வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 20, 2025

வெறுப்பை தவிர்ப்போம்.

ரமலான் வர இருக்கிறது. ரமலான் அன்பின் மாதம்

இந்த மாதத்தை இபாத்தினால் அழகுபடுத்தும் முயற்சியை மேற்கொள்ள  நம்மில் ஒவ்வொரு வரும் தயாராகி வருகிறோம். அது மட்டும் போதுமானது அல்ல; இன்சானிய்யத்தினாலும் இந்த மாத்தை நாம் அழகு படுத்த முயற்சிக்க வேண்டும்.அது பற்றி முன் கூட்டியே சிந்திக்க வெண்டும்.

இந்த மாத்த்தை   شهر المواساة  என்று நபி (ஸல்) அவர்கள்குறிப்பிட்டார்கள்.

 المواساة என்றால் நேசத்தை வெளிப்படுத்தல் என்று பொருள்

 முல்லா அலீ காரி (ரஹ்) இதற்கு விளக்கம் சொன்னார்கள்.

أي المساهمة والمشاركة في المعاش والرزق ،

மற்றவர்களிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்வது,  உணவு உள்ளிட்ட மற்ற வாழ்க்கை தேவைகளில் மற்றவர்களை இணைத்துக் கொள்ளூதல் என்று பொருள்.

 அதாவது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வழிகளில் குடும்பத்தோடும் சமூகத்தோடும் கூடிச் செயல்படுவது என்று பொருள்.

 எதிர் வரக்கூடிய ரமலானை  நமது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நல்லுறவையும் அன்பையும் பரிசுத்தமாக பரிமாறிக் கொள்ளவும் சமூக உறவுகளுக்கிடையே அமைதியும் நல்லிணக்கமும் பக்குவமாக பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்வோம்.

 அதற்கான திட்டங்களை இப்போதிருந்தே வகுத்துக் கொள்வோம். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 இந்த வகையில் முஹம்மது நபி (ஸல்_) அவர்களின் ஒரு அற்புதமான பொன்மொழியை இங்கு நினைவூட்டுகிறோம்.

 عَنْ أبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ t : أَنْ رَسُولَ اللهِ  قَالَلَا يحلُّ لمسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَياَلٍ يَلْتْقَيِاَنِ فَيُعْرِضُ هَذَا، وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بالسَّلَامِ

 இஸ்லாமிய குடும்ப மகிழ்ச்சி  மற்றும் சமூக  நல்லிணக்கத்திற்கு வழிகாட்டுகிற மிக அற்புதமான நபி மொழி இது. இன்றைய காலத்திற்கு மிக தேவையானதும் கூட.

 மக்களுக்கிடையே பொதுவாகவும் முஸ்லிம்களுக்கு இடையே குறிப்பாகவும் பிளவுகள் அதிகரித்து நாம் தனித்தனி தீவுகளாக வாழும் போக்கு அதிகரித்திருக்கிறது.

பெற்றோர்களும் பிள்ளைகளும் தனித்து வாழும் போக்கு அதிகரித்திருக்கீறது.

சகோதரர்கள் அன்னியர்களைப் போல ஒதுங்கி வாழ்கிறார்கள்.

நண்பர்கள் கூட தேவைக்கு மட்டுமே தொடர்பு கொள்ளப்படுகிறார்கள்

 இதில் இன்னொரு படி மேலே சென்று தற்காலத்தில் நாம் நேசிப்பவர்களின் எண்ணிக்கையை விட நாம் வெறுப்பவர்கள் அல்லது ஒதுக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

 நாம் பெற்றோரை  உற்றாரை நண்பர்களை பக்கத்து வீட்டினரை ஒதுக்கி வாழ்கிற நிலையும்  அப்படி ஒதுக்கி வாழ்வதை ஒருவகை கெளரவமாக கருதிக் கொள்கிற நிலையும் பெருகி யிருக்கிறது.   

