக்கைகளாகும்.

முதலாவது,

சதிச் செயல்களால் ஒரு போதும் எதையும் சாதித்து விட முடியாது . சில வேதனையான நிகழ்வுகள் ஏற்படுத்தலாம். அவ்வளவு தான்.

திருக்குர் ஆன் இதை தான் மற்றொரு வகையில் கூறுகிறது

وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِنْدَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ

 சதி எவ்வளவு பலமானதாக இருந்தாலும் அது பற்றிய ரகசியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடம் இல்லாமல் இல்லை. அல்லாஹ் அதை முறியடிக்க நினைத்தால் மிக சாதரணமாக அதை முறியடித்து விடுவான்.

 யூசுப் அலை அவர்களின் சகோதரர்கள் யூசுப் அலைஅவர்களை சதி செய்து கிணற்றில் வீசினார்கள். இதன் மூலம் தங்களது தந்தையிடம் நெருங்கி விட முடியும் என்று நினைத்தார்கள். ஆனால் யூசுப் அலை அவர்களின் பாசம் ஒரு போதும் ய்ஃகூப் அலை அவர்களி ன் நெஞ்சிலிருந்து அகல வில்லை. அந்த நினைப்பில் அவர் கண்பார்வை போகும் அளவு அழுது கொண்டிருந்தார். உலகில் அதிகமாக அழுத மனிதர்களில் ஒருவராக யாகூப் அலை அவர்கள் இருந்தார்.

 சகோதர்ர்களின் சதி அவர்களது தேவையை நிறைவேற்றி வைக்கவில்லை.

பெருமானாரிடம் அல்லாஹ் கூறுகிறான். அவர்கள் சதி செய்த இடத்தில் நீங்கள் இருக்க வில்லை. ஆனால் அது எனக்கு தெரியாமல் போகவில்லை.  

 وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ أَجْمَعُوا أَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُونَ}[يوسف: 102 

 யூசுப அலை அவர்களை கிணற்றுக் குள் அவரது சகோதரர்கள் வீசிய போது அவர் கிணற்றின் தண்ணீரை தொடுவதற்குள் அர்ஷிலிருந்த ஜிப்ரயீல் அலை அவர்களை அனுப்பி அல்லாஹ் அவரை காப்பாற்றினான்.

 பெருமானார் (ஸல்) அவர்களை கொன்று விட மக்காவின் எதிரிகள் சதி செய்தார்கள். அந்த கொலை பழியிலிருந்து தப்பிப்பதற்காக பல விதத்தில் சிந்தித்தார்கள்.

எதிரிகளின் சபையில் இப்படி ஒருவர் ஆலோசனை கூறினார். அவரை இறுக்க கட்டி ஒரு ஒட்டகையில் ஏற்றி விடுங்கள் அது அவரை எங்காவது கொண்டு போட்டு விடும் உங்கள் மீது பழி வராது

 فَقَالَ هِشَامُ بْنُ عَمْرٍو مِنْ بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ: أَمَّا أَنَا فَأَرَى أَنْ تَحْمِلُوهُ عَلَى بعير فتخرجوه من بين أَظْهُرِكُمْ فَلَا يَضُرُّكُمْ مَا صَنَعَ وَلَا أَيْنَ وَقَعَ إِذَا غَابَ عَنْكُمْ وَاسْتَرَحْتُمْ مِنْهُ،

அபூஜஹ்ல் கூறினான்.  உறங்கிக் கொண்டிருப்பவரை இரவின் இருட்டில் ஒன்று கூடி வெட்டிக் கொன்று விடலாம் யாரும் தனியாக பழியை சந்திக்க வேண்டியிருக்காது.

 فَقَالَ أَبُو جَهْلٍ: وَاللَّهِ لَأُشِيرَنَّ عَلَيْكُمْ بِرَأْيٍ مَا أَرَى غَيْرَهُ إِنِّي أَرَى أَنْ تَأْخُذُوا مِنْ كُلِّ بَطْنٍ مِنْ قُرَيْشٍ شَابًّا نَسِيبًا وَسِيطًا فَتِيًّا ثُمَّ يُعْطَى كُلُّ فَتًى مِنْهُمْ سَيْفًا صَارِمًا، ثُمَّ يَضْرِبُوهُ ضَرْبَةَ رَجُلٍ وَاحِدٍ، فَإِذَا قَتَلُوهُ تَفَرَّقَ دَمُهُ فِي الْقَبَائِلِ كُلِّهَا.

 அவர்களது திட்டம் அல்லாஹ்வுக்கு தெரியாமல் இல்லை.

அல்லாஹ் அவர்களது சதியை பெருமானாருக்கு தெரிவித்தான்.

 وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ} [الأنفال: 30].

காபிர்கள் உம்மை கட்டிப்போட்டு கொலை செய்வது, அல்லது தூரத்தில் எங்காவது கொண்டு போய வீசிவிடுவது என்று சதி செய்த போது அல்லாஹ் அவர்களுக்கு மேலாக சதி செய்தான்.

 அந்த மேலான சதி என்பதில் பெருமானாரை அல்லாஹ் காப்பாற்றினான் எனபதை தாண்டி அவருடைய இட்த்தில் படுத்திருந்த அலீ ரலி அவர்களையும் காப்பாற்றினான் என்ற ஆறுதல் இருக்கிறது.

 பெருமானார் (ஸ்ல்) அல்லாஹ்வின் திட்டம் பற்றி தெரிந்தவர்கள் என்பதால் தன்னுடைய படுக்கையில் அலி ரலி அவர்களை படுக்க வைக்கிற போது சொன்னார்கள் .. உங்களது மனதுக்கு பிடிக்காத எதுவும் நடக்காது.

فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بْنَ أَبِي طَالِبٍ أَنْ يَنَامَ في مضجعه وقال له: «اتشح بِبُرْدَتِي هَذِهِ، فَإِنَّهُ لَنْ يَخْلُصَ إِلَيْكَ مِنْهُمْ أَمْرٌ تَكْرَهُهُ»

எதிரிகள் அலி ரலி அவர்களை அடிக்கவோ மிரட்டவோ கூட செய்யவில்லை.

மக்காவின் அந்த மிகப்பெரிய சதிகாரர்கள் மிக மோசமான ஏமாற்றத்தை சந்தித்தார்கள்.

 ஒரு சில நேரத்தில் சதி காரர்கள் சில ஆரம்ப கட்ட வெற்றியை பெறலாம். ஆனால் அது அவர்களது இலக்கை நிறைவேற்றாது.

 பத்று யுத்தத்தில் தோற்றுப் போன மக்காவின் காபிர்கல் இந்த பெரும் தோல்விக்கு ஹம்ஸா ரலி அவர்கள் தான் காரணம் என்று நினைத்தார்கள். ஹம்ஸா ரலி அவர்களை கொன்று விட்டால் பெருமானாரின் வெற்றியை முடக்கி விடலாம் என்று திட்டமிட்டார்கள்.

பல நாட்களாக தயார் செய்து வஹ்ஷீ என்பவரை அழைத்து வந்தார்கள்.

இதற்காகவே மிக துல்லியமாக ஈட்டி வீசப் பழகிய அவர் உஹது யுத்தத்திற்கு வந்தார். அவரது கொண்டு வருகை மிகத் திட்டமிட்ட ஒரு சதியாக இருந்தார் . அவர் வென்றார். ஹம்ஸா ரலி அவர்கள் கொல்லப்பட்டார்கள் தான்.

 ஆனால் ஒரு தளபதியை கொன்றதனால் இஸ்லாமின் புரட்சியை எதிரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாறாக புரட்சி வளர்ந்த்து. கொலைகார்ர்களையும் ஆட் கொண்டது.  

    இது போல வரலாற்றின் எந்த இடத்திலும் சதிகாரர்கள் தாங்கள் சாதித்தார்கள் என்ற வரலாறு கிடையாது.

 திருக்குர் ஆன் இன்னொரு எச்சரிக்கையை தருகிறது.

 தீய சதியின் விளைவுகள் அவர்களையே வந்து சேரும்.  

  وَلَا يَحِيقُ الْمَكْرُ السَّيِّئُ إِلَّا بِأَهْلِه

ஈஸா அலை அவர்களை அவரது சீடன் யூதாஸ் என்பவனே முப்பது வெள்ளிக்காசுகளுக்காக எதிரிகளுக்கு காட்டிக் கொடுத்தான். அதுவும் ஈஸா அலை அவர்களை முத்தமிடுவது போல நடித்து அவர் தான் ஈஸா என்பதை அறிவித்துக் கொடுத்தான்.

 அல்லாஹ் அவனையே ஈஸா வுக்கு பதிலாக பலிகடாவாக்கினான். அவனது தோற்றத்தை ஈஸாவின் தோற்றம்போல மாற்றி ஈஸா அலை அவர்களை உயர்த்திக் கொண்டான்.

 ஈஸா அலை அவர்களை கொலை செய்து விட யூதர்கள் மிக விசித்தரமாக திட்டமிட்ட போது அல்லாஹ் அவரை மிக விபரமாக காப்பாற்றினான் என்கிறது திருக்குர் ஆன்

 وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ} [آل عمران: 54]!

 சதி செய்ய நினைக்கிற எவருக்கும் எந்த நிலையிலும் இந்த இரு எச்சரிக்கைகளும் பொருந்தக் கூடியதாகும்

முஸ்லிம்களை அடிமைகளாகவே வைத்திருக்க நினைப்பவர்கள் என்ன சதித்திட்டங்களை முயற்சி  செய்தாலும் உலகில் அக்கிரமக்காரர்களுக்கு தீய முடிவுகளை தரும் அல்லாஹ்வின் திட்டம் நிச்சய்ம் ஏதாவது ஒரு வகையில் நிறைவேறியே தீரும்.

ஒரு வரை அழித்துவிடுவதால் உலகில் ஒரு புதிய ஆளுமை எழுவதை தடுத்து விடலாம் என்று இஸ்லாமின் எதிரிகள் நினைக்கலாம். ஆனால் அவர்களை கேலிக்குள்ளாக்க உருவாகும் அல்லாஹ்வின் திட்டம் அவர்களது திட்டத்தை இன்னும் வலுவானதாக இருக்கும் , நிச்சயமாக.

இன்ஷா அல்லாஹ்.

நாம் அல்லாஹ்வின் உதவிக்காக காத்திருப்போம்.

وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِي ضَيْقٍ مِمَّا يَمْكُرُونَ* إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ}[النحل: 127، 128].

 

(மக்கா மஸ்ஜிதுல் ஹரமின் வாசலில் இருக்கிற ரொடானா அர்ரய்யான்  விடுதி அறை எண் 1323 லிருந்து).


5 comments:

  1. அல்லாஹ் அருள் செய்யட்டும் நல்ல தகவல்

    ReplyDelete
  2. Anonymous10:20 AM

    நநதத

    ReplyDelete
  3. Anonymous7:29 PM

    innaalillaahi va innaa ilaihi raajioon😭😭😭

    ReplyDelete
  4. innaalillaahi va innaa ilaihi raajioon 😭😭

    ReplyDelete