வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 19, 2013

ஹுதைபிய்யா



ஹிஜ்ரி 6 ம் ஆண்டு துல்கஃதா மாதத்தில் ஹுதைபிய்யா உடன்படிக்கை எழுதப்பட்டது. 
 முதல் பார்வையில் முஸ்லிம்களின் வரலாற்றில் அது ஒரு தோல்வி போல தெரிந்தாலும் அரபுலகில் இஸ்லாம் தடையின்றி பரவ அதுவே காரணமானது. அல்லாஹ் அதை பத்ஹுன் அழீம் என்று கூறினான்.
ஹுதையபிய்யாவிற்கு பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த் போது தான் சூரத்துல் பதஹ் முழுமையாக அருளப்பட்டது.
அந்த அமைதி உடன்படிக்கை, யுத்தங்களை விட மகத்தான பலனை முஸ்லிம்களுக்கு கொடுத்தது. ஹிஜ்ரீ 6 ம் ஆண்டு உடன்படிக்கை கையெழுத்தான போது பெருமானாருடன் 1400 மட்டுமே இருந்தனர். ஹிஜ்ரி 8 ல் மக்கா வெற்றிக்காக பெருமானார் புறப்பட்ட போது 10 ஆயிரம் பேர் பெருமானாருடன் இருந்தனர். இரண்டே ஆண்டுகளில்  முஸ்லிகளின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியிருந்தது.
முஸ்லிம் சமுதாயம் படித்தறிய வேண்டிய ஏராளமான செய்திகள் ஹுதைபிய்யா உடன்படிக்கையில் உள்ளன.
ஒரு விசயத்தை ஆக்கப்பூர்வமாக பார்ப்பது எப்படி என்ற ஒரு மாற்றுச் சிந்தனையை முஸ்லிம்களுக்கு அது வழங்கியது.
ஹுதைபிய்யாவிற்கான காரணம்.
ஹிஜ்ரி 6 ம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் கஃபாவை தவாபு செய்வது போல கனவு கண்டார்கள்.
நபிமார்களின் கனவு வஹ்யின்  ஒரு அம்சம் என்பதால் பெருமானார்(ஸல்) அவர்க ள் உம்ராவிற்கு தயாராகுமாறு தோழர்களிடம் கூறினார்க்ள்.
மக்காவாசிகளுடன் சுமூக உறவு இல்லாத சூழலில் உம்ராவுக்குச் செல்வது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று கருதிய சில தோழர்கள் கிளம்பவில்லை.  பெருமானாரின் உத்தரவுக்கு எந்த சலனமும் இன்றி கட்டுப்பட்ட தோழர்கள் 1400 பேர் அண்ணலாருடன் புறப்பட்டார்கள்.


வழியில் துல ஹுலைஃபாஎன்ற இடத்தில்; உம்ராவிற்காக ஆடை அணிந்து கொண்டார்கள். மக்காவை நெருங்கிய போது காலித் பின் வலீதின் தலைமையில் காபிர்கள் முஸ்லிம்களை தடுக்க தயாராக இருப்பதாக செய்தி கிடைத்தது.
நபி (ஸல்) அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
முஸ்லிம்களைத் தடுக்க வேண்டுமென்று காலித் பெரும் முயற்சி செய்தார். தனது குதிரைப்படையை முஸ்லிம்கள் பார்க்கும் தூரத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்.

தங்களுடைய வழியில் காலித் படையுடன் நிற்பதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் தன்யீம்வழியாக மக்கா செல்லும் முக்கிய நேரான பாதையை விட்டுவிட்டு வேறு வழியைத்தேர்ந்தெடுத்தார்கள். மலைகளுக்கிடையில் கற்களும், பாறைகளும் நிறைந்த கரடு முரடானபாதை வழியே, அதாவது வலப்பக்கம் ஹம்ஸ்என்ற ஊரீன் புறவழியான ஸனிய்யத்துல் முரார்வழியாக ஹுதைபிய்யா செல்லும் வழியில் பயணத்தைத் தொடங்கினார்கள். இவ்வழி  கீழ்ப்புறமாக மக்கா செல்லும் வழியாகும். தான் நின்று கொண்டிருந்த வழியை புறக்கணித்து விட்டு இஸ்லாமியப் படை வேறு வழியில் செல்கிறார்கள் என்று தொpந்தவுடன், தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த காலித் குறைஷிகளை எச்சாpப்பதற்காக மக்காவிற்குவிரைந்தார்.

நபி (ஸல்) அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்து ஸனிய்யத்துல் முரார்என்ற இடத்தை அடைந்தவுடன் அவர்களது வாகனம் அங்கு மண்டியிட்டு உட்கார்ந்து விட்டது.
மக்கள் அதை மிரட்டியும் அது எழுந்திருக்காமல் பிடிவாதம் பிடித்தது. அப்போது நபி (ஸல்) 'எனது ஒட்டகம் கஸ்வாமுரண்டு பிடிப்பதில்லை! அது அத்தகையகுணமுடையதுமல்ல! என்றாலும் யானைப் படைகளைத் தடுத்த அல்லாஹ் இதையும் தடுத்துவிட்டான் எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! அல்லாஹ் மேன்மைபடுத்திய வற்றைக் கண்ணியப்படுத்தும் வகையில் எந்த ஒரு திட்டத்தை குறைஷிகள் என்னிடம் கேட்டாலும் நான் அவர்களுக்கு அத்திட்டத்தை நிறைவேற்றிக்கொடுப்பேன்என்று கூறிவிட்டு தனது ஒட்டகத்தை அதட்டவே அது குதித்தெழுந்தது.நபியவர்கள் தனது பாதையைத் திருப்பி ஹுதைபிய்யாவின் இறுதியிலுள்ள ஸமதுஎன்ற கிணற்றுக்கு அருகில் தங்கினார்கள்.

No comments:

Post a Comment