 இந்த சூழலில் முஹம்மது நபி (ஸல்) அவரக்ளின் இந்த அற்புதமான வழிகாட்டுதல் நாம் நமது வாழ்க்கையை அழகாக்கி கொள்ள உதவக் கூடியதாகும்.

 நாம் தொடர்பு கொண்டிருக்க வேண்டிய மக்களிடம் வேண்டு மென்றே மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்க வேண்டாம்.

 கணவன்  மனைவி

தாய் தந்தை

பிள்ளைகள்

சகோதரர்கள்

மற்ற அவசியமான உறவுகள் என எவரிடமும் மூன்றூ நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்க வேண்டாம்.

 இதை ஹலால் அல்ல என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

 குறிப்பாக ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கிற போதாவது பேசிக் கொள்ள வேண்டும்.

يَلْتْقَيِاَنِ فَيُعْرِضُ هَذَا، وَيُعْرِضُ هَذَا

என்ற வாசகம் இதை சுட்டிக் காட்டுகிறது.

 அந்த நேரத்தில் கூட பேசிக் கொள்ளாமல் செல்வது அல்லது முகத்தை திருப்பிக் கொண்டு போவது சரியானதும் நாகரீகமும் அல்ல;

 அத்தகைய சந்தர்ப்பத்தில் சிந்திப்பதற்கு ஒரு செய்தியை இந்த ஹதீஸ் தருகிறது.

 இந்த நபிமொழிக்கு மேலே நமது கோப தாபங்களை நாம் தூக்கிக் கொண்டு அலைய வேண்டுமா என்பதே அது.

 இது மாதிர் சந்தர்ப்பங்களில் யார் முதலில் இறங்கிவருவது என்பது பெரிய கேள்வியாக இருக்கும். அவர் தானே முதலில் தொடங்கினார் அவர் ஆரம்பிக்கட்டும் என்றோ அவர் தானே பிரச்சனைக்கு காரணம் அவரே முதலில் தொடங்கட்டும் என்று காத்திருப்பதை விட நாம் முதலில் சலாம் சொல்லி தொடங்கி விட்டால் நாமே சிறந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்_ அவர்கள் சான்றளிக்கிறார்கள்.

 பெருமானாரின் சான்றை விட இந்த உலகில் அதிக மதிப்பிற்குரிய டாக்டரேட் பட்டம் வேறெதாவது இருக்கிறதா ?

 தம்பி ஹுசைன் ரலி அவர்களிடம் ஒரு கோபத்தில் மூன்று நாட்கள் பேசாமல் இருந்த ஹஸன் ரலி இறங்கி வந்து தம்பியின் தலையில் குனிந்து முத்தமிட்டு  பேசினார்.  

 அண்ணன் ஹஸன் ரலி அவரக்ளுக்கு அந்த பெருமை கிடைக்கட்டும் என்று காத்திருந்ததாக  ஹுசைன் ரலி. கூறினார்.   

 فعن أبي الحسن المدائني قال: “جرى بين الحسن بن علي وأخيه الحسين كلام حتى تهاجرا، فلما أتى على الحسن ثلاثة أيام من هجر أخيه فأقبل إلى الحسين وهو جالس، فأكب على رأسه فقبله، فلما جلس الحسن قال له الحسين: إن الذي منعني من ابتدائك والقيام إليك أنك أحق بالفضل مني، فكرهت أن أنازعك ما أنت أحق به

ஒரு சண்டைக்குப் பிறகு எத்தகைய உன்னதமான உறவு செழுமைப்படுகிறது பாருங்கள்!

நமது ஊடல்களை ஆழமான நேசமாக மாற்றிக் கொள்ள பெருமானார் (ஸல்) அவர்க்ள் செய்த ஏற்பாடு இது.

 அருமையானவர்களே

 இந்த ஹதீஸ் மனித உணர்வின் மிகச் சிக்கலான விவகாரமான வெறுப்புணர்வை தீர்த்துக் கொள்ள மிக எளிமையான சிறப்பான வடிகாலை தருகிறது.

