وَإِذْ فَرَقْنَا بِكُمْ
الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنظُرُونَ
ஹிஜ்ரீ
புதிய வருடத்தின் இந்த முதல் ஜும் ஆவில் மிக முக்கியமான ஒரு சன்மார்க்க வழிகாட்டுதலை
நினைவு படுத்திக் கொள்கிறோம்.
சமுதாயத்தின்
ஒற்றுமை குறித்த பலத்த சிந்தனை நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
நவீன்
அமைப்புக்கள் – இயக்கங்கள் – சங்கங்கள் – குழுக்கள் – சிந்தனையாளர்கள் அல்லது சிந்தனையாளர்
என்ற பெயரில் நுனிப் புள் மேய்கிறவர்கள் அனைவரும் இது குறித்து அதிகம் பேசுகிறோம்.
விரலை
ஆட்டுவதற்கும் நீட்டுவதற்கும் நாம் அடித்துக் கொள்கிறோம்.
நம்மை
அடிப்பவர்களோ அதை எல்லாம் விசாரித்துக்
கொண்டிருப்பதில்லை.
என்பது
மாதிரியான கவிதைகளை பலர் எழுத அதை உச்சுக் கொட்டி வரவேற்க நாம் முன்னணியில் இருக்கிறோம்.
ஒற்றுமைக்கு
எதிராக இருப்பது எது அல்லது யார் என்பதை நமது வசதிக் கேற்ப குற்றமாக சுமத்திக் கொள்கிறோம்.
பெரும்பாலோர்
ஆலிம்களை குற்றம் சாட்ட முதலில் விரலை நீட்டி விடுகிறார்கள்.
ஏனென்றால்
எதிர்த்துப் பேச முடியாத புள்ளைப் பூச்சிகள் இன்று ஆலிம்கள் தானே?
இந்தக்
குற்றம் சாட்டுகிற போக்கை தவிர்த்து விட்டு ஒரு அடிப்படையான சத்தியத்தை இன்றைய தினம்
நாம் வெளிப்படையாக யோசிக்க இருக்கிறோம்.
இன்றைய
நம்முடைய மாநிலத்தில் முஸ்லிம்கள் பிளவு பட்டிருப்பது போலித் தவ்ஹீது பேசிய அமைப்புக்களால் தான் .
இந்த
அமைப்புக்கள் சுன்னத் ஜமாத் என ஒன்று பட்டு
நின்ற முஸ்லிம்களை தூய இஸ்லாம் என்று சொல்லி பல கூறாக பிரித்தன,
நீங்கள்
யாராக இருந்தாலும். குறிப்பாக மத்ஹபுகளை மறுப்பவராக அல்லது வெறுப்பவராக இருந்தால் உங்களது
நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் மத்ஹபுகள் இருந்த காலத்தை விட உங்களது அமைப்புக்கள்
தோன்றிய காலத்தில் பிரச்சினைகள் அதிகரித்ததா இல்லையா? இப்போதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறதா
இல்லையா?
சுன்னத்
வல் ஜமாத்தின் கட்டமைப்பை விட்டு விலகிய நீங்கள் இது வரை எத்தனை அமைப்புக்களுக்கு பயணம்
செய்துவிட்டு வந்து விட்டீர்கள் ? இப்போது எத்தனையாவது அமைப்பில் இருக்கிறீர்கள் ?
உங்களது
பெருநாட்கள் எத்தனை எத்தனை வடிவம் எடுத்து விட்டன ?
ஒரு
கட்டமைப்பிலிருந்து ஆத்திரத்தோடு விலகி நீங்கள் இப்போதும் கூட ஒரு நிலையில்லாமல் இருக்கீறீர்கள்,
பெரும்பாலான புதிய தவ்ஹீதிய அமைப்புக்களின் இளைஞர்கள் இப்போதும் ஒரு நிலையில் இல்லை
என்பதே எதார்த்தம். என்னென்னு ஒன்னும் புரிய மாட்டேங்குதே என்பது தான் பலரின் ஆதங்கம்.
ஆனால்
இந்தக் குழப்பமோ தடுமாற்றமோ சச்சரவோ ஹனபீ அல்லது ஷாபி மத்ஹபுகளை உறுதியாக அறிந்து பின்பற்றியோரிடம்
இல்லை,
மத்ஹபுகளை
பின்பற்றுகிறவர்கள் மார்க்கத்தை அறியாதவர்கள் – பாமரர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்,
பரிகசிக்கிறீர்கள்.
உண்மையில்
அவர்கள் நிம்மதியாக சத்திய மார்க்கத்தை பின்பற்றி வருகிறார்கள், நீங்களே எதார்தத்தில்
பரிகசிப்பிற்கு உரியவர்கள், இந்த 10 வருடத்தில் ஜும் ஆ வுக்கு முன் சுன்னத்து தொழுவதில்
தொடங்கி இப்போது அபூஜஹ்ல் அறுத்த கறியைச் சாப்பிடலாம் என்பது வரையிலான உங்களது தடுமாற்றங்களை
நீங்களே எண்ணிப் பாருங்கள்! பெருநாளை பிர்த்ததை பெரிய புரட்சியாக கருதியது ? பிறகு
சேர்ந்தே பெருநாள் கொண்ட்டாடி அதை தனியே பிரித்து? அதை எல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது
பிர்ந்தது பிர்ந்தது தான் என (ஜாக்) ஒரு குழு
தொடர்ந்து பெருநாளை பிரித்து வருவது என இன்னும் நிறைய விசயங்கள் இருக்கினறன். அது உங்களுக்கே தெரியும் ?
யோசித்து
ப் பாருங்கள் ! இந்த பிள்வுகளுக்குப் பின்னால் வெறும் தர்க்க வாதத்தை தவிர வேறு பலமான
அடிப்படைகள் உண்டா?
மத்ஹபுகளில்
கருத்து வேறுபாடுகளை கேலி செய்தீர்கள் – ஆபாசம் அசிங்கம் என்றெல்லாம் முகம் சுளித்தீர்கள்,
உங்களுக்குள்ளிருந்தே அதை விட மோசமான அசிங்கங்கள் வெளிப்பட்டதே யோசித்தீர்களா?
அதென்ன
ஒரு மத்ஹபுக்கு ஹலால்? இன்னொரு மத்ஹபுக்கு ஹராம் என்றீர்களே ?
உங்களது
தவ்ஹீதிய அமைப்புக்கள் ஹலாம் ஹராம் விசயத்தில் பிளவு பட வில்லையா?
ஜாக்
ஏற்றூக் கொண்ட பல அம்சங்களை டி என் டி ஜே வன்மையாக மறுக்கவில்லையா?
சஹாபாக்களை
ஏற்க வேண்டும் என்று ஜாக் கூறுகிறது.
குர்ஆன்
சுன்னாவிற்கு மாற்றமாக எந்த ஒரு விஷயத்தையும் ஸஹாபாக்கள் கூறியதில்லை
அல்ஜன்னத், அக்டோபர் 2004இதழில் பக்கம் 15ல்
சஹபாக்களை
ஏற்க முடியாது என ததஜ மறுக்கிறது.
ஸஹாபாக்களைப்
பின்பற்றலாம் என்ற இந்த வாசலைத் திறந்து விட்டால் போதும். எல்லா பித்அத்களையும்
நியாயப்படுத்த இது அடிப்படையாக அமைந்து விடும். (ஆன்லைன் பிஜே)
உங்களைப் போல பரஸ்பரம் சேறு வாரிப்
பூசிக் கொண்டவர்கள் யாரேனும் முஸ்லிம்களில் உண்டா?
அயோக்கியர்களின்
கடைசிப் புகலிடம் அரசியல் என்றால் ஒழுக்கக் கேடர்களின் கடைசி உறைவிடம் ஜாக்! என ஜாக்கை ததஜ புகழ்கிறது.
(ஆன்லைன்பிஜே http://www.onlinepj.com/vimarsanangal/jaqh_vimarsanam/jaqhudan_smathanama/#.Vh_WvOyqqko
மனித நேய மக்கள் கட்சியில் ஏற்பட்ட
பிளவுக்கும் இந்து முன்னணி பிளவுக்கும் கடுகளவும் வித்தியாசம் இல்லை.இதன்
தலைவர்கள் சுனாமியிலும், பித்ராவிலும் ஊழல் செய்துள்ளனர்; ஆன்லைன்பிஜே
http://www.onlinepj.com/audio_uraikal/samuthaya_pirasanaikal/mmk_pilavu_kuriththu_tntj_karuththu_enna/#.Vh_aNOyqqko
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை வழி கேடர்கள்
என ஜாக் விமர்ச்சிக்கீறது, http://www.jaqh.info/?p=1618
தவ்ஹீத்
என்ற பெயரில் ததஜ தவறான
பிரச்சாரம் செய்கிறது என்கிறது ஜாக் கூறுகிறது. http://www.jaqh.info/?p=3331
ஹன்பீ அல்லது ஷாபி மத்ஹபைச் சார்ந்தோர் இப்படிச்
சண்டையிட்டுக் கொண்டதை – முகம் திருப்பிக் கொண்டதை நீங்கள் பார்த்ததுண்டா?
