சமீப காலமாக ஹஜ்ஜு உம்ராவுக்கு செல்வோர் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர்.
ஹஜ்
உம்ரா விற்கு அழைத்துச் சென்றவர்கள் தங்களை சொன்னபடி கவனித்துக் கொள்ள வில்லை என்ற
குற்றச்சாட்டு வாடிக்கையாகி வருகிறது.
கடந்த
வாரம் உம்ரா விற்கு அழைத்துச் சென்ற சில ஏற்பாட்டாளர்கள் திரும்பி வருவதற்கான டிக்கட்
ஏற்பாடு செய்யாமலும் சரியான ரூம் வசதி செய்து கொடுக்காமலும் உணவுக்கான ஏற்பாடுகளை செய்து
கொடுக்காமலும் புனிதப் பயணிகளை மக்காவிலேயே தவிக்க விட்ட வீடியோக்கள் வைரல் ஆயின.
இதில்
உணரப்பட வேண்டிய சில வழிகாட்டுதல்களை இன்றைய ஜும் ஆவில் பார்க்க இருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதுக் குழு
فعن أبي هريرة - رضي
الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم - : (وفد الله ثلاثة :
الغازي، والحاج، والمعتمر) رواه النسائي
எதனால் ?
1.
அல்லாஹ்வின் திருஇல்லத்தை
கண்ணியம் செய்கின்றனர்
ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب
2.
மானுடத்தின் பிரதிநிதிகள்
இனம் மொழி நிர பேநங்களை கடந்து மானுடத்தை நிலை நாட்டுகின்றனர்.
ஒவ்வொருவரும் தம் ஊரிலிருந்து அல்லாஹ்வின் பிரதிநிதியாக செல்கிறார்
3.
தொன்மையான வணக்கம்
وقد كان النبي - صلى الله عليه وسلم - يقول للناس في
حجة الوداع: (قفوا على مشاعركم، فإنكم على إرث من إرث أبيكم إبراهيم) رواه أبو
داود.
4.
ஏகத்துவத்தை நிலை நாட்டுகின்றனர்
ففي التلبية يقول الحاج: "لبيك اللهم لبيك،
لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك، لا شريك لك"؛
இந்த குழுவினரை கண்ணியம் செய்யுங்கள் என்று பெருமானார் கூறினா்கள்\
இது பெருமானாரின் கடைசி அறிவுரைகளில் ஒன்றாகும்.
أنَّ رسولَ
اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ أوصى بِثَلاثةٍ فقالَ أخرِجوا المشرِكينَ من
جزيرةِ العربِ وأجيزوا الوفدَ بنحوٍ مِمَّا كنتُ أجيزُهم، قال ابن عبَّاس: وسكتَ
عن الثَّالثة، أو قال: فأنسِيتُها.
الراوي : عبدالله
بن عباس المصدر : صحيح أبي داود
அரபு தீபகற்பத்திலிருந்து
என்பதன் பொருள் மக்கா மதீனாவிலிருந்து என்பதாகும்.
وأجيزوا الوفدَ
என்பதற்கு
அல்லாஹ்வின் தூதுக்குழுவினருக்கு பரிசளியுங்கள் என்று பொருளாகும்.
இதன் பொருள் அவர்களுக்கு விருந்தாளிகளுக்குரிய உபசரனைகளை
செய்யுங்கள் என்பதாகும்.
மூன்றாவது இப்னு அப்பாஸ்
ரலி மறந்த விவகாரம், – உஸாமா ரலி அவரக்ளின் படை தொடர்பானதாக இருக்கலாம் என்கிறார்கள்
விரிவுரையாளர்கள்.
பல வகையிலும் புனிதப் பயணிகள் கண்ணியம் செய்யப்படுகிறார்கள்.
இது பல ஆயிரம் வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது.
அவர்களுக்கு பணிவிடை செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகிற ஒரு
மக்கள் கூட்டம் எல்லா நாடுகளிலும் இருக்கிறது.
