ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني
عن العالمين ) {آل عمران: 97}
அல்லாஹ்வின் கிருபையால இந்த ஆண்டின் ஹஜ் தொடங்கிவிட்ட்து.
இந்தியாவிலிருந்து
முதல் விமானம் நாளை 7ம் தேதி வாரணாசியிலிருந்து
புறப்படுகிறது. தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலிருந்தும் காஷ்மீரிலிருந்தும் நாட்டின்
மற்ற பகுதிகளிலிருந்தும் புனிதப் பயணிகள் ஹஜ்ஜூக்கு புறப்படுகின்றனர்.
இந்த
ஆண்டு மக்கா மதீனாவில் புண்ரமைப்பு பணீகள் நடைபெறுவதாக கூறி வெளிநாட்டு பயணிகளில் சுமார்
20 சதவீதம் பேரையும் உள் நாட்டு பயணிகளில் சுமார் 50 சதவீதம் பேரையும் சவூதி அரசு குறைத்துள்ளது.
கடந்த
ஆண்டு சுமார் 31 இலட்சத்தும் 61 ஆயிரம் பேர் சட்ட பூர்வமாக ஹஜ்ஜை நிறைவேற்றியுள்ளனர்.
அரசின் முறையான அனுமதியின்றி ஹஜ் செய்தவர்களின் எண்ணிக்கையை சேர்த்தால் கடந்த ஆண்டு
ஹஜ் செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 40 இலட்சத்தை தொடும்.
வழக்கமாக
இந்தியாவில்ருந்து சுமார் 1,70,000 பேர் ஹஜ்ஜுக்காக செல்வார்கள் இந்த ஆண்டு அதில்
34 ஆயிரம் பேருக்கு அனுமதி குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஹஜ்
கமிட்டி மூலமாக 1,21,420 பேரும் மற்றவர்கள் தனியார் ஹஜ் சர்வீஸ்கள் மூலமும் ஹஜ் செய்ய
உள்ளனர்.
தமிழகத்திலிருந்து
தனியார் சர்வீஸ்கள் மூலம் புறப்ப்படுகிற பயணிகள் 9 ம் தேதியிலிருந்தும், ஹஜ் கமிட்டி
மூலம் பயணிக்கிற பயணிகள் இன்ஷா அல்லாஹ் வருகிற 24 ம் தேதியிலிருந்தும் பயணமாக உள்ளனர்.
.
இந்த
ஹாஜிகளுடையவும் உலகம் முழுவதிலிருந்தும் வந்து திரள்கிற ஹாஜிகளுடையவும் ஹஜ்ஜை அல்லாஹ்
அங்கீகரித்தருள்வானாக! அவர்களது பயணத்தை இலேசாக்குவானாக! இந்த ஆண்டின் ஹஜ்ஜை எல்லாவகையான ஆபத்துக்களிலிருந்தும்
அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஒவ்வொரு
முறை ஹஜ்ஜுக்காக ஹாஜிகள் புறப்படுகிற போதும் இந்த உலகம் நன்றி செலுத்துவதற்குரிய ஒரு
கடமையாக அது அமைகிறது.
ஏனெனில்
ஹஜ் செல்பவர்கள் இல்லாமல் போனால் கியாமத் நாள் வந்து விட்டது என்று பொருள்.
قال رسول الله صلى الله عليه وسلم : "لا تقوم الساعة حتى لا يحج
البيت"
பணவசதி
படைத்தவர்கள் உடனடியாக ஹஜ்ஜுக்கு சென்று விட வேண்டும். இல்லை எனில் அவர்கள் அல்லாஹ்வின்
சட்டத்தை அமுல் படுத்தாமல் இருக்கிறார்கள் என்று மட்டுமல்ல இந்த உலகத்தின் அமைதியிலும்
பாதுகாப்பிலும் அவர்களுக்கு அக்கறை இல்லை என்றும் அர்த்தமாகிவிடும்.
என்வே
ஹஜ்ஜுக்கு செல்பவர்களை நாம் நன்றியோடு துஆ செய்து வழியனுப்பி வைப்போம்
இபுனு
உமர் ரலி இப்படி வழியனுப்புவார்கள்
قال
سالم: كان ابن عمر رضي الله عنهما يقول للرجل - إذا أراد سفرا - أدن مني اودعك،
كما كان رسول الله صلى الله عليه وسلم يودعنا، فيقول: «استودع الله دينك، وأمانتك
وخواتيم عملك».
உனது மார்க்கத்தையும். நம்பகத்தன்மையையும் உனது செயல்களின் முடிவையும்
அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன்,
இன்னொரு ஹதீஸ் இப்படியும் சொல்கிறது
وعن أبي هريرة، أن رجلا
قال: يا رسول الله صلى إني أريد أن أسافر فأوصني، قال: «عليك بتقوى الله عز وجل،
والتكبير على كل شرف» فلما ولى الرجل قال: «اللهم اطو له البعد وهون عليه السفر». قال الترمذي: حديث حسن.
ஹஜ் பயணிகளிடம் துஆ
செய்யுமாறு கோர வேண்டும்
இன்றைய கால கட்டத்தில்
துஆ செய்யுங்கள் என்று சொல்வது அரிதாகி வருகிறது.
قال عمر رضي الله عنه: استأذنت النبي صلى الله
عليه وسلم في العمرة، فأذن لي، وقال: «لا تنسنا يا أخي من دعائك» فقال: كلمة ما
يسرني أن لي بها الدنيا رواه أبو داود، والترمذي وقال: حديث حسن صحيح.
பெரியர்வகளை
சந்தித்தால் துஆ செய்யுங்கள் என்று கேட்கிற பழக்கத்தை நம்முடைய பிள்ளைகளுக்கு ஏற்படுத்த
வேண்டும்.
ஹஜ்ஜுக்கு செல்கிற பயணி வீட்டிலிருந்து கிளம்புற போது இரண்டு
ரக அத் தொழுது கொள்ள வேண்டும்
عن
المطعم بن المقدام رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال: «ما خلف
أحد عند أهله أفضل من ركعتين يركعهما عندهم حين يريد سفرا» رواه الطبراني
வீடு உடைமைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை முதலில் அல்லாஹ்விடம்
ஒப்ப்டைக்க வேண்டும்-
اللهم
أنت الصاحب في السفر، والخليفة في الاهل
عن
ابن عباس رضي الله عنهما قال: كان النبي صلى الله عليه وسلم إذا أراد أن يخرج إلى
سفر قال: «اللهم أنت الصاحب في السفر، والخليفة في الاهل، اللهم إني أعوذ بك من
الضبنة في السفر، والآبة في المنقلب، اللهم اطولنا الأرض، وهون علينا السفر» وإذا
أراد الرجوع قال: «آيبون تائبون عابدون لربنا حامدون» وإذا دخل على أهله قال: «توبا
توبا لربنا أوبا، لا يغادر علينا حوبا» رواه أحمد،
பிறகு பக்கத்து வீட்டுக்காரர்களிடமும்
சொந்தக் காரர்களிடமும் சொல்ல்க் கொள்ளலாம்
ஹஜ்ஜுக்கு பயணம் செல்வோர்
கவனிக்க வேண்டிய செய்தி
இந்தப் பயணம் பணத்தாலோ கல்வியாலோ அந்தஸ்தாலோ கிடைப்பது அல்ல.
ஹாஜிகள் அல்லாஹ்வின் குழுவினர்.
عن أَبي هُرَيْرَةَ : قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدُ اللَّهِ ثَلَاثَةٌ الْغَازِي
وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ - النسائي
அல்லா நாடியவர்களுக்கு மட்டுமே இந்த தூதுக்குழ்வில் இடம் கிடைக்கிறது.
பல
அரசர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்ததில்லை. பலர் விமானத்தின்
வாசல் வரை சென்று நிறைவேற்ற முடியாமல் திரும்பியிருக்கிறார்கள்.
ஊர்க்காரர்களுக்கு
விருந்தெல்லாம் கொடுத்த பிறகு புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக நெஞ்சுவலி வந்ததால்
புறப்பட முடியாமல் போனவர்கள் உண்டு.
என்வே
ஹஜ் பயணிகள் இந்த வாய்ப்பு அல்லாஹ் வழங்கிய பெரும் கொடை என்பதை உணர்ந்து அதற்கேற்ப
இந்தப் பயணம் முழுக்க நடந்து கொள்ள வேண்டும்.
அதே
போல கடைசி நிமிடம் வரை அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
ஹஜ்
கடமையான சிலர் இன்னும் கடமையை நிறைவேற்றாமல் இருக்கின்றனர். ஹாஜிகள் புறப்படுகிற இனிய
காட்சியை பார்த்து தங்களது ஹஜ்ஜை முடிவு செய்து கொளளட்டும்.
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَرَادَ الْحَجَّ فَلْيَتَعَجَّلْ فَإِنَّهُ قَدْ يَمْرَضُ
الْمَرِيضُ وَتَضِلُّ الضَّالَّةُ وَتَعْرِضُ الْحَاجَةُ-إبن ماجة
நேபாளத்திளிருந்து
புறப்படுகிற ஹாஜிகளை வழியனுப்ப வந்தவர்கள் அழுகிற காட்சியை பத்ரிகைகளை படம் பிடித்துப்
போட்டிருந்தன்.
Hajj
pilgrims cry as they prepare to depart for Mecca from the Tribhuvan
International Airport in Kathmandu
என்று செய்தி வெளியிட்டிருந்தன நேபாளத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இப்படித்தேன்,
ஹஜ் வியனுபபு விழாக்களில் ஹஜ் பயணம் செல்வோர்
மட்டுமல்ல வழியனுப்புவோர்
கூட ஒரு வித கிளாச்சியோடும் உற்சாகத்தோடும் பங்கே;றபது இந்த விழாக்களின் சிறப்பம்சம்.
பக்தியுமு; மகிழ்சியும் கண்ணீராக பெருக்கெடுக்கிற தருணம் அது.
வழியனுப்புவோர் பல்வேறுபட்ட கோரிக்கைகளுக்காக எங்களுக்காக துஆ செய்யுங்கள் என்று கேட்பார்கள்
என்னிடம் தொடர்பில்லாமல் இருந்த நான் ஹஜ்ஜுக்கு கிளம்பிய போது
குடும்பத்தோடு வந்து எங்களுக்காக துஆ செய்யுங்கள் என்று கேட்டார்.
அது என்னை மதித்த்து கேட்டதல்ல. நான் செல்லும் இடத்தின் மரியாதையை
தெரிந்து கேட்டதாகும்.
என்வே அப்ப்டை சொல்பவர்களின் கோரிக்கை காது கொடுத்து கேட்டு
புனித தளங்களில் அவருக்காக துஆ செய்ய வேண்டும். தேவை எனில் எழுதி வைத்தும் கொள்ளலாம்.
எல்லோருக்குமா துஆ கேட்டு விட்டு யா அல்லாஹ் அவர்களுக்கு கொடுபதில்
ஒரு பங்கை எங்களுக்கும் கொடு என்று கேட்கலாம்.
மற்றவர்கள் பலவிதமான கோரிக்கையோடு ஹஜ் பயணியை அணுகு கிற ஹஜ்
பயணி எல்லோரிடமும் ஒரே ஒரு துஆவை கேட்கிறார்.
எங்களது ஹஜ் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைய வேண்டும் அதற்காக துஆ செய்யுங்கள்.
இது ஈமானிய குணம். உன்னதமான மனிதர்களின் வழிமுறை. நபி இபுறாகீம் (அலை) கஃபாவை கட்டி முடித்தபிறகு இப்படித்தான் பிரார்த்தனை செய்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ
مِنْ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ
الْعَلِيمُ(127)رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً
مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ
الرَّحِيمُ(128)
இது பற்றிய கவலை ஒரு ஹாஜியின் சிந்தனையை எந்த நேரமும் ஆக்ரமித்து கொண்டிருக்க வேண்டும்.
ஏனெனில் ஓரு முஸ்லிம் ஹஜ்கடமை நிறைவேற்றுவதற்காக வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்து செய்யப்படுவதாக இருந்தாலும் சரி அந்தச் செலவு பிரதானமல்ல. என்னுடைய நண்பர் ஒருவர் இந்தோனேஷியால் கல் வியாபாரம் செய்பவர்;;. ஜகார்த்தாவில் தங்களது வியாபார நிறுவனத்தை விற்றுவிட்டு அதில் கிடைத்த பணத்தை கொண்டு ஹஜ் செய்ததை தான் நேரில் பார்த்ததாக கூறினார். ஏங்களுரில் இந்த ஆண்டு ஹஜ்கடமை நிறைவேற்ற இருக்கிறவர்களில் ஒரு தம்பதியினர் தங்களது பெரிய வீட்டை விற்று ஹஜ்ஜுக்கு செல்கின்றர். ஓரு பெண்மணி தன்னிடமிருந்த நகைகளை விற்று ஹஜ்ஜுக்கு செல்கிறார். ஆயினும் இநத்தகைய செலவுகளால் ஒரு ஹாஜி மகிமை அடைந்துவிடுவதில்லை.
அதுபோலவே பாலைவனத்தின் வெயிலும் குளிரும் அச்சம் தருகிற அளவு ஆபத்தானவை. அத்Nதூடு அந்தக் கூட்டமும் சாமாண்யர்களை மிரள வைக்கக் கூடிய அளவு நெருக்கடி தரக்கூடியது அதனால் ஹாஜி அனுபவிக்கிற சிரமங்கள் ஏரளமானவை என்றாலும் அந்தச் சிரமம் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இத்தகைய சிரமங்களை தாங்கிக் கொள்வதால் ஒரு ஹாஜி சிறப்புற்று விடுவதில்லை.
ஹஜ்ஜுக்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதோ எத்தகைய சிரமங்களை ஏற்கிநோம் எக்பதோ பெரிதல்ல. அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே பிரதானம் என்பதை ஒவ்வொரு ஹாஜியும் உணர்ந்திருக்கிறார் அதனால் தான் எந்த ஒரு மனிதரைச் சந்தித்தாலும் அவர் சிறியவரோ பெரியவரோ அங்கீகரிக்ப்பட்ட ஹஜ்ஜுக்காக பிரார்த்தியுங்கள் என்று கேட்க அவர் தயங்குவதில்லை. இந்தச் செலவுகளும் சிரமங்களும் அப்பொது தான் அர்த்தம் உடையதாக அமையும் என்பதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.
அதுபோலவே பாலைவனத்தின் வெயிலும் குளிரும் அச்சம் தருகிற அளவு ஆபத்தானவை. அத்Nதூடு அந்தக் கூட்டமும் சாமாண்யர்களை மிரள வைக்கக் கூடிய அளவு நெருக்கடி தரக்கூடியது அதனால் ஹாஜி அனுபவிக்கிற சிரமங்கள் ஏரளமானவை என்றாலும் அந்தச் சிரமம் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இத்தகைய சிரமங்களை தாங்கிக் கொள்வதால் ஒரு ஹாஜி சிறப்புற்று விடுவதில்லை.
ஹஜ்ஜுக்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதோ எத்தகைய சிரமங்களை ஏற்கிநோம் எக்பதோ பெரிதல்ல. அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே பிரதானம் என்பதை ஒவ்வொரு ஹாஜியும் உணர்ந்திருக்கிறார் அதனால் தான் எந்த ஒரு மனிதரைச் சந்தித்தாலும் அவர் சிறியவரோ பெரியவரோ அங்கீகரிக்ப்பட்ட ஹஜ்ஜுக்காக பிரார்த்தியுங்கள் என்று கேட்க அவர் தயங்குவதில்லை. இந்தச் செலவுகளும் சிரமங்களும் அப்பொது தான் அர்த்தம் உடையதாக அமையும் என்பதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் ஹஜ் அங்கீகரிக்ப்படுவது என்பது இரண்டாம் மனிதரின் பிராhத்தனையோடு சம்பந்தப்பட்டிருப்பதை விட ஹஜ்ஜுக்கு செல்வோரின் சிந்தனையோடும் செயலோடும் தான் அதிக தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை ஹாஜி புரிந்து கோள்ள வேண்டும்.
ஒரு நற்செயல் இறைவனது அங்கீகாரத்தை பெறவேண்டுமானால் அதைற்கு தேவையான அம்சங்கள் என்ன? என்பது குறித்து மழு விழிப்புணர்வும் அவரிடம் இருக்க வேண்டும்.
ஹஜ்ஜின் போது கைகொள்ள வேண்டிய விஷேசமான கட்டுப்பாடுகள் குறித்தும் அவர் எச்சரிக்கை அடைய வேண்டும். இந்த விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தான்; அதிக செலவு பிடிக்கிற சிரமமான ஹஜ் என்கிற கடமையை ஹஜ்ஜன் மக்பூலன் வ மப்ரூரன் அங்கீகரிக்ப்பட்ட நல்ல ஹஜ் என்ற அந்தஸத்திற்கு எடுத்துச் செல்லக் கூடியவை.
ஹாஜி அன்று பிறந்த குழந்தை போல வீட்டுக்கு திரும்புகிறார் என்ற நபிமொழியை கவனித்தப் பாருருங்கள்.
عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ
يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ
நூல புகாரி -1521)
இந்நபி மொழியில் கூறப்பட்டுள்ள இரண்டு அம்சங்கள் எந்த நிலையிலும் ஹாஜி நினைவில் வைக்க வேண்டியவை.
முதலாவது, ஹஜ் அல்லாஹ்வுக்காகவே நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த வாசகம் ஒரு முஸ்லிம் அடிக்கபடி கேள்விப் படுகிற அல்லது உபயோகப்படுத்தகிற வாசகம் எனினும் அவர் அதிகமாக ஏமாறுகிற விசயமும் இது தான்
ஹாஜி இந்த ஏமாற்றுத்திற்கு ஒரு போதும் ஆளாகிவிடக் கூடாது. நான் அல்லாஹ்விற்காக இந்தக் கடமையை நிiவேற்றுகிறேன் என்பதை திரும்பத்திரும்ப அவருக்கே கேட்கிற வகையில் அவர் சொல்லிக் கொள்வது நல்லது. இஹ்லாஸ் என்ற எண்ணத்தூய்மை பெற அது உதவும்.
ஹஜ்ஜுக்காக தயாராகிக்
கொண்டிருப்போர் இரவு நேரத்தில் தனிமையில் அல்லது தஹஜ்ஜது தொழுது விட்டு உட்கார்ந்து
கொண்டு “ நான்
ஏன் ஹஜ்ஜுக்குப் போகிறேன்”எனற் கேள்வியை
தமக்குள் கேட்டுக் கொள்ள் வேண்டும்
நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது என்பதோ, பணவசதி இருப்பதால் கிடைத்த வாய்ப்பு என்றோ, ஒரு சுற்றுலா அனுபவம் என்றோ, ஹாஜி என்ற பட்டம் கிடைக்கும் என்றோ அல்லது எந்தச் சிந்தனையும் அற்ற ஒரு கிளாச்சியூட்டும் பயணமாகவோ ஒரு ஹாஜி தன் பயணத்தை அமைத்துக் கொண்டு விடக் கூடாது. இது அல்லாஹ்வுக்கான பயணம். மனிதர்களிடமிருந்து கிடைக்கிற எந்தப் புகழும் மரியாதையும் என்கு பிரதானமல்ல. இதன் நற்கூலியை நான் மறுமையில் எதிர்பார்க்கிறேன் என்கிற விசயத்தை அறிவும் மனதும் தெளிவடையும் வண்ணம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது தன்னுடைய ஹஜ் அங்கீகரிகப்பட வேண்டும் என்று நினைக்கிற ஒரு ஹாஜியின் முதல் கடமையாகும்.
ஏகிப்து நாட்டைச் சார்ந்த துன்னூன் (இறப்பு ஹி 245) என்ற பெருந்தகை உள்ளத்துஸய்மையோடு ஒரு காரியம் நிறைவேற்றப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள மூன்று அடையாளங்களைச் சொல்கிறார்.
1.
மக்களிடமிருந்து கிடைக்கிற மரியாதை அவமரியதை இரண்டையும் சமமமாக கருதுதல்
2.
நான் நற்செயல் ஒன்று செய்தேன் என்ற எண்ணத்தை மறந்தவிடுதல்
3. நற்செயலுக்கான பிரதிபலனை மறுமையில் எதிர்பார்த்தல்.
ஓரு ஹாஜி இந்த அளவுகளில் தனது உள்ளத்த}ய்மையை அளவிட்டுக் கொள்ளலாம். தேவயானால் சீர்செய்தும் கொள்ளலாம். ஒரு உன்னதமான வணக்கம் வெறும் பகட்டாக இல்லாமல் உரிய உயரிய அந்தஸ்த்தை பெற இது உதவும்.
நபிமொழி தருகிற இரண்டாவது எச்சரிக்கை ஹாஜி, ஹஜ்ஜை மாசுபடுத்துகிற செயல்களை செய்யக் கூடாது.
ஹாஜி அவர் செல்லும் இடத்தின் புனிதத்தனமையை எல்லா நிலையிலும் மனதில் நிறுத்த வேண்டும். மக்காவும் மதீனாவும் சட்பூர்மாக புனித இடங்களாக அறிவிக்கப்பட்டவை. அங்கு செய்யப்படகிற நற்செயல்களுக்கு அதிக மரியாதை உண்டு.
ஹாஜி அவர் செல்லும் இடத்தின் புனிதத்தனமையை எல்லா நிலையிலும் மனதில் நிறுத்த வேண்டும். மக்காவும் மதீனாவும் சட்பூர்மாக புனித இடங்களாக அறிவிக்கப்பட்டவை. அங்கு செய்யப்படகிற நற்செயல்களுக்கு அதிக மரியாதை உண்டு.
إِنَّمَا أُمِرْتُ أَنْ أَعْبُدَ رَبَّ هَذِهِ الْبَلْدَةِ الَّذِي حَرَّمَهَا وَلَهُ كُلُّ شَيْءٍ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنْ الْمُسْلِمِينَ((27:91)
)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வே மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்கு புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். ஏனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூழய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தை சிந்தவதோ இங்குள்ள மரம், செடி கொடிகளை வெட்டுவதொ அனுமதிக்கப்படவில்லை.
அல்லாஹ்வே மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்கு புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். ஏனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூழய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தை சிந்தவதோ இங்குள்ள மரம், செடி கொடிகளை வெட்டுவதொ அனுமதிக்கப்படவில்லை.
மற்றொரு நபிமொழி பின்வரமாறு கூறுகிறது
அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான் எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போர் செய்வது) அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பின் எவருக்கும் அனுமதிக்கப்படாது. எனக்குக்கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது. எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. இங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக்கூடாது. யாரெனும் தவறவிட்ட பொருட்களை அது பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர மற்றவர்கள் எடுக்கக்வுடாது. என்று நபி (!ல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே, எங்;கள் அடக்கக் குழிகளுக்கும் கொல்லத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகின்ற இத்கிர் வாசனைப் புல்லைத் தவிரவா, என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இத்கிர் எனும் புல்லைத் தவிர என்று கூறினார்கள்.
வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது என்பதன் பொருள் நிழலில் படுத்திருக்கும் அதை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தங்குவதுதான் என்று அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள்; விளக்கம் கூறினார்கள். (புகாரி 1833
அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான் எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போர் செய்வது) அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பின் எவருக்கும் அனுமதிக்கப்படாது. எனக்குக்கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது. எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. இங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக்கூடாது. யாரெனும் தவறவிட்ட பொருட்களை அது பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர மற்றவர்கள் எடுக்கக்வுடாது. என்று நபி (!ல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே, எங்;கள் அடக்கக் குழிகளுக்கும் கொல்லத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகின்ற இத்கிர் வாசனைப் புல்லைத் தவிரவா, என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இத்கிர் எனும் புல்லைத் தவிர என்று கூறினார்கள்.
வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது என்பதன் பொருள் நிழலில் படுத்திருக்கும் அதை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தங்குவதுதான் என்று அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள்; விளக்கம் கூறினார்கள். (புகாரி 1833
قَالَ إِنَّ مَكَّةَ حَرَّمَهَا اللَّهُ
وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ فَلَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ
الْآخِرِ أَنْ يَسْفِكَ بِهَا دَمًا وَلَا يَعْضِدَ بِهَا شَجَرَةً فَإِنْ أَحَدٌ تَرَخَّصَ
لِقِتَالِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا فَقُولُوا إِنَّ
اللَّهَ قَدْ أَذِنَ لِرَسُولِهِ وَلَمْ يَأْذَنْ لَكُمْ وَإِنَّمَا أَذِنَ لِي فِيهَا
سَاعَةً مِنْ نَهَارٍ ثُمَّ عَادَتْ حُرْمَتُهَا الْيَوْمَ كَحُرْمَتِهَا بِالْأَمْسِ
وَلْيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றொரு சமயம் மக்காவை பார்த்து பின்வருமாறு கூறினார்கள்.இது பூமியிலுள்ள சிறந்த இடமாகும். அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமான இடமாகும். நூன் நிர்பந்மாக வெளியேற்றப்படடிருக்காவிட்டால் இந்த இடத்திலிரந்து வெளியேறியிருக்க மாட்டேன் (அஹ்மது)
மக்காவைப் போலவே மதீனாவும் புனித பூமி என்ற சிறப்புத் தகுதியை சட்டரீதியாக பெற்றுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(ஒரு பயணத்திலிருந்து திரும்பி வரும் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உஹத் மலை தென்பட்டது. உடனே, இந்த மலை நம்மை நேசிக்கின்றது நாமும் இதை நேசிக்கின்றோம். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா நகரைப் புனிதமானதென அறிவித்தார்கள். நான் இரு மலைகளுக்கு இடையில் இருக்கும் மதீனா நகரை புனிதமானதென அறிவிக்கிறேன் என்று சொன்னார்கள். (புகாரி 7333)
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அதன் மரம் (எதுவும்) வெட்டப்படக் கூடாது. அதில் யார் புதிதாக (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றை உருவாக்குகின்றானோ அவன் மீது அல்லாஹ் வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும் என்று கூறினார்கள்.
மதீனாவின் ஒரு பகுதியை சொர்க்கத் தோட்டம் என்று பெருமானார் (ஸல்)அவர்கள் அறிவித்துள்ளார்கள். என் வீட்டிற்கும் என் சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் இடையே சொர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்;கா உள்ளது. என் சொற்பொழிவு மேடை (மிம்பர்) எனது (கவ்ஸர்) தடாகத்தின் மீதுள்ளது. என்று அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் (புகாரி 7335)
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தெழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர. ஏன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி 1190)
இது போல இன்னும் ஏராளமான நபிமெழிகள் மக்கா மதீனா நகரின் புனிதத்தன்மையை பற்றியும் அங்குநடற்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் பேசுகின்றன. எனவே ஒரு ஹாஜி இது அல்லாஹ்வினாலும் அல்லாஹ்வின் தூதராலும் புனிதப்படுத்தப்பட்ட இடம் என்ற மரியாதையை மனதில் இருத்திச் செயல்பட்டால் அவரது ஹஜ் அங்கீகாரம் பெறத்தேவையான அம்சங்கள் அனைத்தும் அவரிடம் தானவே வந்துவிடு;ம்.
புனிதமான இடங்களில் நற்காரியங்களுக்கு அதிக நன்மை கிடைப்பது போலவே தீயசெயல்கள் பெருங்குற்றங்களாக ஆகிவிடும் ஆகவே ஹாஜி ஹஜ்ஜுக்கு ஊறுவிளைவிக்கும் செயலையம் செய்யக் கூடாது. பிற ஹாஜிகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயலையும் செய்யக் கூடாது.
இதிலும் எச்சரிக்கை மிகவும் அவசியம். சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் சாஹிப் சமீபத்தில் தான் ஹஜ்ஜீக்கு சென்ற போது முதல் நாளில் நடற்த அதிர்சிசியான தொரு அனுபவத்தை சொன்னார். அவர் உணவருந்துவதற்காக ஹஜ் சேவை நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு சென்ற போது அங்கு கூட்டம் நிறைந்து காணப்பட்டிருக்கிறது. ஒரு பெரியவர் தனக்குப் பக்கத்தில் உள்ள இடத்தை வேறு யாரும் உட்கார்ந்து விடாதபடி துண்டை போட்டு ஒதுக்கீடு செய்து வைத்துள்ளார். அருகில் போய் யாரும் இங்கு வருகிறார்களா என்று கேட்டிருக்கிறார். அது தான் விவகாரமாகிவிட்டது. அந்தப் பெரியவர் வாயில்வந்தபடி கெட்ட வார்த்தைகள் பேச ஆரம்பித்திருக்கிறார். அவ்வார்த்தைகளை கேட்டு அந்த சாப்பாட்டு அரங்கமே அதிர்ச்சியல் உறைந்துவிட்டது என்று அவர் சொன்னார்.
பெருமானாரின் தோழர்கள் எப்படி நடந்த கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிப்பது ஹாஜிகளுக்கு போதுமான எச்சரிக்கை தரும்.
அப்துல்லாஹ்பின உமர் (ரலி) அவர்கள் மக்காவிற்கு வருகிற பொது ஹரமுடைய எல்லைக்கு வெளியே ஒரு கூடாரம் அடித்து வைத்திருப்பார்கள். தனது பணியாளர்களுக்கு உத்தரவிடுவதானால் அந்த இடத்திற்கு வந்தவிடுவார்கள். பணியாளர்களை கண்டிக்கிற பொது தடிப்பமான வார்த்ததைகள் வந்துவிடக்கூடும். அவ்வார்த்தைகள் ஹரமின் புனிதன்மைக்கு புறம்பானதாகி தனது குற்றம் பெரிதாகிவிடக்கூடும் என்பதற்காக இவ்வாறு செய்வார்கள் என வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
எனவே ஹாஜி இஹ்ராமுடைய நிலையில் மனைவியோடு சல்லாபிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பது போலவே சக ஹாஜிகளுக்கு சங்கடம் தருவதையும் தவிர்கக வேண்டும். வார்த்தகைளால் வழக்ககாடுவதை தவிர்க்க வேண்டும்.
லட்சக்கணக்கானோர் கோடிக்கணக்கான பொடிக்கற்களை ஜம்ராவிலுள்ள தூனை நோக்கி எறிகிறார்கள். அங்கு வீசப்படுகிற கற்கள் என்னவாகின்ற என்று நபித்தோழர் அபூஸஈதில் குத்ரீ (ரலி)அவர்கள் பொருமானாரிடம் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். யாருடைய ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானோ அவர் வீசும் கற்களை மலக்குகள் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். (மஆரிபுல்குர்ஆன். பாகம் 1 பக்கம் 88)
தான் வீசிய கல் எங்கே சென்றது என்பதை ஹாஜி தன் கண்ணால் பார்க்க முடியாது என்றாலும் அது எங்கெ சென்றிருக்கக் கூடும் என்பதை தனது நடைமுறைகளை வைத்து அவர் யூகித்துக் கொள்ள முடியும்.
தான் வீசிய கல் எங்கே சென்றது என்பதை ஹாஜி தன் கண்ணால் பார்க்க முடியாது என்றாலும் அது எங்கெ சென்றிருக்கக் கூடும் என்பதை தனது நடைமுறைகளை வைத்து அவர் யூகித்துக் கொள்ள முடியும்.
இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் புறப்படுகிற அனைவரின் ஹஜ்ஜையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக! பயணத்தை இலேசாக்குவானாக! ஹஜ்ஜை பாதுகாப்பானதாக்
ஆக்குவானாக! ஹாஜிகள் சலாமத்தாக தாயகம் திரும்ப தவ்பீக் செய்வானாக! அது வரை ஹஜ் பயனிகளின்
குடும்பத்திற்கு நிறுவனங்கள் அவனே பாதுகாவலனாக இருப்பானாக! நம் அனைவருக்கும் அரோக்கியத்தோடு
ஹஜ்ஜை நிறைவேற்றும் நஸீபை தந்தருள்வானாக! அருமை நாயகம் (ஸல்) அவர்களை சந்திக்கிற நஸீபை
தந்தருள்வானாக!
No comments:
Post a Comment