வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 16, 2026

பிரார்த்தனைகளின் உயிர்

ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (55)

 தினசரி நாம் துஆ கேட்கிறோம்.

பாத்ரூமுக்கு செல்லும் போது துஆ கேட்கிறோம்.

بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ

 மனைவியுடன் உறவு கொள்ளும் போது

عن النبي صلى الله عليه وسلم أنه قال:"لو أن أحدكم إذا أراد أن يأتي أهله قال: بسم الله، اللهم جنبنا الشيطان، وجنب الشيطان ما رزقتنا، فإنه إنْ يُقدر بينهما ولد في ذلك، لم يضره شيطان أبداً".

மழை வரும் போது

عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان إذا رأى المطر قال : (اللهم صيبا نافعا).

 ஒரு ஆளை வேலைக்கு நியமிக்கும் போது அல்லது புதிய வண்டி வாங்கும் போது

عن النبي صلى الله عليه وسلم قال إذا تزوج أحدكم امرأة أو اشترى خادما فليقل اللهم إني أسألك خيرها وخير ما جبلتها عليه  وأعوذ بك من شرها ومن شر ما جبلتها عليه وإذا اشترى بعيرا فليأخذ بذروة سنامه وليقل مثل ذلك قال أبو داود

ஒரு வியாபாரம் வெற்றியடையும் போது சக வியாபாரிக்காக துஆ  

 ஒரு கிராமத்து மனிதரிடமிருந்து ஒரு வைக்கேல் கட்டை வாங்கிய பெருமானார் (ஸல்) அவர்கள் பேச்சு வார்த்தை முடிந்த பிறகும் கூட சபை கலைவதற்கு முன் திரும்ப பெற்றுக் கொள்ள அந்த வியாபாரிக்கு வாய்ப்பளித்தார்கள் . இந்த பெருந்தன்மையை கண்டு வியந்த அந்த வியாபாரி துஆ செய்தார்.  அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரட்டும்.

 اشتَرى رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ مِن رجُلٍ منَ الأعرابِ حملَ خبطٍ ، فَلمَّا وجبَ البَيعُ ، قالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ: اختَر ، فقالَ: الأعرابيُّ: عَمرَكَ اللَّهَ بيِّعًا

الراويجابر بن عبدالله | المصدرصحيح ابن ماجه

 இப்படி எங்கும் துஆ கேட்க பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறோம்.

 வெறும் தேங்க்ஸ் அல்லது சிரிப்பு அல்லது எல்லாவாற்றையும் ஏதே சடங்கு போல் செய்வது மனிதர்களுக்கு அழகல்ல என்று இஸ்லாம் கற்பித்திருக்கிறது.

 ஒவ்வொன்றிற்குமான துஆ க்கள் நமது அன்றாட நிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும் பின் விளைவுகளையும் உணர்த்துகின்றன.

 இப்படி ஒரு முஸ்லிமின் வாழ்வு முழுவதும் துஆ வால் நிறப்பட்டிருக்கிறது.

 இது தவிர தனியாக நாம் நேரம் ஒதுக்கி கையேந்தி துஆக்களை கேட்கிறோம். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நாம் துஆ கேட்கிறோம்

 (நண்பர்களே ! ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் வழக்கமான துஆக்கள் ஓதுவீர்கள் என்றால் நம்முடைய பள்ளியில் அல்லது பெரும்பாலான பள்ளிவாசல்களில் இன்ன தொழுகைக்குப் பிறகு இப்படி துஆ ஓதப்படுகிறது என்று தொழுகைக்குப் பின் ஓதப்படுகிற துஆ க்களை சொல்லி விளக்கம் கூறவும் –

இதற்காக நேரம் எடுத்துக் கொண்டால் தவறில்லை. நாம் அன்றாடம் ஓதுகின்ற துஆக்களின் பொருளை ஒரு தடவையாவது மக்கள் அறிந்து கொள்ளட்டும்.

வெள்ளிக்கிழமைகளில் ஓதப்படுகிற ஈஸால் சவாப் துஆ வின் பொருளைக் கூட சுருக்கமாக கூறலாம்.

 நாம் துஆ கேட்கிறோம். சந்தேகமில்லை.

 இந்த துஆ க்கள் உரிய பலனை தர வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோமா  என்ற ஒரு பெரிய கேள்வி இருக்கிறது .

 நபி ஜகரிய்யா அலை உடல் மூத்து தளர்ந்த் நிலையில் துஆ வின் மூலம் குழந்தையை பெற்றார்கள்.

 நாமோ அந்த  மகத்தான அமலை ஏதோ சடங்காக முடித்து விடுகிறோமா என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

 பெரும்பாலும் அப்படித்தான் நடக்கிறது. அல்லாஹ் மாற்றத்தை தருவானாக!

நமது துஆ க்களின் உயிரோட்ட்த்தை ஏற்படுத்த நாம் எப்படி பட்ட ரப்பிடம் கேட்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்

 அந்த எண்ணத்தை வளர்த்துக் கொள்ள அதிக பட்ச நமது பணிவை வெளிப்படுத்துவதை நாம் வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 பிரார்த்தனைகளுக்கான் ஒழுங்கை குர் ஆன் கற்பிக்கிறது.

 ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (55)

 பணிந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 இதன் பொருள். துஆ வில் அலட்சியம் கூடாது. நம்மில் பலரும் ஏனோ தானோ வென்று கையேந்தினால் போதும் என்று நினைக்கிறார்கள்./

 அல்லாஹும்ம்.. என்று சொல்லும் போதே அந்த அல்லாஹ் யார் என்ற அச்சடக்கம் நமக்கு வேண்டும். அவன் தராவிட்டால் என்னாவது என்ற பயமும் அவன் தருவான் என்ற உறுதியும் வேண்டும்.

 துஆவை பணிவை வெளிப்படுத்துவதற்கு ஒரு உதாராணம்,

 யா அல்லா எனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடு என்று மட்டும் கேட்காமல் உன்னை தவிர யாரால் ஷிபாவை தர முடியும் நீ கொடுக்கிற ஆரோக்கியம் தான் உண்மையான ஆரோக்கியம் என்று கேட்க வேண்டும்.

 பெருமானார் (ஸல்) அப்படித்தான் கேட்பார்கள்

 أن النبي صلى الله عليه وسلم الله عليه وسلم الله عليه وسلم كان يعود بعض أهله يمسح بيده اليمني ويقول‏:‏ ‏"‏اللهم رب الناس، أذهب البأس، واشف، أنت الشافي لا شفاء إلا شفاؤك، شفاءً لا يغادر سقماً” ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏

 அதே போல துஆ க்களின் போது நமது இயலாமையை வெளிப்படுத்த வேண்டும்.

 இது பணிவையும் பக்தியையும் அதிகப்படுத்தும்.  .  

 பெருமானார் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின் போது இப்படி துஆ கேட்டார்கள் 

اللَّهُمَّ إنَّك تَسمَعُ كلامي، وتَرى مكاني، وتَعلَمُ سِرِّي وعلانيتي، لا يَخفَى عليك شيءٌ مِن أمري، وأنا البائسُ الفقيرُ المستغيثُ المستجيرُ الوجلُ المشفقُ، المقرُّ المعترفُ بذنبه، أسألُك مسألةَ المسكينِ، وأبتهِلُ إليك ابتهالَ المُذنِبِ الذليلِ، وأدعوك دعاءَ الخائفِ الضَّريرِ، مَن خضَعتْ لك رقَبتُه، وفاضتْ لك عَبْرتُه، وذلَّ لك جِسْمُه، ورغِمَ لك أنفُه. اللَّهُمَّ لا تَجعَلْني بدعائِك شقيًّا، وكُنْ بي رؤوفًا رحيمًا يا خيرَ المسؤولِينَ، ويا خيرَ المُعطِينَ

யா அல்லாஹ், நீ என் வார்த்தைகளைக் கேட்கிறாய், என் இடத்தைக் காண்கிறாய், என் இரகசியங்களையும் என் பகிரங்கச் செயல்களையும் அறிவாய். என்னைப் பற்றி எதுவும் உனக்கு மறைவானதல்ல. நான் துயருற்றவன், ஏழை, அடைக்கலம் தேடுபவன், அச்சம் கொண்டவன், கவலைப்படுபவன், ன் பாவத்தை ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்பவன். ஏழையாய் மன்றாடி உன்னிடம் கேட்கிறேன்,

தாழ்மையான பாவியின் மன நிலையில் உன்னிடம் மன்றாடுகிறேன், அச்சம் கொண்டவனாக் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். நோயுற்றவனாக உன்னை அழைக்கிறேன்; உனக்குகாக வளைந்து னிற்கிறேன். ன்னிடம் கண்ணீர் வடிப்பக்கிறேன், உனக்கு முன் பணிந்து நிற்கிறேன். உனக்காக என மூக்கை தரையில் தேய்க்கிறேன். யா அல்லாஹ், உன்னிடம் நான் செய்யும் பிரார்த்தனையில் என்னைத் துயருற்றவனாக்காதே, எனக்குக் கருணையும் இரக்கமும் காட்டுவாயாக, கேட்கப்படுகிறவர்களில் சிறந்தவனே, யா கொடுப்பவர்களிலேயே சிறந்தவனே. ( என் கோரிக்கைகளை ஏற்பாயாக!

 இந்த பிரார்த்தனை என்ன உருக்கம் பாருங்கள்.

நாம் யார் ? நாம்  யாரிடம் பிரார்த்தனை செய்கிறோம் அவன் தராமல் போனால் என்ன ஆகும் என்பதை முழுமையாக உள் வாங்கிக் கொண்ட பிரார்த்தனை அல்லவா இது

 இன்னொரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்ட துஆ வை பாருங்கள்

 தாயிப் நகரில் இருந்து திரும்பும் போது மலைகளின் மலக்கு நான் இநத மலையை பிடிங்கி எடுத்து இவர்களை அழித்து விடட்டுமா என்று கேட்ட போது வேண்டாம் என அதை மறுத்து விட்டு பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இப்படி பிரார்த்தித்தார்கள்.

 اللَّهمَّ إليكَ أشكو ضَعفَ قوَّتي، وقلَّةَ حيلَتي، وَهَواني علَى النَّاسِ... أنتَ أرحمُ الرَّاحمينَ، أنتَ ربُّ المستضعفينَ، وأنتَ ربِّي... إلى من تَكِلُني؟ إلى بعيدٍ يتجَهَّمُني أَمْ إلى عدُوٍّ ملَّكتَهُ أمري. إن لم يَكُن بِكَ غضبٌ عليَّ فلا أبالي، غيرَ أنَّ عافيتَكَ هيَ أوسعُ لي.. أعوذُ بنورِ وجهِكَ الَّذي أشرَقت لهُ الظُّلماتُ، وصلُحَ علَيهِ أمرُ الدُّنيا والآخرةِ، أن يحلَّ عليَّ غضبُكَ، أو أن ينزلَ بي سخطُكَ. لَكَ العُتبى حتَّى تَرضى، ولا حولَ ولا قوَّةَ إلَّا بِكَ

யா அல்லாஹ், என் பலவீனத்தையும், சக்தியின் பற்றாக்குறையையும், மக்களின் பார்வையில் நான் ஒரு பொருட்டாக மதிக்கப்படாததையும் குறித்து உன்னிடம் முறையிடுகிறேன். நீயே கருணையாளர்களிலேயே மிகவும் கருணையாளன், நீயே ஒடுக்கப்பட்டோரின் இறைவன், நீயே என் இறைவன்.

 

நீ என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்? என்னை இகழ்ந்து பார்க்கும் ஒரு தொலைதூர அந்நியனிடமா, அல்லது என் மீது அதிகாம் மிக்க எதிரியிடமா?  நீ என் மீது கோபம் கொள்ளவில்லை என்றால்அது போதும் எனக்கு.

 உன்னுடைய அருள் எனக்கு மிகவும் பரந்தது. உன்னுடைய திருமுகத்தின் ஒளியில் நான் அடைக்கலம் தேடுகிறேன், அதன் மூலம் இருள் அகற்றப்பட்டு, இவ்வுலக மற்றும் மறுமையின் காரியங்கள் சீர் செய்யப்படுகின்றன, உன்னுடைய கோபம் என் மீது இறங்குவதிலிருந்தோ அல்லது உன் சீற்றம் என் மீது விழுவதிலிருந்தோ நான் பாதுகாப்பு தேடுகிறேன் . நீ திருப்தி அடையும் வரை உன்னிடம் நான் மன்றாடுகிறேன், உன்னைத் தவிர வேறு எந்த சக்தியும் வலிமைமையாது இல்லை.

 பெருமானாருக்கு அல்லாஹ் கொடுத்த அந்தஸ்த்து அதன் பின்னரும் அவர்கள் அல்லாஹ்விடம் பணிந்து நின்ற கோலத்தை எண்ணிப் பாருங்கள்.

  நமது பிரார்த்தனைகளை இந்த வடிவத்தில் நாம் அமைத்துக் கொள்ளும் போது நமது பிரார்த்தனை பணிவும் உருக்கமும் நிறைந்த்தாக மாறும்.  

 உருதுவில் சொல்வார்கள் .துஆ பட்னேமே துஆ மான்க்னேமே பர்க் ஹே

 துஆ வை படிப்பதற்கும் துஆ கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

 நாம் துஆ கேட்க வேண்டும்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

 

 


No comments:

Post a Comment