 ஆழ்ந்து யோசிக்க வேண்டிய  செய்தி இது.

 நாம் ஒருவரை வெறுக்கிறோம்  என்றால் நிச்சயம் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.

அவர் நம்மை அவமரியாதை செய்திருப்பார். அல்லது மதிக்க தவறியிருப்பார்.  

அல்லது நமக்கு அநீதியிழைத்திருப்பார்.

அல்லது நமக்கு எதிர் அணியில் பங்கு பெற்றிருப்பார்.  

அப்படியும் இல்லை எனில் அவருடைய கெட்ட குணம் நம்மை வெறுக்க வைத்திருக்கும்.

 இந்த காரணங்களால் நம்முடைய உணர்வு புண்படுகிற போது மார்க்கம் அதை ஏற்றுக் கொள்கிறது. அதற்காக அவரை வெறுத்து ஒதுக்கி வைக்க அனுமதிக்கிறது.

 சில கட்டங்களில் வெறுத்து ஒதுக்கி வைப்பதை கட்டாயம் என்கிறது.

 மனைவி தவறான போக்கில் இருந்தால் அவளை திருத்த படுக்கையில் ஒதுக்கி வைக்குமாறு குர் ஆன் உத்தரவிட்டுள்ளது.

இந்த வெறுப்பை கட்டாயம் என்ற அறிஞரகள் வகைப்படுத்துகிறார்கள்.

  وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ (النساء:34)،

 அவளை பொது இடத்தில் அவமதிக்கவோ அடிக்கவோ கூடாது என்று கூறிவிட்டு படுக்கையில் வெறுப்பை வெளிப்படுத்த கூறுகிறது.

 வழிதவறி நடக்கிற கணவனையும் பிள்ளைகளையும் சீர்திருத்துவதற்காக வெறுப்பை வெளிப்படுத்த மார்க்கம் அனுமதிக்கிறது. அது அல்லாஹ்வுக்காக கோப்ப்படுவது ஆகும்.

 وفي حديث أبي داودمن أحب لله، وأبغض لله، وأعطى لله، ومنع لله، فقد استكمل الإيمان.

 தீமைகள் விவகரத்தில் இந்த வெறுப்பை வெளிப்படுத்த வில்லையானால் – காசு – உறவு – அந்தஸ்த்து ஆகியவற்றை பெரிதாக நினைத்து அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் அதன் தீய விளைவுகளை எதிர் நோக்கி காத்திருக்க வேண்டியது தான் என்று குர் ஆன் எச்சரிக்கிறது.

 قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُواْ حَتَّى يَأْتِيَ اللّهُ بِأَمْرِهِ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ {التوبة:24}.

 கடும் தவறு செய்பவர்கள் திருந்தும் வரை இதற்கான கால அளவு நீட்டிக்கப்படும்.

 தபூக் யுத்தத்திற்கு செல்லாமல் பின் தங்கிவிட்ட 3 சஹாபாக்கள் பல  50 நாட்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அவர்களுடைய சலாம்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று உத்தரவிடப் பட்டது. மனைவியர் விலகி இருக்குமாறும் சொல்லப்பட்டது.

 தமது தவறை உணர்ந்து பரிசுத்தமான தவ்பாவை அவர்கள் வெளிப்படுத்திய போது அவர்கள் மீதான ஒதுக்குதல் நடவடிக்கை கை விடப் பட்டது.    

 وَعَلَى الثَّلاَثَةِ الَّذِينَ خُلِّفُواْ حَتَّى إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الأَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ أَنفُسُهُمْ وَظَنُّواْ أَن لاَّ مَلْجَأَ مِنَ اللّهِ إِلاَّ إِلَيْهِ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوبُواْ إِنَّ اللّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ (التوبة: 118).

 50 நாட்கள் ஒதுக்கி அவர்கள் ஒதுக்கி  வைக்கப்பட்டிருந்தாரக்ள் என்று தப்ஸீர்கள் கூறுகின்றன.