அருமை நண்பர்களே! பிடிவாததத்திற்காக அல்லாமல்.
நியாயமாக யோசியுங்கள், உங்களது பிளவு மரியாதையான மார்க்கம் என்ற அடையாளத்தை எவ்வளவு
தூரம் காயப்படுத்தியுள்ளது என்பதை யோசியுங்கள்
மார்க்கத்தின் முன்னோடிகளில் யாரையாவது நீங்கள்
ஏசாமாலும் பரிகசிக்காமலும் விட்டுள்ளீர்களா ?
அண்ணன் எப்பச் சாவான் திண்ணை எப்ப காலியாகும்
என அன்சாரிகள் அதிகாரத்திற்கக காத்திருந்ததாக உங்கள் தலைவர் கூறியதை ஏற்றீர்கள்?
அன்சாரிகள் யார் ? தீனுக்கு அவர்களுடைய பங்களிப்பு
என்ன ? என்பதை சற்றேனும் யோசித்தீர்களா?
இந்த வார்த்தைகளை காதுக் கொடுத்து கேட்டதற்காக
வே நீங்கள் தவ்பா செய்திருக்க வேண்டாமா?
மத்ஹபுகளின் இமாம்கள் யார் ? சிந்தித்தது
உண்டா?
الأئمة الأربعة أئمة المسلمين السنة الأربعة هم
علماء الدين الذي يجمع على إمامتهم كل المسلمين من أهل
السنة بكافة توجهاتهم، وهؤلاء الأئمة
متفقون على كل الأصول الفقهية، واختلفوا في بعض الفروع،
والمسائل الفرعية التي اختلفوا
فيها هي التي كوّنت نشأة المذاهب الفقهية الأربعة (الحنفي، المالكي، الشافعي،
الحنبلي)،
وهؤلاء الأئمة بحسب ظهورهم
بالترتيب هم:
ஹனபீ
அல்லது ஷாபி மத்ஹபை நிராகரிக்கிறீர்கள் என்கிற போது குறைந்தது 1300 ஆண்டு கால பாரம்பரியத்தை
நிராகரிக்கிறீர்கள்.
இமாம்கள் ஒரு சாரார் ஒரு சாராரிடமிருந்து
இல்மை கற்றனர்
இமம் ஷாபி இமாம் அபூஹனீபாவின் மாணவர் முஹம்மது
ரஹ் அவர்களிடம் கல்வி கற்றார்
كتاب الأم للشافعي زاخر
بالرواية عن محمد بن الحسن واليك أنموذجاً منها:
(أخبر
الرَّبِيعُ قال حدثنا الشَّافِعِيُّ إمْلَاءً قال أخبرني محمد بن الْحَسَنِ أَنَّ
أَبَا حَنِيفَةَ رضي اللَّهُ تَعَالَى عنه قال في الرَّجُلِ يَهْلَكُ وَيَتْرُكُ
ابْنَيْنِ وَيَتْرُكُ سِتَّمِائَةِ دِينَارٍ فَيَأْخُذُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا
ثلاثمائة دِينَارٍ ثُمَّ يَشْهَدُ أَحَدُهُمَا أَنَّ أَبَاهُ الْهَالِكَ أَقَرَّ
بِأَنَّ فُلَانًا ابْنُهُ أَنَّهُ لَا يُصَدَّقُ على هذا النَّسَبِ وَلَا يَلْحَقُ
بِهِ وَلَكِنَّهُ يُصَدَّقُ على ما وَرِثَ فَيَأْخُذُ منه نِصْفَ ما في يَدَيْه)
الأم، تأليف: محمد بن إدريس الشافعي أبو عبدالله
அதே போல
இமாம் ஷாபி இமாம் மாலிக்கிடமிருந்து நேரடியாக இலமைக் கற்றார்
ذكر الإمام النووي أن الشافعي أخذ الموطأ عن مالك
فقال: (رحل الشافعي إلى المدينة قاصداً الأخذ عن أبي عبدالله مالك بن أنس رحمه
الله، فلما قدم عليه قرأ عليه الموطأ حفظا، فأعجبته قراءته ولازمه، وقال له مالك:
اتق الله واجتنب المعاصي فإنه سيكون لك شأن ) لمجموع،
تأليف: النووي، دار الفكر(
இமாம் அஹ்மது பின் ஹன்பல் ரஹ் அவர்கள் இமாம் ஷாபி (ரஹ) அவர்களிடமிருந்து இல்மை பெற்றார்கள். இந்த இருவரும் பரஸ்பரம் ஒருவரிடம் இருக்கிற விசயங்களை மற்றவரிடம் பரிமாறிக் கொண்டனர் என ஹன்பலீ மத்ஹபு நூல்கள் கூறுகின்றன,
நான் இன்று இராக்கியர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன், சில ஹதீஸ்கள் எனக்கு
நாபகம் இருந்திருக்குமானால் எடுத்துச் சொல்லியிருப்பேன் என இமாம் ஷாபி ரஹ் அவர்கள்
கூறிய போது அது விசயத்தில் இமாம் அஹ்மது ரஹ்) மூன்று ஹதீஸ்களை எடுத்துக் கொடுத்தார்கள்.
