வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, September 11, 2013

ஏழைகளின் ஹஜ்

ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين ) {آل a: 97}


ஹஜ்ஜுக்கு புனிதப்பயணிகளை வழியனுப்புகிற போது இப்படி ஒரு வாய்ப்பு தமக்கு கிடைக்க வேண்டும் என மற்றவர்களும் ஆசைப்படுவது வாடிக்கை.


அந்த ஆசை ஈமானிய குணம். கஃபாவை காண வேண்டும். மதீனாவுக்கு போக வேண்டும் என்று ஆசைப்படாமல் எப்படி ஒரு முஃமின் இருக்க முடியும்.

கஃபாவும் புனித மக்கா மதீனா நகரில் இருப்பவை பலவும் பூமியில் இருக்கிற அல்லாஹ்வின் அடையாளங்கள். ஒரு காதலன் தன் காதலியின் அடையாளங்களை எப்படி நேசிப்பானோ அது போல இறையடியார்கள் இறைவனின் அடையாளங்களை நேசிப்பார்கள்.


ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ(32)

அதனால் அந்த ஆசை அவசியமே!

அப்படி ஆசைப்படுகிற போது – எல்லோரும் போகிறார்கள் நாமும் போக வேண்டும் என்று நினைக்காமல் கஃபாவை கண்ணியப்படுத்துகிற நோக்கில் அங்கு போக வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.


இறைவா கஃபாவை கண்ணியப்படுத்துகிற நோக்கில் அதை ஒரு முறைக்கு பல முறை தரிசிக்கிற வாய்ப்பை தந்தருள் வாயாக என்று பிரார்த்தனை செய்வோம். அல்லாஹ் கிருபை செய்வானாக

அதே நேரத்தில் வாய்ப்புக் கிடைக்காவிட்டால் கவலைப்பட்த் தேவையில்லை. வேதனையடைய வேண்டியதில்லை.


வேலூர் அல்பாக்கியாதுஸ்ஸாலிஹாத் அரபுக்கல்லூரியில் நீண்ட காலம் முதல்வராக இருந்த இந்தியாவின் மிகச்சிறந்த சட்ட அறிஞர்

அல்லாமா ஷேக் ஆதம் (ரஹ்) அவர்கள் பாகியாத்தின் முதல்வராக இருந்த கால கட்ட்த்தில் ஹஜ்ஜுக்கு சென்றிருக்க வில்லை. பல பிரமுகர்களும் அவரை அணுகி “ஹஜ்ரத நீங்கள் ஹஜ்ஜுக்கு கிளம்புங்கள் நாங்கள் தேவையான ஏற்பாட்டை செய்கிறொம் என்றார்கள். அதற்கு ஹஜ்ரத் சொன்னார்கள். எனக்கு ஹஜ் கடமை இல்லை.


நான் சிலிர்ப்படைந்த நிக்ழ்ச்சி இது. ஒரு சட்ட அறிஞரால் மட்டுமே இப்படி பதில் சொல்ல முடியும்.


ஹஜ்ரத அவர்களின் 96 வயதில் ஊரிலிருந்த ஒரு சொத்தை விற்று அதில் பணம் கிடைத்த போது ஹஜ் செய்தார்கள். அடுத்த ஹஜ்ஜுக்குள் வபாத்தாகிவிட்டாகள்.


அதனால் ஹஜ் கடமையாகத மக்கள் ஹஜ் செய்ய மூடியவில்லையே என்று ஆழ்ந்த கவலை கொள்ளத் தேவையில்லை.


ஹஜ்ஜை கடமையாக்கிய இறைவன் வசயுடையவர்களுக்கு கடமை என்று தான் சொல்லியிருக்கிறான்.


அதே நேரத்தில் ஏழைகள் ஹஜ்ஜுக்கு நிகராக ஏன் ஹஜ்ஜை விட அதிகம் நன்மையை தருகிற நல் அமல்களை பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள். அந்த அமல்களை இஹ்லாஸோடு நிறைவேற்றலாம்.


