வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 27, 2025

மகத்தான மாதம் ரமளான்

ரமலான் இன்று அல்லது நாளை பிறந்து விடும் இன்ஷா அல்லாஹ்

பிறை அறிவிப்பை நமது தலைமைக் காஜி அறிவிப்பார். அதை ஜமாஅத்துல் உலமா சபைகள் உடனடியாக கொண்டு வந்து நம்மிடம் சேர்த்து விடும். சுன்னத் ஜமாத்தை சேர்ந்த பொதுமக்கள் அதை மட்டுமே பொருட்படுத்த வேண்டும். 

தாங்கள் பார்த்த பிறையை பற்றி செய்தியை தலைமை காஜிக்கு தெரிவிப்பது மட்டுமே மக்களின் கடமையாகும். அத்த எற்றுக் கொள்ளவும் மறுக்கவும் காஜிக்கு அதிகாரம் உண்டு. அவரிடம் அதற்கான வழிகாட்டு நெறுமுறைகள் சிறப்பாகவே இருக்கின்றன. அவர் ஒரு சாராரின் கூற்றை ஏற்க மறுக்கிறார்  என்றால் நிச்சயம் அதற்கு உரிய காரணம் இருக்கும் ஆகவே காஜி பிறை அறிவிப்பு செய்த்தற்கு பிற்கு அல்லது அதற்கு முன்னதாக அவரது அறிவிப்புக்கு மாற்றமான கருத்துக்கள் வீடியோ வழியாக அல்லது அறிக்கை மூலமாக  பிரச்சாரம் செய்யப்படுமானால் அவை  எதையும் சட்டை செய்ய வேண்டாம். அவை, குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டே உண்மை போல பரப்பப்படும் அங்கீகாரமற்ற தகவல்கள் ஆகும்.

குழப்பம் செய்வதற்கென்றே உருவான அமைப்புகள் புனித மிக்க நாட்களை களங்கப்படுத்த எந்த வகையிலும் நாம் இடம் கொடுத்துவிட வேண்டாம்.  

புனிதம் மிக்க ரமலானை அதன் அருமையை உணர்ந்து பயன்படுத்திக் கொள்வோம்.

ரமான் ஒரு மகத்தான மாதமாகும்.

சல்மான் பார்ஸி ரலி அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ரமலானை பல்வேறு வார்த்தைகளில் சிறப்பித்துக் கூறினார்கள்..

عن سلمان الفارسي رضي الله عنه أنه قال : ( خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال : أيها الناس قد أظلكم شهر عظيم مبارك ، شهر فيه ليلة خير من ألف شهر ، جعل الله صيامه فريضة ، وقيام ليله تطوعاً ، من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدّى سبعين فريضة فيما سواه ، وهو شهر أوله رحمة وأوسطه مغفرة ، وآخره عتق من النار رواه ابن خزيمة

இதில் கவனிக்க வேண்டியது,

ரமலான் மாதத்தை பெருமானார் شهر عظيم என்று கூறினார்கள்.

அல்லாஹ் தன்னை அழீம் என்று வர்ணிக்கிறான்.

وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ (255

ஆயத்துல் குர்ஸீ வசனம் அல்லாவின் பிரம்மாண்ட குணங்களை விவரிக்கும் வசனமாகு, அதை நிறைவு செய்யும் போது அழீம் என்ற சொல்லை அல்லாஹ் பிரயோக்கிக்கிறான்.

 அல்லாஹ்வுக்கு தூக்கம் என்பதே கிடையாது என்பதை யோசித்துப் பார்த்தால் அல்லாஹ்வின் மகத்துவம் புரியும்.

 திருக்குர் ஆனில் முஹம்மது நபியை அழீம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

وإنك لعلى خلق عظيم

பெருமானாரின் குணத்தின் எளிமையின் பிரம்மாண்டத்தை ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்

 யார் அழைத்தாலும் இதோ இருக்கிறேன் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் பதிலளிப்பார்கள்.