ودخل الشافعي يوما على احمد بن حنبل فقال يا أبا
عبدالله كنت اليوم مع أهل العراق في مسألة كذا فلو كان معي حديث عن رسول الله صلى
الله عليه وسلم فدفع إليه أحمد ثلاثة أحاديث فقال له جزاك الله خيرا
)طبقات الحنابلة،
تأليف: محمد بن أبي يعلى أبو الحسين،(
இத்தகைய தொரு கல்விப் பாரம்பரியத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட போது
அவற்றை அவர்கள் எதார்த்தமாகவே ஏற்றுக் கொண்டனர். ஒருவரை ஒரு எதிரியாக – போட்டியாளராக
பார்க்க வில்லை. மார்க்கத்திற்காக உழைப்பவராகவே கருதினார்கள்.
இமாம்கள் ஒருவரின் அந்தஸ்தை மற்றவர்க்ள் அறிந்து புகழ்ந்தன
இமாம்கள் ஒருவரின் அந்தஸ்தை மற்றவர்க்ள் அறிந்து புகழ்ந்தன
இமாம் அபூஹனீபா
குறித்து இமாம் ஷாபி
قال الشافعي: الخلق كلهم عيال أبي حنيفة في الفقه
وفى رواية من أراد أن يتبحر في الفقه فهو عيال على
أبي حنيفة:
இமாம் அபூஹனீபா குறித்து இமாம் மாலிக்
وقال الشافعي: قيل لمالك هل رأيت أبا حنيفة، قال:
نعم رأيت رجلا لو كلمك في هذه السارية أن يجعلها ذهبا لقام بحجّته
இமாம் ஷாபி குறித்து இமாம் அஹ்மது பின் ஹன்பல்
قال أحمد بن حنبل: (كان الله تعالى قد جمع في
الشافعي كل خير
المجموع
இமாம் அஹ்மது (ரஹ்) இமாம் ஷாபிஈ க்காக தொழுகையில் துஆ செய்பவராக இருந்தார்.
كان القطان وأحمد يدعوان للشافعي في صلاتهما
المجموع
இமாம் ஷாபி தன்னுடைய மாணவர் என்ற போதும் ஹதீஸ்கலையில் அவருடைய பெருமை
எத்தகையது என்பதை இமாம் முஹம்மது (ரஹ்) கூறுகிறார். உம்மு என்ற நூலின் மகத்துவம் எத்தகையது
என்பதை கூறுகிறார்
ஹதீஸ் துறை சார்ந்தவர்கள் பேசுகிறார்கள் எனில் அது ஷாபியின் நாவைக் கொண்டுதான்.
قال محمد بن الحسن الشيباني: (إن تكلم أصحاب الحديث
يوماً ما فبلسان الشافعي) قال النووي: يعني لما وضع من كتبه
) المجموع 1/ 35 (
) المجموع 1/ 35 (
இமாம் அஹ்மது குறித்து இமாம் ஷாபி (ரஹ்)
قال حرملة بن يحيى: (سمعت الشافعي يقول: خرجت من
بغداد وما خلّفت بها أحدا أتقى ولا أروع ولا أفقه أظنه قال ولا أعلم من أحمد بن
حنبل (طبقات
الحنابلة )
சட்ட விசயத்தில் மத்ஹபுகளின் இமாம்கள் அனைவரும் அடுத்தடுத்த காலத்தில் வாழ்ந்து சந்தித்துக் கொண்டவர்களாக தனித்தனி கருத்துடையவர்கள் என்பதை அனைவருமே அங்கீகரித்துக் கொண்டனர், மதித்தனர், இஸ்லாமின் உன்னத சக வாழ்வுக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்தனர்.
இமாம்களின் நோக்கம் சத்தியத்தை வெளிப்படுத்துவதே!!
قال
الشافعى: (ما ناظرت أحدا فأحببت أن يخطئ) طبقات الشافعية الكبرى (
மத்ஹபுகளின் கோட்பாடு
இந்த அடித்தளத்தில் அமைக்கப்பட்டதே
மத்ஹபுகளில் கருத்து வேறு பாடு இருக்கிறது. அந்த கருத்து வேறுபாட்டை தாண்டி ஒரு மத்ஹபு இன்னொரு மத்ஹபை அங்கீகரித்துக் கொண்ட அற்புதமான நடை முறை
ذكر ابن حجر الهيتمي ;(ذَكَرَ الْإِمَامُ
النَّسَفِيُّ الْحَنَفِيُّ في الْمُصَفَّى أَنَّهُ يَجِبُ عَلَيْنَا إذَا
سُئِلْنَا عن مَذْهَبِنَا وَمَذْهَبِ مُخَالِفِنَا في الْفُرُوعِ أَنْ نُجِيبَ
بِأَنَّ مَذْهَبَنَا صَوَابٌ يَحْتَمِلُ الْخَطَأَ وَمَذْهَبَ مُخَالِفِنَا خَطَأٌ
يَحْتَمِلُ الصَّوَابَ
நல்லெண்ணத்தில் செய்யப்படுகிற ஆய்வு முடிவுகள் தவறாக இருந்தாலும் அது நன்மையானதே
புகாரியின் இந்த ஹதீஸ் கருத்துவேறுபாடுகளை அங்கீகரிப்பதன் அற்புதமான
ஏற்பாட்டை தருகிறது.
عن عمرو بن
العاص أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقولإذا حكم الحاكم فاجتهد ثم أصابفله أجران وإذا حكم فاجتهد ثم أخطأ فله أجر
மத்ஹபுகள் வெளிப்படுத்தும் இஸ்லாமின் இந்த அற்புதமான வாழ்வு முறையை சமூகத்தில் இன்றும் நீங்கள் பார்க்கலாம்
ஹனபீ பள்ளீவாசல்களில் இமாம் ஷாபி ரஹ் அவர்கள் புகழப்படுவார்கள், அது போலவெ மாற்றியும்,
ஹனபீ பள்ளிவாசல்களில்
ஷாபி மத்ஹபைச் சார்ந்தவர் இமாமத் செய்கிறார். மாற்றியும்.
மக்தபுகளில் இரண்டு சட்டங்களும்
போதிக்கப்படுகிறது எந்த வேறுபாடும் இல்லாமல்.
சட்ட அறிஞர்கள் தேவைப்படுகிற இடங்களில் மாற்று மத்ஹபுகளின் சட்டத்தை பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஒரு மத்ஹபின் படி தீர்ப்பு ஒன்றாக இருக்கும் போது காலச் சூழ்நிலையில் அத்தீர்ப்பை செயல்படுத்து அதிகப்படியான சிரமமாகிவிடும் எனும் போது மாற்று மத்ஹபின் தீர்ப்புக்களை தாராளமாக பயன்படுத்திக் கொள்ள சுன்னத் வல் ஜமாத்தின் முப்திகள் சகஜமாக அனுமதித்து வருகிறார்கள்
உதாரணத்திற்கு திருமண பந்ததத்தை மிக வலிமையான உறவாக போற்றுகிற இமாம் அபூஹனீபா ரஹ் ஒரு பெண்ணின் கணவர் காணாமல் போய் விட்டால் அவளது கணவரின் வயதொத்தவர்கள் இறந்து போகும் வரை காத்திருக்க வேண்டும் என்றார்கள்.
இமாம் மாலிக் அவர்களோ நான்கு வருடங்களுக்குப் பிறகு அவளது திருமண உறவு முறித்து வைக்கப்படும் என்றார்கள்
ஹனபீ மத்ஹபின் கருத்தை சட்டமாக செயல்படுத்து வதில் அதிகப்படியான சிரமம் இருக்கீற காரணத்தால் மாலிக் மத்ஹபின் படியே இப்போது ஹனபீ மத்ஹபைச் சார்ந்தவர்கள் பத்வா வழங்கி வருகின்றனர்,
அதே போல திருமண உறவை முறித்து வைப்பதில்
அதிக கட்டுப்பாடுகாட்டுகிற ஹனபீ மத்ஹபை சார்ந்த அறிஞர்கள் பஸஃ எனும் ஒரு திருமணத்தை
காழி முறித்து வைக்கும் நடைமுறையை மிக அரிதாகவே தவிர ஏற்றுக் கொள்வதில்லை,
ஆனால் இன்றைய சூழலில்
பல குடும்ப பஞ்சாயத்துக்களிலும் பெண்களுக்கு எதிரான கணவனின் அக்கிரம் வெளிப்படுகிற
போது காழிகள் அத்தகைய பஸஃ நடைமுறையை ஷாபி மத்ஹபின் படி பயனப்டுத்திக் கொள்ளலாம் என
ஹனபீ சட்ட அறீஞர்கள் பத்வா வழங்கி வருகிறார்கள்
இது போல ஒரு மத்ஹபினர்
இன்னொரு மத்ஹபின் சட்டங்களை எடுத்துக் கொள்கிற நடைமுறைகள் ஏராளமாக இருக்கிறது.
மார்க்கத்தின் அற்புதமான
அறிவுலகச் கலாச்சார மான் மத்ஹபுகளின் எதிர்ப்பாளர்களிடம் இத்தகைய உன்னதமான பண்புகள்
அணு அளவிலும் உண்டா என்பதை இளைஞர்களும் நண்பர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இறுதியாக ஒன்றை நாபகப்படுத்துகீறேன்,
நீங்கள் ஹனபீ அல்லது ஷாபி என்ற அடையாளத்தை
உதறி விட நினைக்கிறீர்கள் என்றால் இஸ்லாமிய மார்க்கத்தின் ஆயிரத்து இரு நூறு ஆண்டு
கால பாரம்பரியத்தை உதறுகிறீர்கள் என்று பெருள்
அதை உதறி விட்டு நீங்கள் கை பிடிக்கும் வழி
எத்தகைய நவீன பித் அத் என்பதை எண்ணிப்பாருங்கள்.
அதிலிருக்கிற சீர்கேடுகளை எண்ணீப் பாருங்கள்.
மத்ஹபுகள் மீது சொல்லப்படும் குற்றச் சாட்டுக்களை
விட இந்த அமைப்புக்களின் மீதான் குற்றச் சாட்டுகள் அதிகம்
மத்ஹபு இமாம்களின் இறையச்சமும் சத்திய தேடலும்
தீனப் பற்றிய அக்கறையும் இந்த அமைப்புக்களின் தலைவர்களை விட அதிகம் என்பதை நீங்கள்
ஒப்புக் கொள்ள வே செய்வீர்கள். மத்ஹபுகளின் இமாம்கள் மட்டுமல்ல மத்ஹபுகளைச் சார்ந்த
சட்ட நூற்களின் ஆசிரியர்கள் அனைவரின் இதயச்சுத்திக்கும் இறையச்சத்திற்கும் மார்க்கப்பற்றிற்கும்
வரலாறு சாட்சியாக நிற்கிறது.
இந்த அமைப்புக்களின் தலைவர்களின் அவலட்சணங்களுக்கு
அவரவர்கள் வெளியிடும் சி டி களும் இணைய தளங்களுமே சாட்சியாக இருக்கிறது,
எடை போட்டுப் பாருங்கள்?
மார்க்கச் சட்ட விசயங்களில் நமது மாநிலத்தில்
பிளவையும் சண்டைகளையும உண்டாக்கிக் கொண்டிருக்கிற அமைப்புக்களை விட்டு முற்றாக விலகி
நில்லுங்கள்
விலகி நின்றால் மட்டும் போதாது மத்ஹபுகளில்
ஒன்றை கைப்பிடித்து சுன்னத் ஜமாத்தின் வழி நில்லுங்கள், உங்களது பரபரக்கிற சிந்தனையை
கட்டுப்படுத்துங்கள், சுன்னத் ஜமாத்களின் தலைமையை உறுதிப்படுத்துங்கள். அந்தக் கட்டமைப்பை
பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
வார்த்தை ஜாலங்களில் எச்சரிக்கையாக இருங்கள்
; மடை மாற்றி விட தர்க்க வாதங்களில் ஏமாந்து விடாதீர்கள்.
என்
கருத்தை விட்டு விடுங்கள் என இமாம் ஷாபியே சொல்லியிருக்கிறார் என்பார்கள்.
உண்மை
தான் இமாம் ஷாபி அப்படி சொல்லியிருக்கிறார் !
كان الشافعى يقول: (إذا قلت قولا وصح عن رسول الله
صلى الله عليه وسلم خلافه فقولي ما قاله رسول الله صلى الله عليه وسلم- طبقات
الشافعية الكبرى
ஆனால்
யாருக்குச் சொன்னார்? அவர் காலத்தின் ஹதீஸ் ஆய்வாளர்களிடம் சொன்னார்.
ஆய்வுகள்
நிறைவு பெற்று சட்ட விதிகள் தெளிவு படுத்தப்பட்ட சூழலில் ஹதீஸ்களை சட்ட விதிகளுக்கு
முரணாக காட்டுவது மோசடியாகும்.
காரணம்
இந்த ஹதீஸ்களை எல்லாம் ஆய்வு செய்து தான் சட்டம் இறுதி வடிவம் பெற்றிருக்கிறது.
ஷாபி
மத்ஹபின் சட்ட அறிஞர்கள் இமாம் ஷாபியின் கருத்தை தெளிவாக விளங்கி அதை மக்களுக்கு விளக்கியும்
சொல்லி விட்டார்கள்.
وقد أجاب الإمام النووي في مقدمة المجموع
"وكان جماعة من متقدمي أصحابنا إذا رأوا مسألة فيها حديث,
ومذهب الشافعي خلافه عملوا بالحديث, وأفتوا به قائلين: مذهب الشافعي ما وافق الحديث, ولم يتفق ذلك إلا نادرًا, ومنه ما نقل
عن الشافعي فيه قول على وفق الحديث. وهذا الذي قاله
الشافعي ليس معناه أن كل واحد رأى حديثًا صحيحًا قال: هذا مذهب الشافعي، وعمل
بظاهره, وإنما هذا فيمن له رتبة الاجتهاد في المذهب على ما تقدم من صفته أو قريب
منه, وشرطه أن يغلب على ظنه أن الشافعي لم يقف على هذا الحديث أو لم يعلم صحته,
ஷாபி இமாம் இந்த ஹதீஸை பார்க்க வில்லை என்று உறுதி பட தெரிந்தால் தான் – சட்டத்தை ஒதுக்கி விட்டு ஹதீஸை எடுக்க வேண்டும்.
அப்படி
இல்லாமல் நமக்கு ஒரு ஹதீஸ் கண்ணில் பட்டவுடன் அந்த ஹதீஸூக்கு ஷாபி இமாமின் கருத்து
முரண்படுவதாக கருதி ஹதீஸீன் கருத்தையே ஷாபி இமாமின் கருத்தாக சொல்வது எதார்த்தை திரிப்பதாகும்
قال الشيخ أبو عمرو –يعني: ابن الصلاح- : ليس العمل بظاهر ما قاله الشافعي بالهين, فليس كل فقيه يسوغ له أن
يستقل بالعمل بما يراه حجة من الحديث, وفيمن سلك هذا المسلك من الشافعيين من عمل
بحديث تركه الشافعي عمدًا, مع علمه بصحته لمانع اطلع عليه وخفي على غيره, كأبي
الوليد موسى بن أبي الجارود ممن صحب الشافعي، قال: صحَّ حديثُ: (أَفْطَرَ
الحَاجِمُ وَالمَحْجُومُ) (
فأقول: قال الشافعي: أفطر الحاجم والمحجوم, فرُدَّ ذلك على أبي
الوليد; لأن الشافعي تركه مع علمه بصحته, لكونه منسوخًا عنده, وبيَّن الشافعي نسخه
واستدل عليه,
அபுல் வலீது பின் மூஸா ஒரு ஹதீஸை பார்த்தார்.
இரத்தம்
குத்தி எடுத்தவனும் எடுக்கப்பட்டனும் நோன்பை முறித்து விட்டனர். என்ற ஹதிஸ் ஸஹீஹானதாக
இருந்தது. உடனே இது தான் இமாம் ஷாபியின் கருத்து என்று சொல்லி விட்டார்.
ஆனால்
இந்தக் கருத்து தவறு என்பதை அறிஞர்கள் புரிய
வைத்தனர். இமாம் ஷாபி அவர்களுக்கு இந்த ஹதீஸ் ஸஹீஹானஹு என்பது தெரியும் .ஆனால் இந்த
ஹதீஸீன் கருத்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்பதை ஆய்ந்துஅ அறிந்து தான் இரத்தம்
குத்தி எடுப்பதால் நோன்பு முறியாது என்று சொல்லியிருக்கிறார்
இமாம் ஷாபி அவர்களின் கருத்து என்ன என்பது
தெளிவாக விளக்கப்பட்ட நிலையில் அவருடைய வார்த்தைகளை வைத்தே அவரது காட்டிய வழி முறைகளை
புறக்கணிக்கு மாறு கூறுவது எத்தகைய யூதத்தனம் என்பதை சமூகம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
எனவே
அருமைச் சகோதரர்களே எண்ணிப் பார்த்து , எடை போட்டுப் பார்த்துச் செயல்படுங்கள்.
தீய சக்திகளிலிருந்து விலகி நிற்கிற வழி
முறைகளை யோசிக்காதவரை முஸ்லிம் சமூகத்தில் ஒற்றுமை என்ற பேச்சு சாத்தியமாகாது.
ஒரு சில வற்றியில் சுன்னத் ஜமாத் அமைப்பினர்களோடு
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஜமாத் அமைப்பை விட்டு விலகாதீர்கள்.
ஊர் ஒற்றுமை மஹல்லா ஒற்றுமையை கடை பிடியுங்கள்.
அற்பர்கள் உருவாக்கும் கருத்து வேறுபாடுகளில் இந்த உன்னத அமைப்பை குலைத்து விடாதீர்கள்.
மூஸா அலை அவர்கள் தனது சமூகமான யூத சமுதாயத்தை
பிர் அவ்னிடமிருந்து காத்துச் அழைத்துச் சென்ற போது அவர்கள் அனைவரும் மூஸா அவர்களுடன்
கருத்து ரீதியா முழுமையாக உடன்பட்டு நிற்கவில்லை.
فما آمن لموسى إلا
ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن
المسرفين ( 8
ஆயினும் தப்பிக்க வேணும் என்ற விசயத்தில் அவரது உத்தரவின் கீழ் ஒன்று பட்டு நின்றனர். அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான்.
அது போல சில விசயங்களில் சுன்னத் ஜமாத்
அமைப்போடு கருத்து வேறு உங்களுக்கு இருந்தாலும் ஒற்றுமையை தவறவிடக் கூடாது என்ற எண்ணத்தில்
மார்க்கத்தின் பாரம்பரிய அமைப்புடன் ஒன்று பட்டு நில்லுங்கள்.
ஒற்றுமைக்கான சிந்தனை உயிர் வடிவம் பெறுவதை
அப்போது பார்க்கலாம்.
முஃமின்கள் ஒன்று பட்டுச் சென்றால் வெற்றி
நிச்சயம்.
முஹர்ரம் 9 10 நோன்புகள் இதை நமக்கு உணர்த்து கின்றன,
عن أَبِي قَتَادَةَ - رضي الله عنه: ((وَصِيَامُ يَوْمِ
عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ)) صحيح مسلم
(1982).
· عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى
الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ
صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ
فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ
بِصِيَامِهِ
· عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى
صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا الْيَوْمَ يَوْمَ
عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ - البخاري 2006
சஹாபாக்களின் ஆர்வம். குழந்தைகளும் நோன்பு
· فعن الربيّع بنت معوذ قالت أرسل
النبي صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار: " من أصبح مفطراً
فليتم بقية يومه، ومن أصبح صائماً فليصم" قالت: فكنا نصومه بعد ونصوم صبياننا
ونجعل لهم اللعبة من العهن، فإذا بكى أحدهم على الطعام أعطيناه ذاك حتى يكون عند
الإفطار. البخاري:1960.
மக்காவிலும் இந்தப் பழக்கம் இருந்த்து.
· عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ
كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ وَكَانَ يَوْمًا
تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ
فَلْيَصُمْهُ وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ
· عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ
عَنْهَا أَنَّ يَوْمَ عَاشُورَاءَ كَانَ يُصَامُ فِي الْجَاهِلِيَّةِ فَلَمَّا
جَاءَ الْإِسْلَامُ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ – مسلم
·
عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا :
قال حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ
يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ
اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ
حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
ஆஷூரா முஹர்ரம் சார்ந்த பதிவுகளை தனியாகப்
பார்க்கவும்.
இஸ்லாமியர்கள் அனைவரின் சிந்தனையை தொட வேண்டிய முக்கிய பதிவு.
ReplyDeleteமத்ஹப்,இமாம்களின் அந்தஸ்தையும்,ஆய்வுகளையும் சமூகம் இறுக்க பற்றிபிடிப்பது காலத்தின் கட்டாயம் என்பை சமூகத்திற்கு உறக்க சொல்கிறது ஹஸரத்தின் இந்த பதிவு.
அல்லாஹ்வே எங்கள் உஸ்தாதின் கல்வி ஞானத்திலும்,ஆயுளிலும்,நேரத்திலும் பரக்கத் செய்வாயாக.
kaalathirku errapathivu.arumai.
ReplyDeleteஇஸ்லாமியர்கள் அனைவரின் சிந்தனையை தொட வேண்டிய முக்கிய பதிவு.
ReplyDeleteமத்ஹப்,இமாம்களின் அந்தஸ்தையும்,ஆய்வுகளையும் சமூகம் இறுக்க பற்றிபிடிப்பது காலத்தின் கட்டாயம் என்பை சமூகத்திற்கு உறக்க சொல்கிறது ஹஸரத்தின் இந்த பதிவு.
அல்லாஹ்வே எங்கள் உஸ்தாதின் கல்வி ஞானத்திலும்,ஆயுளிலும்,நேரத்திலும் பரக்கத் செய்வாயாக.
குழப்பமடைந்து குற்றுயிராய் இருக்கும் வாலிபர்களுக்கு இந்த கட்டுரை தெளிந்த நீரோடை பருகியவர்கள் ஜெயம் பெருவர்
ReplyDeleteசூப்பர்
ReplyDelete