வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 05, 2024

அவர்கள் இடித்த பள்ளி ஒன்று

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ


இன்று டிஸம்பர் 6 ம் தேதி இந்துத்துவ அக்கிரமக்காரர்களால் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நாள்.

1528 பாபர் பள்ளிவாசல் பாபரின் படைத்தளபதி மீர்பாகி என்பவரால்  கட்டப்பட்டது. அதில்  350 வருடங்களாக எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.

 1857 சிப்பாய் கலகத்திற்கு பிறகு இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க பிரிட்டிஷ்கார்ர்கள் திட்டமிட்டனர்.

 அதற்கு அவர்கள் பல வழிகளை கையாண்டனர். அதில் ஒன்று ராம் ஜன்ம பூமி கதை. அயோத்தியில் சுமார் 3 ஏக்கர் நிலத்தில் பாபர் பள்ளி இருப்பது அந்த ஊரில் இருந்த சில இந்துக்களின் கண்களை உறுத்தியது.அவர்கள் பிரிட்டிஷாரின் திட்ட்த்திற்கு துணைபோயினர். அவர்கள் பள்ளிவாசல் இருந்த இட்த்தில் தான் ராமர் பிறந்தார் என்று கூறினர்.   

 1859 முதல் தகராறு  தொடங்கியது.

சுதந்திரத்திற்குப் பிறது 1949 டிஸ்ம்பர் 22 இஷா வரை தொழுகை நடைபெற்றது

  அன்று இரவில் இரவோடு இரவாக திருட்டுத்தனமாக ஒரு  சிலை கொண்டு வந்து வைக்கப்பட்டது. 

 பிரச்சினை நீதிமன்றத்திற்கு சென்றது நீதிபதி கே.கே நய்யார் பள்ளிக்குப் பூட்டுப் போட்டார்.  

 1992 –டிஸம்பர் 6 தேதி நீதிமன்ற உத்தரவு மத்திய அரசின் வாக்குறுதி அனைத்தையும் மீறி இந்துத்துவ வன் முறைக்கும்பல்  பாபர் பள்ளிவாசலை இடித்தார்கள். . இதை தொடர்ந்த கலவரத்தில்  2000முஸ்லிம்கள் பலியாயினர்

 70 ஆண்டுகளாக நடந்த வழக்கில் 2019 நவம்பரி ல் தீர்ப்பு சொல்லப்பட்ட்து.  

 பாபரீ மஸ்ஜித் இருந்த இட்த்தில் இப்போது ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. நீதி மன்றம் ராமர் கோயில் கட்ட அனுமதியளித்தது என்பது உண்மை தான் என்றாலும் 2019  நவம்பரில் வழங்கப்பட்ட அந்த தீர்ப்பு இது விசயாத்தில் இந்துத்துவ அமைப்பினர் பல்லாண்டுகளாக பெருமக்களிடம் பரப்பி வந்த பல குற்றச்சாட்டுக்களையும் நிரூபிக்க முடியாதவை என்று புறம் தள்ளிவிட்டது.

அந்த தீர்ப்பில் சொல்லப் பட்ட சில செய்திகள் இவை.

·         பார்பரீ மஸ்ஜித் மஸ்ஜிதாகத்தான் இருந்த்து. அது பாபரின் பட்ட்த்தளபதி மீர்பாக்கியால் கட்டப்பட்டது.

·         அதற்கு கீழ் வேறு ஒரு கட்டிட்த்தின் இடிபாடுகள் இருந்தாலும் அதை ஒரு கோயில் என்று உறுதிப்படுத்த முடியவில்லை.

·         முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த அந்த இடத்தை கோயில் என்று உறுதிப்படுத்த முடியவில்லை.

·         1992 ம் ஆண்டு பாபரீ மஸ்ஜித் இடிக்கப்பட்டது தவறு.

 இத்தனையையும் மீறி நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு நீதிபதிகள் இந்துத்துவ சக்திகளின் வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது என்ற நிலையிலேயே பள்ளிவாசல் இருந்த இடத்தில் கோயில் கட்டிக் கொள்ள தீர்ப்பளித்தனர்.

அப்போதே இனி வேறு எந்த பள்ளிவாசலிலும் இது போன்ற வழக்கு எதுவும் வரக்கூடாது என்று இனி சுதந்திர இந்தியாவில் வேறு எந்த பள்ளிவாசல் விவகாரத்திலும் இது போன்ற வழக்கை எழுப்பக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை சேர்த்திருக்குமானால் அது சரியான நீதியாக இருந்திருக்கும்.