இஷ்ராக் தொழுகைக்கு உம்ராவின் நன்மை


فمن صلى الصبح في جماعة ثم جلس في مصلاه يذكر الله تعالى حتى تطلع الشمس ثم صلى ركعتين كان له مثل أجر حجه وعمره تامة تامة تامة. رواه الترمذي وحسنه الألباني في الصحيحة رقم 3403 .


ஜும் ஆவுக்கு முதலில் வந்தால் ஹஜ்ஜில் குர்பனி கொடுத்த நன்மை

ஜும் ஆவுக்கு சீக்கிரமக வந்ந்தால் ஒரு ஒட்டகத்தை குர்பானி கொடுத்த்து போல என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இதில் அவர்கள் பயன்படுத்தி பத்னத் என்ற வார்த்தை ஹஜ்ஜின் போது குர்பானி கொடுக்கிற ஒட்டகத்திற்கு சொல்ல்ப்படும்.


ومن بكر إلى الجمعة فراح في الساعة الأولى فكأنما قرب بدنه , والبدنه: هي الناقة التي تهدى إلى بيت الله الحرام في الحج والعمرة ولهذا قال النبي صلى الله عليه وسلم (فكأنما قرب بدنه) ولم يقل فكأنما تصدق بناقة. فليست كل ناقة بدنه.

ஜும் ஆவுக்கு முந்திச் சென்றால் ஒவ்வொரு வாரமும் இந்த் நன்மை கிடைக்கும் என்பதனால் சில் தாபிஃக்ள் நபிலான ஹஜ்ஜைவிட ஒவ்வொரு வாரமும் செய்கிற இந்த் வணக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

قال سعيد بن المسيب( هو أحب إلي من حجة النافلة).


ஜும்ஆ ஏழைகளின் ஹஜ் என்று ஒரு ஹதீஸ் இருக்கிறது. செல்வந்தர்களுக்கு வருடத்தில் ஒரு ஹஜ்தான். ஏழைகளுக்கு வருடத்தில் 50 க்கும் மேற்பட்ட ஹஜ்கள்


ويروى بسند ضعيف (الجمعة حج المساكين) فطوبى لمن حج في الشهر أربع مرات وفي العام أكثر من خمسين مرة مع أنه لم يسافر إلى بيت الله الحرام ولم يتجشم أعباء السفر الجسام خاصة إذا حرص على الاغتسال للجمعة واحتسب خطواته إليها وراح في الساعات الأولى وسبق إلى الصف الأول ودنا من الأمام فاستمع وأنصت ولم يلغ كما جاء في الحديث ( من غسل واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة يخطوها أجر سنة صيامها وقيامها).


வீட்டிலிருந்து ஒளு செய்து கொண்டு கடமையான தொழுகையை நிறைவேற்ற வந்தால்... ஹஜ்ஜின் நன்மை


லுஹா தொழுகை தொழுதால் உம்ராவின் நன்மை

(من تطهر في بيته ثم خرج إلى المسجد لأداء صلاة مكتوبة فأجره مثل أجر الحاج المحرم، ومن خرج لصلاة الضحى كان له مثل أجر المعتمر) . رواه أبو داود


உயர்ந்த நன்மைகளை செய்தால் மட்டுமல்ல அதற்காக இஹ்லாசான எண்ணத்தோடு இருந்தாலும் அந்த நன்மைகள் கிடைக்கும்.

எனக்கு அல்லாஹ் பண வசதியை கொடுத்தால் நானும் இஹலாசாக ஹஜ் செய்வேன் என்று நினைத்தாலும் ஹஜ்ஜின் நன்மை கிடைக்கும்.


தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ள முடியாத ஏழைகள் அதற்காக வருந்தி அழுதார்கள். அல்லாஹ் அந்த அழுகையை திருக்குர் ஆனில் பதிவு செய்தான்.


நபிகள் நாயகம் ஸல்) அவர்கள் சொன்னார்க. பயணம் செய்து போரிடுகிற முஜாஹிதகளின் நன்மையை உட்கார்ந்த இடத்திலேயே அவர்கள் பெறுவார்கள்


{ لَّيْسَ عَلَى الضُّعَفَاء وَلاَ عَلَى الْمَرْضَى وَلاَ عَلَى الَّذِينَ لاَ يَجِدُونَ مَا يُنفِقُونَ حَرَجٌ إِذَا نَصَحُواْ لِلّهِ وَرَسُولِهِ مَا عَلَى الْمُحْسِنِينَ مِن سَبِيلٍ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ{91} وَلاَ عَلَى الَّذِينَ إِذَا مَا أَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لاَ أَجِدُ مَا أَحْمِلُكُمْ عَلَيْهِ تَوَلَّواْ وَّأَعْيُنُهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ حَزَناً أَلاَّ يَجِدُواْ مَا يُنفِقُونَ{92}}التوبة.


அத்தகையோரின் நனமைகள் குறித்து பெருமானாரின் அற்புதமான கருத்து

உங்களோடு காலால் நடந்து வரமுடியாவிட்டாலும் அவர்கள் மனதளவில் உங்களுடனேயே இருக்கிறார்கள்.


وقال النبي صلى الله عليه وسلم عن الفقراء الذين حرموا هذا الجهاد( إن بالمدينة لرجالاً ما سرتم مسيرا ولا قطعتم وادياً إلا شاركوكم في الأجر حبسهم العذر) متفق عليه.



நன்மை செய்ய முடியாவிட்டாலும் எனக்கும் வாய்ப்புக் கிடைத்தால் நானும் நன்மை செய்வேன் என்று உளமாற நினைப்பவருக்கு அந்த நன்மை செய்த கூலி உண்டு என்பதற்கு இன்னொரு எடுத்துக் காட்டு.


(لا حسد إلا في اثنتين رجل اتاه الله مالا فهو ينفقه في سبيل الله آناء الليل وآناء النهار ورجل اتاه الله القرآن فهو يتلوه آناء الليل وآناء النهار ) متفق عليه

ويشارك هذين في الفضل رجل صادق النية يقول( لو أتيت مثل ما أوتي هذا لفعلت كما يفعل)البخاري7232.



இதை உறுதிப்படுத்தும் ஹதீஸ் – மனிதர்களில் நான்கு பிரிவினர்.


(عن أَبُي كَبْشَةَ الْأَنَّمَارِيُّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ثَلَاثَةٌ أُقْسِمُ عَلَيْهِنَّ وَأُحَدِّثُكُمْ حَدِيثًا فَاحْفَظُوهُ قَالَ مَا نَقَصَ مَالُ عَبْدٍ مِنْ صَدَقَةٍ وَلَا ظُلِمَ عَبْدٌ مَظْلَمَةً فَصَبَرَ عَلَيْهَا إِلَّا زَادَهُ اللَّهُ عِزًّا وَلَا فَتَحَ عَبْدٌ بَابَ مَسْأَلَةٍ إِلَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ بَابَ فَقْرٍ أَوْ كَلِمَةً نَحْوَهَا وَأُحَدِّثُكُمْ حَدِيثًا فَاحْفَظُوهُ قَالَ إِنَّمَا الدُّنْيَا لِأَرْبَعَةِ نَفَرٍ عَبْدٍ رَزَقَهُ اللَّهُ مَالًا وَعِلْمًا فَهُوَ يَتَّقِي فِيهِ رَبَّهُ وَيَصِلُ فِيهِ رَحِمَهُ وَيَعْلَمُ لِلَّهِ فِيهِ حَقًّا فَهَذَا بِأَفْضَلِ الْمَنَازِلِ وَعَبْدٍ رَزَقَهُ اللَّهُ عِلْمًا وَلَمْ يَرْزُقْهُ مَالًا فَهُوَ صَادِقُ النِّيَّةِ يَقُولُ لَوْ أَنَّ لِي مَالًا لَعَمِلْتُ بِعَمَلِ فُلَانٍ فَهُوَ بِنِيَّتِهِ فَأَجْرُهُمَا سَوَاءٌ وَعَبْدٍ رَزَقَهُ اللَّهُ مَالًا وَلَمْ يَرْزُقْهُ عِلْمًا فَهُوَ يَخْبِطُ فِي مَالِهِ بِغَيْرِ عِلْمٍ لَا يَتَّقِي فِيهِ رَبَّهُ وَلَا يَصِلُ فِيهِ رَحِمَهُ وَلَا يَعْلَمُ لِلَّهِ فِيهِ حَقًّا فَهَذَا بِأَخْبَثِ الْمَنَازِلِ وَعَبْدٍ لَمْ يَرْزُقْهُ اللَّهُ مَالًا وَلَا عِلْمًا فَهُوَ يَقُولُ لَوْ أَنَّ لِي مَالًا لَعَمِلْتُ فِيهِ بِعَمَلِ فُلَانٍ فَهُوَ بِنِيَّتِهِ فَوِزْرُهُمَا سَوَاءٌ) قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.



பணக்காரர்கள் நிறைய நன்மையை செய்ய முடிகிறது என்று நினைக்கத் தேவையில்லை நாமும் நிறைய நன்மை செய்ய வழியிருக்கிறது என்று உணரவேண்டும்


திக்ரு தஸ்பீஹ்கள் அலாதியான நன்மயை தருபவை



قال صلى الله عليه وسلم ( ألا أونبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والورق وخير لكم من أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا بلى يا رسول الله قال:ذكر الله). رواه الترمذي وابن ماجه بسند صحيح.


روى البخاري في صحيحة عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ (جَاءَ الْفُقَرَاءُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا ذَهَبَ أَهْلُ الدُّثُورِ مِنْ الْأَمْوَالِ بِالدَّرَجَاتِ الْعُلَا وَالنَّعِيمِ الْمُقِيمِ يُصَلُّونَ كَمَا نُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَلَهُمْ فَضْلٌ مِنْ أَمْوَالٍ يَحُجُّونَ بِهَا وَيَعْتَمِرُونَ وَيُجَاهِدُونَ وَيَتَصَدَّقُونَ قَالَ أَلَا أُحَدِّثُكُمْ إِنْ أَخَذْتُمْ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ وَلَمْ يُدْرِكْكُمْ أَحَدٌ بَعْدَكُمْ وَكُنْتُمْ خَيْرَ مَنْ أَنْتُمْ بَيْنَ ظَهْرَانَيْهِ إِلَّا مَنْ عَمِلَ مِثْلَهُ تُسَبِّحُونَ وَتَحْمَدُونَ وَتُكَبِّرُونَ خَلْفَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ فَاخْتَلَفْنَا بَيْنَنَا فَقَالَ بَعْضُنَا نُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ وَنَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ وَنُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ تَقُولُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَاللَّهُ أَكْبَرُ حَتَّى يَكُونَ مِنْهُنَّ كُلِّهِنَّ ثَلَاثًا وَثَلَاثِينَ)

البخاري كتاب الآذان رقم 798 باب الذكر بعد الصلاة.

நன்மைகள் நிறைந்த்தாக நம்முடைய வாழ்வை அல்லாஹ் ஆக்கியருள்வானாக

2 comments:

  1. Anonymous11:56 AM

    Aameen

    ReplyDelete
  2. Anonymous10:00 PM

    أن النبي صلى الله عليه وسلم قال : (ما من رجل بار ينظر إلى والديه أو والدته نظرة رحمة ، إلا كتب الله عز وجل تلك النظرة حجة متقبلة مبرورة ، قالوا : يا رسول الله ، وإن نظر في اليوم مائة مرة ؟ قال : الله أكبر من ذلك

    ReplyDelete