 وقد قاطع النبيُّ  والصحابةُ الكرامُ الثلاثةَ الذين خلفوا في غزوة تبوك، خمسين يوماً وليلة حتى نزلت توبتهم من فوق سبع سموات، بعد أن ضاقت عليهم الأرض بما رحبت، وضاقت عليهم أنفسهم

 இஸ்லாமிய நம்பிக்கைகளுக் புறம்பான கருத்துக்களை பேசுவோ, இஸ்லாமின் நடைமுறைகளை கேலி செய்வோர் அதை நிராகரித்துப் பேசுவோரை விட்டு விலகி நிற்குமாறு திருக்குர் வலியுறுத்துகிறது. இத்தகையையோரை வெறுத்து ஒதுக்கியே ஆகவேண்டும்.

 قال الله تعالى: {وَالرُّجْزَ فَاهْجُرْ} [المدثر: 5]،

 وقال سبحانه: {وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيلًا} [المزمل: 10]،

 وقال تعالى: {وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ} [الأنعام: 68]،

  وقال تعالى: {وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ} [النساء: 140

 நம்முடைய தமிழகத்தில் சில அரசியல் தலைவர்களும் சில இன மொழி இயக்கவாதிகளும் இஸ்லாமின் அடையாளங்களையும் விழுமியங்களையும் குறை பேசிக் கொண்டிருக்கிற போது அவர்களுடன் பகுத்தறிவு அல்லது இன வாத கோட்பாட்டில் மயங்கி ஒத்துழைப்பது கூடாது. அத்தகையோரை ஒதுக்கி வெறுப்பதும் அவசியமாகும்.    

 இதே போலவே மார்க்கத்தில் புதிய புதிய கருத்துக்களை சொல்லி புது இயக்கங்களை காண்பவர்களையும் சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்துகிறவர்க்லையும்  (அஹ்லுல் பித்இ வல் பஸாத்)  அவர்கள் தவ்பா செய்து மீளும் வரை  வெறுத்து ஒதுக்கி வைக்க வேண்டும்.

 قال “ابن عبد البر”: أجمعوا على أنه لا يجوز الهجران فوق ثلاث إلا لمن خاف من مكالمته ما يفسد عليه دينه، أو يدخل منه على نفسه، أو دنياه مضرة، فإن كان كذلك جاز، ورب هجر جميل خير من مخالطة مؤذية،

 வெறுத்து ஒதுக்குதல் என்பது இரண்டு வகை எந்த தொடர்பையும் விட்டுவிடுவது, சலாமிற்கு மட்டும் படில் சொல்லி விட்டு ஒதுங்கிக் கொள்வது,

 இதில் பித் அத் வாதிகளிடம் சலாம் கூட சொல்ல வேண்டாம் என்று அறிஞர்கள் அறிவுறுத்துகீறார்கள்.

 குற்றவாளிகளை முற்றிலுமாக ஒதுக்குங்கள் என்று குர் ஆன் கூறுகிறது.

 وقوله تعالىوَالرُّجْزَ فَاهْجُرْ (المدثر:5حث على المفارقة بالوجوه كلها 

அந்த ஒதுக்குதலை ச்ச்சரவானதாக ஆக்காமல் நாகரீகமாக அமைத்துக் கொள்ள குர் ஆன் அறிவுறுத்துகிறது.

وَاهْجُرْهُمْ هَجْراً جَمِيلاً 

 தீமையான பாவமான காரியங்களுக்காக ஒதுக்குவதை தவிர மற்ற காரணங்களுக்காக 3 நாட்களுக்கு மேல் வெறுப்புக் காட்ட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள்

 இதிலும் மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீமைகள் தவிர்த்து மேலே சொன்ன காரணங்களுக்காக 3 நாட்கள் ஒதுங்கியிருக்க அனுமதித்தார்கள்.