 عن عائشة في صحيح مسلم أصح الأقوالوسئلت أيضا عن خلقه عليه السلام ; فقرأت قد أفلح المؤمنون إلى عشر آيات ، وقالت : ما كان أحد أحسن خلقا من رسول الله صلى الله عليه وسلم ، ما دعاه أحد من الصحابة ولا من أهل بيته إلا قال لبيك 

குர் ஆனை பற்றி அல்லாஹ் அழீம் என்று கூறுகிறான்

 وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ (87

 மக்காவின் மக்கள் சபா மலையை தங்கமாக மாற்றித்தருமாறு பெருமானரிடம் கேட்டனர். அதற்கு அல்லாஹ் பதிலளித்தான். இந்தக் குர் ஆன் அவர்களுக்கு போதாதா ?

 أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ يُتْلَىٰ عَلَيْهِمْ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَرَحْمَةً وَذِكْرَىٰ لِقَوْمٍۢ يُؤْمِنُونَ

 யோசித்துப் பாருங்கள் சஃபா மலை தங்கமாக மாறி இருந்தால் எத்தனை நாளைக்கு பயன்பட்டிருக்கும்?

ஆனால் திருக்குர் ஆன் இன்று வரை மக்காவை நோக்கி மக்களை அழைத்து வந்து கொண்டிருக்கிறது.

நேற்றைய ஒரு தகவல் சொல்கிறது.

உலகில் நடைபெறுகிற விமானப் பயணங்களில்                                     அதிகமானவை சவூதி ஏர்லைன்ஸ் விமான்ங்கள் மூலம் நடைபெறுகின்றன்.

 அதற்கு முக்கிய காரணம். உலகின் எடுத்திசையிலிருந்தும் ஹஜ் உம்ரா செய்வதற்கு வருகிற கோடிக்கணக்கான மக்கள் பெரும்பாலும் சவூதி ஏர்லைன் விமான்ங்களையே பயன்படுத்துகிறார்கள்.

 உலக மக்களை மக்காவை நோக்கி இழுத்து வருவதில் முக்கிய பங்கு வகிப்பது குர் ஆன் ஆகும்.

 இது திருக்குர் ஆனின் மகத்துவத்திற்கு ஒரு சாட்சியாகும்.

 இந்த வரிசையில் தான் ரமலான் மாதமும் அழீம் மகத்தானது என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 இந்த அளவு ரமலான் மகத்துவமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 அதனால் தான் ரமாலானி அகமிய ஆற்றலை புரிந்து கொண்ட பெருமக்கள் ரம்லான் மாதம் என்றவுடன் அதற்கு அரச மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.   

 முஜத்தின் அல்பஸானி (ரஹ்) ரமலானில் கிடைக்கும் அல்லாஹ்வின் அருளின் பிரம்மாண்ட்த்தை எடுத்துச் சொல்கிறார்.

 ரமலானின் பரகத் கடல் போன்றது, மற்ற மாதங்களின் பரக்கத் அதில் ஒரு துளி அளவுக்குத் தான். என்கிறார்.

 கடல் எவ்வளவு பிரம்மாண்டமானது? அதில் டன் கணக்கான குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். ஆனால் அவற்றை அது ஜீரணித்து விடுகிறது. கடல் கெட்டுப் போவதில்லை. அது போல ரமலான் எவ்வளவு பெரிய பாவங்களையும் ஜீரணித்து மக்களை சுத்தப்படுகிறது.

 இந்த மாத்த்தில் ஒருவர் சுத்தமாக வில்லை எனில் அவன் பெரிய துரதிஷ்ட சாலிதான்.

 நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மிம்பர் படி மீது ஏறும் போது ஆமீன் சொன்னார்கள். நபித்தோழர்கள் காரணம் கேட்ட போது,, ரமலானின் நன்மையை பெற்றுக் கொள்ளாதவரை ஜிப்ரயீல் அலை அவர்கள் சபித்தார் அதற்கு நான் ஆமீன் சொன்னேன் என்றார்கள்.

 எனவே இந்த மாத்தின் மகத்துவத்தைல் கரைந்து விட நம்மில் ஒவ்வொருவரும் முயல வேண்டும்.

இதன் மரியாதையை உணர்ந்து முடிந்த வரை நற்செயல்களை செய்து விட வேண்டும்.  

 ரமலானின் மகத்துவம் என்ன ?

 ரமலானில் அல்லாஹ்வின் ரஹ்மத் பொங்கிப் பிரவாக மெடுக்கிறது.