எல்லா வகையிலும் முஸ்லிம் தரப்பாரின் கருத்தை ஒப்புக் கொண்ட பிறகு இந்து தரப்பிற்கு சார்பாக தீர்ப்பு சொல்லப் பட்டதால் இதையே காரணமாக வைத்துக் கொண்டு பல பள்ளிவாசல் விவகாரங்களிலும் இப்போது இந்துத்துவ சக்திகள் விளையாடி வருவதை உலகம் கவலையோடு கவனித்து வருகிறது.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மதச்சார்பின்மையை கேலிக்குள்ளாக்குவதாக உள்ளது. தற்போது மசூதி உள்ள இடத்தில் ஒரு காலத்தில் இந்து கோயில் இருந்ததாக நாடு முழுவதும் வழக்குகள் தொடரப்படுவதற்கு அயோத்தி தீர்ப்பே காரணம் என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹிண்டன் பாலி நரிமன் கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.

இப்போது அது எந்த உச்சத்திற்கு சென்று விட்டது என்றால் இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தின் மாபெரும் சான்றாக விளங்கி வருகிற அஜ்மீர் தர்காவையும் விட்டு வைக்க வில்லை. அங்கு ஆய்வு நடத்தப்பட நீதிமன்றத்தை அனுகியிருக்கிறார்கள். அஜ்மீர் தர்காவில் போர்த்தப்படுவதற்காக ஆண்டு தோறும் மத்திய் அரசின் சார்பில் ஒரு போர்வை அனுப்ப்ப் படுகிற வழக்கம் இருக்கிறது. பிரதமர் அதை அனுப்பி வைப்பார். நிலமை இப்படி இருந்தும் அந்த தர்காவின் மீதே விசாரனை நடத்த இப்போது உத்தரவிடப்படுகிறது.

இதற்கான காரணம் வேறொன்றும் இல்லை. நீதிமன்றங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கிறது. நீதிபதிகளும் நிர்வாக அமைப்பும் பள்ளிவாசல்களுக்கு எதிரான எந்த வழக்கையும் அனுமதிப்பார்கள் என்ற சூழ்நிலை இருக்கிற போது இந்துதுத்துவ சக்திகள் இனி எந்த பள்ளிவாசல் விவகாரத்திலும் இத்தகைய வழக்குகளை தொடர்வார்கள் என்பதே எதார்த்தம்.  

மிகவும் கவலையளிக்கிற இந்த சூழலில் முஸ்லிம்கள் இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக நீதிமன்றங்களின் மனசாட்சியை தூசி தட்ட முஸ்லிம் தலைவர்கள் நீதிமன்றங்களையே அனுகுகிறார்கள்.

அப்படி அனுகத்தான் வேண்டும். நீதிக்கு எதிரான செயல்பாடுகள் பெருக்கெடுக்கிற போதும் நடந்து விட்டு போகட்டும் நம்மால் என்ன செய்ய முடியும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற முடியாது. போராட்த்தான் வேண்டும்.

அக்கிரமத்திற்கு எதிரான சட்டபடியான அந்த தொடர் போராட்டம் நன்மையானது. 

நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

  أن النبي صلى الله عليه وسلم قال الخيل معقود في نواصيها الخير إلى يوم القيامة الأجر والمغنم

 போராட்டத்திற்கு தயாராக வைக்கப்பட்டிருக்கிற குதிரையின் முன்னெற்றியில் கியாமத் நாள் வரை நன்மை இருக்கிறது. மறுமையில் கிடைக்கும் கூலிம் யும் உண்டு. இந்த உலகில் கிடைக்கும் கனீமத் என்ற கூலியும் உண்டு .

இமாம் புகாரி ரஹ் அவர்கள் இந்த ஹதீஸை பதிவு செய்யும் பெருமானாரின் மற்றொருவாசகத்தை தலைப்பாக கொடுத்திருக்கிறார்கள்.

باب الجهاد ماض

சத்தியத்திற்கான போராட்டம் என்பது நடந்து கொண்டே இருக்கும்   என்ற பெருமானாரின் இந்த சொல் எந்தக் காலத்திலும் நீதியின் மீது விரக்தி கொண்டு போராட்டத்தை கை விட்டு விடக் கூடாது என்பதை காட்டுகிறது.

 பாபரீ மஸ்ஜித் விவகாரத்திலேயே கூட இன்னும் நீதிமன்றத்தை நாடுவதற்கான வழிகள் இருக்குமானால் முஸ்லிம்கள் அதை நாடவே வேண்டும்.

 பிரச்சனை ஒழிந்தால் சரி என்று நிம்மதியை தேடக் கூடாது . காரணம் ஒருக்காலும் பிரச்சனை ஒழியாது. தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் . நீதியை நிலை நாட்டும் போராட்டமும் தொடரத்தான் வேண்டும்.

 பல நேரத்தில் நீதி தவறலாம். ஆனால் ஏதேனும் ஒரு கட்டத்தில் நீதி வென்றே திரூம்.

 திருக்குர் ஆன் நல்லவர்களுக்கு அளித்துள்ள வாக்குறுதி இது

  وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ

நீதியை தேடி போராட்டத்தை தொடர்வதற்கு அடுத்த படியாக முஸ்லிம்கள் தத்தமது பள்ளிவாசலகளில் கவனத்தை செலுத்த வேண்டும். 

 பள்ளிவாசல்களோடு நம்மை அதிகம் பிணைத்துக் கொள்ள வேண்டும்.

 பாங்கு சப்தம் கேட்கும் பகுதியில் தான் குடியிருக்க வேண்டும் என்று நினைக்கிற வழக்கம் நமது முன்னோர்களிடம் இருந்தது. அதை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

 பள்ளிவாசல்களுக்கு அருகில் பரக்க்த் இருக்கிறது சந்தேகத்திற்கு இடமில்லாத கருத்தாகும்.

 الَّذِي بَارَكْنَا حَوْلَهُ 

எனபது மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு மட்டுமல்ல அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பொருந்தும்.  

 இதில் பரக்கத் என்பதற்கு நிலையான வளம் الخصب الدائم என்று விரிவுரையாளர்கள் பொருள் கூறுகிறார்கள்.

 பள்ளிவாசகளை சுற்றி வளமான கடைத்தெருக்கள் இருப்பதையும் அவற்றின் செழிப்பு நிலையாக இருப்பதையும் நாம் அனுபவத்தில் காணலாம்.

 எனவே நாகரீகம் அல்லது தனிமை என்ற பெயரில் பள்ளிவாசல்களிலிருந்து தூரமாக விலகிக் செல்ல முஸ்லிம்கள் முயலக் கூடாது.

 நபி இபுராஹீம் அலை அவர்கள் தனது மனைவி ஹாஜரா அம்மையாரையும் குழந்தை இஸ்மாயில் அலை அவர்களையும் ஆள் அரவற்ற மக்காவின் பாலை நிலத்தில் கொண்டு வந்து குடியமர்த்தினார்கள். கஃபாவை உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே அதற்கு காரணம்.

 رَّبَّنَا إِنِّي أَسْكَنتُ مِن ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِندَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ (37

 அல்லாஹ் தனியாக விடப்பட்ட  ஹாஜரா இஸ்மாயில் (அலை) ஆகியோரின் வாழ்க்கையை வெளிச்சமாக்கினான். இன்று அந்தப் பகுதி உலகின் போரெளி நிரம்பிய பகுதியாக எப்போது உயிர்த்துடிப்போடு இருக்கும் பகுதியாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.

 நமது இருப்பிடத்தில் பள்ளிவாசலுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நிச்சயம் நமது வாழ்வும் வளம் பெறும். புகழ் பெறும்.

 பள்ளிவாசல்கள் இல்லாத இடமாக இருந்தால் அங்கு முஸ்லிம்கள் கனிசமாக இருப்பார்கள் அந்தப் பகுதியில் ஒரு பள்ளிவாசலை கட்ட ஒவ்வொரு முஸ்லிமும் முயற்சிக்க வேண்டும்.

பள்ளிவாசல் தான் உண்மையான வீடு என்றார்கள் பெருமானார் (ஸல்)

 عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ - صلى الله عليه وسلم - يَقُولُ :\"الْمَسْجِد بَيتُ كُلّ تَقِيّ \". أخرجه أبو نعيم 

 நபி (ஸல் அவர்கள்ஹிஜ்ரத்தின் போது சபர் பிறை 27 வெள்ளிக்கிழமை அன்று மக்காவ்வ புறப்பட்டார்கள். 3 நாட்கள் தவ்று குகையில் தங்கியிருந்தார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு ரபீஉல் அவ்வல் பிறை 8 ல் குபாவிற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு 4 நாட்கள் தங்கியிருந்தார்கள். அங்குஅமைதி  கிடைத்த சொற்ப காலத்திற்குள் குபாவில்இஸ்லாமின் முதல் பள்ளிவாசலை கட்டினார்கள் .

 தற்போதைய குபா பள்ளிவாசலின் கீழ் தளத்தில் பெருமானார் (ஸல்) பயணம் செய்து வந்த கஸ்வா ஒட்டகை கட்டப்பட்டிருந்த இடம் இப்போதும் அடையாளமிடப்பட்டு இருக்கிறது. அது ஒரு அழுத்தமான செய்தியை சொல்கிறது.  

 எந்த கஸ்வா ஒட்டகையின் மீது அவர்கள் குபாவிற்கு பயணம் செய்து வந்தார்களோ அதே கஸ்வா ஒட்டகையில் அவர்கள் மக்காவை வெற்றி கொள்ளும் பயணத்திற்கு வழி வகுத்தது.

 பள்ளிவாசல் பணி நமது இழப்புகளை ஈடு கட்டக் கூடியது.

   மதீனாவிற்கு சென்றதும் முதலாவதாக பெருமானார் (ஸல்)  அவர்கள் கவனித்த முதல் பணியும் மஸ்ஜிதுன்னபவிக்காக இடத்தை வாங்கி பள்ளிவாசலின் கட்டிடப்பணியை கவனித்த்து தான்.

 இவ்வாறு தொடங்கும் எதுவும் துலங்கும் என்பதற்கான மாபெரும் அடையாளம் அது.

 அது மட்டு மல்ல நபி ஸ்(ஸல்) அவர்க்ள் எந்த இடத்தில் கொஞ்ச நேரம்  தங்கியிருக்க  நேர்ந்தாலும்  அங்கே ஒரு பள்ளிவாசலை எழுப்பினார்கள் என்பதுதான் வரலாறு

 وكان النبي صلى الله عليه وسلم إذا نزل منزلاً في سفر أو حرب وبقي فيه مدة اتخذ فيه مسجداً يصلي فيه بأصحابه رضي الله عنهم، كما فعل في خيبر.

وفاء الوفا بأخبار المصطفى للسمهودي 3

ஒவ்வொரு முஸ்லிம் ஜமாஅத்தினரும் தமக்கு ஒரு பள்ளிவாசல் கட்டிக் கொள்ள வேண்டும் என உமர் ரலி உத்தரவிட்டார்கள்

.عن عثمان بن عطاء قال لما فتح عمر بن الخطاب البلد كتب إلى أبي موسى الأشعري وهو على البصرة يأمره أن يتخذ للجماعة مسجداً فإذا كان يوم الجمعة انضموا إلى مسجد الجماعة فشهدوا الجمعة .كنز العمال

 சின்னதாக வேனும் கட்டுங்கள் .

 அது பறவையின் கூட்டின் அளவுக்கு இருந்தாலும் சரி.

பறவை அது குடியிருக்கும் அளவுக்கு கூட  வீடு கட்டுவதில்லை. அதன் முட்டைகளை பாதுகாக்கும் அள்வுக்கே வீடு கட்டுகிற்து.

وعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ:مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا وَلَوْ كَمَفْحَصِ قَطَاةٍ لِبَيْضِهَا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا في الْجَنَّةِ.أخرجه أحمد 

 பள்ளிவாசலுக்கு பக்கத்தில் குடியிருந்தால்  நீங்கள் அல்லாஹ்வின் பக்கத்து வீட்டுக் கார்ர் ஆவிர்!

 وعن أنس قال : قال رسول الله صلى الله عليه وسلم  إن الله ينادى يوم القيامة أين جيراني أين جيراني فتقول الملائكة ربنا من ينبغي له أن يجاورك فيقول أين عُمَّارُ المساجد.

 பள்ளிவாசலுக்கு காலையும் மாலையும் சென்று வந்தால் சொர்க்கத்தில் ஒரு வேளை விருந்துக்கான டோக்கன் கிடைக்கிறது.

وعَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ:( مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ ، أَعَدَّ اللَّهُ لَهُ فِي الْجَنَّةِ نُزُلاً كُلَّمَا غَدَا وَرَاحَ.).أخرجه أحمد 

இரவின் இருட்டில் பள்ளிக்கு நடந்து சென்றால் கியாமத் நாளின் வெளிச்சம் கிட்டக்கும்.

 وعَنْ بُرَيْدَةَ , عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم , قَالَ:بَشِّرِ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ ، إِلَى الْمَسَاجِدِ ، بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَة.أخرجه أبو داود (

பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதும், தொழுகைக்காக காத்திருப்பதும் அல்லாஹ்வுடன் இண்ணந்திருப்பதாகும் . ரபாத்)(

عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: أَلاَ أُخْبِرُكُمْ بِمَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا ، وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ ؟ إِسْبَاغُ الْوُضُوءِ عِنْدَ الْمَكَارِهِ ، وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ ، وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ ، فَذَلِكُمُ الرِّبَاطُ ، فَذَلِكُمُ الرِّبَاطُ ، فَذَلِكُمُ الرِّبَاطُ.).

வாழுமிட மெங்கும் பள்ளிவாசல் வேண்டும் என்று சொல்லும் போது மக்களை பிளவு படுத்துவதற்காக கட்டப்படுகிற பள்ளிவாசல்களை ஆதரிக்க கூடாது.

 திருக்குர் ஆன் அதை பற்றியும் மூஸ்லிம்களை எச்சரிக்க் தவரவில்லை.

 முஸ்லிம் பெயர் தாங்கிய வஞ்சகர்கள் பெருமானாரின் காலத்திலேயே குபா பள்ளிவாசலுக்கு எதிராகவே அப்படி ஒரு பள்ளிவாசலை கட்டினார்கள்.

குபா பள்ளிக்கு போட்டியாகவும் அபூ ஆமிர் என்ற குழப்பவாதிக்கு அடைக்கலம் கொடுப்பதற்காகவும் பனூ கனம் என்ற குலத்தார் ஒரு பள்ளிவாசலை கட்டி அங்கு தொழுகைக்கு வருமாறு பெருமானாரை அழைத்தார்கள். அப்போது பெருமானார் தபூக் யுத்த்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். யுத்த்திலிருந்து திரும்பியதும் வருகிறேன் என்றார்கள். அதற்குள் அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கி பெருமானாரை முஸ்லிம் உம்மத்தை தடுத்தான் . சமூகத்திற்கு மிக முக்கியமான ஒரு வழியை காட்டினான்.

அல்லாஹ்வின் பெயரை சொல்லிக் கொண்டு குழப்பம் செய்பவர்கள் வருவார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

 روي أن بني عمرو بن عوف لما بنوا مسجد قباء وكان يأتيهم رسول الله  ويصلي فيه، حسدتهم بنو غنم بن عوف وقالوا: نبني مسجدا ونرسل إلى رسول الله  يصلي فيه ويصلي فيه أبو عامر الراهب 

فبنوا مسجد الضرار إلى جانب مسجد قباء، وقالوا للنبي: بنينا مسجدا لذي العلة والحاجة والليلة المطيرة والشاتية، ونحن نحب أن تصلي لنا فيه وتدعو لنا بالبركة، فقال الرسول: إني على جناح سفر وحال شغل وإذا قـدمنا إن شاء الله صلينا فيه، فلما قفل من غزوة تبوك سألوه إتيان المسجد، فنزل قوله تعالى«وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا» إلى قوله «لَا تَقُمْ فِيهِ أَبَدًا»، فدعا بمالك بن الذخشم ومعن بن عدي وعامر بن السكن ووحشي قاتل حمزة بن عبد المطلب فقال لهم: انطلقوا إلـى هذا المسجد الظالم أهله فاهدموه واحرقوه، ففعلوا وأمر أن يجعل مكانه كناسة تلقى فيـها الجـيف والقمامة

 وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِداً ضِرَاراً وَكُفْراً وَتَفْرِيقاً بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَاداً لِّمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِن قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَىٰ وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ*لَا تَقُمْ فِيهِ أَبَداً لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚفِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا واللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ

 அந்த பள்ளிவாசலை இடிக்கவும் எரிக்க முடிந்த்தை எரிக்கவும் உத்தரவிட்ட நபி (ஸல்) அதன் பக்கம் மக்கள் திரும்பியும் பார்க்க் கூடாது என்பதற்காக அதை குப்பை மேடாக்க உத்தரவிட்டார்கள்.

