வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 22, 2015

உறுதியின் மறு வடிவம் மூஸா (அலை)

அல்லாஹ் மனிதர்களைப் படைத்தான்,
அவர்களுக்கு தன்னுடைய கட்டளைகளை எடுத்துச் சொல்ல அவர்களிலிருந்தே சிலரை தேர்ந்தெடுத்தான்.
அவர்கள் நபிஎன்றழைக்கப் படுகின்றனர். நபஃ (செய்தி) என்ற வேர்ச் சொல்லிலிருந்து வந்த நபி என்ற வார்த்தைக்கு இறைவனது செய்திகளை சொல்பவர் என்று பொருள்.
إِنَّ اللَّهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ(33)
நபி என்றால் மூன்று அம்சங்களை நாபகப்படுத்திக் கொள்ளுங்கள்
  1. 1.   மனிதர்
  2. 2.   அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
  3. 3.   அல்லாஹ்வுடைய செய்திகளை மக்களுக்குச் சொல்பவர்

அவ்வாறு இறைவனால தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்கள் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் பேர் என  நபி மொழி கூறுகிறது.
وفي رواية أبي أمامة قال أبو ذر : قلت يا رسول الله: كم وفاء عدة الأنبياء ؟ قال : مائة ‏ألف ، وأربعة وعشرون ألفا ، والرسل من ذلك: ثلاثمائة وخمسة عشر ، جما غفيرا "‏
والحديث صححه الشيخ الألباني رحمه الله في مشكاة المصابيح .
315 ரஸூல்கள்
ரஸூல் என்பவர் புதிதான ஒரு சட்ட அமைப்புக் (ஷரீஅத்) கொடுக்கப் பட்டவர் ஆவார்,
(இபுறாகீம் (அலை) ரஸூல். அவரது காலத்தில் வாழ்ந்த லூத் (அலை) நபி)
இத்தூதர்களில் உறுதி வாய்ந்தோர் (உலுல் அஜ்ம்) என்று திருக்குர் ஆன் சிலரைக் குறிப்பிடுகிறது.
فَاصْبِرْ كَمَا صَبَرَ أُوْلُوا الْعَزْمِ مِنْ الرُّسُلِ 
فأصح الأقوال في ذلك أنهم خمسة. محمد صلى الله عليه وسلم ونوح وإبراهيم وموسى وعيسى عليهم السلام
وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى ابن مريم)[الأحزاب : 7] 
நபிமார்கள் அனைவரும் உறுதிவாய்ந்தவர்களே என்ற போதும் தமது பிரச்சாரப் பணியில் மிக பெரும் எதிர்ப்பை சந்தித்த போது அலாதியான உறுதியோடு தமது சமூகத்தை கட்டமைத்தவர்கள் என்ற கருத்தில் இவர்கள் உறுதி வாய்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த உலுல் அஜ்ம்களில் ஒருவர் தான் நபி மூஸா அலை அவர்கள்.
நபி மூஸ் அலை அவர்களும் அவர்களது சமூகத்தவர்களும்  பாதுகாக்கப்பட்ட நாள் இது என்கிற காரணத்தால் முஹர்ரம் மாத்தின் 9 ம் நாளிலும் 10 ம் நாளிலும் நாம் நோன்பு நோற்றிருக்கிறோம்.
عن  أَبِي قَتَادَةَ - رضي الله عنه: ((وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ))  صحيح مسلم (1982).
·       عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ  
·       عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ  - البخاري 2006

عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا :  قال  حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم

எனவே இன்றைய தினம் நபி மூஸா அலை அவர்களின் வரலாற்யும் அவரும் அவரது மக்களும் பிர் அவ்னிடமிருந்து மிக அற்புதமாக பாதுகாக்கப்பட்ட வரலாற்றையும் சுருக்கமாக பார்க்க இருக்கிறோம்.
நபிமார்களின் வரலாறுகள் உம்மத்திற்கு வழி காட்டும் நட்சத்திரங்கள்
இந்த உம்மத் தன் நாபகத்தில் ஆழப்பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே திருக்குர் ஆனில் ஏராளமான வசனங்களில் நபிமார்களின் வரலாறுகளை அல்லாஹ் கூறுகிறான்.
அன்றைய அரபுச் சமூகத்துக்கு அறிமுகமான = அரபுகளுக்கு அருகில் வாழ்ந்த 25 நபிமார்களின் வரலாற்றை மட்டும் திருக்குர் ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
அன் ஆம் அத்தியாயத்தில் இவர்களில் 18 பேர்கள் ஓரே இடத்தில் கூறப்பட்டுள்ளது , மற்ற 7 பேர் வேறு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்,
وتلك حجتنا آتيناها ‏إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم * ووهبنا له إسحاق ‏ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف ‏وموسى وهارون وكذلك نجزي المحسنين* وزكريا ويحيى وعيسى وإلياس كل من ‏الصالحين* وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين) [ الأنعام : 83/86] ‏
والباقي في سور متفرقة ، وهم : آدم ، وهود وصالح، وشعيب، ‏وإدريس، وذو الكفل، ومحمد، صلى الله عليهم أجمعين . 
இந்த 25 பேரில் முக நீளமாக சொல்லப் பட்ட வரலாற்றுக்குச் சொந்தக் காரராக நபி மூஸா அலை ஆவார்.
திருக்குர் ஆனில் மூஸா எனும் பெயர் சுமார் 129 இடத்தில் கூறப்பட்டுள்ளது,
20 க்கும் மேற்பட்ட குர் ஆனிய அத்தியாயங்களில் மூஸா அலை அவர்களின் வரலாறு பேசப்பட்டுள்ளது.
تارة بصورة مفصلة، كما هو الحال في سور (البقرة)، و(الأعراف)، و(طه)، و(الشعراء)، و(القصص). وأخرى بصورة مختصرة، كما هو الحال في سور (الروم)، و(الدخان)، و(النازعات) وغيرها.

(طه)، و(الشعراء)، و(القصص அத்தியாயங்கள் மூஸா அலை அவர்களின் அதி அற்புதமாக பேசுகிற அத்தியாயங்களாகும்.

இந்த வசனங்களின் வழியே மூஸா அலை அவர்களின் வரலாற்றைப் பார்ப்பதற்கு முன்பு யூதர்களின் வரலாற்றை நாம் கொஞ்சம் அறிந்து கொள்ள வேணும்.

ஏனெனில் மூஸா அலை ஒரு யூத நபியாவார்,

நம்மில் பலரும் யூதர்களை மூஸா அலை அவர்களது சமூகத்தின் என்று நினைக்கிறோம்.

அது ஓரளவே சரியானது,

உண்மையில் யூதர்களின் வரலாறு மூஸா அலை அவர்களிடமிருந்து துவங்குவது அல்ல.

யூதர்களின் இடைக்காலத்தில் அவர்களை எகிப்திய கொடுமைக்கார அரசனான பிர் அவ்னிடமிருந்து மீட்ட ஒரு நபி தான் மூஸா அலை ஆவார்.

யூதர்களின் வரலாறு யாகூப் அலை அவர்களிடமிருந்து தொடங்குகிறது,

இபுறாகீம் நபியின்  மகன் இஸ்ஹாக் அவர்களின் மகனான யாகூப் அலை அவர்களுக்கு இஸ்ராயீல் என்றொரு பெயரும் உண்டு, அல்லாஹ்வின் அடிமை என்பது அதன் பொருள்,

அதனாலேயே யூதர்களை பனூ இஸ்ராயீல் இஸ்ரவேலின் பிள்ளைகளே என்று குர் ஆன் குறிப்பிடுகிறது,

யாகூப் அலை அவர்களின் 12 பிள்ளைகள். அவர்களில் ஒருவர் தான் யூசுப் அலை. அவர்களில் மற்றொருவர் யஹூதா .

யஹூதாவின் வமிசத்தில் தான் தலைவர்கள் வந்தனர், அதனால் மொத்த இஸ்ரவேலின் பிள்ளைகளும் யஹூதிகள் என்று அடையாளம் காணப்பட்டனர், அதிகாரத்தில் இருப்பவர்கள் தானேஅடையாளப்படுத்தப் படுவார்கள்.

எனவே நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்

யஹூதி என்பது ஒரு மதமோ சமூகமோ அல்ல ஒரு குடும்பத்தின் பெயராகும்.  யாகூப் அலை அவர்களின் குடும்பம்.

இந்தக் குடும்பம் சிரியாவிலுள்ள கன் ஆன் பகுதியில் வாழ்ந்தனர்,

இந்த 12 சகோதரகளில் ஒருவரான யூசுப் அலை அவர்களை மற்ற சகோதரர்கள் அவர் மீது பொறாமை கொண்டு கிணற்றில் வீசினர்,

அவரை அல்லாஹ் பாதுகாத்த்து சிரியாவிலிருந்து எகிப்துக்க் கொண்டு வரச் செய்தான் , அங்கு அவர் பிற்காலத்தில் அரசராக உயர்ந்தார்,

கன் ஆனில் உணவுப் பஞ்சம ஏற்பட்ட போது எகிப்துக்கு உணவு தானியம் தேடி வந்த யூதர்களை யூசுப் அலை அடையாளம் கண்டு கொண்டார், சகோதரர்களையும் பெற்றோரையும் எகிப்துக்கு வரவழைத்து தன்னோடு வைத்துக் கொண்டார். அப்போது அவர்கள் மொத்தம் 63 பேர்களாக இருந்தனர் கன் ஆனில் சாமானிய மக்களாக இருந்தவர்கள் எகிப்தின் அரச வம்சத்தினர்களாக ஏற்றம் பெற்றார்கள்,

எகிப்து மக்கள் யூசுப் அலை அவர்கள் மீது கொண்ட மரியாதையினால் அவருக்கு பின்னாலும் அவரது சகோதரர்களையே ஆட்சிக் கட்டிலில் இருத்தி அழகு பார்த்தனர், (யூதர்கள் வெளியூரிலிருந்து வந்த சிறுபான்மையினராக இருந்த போதும்)

காலம் செல்லச் செல்ல யூதர்களின் நடை முறையில் மாற்றம் ஏற்பட்டது, அதிகாரம் தங்களுடைய பிறப்புரிமை என நினைத்து எகிப்தின் சொந்த மக்களை கொடுமைப் படுத்த ஆரம்பித்தனர்,

ஒரு கட்டத்தில் எகிப்தின் பூர் வீக குடிகள் அமாலிகாவினர் யூதர்களை அடக்கி அவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினர், அவர்களுடைய அரசர்களான பிர் அவ்ன் கள் யூதர்களை கொத்தடிமைகளாக நடத்தினர். கடினமான வேலைகளை வாங்கினர், குறைந்த ஊதியம் வழங்கினர்; உரிமைகள் மறுக்கப்பட்ட எகிப்தின் இரண்டாம் தர பிரஜைகளாக யூதர்கள் இருந்தனர்,

மூஸா அலை அவர்கள் பிறப்பதற்கு முன்னர் பிர்அவ்ன் பலஸ்தீன பகுதியிலிருந்து ஒரு நெருப்பு வந்து எகிப்தை நாசப்படுத்துவதாக ஒரு கனவு கண்டான். இக்கனவு குறித்து கனவுகளுக்கு விளக்கம் கொடுப்பவர்கள்
பனூ இஸ்ரவேலர்களிலிருந்து ஒரு குழந்தை பிறந்து வந்து உன் ஆட்சி, அதிகாரங்களைப் பறிப்பான் என்று விளக்கமளித்தனர். இதன் காரணமாக பனூ இஸ்ரவேலர்களில் பிறக்கும் குழந்தைகளை பிர்அவ்ன் கொலை செய்யத் தொடங்கினான் இந்த கால சூழலிலேயே யூதக் குடும்பம் ஒன்றில் இம்ரான் அயாருகா என்ற தம்பதியின் மகனாக மூஸா அலை பிறந்தார்கள்.

மூஸா இபுறாகீம் அலை அவர்களின் ஏழாவது நிலை பேராக பிறந்தார்.
இபுற்கீம் (அலை) + இஸ்ஹாக் +. (அலை) +யாகூப் +. லாவா + ஆசர் + காயிஸ்  + இம்ரான் + மூஸா (அலை)
அவரது காலம் கிமு 1228 லிருந்து 1108-வரை ஆகும்.
இதற்குப் பிந்தைய வரலாற்றை திருக்குர் ஆன் மிக அற்புதமாக குறுகிறது,

وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ (القصص:7)

மூஸா அலை தாயரின் மனம் திடப்பட்டது, குழந்தையை அவ்வாரே நைல் நதியில் மிதக்க விட்டார், அத்தோடு மூஸா அலை அவர்களின் சகோதரியை பின் தொடருமறு சொன்னார்.
َأَصْبَحَ فُؤَادُ أُمِّ مُوسَى فَارِغًا إِنْ كَادَتْ لَتُبْدِي بِهِ لَوْلَا أَنْ رَبَطْنَا عَلَى قَلْبِهَا لِتَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ (القصص:10) وَقَالَتْ لِأُخْتِهِ قُصِّيهِ فَبَصُرَتْ بِهِ عَنْ جُنُبٍ وَهُمْ لَا يَشْعُرُونَ (القصص:   
மூஸாவைச் சுமந்து வந்த அந்தப்பெட்டி பிர்அவ்னின் மனைவியின் கண்ணில் பட்டது பிர்அவ்னுக்கு பிள்ளை இல்லாததன் காரணமாக அவனது மனைவி மூஸாவை நாமே வர்க்கலாம் என்றார்.

فَالْتَقَطَهُ آَلُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ عَدُوًّا وَحَزَنًا إِنَّ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا كَانُوا خَاطِئِينَ  (القصص:08) وَقَالَتِ امْرَأَةُ فِرْعَوْنَ قُرَّةُ عَيْنٍ لِي وَلَكَ لَا تَقْتُلُوهُ عَسَى أَنْ يَنْفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا وَهُمْ لَا يَشْعُرُونَ (القصص

பின் தொடர்ந்து சென்ற சகோதரி, மூஸா பிர்அவ்னின் குடும்பத்தில் போய்ச் சேர்ந்ததாகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எள்றும் அவர் யாரிடமும் பால் குடிக்க வில்லை என்றும் கூறி மூஸாவின் தாயை பால் கொடுக்குமாறும் ஆலோசனை வளங்கினார் இதன்மூலமாக மூஸா தனது தாயிடமே திரும்பினார்.

وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ مِنْ قَبْلُ فَقَالَتْ هَلْ أَدُلُّكُمْ عَلَى أَهْلِ بَيْتٍ يَكْفُلُونَهُ لَكُمْ وَهُمْ لَهُ نَاصِحُونَ (القصص:12) فَرَدَدْنَاهُ إِلَى أُمِّهِ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ (القصص:        

அல்லாஹ்வின் மீது அபாரமான நம்பிக்கை கொண்டு செயல் பட்ட மூஸ அலை அவர்களின் தாயாருக்கு கொல்லப்பட இருந்த குழந்தை திரும்பக் கிடைத்தது, அத்தோடு பால் கொடுத்ததற்காக அரசவையிலிருந்து பணமும் கிடைத்தது.