அதனால் மக்களில் பெரும்பாலோரை அவன் சொர்க்கத்திற்குரியவர்களாக்குகிறான். நரகிலிருந்து விடுதலை செய்து விடுகிறான்.

 ஒரு நாட்டின் ஆட்சியாளருக்கு ஒரு காரியம் பிரியமானதாகி விடுமானால் அதற்கான எல்லா வசதி வாய்ப்புக்களையும் அவர் ஏற்படுத்தி தருவார் அல்லவா ?

 உதாரணத்திற்கு நம்முடைய ஆட்சியாளர்கள் – பந்தே பாரத் என்ற ரயிலை அறிமுகம் செய்தார்கள். அதை தங்களுடைய சாதனையாக காட்டிக் கொண்டார்கள்.

 அதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் ? எப்போதும் அது முதல் பிளாட்பார்மில் தான் நிற்கும். டைமிங்க் மிக சரியாக இருக்கும். அது போல அந்த ரயிலை மட்டும் அதிகப்படியாக சுத்தம் செய்கிறார்கள். அந்த ரயிலுக்காக மற்ற ரயில்களை தாமதப்படுத்துகிறார்கள். அல்லது ஓரங்கட்டுகிறார்கள்.  

 அல்லாஹ் ரமலானை தனது நல்லடியார்களுக்கு அருள் செய்வதற்கு என்று தீர்மாணித்து விட்ட பிறகு அதற்கான வழிவகைகள் அனைத்தையும் இலேசாக்குகிறான்.

 ரமலானின் சிறப்பில் சொல்லப் பட்ட செய்திகளை கவனித்துப் பாருங்கள்

 1.   ஒரு பர்ளுக்கு எழுபது மடங்கு நற்கூலி

 2.   நோன்பு பற்றி ஒரு ஹதிஸ்  பைஹகீயில் வருகிறது.

 நோன்பாளியின் வாய் வாடை கஸ்தூரியை விட மணமானது.

நோன்பாளிக்காக மலக்குகள் துஆ செய்கிறார்கள்.

களைப்படைந்திருக்கிற அடியார்களுக்காக சொர்க்கம் தயார் செய்யப்படுகிறது.

கடைசி இரவில் நிச்சயமாக மன்னிப்பு கிடைத்து விடும்.

  عن جابر بن عبد الله قال: قال رسول الله صلى الله عليه وسلمأعطيت أمتي في شهر رمضان خمساً لم يعطهن نبي قبلي: أما واحدة فإذا كان أول ليلة من شهر رمضان نظر الله تعالى إليهم، ومن نظر الله إليه لم يعذبه أبداً، وأما الثانية: فإن خلوف أفواههم حين يمسون أطيب عند الله من ريح المسك، وأما الثالثة: فإن الملائكة تستغفر لهم في كل يوم وليلة، وأما الرابعة: فإن الله تعالى يأمر جنته فيقول لها: استعدي وتزيني لعبادي، أوشكوا أن يستريحوا من تعب الدنيا إلى داري وكرامتي، وأما الخامسة: فإنه إذا كان آخر ليلة غفر لهم جميعاً، فقال رجل من القوم: أهي ليلة القدر؟ قال: لا، ألم تر إلى العمال يعملون فإذا فرغوا من أعمالهم وفوا أجورهم

 3.   நோன்பு திறக்கும் நேர துஆ அங்கீகரிக்கப்படும்.

 ثلاثةٌ لا تُردُّ دعوتُهم الصَّائمُ حتَّى يُفطرَ والإمامُ العادلُ ودعوةُ المظلومِ

الراويأبو هريرة | المصدرالترغيب والترهيب 

 தொழிலாளியின் வியர்வை உலர்வதற்குள் அவருக்குரிய கூலியை கொடுத்து விட வேண்டும் என்று வலியுறுத்துகிற மார்க்கம் நம்முடைய மார்க்கம். அல்லாஹ் தனக்கா 14 மணி நேரம் பட்டினி கிடந்த மனிதனின் துஆக்களை அங்கீகரிக்க காத்திருக்கிற நேரம் நோன்பு திறக்கிற நேரம்

 4.   சைத்தானுக்கு விலங்கு,

عنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ صُفِّدَتْ الشَّيَاطِينُ وَمَرَدَةُ الْجِنِّ وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ وَفُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ وَيُنَادِي مُنَادٍ يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ وَلِلَّهِ عُتَقَاءُ مِنْ النَّارِ وَذَلكَ كُلُّ لَيْلَةٍ – ترمذي

ரமலானில் சைத்தானிய தூண்டுதலில் தீமைகள் நடப்பதில்லை. மனிதர்களின் மனோ இச்சை காரணமாகவே தீமைகள் நிகழ்கின்றன. ரமலானில் தீய மனிதன் தான் மிக கெட்ட சைத்தான். சைத்தான் வேலை நிறுத்தம் செய்கிற நாட்களில் கூட தீமைகளை செய்கிற சைத்தான்.

 5.   லைலத்துல் கத்ரு இரவு ரமலானின் மகத்துவத்தின் பெரும் அடையாளமாகும்.

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறுவதே லைலத்துல் கத்ரின் தத்துவம்  

 ஒரு நேரத்தில் செய்கிற  நற்செயலில் பல்லாயிரம் வருட்த்தின் பலன்கிடைக்கிறது. .

 அது நமது நம்பிக்கைக்கு ஏற்ப கிடைக்கிறது.

நமது ஈமான் வலிமையாக இருதால் அன்று இரவில் கிடைக்கும் 10 ஆயிரம் வருடத்தின் பலனும்

 அல்லாஹ் ஆயிரம் என்று சொன்னது, அரபிகளுக்கு ஆயிரம் வரை தான் எண்ணிக்கை தெரியும் என்பதால் தான் இல்ல எனில் இலடம் கோடி என்று அதன் சிறப்பை அல்லாஹ் இன்னும் அதிகரித்திருப்பான் என்று அறீஞர்கள் கூறுகிறார்கள்.. எனவே உள்ளத்தூய்மையோடும் மரியாதை உணர்வோடும் லைலத்து கத்ர் இரவில் அமல் செய்பவர்கள், பன்னூறு ஆண்டுகள் நற்செயல்கள் செய்த பலனை பெறுவார்கள். இதுவும் அல்லாஹ் தனது அருளை பொழிய  திட்டமிட்ட ஏற்பாடுகளில் ஒன்றாகும்

 6.   ஒரு வாய் தண்ணீர் கொடுத்தால் சொர்க்கம்

 حديث سلمان الفارسي : من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار ، وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء ، قلنا : يا رسول الله ، ليس كلنا نجد ما نفطر به الصائم ، فقال رسول الله -صلى الله عليه وسلم- : " يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء ، ومن أشبع صائما سقاه الله من حوضي شربة لا يظمأ حتى يدخل الجنةالحديث رواه البيهقي .

 இது போல இன்னும் பல வழிகளில் ரமலானில் அல்லாஹ் தனது  அருளின் மகத்துவத்தை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்.

 ரமலானின் மகத்துவத்தை பெற்றுக் கொள்வது  எப்படி ?

 1.   பொருத்தற்ற காரியங்களை தவிர்ப்பது

 முதலில் ரம்லானின் மகத்துவத்திற்கு பொருந்தாத – அல்லாஹ்வின் அருளை பெறுவதிலிருந்து தடை செய்கிற தேவையற்ற எந்த காரியத்தை செய்யாமல் தவிர்த்துக் கொள்வோம்.

 செல்போன் பயன்பாடு, பேஸ்புக் யூ டியூப். இன்ஸ்டா கிராம், ரீல்ஸ் ஆகியவற்றை அநாவசியத்திற்கு பார்த்துக் கொண்டிருப்பதை தவிர்ப்பது,  வீண் பேச்சுக்கள், பொய் பேசுவது, அநாவசிய விவாதங்களை தவிர்ப்பது, தெருக்களில் தேவை இன்றி சுற்றுவது, பர்ச்சேசிங்க் என்ற பெயரில் கடையாக தேவையின்றி அலைந்து நேரத்தை வீணடிப்பது.  

 இது போல நன்மையை தராத தீமையாக அமைகிற எந்த செயலையும் இது ரமலான் மாதம் என்ற மரியாதையோடு திட்டமிட்டு தவிர்த்துவிட்டாலே ரமலானுடைய பாக்கியம் நமக்கு கிடைத்து விடும்.  

 2.   நன்மைகளை தேடித்தேடி செய்வது

 நம்முடைய முன்னோர்கள் இந்த மாத்த்தின் மகத்துவத்தை உணர்ந்த காரணத்தால்  மிகுந்த ஆர்வத்தோடு ரமலானுக்காக  காத்திருப்பார்கள். அது வந்ததும் அதிக ஆர்வத்தோடு அதில் நற்செயல்களை செய்வார்கள்.   

 நோன்பை சரியாக கடை பிடித்தார்கள்.

 தராவீஹ் தஹஜ்ஜுத் தொழுகைகளை கடைபிடித்தார்கள்

 قال صلى الله عليه وسلم:  من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه  رواه البخاري (2008

சஹர் தவறிவிடுமோ என அச்சப்படும் அளவு தொழுதார்கள்.

 قال السائب بن يزيد: "أمر عمر بن الخطاب رضي الله عنه أبي بن كعب رضي الله عنه وتميم الداري رضي الله عنه أن يقوما للناس في رمضان فكان القارئ يقرأ بالمئين، حتى كنا نعتمد على العصي من طول القيام، وما كنا ننصرف إلا في فروع الفجر.

وقال عبد الله بن أبي بكر سمعت أبي يقول: "كنا ننصرف في رمضان من القيام فنستعجل الخدم بالطعام مخافة الفجر

 அதற்கடுத்து அவர்கள் அதிக அக்கறை செலுத்தியது குர் ஆன் ஓதுவதில்

 فكان عثمان بن عفان رضي الله عنه يختم القرآن كل يوم مرة،

وكان الأسود بن يزيد يختم القرآن في رمضان في كل ليلتيْن، وفي غير رمضان في كل ست ليالٍ،

وكان سعيد بن جبير يختم القرآن في كل ليلتيْن،

كان محمد بن إسماعيل البخاري يختم في رمضان في النهار كل يوم ختمة

 كان للشافعي في رمضان ستون ختمة، يقرؤها في غير الصلاة،

وكان قتادة يختم في كل سبع دائماً، وفي رمضان في كل ثلاث، وفي العشر الأواخر في كل ليلة،

 قال عثمان بن عفان رضي الله عنهلو طهرت قلوبكم ما شبعتم من كلام ربكم

 பிறருக்கு உதவுவது

 நோன்பு திறக்க உணவளிப்பது தொடர்பான செய்திகள் பிற மனிதனின் தேவையை புரிந்து கொள்வதன் பெருமையை நமக்கு உணர்த்திக் காட்டுகிறது, ஒரு பேரீத்தம் பழத்தை கொடுத்தால் கூட நரகிலிருந்து விடுதலை பெற்று விட முடியும் என்று சொல்கிறது.

 இது விவகாரத்தில் இன்னொரு ஹதிஸ் உண்டு துஹ்பத்துல் அஹ்வதியில் இந்த ஹதிஸ் வருகிறது.

 நோன்பாளிக்கு உணவளிப்பவருடன் ஜிப்ரயீல் அலை முஸாபாஹா செய்கிறார்.

 قال رسول الله -صلى الله عليه وسلم- : " من فطر صائما في شهر رمضان من كسب حلال صلت عليه الملائكة ليالي رمضان كلها وصافحه جبريل ليلة القدر ومن صافحه جبريل -عليه السلام- يرق قلبه وتكثر دموعه " ، قال فقلت : يا رسول الله ، من لم يكن عنده؟ قال : " فقبضة من طعام " قلت : أفرأيت إن لم يكن عنده ، قال " فشربة من ماء "

  இது ரமலான் காலத்தில் மற்றவர்களுக்கு உதவியாக அமைகிற காரியங்களை செய்கிற அனைவருக்கும் கிடைக்கும்.

 ஜகாத் சதா கொடுப்பவர்கள், உறவுகளை ஆதரிக்கிறவர்கள். பள்ளிவாசலில் உழைக்கிறவர்கள் போன்ற அனைவரும் நிய்யத்தை பரிசுத்தமாக வைத்திருந்தால் இந்த நன்மையை பெறுவார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமலானின் மகத்துவத்தை புரிந்து அதனடிப்படையில் வாழ தவ்பீக் செய்வானாக!

 

No comments:

Post a Comment