 இதில் எந்த அளவு முஸ்லிம்கள் கடுமை காட்டினார்கள் என்றால் அப்படி ஒரு பள்ளிவாசலை கட்டுவதில் ஈடுபட்ட நபர்கள் அனைவரின் பெயரையும் கூட பத்திரமாக குறிப்பிட்டு வைத்தார்கள்.

 كان الذين بنوه مسجد ضرار اثني عشر رجلا:

1.      خذام بن خالد: من بني عبيد بن زيد أحد بني عمرو بن عوف ومن داره أخرج مسجد الشقاق.

2.      ثعلبة بن حاطب: من بني عبيد وهو إلى بني أمية بن زيد.

3.      ومعتب بن قشير: من بني ضبيعة بن زيد.

4.      أبو حبيبة بن الأذعر: من بني ضبيعة بن زيد.

5.      عباد بن حنيف: أخو سهل بن حنيف من بني عمرو بن عوف.

6.      جارية بن عامر.

7.      مجمّع بن جارية.

8.      زيد بن جارية.

9.      نبتل بن الحارث: من بني ضبيعة.

10. بحزج: وهو من بني ضبيعة.

11. بجاد بن عثمان: وهو من بني ضبيعة.

12. وديعة بن ثابت: وهو إلى بني أمية رهط أبي لبابة بن عبد المنذر.

 

 14 நூற்றாண்டுகளுக்கு முன்னாள் ஒரு தீமைக்கு துணையாக இருந்தவர்களின் பெயர்கள் காலம் கடந்து இன்றளவும் தூஷிக்கப்படுகிறது. (ழிரார்- குழப்பவாதிகள்_)

 தீய திட்டங்களுக்கு துணை போகிற எவரும் எச்சரிக்கை அடைய வேண்டிய செய்தி இது.  

 சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்கள் சிறப்பாக இருக்கிற போது, இயக்க பேர்வழிகள், தவ்ஹீதிய அமைப்புகள் தங்களது இயக்க அடையாளங்களுக்காக கட்டுகிற அனைத்தும் மஸ்ஜித்களும் ழிரார் வகையை சார்ந்ததாகும். அங்கு செல்வதே கூட தவறு. பிறகு நிதி கொடுப்பது எப்படி நன்மையாகும் என்று நாம் யோசிக்க வேண்டும்.

அந்த திருட்டு பேர்வழிகள் இதற்காக மக்களிடம் வசூலிக்கும் போது அல்லாஹ்வுடைய பள்ளி என்று கூறுவார்கள். அது முடிந்த வுடன் எங்களது இயக்கப் பள்ளி என்று அறிவித்து விடுவார்கள்.

 இந்த குழப்ப பேர்வழிகளுக்கு நாம் உதவவும் கூட. உடன்படவும் கூடாது என அல்லாஹ் எச்சரிப்பத்த நாம் கவனதில் கொள்ள வேண்டும். 

 எனவே குழப்பம் விளைவிக்க பள்ளிவாசல்களை கட்டவருகிறவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 பள்ளிவாசல்களில் குழப்பம் ஏற்படவும் நாம் வழி வகுத்து விடக் கூடாது.

பெருமானார் (ஸல்) அவர்கள் எந்த அளவில் பள்ளிவாசலின் மரியாதையை காப்பாற்ற நமக்கு உத்தரவிட்டார்கள் என்பதை நினைவில் வைப்போம்.

ن النبي صلى الله عليه وسلم قال: "مَنْ أَكَلَ الْبَصَلَ، وَالثُّومَ، وَالْكُرَّاثَ، فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا، فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ"

مَنْ غَسَّلَ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ ثُمَّ بَكَّرَ وَابْتَكَرَ وَمَشَى وَلَمْ يَرْكَبْ وَدَنَا مِنَ الْإِمَامِ فَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ، كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا

حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: "إِذَا سَمِعْتُمُ الْإِقَامَةَ فَامْشُوا إِلَى الصَّلَاةِ وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالْوَقَارِ وَلَا تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا"

ابن عباس قال

فأذن المؤذن يعني للصبح، فخرج إلى الصلاة وهو يقول: "اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وَفِي لِسَانِي نُورًا، وَاجْعَلْ فِي سَمْعِي نُورًا، وَاجْعَلْ فِي بَصَرِي نُورًا، وَاجْعَلْ مِنْ خَلْفِي نُورًا، وَمِنْ أَمَامِي نُورًا، وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا، وَمِنْ تَحْتِي نُورًا، اللَّهُمَّ أَعْطِنِي نُورًا"


பள்ளிவாசலில் சொடக்கு விடாதீர்

أن رسول الله صلى الله عليه وسلم قال: "إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَى الْمَسْجِدِ فَلَا يُشَبِّكَنَّ بَيْنَ أَصَابِعِهِ فَإِنَّهُ فِي صَلَاةٍ

தொலைந்து போனதை தேடி சப்தம் எழுப்பக் கூடாது.

حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: "مَنْ سَمِعَ رَجُلًا يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ، فَلْيَقُلْ لَا رَدَّهاَ اللَّه عَلَيْكَ، فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا"

ஆனால் தற்காலத்தில்  பல் வேறு சின்ன சின்ன காரணங்களுக்காக பள்ளிவாசல்களில் சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன.  

 நாங்கள் தொழும் போது ஏன் பேன் ஆப் செய்தீர்கள்?

தொப்பி போட்டுத்தான் தொழ வேண்டுமா?

டாய்லெட்டில் ஏன் தண்ணீர் வரவில்லை.

இமாம் என்ன இப்படி ஆடை அணிகிறார்?

இந்த பள்ளியில் எனக்கு உரிமை இல்லையா ?

 என்பது போன்ற பல கேள்விகளும் நாம் அல்லாஹ்வின் அடிமைகள் என்பதை மறந்து நடக்கிறோம் என்பதை காட்டுகிறது.

 பணிவாகவும் தாழ்மையாகவும் நடந்து கொள்ள வேண்டிய இடத்தையே தற்பெருமைக்கு பயன்படுகிறோம் என்பதை காட்டுகிறது.

நன்மைகளை சேர்த்துக் கொள்ள வேண்டிய இடத்தை பாவத்தை சேமித்துக் கொள்ள பயன்படுத்துகிறோம் என்றாகிவிடுகிறது.

 இதை விட வாழ்க்கையில் பெரிய சோதனை என்ன இருக்கிறது.

சமூக சீர்கேடு என்ன இருக்கப் போகிறது ?

 பள்ளிவாசலகளைப் பற்றிய எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன?

 அதில் நிச்சயமாக தற்பெருமைக்கானது எதுவும் இருக்குமானால் பாபரீ மஸ்ஜிதை உடைத்த குற்றவாளிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது.

அவர்கள் ஒரு பள்ளிவாசலை தான் இதுவரை உடைத்துள்ளார்கள். நாம் எத்தனை பள்ளிவாசலின் மரியாதையை தகர்த்துள்ளோம் ?

 அதனால் நம்முடைய ஒவ்வொரு பள்ளிவாசலின் அந்தஸ்த்தையும் காப்போம். மரியாதையை பேணும்வோம். பள்ளிவாசல்களை நமக்கு நன்மையை சேர்க்கிற இடமாக வைத்துக் கொள்வோம்.

 பள்ளிவாசல்களை தகர்க்கவும் சிதைக்கவும் எதிரிகள் திட்டமிடுகிற போது பள்ளிவாசல்களின் மீதான நமது ஈடுபாட்டை அதிகரிக்கவும் ஒவ்வொரு பள்ளிவாசலின் புனிதத்தையும் பாதுகாக நாம் முயற்சி செய்வோம்.

ஒரு உண்மை முஸ்லிமாக நம்மில் ஒவ்வொருவரும் நாம் சார்ந்திருக்கிஅ பள்ளிவாசலின் தூய்மை மரியாதை அமைதி ஆகியவயாற்றை கட்டிக் காக்க உறுதி ஏற்போம். நமது தற்பெருமை காரணமாக ஒரு சின்ன தகறாறு கூட நாம் சார்ந்திருக்க பள்ளிவாசலில் வரக் கூடாது என்று உறுதி ஏற்போம்.

அப்துல் முத்தலிபுக்கு அல்லாஹ்  கஃபாவை காப்பாற்றிக் கொடுத்த்து போல அல்லாஹ் நமக்கு நமது பள்ளிவாசல்களை மீட்டுத்தருவான்.

 அல்லாஹ் முஸ்லிம் உம்மத்திற்கு நிச்சயம் துணையாக இருப்பான்.

 

 

No comments:

Post a Comment