وَقَالَ الْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوْمَهُ لِيُفْسِدُوا فِي الْأَرْضِ وَيَذَرَكَ وَآلِهَتَكَ ۚ قَالَ سَنُقَتِّلُ أَبْنَاءَهُمْ وَنَسْتَحْيِي نِسَاءَهُمْ وَإِنَّا فَوْقَهُمْ قَاهِرُونَ (127) قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا ۖ إِنَّ الْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ ۖ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ (128) قَالُوا أُوذِينَا مِن قَبْلِ أَن تَأْتِيَنَا وَمِن بَعْدِ مَا جِئْتَنَا ۚ قَالَ عَسَىٰ رَبُّكُمْ أَن يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِي الْأَرْضِ فَيَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ
இந்த ஆண்டு பிறக்க கூடிய குழந்தைகளின் பட்டியலையும் இறக்க கூட மனிதர்களின்
பட்டியலையும் தனித்து எழுதப்படுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த
இரவில் கால்கள் வீங்கும் அளவு பெருமானார் நின்று வணங்கினார்கள். உள்ளம் உருக துஆ செய்தர்கள்.
எனது உடலும் சிந்தையும் உனக்கு பணிந்து நிற்கிறது. இதயம் உன்னை ஏற்றுக்
கொண்டிருக்கிறது. எனக்கு கிடைக்கிற அருட்கொடைகளுக்காக உன்னயே நான் சார்ந்திருக்கிறேன். எனது பெரும் பாவங்களை நான் ஒப்புக் கொள்கிறேன்.
எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டு விட்டேன். இறைவா என்னை மன்னித்து விடு! உன்னை தவிர
வேறு யாரும் பாவங்களை மன்னிப்பதற்கில்லை. எனது மன்னிப்பை கொண்டு நான் பாதுகாப்பு தேடுகிறேன்.
என்னை தண்டித்து விடாதே! உனது அருளை கொண்டு உனது தண்டனையிலிருந்து பாதுகாப்பு கேட்கிறேன்.
உனது கிருபையை கொண்டு உனது கோபத்தை விட்டு பாதுகாப்பு தேடுகிறேன்.
உன்னாலேயே தவிர உனக்கான புகழை தீர்மாணித்துக் கொள்ள முடியாது. இறைவா என்னை பாதுகாப்பாயாக!
பெருமானாரின் இந்த வார்த்தைகளில் இருக்கிற பரிதவிப்பை கவனித்துப் பாருங்கள்!
அந்த
சிறு பகுதியில் 10 ஆயிரம் முடியா என்று நான் ஆச்சரியப்பட்டேன்
அல்லாஹ்வே நீங்கள் கேளுங்கள் தருகிறேன் என்று அழைக்கிற போது நாம் கேட்காமல் விட்டு விட்டால் என்னாவது ?
வீடுகள் இல்லாதவர்கள்
நோயில் சிக்கியிருப்பவர்கள்
வேலை இல்லாதவர்கள்
திருமணம் அமையாமல் காத்திருப்பவர்கள்
குழந்தை இல்லாமல் காத்திருப்பவர்கள்.
கணவன் மனைவியிடையே நிம்மதியின்மையால் வாடுபவர்கள்
கட்டுப்பாடில்லாத பிள்ளைகளால் நொந்து போனவர்கள்
கெட்டவர்கள்
அழைத்தால் எப்படி பதில் அளிப்பாய் என்று மூஸா அலை திரும்ப கேட்டார்கள். அல்லாஹ் சொன்னான். லப்பைக்! லப்பைக்! லப்பைக்!
இறைவா ஏன் இந்த வித்தியாசம் என்று மூஸா அலை கேட்டாரக்ள். அல்லாஹ்
சொன்னான்.
எனெனில்
நல்லவர்களுக்கு
தங்களது நன்மைகள் மீது ஒரு நம்பிக்கை இருக்கும். கெட்டவர்களுக்கு தமது பாவங்களைப் பற்றிய பயம் இருக்கும். நான் மன்னிப்பேனோ மாட்டேனோ
என்ற பரிதவிப்பு இருக்கும். அதை போக்குவதற்குத்தான் மூன்று முறை லப்பைக் சொல்கிறேன்
என்றான்.
எனவே
நமது தேவைகளை கேட்பதற்கு கிட்ட்த்திருக்கிற இந்த அரும்மயான வாய்ப்பை பயன்படுத்தி நமது
பாவங்களுக்கு உளமுறுக மன்னிப்புக் கேட்பதோடு அல்லாஹ்வுடைய இரக்க சுபாவத்தை முழுமையாக
மனதில் நிறுத்தி துஆ கேட்போம்.
திருக்குர்
ஆன் அல்லாஹ்வின் இயல்பை கூறுகிறது.
ٱللَّهُ لَطِيفٌۢ بِعِبَادِهِۦ يَرْزُقُ مَن يَشَآءُ ۖ وَهُوَ
ٱلْقَوِىُّ ٱلْعَزِيزُ
அல்லாஹ்
அடியார்கள் விவகாரத்தில் மிக கறாரனவன் அல்ல; மிக இளகியவன்.
அதனால்
நாம் துஆ கேட்பதற்கான நேரம் கொஞ்சம் தவறியிருந்தாலும் கூட் அவனது நெகிழ்வில் நம்பிக்கை
வைத்து நாம் துஆ கேட்போம்.
நிச்ச்யமாக
அல்லஹ் நமது பிரார்த்தனைகளை ஏற்றூக் கொள்வான்.
நமது
பிரார்த்தனைகளில் தற்கால சூழலில் மிக முக்கியமான இணைத்துக் கொள்ள் வேண்டிய ஒரு காரியம்
பாலஸ்தீனின் காஸா பகுத் மக்களுக்காக துஆ கேட்ப்தாகும்.
அமெரிக்கா
அதிபராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிற டொனால்ட் டிரம்ப் மிகவும் வன்மமானவர்
என்பத் அனைவருக்கும் தெரிந்த செய்தி.
அமெரிக்கவுக்கு
வேலை தேடி சென்று அந்த நாட்டை வளப்படுத்தும் இந்தியர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
அவர்களில் சிலர் சட்ட்த்திற்கு புறம்பாகவும் தங்கியிருக்கிறார்கள்.
அப்படி
சுமார் 150 பேரை பிர்ட்டிஷ் கார்ர்கள் சுதந்திர போராட்ட காலத்தில் சுதந்திரத்திற்காக
போராடியவர்களை கணக்கில்லாமல் கூட்ஸ் பெட்டியில் அடைத்து அனுப்பியது போல் ஒரு சரியான
கழிவறை வசதி கூட இல்லாத விமானத்தில் சுமார் 24 மணி நேரம் பற்ற வைத்து அழைத்து வந்து
பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தரஸ் நகரில் கொட்டிச் சென்றுள்ளது, அதுவும் அவர்களை கை
விலங்கிட்டு அழைத்து வந்துள்ளது.
டிரம்ப்
இவற்றை எல்லாம் விட மிக ஆபத்தான ஒரு கருத்தை முன் வைத்துள்ளார்.
அவரை
எந்த மாதிரியான சர்வாதிகளின் பட்டியிலில் சேர்ப்பது என்பது தான் இப்போதைய பெரிய கேள்வி?
முட்டாள் சர்வாதிகாரியா ? மூர்க்க சர்வாதிகாரியா ?
பாலஸ்தீனின்
ஒரு பகுதியான காஸா பகுதியில் சுமார் 40 இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அங்குள்ள
95 சதவீத கட்டிடங்களை இஸ்ரேல் அழித்து விட்டது. சுமார் 20 ஆயிரம் குழந்த்தகள் உட்பட
50 ஆயிரம் மக்களை கொன்று குவித்து விட்டது.
இப்போது
போர் சற்று ஓய்ந்திருக்கிற நிலையில் இத்தனை கொடூரத்திற்கு நடுவிலும் தங்களது தாய் நிலத்தை
பாதுகாப்போம் என்று தீர்மாணம் எடுத்து மக்கள் அங்கு மீள் குடியேறி வருகிறார்கள்.
இஸ்ரேலின்
கடும் அச்சுறுத்தல்களுக்கு நடுவிலும் அவர்களது வாழ்க்கையின் போராட்டம் வீறு கொண்டு
நடை பெற்று வருகிறது. அவ்ர்களுக்கு உதவு வோர் பெரிதாக உதவி செய்வதாக கூறினாலும் அந்த
மக்கள் அனுபவிக்கிற கஸ்டங்களுக்கு அவை மிக சாதாரணமனவை – பாலஸ்தீனையும் பைத்துல் முகத்தஸையும்
பாதுகாக்கும் நோக்கில் அவர்கள் உயிரை துச்சமென மதித்து போராடி வருகிறார்கள். அதன் ஒரு
அம்சமாகவே அங்கு அவர்கள் குடியேறிவருகிறார்கள்.
தங்களது
தாய் மண்ணில் தங்கியிருக்க ஆசைப்படும் அவர்களது நியாய உணர்வை ஐக்கிய் நாடுகள் சபை ஒப்புக்
கொண்டுள்ளது.
அதிபர்
டிரம்ப் பொறுப்பேற்றுக் கொண்ட வுடன் எதோ பேட்டை ரவுடி போல காஸா நிலத்தை காலி செய்து
விட நான் முடிவு செய்திருக்கிறேன் என்று கூறுகிறார்
காஸா
மக்கள் மிகவும் கஸ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஜோர்டானும் எகிப்தும் அடைக்கலம் கொடுக்கும்
என்று அவரக்ளின் அனுமதியின்றி ஏதோ அவை தனது காலனிகளைப் போல அவர் பேசுகிறார்.
இந்த
உளறல்களை உலகம் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்கீறது என்று தெரியவில்லை.
இலங்கையில்
தமிழர்களை நான் இந்தியாவின் குடியமர்த்துவேன் என்று அவர் சொன்னால் இந்திய அரசு அதை
ஒப்புக் கொள்ளுமா ?
தன்னிடம்
பலம் இருப்பது போல காட்டிக் கொண்டு அவர் கோணல் மாணாலாக முகத்தை வைத்துக் கொண்டு அவர்
பேசும் சொற்கள் மிக அபாயகரமானவையாக இருக்கின்றன.
இதற்கடுத்து
நாளை சனிக்கிழமை 12 மணிக்குள் ஹமாஸ் அமைப்பிடம் இருக்கிற கைதிகளை விடுவிக்கா விட்டல்
இஸ்ரேல் ஹமாஸ் ஒப்பந்தம் முடிந்து விடும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.
இது
தான் மிகவும் அச்சத்தை தருகிறது.
ஏற்கெனவே
பாலஸ்தீன் மக்கள் இஸ்ரேலின் மிக கொடூர தாக்குதலில் உலகின் மிக பரிதாபத்திற்குரிய மக்களாக
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
டிரம்பின்
முரட்டுத்தனம் இப்போதைக்கு காஸாவையும் பாலஸ்தீனையும்
இனி என்ன செய்யப் போகிறது என்பது பெரும் பீதியாக உருவெடுத்திருக்கிறது.
டிரம்ப்
அப்பட்டமான நவீன் ஹிட்லராக நடந்து கொள்கிறார்.
இருபதாம்
நூற்றாண்டு சந்தித்த கொடும் சர்வாதிகாரி ஹிடலர்
அவரிடம்
ஏராளமான பலம் இருந்த்து. ஜெர்மனியின் அதிபராக உயர்ந்த அவர்
1940-ல் டென்மார்க்கையும், நார்வையும் கைப்பற்றினார் அடுத்த வருடம் பிரான்ஸ், பெல்ஜியம் ஹாலந்து, யூகோஸ்லாவியா, கிரீஸ் கைப்பற்றினார் கைப்பற்றிய பிராந்தியங்களில் யூத ஒழிப்பு முதல் நடவடிக்கையாக இருந்தது.
அவர்கள் மூன்று தலைமுறையாக அங்கு தங்கியிருப்பதை நிரூபிக்க வேண்டும் என்றார் . தங்களது குடியுரிமைய நிருபிக்க தவறுபவர்களை குடும்பம், குடும்பமாக லாரியில் ஏற்றி முகாம்களில் அடைத்தார்.
பாதிபேர் வரும் வழியிலேயே மூச்சு தினறி உயிரிழந்தனர் எஞ்சியவர்களை தினம்தோறும் எண்ணிக்கையில் அடிப்படையில்,கொதிக்கும் நீரில் தள்ளியும், வெறிநாய்களை கொண்டு கடிக்க வைத்தும் துப்பாக்கியால் சுட்டும், சிறிய அறையில் அடைத்து விஷ வாயுவை செலுத்தியும், விஷ ஊசி போட்டும் வித விதமாக கொன்று குவித்தனர் ஹிட்லர் சாகாக்கள்
அந்த யூதர்களுக்கு வரலாற்றில் அவர்களுக்கு கிடைத்திராத நிம்மதியை வழங்கியவர்கள் முஸ்லிம்கள். குறிப்பாக பாலஸ்தீனர்கள்
அத்தகைய
பாலஸ்தீனர்களை ஹிட்லரை விட கொடுமையாக அழுக்க டிரம்ப் திட்டமிடுகிறார்.
அவர்களுக்கு
நிம்மதியான வீடுகளை தரப்போகிறேன் என்று வஞ்சகமாக பேசுகிறார்.
நாங்கள்
தீயினால் சாம்பலாகியிருக்கிற கலிபோர்னிய மக்களுக்கு வாழ்வளிக்கிறோம். கலிபோர்னியாவை
எங்களுக்கு விலைக்கு தாருங்கள் என்று கேட்டால் டிரம்ப் சம்மதிப்பாரா ?
அவர்
காஸாவில் அல்லல் படும் மக்ளுக்கு கலிபோர்னியாவில் இடமளிப்பாரா ? என்று நியாயவான்கள்
கேட்கிறார்கள்.
ஆனால்
எந்த நியாயமான கேள்விக்கும் அவரிடம் பதில்லை.
(இன்னும்
சொல்லப் போனால் அவருடைய முன்னிலையில் இப்படி நியாயமான கேள்விகளை எழுப்ப கூட எவரும்
அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு பெயர் உலகின் பெரிய ஜனநாயக நாடு).
எனினும் இந்த நிமிடம் வரை ஒரு பெரிய வல்லரசின் தலைவராக
அவர்ர மதித்து மாற்று கோரிக்கை வைக்கும் தலைவர்களுடைய எந்த கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை.
அவர்
பிட்வாதமாகவே இருக்கிறார்.
நாம்
உள்ளம் உருக இந்த கணத்தில் அல்லாஹ்விடம் கையேந்துவோம் இறைவா ! இந்த வருடத்திற்கான தீர்வுகளில்
பாலஸதீனத்தின் விடுதலை பைத்துல் முகத்தஸீன் விடுதலை என்பதையும் அப்பகுதி மக்களின் நிம்மதியான
வாழ்க்கயையும் தீர்ப்பாக எழுதி விடுவாயாக!
உனது
அதிகாரத்தை நாங்கள் நம்பி இருக்கிறோம். உனது கைப்பிடியை நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.
திருக்குர்
ஆன் உத்தரவாதம் அளித்திருக்கிறது.
إِنَّ بَطْشَ
رَبِّكَ لَشَدِيدٌ
ஹிட்லர்கள் இடம் பெயர்கிறார்களே
தவிர முடிந்து போவதில்லை என்பதற்கு டிரம்பும் ஒரு சாட்சியாக இருக்கிறார்.
பழங்காலத்து ஹிடலாரான
பிர் அவ்னுக்கு நேர்ந்த கதியை திருக்குர் ஆன் பல இடங்களிலும் உரத்து பேசியிருக்கிறது.
وَقَالَ الْمَلَأُ
مِن قَوْمِ فِرْعَوْنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوْمَهُ لِيُفْسِدُوا فِي الْأَرْضِ
وَيَذَرَكَ وَآلِهَتَكَ ۚ قَالَ سَنُقَتِّلُ أَبْنَاءَهُمْ وَنَسْتَحْيِي
نِسَاءَهُمْ وَإِنَّا فَوْقَهُمْ قَاهِرُونَ (127) قَالَ مُوسَىٰ
لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا ۖ إِنَّ الْأَرْضَ لِلَّهِ
يُورِثُهَا مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ ۖ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ (128) قَالُوا
أُوذِينَا مِن قَبْلِ أَن تَأْتِيَنَا وَمِن بَعْدِ مَا جِئْتَنَا ۚ قَالَ عَسَىٰ
رَبُّكُمْ أَن يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِي الْأَرْضِ فَيَنظُرَ
كَيْفَ تَعْمَلُونَ
இதில் பிர் அவனை மட்டுமல்ல;
அவனுடைய சகாக்களின் பங்களிப்பையும் பற்றி குர் ஆன் குறிப்பிடுகிறது.
அன்றைய பிர் அவ்ன் அழிக்கப்பட்ட்தை
பேசுகிற போது பிர் அவ்னுடைய குடும்பத்தை நாம் நீரில் மூழ்கடித்தோம் என்று அல்லாஹ் சொல்லுவான்.
وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ (50)
பிர் அவ்னை குறிப்பிடாமல்
அவனது குடும்பத்தை குறிப்பிடக் காரணம் அவர்களே அவனை தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்கள்
என்பதாகும்
தீய சக்திகளுக்கு தூபம்
போடுபவர்களும் தண்டையிலிருந்து தப்ப முடியாது.
உலகை அச்சுறுத்திய ஹிட்லர்
தனது மனைவிக்கு விஷத்தை கொடுத்து தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
ஆப்கானிஸ்தானில் தலையிட்ட அமெரிக்காவுக்கு என்ன நிலை ஏற்பட்ட்து என்பதும் உலகம் அறிந்த செய்தி. அங்கிருந்து அவர்கள் ஓடி வர வேண்டியதாயிற்று
இறைவா இன்றைய ஹிட்லர்களுக்கு தகுந்த பாடம் புகட்டு! என்று நாம் பிரார்த்திப்போம்.
ஹிட்லர்களின் வரலாற்றை
மறக்கும் அளவுக்கு காலம் கடந்து விட வில்லை என்பதை ஆதிக்க சக்திகள் உணரட்டும்.
அல்லாஹ் அவர்களுக்கு அதை
உணர்த்தட்டும் .
நீதியும் நிம்மதியும்
தலைக்கட்ட்டும்
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment