لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ
تَحْتَ الشَّجَرَةِ﴾ [الفتح: ١٨
நாம்
நற்செயல்களை இயல்பாய் செய்ய வேண்டும்.
காலித்
பின் வலீத் ரலி அவர்கள் இஸ்லாமின் மிகப் பெரும் வெற்றி வீர்ர். அவர் வென்று கொடுத்த்து
தான் இராக் நாடு. அவர் ஒரு யுத்த்த்தில் கலந்து கொண்டால் வெற்றி கிட்டிவிட்டதாக மக்கள்
நினைப்பார்கள். காதிஸிய்யா யுத்தத்தில் அவர் ஆரம்பத்தில் தளபதியாக இருந்தார். பாரசீக
பேரரை முஸ்லிம்கள் எதிர் நின்ற பெரும் போர் அது. எதிரிகள் இரண்டரை இலட்சம் பேர் இருந்தனர்.
முஸ்லிம் முப்பதாயிரம் பேர் அவர்களை நின்றனர். போர் நடக்க இருந்த சூழலில் கலீபா உமர்
ரலி அவர்கள் காலித் ரலி அவரக்ளை பொறுப்பிலிருந்து நீக்கி விட்டு சஃது பின் அபீவக்காஸ்
ரலி அவர்களை நியமித்தார்.
காலித் ரலி அடுத்த நாள் பேர்க்களத்தில் இருந்த
போது ஒருவர் அவரிடம் வந்து நேற்று தளபதியாக இருந்தீர்கள் இன்று சாதரரண போர் வீர்ராக
இருக்கிறீர்கள் இதை எப்படி உணர்கிறீர்கல் என்று கேட்டார்.
காலித் ரலி அவர்கள் கொடுத்த பதில் அற்புதமானது.
நேற்றும் நான் அல்லாஹ்வுக்காக போரிட்டேன்
. இன்றும் அல்லாஹ்வுக்காக போரிடுகிறேன்.
காலித் ரலி போன்ற ஒரு மாவீர்ர் நன்மைக்கான
தனது பங்களிப்பை எவ்வளவு இயல்பாக வெளிப்படுத்தினார் என்பது இரண்டு செய்திகளை சொல்கிறது.
ஒன்று அவர் மிக கண்ணியமானவராக நடந்து கொண்டார்.
இரண்டாவமது அவருக்கு அதனால் மகத்தான மரியாதை
கிடைத்தது.
நாம் செய்கிற தர்மம் அது தொழுவது தான தரம்ம்
செய்வது ஹஜ் செய்வது போன்ற எந்த ஒரு அமலிலிலும் நாம் இயல்பாக நடந்து கொள்வது செயற்கை
தனத்தை தவிர்ப்பது சிறப்பான ஈமானுக்கு எடுத்துக் காட்டாக இருக்கும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு புறப்பட்டார்கள்.
அந்த ஹஜ்ஜின் மதிப்பு எப்படிப்பட்ட்து என்பது
நமக்கு தெரியும். வரலாறு பெருமானாரின் அந்த பயணத்திற்காக காத்திருந்த்து. மக்காவை வெற்றி
கொண்ட பிறகு அவர் முதன் முறையா பரிசுப்படுத்தப் பட்ட ஹஜ்ஜுக்கு வருகிறார். அந்த ஹஜ்ஜில்
அவரோடு கலந்து கொள்ள மக்காவிற்குச் செல்லும் சாலையின் சந்திப்பு ஒவ்வொன்றிலும் பல்லாயிரம்
பேர் தல்பியா முழக்கத்தோடு காத்திருந்தார்கள். ஒரு இலட்சத்து 15 பேர் அந்த ஹஜ்ஜில் பெருமானாரோடு
கலந்து கொண்டார்கள். பெருமானாரோடு ஹஜ்ஜு செய்ய வேண்டும். அவர்களின் ஒவ்வொரு அசைவையும்
அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பெரும் கூட்டம் காத்திருந்தது.
ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டுகிற நபியவர்களின்
நிலையை வரலாறு வர்ணிக்கிறது.
திர்மிதியில் இடம் பெறும் இந்த செய்தியை அனஸ் ரலி அறிவிக்கிறார்.
حجَّ
النَّبيُّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ علَى رَحْلٍ رثٍّ وقَطيفةٍ تُساوي أربعةَ
دراهمَ ثُمَّ قالَ اللَّهمَّ حَجَّةٌ لا رياءَ فيها ولا سُمعةَ
நபி (ஸல்) அவர்கள் நாலு திர்ஹம் மட்டுமே மதிப்புடைய ஒட்டக இருக்கையையும்
அதன் மேல் விரிக்கபடுகிற போர்வையும் கொண்டு ஹஜ்ஜுக்கு புறப்பட்டார்கள். அபோது இறைவா ! இந்த ஹஜ்ஜை பெருமை கலக்காத புகழை விரும்பாத
ஹஜ்ஜாஜ ஆக்குவாயக என்று துஆ செய்தார்கள்.
ஹஜ்ஜே ஒரு பெரிய வணக்கம் தான். பெருமானாரின் அந்த ஹஜ்ஜு எப்படிப்பட்டது.
ஆயினும் அதற்கேற்ற பகட்டை பெருமானார் பகட்டு காட்டிக் கொள்ளவில்லை. ஹஜ்ஜில் இருக்க
வேண்டிய எதார்த்த பணிவை வெளிப்படுத்தினார்கள்.
இது தான் நற்செயல்களை இயல்பாக செய்வது என்பது.
ஒரு பெரிய பணக்காரர் ஏராளமான் நற்செயல்களை செய்வார். யாராவது அவரை பாராட்டினால்
எழுந்து சென்று விடுவார். நான் கப்ரில் சொல்ல நினத்ததை நீங்கள் ஏன் ஃபஹ்ரில் (பொருமையில்) சொல்கிறீர்கஎன்று கேட்பார்.
நன்மைகளை செய்வது நமது இயல்பாகிற போது எந்த நன்மையும் சாதாரணமாக தெரியும்.
ஒரு யாசகன் வாசலில் வந்து நின்றால் கோபம் வராது.
என் பாவங்களை கழுவ வந்தவரே வருக என்பார்கள்
كان سفيان الثوري إذا رأى سائلا عند بابه قال: "مرحبا بمن جاء يغسل ذنوبي"،
قال الفضيل: "نِعمَ السائلون، يحملون أزوادنا
إلى الآخرة حتى يضعوها في الميزان".
யாசகர்கள் நல்லவர்கள். அவர்களே நமது நன்மைகளை சுமந்து சென்று மீஜான் தராசில் வைக்கிறார்கள் என்று பாராட்டுவார்கள்.
"لو يعلم الملوك وأبناء الملوك ما نحن فيه من النعيم لجالدونا عليه
بالسيوف".
இவ்வாறு இயல்பாக நன்மைகளை சேர்த்துக் கொள்பவர்களை பற்றி உண்மை நிலவரத்தை அறிந்து கொண்டால் அரசர்கள் அதன் பின் இந்த நிலைக்காக போரிடுவார்கள். ஆட்சிக் கட்டிலுக்காக அல்ல
நன்மைகள்ள இயல்பாக சேயும் இந்த பழக்கம் எந்த பெரிய காரியத்தையும் சாதாரணமாக செய்ய வைத்து விடும்.
ஹிஜ்ரீ 6 ம் வருடம் உம்ரா செய்யும் நிய்யத்தோடு பெருமானார் (ஸல்) மக்காவிற்கு
வந்தார்கள். இஹ்ராமுடையை ஆடை மட்டுமே. ஆயுதங்கள் எதையும் எடுத்துக் கொள்ள வில்லை. மக்கா
குறைஷிகள் பெருமானாரை தடுத்தார்கள். உஸ்மான் ரலி அவர்களை தன்னுடைய நோக்கம் பற்றி மக்கா
வாசிகளுக்கு தெரிவிக்க் பெருமானார் அனுப்பி வைத்தார்கள். அவரை மக்கா வாசிகள் திருப்பி
அனுப்ப தாமதப்படுத்தினார்கள். இதனால் அவர் கொல்லப் பட்டு விட்டார் என்று அச்சம் ஏற்பட்டது.அப்படி
ஒரு செய்தியும் பரவியது. உடனே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை யுத்தத்திற்கு
தயாராகுமாறு கோரினார்கள் என்னெ ஆச்சரியம்/ மிக இயல்பாக பெருமானாருக்கு கட்டுப்பட்டு
பழகி இருந்த அந்த தோழர்கள் வாட்களையோ கேடயங்களையோ எடுத்து வராத சூழ்நிலையிலும் கூட
பெருமானார் அழைத்தார் என்ற உடன் யுத்த்திற்க் தயாரானார்கள்.
அல்லாஹ் இந்த் நிகழ்வால் மிகவும் பெருமிதம் அடைந்தான். சஹாபாக்களை பாராட்டினான்.
لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ
تَحْتَ الشَّجَرَةِ﴾ [الفتح: ١٨]،
இங்கு அந்த மரத்தை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை
திருக்குர் ஆனிய அறிஞர்கள் அதற்கான காரணத்தை கூறுகிறார்கள்.
ولعل من أسباب ذِكْر الشجرة -رغم عدم أثرها في موضوع البيعة نفسه- بيان
فطرية العبادات، وسهولة وسائلها، وعدم التكلف في الاستعدادات لها
ஒரு போருக்கான முடிவை பெரிய ஆலோசனை மண்டபங்களில் தான் எடுக்க வேண்டும்
என்று அவர்கள் காத்திருக்க வில்லை. உயிரைக் கொடுப்பதற்கான அவர்களது தீர்மாணத்தை ஒரு
மரத்தின் அடியில் கூட எடுத்து விட அவர்களுக்கு ஆர்வமூட்டியது. இது கட்டுப்படுவதிலும்
நன்மை செய்வதிலும் அவர்களுக்கிருந்த இயல்பான ஈடுபாட்டை காட்டவே அந்த மரத்தடியில் என்ற
சொல்லை அல்லாஹ் பயன்படுத்தினான்.
இப்போதெல்லாம் காலையில் பஜ்ரு தொழுது விட்டால் கூட பத்து பேரிடம் அதை சொல்லி
காட்டி விட மனம் துடிக்கிறது.
ஒரு பத்தாயிரம் ரூபாயை ஏழைகளின் திருமணத்திற்கு கொடுத்து விட்டால் அதை
பல ஆண்டுகளுக்கு மனது நினைவில் வைத்து கொள்கிறது.
குர்பானி பிராணி வீட்டுக்கு முன் எடுப்பாக நிற்பது பெருமையாக இருக்கிறது.
எவ்வளவுக்கு வாங்கினீர்கள் என்று பிறர் கேட்கிற போது ஆடு 40 ஆயிரத்திற்கு வாங்கினேன்
என்று சொலுவதும் ஒரு மாடு ஒண்ணரை இலட்சத்திற்கு வாங்கினேன் என்று சொல்வது பெருமையாக
இருக்கிறது.
இவை நமது வணக்கங்களை இயல்பானது என்ற நிலையிலிருந்த் மாற்றி விடும் ஆபத்து இருக்கிறது.
அல்லாஹ் அற்புதமாக சொல்கிறான்.
بَلِ الْإِنسَانُ عَلَىٰ نَفْسِهِ
بَصِيرَةٌ (14) وَلَوْ
أَلْقَىٰ مَعَاذِيرَهُ (15)
நம்மில் சிலருக்கு நல்லதை காரியத்தை ஆர்ப்பட்டமாக செய்தால் தான் பிடிக்கும்.
மன்சா பெரும் பணக்காரராக இருந்தார். உலகின் மொத்த வரலாற்றில் பெரும பணக்கார்கள் டேவிட்ஸன் ஜோக்கப் என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளா. அந்த 10 பேரில் மன்சா மூஸாவும் ஒருவர்.
2015 ம் ஆண்டு இது பற்றிய விமர்சனம் எழுதிய அமெரிக்காவின் பிரபல வார இதழான டைம் பத்ரிக்கை மூஸாவின் சொத்துக்களை சரியாக அளவிடுவது சாத்தியமற்றது என்று கூறியது.
Time magazine reported: "There's really no way to put an accurate number on his wealth
1324 ம் ஆண்டு தொடங்கிய அவரது பயணம் நிறைவைடைய ஒரு வருடம் பிடித்த்து. அவருடன் 12000 அடிமைகள் இருந்தனர். ஒவ்வொருவரும் 2 கிலோ தங்க கட்டிகளை சுமந்து சென்றனர். 80 ஒட்டகங்கள் அவருடன் சென்றன. அவை ஒவ்வொன்றும் 136 கிலோ தங்க கட்டிகளை சுமந்து சென்றனர். 18 டன் எடையளவு தங்கத்தை அவர் கொண்டு சென்றதாக விக்கீபீடியா கூறுகிறது.
அவர் ஹஜ்ஜுக்கு செல்லும் வழியில் ஏழைகளுக்கு தங்க காசுகளை அல்ல தங்க கட்டிகளை வாரிக் கொடுத்தார். வழியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு பள்ளிவாசலை கட்டினார்.
27 ஆயிரம் மைல்களுக்கு நீண்ட அவருடைய பயணத்தில் பல ஊர்களின் பொருளாதார நிலமை தலை கீழாக மாறியது. எகிப்தில் தங்கத்தின் விலை பல் ஆண்டுகள் விலை குறந்தே விற்கப்பட்டது என்று சொல்கிறது வரலாறு. மக்காவிலும் மதீனாவில்ம் அவர் தாராளமாக செலவ்ழித்தார்.
மன்சா மூஸா ஹஜ்ஜுக்கு செலவழித்தது ஒரு வரலாற்று நிகழ்வாக இருந்த போது. அவர் தர்ம்ம் தான் செய்தார் என்ற போதும் அவருடை ஹஜ்ஜை விட பாராட்டப் பெறுவது மிக எதார்த்தமாக நடை பெற்ற ஹஜ்ஜுகளாகும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் 4 திர்ஹம் மதிப்புடைய ஒட்டக தொட்டிலில் பயணித்தார்கள் என்ற செய்தியில் இருக்கிற கனத்தை இப்போது சிந்தித்து பாருங்கள்.
வணக்கங்களின் சுவையை அனுபவிப்பது அது இயல்பாக இருப்பதில் ஆகும். ஆர்ப்பாட்டமாக இருப்பதில் அல்ல
வணக்கங்கள் ஆர்ப்பாட்டமாகிற போது அது முகஸ்துதிக்கானதாக கருதப்படக் கூடும். அதை தொடர முடியாமல் போகும்
மன்சா மூஸா அந்த பயணத்திலிருந்து திரும்புகிற போது அவர் வாங்கியிருந்த பொருட்களை விற்க வேண்டிய நிலைக்கும் கடன் வாங்குகிற நிலைக்கும் தள்ளப் பட்டார்
இயல்பாக இருக்கிற போது வணக்கங்களை ஏராளமாக செய்ய முடியும்.
அது
போல பெரிய திருப்தியை பெற முடியும்.
அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹி ஒரு அற்புதமான செய்தியை சொல்கிறார்கள்.
நான் ஹஜ்ஜில் ஒரு சமயம் உறங்கிக் கொண்டிருந்தேன். ஒரு கனவு வந்த்து. அந்த கனவில் இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கே வராத சிரியாவின் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி الإسكافي( யின் காரணமாக அனைவரின் ஹஜ்ஜையும் அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. நான் அவரை தேடிச் சென்றேன். அவர் அதிர்ச்சிகரமான அந்த செய்தியை சொன்னார்.
நான்
ஹஜ்ஜுக்காக காசு சேர்த்து வைத்தேன். ஹஜ்ஜுக்கு புறப்பட தயாரான போது என் மனைவி
பக்கத்து வீட்டிலிருந்து கொஞ்சம் சால்னா வாங்கி வா என்றார். நான் வாங்கச்
சென்றேன். அப்போது அவர்கள் இது உங்களுக்கு ஹலால் அல்ல என்றார்கள். ஏனென்று
கேட்டேன். இது இறந்து போன் ஆட்டுக் கறியால் சமைக்கப் பட்டது. எங்களிடம் வசதி
இருக்க வில்லை .குழந்தைகள் பசி தாங்காது அழுதார்கள் அவர்களுக்கு கொடுக்க எதுவும்
இல்லை. இறந்து போன ஆடு கிடைத்து உயிரை காப்பாற்றிக் கொள்ள அதை சாப்பிடுகிறோம்
என்று. இது உங்களுக்கு தகாது என்றனர்,
அல்லாஹ்வே!
என் பக்கத்து வீட்டினர் இறந்த ஆட்டின் கறியை சாப்பிடும் போது நான் ஹஜ்ஜுக்கு
செலவளிப்பதா என்று கருதி என் பணம் முழுவதையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்
என்று கூறினார்.
சுப்யான்
ரஹ் கூறினார். சகோதரா ! உனது இந்த செயல் காரணமாக் அல்லாஹ் இந்த ஆண்டு அனைவரின்
ஹஜ்ஜையும் ஏற்றுக் கொண்டான் என்று கூறினார்.
قال عبدالله بن المبارك ؛ كنت حاجاً لبيت الله الحرام ؛ وفي ليلةٍ من الليالي وأنا نائم في منى ؛ رأيت فيما يرى النائم ؛
رجلين
جالسين عند رأسي يتبادلان أطراف الحديث ؛
فقال
أحدهما للآخر :
أتدري كم حاجاً تقبل الله حجه في هذا العام ..؟!! قال الآخر : لا .. لا أعلم فقال : لم يقبل الله من حجهم إلا القلة ؛
ولكن الله
عفا عنهم وقبل حجهم بفضل "موفقٍ الإسكافي الشامي" على أنه ببلاده ولم
يحج ..!!
قال
عبدالله بن المبارك : فاستيقظت ولم يكن لي هم بعدها إلا موفقٌ هذا ؛
وكيف قبل
الله حج المسلمين بسببه وهو لم يحج ..!
قال عبدالله فخرجت من مكة أطلب الشام ؛ فلما وصلتها سألت عن موفقٍ الإسكافي ؛
فلم أجده
إلا بعد مدة
بعد أن سألت عنه كل من قابلت ؛ فلما قابلته قلت له :أحججت عامك هذا ..؟ قال : لا ؛
قلت له :
وما منعك من الحج ..؟
قال : ولماذا تسأل ..؟ قلت له : أخبرني بخبرك ؛ وسأخبرك بخبري ..!!
قال موفق : أنا إسكافي ( صانع احذيه )كما ترى ؛ ولما عزمت على الحج من العام الماضي ؛ صرت أدخر ما يزيد عن حاجتي من مال يسير
للحج هذا
العام أو العام الذي يليه ؛
فلما اقترب
موسم الحج وجدت أن المال يكفيني للحج ؛
فعزمت على
الحج إلى بيت الله الحرام ؛
وأصبحت أعد
العدة لذلك . وبينما أنا عائد إلى بيتي ذات يوم استقبلتني زوجتي بإناء وكانت
حاملاً ؛
وقالت لي :
اذهب إلى جارتنا وأطلب منها شيئاً من الشواء ؛
فقد شممت
رائحته عندهم واشتهيته .
قال موفق :
فذهبت إلى جارتنا وكانت أرملة ؛
وعندها صبية أيتام تقوم عليهم ؛ فقلت لها :خذي هذا الإناء وأعطينا شيئاً من الشواء فقد اشتهته زوجتي وهي حامل .
قالت المرأة : إنه لا يحل إلا لنا .. ولا يحل لك يا موفق ..!!قلت : ولم ..؟
قالت : إنها
ميته ؛
فقد نفقت
شاةٌ عند بيت من بيوت الحي ؛
فرموها على
قارعة الطريق فرأيتها ؛ وكنت أنا وأبنائي لم نطعم شيئاً من عدة أيام ؛
فخشيت
عليهم من الهلاك ؛ فقطعت شيئاً من الشاة وجئت بها لأولادي وشويتها لهم .
قال موفق :
فأظلمت الدنيا في عيني ؛
فرجعت منها
إلى بيتي وأنا ألطم على وجهي وأقول :
ويلٌ لك يا
موفق من الله ؛
تكنز المال
لتحج .. وجارتك وصبيانها يأكلون الميتة ؛
فعمدت إلى
المال وأعطيته كله لها ..!!
قال
عبدالله بن المبارك : فقلت له ..
اعلم بأن
الله قد قبل حج من حج هذا العام بسبب عملك هذا ؛
ثم تركته
وانصرفت إلى أهلي بالعراق
வணக்கங்கள்
இயல்பாக நடைபெறுகிற போது அவை பிரம்மாண்ட மரியாதை பெறுகின்றன
ஆர்ப்பாட்டமாகிற
போது அவை சிரமத்தை ஏற்படுத்துகின்றன என்பதோடு அதிகமதிகம் வணக்கம் செய்யும் வாய்ப்பையும்
குறைக்கின்றன்.
(மதீனா முனவ்வராவின் சனாபில் மதீனா ஹோட்டலின் 12 மாடியின் லிப்ட் லாபியிலிருந்து)
பயான் அருமை!
ReplyDeleteஹஜ்ரத்! அடுக்கு மாடி, லிஃப்ட் லாபி இவைகள் இல்லையென்றாலும் உங்களின் علم ஆல் நீங்கள் உயரத்திலேயே இருக்கிறீர்கள்!
அல்லாஹ் மென்மேலும் தௌஃபீக் செய்வானாக! ஆமீன்
அல்லாஹ் அருள் செய்யட்டும்
ReplyDelete