 இந்த எதார்த்த்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 ஒதுங்கி நிற்பதற்கு என்னதான் காரணம் இருந்தாலும் நமது வாழ்க்கை ஒரு எல்லைக்கு உட்பட்டது தான்.

இளைமை காலத்தில் மனைவியிடமிருந்து விலகி இருந்து விட்டு முதுமையில் உறவு கொண்டாடுவதில் என்ன பயன் இருக்கிறது. ?

 அதே போல ஆரோக்கியமும் வசதியும் இருக்கிற போது உறவுகளை சேர்ந்து வாழாமல் இருந்து விட்டு நோய் வந்த பிறகு அல்லது சிக்கல்கள் ஏற்பட்ட பிறகு சேர்ந்து வாழ்வதில் என்ன பயன் இருக்கிறது?

 ஒரு சஹர் நேர உணவையோ – ஒரு பெருநாளின் மக்ழ்ச்சியையோ சொந்தங்களோடு பகிராமல் அதில் என்ன அர்த்தம் இருக்கப் போகிறது ?

 இதை அனைத்து தரப்பாரும் உணர்ந்த் கொள்ள மூன்று நாட்கள் போதும் என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல் அவர்கள்.

 வாழ்க்கையில் வெறுப்பையும் ஒதுக்குதலையும் வெளிப்படுத்த அவ்வளவு தான் டைம் இருக்கிறது.

 சில தம்பதிகளை சகராத்து நேரத்தில் பேச வைப்பார்கள். அது என்ன நன்மையை தந்து விடப் போகிறது ?

 அத்தா மவ்த்து வரைக்கும் அல்லது அம்மா மவத்தாகிற வரைக்கும் சகோதரர்கள் சந்தித்துக் கொள்ளாமல் இழுத்தடித்திருப்பார்கள் எனில் அந்த பெற்றோருக்கு என்ன சந்தோசத்தை அவர்கள் கொடுத்திருப்பார்கள்.

 திருக்குர் ஆன் அருமையாக வாழ்க்கையின் அர்தத்தை சொல்லுகிறது.

 திருக்குர் ஆனின் மிகச் சிறிய அத்தியாயம் வாழ்க்கையின் மிகப் பெரிய த்த்துவத்தை சொல்லித்தரக் கூடியதாகும்.

  والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر

  காலத்தை புரிந்து கொள்ளாதவர்கள் நஷ்டமடைவார்கள். இறைவனை நம்பி நற் செயல் செய்து பரஸ்பரம் சத்தியத்தையும் பொறுமையையும் உபதேசித்துக் கொள்வோர் வெற்றியடைவார்கள். என்பது இதன் கருத்து.

 காலத்தை புரிந்து கொள்ளூதல் என்றால் காலம் எவ்வளவு வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்ப்பதாகும்.

 இரண்டு சஹாபாக்கள் பேசிக் கொண்டு நிற்பார்கள். அவர்களுக்கிடையே இந்த அத்தியாயத்தை யாராவது ஓதிக் காட்டி விட்டால் உடனே காலத்தின் அருமை கருதி  பேச்சை முடித்துக் கொண்டு அவர்கள் விலகிச் சென்று விடுவார்கள் என ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.

ஒரு ஆன்மீக அறிஞர்

 நான் ஐஸ் விற்பவரை பார்த்தேன் எனக்கு வல் அஸ்ரு அத்தியாம நினைவுக்கு வந்த்து  என்று சொன்னார்.

 ஐஸ் வியாபாரி தனது மொத்த மூலதனத்தையும் தண்ணீரில் முதலீடு செய்திருக்கிறார். அவர் கவனமாக இல்லாவிட்டால் அவரது முதலீடு முழுவதும் கரைந்து போய்விடும்.

 அது போல நமக்கு கிடைத்திருக்கும் காலத்தை மிக கவனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லை எனில் ஐஸ் கட்டி கரைவது போல நாம் உணர்வதற்கு முன்னதாக அது உறுகிப் போய்விடும்.

 நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கைய பற்றி மிக அழுத்தமான புரிதலை இந்த ஏற்படுத்துகிறது.

 கிடைத்திருப்பது கொஞ்ச நாள். வீண் களியாட்டங்களில்  நாம் அதனை வீணடித்து விடக் கூடாது என்பது போலவே  பொருத்தமற்ற கோப தாபங்களிலும் அதை வீணடித்து விடக் கூடாது.

 இந்த அத்தியாயத்தில் உள்ள   وتواصوا بالحق وتواصوا بالصبر என்ற வாசகம் மிக முக்கியமாக புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.

 பரஸ்பரம் சத்தியத்தையும் பொறுமையையையும் உபதேசித்துக் கொண்டால் வாழ்க்கையில் நஷ்டமடையாமல் வெற்றி பெறலாம் என்று இந்த வாசகம் கூறுகிறது.

 இந்த சத்தியம் பொறுமை என்ற இரண்டு குணஙகளுக்கு அப்படி என்ன முக்கியத்துவம் அவற்றுகிடையில் என்ன தொடர்பு என்பது ஆழமாக சிந்திப்பதற்குரியதாகும்.

 கிடைத்திருக்கிற வாழ்க்கையை  சந்தோஷமாகவும் வெற்றிகரமாகவும் அமைத்துக் கொள்வதற்கு மிக எதார்த்தமான இரண்டு வழிமுறைகளை இது காட்டுகிறது.

 தனி மனித   முன்னேற்றம் பற்றி பேசுகிற்  அறிஞர்கள், கம்பெணிகளின் வளர்ச்சிக்கான வழிகளை காட்டுவோர் இந்த வாசகத்தை மிக சிறப்பாக கவனிக்கிறார்கள்.

 தனிப்பட்ட வாழ்விலோ சமூக வாழ்விலோ சச்சரவுகள் ஏற்படுவது சகஜம். அந்த சச்சரவுகளை அப்படியே தொடர விட்டால் வாழ்க்கை எந்த பயனும் இல்லை. நிம்மதியும் மகிழ்ச்சியும் பறிபோகவே செய்யும். பிறகு வாழ்க்க்கயில் வெற்றிக்கு என்ன அர்த்தம் இருக்கிறது.

 இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு வழிகள் இருக்கின்றன.

 ஒன்று யார் பக்கம் நியாயம் யார் பக்கம் அநியாயம் என்பதை உடைத்துப் பேசி – நீதியை பராமரிக்குமாறு அறிவுரை கூற வேண்டும். அதை ஏற்று நடக்கவும் வேண்டும். இதில் நீதியை ஏற்றுக் கொள்ள தயாரக இருந்தால் நிச்சயம் ச்ச்சரவு நீங்கி சமாதானம் ஏற்படும்.

 இன்னொரு முக்கியமான வழி

 பொதுவாக நீதியை நிலை நாட்டும் சந்தர்ப்பம் என்பது சில நேரங்களில் சிக்கலானதாக இருக்கும். யாராவது ஒருவர் மிக பிடிவாதமாக இருந்து விடுவார்கள். அல்லது கால சூழ்நிலை அதில் ஏதாவது தடைகளை வைத்திருக்கும்.

 அப்படிப்பட்ட சூழலில் இரண்டு தரப்பும் அல்லது இரண்டில் ஒரு தரப்பு பொறுமையை கடைபிடிப்பதே பிரச்சினைக்கு தீர்வை தரும்.

 கோப தாபங்களை பிடித்துக் கொண்டு தொங்கினால் நஷ்டம் தான். என்பதை  உணர்ந்து பொறுமையை கட்ட பிடித்தால் நிச்சயமாக தோல்வியிலிருந்து ஈடேறலாம். துக்கத்திலிலிந்தும் சச்சரவுகளில் இருந்தும் வெளியேறாலாம்.   

 இந்த இரண்டாவது வழி இரண்டு தரப்பில் ஒரு தரப்புக்கு மிக கடினமான காரியமாகத்தான் இருக்கும் ./

 ஆனால் நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்க்ள் சொல்கிறார்கள். அந்த கடினமான பணியை முன்னெடுத்துச் செல்பவரே சிறந்தவர் என்கிறார்கள்.

 நான் மேலே எடுத்துச் சொன்ன ஹழ்ரத் ஹஸன் ரலி அவர்களின் வரலாற்றை மீண்டும் எண்ணிப்பாருங்கள்

 இது போல பிரச்சினை ஏற்படுகிற இரண்டு தரப்பில் ஏதாவது ஒரு தரப்பில் நாம் இருக்கிற சூழ்நிலை வரும் எனில் பெருமானாரின் நற்சான்றிதழை சம்பாத்திதுக் கொள்பவராக நாம் இருக்க முயற்சிப்போம்.

 இந்த மனோபாவம் வர வேண்டும் என்றால் நம்முடைய வெறுப்புணர்வின் வீரியத்தை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

 பிறர் மீது நேசத்தை வெளிப்படுத்தும் வழக்கத்தை நாம் பழக்கிக் கொண்டாக வேண்டும்.

 நபி (ஸ்ல) அவர்கள் அருமையாக சொன்னார்கள்.

 قال النبي والله لا تدخلوا الجنة حتى تؤمنوا، ولا تؤمنوا حتى تحابوا، أفلا أخبركم بشيء إذا فعلتموه تحاببتم، أفشوا السلام بينكم 

 சிரித்துக் கொண்டு சலாம் சொல்வது போல நடபுறவை வளர்க்க சிறந்த வழி வேறில்லை.

 وخيرهما الذي يبدأ بالسلام   என்பதற்கு விளக்கம் சொல்லும் அறிஞர்கள்  கோபதாபத்தை முறித்துக் கொள்வதற்கு குறைந்த படசம் சலாம் சொல்லும் வழக்கத்தை கடைபிடித்தால் போதுமானது என்கிறார்கள்.

 وقال “ابن حجر في الفتح:” قال أكثر العلماء: “تزول الهجرة بمجرد السلام ورده”،

 இமாம் அஹ்மது ரஹ் அவர்க்ள் வெறுப்பதை விட்டு விட வேண்டும் என்றால் முன்பிருந்த நிலைக்கு திரும்புவது என்கிறார்கள்.

 وقال أحمد: “لا يبرأ من الهجرة إلا بعوده إلى الحال التي كان عليها ألاً 

 எனினும் சலாம் தொடர் கிற போது மனித உணர்வுகளை சன்னம் சன்னமாக அது பக்குவப்படுத்தி விடும்.

 வாழ்க்கையில் மிக குற்றவாளிகளிடம் மட்டுமே வெறுப்பை தொடர வேண்டும். அது தவிர உள்ள அனைத்து விவகாரங்களிலும் வெறுப்பை தவிர்த்து நேசத்தை வளர்ப்பதற்கே முயற்சி செய்ய வேண்டும்.

அது வே வெற்றி கரமான வாழ்க்கை .

புனித ரமாலான் வர இருக்கிறது. அது அன்புப் பரிமாற்றத்திற்கான மாதம் என பெருமானார் (ஸ்ல) அவர்கள் கூறினார்கள்.

வெறுப்பு என்பதும் நெருப்பு போன்றது தான் தொடக்கத்திலேயே அதை அணைக்க நினத்தால் ப்பூ என்று வாயால் ஊதி அனைத்து விடலாம். அதை வளர விட்டு விட்டால் வெறும் காற்று கூட அதை பெரிதாக்கி விடும். எனவே 

நமது உறவுகளில் எங்காவது வெறுப்பின் எச்சங்கள் மிச்சமிருக்குமானால் இந்த ரமலானின் பரக்கத்தால் அதை அகற்றி மகிழ்ச்சியை மீட்டெடுக்க நாம் தயாராவோம்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

No comments:

Post a Comment