குறிப்பாக மக்கா மதீனாவில் பயணிகளை உபசரிக்கிற விதம் அலாதியானது.
ஒரு பேரீத்தம் பழம், ஒரு பாட்டில் தண்ணீர் அல்லது ஒரு நேர உணவு
என ஏதாவது ஒரு உபசரிப்பை அந்நாட்டு அரசு, அல்லது அங்குள்ள பொதுமக்களிடமிருந்து பெறாமல்
அங்கு பயணம் செய்கிற யாரும் திரும்புவதில்லை.
சவூதி அரேபிய அரசு ஹஜ்
விவகாரத்திற்கு என்று ஒரு அமைச்சகம் வைத்திருக்கிறது.
அந்த அமைச்சகத்தின் கொள்கை
பிரகடனம் என்ன தெரியுமா ?
خدمة الحاج .. شرف وأمانة
ومسؤولية
என்பதாகும். ஹாஜிகளுக்கு சேவை செய்வது எங்களது பணி அல்ல; எங்களுக்கு கிடைத்திருக்கிற சிறப்பு,
எங்களது நம்பகத்தன்மை, எங்களது பொறுப்பாகும்.
இது காலங்காலமாக நடப்பில் இருக்கிறது.
ஜாஹிலிய்யாவில்
பெருமானாரின் பாட்டனார்
அப்து மனாபும் அவரது மகன் ஹாஷிமும் ஹாஜிகளுக்கு தண்ணீர் சுமந்து வந்து கொடுத்தனர்.
ஜம் ஜம் கிடைத்த பிறகு காய்ந்த திராட்சைகள்ள நீரில் கலந்து வழங்கினர்.
فكان عبد مناف يحمل الماء في
الروايا والقرب إلى مكة ويسكبه في حياض من أدم بفناء الكعبة للحجاج، ثم فعله ابنه
هاشم بعده ثم عبد المطلب فلما حفر زمزم كان يشتري الزبيب فينبذه في ماء زمزم ويسقي
الناس. [ابن حجر: فتح الباري:3/491].
இந்த பணியை நேரிட்டு தாமே செய்வதை இதற்கான பொறுப்பை ஏற்றவர்கள்
சிறப்பாக கருதினர்
சஹீஹுல் புகாரியில் ஒரு ஹதீஸ்
பெருமானார் (ஸல்) அவரக்ள் தண்ணீர் வழங்கும்
இடதிற்கு சென்று எனக்கு தண்ணீர் தா என கேட்டாரகள். அங்கு பணியில் இருந்த இப்னு அப்பாஸ்
ரலி அவர்கள் தனது மகன் பழ்லிடம் “ நீ உன் அம்மாவிடம் சென்று நல்ல தண்ணீரை வாங்கி வா
என்றார். பெருமானார் எனக்கு இந்த தண்ணீரை கொடு என்றார்கள். இது மக்கள் கை போட்ட தண்ணீர்
என்றார் இப்னு அப்பாஸ் ரலி. பரவாயில்லை அதையே எனக்கு கொடு என்றார்கள் பெருமானார் (ஸல்)
. அதை வாங்கி குடித்தார்கள். பிறகு “இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கும் எனில் நானும்
என் தோள்களில் தண்ணீர் பைகளை சுமந்திருப்பேன் என்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.
حديث ابن عباس - رضي الله عنهما - أن رسول
الله صلى الله عليه وسلم جاء إلى السقاية، فاستسقى، فقال العباس: يا فضل اذهب إلى
أمك فأت رسول الله صلى الله عليه وسلم بشراب من عندها، فقال:" اسقني "
قال: يا رسول الله إنهم يجعلون أيديهم فيه قال: " اسقني " فشرب منه، ثم
أتى زمزم، وهم يسقون، ويعملون فيها فقال: " اعملوا، فإنكم على عمل صالح
" ثم قال: " لولا أن تغلبوا لنزلت حتى أضع الحبل على هذه - يعني عاتقه
وأشار إلى عاتقه - " [البخاري ].
ஜாஹிலிய்யாவின் வழக்கங்கள் அனைத்தும் என் காலுக்கு கீழ் மண்ணாகிப்
போய்விட்டன ஹாஜிகளை உபசரிப்பதை தவிர என்றார்கள் நபிகள் நாயகம் (ஸ்ல)
عن عبد الله بن عمرو - رضي
الله عنهما - أن رسول الله صلى الله عليه
وسلم خطب يوم الفتح بمكة فكبر ثلاثا ثم قال
إن كل مأثرة كانت في الجاهلية تذكر وتدعى من دم
أو مال تحت قدمي إلا ما كان من سقاية الحاج، وسدانة البيت " [سنن أبي داود]
பரந்த அளவில் புனிதப் பயணிகள் உபசரிக்கப் படுகிறார்கள் எனினும் சில
நேரங்களில் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்
தொல்லைக்கு உள்ளாக்குவோருக்கு இஸ்லாம்
கடும் எச்சரிக்கை செய்துள்ளது.
மக்காவில் இது சாதாரண
குற்றமல்ல.
ومن يرد فيه بإلحاد
بظلم نذقه من عذاب أليم ( 25
)
இந்த ஹரமில் திட்டமிட்டு
அநீதியிழைப்பவர்கள் கடுமையான வேதனையை சுகிப்பார்கள் என்ற இந்த வசனம் மிகவும் கவனத்திற்குரியது.
மக்காவில் இருக்கும் போது
ஊருக்கு போய் ஒரு அக்கிரமத்தை செய்வேன் என்று மனதில் நினைத்தாலும் – அதை செய்யாவிட்டாலும்
குற்றவளிதான் என்கிறார்கள் விரிவுரையாளர்கள்.
عن الضحاك بن مزاحم
في قوله : ( ومن يرد فيه بإلحاد بظلم ) قال : إن الرجل ليهم بالخطيئة بمكة
وهو في بلد آخر ولم يعملها ، فتكتب عليه
ஹரமில் அநீதியிழைப்பவர் அல்லாஹ்வின் பெருங்
கோபத்திற்குரியவர் என்றார்கள் பெருமானார் (ஸல்)
وعن ابن عباس رضي الله عنهما أن رسول
الله صلى الله عليه وسلم قال: "أبغض الناس إلى الله ثلاثة-وذكر منهم-مُلحد في أرض الحرم"[رواه البخاري].
ஒரு தீமையை நினைத்து செய்யா
விட்டாலும் குற்றவாளியே
وعن ابن مسعود - رضي الله عنه -
مرفوعاً: ( لو أن رجلاً همّ فيه بإلحاد وهو بعدن أبين، لأذاقه الله عذاباً أليماً)
அதனால் மக்கா மதீனாவிற்கு செல்வோர் யாருக்கும்
துன்பம் தந்து விடாதவாறு நடந்து கொள்ள வேண்டும். பெருந்தன்மையாகவும் தாராள குணத்தோடும்
பரிமாற்றம் செய்ய வேண்டும்.
ஹஜ் மப்ரூர் (நன்மையான
ஹஜ்) என்ற ஒரு வார்த்தை இருக்கிறது.
ஒரு ஹஜ்ஜை மப்ரூர் ஆக்கிக்
கொள்வது எப்படி என்பதை பெருமானார் (ஸள்) அவர்கள் விளக்கினார்கள்.
فعن جابر رضي الله عنه قال سئل رسول الله صلى
الله عليه وسلم ما بر الحج؟ قال: " إطعام الطعام، وطيب الكلام " [الحاكم:
இந்த அடிப்படையில்
ஹஜ்ஜு உம்ராவிற்கு அழைத்துச் செல்வோர் வெறும் டிராவல் ஏஜெண்டுகள் அல்ல அதற்கு
மேலும் அவர்களுக்கு பொறுப்பு இருக்கிறது.
