வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 02, 2026

பிராண்டட் தொழுகை

 قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ * الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ [المؤمنون: 1، 2].

இந்த காலத்தில் ஒவ்வொன்றிலும் பிராண்டுக்கு நாம் ஆசைப்படுகிறோம்.

பிராண்டாக இரிந்தால் தான் சரியாக இருக்கும் என்ற அழுத்தமான நம்பிக்கை நம்க்கு இருக்கிறது.

நம்முடைய தொழுகை பிராண்டாக் இருக்கிறதா என்பதை குறித்து இந்த ஜும் ஆ வில சிந்திக்கிறோம்.

தொழுகையை பிராண்டாக வைத்துக் கொள்வதற்கு திருக்குர் ஆன் ஒரு வார்த்தைய பயன்படுத்துகிறது. இகாமத்துஸ்ஸலாத்.

அல்லாஹ் குர்ஆனில் சல்லூ தொழுங்கள் என்று கூறுவதில்லை. தொழுகையை பற்றி பேசும் இடங்களில் எல்லாம், திருக்குர் ஆன் அகீமுஸ்ஸலாத் என்ற வார்த்தைய பயன்படுத்துகிறது.

இது தொழுகைக்கான பிராண்ட் ஆகும்.

இதன் பொருள் சரியாக தொழுங்கள் என்பதாகும். நிலையாக தொழுங்கள் என்ற ஒரு பொருளும் உண்டு.

தொழுகை விவகாரத்தில் இவ்விரண்டு அர்த்தங்களும் பொருந்தும் நாம் சரியாக தொழ வேண்டும். நிலையாகவும் தொழ வெண்டும்.

சரியாக தொழுதல் என்பதன் முதல் பொருள்

விதிகளை சரியாக கடைபிடித்து தொழுவதாகும்.

المحافظة على شروطها

ஒளு சரியாக செய்தோமா?  கஃபாவை சரியாக முன்னோக்கியிருக்கிறோமா? உடலும் இடமும் பரிசுத்தமாக இருக்கிறதா? தொழுகைக்கான நேரம் வந்து விட்டதா?  என்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

 அது போல தொழுகையின் பர்ளுகள் சுன்னத்துகள் எது என்று அறிந்து அவற்றை சரியாக செய்ய வேண்டும்.

 தொழுகை ஷாபி

 தொழுகையின் பர்ளுகள் 13

 1.   நாம் முதலில் நிய்யத் வைக்கிறோம். அது பர்ளுஆகும்.

  يجب استحضار نية الصلاة وتعيينها (كصلاة الظهر مثلاً) وفرضيتها بـالقلب، مع مقارنة النية لتكبيرة الإحرام. ويُسنّ التلفظ بالنية سراً لمساعدة القلب

2.   அல்லாஹு அக்பர் என்று முதல் தக்பீர் சொல்கிறோம் அதுவும் பர்ளு ஆகும்.

3.   நிற்பதும் பர்ளு ஆகும்.

4.   பாத்திஹா சூரா ஓதுவது பர்ளு ஆகும். இமாமுடன் சேர்ந்து தொழும் போதும் பின்னால் நிற்பவர்கள் பாத்திஹா சூரா ஓதுவது கட்டாயமாகும்.

5.   நிதானமாக ருகூஃ செய்வதும்,

6.   நிதானமாக எழுந்து நிற்பதும்,

7.   நிதானமக சுஜூது செய்வதும் பர்ளு ஆகும்

8.   இரண்டாவதா சுஜூது செய்வதும் .

9.   கடைசி அத்தஹிய்யாத்தில் உட்காருவதும்

10. அத்தஹிய்யாத் ஓதுவதும்

11. அதன் பிறகு சலவாத் ஓதும்

12. முதல் சலாம் கொடுப்பதும்

13. அனைத்து காரியங்களை வரிசையாக செய்வதும் பர்ளு ஆகும்.

தொழுகையின் சுன்னத்துக்கள்

1.   முதல் அத்தஹிய்யாத் இருப்பதில் இருப்பது சுன்னத்தாகும்.

2.   பஜ்ருடைய  தொழுக்கயில் குனூத் ஓதுவது சுன்னத்தாகும்.

இவ்ற்றை விட்டால் சஜ்தா சஹ்வு செய்ய வேண்டும்.

தொழுகையின் மற்ற சுன்னத்துகள் ஹைஆத்துஸ் ஸலாத்

1.      رفع اليدين: في أربعة مواضع: عند تكبيرة الإحرام، عند الركوع، عند الرفع منه، وعند القيام من التشهد الأول للركعة الثالثة.

2.      وضع اليمين على الشمال: وضع كف اليد اليمنى على رسغ وساعد اليد اليسرى تحت الصدر.

3.      دعاء الاستفتاح: ويُقال بعد تكبيرة الإحرام وقبل التعوذ.

4.      التعوذ: الاستعاذة بالله من الشيطان الرجيم قبل القراءة في كل ركعة.

5.      التأمين: قول "آمين" بعد الفاتحة للإمام والمأموم والمنفرد.

6.      السورة بعد الفاتحة: قراءة سورة أو بعض الآيات في الركعتين الأوليين.

7.      الجهر والإسرار بالقراءة: الجهر في موضعه والإسرار في موضعه بحسب الصلاة.

8.      التكبير عند الانتقالات: التكبير للركوع، والسجود، والرفع منها.

9.      أذكار الركوع والسجود: كقول "سبحان ربي العظيم وبحمده" في الركوع، و"سبحان ربي الأعلى وبحمده" في السجود.

10.  وضع اليدين على الركبتين في الركوع: مع تفريج الأصابع.

11.  كيفية النزول للسجود: تقديم الركبتين ثم اليدين ثم الجبهة والأنف (على المشهور).

12.  الجلوس بين السجدتين: الجلوس مفترشاً، ووضع اليدين على الفخذين، والدعاء بالمأثور.

13.  التورك في الجلوس الأخير: الجلوس في التشهد الأخير بإلصاق الورك بالأرض وإخراج الرجلين من جهة واحدة.

14.  جلسة الاستراحة: وهي جلسة خفيفة جداً بعد السجدة الثانية وقبل القيام للركعة الثانية أو الرابعة.

15.  التفاتة السلام: الالتفات يميناً ثم يساراً في السلام

இந்த சுன்னத்துக்களை விட்டால் சஜ்தா சஹ்வு செய்ய தேவையில்லை

 ஆண்களுக்கும் பெண்களுக்கு உள்ள வித்தியாசம்

1.   பெண்கள் முகத்தை தவிற மற்ற உடல் அனைத்தையும் மறைக்க  வேண்டும்.

2.   பெண்கள் சஜ்தா செய்யும் போது முழுங்கையை விலாவோடு ஒட்டி வைக்க வேண்டும்.

3.   வயிற்றை தொடையோடு ஒட்டி வைக்க வேண்டும்.

4.   ஓதும் போது குரலை தாழ்த்திக் கொள்ள வேண்டும்.

5.   தொழுகைக்கு இடையில் இமாம் தவறிழைத்தால் கை தட்டி உணர்த்த வேண்டும். 

தொழுகையை முறித்து விடும் காரியங்களில் கவனகாக் இருக்க வேண்டும். தொழுகையை முறித்து விடும் காரியங்கள்  11

1.       வேண்டுமென்றே பேசுவது.

2.       அதிகப்படியான தொழுகையில்லாத காரியங்களை செய்வது

3.       ஒளு முறிவது

4.       அசுத்தம் படுவது

5.       மறைக்கப் பட வேண்டியவை வெளிப்படுவது

6.       நிய்யத்தை மாற்றிக் கொள்வது

7.       கிப்லாவின் திசையிலிருந்து திரும்புவது

8.       சாப்பிடுவது

9.       குடிப்பது

10.   பெருஞ் சிரிப்பு

11.   மதம் மாறிவிடுவது.

 பர்ளான் காரியங்களை விட்டு விட்டால் தொழுகையை திருப்பி தொழுவேண்டும். சுன்னத்தான வற்றை விட்டு விட்டால் உடனே நினவுக்கு வந்தால் திருப்பி செய்ய வேண்டும். சஜ்தா சஹ்வு செய்ய வேண்டும். ஒரு பர்ளு கடந்து விட்டால் தவ்ற விட்ட சுன்னத்தை திரும்ப செய்ய வேண்டியதில்லை. சஜ்தா சஹ்வு செய்ய வேண்டும்.

 ஹைஹத்துஸ் சுன்னாவை விட்டு விட்டால் திரும்ப செய்ய வேண்டியதில்லை. சஜ்தா சஹ்வும் தேவையில்லை.

 தொழுகை ஹனபீ

 உடல் சுத்தம், அவ்ரத்தை மறைத்தல், கிப்லாவை முன்னோக்குதல், நிய்யத் வைத்தல் ஆகிய நான்கும் தொழுகைக்கு முன் கவனிக்க வேண்டிய கடமைகளாகும். (ஷர்த்துகள்)

 தொழுகையின் பர்ளுகள் 6

 

1.    تكبيرة الإحرام: بصيغة "الله أكبر".

2.    القيام: في صلاة الفرض.

3.    القراءة: قراءة قدر آية من القرآن في الفريضة.

4.    الركوع والسجود.

5.    القعدة الأخيرة: الجلوس بمقدار التشهد الأخير.

6.    الترتيب بين الأركان

இவற்றில் ஒன்றை விட்டு விட்டால் திரும்ப தொழவேண்டும்.

 தொழுகையின் வாஜிபுகள் 3

 1.     قراءة الفاتحة وسورة قصيرة (أو ثلاث آيات) في الركعتين الأوليين من الفرض.

2.     القعود الأول للتشهد.

3.     قراءة التشهد في القعود الأول والأخير.

 தொழுகையின் சுன்னத்துக்கள் 5

 1.     الاستفتاح: يقول المصلي بعد تكبيرة الإحرام: "سبحانك اللهم وبحمدك، وتبارك اسمك، وتعالى جدك، ولا إله غيرك".

2.     رفع اليدين: يرفع الرجل يديه حذاء أذنيه، بينما ترفع المرأة يديها حذاء منكبيها (كتفيها).

3.     وضع اليدين: يضع الرجل يده اليمنى على اليسرى تحت السرة، بينما تضعهما المرأة على صدرها.

4.     الطمأنينة: ليست ركناً مستقلاً بل واجبة عند الإمام أبي حنيفة.

5.      الدعاء:

·         தொழுகையை முறிப்பவை

 مبطلات الصلاة

الكلام في الصلاة عمدا أو سهوا

العمل الكثير في الصلاة

الحدث في الصلاة

وجود النجاسة في الصلاة

انكشاف العورة في الصلاة

تغيير النية في الصلاة

 நாம் மிக சுருக்கமாக இங்கு குறிப்பிட்டுள்ளோம் .இவற்றை தெளிவாகவும் முழுமையாகவும் அறிந்து நாம் தொழும் போது நமது தொழுகை பிராண்டான் தொழுகையாக அமையும்.

நாம் அதற்கு முயற்சிக்க வேண்டாமா?

தொழுகையை சரியாக தொழுதல் என்பதன் இரண்டாம் பொருள் பக்தியோடும் பணிவோடும் தொழுவதாகும்.

 المحافظةُ على خشوعها

 பகதி என்பதன் பொருள் கவந்த்துடனும் அல்லாஹ்வுக்கு முன் நிற்கிறோம் என்ற அச்சடக்கத்துடனும் தொழுவதாகும்

கவனமில்லாமலோ அலட்சியமாகவோ அடக்கமில்லாமலோ தொழுவது தொழுகையின் முழு பயனை தராது.

பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். பலருக்கும் தொழுகையின் கால் பலனோ அரை பலனோ தான் கிடைக்கிறது.

 فقال النبيُّ : إنَّ الرجُلَ لَيَنْصَرِفُ وما كُتِبَ له إلا عُشْرُ صلاتِه، تُسْعُها، ثُمُنُها، سُبْعُها، سُدُسُها، خُمُسُها، رُبُعُها، ثُلْثُها، نِصْفُها))؛ رواه أحمد 

அதிக நேர்ம் நிற்பது தொழுகையில் பக்தியை கொண்டு வரும்.

فقد سُئِلَ رسولُ الله صلى الله عليه وسلم: أيُّ الصلاةِ أفضلُ؟ فقال: ((طُولُ القُنُوتِ))؛ رواه مسلم وغيره، وفي رواية: ((طُولُ القيامِ))؛ رواه أحمد

 கவனமில்லாத தொழுகை தீர்வு  என்ன

ஓதும் ஆயத்துக்களிலும் திக்ருகளையும் முழு நினைவோடு ஓதப்பழகுவது தொழுகையில் கவனத்தை கொண்டு வரும்.

 பெருமானாரின் தொழுகை

 அவர்களது உள்ளத்த்தின் நடுக்கம் தண்ணீர் கொதிப்பது போல மற்றவர்களுக்கு கேட்கும்.

குமுறிக் குமுறி அழுகிறவர்களிடமிருந்து ஒரு சப்தம் வெளிப்படுமே அது போல

 وكان النبيُّ صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يُسمَع في صدره أزِيزٌ كأزيز المِرْجَل- أي: كالماء عندما

பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட பெருமானர் இப்படி இருந்திருப்பார்கள் எனில் நாம் எப்படி இருக்க வேண்டும்.

 தொழுகையை சரியாக தொழுவதன் இன்னொரு பொருள்

நேரம் வந்தவுடன் தொழுவதாகும்.

 காரணமின்றி தாமதிப்பதோ தள்ளிப்போடுவதோ பக்திக்கு முரணாகிவிடும்

 பெருமானார் (ஸல் அவர்கள் குடும்பத்தோடு பேசிக் கொண்டிருப்பார்கள். பாங்கு சொல்லப்பட்டு விட்டால் அவர்கள் யாரோ என்பது போல எழுந்து சென்று விடுவார்கள்.

 والرسول صلى الله عليه وسلم يكون مع أهله، فإذا نُودِي للصلاة قام كأنْ لم يعرف أحدًا.

தொழுகை என்பது குனிந்து எழுந்திருப்பது என்று மட்டும் நினைக்காமல் அதை இகாமத்துஸ்ஸலாத என்ற பிராண்டாக ஆக்கிக் கொள்ள நாம் முயற்சிப்போம்.

தொழுகையை நிலை நிறுத்துபவரே உண்மையில் பொறுப்பான மனிதர்

قال العلامة عبدالرحمن بن ناصر السعدي رحمه اللهالعبد إذا أقام صلاته على الوجه المأمور به, كان لما سواها من دينه أحفظ وأقوم

 قال الحافظ ابن حجر رحمه الله: من ضيع الصلاة المفروضة حتى يخرج وقتها من غير عذر, مع خفة مؤنتها عليه, وعظيم فضلها, فهو لما سواها أضيع.

 தொழுகை இல்லை எனில் நாம் முஸ்லிமுக்கான நன்மைகளை பெற முடியாது.

அரசாங்கத்திடம் கோட்டா பெற்று விடலாம். ஆனால் அல்லாஹ்விடம் மரியாதை இருக்காது.

قال عمر بن الخطاب رضي الله عنه: لا حظ في الإسلام لمن ترك الصلاة.

 قال التابعي الجليل يونس بن عبيد رحمه الله تعالى: "خصلتانِ إذا صلَحتا من العبد، صلَح ما سواهما: صلاتُه ولسانه"

முன்னோர்களின் அக்கறை

தொழுகை தான் மனமகிழ்ச்சி

 عن أنس قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: ((حبِّب إليّ من الدنيا النساء والطِّيب، وجُعلت قُرة عيني في الصلاة)).

தயாராக இருத்தல்

قال عدي بن حاتم: ما أقيمت الصلاة منذ أسلمت إلا وأنا على وضوء.

உரிய நேரத்தில்

قال سعيد بن المسيب: ما أذن المؤذن منذ ثلاثين سنة إلا وأنا في المسجد.

 قال سفينان بن عيينة: قال رجل: من توقير الصلاة أن تأتي قبل الإقامة.

முதல் சப்பு:

قال يحيى القطان: كان الأعمش محافظاً...على الصف الأول

முதல் தக்பீர்

قال سعيد بن المسيب: ما فاتتني التكبيرة الأولى منذ خمسين 

எந்த சூழலிலும்

ஆமிர் பின் அப்துல்லாஹ் (ரஹ்) சகராத் நிலையில் பாங்கு சப்தம் கேட்டவுடன் எழுந்தர். மஃரிபில் முதல் ரகாத்தில் வபாத்தானார்.

 التابعي الجليل عامر بن عبدالله بن الزبير رضي الله عنه، أنه سمع المؤذن وهو يجود بنفسه، فقال: خُذوا بيدي، فقيل: إنك عليل، قال: أسمع داعي الله، فلا أجيبه؟! فأخَذوا بيده، فدخل مع الإمام في المغرب، فركع ركعة، ثم مات

 இவை அனைத்தும் நமது தொழுகையை பிராண்ட் ஆக்கிக் கொள்ளும் வழிமுறைகளாகும்.

அல்லாஹ் தவ்பீக செய்வானாக!

 

No comments:

Post a Comment