وَاللَّهُ
جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا ﴾ [النحل: 80]،
வீட்டை அழகு படுத்துவது இன்றைய காலத்து மக்களின் முக்கிய ஈடுபாடுகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது.
ஒரு காலத்தில் மக்கள், தேவைக்கு வீடு கட்டினார்கள். ஒரு தெரு முழுவதிலும் ஒரே மாதிரியான வீடுகள் இருந்தன. இன்றைய வளர்ச்சியில் ஒவ்வொரு வீடும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன. ஏன் ஒரு விடே கூட அடிக்கடி அடையாளத்தை மாற்றிக் கொள்கிறது.
அடுக்களைக்கும்
பாத்ரூம்களுக்கு பல இலட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. ரெனவேசனுக்கும்
இண்டீரியருக்கும் செலவழித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் வீடு பற்றிய கான்சப்ட் மாறியிருக்கிறது.
தலைமுறைகளின் தேவைக்கான முற்காலங்களில்
வீடு கட்டினார்கள். இப்போது பெயிண்ட் மாற்றுவது போல வீட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பர்மனெண்ட் அட்ரஸ் ஒரு பெரிய விசயமல்ல. பாரம்பரிய வீடு என்ற சித்தாந்தம் மலை ஏறி விட்டது.
நமது வாழ்வின் மிக அத்தியவசியமான
வீடு பற்றி நம்முடைய அற்புதமான மார்க்கம் வழிகாட்டி இருக்கிற சில செய்திகளை இன்று சிந்திக்கிறோம்.
வீடு ஒரு அருள்
நம்மில் ஒவ்வொருவருக்கும் வீடு இருக்கிறது.
வாடகை வீடோ சொந்த வீடோ இருக்கிறது. பெரிதாகவோ
சின்னதகாவோ இருக்கிறது.
அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இரவு உறங்கச் செல்வதற்கு முன் இதுபற்றி நினைவு படுத்திக் கொள்ளும்
பழக்கம் நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்களுக்கு இருந்தது
“எத்தனை பேருக்கு போதிய உணவு கிடைப்பதில்லை? ஒதுங்க நிலம்
இருப்பதில்லை” என்று கூறி இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள் .
فعن
أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا أوى إلى فراشه قال: ((الحمد لله الذي أطعمنا
وسقانا، وكفانا وآوانا، فكم ممن لا كافيَ له، ولا مُؤوي))؛
[أخرجه مسلم]؛
قال
الإمام النووي رحمه الله: "قوله: ((فكم ممن لا مؤوي له))، قيل:
معناه: لا وطن له، ولا سكن يأوي له".
فعلى
المسلم أن يحمَدَ الله عز وجل، ويشكره على هذه النعمة؛
நமது நாட்டில் 30 கோடிப் பேருக்கு ஒதுங்குவதற்கு ஒரு கூரை இல்லை.
வீடு எதற்காக ?
வீடு என்பது நான்கு சுவர்களின் தொகுப்பு அல்ல; கட்டிடங்களின்
தொகுப்பு அல்ல.
அப்படி மட்டும் இருப்பதில் எந்த பெருமையும் இல்லை.
நமது வீடு
- ·
நமது அடையாளம் – இன்ன வீட்டுக்காரர்
என்று அழைக்கப்படுகிறோம்.
- ·
வேலை முடித்து திரும்பும்
இடம் – நாம் திரும்பிச் செல்ல ஒரு இடம் இருக்கிறது என்பது தான் நம்மை
நிம்மதியாக வெளியே இருக்க வைக்கிறது.
- ·
நிம்மதியளிக்கும் இடம்
– வெளியுலகின் கவலைகளுக்கு வீடு தான் மருந்து.
- ·
ஆபத்து சந்தர்பங்களில்
பதுங்குமிடம் – மழை வெயில் கலவரம் போன்ற ஆபத்து காலங்களில் வீடுகள் தான் நமக்கு
பாதுகாப்பன இடம்.
- · உறவுகள் களித்து விளையாடும் நிலம். பெற்றோர், மன்னவி பிள்ளைகள் உறவுகள் என மகிழ்ந்திருக்கும் இடம் வீடு தான்.
- ·
பெருமையின் சின்னம். எந்த ஒரு மனிதனுடம்
அவனது வளர்ச்சியின் முதல் அடையாளமாக கருதுவது வீட்டை தான்.