நிர்வாகப்
பொறுப்பாளர்களுக்கு பெருமானாரின் துஆ வும் பத் துவாவும்.
حديث الرسول صلى الله عليه وسلم:"اللهم من ولي أمر أمتي شيئاً فشق عليهم فاشقق عليه، ومن ولي أمر أمتي
شيئاً فرفق بهم فارفق به" [رواه مسلم].
ஹஜ் உம்ரா ஏற்பாட்டாளர்களி
சிலர் மனமறிந்து புனிதப் பயணிகளை ஏமாற்றுகின்றனர்
சிலர் போதிய அனுபவம் இல்லாத்தால் சிரம்ப்படுத்துகின்றனர்
ஒரு உம்ரா சர்வீஸகார்ருக்கு உம்ராவின் சட்டங்களே தெரியவில்லை.
யார் உம்ரா சர்வீஸ நடத்துகிறார்கள் என்பது இப்போது வேடிக்கையாகி
விட்டது.
போதிய அறிவும் அனுபவமும் பொறுப்பும் இன்றி வெறும் பணத்திற்காக
சர்வீஸ் நடத்துகிறவர்கள் கடுமையான குற்றவாளிகளே ஆவார்கள்.
அத்தகையோர் அனைவருக்கும்
ஹரமில் அநீதி இழைப்போர் என்ற சொல் பொருந்தும்.
இதில் பிரச்சினைக்குரிய நிருவனங்களை மாத்திரம் குறை சொல்வதறகில்லை
பயணிகளுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.
விளம்பரத்தை மட்டும் பாரக்க கூடாது. நிருவனரின் தகுதியை
ஆராயனும்
மார்க்கம் கற்பிக்கிற அடிப்படை ஓழுங்கு இது
பெருமானாரின் பொன்மொழிகளை பற்றி பேசும் போது ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தரத்தை
பார்க்க வேண்டும் வேண்டும் என்று மார்க்க அறிஞர்கள் கூறுவதுண்டு.
عن محمد بن سيرين قال: إن هذا العلم دين، فانظروا
عمن تأخذون دينكم. فلا يجوز للمرء أن يقلد في دينه المبتدعة وأهل الأهواء
முன் அறிமுகம் இல்லாத இருவர் நாங்கள் ஒரு
ஆயத்தை ஓதிக் காட்டவா என்ற போது எழுந்து சென்று விடுங்கள் இல்லை எனில் நான் எழுந்து
போய்விடுகிறேன் என்றார் முஹம்மது பின் சீரின். அவர்கள் தப்பான ஏதாவது ஒன்றை மனதில்
விதைத்து விடக் கூடும் என நான் பயப்படுகிறேன் என்றார்
ففي سنن الدارمي عن أسماء بن عبيد قال: دخل رجلان من
أصحاب الأهواء على ابن سيرين فقالا: يا أبا بكر: نحدثك بحديث؟ قال: لا، قالا:
فنقرأ عليك آية من كتاب الله؟ قال: لا، لتقومان عني أو لأقومن، قال: فخرجا، فقال
بعض القوم: يا أبا بكر: وما كان عليك أن يقرآ عليك آية من كتاب الله تعالى؟! قال:
إني خشيت أن يقرآ علي آية فيحرفانها فيقر ذلك في قلبك.
ஹஜ் உம்ராவிற்கு செல்ல
நினைப்போர் பலரும் அதை ஒரு பெருமிதத்திற்குரிய பயணமாக நினைக்கிறார்களே தவிர - அந்த
வகையில் அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கிறார்களே தவிர ஹஜ் உம்ரா என்பது சிறப்பான ஒரு வணக்கம்
என்ற சிந்தனை பலருக்கும் இருப்பதில்லை.
ஹஜ் உமரா சரவீஸ்காரர்களில் சிலர் கொள்கை குழப்பவாதிகளாக இருக்கின்றனர்
ஆயுளில் அவரை தடவை நிறைவேற்றுகிற அமலை கழசீர்குலைத்து விடுகிறார்கள்.