பிறகு பிர் அவ்னின் மாளிகையிலேயா மூஸா அலை வளர்ந்தார்கள். வாலிபரான போது அவருக்கு அறிவையும் ஞானத்தையும் அல்லாஹ் வழங்கினான்,

وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ وَاسْتَوَى آَتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ  (القصص

இளமைப் பருவத்தில் நல்ல ஆரோக்கியமாகவும் வீரமுள்ளவராகவும் இருந்தார்

இளமையில் ஒரு வழ்க்கில் தலையிட்டார்,

وَدَخَلَ الْمَدِينَةَ عَلَى حِينِ غَفْلَةٍ مِنْ أَهْلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيْنِ يَقْتَتِلَانِ هَذَا مِنْ شِيعَتِهِ وَهَذَا مِنْ عَدُوِّهِ فَاسْتَغَاثَهُ الَّذِي مِنْ شِيعَتِهِ عَلَى الَّذِي مِنْ عَدُوِّهِ فَوَكَزَهُ مُوسَى فَقَضَى عَلَيْهِ قَالَ هَذَا مِنْ عَمَلِ الشَّيْطَانِ إِنَّهُ عَدُوٌّ مُضِلٌّ مُبِينٌ (القصص:15

அதில் எகிப்தியன் இறந்தான்.  வழக்கின் தீர்ப்பு என்ன ஆகுமோ என்று அங்குமிங்கும் அலைந்து திரிந்த மூஸா அலை இறுதியில் எகிப்தை கடந்து சிரியாவின் ஓரத்திலிருந்து மத்யன் நகருக்கு வந்து சேர்ந்தார்.

وَجَاءَ رَجُلٌ مِنْ أَقْصَى الْمَدِينَةِ يَسْعَى قَالَ يَا مُوسَى إِنَّ الْمَلَأَ يَأْتَمِرُونَ بِكَ لِيَقْتُلُوكَ فَاخْرُجْ إِنِّي لَكَ مِنَ النَّاصِحِينَ (القصص:20)

மத்யன் நகரின் வாசலில் ஒரு கிணற்றின் மீது பெரும் பாறாங்கள் போடு மூடப்பட்டிருந்தது, இரண்டு பெண்கள் கிணற்றடியில் தங்களது ஆடுகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்; மூஸா அலை தனது பலத்தால் பாறையை அகற்றி  தண்ணீர் கிடைக்கச் செய்தார். பெண்கள் இருவரும் சீக்கிரமாகா வீடு வந்து சேர்ந்த்தை கண்ட அவர்களது தந்தை சுஜபு அலை எப்படி என்று கேட்டார். தங்களுக்கு ஒரு திடகாத்திரமான இளைஞர் உதவினா என்று சொன்னார். அவரை விருந்துக்கு அழைத்து வருமாறு சுஐபு அலை கூறினார். அப்பெண்மணிகளில் ஒருவர் சென்று மூஸா அலை அவர்களை அழைத்து வந்தார். அத்தோடு தந்தையிடம் இவரை வேலைக்கு வைத்துக் கொண்டல் நல்லது. இவர் நம்பிக்ககுரியவரகவும் பலசாலியாகவும் தெரிகிறார் என்று கூறினார். மூஸா அலை அங்கு வேலைக்குச் சேர்ந்தார்கள்.

தூர திருஷ்டி கொண்ட மனிதர் மூவர்
قال ابن مسعود: أفرس الناس ثلاثة: صاحب يوسف حين قال لامرأته أكرمي مثواه، وصاحبة موسى حين قالت: " يا أبت استأجره إن خير من استأجرت القوي الامين "، وأبو بكر حين استخلف عمر بن الخطاب.)இப்னு கஸீர்(

தப்பித்து வந்தவருக்கு தஙகுவதற்கு இடமும் வேலையும் கிடைத்தது,

فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ (24)  فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ قَالَتْ إِنَّ أَبِي يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا فَلَمَّا جَاءَهُ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ قَالَ لَا تَخَفْ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ (25) قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ (القصص:26-

சுஐபு அலை , மூஸா விடம் நீங்கள் எட்டு வருடங்கள் என்னிடம் ஆடுகள் மேய்த்தால் என்னுடய புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருவேன் என்றார் அதேபோல் அதனை பத்து வருடங்கள் ஆக்குவது உம் விருப்பம் , அப்போது உன் மனைவியை அழைத்துச் செல்லலாம் என்றும் அவர் கூறினார்

إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّالِحِينَ (القصص:

பத்து வருடங்கள் பூர்த்தி செய்த மூஸா அலை அவர்கள் தனது உறவுகளிடம் திருபிச் செல்ல நாடி மனைவியை அழைத்துக் கொண்டு எகிப்துக்கு புறப்பட்டார்.

சினாய் மலைத் தொடரின் அடிவாரத்தில் வந்து கொண்டிருந்த போது கையிலிருந்த பந்தம் அணைந்து போனது, பாதை தெரியவில்லை , அப்போத் தூர் மலையின் மீது வெளிச்சம் தெரிந்தது,

فَلَمَّا قَضَى مُوسَى الْأَجَلَ وَسَارَ بِأَهْلِهِ آَنَسَ مِنْ جَانِبِ الطُّورِ نَارًا قَالَ لِأَهْلِهِ امْكُثُوا إِنِّي آَنَسْتُ نَارًا لَعَلِّي آَتِيكُمْ مِنْهَا بِخَبَرٍ أَوْ جَذْوَةٍ مِنَ النَّارِ لَعَلَّكُمْ تَصْطَلُونَ (القصص:29)

வெளிச்சத்திற்கு அருகே சென்ற போது ஆச்சரியம் அதிர்ச்சி எல்லாம் காத்திருந்தது.

உண்மையில் அது நெருப்பல்ல. அது ஒரு ஒளிப்பிரகாசம். அது இறைவனின் அழைப்பாக இருந்ததனால் அந்த நெருப்பு மூஸாவைத் தவிரை வேறு யார் கண்ணுக்கும் தெரியவில்லை என்று இப்னு கதீர் (ரஹ்)கூறுகிறார்.

وكأنه والله أعلم رآها دونهم، لان هذه النار هي نور في الحقيقة، ولا يصلح رؤيتها لكل أحد

நெருப்பில்லாத ஒரு வெளிச்சம் தெரிந்தது. அங்கு அல்லாஹ் அவருடன் பேசினான்.  நுபுவ்வத்தை கொடுத்து பிர் அவ்னிடம் செல்லுமாறு கூறினான். தனக்கு துணையாக தன்னுடை சகோதரர் ஹாருனையும் தருமாறு வேண்டினார் அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது,

فَلَمَّا أَتَاهَا نُودِيَ مِنْ شَاطِئِ الْوَادِ الْأَيْمَنِ فِي الْبُقْعَةِ الْمُبَارَكَةِ مِنَ الشَّجَرَةِ أَنْ يَا مُوسَى إِنِّي أَنَا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ (القصص:30)

إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى  (طه:12) وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى  (طه:13) إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي  (طه:14) إِنَّ السَّاعَةَ آَتِيَةٌ أَكَادُ أُخْفِيهَا لِتُجْزَى كُلُّ نَفْسٍ بِمَا تَسْعَى (طه:15)


மூஸா வின் அஸா

மூஸா அலை அவர்களது சமூகத்தினரும், எகிப்தியர்களும் சூனியக்கலை மீது அதிக நாட்டம் கொண்டவர்களாக இருந்தனர். எனவே அதில் வெற்றி வாகை சூடும்படியான முஃஜிஸாவை அல்லாஹ் மூஸா அலை அவர்களுக்கு கொடுத்தான்.  

وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَى  (طه:17) قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّأُ عَلَيْهَا وَأَهُشُّ بِهَا عَلَى غَنَمِي وَلِيَ فِيهَا مَآَرِبُ أُخْرَى  (طه:18)  قَالَ أَلْقِهَا يَا مُوسَى  (طه:19

وَأَلْقِ عَصَاكَ فَلَمَّا رَآَهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَانٌّ وَلَّى مُدْبِرًا وَلَمْ يُعَقِّبْ يَا مُوسَى لَا تَخَفْ إِنِّي لَا يَخَافُ لَدَيَّ الْمُرْسَلُونَ (النمل:12) وَاضْمُمْ يَدَكَ إِلَى جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ آَيَةً أُخْرَى  (طه:22)  لِنُرِيَكَ مِنْ آَيَاتِنَا الْكُبْرَى (طه:22)  اسْلُكْ يَدَكَ فِي جَيْبِكَ تَخْرُجْ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ وَاضْمُمْ إِلَيْكَ جَنَاحَكَ مِنَ الرَّهْبِ فَذَانِكَ بُرْهَانَانِ مِنْ رَبِّكَ إِلَى فِرْعَوْنَ وَمَلَئِهِ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ (القصص:


ஃபிர்அவ்னுக்கான ஒன்பது அடையாளங்களில் இவை இரண்டு.

மற்றுமுள்ள ஏழு அடையாளங்களாக, பஞ்சம், பழங்கள் குறைந்து போதல், மழையுடன் கூடிய புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகியவற்றை (07:130-133 வசனங்கள் குறிப்பிடுகின்றன.

وَلَقَدْ أَخَذْنَا آلَ فِرْعَوْنَ بِالسِّنِينَ وَنَقْصٍ مِنْ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ(130)
فَأَرْسَلْنَا عَلَيْهِمْ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ(133)


இந்த அத்தாட்சிகளோடு மூஸா அலை பிர் அவ்னிடம் சென்றார்.

பண்டைய எகிப்திய பழங்குடிகளான அமாலிகா வமிசத்தினர் தங்களது தேசத்தின் அரசனை பிரஅவ்ன் என்பார்கள். பிர் அவ்ன் என்ற வார்த்தைக்கு பெருமை பிடித்த சர்வாதிகாரி என்று பொருள். ஆட்சியாளர்கள் மாறினாலும் அவர்கள்து பட்டம் ஒன்றாகவே இருக்கும். இவ்வாறு 11 அரசர்கள் பிர் அவ்ன் என்று அழைக்கப் பட்டனர். மூஸா (அலை) அவர்கள் எதிர் கொண்ட பிர் அவ்ன் இரண்டாம் ராம்சேஸ்ஆவான் என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

اذْهَبَا إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى(43)فَقُولَا لَهُ قَوْلًا لَيِّنًا لَعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَى قَالَا رَبَّنَا إِنَّنَا نَخَافُ أَنْ يَفْرُطَ عَلَيْنَا أَوْ أَنْ يَطْغَى(45)قَالَ لَا تَخَافَا إِنَّنِي مَعَكُمَا أَسْمَعُ وَأَرَى(46)فَأْتِيَاهُ فَقُولَا إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ وَلَا تُعَذِّبْهُمْ قَدْ جِئْنَاكَ بِآيَةٍ مِنْ رَبِّكَ وَالسَّلَامُ عَلَى مَنْ اتَّبَعَ الْهُدَى(47)إِنَّا قَدْ أُوحِيَ إِلَيْنَا أَنَّ الْعَذَابَ عَلَى مَنْ كَذَّبَ وَتَوَلَّى(48)قَالَ فَمَنْ رَبُّكُمَا يَامُوسَى(49)قَالَ رَبُّنَا الَّذِي أَعْطَى كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ هَدَى(50)

பிர் அவ்ன் மூஸா அலை அவர்களது அழைப்பை கேலி செய்தான்.

وَقَالَ فِرْعَوْنُ يَاأَيُّهَا الْمَلَأُ مَا عَلِمْتُ لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرِي فَأَوْقِدْ لِي يَاهَامَانُ عَلَى الطِّينِ فَاجْعَل لِي صَرْحًا لَعَلِّي أَطَّلِعُ إِلَى إِلَهِ مُوسَى وَإِنِّي لَأَظُنُّهُ مِنْ الْكَاذِبِينَ(38)

அவர் காட்டிய அற்புதங்களை சூனியம் என்றான்
فَلَمَّا جَاءَهُمْ مُوسَى بِآيَاتِنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا سِحْرٌ مُفْتَرًى وَمَا سَمِعْنَا بِهَذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ(36)


قَالَ أَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ أَرْضِنَا بِسِحْرِكَ يَامُوسَى(57)

சூனியக்காரர்களுடன் போட்டி அசத்தியம் அழிந்தது.


فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍ مِثْلِهِ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَا نُخْلِفُهُ نَحْنُ وَلَا أَنْتَ مَكَانًا سُوًى(58)قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ الزِّينَةِ وَأَنْ يُحْشَرَ النَّاسُ ضُحًى(59)فَتَوَلَّى فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهُ ثُمَّ أَتَى(60)

وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ (117) فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ (118) فَغُلِبُوا هُنَالِكَ وَانْقَلَبُوا صَاغِرِينَ (119)  الأعراف:117

وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ(120)قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ(121)رَبِّ مُوسَى وَهَارُونَ(122)قَالَ فِرْعَوْنُ آمَنتُمْ بِهِ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّ هَذَا لَمَكْرٌ مَكَرْتُمُوهُ فِي الْمَدِينَةِ لِتُخْرِجُوا مِنْهَا أَهْلَهَا فَسَوْفَ تَعْلَمُونَ(123) لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ ثُمَّ لَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ(124)قَالُوا إِنَّا إِلَى رَبِّنَا مُنقَلِبُونَ(125)وَمَا تَنقِمُ مِنَّا إِلَّا أَنْ آمَنَّا بِآيَاتِ رَبِّنَا لَمَّا جَاءَتْنَا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ(126)

வரிசையாக மூஸா அலை தனது அற்புதங்களை வெளிப்படுத்திக் காட்டினார்.

பஞ்சம்

பஞ்சம் அவர்களைப் பலகாலம் வாட்டியது. ஆனால் பல ஆண்டுகள் நீடித்த அச்சோதனைகளையும் அம்மக்கள் புரிந்து கொள்ளவில்லை. நல்லது நடந்தபோது அது தாங்கள் வணங்கும் கடவுள்களால் நடந்தது என்று நம்பினார்கள். கெட்டது நடந்தபோது அது பீடை பிடித்தமூஸாவாலும் தம் கடவுளரது கோபத்தாலும் நடந்தது (07:131) என்று கூறினார்கள்.


வெள்ளம்,
பேய் மழையும், வெட்டுக்கிளிகளும் அவர்களது பயிர்களையும் பழங்களையும் அழித்தது என்று இப்னு அப்பாஸ் கூறுகிறார்.

வெட்டுக்கிளி
வெள்ளத்துக்குப் பின்னர் வெட்டுக்கிளிகளால் அவர்கள் சோதிக்கப் பட்டார்கள். அவைகள் பயிர்களையும் பழங்களையும் மட்டுமின்றி, மரங்களையும் உண்டன.

பேன்
பின்னர் பேன்களால் அவர்கள் சோதிக்கப் பட்டார்கள். மூஸா ஒரு மணற்திட்டின் மீது ஏறி தன் கழியால் அடிக்க அதிலிருந்து ஆயிரக்கணக்கில் பேன்கள் கிளம்பி எகிப்தியர்களின் வீடுகளிலும் உணவிலும் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் தூக்கமும் நிம்மதியும் இன்றி தவித்தனர்.

தவளை
ஒருமுறை ஏராளமான தவ்ளைகளை அனுப்பி அல்லாஹ் சோதித்தான். தவளைகள் எகிப்தில் எங்கும் காணப்பட்டன. உணவிலும் மற்ற சாப்பாட்டு வகைகளிலும் அவை நிரம்பி வழிந்தன. எகிப்து ராஜ்ஜியமே தவளை ராஜ்ஜியமாக மாறிப்போனது. பேசுவதற்காகவோ, சாப்பிடுவதற்காகவோ, குடிப்பதற்காகவோ வாயைத் திறந்தால்கூட எங்கிருந்தாவது ஒரு தவளை குதித்து வாய்க்குள் விழுந்தது.

இரத்தம்
மற்றொரு தடவை இரத்தத்தை கொண்டு அல்லாஹ் அவர்களை சோதித்தான். தண்ணீரெல்லாம் இரத்தத்தோடு கலந்தே வந்தது. நைல் நதியில் இருந்து  நீர் எடுத்தால்கூட அதிலும் ரத்தம் கலந்திருந்தது. கிணறு, குளம், ஆறு எதிலிருந்தும் அவர்களால் சுத்தமான தண்ணீர் எடுக்க முடியவில்லை.


ஆனால் இந்த சோதனைகள் யாவுமே எகிப்தியர்களுக்கு மட்டுமே ஏற்பட்டன. இஸ்ரவேலர்கள் இவற்றால் பாதிக்கப்படவில்லை. மூஸா நபியின் இன்னொரு அற்புதம் என்று இதைச் சொல்லலாம். அவர் இறைத்தூதர்தான் என்பதற்கு இன்னொரு அடையாளமாக அது இருந்தது.

சிரமங்கள் ஏற்படத் தொடங்கிய போது எகிப்திய மக்கள் உனது துரதிஷ்டத்தால் தான் இப்படி நடக்கிறது என்று பழித்தனர், பிறகு அவரிடமே வந்து பிரார்த்தனை செய்யக் கோரியதோடு பிரச்சனை தீர்ந்து விட்டால் ஈமான் கொள்வதாகவும் கூறினர். ஆனாலும் ஒவ்வொரு தடவையும சொன்னதற்கு மாற்றமாக நடந்து கொண்டனர்,

وَإِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَطَّيَّرُوا بِمُوسَى وَمَنْ مَعَهُ أَلَا إِنَّمَا طَائِرُهُمْ عِنْدَ اللَّهِ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ (الأعراف:131

وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ الرِّجْزُ قَالُوا يَا مُوسَى ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ لَئِنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِي إِسْرَائِيلَ (الأعراف:134

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மிகக் குறைந்த அளவிலான எகிப்தியர்களே மூஸா மீது நம்பிக்கை கொண்டனர். அவர்களில் மூன்று பேர்தான் மூஸாவை நம்பினர் என்றும் சொல்லப்படுகிறது. ஒன்று ஃபிர்அவ்னின் மனப்வி ஆசியா. இரண்டாவது நம்பிக்கையை மறைத்து வைத்திருந்து, நேரம் வந்தபோது ஃபிர்அவ்னுக்கே அறிவுரை சொன்னவர். மூன்றாவது, தவறுதலாக மூஸா ஒருவரைக் கொலை செய்த காலத்தில் ஓடி வந்து அவரை ஊரை விட்டுப் போய்விடும்படி ஆலோசனை சொன்ன (28:20) மனிதர்.

ஒரு கட்டத்தில் யூதர்களை இனப் படுகொலை செய்ய பிர்அவ்ன் திட்டமிட்ட போது யூதர்களை இரவோடிரவாக அங்கிருந்து  வெளியேற்றி தப்பி விடும்படி அல்லாஹ் மூஸா அலை அவர்களுக்கு உத்தரவிட்டான்.

فَأَسْرِ بِعِبَادِي لَيْلًا إِنَّكُمْ مُتَّبَعُونَ (الدخان:23

அவ்வாறு தப்பிக்கும் திட்டம் அற்புதமான் முறையில் நிறைவேற்றப்பட்டது.
புறப்பாடு

எல்லோரும் ஒரே நேரத்தில் ஊரை காலி செய்து கிளம்பினால் கண்டிப்பக எகிப்து மக்களுக்கு சந்தேகம் வரும். அதை தவிர்ப் பதற்காக இறை ஆணையை செயல்படுத்த ஒரு தகுந்த சந்தர்பத்தை மூஸா (அலை) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இஸ்ரவேலர்கள் ஆண்டு தோறுக் கொண்டாடி வந்த திருவிழாக் காலம் வந்தது. ஊருக்கு வெளியே சென்று அந்தத் திருவிழா வை கொண்டாடுவது இஸ்ரவேலர்களின் வழக்கம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எகிப்தைவிட்டு வெளியேறிவிட மூஸா (அலை) திட்டமிட்டார். ஊர்மக்களை நம்ப வைப்பதற்காக உள்ளூர் எகிப்தியர்களிடமிருந்து தங்க ஆபரணங்களை இரவலாக வாங்கி அணிந்து கொண்டனர்ஒரு இரவில் மூஸா (அலை) யூதர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிரியா நோக்கிச் புறப்பட்டார்.. யூசுப் (அலை) அவர்களது காலத்தில் 83 பேராக எகிப்துக்குள் குடியேறிய இஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களோடு எகிப்த்தை விட்டு வெளியேறுகையில் ஆறுலட்சம் பேராக பெருகியிருந்தார்கள் என விவிலியம் பழைய ஏற்பாடு கூறுகிறது.. 426 சூரிய ஆண்டுகள் அவர்கள் எகிப்தில் இருந்ததாக சொல்லப் படுகிறது

திருவிழாவிற்கு செல்வதாக சொல்லிக் கொண்ட அந்தப் பெருங் கூட்டம் ஒரு திகில் பயணத்தை தொடங்கியது

எங்கே செல்வது

இதற்கு முன்னர் ஒரு தடவை எகிப்திலிருந்து தப்பிச் சென்ற அனுபவம் மூஸா (அலை)அவர்களுக்கு இருந்தது. அதனால் தம் மக்களை முதலில் சிரியாவுக்கும் பிறகு அங்கிருந்து பாலஸ்தீனிற்கும் அழைத்துச் சென்றுவிட அவர் திட்டமிட்டிருந்தார்.

சிரியா செல்ல சினாய் நிலப்பரப்பை கடக்க வேண்டும்எகிப்தை சினாய் நிலப்பரபுடன் இணைக்கிற தரைப்பாதை யை நோக்கிச் செல்வதாகத்தான் தான் மூஸா (அலை) நினைத்தார்.

திக்குத்தெரியாத அந்தப் பாலைவனத்தில் வடகிழக்காக செல்லவேண்டிய அவரது பயணம் நேர்கிழக்கில் அமைந்து விட்டது. பதை தவறியது. தரைவழியை எதிர்பார்த்து இரவில் புறப்பட்டவர் அடுத்த நாள் காலை பொழுது புலர்ந்த போது எதிரே செங்கடலை பார்த்து திடுக்கிட்டார்.

இஸ்ரவேலர்கள் திகிலுற்றனர். எதிரே கடல் தப்பிக்கும் மார்க்கத்திற்கும் அவர்களது நம்பிக்கைகும் அணை போட்டிருந்தது. பின்னால் இவர்களது விஷயத்தை  தெரிந்து கொண்ட பிர் அவ்ன் கடல் போன்ற படையுடன் அவர்களை துரத்தி வந்து கொண்டிருந்தான்.

இஸ்ரவேலர்கள் தப்பிச் செல்வதை அறிந்து கோபமுற்ற ஃபிர்அவ்ன் உடனே பறை சொல்பவர்களை பல ஊர்களுக்கும் அனுப்பி பெரும் மக்கள்தொகையைக் கூட்டினான். அடுத்த கட்ட தலைவர்கள், தளபதிகள் ஆகியோருடன் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு மூஸாவைப் பின் தொடர்ந்து சென்றான். அவர்கள் சென்றது விடியல் நேரம் என்கிறது குர்ஆன் (28:60).

ஃபிர்அவ்னின் படையில் பதினாறு லட்சம் வீரர்கள் இருந்தார்கள் என்றும் சொல்லப் படுகிறது.

பிர் அவ்ன் தன் படையினரை கிளப்பிக் கொண்டு எகிப்திலிருந்து வெளியேறிச் சென்றதை அல்லாஹ் குறிப்ப்பிடும் விதம் அலாதியானது. படோபடமான வாழ்வாதரங்களை கொண்ட பிர் அவ்னும் அவனுடைய ஆட்களும் ஒரு பெரும் அழிவிற்கு ஆளாகப் போகிறோம் என்பதை உணராமல் அவசரமாக புறப்பட்டதை அல்லாஹ் கூறுகிறான்.

فَأَرْسَلَ فِرْعَوْنُ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ(53)إِنَّ هَؤُلَاءِ لَشِرْذِمَةٌ قَلِيلُونَ(54)وَإِنَّهُمْ لَنَا لَغَائِظُونَ(55)وَإِنَّا لَجَمِيعٌ حَاذِرُونَ(56) فَأَخْرَجْنَاهُمْ مِنْ جَنَّاتٍ وَعُيُونٍ(57)وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ(58)
  

யூதர்களின் பதற்றம்

பிர் அவ்னின் பெரும் படையை கண்டதும் நாம் மாட்டிக் கொண்டோம்‘ (26:61). என்று இஸ்ரவேலர்கள் கூக்குரலிட்டனர்.

 فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ(61)قَالَ كَلَّا إِنَّ مَعِي رَبِّي سَيَهْدِينِي.

செங்கடலுக்கு நேரே நின்ற மூஸா (அலை) ராட்சச அலைகலைக் கொண்ட அந்த கடலை நோக்கினார். மூஸாவோடு அவரது சகோதரர் ஹாரூனும் அவரது சகோதரர் யூஷாவும் நின்று கொண்டிருந்தனர். ஃபிர்அவ்னின் குடும்பத்திலிருந்து மூஸாமீது நம்பிக்கை கொண்டவரும் அங்கே இருந்தார்தன் குதிரையுடன் கடலில் இறங்க முயற்சித்து முடியாமல் அங்கேயே நின்ற அவர், இறைத்தூதர் மூஸாவே, இங்குதான் நீங்கள் நிற்க வேண்டும் என்று இறைவன் உத்தரவு கொடுத்திருந்தானா என்று கேட்டார். ஆமாம் என்றார் மூஸா நபி.

கடலே வழி கொடு என மூஸா அலை கேட்டார்கள், எனக்கு அதற்கான உத்தரவில்லை என்று கடல் கூறியது. ‘

மூஸா அலை அல்லாஹ்விடம் கையேந்தினார்.

அவரது தடியை பயன்படுத்துமாறு அல்லாஹ் கூறினான். தடியை இன்னொரு தடவை பயன்படுத்தினார். ஒரு காலத்தில் பாம்பாக மாறிய தடி மற்றொரு கட்டத்தில் கடக் பிளந்து பாதை ஏற்பட காரணமானது,

தண்ணீர் ஒவ்வொரு புறமும் நீண்ட பெரு மலையைப் போல ஒதுங்கி நின்றது. 12 பாதைகள் ஏற்பட்டன அதன் வழியாக யூதர்களின் 12 பிரிவினரும் கடந்து சென்றனர். ஒரு வழியில் செல்பவர்கள் மற்ற வழியில் செல்பவர்களைப் பார்த்து  ஆறுதல் அடைந்து கொள்ளும் வகையில் மலை போல எழுந்து நின்ற தண்ணீரை கண்ணாடி போல அல்லாஹ் ஆக்கினான்.

وَأَنْجَيْنَا مُوسَى وَمَنْ مَعَهُ أَجْمَعِينَ (65) ثُمَّ أَغْرَقْنَا الْآَخَرِينَ (66) إِنَّ فِي ذَلِكَ لَآَيَةً وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ (67) (الشعرا:

فَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ اضْرِبْ بِعَصَاكَ الْبَحْرَ فَانفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ(63)وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ(64)وَأَنْجَيْنَا مُوسَى وَمَنْ مَعَهُ أَجْمَعِينَ(65)ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ(66)


பிர் அவ்னிடமிருந்து பத்திரமாக தப்பிவிட்ட மூஸா (அலை) பிர் அவ்னும் கடலுக்குள் இறங்கப் போவதறிந்து அவன் இறங்குவதற்குள்ளாக அவர்கள் வர வழியில்லாமல் செய்ய கடலைத் தன் தடியால் அடித்து மூடச் விட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் பிர் அவ்ன் வரட்டும், ஏனெனில் அவர்கள் மூழ்கடிக்கப்பட வேண்டியவர்கள் (44:24). என்று அல்லாஹ் சொன்னான்.

ஃபிர்அவ்னுக்கு முதலில் பயமாகத்தான் இருந்தது என்று சிலர் கூறுகின்றனர். தொடர்ந்து அவன் உள்ளே போக விரும்பவில்லை. மூஸாவின் இறைவனுடைய வேலைதான் அது என்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது.

அந்த சமயத்தில் ஜிப்ரீல் (அலை) ஒரு பெண் குதிரையில் திடீரென்று அங்கு தோன்றி முதலில் கடலுக்குள் சென்றார். அந்தக் குதிரையைப் பார்த்த ஃபிர்அவ்னின் ஆண் குதிரை உடனே பாய்ந்து பின் தொடர்ந்து கடலுக்குள் திறந்திருந்த வழியில் சென்றது. அதனை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. மன்னன் சென்றதைத் தொடந்து மன்னனின் படையினர் சென்றனர்

எல்லோரும் கடலுக்குள் இருந்தபோது தடியால் தட்டும்படி இறைவனிடமிருந்து மூஸா அலை அவர்களுக்கு  உத்தரவு வந்தது. அவர் கழியைத் தட்ட கடல் மூடிக்கொண்டது. ஒருவர்கூட உயிரோடு மீளவில்லை.

பராக்கிரமம் கொண்ட ஒரு பேரரசனும் அவனுடை படைபலம் மிக்க உறவுகளும் நீரலைகளின் சங்கமத்தில் சத்த மில்லாமல் சமாதியானார்கள்.

யூதர்களுக்கு இறைவன் செய்த இந்த பேருபகாரத்தை திருக்குர் ஆண் அற்புதமாக சுட்டிக்காட்டுகிறது. கவனத்துடன் கவனிக்க வேண்டிய வசனம் இது,

وَإِذْ فَرَقْنَا بِكُمْ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنظُرُونَ(50)

உங்களுக்காக கடலை பிளந்தோம் என்ற அர்த்தத்தில்  லகும் என்ற வார்த்தை பயன்படுத்தப் படாமல் பிகும் என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. இதிலுள்ள பா எனும் எழுத்து முஸாபஹத் எனும் கருத்தை தரக்கூடியது. அதாவது உங்களது முன்னிலையில் கடலை பிளந்தோம் என்பது அதன் பொருள். அல்லாஹ் யூதர்கள் வருவதற்கு முன்பே கடலை பிளந்து வைத்திருந்தால் அதன் மதிப்பை அவர்கள் புரிந்திருக்க முடியாது. யூதர்கள் கண் பார்க்க அவர்களது முன்னிலையில் அல்லாஹ் கடலைப் பிளந்தான். அத்தோடு பிர் அவ்ன் அழிக்கப்படுவதையும் கண்ணால் கண்டார்கள்.

கவச ஆடை அணீந்திருந்த நிலையிலும் பிர் அவ்னுடைய உடல் தண்ணீர்க்கு மேல மிதந்தது. அதைப் பார்த்து பிர் அவ்ன் இறந்து விட்டதை யூதர்கள் உறுதிப் படுத்திக் கொண்டனர்;

யூதர்களின் இந்த அற்புத மீட்சியைப் பற்றி விவிலியத்தின் இரண்டாம் அத்தியாயம் கூறுகிறது. அது விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) (Exodus) என்ற தலைப்பில் அமைந்திருக்கிறது,

ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்;
ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன...
ஆற்றல் மிகு நீர்த்திரளில் அவர்கள் ஈயம் போல் அமிழ்ந்தனர்.
என் பிர் அவ்னின் அழிவை தவ்ராத் ( விவிலியம் கூறுகிறது,)

கடல் பிளந்த இந்த நிகழ்வு கி.மு. 1280ஆம் ஆண்டளவில் நடந்திருக்கலாம் என்பது வரலாற்றாசிரியர்கள் கணிக்கின்றனர், (விக்கீபீடியா)

இந்த அற்புதமான் நிகழ்வு குறித்தும் மூஸா அலை அவர்களின் வரலாறு குறித்தும் உறுதியாக பேசுகிற நம்பகத்தன்மையான நூல் குர் ஆன் மட்டுமே!

தொல்பொருளியளாலர்களிடையே விடுதலைப் பயணம் குறித்தும், மோசேயின் வரலாற்றுத்தன்மைக்குறித்தும் ஒத்தக்கருத்தில்லை பலர் இதனை வெண்கலக் காலத்தின்முடிவில் இசுரயேலர்களால் காணான் நாட்டில் இயற்றப்பட்ட புனைவுக்கதையாகக் கருதுகின்றனர் என விக்கீபீடியா கூறுகிறது,

குர் ஆனோ இதை சத்திய வரலாறு என சான்றளிக்கிறது,

மூஸா அலை அவர்களும் யூதர்களும் பாதுகாக்கப்பட்ட இந்த நாளில் நோன்பு வையுங்கள் என பெருமானார் (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட காரணத்தால் கியாமத் நாள் வரை மறக்க முடியாத நிகழ்ச்சியாக இந் நிகழ்ச்சி தொடர்ந்து உலக அளவில் ஆண்டு தோறும் நினைவு கூறப்படுகிறது,

செங்கடல் பிளந்து இவ்வாறு பாதுகாக்கப்பட்ட யூதர்களுக்கு அல்லாஹ் மூஸா அலை அவர்கள் மூலமாக தவ்ராத்தை வழங்கினான். அதை அம்மக்கள் முறையாக செயல்படுத்தாத போது கடுமையான தண்டனைகளை வழங்கினான்.

நாடின்றி அலைந்த அம்மக்களுக்கு ஒரு நாட்டை வழங்குவதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு ஜெரூசலம் என்று அறியப்படும் வாக்களிக்கப்பட்ட நிலமான பைத்துல் முகத்தஸ் நகரை நோக்கி மூஸா சென்றார்.

அதையும் அதனருகில் உள்ள அரீஹாவையும் உடல்  பலம் பொருந்திய மக்கள் கூட்டம் ஒன்றூ ஆக்ரமித்திருந்தது. அவர்கள் கன்ஆன் ஹிட்டி பகுதி மக்கள் என்று இப்னு கதீர் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அவர்கள் ராட்சசர்களைப் போல மிக உயரமானவர்களாகவும், உறுதியானவர்களாகவும் இருந்தார்கள். அவர்களும் சிலை வணங்கிகளாக இருந்தார்கள். அவர்களோடு சண்டையிட்டு வெற்றி கொண்டு அந்த எதிரிகளை அப்புனித நிலத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அல்லாஹ் மூஸாவுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் உத்தரவிட்டான்.



                                                                                          
يَاقَوْمِ ادْخُلُوا الْأَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِي كَتَبَ اللَّهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوا عَلَى أَدْبَارِكُمْ فَتَنْقَلِبُوا خَاسِرِينَ(21)قَالُوا يَامُوسَى إِنَّ فِيهَا قَوْمًا جَبَّارِينَ وَإِنَّا لَنْ نَدْخُلَهَا حَتَّى يَخْرُجُوا مِنْهَا فَإِنْ يَخْرُجُوا مِنْهَا فَإِنَّا دَاخِلُونَ(22) (05:21).


ஆனால் அதற்கு அவர்கள் இணங்கவில்லை. நீண்ட காலம் பிர் அவ்னிடம் கொத்த்டிமைகளாக இருந்து பழகி விட்ட காரணத்தால் அவர்கள் கோழைகளாகிவிட்டிருந்தனர். அதனாலேயே சண்டை என்றதும் பயந்து கொண்டனர் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் உணமை அதுவல்ல. எதார்த்தத்தில் இப்படி நடந்து கொள்வதே யூதர்களின் குணமாக இருந்தது.
ஏனெனில் எங்களால் முடியாது என்று மட்டுமே அவர்கள் சொல்லி இருந்தால் கோழகள் என்று ஒத்துக் கொள்ளலாம். அவர்கள் சொன்னது என்ன? திருக்குரான் சொல்கிறது.அந்த ஊரிலிருப்பவர்கள்  மிகவும் பலசாலிகள். அவர்களாக அந்த ஊரை விட்டு வெளியேறும் வரை நாங்கள் உள்ளே நுழைய மாட்டோம். என்று கூறினர்.

பயப்பட வேண்டாம், அந்த நகரின் வாயில் வரை சென்று விட்டால் அல்லாஹ் உதவியால் ஜெயித்து விடலாம் என்று மூஸாவின் உத்தரவை செயல்படுத்த விரும்பிய மூஸா நபியின் சகோதரியின் கணவரான காலப் பின் யுஹான்னாவும் ஹாரூனின் மகனான யூஷா இப்னு நூனும் கூறினார்கள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத இஸ்ரவேலர்கள் நல்லது சொன்ன அவர்களையே கொல்லத் துணிந்தனர்.

பிறகு மூஸா (அலை)வைப் பார்த்து வேண்டுமானால் நீரும் உனது இறைவனும்  அங்கே சென்று சண்டை செய்து அவர்களை வெளியேற்றுங்கள். அதுவரை நாங்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறோம்.

قَالَ رَجُلَانِ مِنْ الَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمَا ادْخُلُوا عَلَيْهِمْ الْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَالِبُونَ وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنتُمْ مُؤْمِنِينَ(23)قَالُوا يَامُوسَى إِنَّا لَنْ نَدْخُلَهَا أَبَدًا مَا دَامُوا فِيهَا فَاذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَا إِنَّا هَاهُنَا قَاعِدُونَ(24)
(05:22,24).

அதன் பிறகுதான் மூஸா, “என் இறைவனே, நிச்சயமாக என் மீதும், என் சகோதர் மீதும் தவிர, (மற்ற எவர் மீதும்) எனக்கு அதிகாரமில்லை. ஆகவே, பாவிகளாகிய இந்த மக்களிடமிருந்து எங்களைப் பிரித்து விடுவாயாகஎன்று பிரார்த்தனை செய்தார் (05:25).
قَالَ رَبِّ إِنِّي لَا أَمْلِكُ إِلَّا نَفْسِي وَأَخِي فَافْرُقْ بَيْنَنَا وَبَيْنَ الْقَوْمِ الْفَاسِقِينَ(25)

அப்பிரார்த்தனையை ஏற்ற இறைவன் இனி நாற்பது வருடங்கள் வரை அவர்களுக்கு அந்த இடம் அவர்களுக்கு கிட்டாது தடுக்கப் பட்டு விட்டது. இஸ்ரவேலர்களை வாக்களிக்கப்பட்ட நிலத்துக்கு வழி தெரியாமல் அலைகழிப்பேன். (05:26). என்று கூறினான்.

قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ أَرْبَعِينَ سَنَةً يَتِيهُونَ فِي الْأَرْضِ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْفَاسِقِينَ(26)


திறந்த வெளிச் சிறை

அல்லாஹ்வின் பேராற்றாலால் பிர் அவ்னின் கொடும் அடக்குமுறையிலிருந்து மிக ஆச்சரிய்மான முறையில் காப்பாற்றப் பட்ட யூதர்கள், இத்தகைய ஆச்சரியமான பாதுகாப்புக்கு பதிலாக இறைவன் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையை உருவாக்கிக் கொண்டிருக்கவேண்டும். இறைக் கட்டளைப் படி செயல்படுகையில் நாம் சிறிய அளவில் முன்வந்து முயற்சி செய்தால் போதும் அல்லாஹ் பெரிய வெற்றியை தருவான் என்ற பக்குவத்தை பெற்று அதற்கேற்ப செயலாற்றி இருக்க வெண்டும். ஆனல் அவர்களது விஷம குணம் அவர்களை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து விட்டது, அதற்கு தண்டனையாக நாற்பது வருடங்கள் சினாய் பகுதியைஅ ஒட்டிய  தீஹ் என்ற பாலைவனப் (அதுஇஸ்ரவேலர்களின் பாலைவன் என்று இப்போது அழைக்கப்படுகிறது) பிரதேசத்தில் அல்லாஹ் அவர்களை தட்டுக்கெட்டு அலைய வைத்தான்.

தங்குவதற்கு வேறு ஒரு இடம் தேடி நடந்த அவர்கள் இரவு முழுவதும் நடப்பார்கள். விடிகாலைக்கு சற்று முன்னதாக கண்ணயர்வார்கள். காலை பொழுது விடிந்ததும் விழித்துப் பார்த்தால் நேற்று எங்கிருந்து கிளம்பினார்களோ அந்த இடத்திற்கே திரும்பியிருப்பதை காண்பார்கள்.

கம்பி இல்லை. காவலர்கள் இல்லை. சுற்றுச் சுவர் இல்லை. ஒரு திறந்தவெளி மைதானம் மட்டுமே! அந்த மைதானத்தில் நாற்பது ஆண்டுகள் அல்லாஹ் அவர்களை சிறையில் வைத்தான். செங்கடலை பிளக்கச் செய்தது போலவே இதுவும் அல்லாஹ்வின் அற்புத ஆற்றலுக்கு ஒரு அடயாளமாக அமைந்தது.

மூஸா (அலை) இறப்பு

தீஹ் பாலைவனப் பகுதியில் இஸ்ரவேலர்கள் அலைந்து கொண்டிருந்த கால கட்டத்தில் மூஸா (அலை) அவகளின் மூத்த சகோதரரான ஹாரூன் (அலை) இறந்து போனார். அவரை சினாய் மலைத் தொடரில் உள்ள ஹூர் மலையில் மூஸா (அலை) அடக்கம் செய்தார்.

தீஹில் சுற்றிக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே மூஸா (அலை) அவர்கள் இறப்பின் நேரமும் நெருங்கியது. வாக்களிக்கப்பட்ட நிலமான ஜெருசலத்துக்கு மிக அருகில் தான் இறக்க விரும்புவதாக மூஸா இறைவனிடம் முறையிட்டார். தீஹ் மைதானத்தை சுற்றி வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு முறை வாககளிக்கப் பட்ட பூமியான் பாலஸ்தீனத்திற்கு அருகில் வந்த போது மூஸா (அலை) இறந்து போனார். அவரை யூசஃ நபி சாக்கடலுக்கு அருகில் உள்ள நிபூ மலையடிவாரத்தில் நல்லடக்கம் செய்தார்.

மூஸா நபியின் சிறப்புகள்

ஃ    அல்லாஹ்வோடு சினாய் மலையில் பேசும் வாய்ப்பை ஆரம்பமாகப் பெற்றார் (19:51, - 53). இறக்கும் வரை இறைவனோடு பேசிக்கொண்டிருந்தார்.
ஃ    நியாயத் தீர்ப்பு நாளின் எனக்குதான் முதன் முதலாக பிரக்ஞை வரும். ஆனால் நான் விழிக்கும்போது எனக்கு முன்னே மூஸா அல்லஹ்வின் ஆசணமான அர்ஷின் காலைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பேன். எனக்கு முன்னேயே பிரக்ஞை அவருக்கு வந்துவிட்டதா அல்லது சினாய் மலையில் மயங்கி விழுந்ததற்குப் பரிசாக அதன் பிறகு பிரக்ஞை அவருக்குத் தப்பவே இல்லையா என்று எனக்குத் தெரியாது  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் (அஹ்மது, 2/169).

ஃ    அல்லாஹ்வால் மிகவும் கண்ணியப்படுத்தப்பட்ட நபி. அவர் பிரார்த்தனையை ஏற்று அவர் சகோதரரையும் அல்லாஹ் நபியாக்கினான் (19:53).
ஃ    முஸ்லிம் சமுதாயத்திற்கு முதலில் கட்டாயமாக்கப்பட்ட ஐம்பது வேளைத் தொழுகையை ஐந்து வேளையாக மாற்றிக் கொடுத்த பெருமை மூஸா (அலை) அவர்களைச் சேரும் (புகாரி, 3410).
ஃ    சிவந்த நிறம், உயரமான உடல், சுருள் முடி ஆகியவை மூஸா (அலை) அவர்களுக்ககு இருந்ததாகவும், ஹஜ்ஜை நிறைவேற்றுபவராக அவர் இருந்ததாகவும், மலையிலிருந்து தல்பியாவை ஓதிய வண்ணம் அவர் இறங்கு வருவதை தான் பார்த்ததாகவும் நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள். (முஸ்லிம் 166, 168, அஹ்மது 1/215, 277, 245).
ஃ    பெருமானார் (ஸல்) அவர்கள் தனக்கு அருளப்பட்ட முதல் வஹீ பற்றி வரகாவிடம் சொன்னபோது அவர், மூஸா இப்னு இம்ரானுக்கு செய்தி கொண்டு வந்த அதே வானவர் நாமூஸ்தான் உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறார் என்று கூறினார்.
          இஸ்ரவேலர்களைப் போன்ற ஒரு நன்றி கெட்ட, நயவஞ்சகமான, சுயநலம் பிடித்த, வாக்குத் தவறுகின்ற, குழம்புகின்ற சமுதாயத்தவருக்கு மிகுந்த பொறுமையுடன் உபதேசம் செய்த நபியாவார் மூஸா (அலை).
அதுவே அவரது பெறுமைக்கு பெரும் சான்று.

மூஸா அலை அவர்களின் அவர்களின் வரலாற்றில் ஈர்ர்பு மிகு அம்சங்கள் நிறைய இருப்பதைப் போலவே கணக்கற்ற வாழ்வியல் பாடங்கள் இருக்கின்றன,

அல்லாஹ் கூறும் இந்த அரும் பெரும் நபியின் வரலாறு நமது ஈமானிய வாழ்வு வெளிச்சம் பெற காரணமாகட்டும்.



7 comments:

  1. அருமையான கட்டுரை . மிக அழகான வார்த்தைகள்.மிகக் நன்றி ஹஜ்ரத் அவர்களே. அல்லாஹ் தங் களின் இல்மில் பரகத் செய்வானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    ReplyDelete
  2. அற்புதம் மிக அரூமை

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத அவர்களே அல்லாஹ் உங்களின் இந்த மகத்தான சேவையை பொருந்திக்கொள்வனாக இன்றைக்கு காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு நான் உங்களுக்கு குறிப்பாக துஆ செய்தேன் .இதை தங்களிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணினேன் .இணையத்தில் எத்தனையோ ஆலிம்கள் குறிப்புகள் வழங்கினாலும் தொடர்ந்து எந்த விதமான இடைவெளிகள் இல்லாமல் கொடுப்பதும் காலத்திற்கு ஏற்ற தகவல்கள் கொடுப்பதில் தாங்களே சிறந்தவர் அல்லாஹ் உங்களின் இந்த சேவையை மென்மேலும் வளர செய்வானாகா .உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் இம்மை மறுமை நற்கூலிகளை நிறைவாக தருவானாக அமீன் . ச .தௌபீக் ஹுசைன் உஸ்மானி பழனி

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைகும் ஹஜ்ரத் தங்களின் வாழ்நாளை நீலமாக்க வானாக

    ReplyDelete
  5. தொடர்ந்து பல நாட்கள் சுபுஹூ பயான் செய்ய ரொம்ப உதவியது. ஜஸாகல்லாஹூ கைரா ஹஜ்ரத் 💐 பாரகல்லாஹ் !

    ReplyDelete
  6. தொடர்ந்து பல நாட்கள் சுபுஹூ பயான் செய்ய ரொம்ப உதவியது. ஹஜ்ரத் ஜஸாகல்லாஹூ கைரா ஹஜ்ரத் பாரகல்லாஹ்! 💐

    ReplyDelete
  7. Anonymous9:17 PM

    அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லா என் குழந்தைக்கு பயான் எடுத்துக் கொடுக்க எனக்கு உதவியது பேசாக்கல்லாஹ் ஹைரின் கசிரா.

    ReplyDelete