இவ்வளவு நன்மைகளை கொண்ட நமது வீட்டுக்கு சில அடிப்படைகளை நாம்
வைத்துக் கொள்ள வேண்டும்.
நமது வீடு குறித்து நாம் என்ன ஐடியா வைத்திருக்கிறோம் ?
திருக்குர் ஆன் வீட்டிற்கான இலக்கை கற்பிக்கிறது.
وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا ﴾ [النحل: 80]،
சொர்க்கத்தை
அமைதியான வீடு என்று அல்லாஹ் வரணிக்கிறான்.
لهم دار السلام عند ربهم
அப்படியானால் நிம்மதி அளிக்கிற வீடு சொர்க்கத்திற்கு சமம்.
வீடு நிம்மதியளிக்க வேண்டும் எனில்
1.
சுகாதாரமாக இருக்க
வேண்டும். குப்பைகளின் கூடமாக இருக்க கூடாது.
இபுறாஹீம் இஸ்மாயீல் அலை ஆகியோருக்கு அல்லாஹ்வின் முதல் உத்தரவு “ அல்லாஹ்வின் வீட்டை சுத்தப்படுத்துங்கள் என்பதாகும்.
عهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود
அன்றைய மக்களிடம் கழிப்பிட்த்திற்கு சென்ற பிறகு அப்படியே சென்று விடுகிற பழக்கம் இருந்திருக்கிறது. குபா வாசிகள் சுத்தம் செய்பவர்களாக குறிப்பாக தண்ணீரால் சுத்தம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். அதையே அல்லாஹ் பாராட்டுகிறான்.
நமக்கு அது கிடைத்திருக்கிறது என்றால் அதை எவ்வளவு சுத்தமாக
பராமரிக்க வேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டும்.
ஒரு வீடு எவ்வளவுதான் பெரிதாக இருந்தும் அங்கு சுத்தம் பராமரிக்கப்பட வில்லை எனில் வீடு பற்றிய அக்கறை அவர்களுக்கு இல்லை – என்று பொருள்
திருக்குர் ஆனின் ஆரம்ப அத்தியாயங்களில் ஒன்றான முத்தஸீர் இப்படி கூறுகிறது, தொழு! ஆடையை சுத்தமாக வைத்திரு!
يَا أَيُّهَا الْمُدَّثِّرُ (1) قُمْ
فَأَنذِرْ () وَرَبَّكَ
فَكَبِّرْ (3) وَثِيَابَكَ
فَطَهِّرْ
قال البخاري – رحمه الله تعالى – في صحيحه : باب تعليم الرجل أمته وأهله . ثم ساق حديثه صلى الله عليه وسلم : " ثلاثة لهم أجران .. ورجل كانت عنده أمة فأدبها فأحسن تأديبها ، وعلمها فأحسن تعليمها ، ثم أعتقها فتزوجها فله أجران "
தேவையில்லாத்தை
வாங்கிக் குவிக்காமல் இருப்பது, வேண்டாதவற்றை கழிக்காமல் இருப்பதும் குப்பை கூளங்களை சேர்க்கும்
செயல்களாகும்.
சுத்தம் சோறு போடும்; சுத்தம் சுகம் தரும் என்பது தமிழினத்தின் பாரம்பரிய வழிகாட்டுதல்களில் ஒன்றாகும்.
கடன் எனும் அசுத்தம்
வீட்டுக் கடன் அல்லது வீடு கட்டக் கடன் அல்லது வீட்டின்
பேரில் கடன் இந்த மூன்றும் வீட்டை அவலட்சணப்படுத்தும் அசுத்தங்களாகும். நிம்மதியை தொலைக்கும்
காரியங்கள் ஆகும்.
இவற்றை தவிர்த்துக் கொள்ள கூடுமான வரை முயல வேண்டும்.
சிங்கப்பூரில் ஒரு தம்பதி. கணவன் மனைவி இருவரும் 2 ஷிப்ட்
வேலை செய்கிறார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே விடுமுறை நாளில் தான். ஏன்
இந்த நிலை என்று விசாரித்த போது அதிர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் ஆடமபராக வாழலாம்
என நினைத்து தனி அபார்ட்மெண்டில்(கண்டோமனியம்) வீடு வாங்கியிருக்கிறார்கள். தவணை
கட்டுவதற்காக இப்படி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு வீடு பற்றிய தத்துவம் என்ன வென்று புரியவில்லை
என்று தானே அர்த்தம்?