குழப்பமான சிந்தனைகளை வஞ்சகமாக புகுத்தி விடுகிறார்கள்
சிலர் இலாபத்தை மட்டுமே இலக்காக கொள்கிறார்கள்.
அமல்களுக்கு தூண்டுவதில்லை
ஒரு ஜாலிக்காக உம்ராவிக்கு செல்பவர்களுக்கு இது போதுமானாதாக
இருக்கிறது.
சிலர் மொத்தமாக பணத்தையும் பாஸ்போர்ட்டையும் சுருட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள்.
சிலர பாதி வழியில் கழட்டி விடுகிறார்கள்.
இதற்கு முதல் காரணம் ஹஜ் உ்ம்ரா
என்ற அமல்களுக்கு அழைத்துச் செல்பவர் அதற்கு பொருத்தமானவரா என்று பார்க்காமல்
இருப்பதாகும்.
தங்கு மிடம் எங்கே? என்ன வகை உணவு ?
எவ்வளவு குறைவான கட்டணம் என்பதில் செலுத்துகிற அக்கறையில் ஒரு சிறு
பங்கை கூட அழைத்துச் செல்பவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்ள செலவிடுவதில்லை.
யாரோ சொன்னார்கள் என்பதற்காக –
அருகில் இருக்கிறார் என்பதற்காக
வக்கனையாக
பேசுகிறார் என்பதற்காக சர்வீஸ்காரர்களை தேர்ந்தெடுக்கிற போது பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஹஜ்
உம்ரா பயணத்திற்கு பொருத்தமான ஏற்பாட்டாளரை தேர்வு செய்ய கொஞ்சமேனும் அக்கறை செலுத்த
வேண்டும்.
அவரால்
அழைத்துச் செல்ல முடியுமா ? அதற்கான அனுமதி
அவரிடம் இருக்கிறதா ?
விமான
டிக்கட் உறுதி செய்யப்பட்டு விட்டதா ? திரும்புவதற்கான டிக்கட உறுதியாகி இருக்கிறதா
? தங்கு மிடத்திற்கான உத்தரவாதம் உண்டா ? உணவிற்கான ஏற்பாட்டை எப்படிச் செய்திருக்கிறார்
? உடன் வரும் ஊழியர்கள் யார்? அவர்களுடைய தொலை பேசி எண் என்ன என்பது போன்ற அத்தியாவசியமான
தகவல்களை பெற்றுக் கொண்ட பிறகே இஹ்ராம் கட்டுவது பொருத்தமானது.
கடந்த
ஆண்டுகளில் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டி விமான நிலையத்திற்கு வந்த பிறகு ஏமாற்றப்பட்டோர்
பலர் இருக்கிறார்கள்.
பயணிகளின்
தங்கு மிடங்களில் ஏமாற்றுவோர் , உணவு வழங்குதலில் மோசடி செய்வோர், சொன்ன படி வசதி செய்து
கொடுக்காமல் அலட்சியமாக நடந்து கொள்வோர் என்ற பலரும் ஹஜ் உம்ரா ஏற்பாட்டாளர்கள் என்ற
பெயரில் இருக்கிறார்கள். இவர்களில் பிரபல கமபனிகளும் உண்டும்.
வியாபார
நோக்கோடு ஏற்பாட்டளர்களாக மாறுகிறவர்கள் விசயத்தில் மிக எச்சரிக்கை அவசியம்.
பயணிகளின்
பணத்தில் முதலீடுகளை செய்யவும் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதையும் சிலர் வழக்கமாக
வைத்துள்ளனர்.
இந்தப்
பணத்தில் விளையாடுவோர் பல நேரத்தில் ஜெயித்து விட்டாலும் சில நேரத்தி ல் வசமாக பயணிகளை
சிக்க வைத்து விடுகிறார்கள்.