கூடுமானவரை வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து கடன்
வாங்குவதை தவிர்க்க வேண்டும். அது நிம்மதியை அடமானம வைப்பதற்கு சமமாகும். இது
அனுபவஸ்தர்களின் கருத்தாகும்.
ஒரு வீடு பெரிதாக அழகாக இருந்து அதன் பத்திரம் அடமானத்தில்
இருக்கும் எனில் அந்த அழகு எப்படி மதிப்பிற்குரியதாகும் ?
கடன் என்பது தவறானது அல்ல; ஆனால் தேவை இல்லாமலும் சக்திக்கு
மீறியும் வாங்கப்படுகிற கடன் ஆரோக்கியம் அல்ல. இது எல்லா கடனுக்கும் பொதுவானது
தான் என்றாலும் வீட்டுகடனுக்கு மிக பொருத்தமனாது.
ஹவுஸிங்க் லோன் என்பது மிக சகஜமாகி வருகிற காலத்தில் இந்த
நினைவூட்டலை யாரும் அலட்சியப்படுத்தி விட வேண்டாம்.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
நிம்மதிக்கன இரண்டாவது வழி அனுசரணையும்
உபசரிப்பும்.
சுத்தம் என்பது இரண்டு வகை என்பார் வள்ளுவர்
புறந்தூய்மை நீரான் அமையும்
அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்
எந்த ஒரு வீடும் அதில் வசிப்பவர்களின் குணத்தால் அழகு
பெருகிறது.
வீடுகளில் முதியவர்கள், உறவுக்காரர்கள், விருந்தினர்கள்.
சாமாணியர்கள் மதிக்கப்பட வேண்டும்.
அப்போது நாம் வசிக்கிறோம் என்பதால் நமது வீடு பெருமையடையும்வீட்டை
வைத்து நாம் பெறுமை அடைவதை விட
كان لعبد الله بن
المبارك جار يهودي فأراد أن يبيع داره ، فقيل له : بكم تبيع ؟ قال : بألفين . فقيل
له : لا تساوي إلا ألفا . قال : صدقتم ولكن ألف للدار وألف لجوار عبد الله بن
المبارك
.
·
அப்துல் கலாம் வாழ்ந்த
எளிய வீட்டை பார்த்து விட்டு போக இன்றும் மக்கள் வருகிறார்கள்.
வீட்டில் வசிப்பவர்களின் தரம் வீட்டின் தரத்தை
தீர்மாணிக்கிறது.
பக்கத்து வீட்டுக்காரருடன் நல்லுறவு நிம்மதிக்கு மிக
முக்கியமானது.
அபூ ஜுஹம் அல் அதவீ தனது வீட்டுக்கு விலை பேசினார். ஆயிரம்
திர்ஹம்கள் நிர்ணயிக்கப்ப்பட்டன. அதன் பிறகு அவர் கேட்டார். என் வீடு ஸஈது பின்
ஆஸ் ரலி அவர்களின் அருகே இருக்கிறது அதெற்கென்ன விலை? அண்டை வீட்டின் உரிமையை
விற்க முடியுமா என்ன என்று மக்கள் கேட்டனர்.
அபூ ஜுஹம் சொன்னார். என் வீட்டை திருப்பி கொடுத்து
விடுங்கள். உங்களது பணத்தை திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள். என்னால் அந்த மனிதரின்
அருகாமையை விட்டு விட முடியாது. அவர் நான் உட்கார்ந்து இருந்தாலே நலம்
விசாரிப்பார். என்னை பார்த்தால் வாழ்த்துக்கள் சொல்வார். நான் இல்லாத போது என்
வீட்டை பாதுகாப்பார். வீட்டில் இருக்கிற போது நெருங்கியிருப்பார். நான் ஏதேனும்
தேவை என்று கேட்டால் அதை நிறைவேற்றித் தருவார். நான் அவரைப் பற்றி
விசாரிக்காவிட்டாலும் அவர் என்னை விசாரிப்பார். எனக்கேதும் சிரமம் என்றால்
அதிலிருந்து விடுவிப்பார். அவரையா நான் விற்க முடியும் என்று அபூஜுஹம் கேட்டார்.
பக்கத்து வீட்டுக்காரர் வீட்டை விற்கும் நிலையை அறிந்த
சயீது அவருக்கு ஆயிரம் திர்ஹம் கொடுத்தனுப்பினார் என்கிறது பிரபலமான வரலாறு.
باع أبو جهم العدوي داره بمائة ألف درهم ، ثم قال
: فبكم تشترون جوار سعيد بن العاص ؟ قالوا وهل يشترى جوار قط ؟؟ ردوا علي داري ،
ثم خذوا مالكم ، لا أدع جوار رجل ، إن قعدت ، سأل عني ، وإن رآني ، رحب بي ، وإن
غبت حفظني ، وإن شهدت قربني ، وإن سألته ، قضى حاجتي ، وإن لم أسأله ، بدأني ، وإن
نابتني جائحة ، فرج عني ، فبلغ ذلك سعيدا فبعث إليه بمائة ألف درهم .
பக்கத்து வீட்டுக்காரை விற்று விட்டேன்
அபுல் அஸ்வத் துவலி பிரபலமான இஸ்லாமிய ஆளுமை. பஸ்ராவிலிருந்த தனது வீட்டை அவர் விற்றார். வீட்டை விற்று
விட்டீர்களா? என்று மக்கள் அவரிடம் கேட்டனர். அவர் சொன்னார்: என் பக்கத்து
வீட்டுக்காரரை விற்று விட்டேன்.
كان لأبي الأسود الدؤلي بالبصرة دار وله جار
يتأذى منه في كل وقت فباع الدار فقيل له : بعت دارك ؟! قال : بل بعت جاري . فذهبت
مثلا
அழகான எந்த ஒரு வீடும் பக்கத்து வீட்டை அனுசரிக்க வேண்டும்.
தொல்லையாக கூடாது.
நிம்மதியை குலைக்கும் குணம் .
குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்றை ஈகோ, கலகம், தீய
பேச்சுக்கள், அவதூறுகள் போன்றவை ஒரு
வீட்டின் அக அழகை மழுங்கடித்து விடுகின்றன.
கணவன் மனைவி பெற்றோர்க பிள்ளைகள் மருமகன்கள் மருமகள்களுக்கிடையே
பிரச்சினகள் நீண்ட காலம் தொடருமானால் வீடு சிக்கல்கள் சிரமங்களின் தொகுப்பாக மாறிவிடும். இவற்றை சீக்கிரமாக களைய அனைவரும் முயற்சி செய்ய
வேண்டும். வீட்டின் நிம்மதிக்கு இது மிக முக்கியமானது.
வீடு பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது பழகுவதற்கு கசப்பாக இருக்கிறது என்ற நிலை இருக்க கூடாது.
வீட்டை அலங்கரிப்பதற்கு ஏரளாமான வண்ன வண்ன விளக்குகளை
பொருத்துகிறோம்.
அறிஞர்கள் உணர்த்துகிறார்கள்.
சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு
.பொய் பேசாமல் இருப்பதே உண்மையில் ஒளிவிளக்கு என்கிறார் வள்ளுவர்.
நிம்மதிக்கான மூன்றாவது வழி நற்செயல்கள்
நமது வீடு நமது தேவைகளுக்கனது மட்டுமாக இருக்க கூடாது. அழகான
வீடு என்பது நற்செயல்களுக்கான தளமாக இருக்க வேண்டும்.
மதீனாவின் அன்சாரிகளை பாராட்டுகிற போது அல்லாஹ் அவர்களது
வீடுகளை போற்றுகிறான்
அன்சாரிகள் சொன்னார்கள் .எங்களது நிலத்தை இரண்டாக பங்கிட்டு ஒரு பங்கை முஹாஜிர்களுக்கு கொடுத்து விடுங்கள்.
பெருமானார் (ஸ்ல்)
கூறினார்கள். அது வேண்டாம்! நிலம் உங்களுடையதாகவே இருக்கட்டும்.
அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை முஹாஜிர்களுக்கு கொடுங்கள்.
روى عن يزيد بن الأصم أن الأنصار - رضي الله عنهم - قالوا: "يا رسول
الله اقسم بيننا وبين إخواننا من المهاجرين - رضي الله عنهم
- الأرض نصفين: قال صلى
الله عليه وسلم: لا، ولكنكم تكفونهم المئونة، وتقاسمونهم الثمرة، والأرض أرضكم، قالوا: رضينا، فأنزل الله عز وجل وَ الَّذِیْنَ تَبَوَّؤُ الدَّارَ وَ
الْاِیْمَانَ مِنْ قَبْلِهِمْ یُحِبُّوْنَ مَنْ هَاجَرَ اِلَیْهِمْ وَ لَا یَجِدُوْنَ
فِیْ صُدُوْرِهِمْ حَاجَةً مِّمَّاۤ اُوْتُوْا وَ یُؤْثِرُوْنَ عَلٰۤى
اَنْفُسِهِمْ وَ لَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ) .
அர்கம் ரலி அவர்களின் வீடு சஃபா மலையின் மேட்டில் 13 மீட்டர் தொலைவில்
இருந்தது. அந்த வீடு தான் இஸ்லாம் துளிர்க்க இடமளித்தது. நபி (ஸல்) அர்வகள் தனது
ஆரம்ப கட்ட பிரச்சாரத்தை அங்கு தான் இரகசியமாக செய்து வந்தார்கள். அதனால் அந்த கால கட்ட்டத்தை ஜைது பின் அர்கம் கால கட்டம் என்று
வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள்.
இதுவல்லவோ வரலாற்றை சொந்தமாக்கிக் கொண்ட வீடு!
வீடுகளை வடிவமைப்பதில் இன்று அதிக கவனத்தை செலுத்துகிறோம். ஆர்க்கிடெக்டுகள்
நமது வீடுகளை ஆதிக்கம் செய்கிறார்கள்.
நாம் நன்மைகளை வடிவமைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்துவோம்.
சீர்திருத்தம்
வீட்டிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் துஆ
روى أبو داود في سننه أن رسول الله صلى الله عليه وسلم ، قال : " إذا خرج الرجل من بيته فقال : بسم الله ، توكلت على الله ، لا حول ولا قوة إلا بالله ، فيقال له : حسبك قد هديت ، وكفيت ووقيت ، فيتنحى له الشيطان فيقول له شيطان آخر : كيف لك برجل قد هدي وكفي ووقي ؟ " . رواه أبو داود والترمذي
விளக்கில்லாத வீட்டில் என்ன நன்மை ?
قال عمر بن الخطاب رضي الله عنه: "صلاة الرجل
في بيته تطوعًا فهو نور، فنوِّروا بيوتكم، وما خير بيت ليس فيه نور".
قال العلامة عبدالله بن عبدالرحمن الجبرين رحمه
الله: "النوافل: الأفضل أن تكون في البيت؛ وذلك فيه فوائد:
أولًا: أن يُعمَر البيت بذكر الله، ولا يخلو البيت من ذكر
الله.
ثانيًا: أنه متى عمر البيت بالذكر، فإنه يكون مَطْرَدة للشياطين، ومأوى للملائكة والخير.
ثالثًا: أنه يكون قدوة حسنة للزوجة، والصغار، ولأهله إذا رأوه يُكْثِر من النوافل، اقتدَوا به في هذه النوافل، فأكْثَروا منها.
رابعًا: تعليم الأهل... كيفية الصلاة فقد يكون بعض الأولاد، أو بعض النساء لا يحسن الصلاة... فإذا صلى وليُّ أمرهم أمامهم في البيت، اقتدَوا به وتعلموا صفة الصلاة.
خامسًا: أن يكون أقرب إلى الإخلاص، وأبْعَدَ من الرياء.
வெளியே சுத்தாதே!
ولدار الآخرة خير، ولنعم دار المتقين
رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ
அவன் தனது வீட்டை காட்டி பெருமை கொண்ட்தே அதற்கு காரணமாகும்.
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்... அருமையான பதிவு... அல்லாஹ் கபூல் செய்வானாக ஆமீன்...
ReplyDeleteMasha allah...
ReplyDeleteமாஷா அல்லாஹ் அருமையான பதிவு நன்றி
ReplyDeleteஅக்பர் சார்ஜா
மாஷா அல்லாஹ்
ReplyDeleteஅருமை மாஷா அல்லாஹ்
ReplyDeleteBaarakallah
ReplyDeleteMashallah
ReplyDeleteMashallah
ReplyDeleteமாஷா அல்லாஹ் அருமையான பதிவு
ReplyDeleteMashaallah
ReplyDelete