எனவே
ஏமாற்றத்தை தவிர்ப்பதற்கு தகுந்த ஏற்பாட்டாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டியது பயணிகளின்
பொறுப்பே ஆகும்.
இதை
சரியாக கவனித்து விட்டால் 70 சதவீதம் நிம்மதியான ஹஜ் உம்ராவை நிறைவேற்றி விடலாம்.
சில
நேரங்களில் ஏற்பாட்டாளர் நல்ல வராகவே இருந்து விட்டாலும் கூட இறைவன் நாட்டப்படி சில
சிரமங்கள் ஏற்படுவது ஹஜ் உம்ரா வில் சகஜமானது.
அதற்கு
அங்குள்ள நிலவரம் காரணமாகி இருக்கும். இதற்கு முழுமையாக ஏற்பாட்டாளரை குறை சொல்ல முடியாது.
எனவே
பயணிகள் சகித்துக் கொள்ள கூடிய சில சிரமங்களுக்கு தயாராகவே இருக்க வேண்டும். அதை புரிந்து
கொள்ளவும் வேண்டும்.
ஏற்பாட்டாளரை
அவரது சக்திக்கு மீறி நிர்பந்திப்பது மறைமுகமாக பயணிகள் தங்களுக்கு தீமைகளை செய்து
கொள் வதாகவே அமையும்.
சமீபத்திய
அனுபவம் அதை தான் காட்டுகிறது.
ஒருவரிடம்
பணம் கொடுத்துவிட்டார்கள். அவர் டிக்கட் போடவில்லை. அவரை நிர்பந்தம் செய்து டிக்கட்
போட வைத்து விட்டார்கள். அவர் அவர்களுடன் செல்லவில்லை. எல்லா ஏற்பாடுகள்ளயும் செய்து
தந்து விடுகிறேன் என்று சொன்னார். அங்கு போன பிறகு சில நாட்களில் ரூமை காலி செய்ய சொல்லிவிட்டார்கள்.
ரிடர்ன் டிக்கட்டும் போட வில்லை.
இதில்
குற்றம் ஏற்பாட்டாளர் உடையது என்றாலும் ஏமாந்த்தில் ஒரு பங்கு பயணிகளூக்கும் இருக்கிறது.
நாம்
ஏமாந்த பிறகு இவரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்று வீடியோ போடுவதில் நமக்கு என்ன
நன்மை இருக்கிறது ? ஒரு புனிதப் பயணம் புதிர் பயணமானதை தவிர.
எனவே
ஏற்பாட்டாளர்களை பின் வரும் அடிப்படைகளில் தேர்ந்தெடுக்கலாம்.
·
கொள்கையில் குழப்பம் செய்பவரா ?
·
அமல்கல் செய்ய தூண்டுவாரா ? துணை செய்வாரா?
·
பயணிகளை கையாண்ட அனுபவம் உள்ளவரா ?
·
நெருக்கடிகளை சமாளிக்கும் திறன் இருக்கிறதா ?
·
டாகுமெண்ட்களை தெளிவாக தெரிவிக்கிறாரா ?
·
எல்லா வற்றிற்கும் மேலாக சேவை என்ற சிந்தனை
கொஞ்சமாவது இருக்கிறதா
கஃபாவிற்கு
முன் நின்று தவாபுக்கு நிய்யத் வைக்கிற இட்த்தில் கூட இந்த துஆ உண்டு. காரணம் இந்த
அமலில் எங்கு சிரம்ம் வரும் என்று நினைத்துப் பார்க்க முடியாது.
எனவே
இறைவனால் ஏற்படுகிற சிரமங்களை பொறுத்துக் கொள்ள மனப் பக்குவமும், துஆ வும் வேண்டும்.
ஏற்பாட்டாளர்களால்
ஏற்படுகிற சிக்கல்களை தவிர்த்துக் கொள்ள போதிய விழிப்புணர்வும் அவசியம்.
அல்லாஹ்
தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment