வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 08, 2015

உமர் (ரலி) தீனுக்கு வழங்கிய கொடைகள்

وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى
இன்ஷா அல்லாஹ் வருகிற 14 ம் தேதி புதன்கிழமை ஹிஜ்ரீ1437 ஹிஜிரீ புத்தாண்டு பிறக்கிறது.

அல்லாஹ் இந்த புதிய வருடத்தை நன்மைகளும் மகிழ்ச்சியும் நிறைந்த வருடமாக ஆக்கியருள்வானாக! தீமைகளிலிருந்தும் துயரத்திலிருந்தும் பாதுகாப்பானாக!

இஸ்லாமிய காலண்டர் சிஸ்டத்தை உமர் ரலி அவர்கள் தான் இஸ்லாமிய உலகிற்கு ஏற்ப்டுத்திக் கொடுத்தார்கள்,

ஹிஜ்ரி பெயர் சூட்டலின் வரலாறு.

அரபு மக்களிடம் மாதங்களை குறிப்பிட 12 பெயர்கள் இருந்தன. அவர்களது நாட்டின் தட்ப வெட்ப சூழ்நிலைக்கேற்பவும் கலாச்சார அடிப்படையிலும் அப்பெயர்களை சூட்டியிருந்தனர். அப்பெயர்களில் பல் வேறு பகுதிகளிலிருந்தும் இறக்குமதியானவை

ஆனால் வருடத்தை தொடர்ச்சியாக அடையாளப்படுத்துவதற்கு அவர்களிடம் குறிப்பித்தக்க  எந்த அடையாளமும் இருக்கவில்லைஏதேனும் முக்கிய நிகழ்வுகளைச் சார்ந்து ஆண்டுக்கு அடையாளமிட்டுக் கொள்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு சற்று முன்னதாக எமன் தேசத்து அரசன் ஆப்ரஹா யானைப் படையோடு கஃபாவை அழிக்க வந்து அழிது போன நிகழ்ச்சி நடை பெற்றதால் அந்த ஆண்டையானை ஆண்டுஎன்று அடையாளப் படுத்தினர்.

தற்போது பிறப்புச் சான்றிதழ் அதற்கான பதிவு போன்றவை நடை முறையில் ஒருப்பதால் இன்றை தலைமுறைக்கு பிறந்த நாட்கள் நினைவில் தவறாமல் இருக்கின்றன. நமக்கு இரண்டு தலை முறைக்கு முந்தியவர்களிடம் அத்தகைய பழக்கம் இல்லாதத காரணத்தால் வயதுக் கணக்க்கை தோராயமாக வே வைத்திருந்தனர், அது போல அன்றைய அரபுகளின் சமூக அமைப்பு ஆவணங்களை பராமரிக்கும் சமுதாயாமாக முறைப் படுத்தப் படாத காரணத்தால் ஆண்டுக்கான அடையாளச் சொல் தேவையானதாக இருக்கவில்லை.


பின்னாட்களில் இஸ்லாமின் எழுச்சிக்குப் பிறகு அரபுகளின் தேசீய கட்டமைப்பு உருவாக்கப் பட்டு இஸ்லாமின் பேரரசு நிலை நாட்டப் பட்ட போது வரலாற்றுத் தகவல்களை கனக்கிடுவதிலும் ஒப்பந்தங்களின் கால நிணயத்திலும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது வருடத்தை குறிப்பதற்கு ஒரு அடையாளப் பெயரின் அவசியம் உணரப்பட்டது.

பெருமானார் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் (கி.பி.639 ல்) வருடத்திற்கு அடையாளமாக எந்தப் பெயரைச் சூட்டலாம் ஆண்டின் தொடக்கமாக எதைக் கருதலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது.

இதற்கான ஒரு கூட்டத்தை ஹிஜ்ரீ 17 ம் ஆண்டில் ஹஜ்ரத் உமர் (ரலி)அவர்கள் கூட்டினர்கள்.  அதில் நான்கு கருத்துக்கள் முன்வைக்கப்படன. நான்கும் நபிகள் நாயகத்தின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்ததன.

1)         அண்ணலாரின்  பிறப்பு
2)         அண்ணலாரின்  இறப்பு
3)         அண்ணலார் நபியாக தேர்வு செய்யப்பட்டது
4)         அண்ணலார் மக்காவிலிருந்து மதீனர்விற்கு (ஹிஜ்ரத்) புலம் பெயர்ந்தது

உமர்(ரலி) அவர்கள்ஹிஜ்ரத்தை தேர்வு செய்தார்கள்.

இதே போல இஸ்லாமிய மார்க்கத்தில் பல முன்னோடிச் செயல்களுக்கு உமர் ரலி காரணமாக இருந்தார்கள்

உமர் யார்?
هوعمر بن الخطاب بن نفيل بن عبد العزي بن رياح
·         குறைஷிகளில் அதீ குடும்பத்தைச் சார்ந்தவர்.
·         பெருமானாரை விட பத்து வயது இளையவர்.
·         குறைஷிக் குலத்தாரின் சஃபாரத் எனும் தூது செல்லும் பணி இக்குடும்பத்திற்கு வழங்கப்பட்டிருந்தது,

·         உமர் அரபுகளில் எழுதப்படிக்கத் தெரிந்த சிலரில் ஒருவராகவும், திடகாத்திரமான மல் யுத்த வீரராகவும்
·         கம்பீரத்திற்கும் நீதிக்கும் பெயர் பெற்றவராக இருந்தார்,

அவர் இஸ்லாத்திற்கு வேண்டுமென பெருமானார் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். 

                                                                                                        
عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اللَّهُمَّ أَعِزَّ الْإِسْلَامَ بِأَحَبِّ هَذَيْنِ الرَّجُلَيْنِ إِلَيْكَ بِأَبِي جَهْلٍ أَوْ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ" وَكَانَ أَحَبَّهُمَا إِلَيْهِ عُمَرُ.

உமர் அல்லாஹ் விற்கு பிரியமானவராக இருந்தார் என்பதை இந்த துஆ உறுதிப்படுத்துகிறது,
                                                                                               
உங்களையோ என்னையோ  தீனுக்கு வேணும் எனக் கேட்டு பெருமானார் துஆ செய்யவில்லை என்பதை ஒப்பிட்டு பார்த்து உமர் ரலியின் அந்தஸ்தை மனதில் உறுதியாக நிலைப்படுத்த வேண்டிய கடமை இன்றைய முஸ்லிம்களுக்கு இருக்கிறது,

பெருமானார் (ஸல்) அவர்கள் துஆ க்கேட்டு கிடைத்த செல்வம் சோடையாகுமா?

உமர் ரலி வந்ததிலிருந்து தீன் செல்வாக்குப் பெற்றது,
அதனால் அல் பாரூக் என பெருமானர் அழைத்தார்கள்.

عن ابن عباس قال: سألت عمر: لأي شيء سميت (الفاروق)؟ قال: أسلم حمزة قبلي بثلاثة أيام، ثم شرح الله صدري للإسلام فقلت: الله لا إله إلا هو له الأسماء الحسنى، فما في الأرض نسمة أحب إلي من نسمة رسول الله صلى الله عليه وسلم، فقلت: أين رسول الله صلى الله عليه وسلم؟ قالت أختى: هو في دار الأرقم بن أبي الأرقم عند الصفا، فأتيت الدار وحمزة في أصحابه جلوس في الدار ورسول الله صلى الله عليه وسلم في البيت: فضربت الباب، فاستجمع القوم، فقال لهم حمزة: ما لكم؟ قالوا: عمر بن الخطاب، فخرج رسول الله صلى الله عليه وسلم فأخذ بمجامع ثيابي ثم نترني نترة فما تمالكت أن وقعت على ركبتي فقال: ما أنت بمنته يا عمر! فقلت: أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله، فكبر أهل الدار تكبيرة سمعها أهل المسجد فقلت: يا رسول الله! ألسنا على الحق إن متنا وإن حيينا؟ قال: بلى! والذي نفسي بيده إنكم على الحق إن متم وإن حييتم! قلت: ففيم الاختفاء؟ والذي بعثك بالحق لتخرجن فأخرجناه في صفين: حمزة في أحدهما وأنا في الآخر، له كديد (புழுதி (ككديد الطحين மாவு)  ) حتي دخلنا المسجد، فنظرت إلي قريش وإلى حمزة، فأصابتهم كآبة لم يصبهم مثلها، فسماني رسول الله صلى الله عليه وسلم يومئذ (الفاروق)، وفرق الله بي بين الحق والباطل.

முதன் முதலில் அபூஜஹ்லின் வீட்டுக்கு நேரடியாக சென்று தனது இஸ்லாமை வெளிப்படுத்திய உமர் ரலியின் துணிச்சல்.

قال عمر رضي الله عنه: لما أسلمت تلك الليلة تذكرت أيّ أهل مكة أشد لرسول الله صلى الله عليه وسلم عداوة حتى آتيه فأخبره أني أسلمت، قال: قلت: أبو جهل، فأقبلت حين أصبحت حتى ضربت عليه بابه فخرج إليّ أبو جهل، فقال: مرحباً ما جاء بك؟ قال: جئت لأخبرك أني آمنت بالله وبرسوله محمد وصدقت بما جاء به، فضرب الباب في وجهي وقال: قبّحك الله وقبّح ما جئت به، فكان إسلام عمر ضربة قاضية على أبي جهل.
அபூஜஹ்லின் பேரும் உமர் தான்தனக்கு நிகராக இன்னொரு பெயர் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத அவன் உமர் (ரலி ) அவர்களை அறியாமைக் காலத்தில் உமைர் (சின்ன உமர்என்றே அழைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தான், அவனுக்கு கட்டுப்பட்டு அவ்வாறே தன்னை உமர் ரலி குறிப்பிட்டு வந்தார்கள், அவ்வாறே அழைக்கவும் பட்டார்கள், - அவ்னுடைய வீட்டைத் தேர்ந்ததெடுத்து தனது முதல் இஸ்லாமிய பிரகடனத்தை செய்தார்கள், அவரை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை, - இது அபூஜஹ்லுக்கு பெரிய அடியாக இருந்தது

அபூ ஜஹ்லுக்கு மட்டுமல்ல குறைஷிகள் அனைவருக்கும் அது பெரும் அதிர்ச்சி செய்தியாக இருந்தது,

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا لَمَّا أَسْلَمَ عُمَرُ اجْتَمَعَ النَّاسُ عِنْدَ دَارِهِ وَقَالُوا صَبَا عُمَرُ وَأَنَا غُلَامٌ فَوْقَ ظَهْرِ بَيْتِي

உமரின் இஸ்லாமில் மலக்குகள் மகிழ்ச்சியடைந்தனர்

            عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا أَسْلَمَ عُمَرُ نَزَلَ جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ لَقَدْ اسْتَبْشَرَ أَهْلُ السَّمَاءِ بِإِسْلَامِ عُمَرَ.
இஸ்லாம் வலிமை அடைந்தது

قَالَ عَبْدُ اللَّهِ[بن مسعود رَضِيَ اللهُ عَنْهُ]: مَازِلْنَا أَعِزَّةً مُنْذُ أَسْلَمَ عُمَرُ.

அவர் வாயிலிருந்து மார்க்கத்தை வலிமைப்படுத்தக் கூடிய சத்தியம் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது,

சைத்தான் அச்சப் படும் நபராக ஆனார்

عن سَعْدِبْنِ أَبِي وَقَّاصٍ قَالَ:  قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ(لعمر بن الخطاب): وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا لَقِيَكَ الشَّيْطَانُ قَطُّ سَالِكًا فَجًّا إِلَّا سَلَكَ فَجًّا غَيْرَ فَجِّكَ.

அவரது கருத்துக்கள் பல மார்க்கத்தின் சட்டங்களாக பரிணாமம் பெற்றன. (பெருமானாரின் காலத்தில்)

1.   தவாபின் நிறைவாக மகாமே இபுறாகீமிற்கு அருகில் நின்று தொழும் இரண்டு ரக அத் தொழுகை
2.   பர்தா அணியும் சட்டம்
3.   பெருமானார் மனைவியர் பெருமானாரிடம் பணம் விசயத்தில் நெருக்கடி கொடுத்த போது உங்களுக்கு விருப்பமில்லை எனில் விலகிக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களை விடச் சிறந்த பெணகளை பெருமானாருக்கு வழங்குவான் என்றார் உமர் ரலி அது போலவே வசனம் இறங்கியது,

قَالَ عُمَرُ رضي الله عنه : وَافَقْتُ رَبِّي فِي ثَلاث : فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ لَوْ اتَّخَذْنَا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى فَنَزَلَتْ : (وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى) ، وَآيَةُ الْحِجَابِ ، قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ لَوْ أَمَرْتَ نِسَاءَكَ أَنْ يَحْتَجِبْنَ ، فَإِنَّهُ يُكَلِّمُهُنَّ الْبَرُّ وَالْفَاجِرُ ، فَنَزَلَتْ آيَةُ الْحِجَابِ ، وَاجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْغَيْرَةِ عَلَيْهِ ، فَقُلْتُ لَهُنَّ : (عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ) ، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ .
رواه البخاري من حديث أنس رضي الله عنه .

மூன்ற இடங்களில் எனது என் ரப்பின் கருத்துகுகு ஏற்ப நான் கருத்துச் சொன்னேன் என உமர் அவர்கள் கூறியது மூன்றை விட அதிகமாக இருப்பதை மறுக்க வில்லை, மூன்று இடங்களில் மட்டுமல்ல அதற்கு மேலும் பல கட்டத்தில் உமர் ரலியின் கருத்துக்கு ஏற்ப திருக்குர் ஆனிய வசனங்கள் அருளப்பட்டுள்ளன, சட்டங்கள் அமுல் படுத்தப்பட்டுள்ன என இப்னு ஹஜர்  ரஹ் கூறுகிறார்கள்.


وقال ابن حجر : وَلَيْسَ فِي تَخْصِيصه الْعَدَد بِالثَّلاثِ مَا يَنْفِي الزِّيَادَة عَلَيْهَا ؛ لأَنَّهُ حَصَلَتْ لَهُ الْمُوَافَقَة فِي أَشْيَاء غَيْر هَذِهِ ،  مِنْ مَشْهُورهَا : قِصَّة أُسَارَى بَدْر ، وَقِصَّة الصَّلاة عَلَى الْمُنَافِقِينَ ، وَهُمَا فِي الصَّحِيح 

رواه مسلم من حديث ابن عمر رضي الله عنهما قال : قال عمر : وافقت ربي في ثلاث : في مقام إبراهيم ، وفي الحجاب ، وفي أُسارى بَدْر .

பத்ரின் கைதிகள் விசயத்தில் அல்லாஹ் ஒரு சட்டம் இறக்காத போது பெருமானார் என்ன செய்வது என ஆலோசனை செய்தார்கள். பலரும் அவர்களது இயல்புக்கு ஏற்ப கருத்துச் சென்னார்கள். பெருமானார் (ஸல்) தனது இயல்புக்கு ஏற்ப நடந்து கொண்டார்கள். இந்த விவகாரம் முடிந்த பிறகு  அல்லாஹ் உமர் (ரலி) அவர்களின் இயல்புக்கு ஏறப் இனி நடந்து கொள்ள அறிவுறுத்தினான்.

وفي أُسارى بَدْر
فَلَمَّا كَانَ يَوْمُئِذٍ وَالْتَقَوْا فَهَزَمَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْمُشْرِكِينَ فَقُتِلَ مِنْهُمْ سَبْعُونَ رَجُلًا وَأُسِرَ مِنْهُمْ سَبْعُونَ رَجُلًا فَاسْتَشَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْرٍ وَعَلِيًّا وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَا نَبِيَّ اللَّهِ هَؤُلَاءِ بَنُو الْعَمِّ وَالْعَشِيرَةُ وَالْإِخْوَانُ فَإِنِّي أَرَى أَنْ تَأْخُذَ مِنْهُمْ الْفِدْيَةَ فَيَكُونُ مَا أَخَذْنَا مِنْهُمْ قُوَّةً لَنَا عَلَى الْكُفَّارِ وَعَسَى اللَّهُ أَنْ يَهْدِيَهُمْ فَيَكُونُونَ لَنَا عَضُدًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَرَى يَا ابْنَ الْخَطَّابِ قَالَ قُلْتُ وَاللَّهِ مَا أَرَى مَا رَأَى أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَلَكِنِّي أَرَى أَنْ تُمَكِّنَنِي مِنْ فُلَانٍ قَرِيبًا لِعُمَرَ فَأَضْرِبَ عُنُقَهُ وَتُمَكِّنَ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ مِنْ عَقِيلٍ فَيَضْرِبَ عُنُقَهُ وَتُمَكِّنَ حَمْزَةَ مِنْ فُلَانٍ أَخِيهِ فَيَضْرِبَ عُنُقَهُ حَتَّى يَعْلَمَ اللَّهُ أَنَّهُ لَيْسَتْ فِي قُلُوبِنَا هَوَادَةٌ لِلْمُشْرِكِينَ هَؤُلَاءِ صَنَادِيدُهُمْ وَأَئِمَّتُهُمْ وَقَادَتُهُمْ فَهَوِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَلَمْ يَهْوَ مَا قُلْتُ فَأَخَذَ مِنْهُمْ الْفِدَاءَ فَلَمَّا أَنْ كَانَ مِنْ الْغَدِ قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ غَدَوْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ قَاعِدٌ وَأَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَإِذَا هُمَا يَبْكِيَانِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي مَاذَا يُبْكِيكَ أَنْتَ وَصَاحِبَكَ فَإِنْ وَجَدْتُ بُكَاءً بَكَيْتُ وَإِنْ لَمْ أَجِدْ بُكَاءً تَبَاكَيْتُ لِبُكَائِكُمَا قَالَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي عَرَضَ عَلَيَّ أَصْحَابُكَ مِنْ الْفِدَاءِ لَقَدْ عُرِضَ عَلَيَّ عَذَابُكُمْ أَدْنَى مِنْ هَذِهِ الشَّجَرَةِ لِشَجَرَةٍ قَرِيبَةٍ وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ مَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَكُونَ لَهُ أَسْرَى حَتَّى يُثْخِنَ فِي الْأَرْضِ إِلَى قَوْلِهِ لَوْلَا كِتَابٌ مِنْ اللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَا أَخَذْتُمْ مِنْ الْفِدَاءِ ثُمَّ أُحِلَّ لَهُمْ الْغَنَائِمُ

அதே போல முனாபிக்குகளுக்கு  ஜனாஸா தொழ வைக்கிற விசயத்திலும் உம்ர் ரலியின் கருத்துக்கேற்ப வே இறைவசனம் இறங்கியது,

وروى مسلم عَنْ ابْنِ عُمَرَ قَال : لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيّ ابْنُ سَلُولَ جَاءَ ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ أَنْ يُعْطِيَهُ قَمِيصَهُ أَنْ يُكَفِّنَ فِيهِ أَبَاهُ ، فَأَعْطَاهُ ، ثُمَّ سَأَلَهُ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ عَلَيْهِ ، فَقَامَ عُمَرُ فَأَخَذَ بِثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، أَتُصَلِّي عَلَيْهِ وَقَدْ نَهَاكَ اللَّهُ أَنْ تُصَلِّيَ عَلَيْهِ ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّمَا خَيَّرَنِي اللَّهُ فَقَال : (اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً) ، وَسَأَزِيدُ عَلَى سَبْعِينَ ، قَالَ : إِنَّهُ مُنَافِق ، فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ : (وَلا تُصَلِّ عَلَى أَحَد مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلا تَقُمْ عَلَى قَبْرِهِ) .

பெருமானார் (ஸல்) அவர்களின் தீர்ப்பை ஏற்காதவர் விசயத்தில் உமர் ரலியின் தீர்ப்பை அல்லாஹ் ஏற்றான்.

عن أبي الأسود قال اختصم رجلان إلى النبي صلى الله عليه وآله وسلم فقضى بينهما فقال الذي قضى عليه ردنا إلى عمر بن الخطاب فأتيا إليه فقال الرجل قضى لي رسول الله صلى الله عليه وآله وسلم على هذا فقال ردنا إلى عمر فقال أكذاك قال نعم فقال عمر مكانكما حتى أخرج إليكم فخرج إليهما مشتملا على سيفه فضرب الذي قال ردنا إلى عمر فقتله وأدبر الآخر فقال يا رسول الله قتل عمر والله صاحبي فقال ما كنت أظن أن يجترىء عمر على قتل مؤمن فأنزل الله فلا وربك لا يؤمنون الآية فأهدر دم الرجل وبرىء عمر من قتله --ابن أبي حاتم وابن مروديه

பெருமானார் (ஸல்) அவர்களது வபாத்திற்கு பின்னரும் தன்னுடைய முடிவுகளால சமுதாயத்திற்கு மிகப்பெரிய உபகாரியாக இருந்தார் உமர் (ரலி) அவர்கள்,

குர் ஆன் தொகுப்பு
குர் ஆன் தனித் தனி அத்தியாயங்களாக சஹாபாக்களின் இதயத்தில் பெரும்பாலும் எழுத்து வடிவில் சிலரிடத்திலும் இருந்தது. யமாமா யுத்தத்தில் ஹாபிழ்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில் மர் ரலி அவர்களின் ஆலோசனையின் பேரிலேயே அது தொகுக்கப்பட்டு ஒரு புத்தக வடிவில் தரப்பட்டுள்ளது.
  
عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ: بَعَثَ إِلَيَّ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ مَقْتَلَ أَهْلِ الْيَمَامَةِ فَإِذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ عِنْدَهُ فَقَالَ إِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَدْ أَتَانِي فَقَالَ إِنَّ الْقَتْلَ قَدْ اسْتَحَرَّ بِقُرَّاءِ الْقُرْآنِ يَوْمَ الْيَمَامَةِ وَإِنِّي لَأَخْشَى أَنْ يَسْتَحِرَّ الْقَتْلُ بِالْقُرَّاءِ فِي الْمَوَاطِنِ كُلِّهَا فَيَذْهَبَ قُرْآنٌ كَثِيرٌ وَإِنِّي أَرَى أَنْ تَأْمُرَ بِجَمْعِ الْقُرْآنِ قَالَ أَبُو بَكْرٍ لِعُمَرَ كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ هُوَ وَاللَّهِ خَيْرٌ فَلَمْ يَزَلْ يُرَاجِعُنِي فِي ذَلِكَ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ لَهُ صَدْرَ عُمَرَ وَرَأَيْتُ فِيهِ الَّذِي رَأَى قَالَ زَيْدٌ قَالَ أَبُو بَكْرٍ إِنَّكَ شَابٌّ عَاقِلٌ لَا نَتَّهِمُكَ قَدْ كُنْتَ تَكْتُبُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْوَحْيَ فَتَتَبَّعْ الْقُرْآنَ قَالَ فَوَاللَّهِ لَوْ كَلَّفُونِي نَقْلَ جَبَلٍ مِنْ الْجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَيَّ مِنْ ذَلِكَ قَالَ قُلْتُ كَيْفَ تَفْعَلُونَ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَبُو بَكْرٍ هُوَ وَاللَّهِ خَيْرٌ فَلَمْ يَزَلْ يُرَاجِعُنِي فِي ذَلِكَ أَبُو بَكْرٍ وَعُمَرُ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ لَهُ صَدْرَهُمَا صَدْرَ أَبِي بَكْرٍ وَعُمَرَ فَتَتَبَّعْتُ الْقُرْآنَ أَجْمَعُهُ مِنْ الرِّقَاعِ وَالْعُسُبِ وَاللِّخَافِ يَعْنِي الْحِجَارَةَ وَصُدُورِ الرِّجَالِ فَوَجَدْتُ آخِرَ سُورَةِ بَرَاءَةٌ مَعَ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ.

தராவீஹ் தொழுகையின் இப்போதைய அமைப்பும் உமர் ரலி ஏற்படுத்தியதே!
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ أَنَّهُ قَالَ: خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ لَيْلَةً فِي رَمَضَانَ إِلَى الْمَسْجِدِ فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ فَقَالَ عُمَرُ إِنِّي أَرَى لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ ثُمَّ عَزَمَ فَجَمَعَهُمْ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ قَارِئِهِمْ قَالَ عُمَرُ: نِعْمَ الْبِدْعَةُ هَذِهِ وَالَّتِي يَنَامُونَ عَنْهَا أَفْضَلُ مِنْ الَّتِي يَقُومُونَ يُرِيدُ آخِرَ اللَّيْلِ وَكَانَ النَّاسُ يَقُومُونَ أَوَّلَهُ.

மதுவிற்கான தண்டனை 80 அடியாக உயர்த்திய உமர் ரலி அவர்கள்
·        عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدِّيلِيِّ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ اسْتَشَارَ فِي الْخَمْرِ يَشْرَبُهَا الرَّجُلُ فَقَالَ لَهُ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ نَرَى أَنْ تَجْلِدَهُ ثَمَانِينَ فَإِنَّهُ إِذَا شَرِبَ سَكِرَ وَإِذَا سَكِرَ هَذَى وَإِذَا هَذَى افْتَرَى أَوْ كَمَا قَالَ فَجَلَدَ عُمَرُ فِي الْخَمْرِ ثَمَانِينَ.

·        عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِرَجُلٍ قَدْ شَرِبَ الْخَمْرَ فَجَلَدَهُ بِجَرِيدَتَيْنِ نَحْوَ أَرْبَعِينَ قَالَ وَفَعَلَهُ أَبُو بَكْرٍ فَلَمَّا كَانَ عُمَرُ اسْتَشَارَ النَّاسَ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ أَخَفَّ الْحُدُودِ ثَمَانِينَ فَأَمَرَ بِهِ عُمَرُ

உமர் (ரலி) யின் கருத்தை சஹபாக்கள் ஏற்றுக் கொண்டனர். அது இஜ்மாவாகி விட்டது. ஹனஃபீ, மாலிகீ ,ஹன்பலீ மத்ஹபுகளின் சட்டமும்  இதுதான்

ففي الهداية : وحد الشرب والسكر أي من غيرها ثمانون سوطا ، وهو قول مالك وأحمد وفي رواية عن أحمد وقول الشافعي أربعون إلا أن الإمام لو رأى أن يجلده ثمانين جاز على الأصح ، واستدل صاحب الهداية على تعيين الثمانين بإجماع الصحابة


கனீமத் சட்டங்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் கைபர்  யுத்தத்தில் கிடைத்த நிலத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் சஹாபாக்களுக்கு பங்கு வைத்துக் கொடுத்தார்கள்
எகிப்து வெற்றி கொள்ளப்பட்ட போது அந்த பிரம்மாண்ட நிலங்களை பங்கு வைக்குமாறு சஹாபாக்களில் சிலர் கேட்ட போது அதை உமர் ரலி அவர்கள் மறுத்தார்கள், அதுவே சஹாபாக்கள் அங்கீகரித்த மார்க்கத்தின் சட்டமாயிற்று
قال سفيان بن وهب الخولاني‏:‏ لما افتتحنا مصر بغير عهد ولا عقد قام الزبير بن العوام فقال‏:‏ اقسمها يا عمرو بن العاص فقال عمرو‏:‏ والله لا أقسمها فقال الزبير‏:‏ والله لنقسمنها كما قسم رسول الله صلى الله عليه وسلم خيبر فقال عمرو‏:‏ والله لا أقسمها حتى أكتب إلى أمير المؤمنين فكتب إلى عمر فكتب إليه عمر‏:‏ أقرها حتى يغزو منها حبل الحبلة 
·         அடுத்த முஸ்லிம் தலை முறைக்கு அதை வக்பாக வைத்து விடுங்கள் என உமர் ரலி கூறினார்கள்.
·         பெருமானார் (ஸல்) அவர்களுடைய அல்லாஹ்வுடையவும் உத்தரவுகளின் தத்துவங்களை உணர்ந்து கொண்ட பிறகு அதை செயல்படுத்தும் வழி முறையை அறிந்திருந்ததாலேயே உமர் ரலி அவர்களின் இத்தகு நடவடிக்கைகள் எடுத்தார்கள்
·         கைப்பற்றப்பட்ட நிலங்களின் விசயத்தில் உமர் ரலி அவர்களின் இந்த உத்தரவு இன்று எவ்வளவு தூரம் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது.
·         இன்று ஒரு நாட்டை முஸ்லிம் படைகள் கைப்பற்றினால் அந்த நாட்டின் நிலங்களும், செல்வ வளங்கள் அனைத்தும் போர் வீரர்களிடையே பங்கு வைக்கப்பட வேண்டும் என்று சட்டம் இருக்குமானால் எத்தகைய விபரீதம் ஏற்படும் ? சிந்தித்துப் பாருங்கள்?
·         நாட்டின் இயறகை வளங்களை எப்படி பிரிப்பது? அப்படி பிரித்து எடுத்துக் கொண்டால் என்னாவது?
·         ஆயுதங்கள் . இரசாயண ஆயுதங்கள், பயங்கர ஆயுதங்களும் இப்படி பங்கு வைக்கப்பட வேண்டும் என்றால் என்ன ஆவது நிலமை?
·         உமர் ரலி அவர்களின் அன்றைய உத்தரவு காரணமாக நிலங்களும் இயற்கை வளங்களும், ஆயுதக் கிடங்குகளும், சமுதாயத்திற்குரியவைநாட்டுக்குரியவை  என்றாகின.

உமர் ரலி அவர்களின் கூர் நோக்குப் பார்வை இப்படி பல வகையிலும் இந்த தீனுக்குப் பயன்பட்டது.


நாமக்கு இத்தகைய சஹாபாக்கள் வழியாகத்தான் நமக்கு மார்க்கம் கிடைத்தது, எனவே சஹாபாக்களின் கருத்துக்களை தீனின் அடிப்படைகளில் ஒன்றாக ஏற்காவிட்டால் மார்க்கத்தை முழுமையாக அதன் எதார்த்த வடிவத்தில் பின்பற்ற முடியாது,

திருக்குர் ஆனிய வசனங்களுக்கான சரியான பொருளோ, பெருமானார் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களின் சரியான கருத்தோ சஹாபாக்கள் தான் சரியாக விளங்கி வைத்திருக்க முடியும்?

உமர் (ரலி) அவர்களோ, மற்ற சஹாபாக்களோ சொன்ன கருத்துக்களை கவனித்து ஏற்றுக் கொண்டது முஸ்லிம் உம்மத். சஹபாக்களின் தீர்ப்புக்களையே

சஹாபாக்களை நாங்கள் ஆதரமாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று யாரேனும் சொன்னால் அத்தகையோர்.

·         ஹிஜ்ரீ என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது, முஹர்ரமிலிருந்து வருடம் தொடங்குவதாக கருதவும் கூடாது,

·         இன்று நாம் வைத்திருக்கிற குர்ஆனை கையில் தொடக்கூடாது,

·         ரமலான் மாதம் முழுவதும் ஒரு இமாமை வைத்து தராவீஹ் தொழுகையோ இரவுத் தொழுககையையோ தொழக் கூடாது.

உமர் ரலியையோ மற்ற சஹாபாக்களையோ நம்மை போன்ற சராசரிகளாக யாராவது கருதுவார்கள் எனில் அதைப் போல மடமையும் வேறில்லை.

உமர் ரலி அவர்களின் தீர்ப்புக்களை  அது போல மற்ற நபித்தோழர்களின் தீர்ப்புக்களை அல்லாஹ் ரசூலுக்கு முரணானது என்று சொல்வதை போல அக்கிரமம் அதிகப்பிரசங்கிதனமும் வேறில்லை,

உங்கள் விசயத்திலோ என் விசயத்திலோ பெருமானார் துஆ செய்து தீனுக்காக கேட்கவில்லை,
·         நம் கருத்தின் அடிப்டையில் குர்ஆனின் வசனங்கள் இறங்கவில்லை.
·         நமது ஆலோசனைகளின் படி பெருமானார் (ஸல்) சட்டங்களை அமைக்கவில்லை,
என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நாம் தான் அறிவியல் முன்னேற்றம் அடைந்த காலத்தில் வாழ்கிறோம். நமக்குத் தான் அதிக விசயம் தெரியும். சஹாபாக்களை விட நாம் மார்க்கத்தை அதிகமாக தெரிந்து கொள்ள முடியும். அபூஹுரைரவுக்கு காண்டம் பற்றி தெரியுமா ? என மதம் மாறிவிட்ட பிஜே கேட்கிறார் ?

சில இளைஞர்கள் இதனை அற்புதமான வாதம் என நினைக்கிறார்கள்.

எத்தகைய பேதமை?

அபூஹுரைராவுக்கு காண்டம் பற்றி தெரியாமல் இருக்கலாம்.

கருத்தரிப்பை தடுக்கும் வழிகள் குறித்த இஸ்லாமின் கருத்து என்ன என்பதை  சொல்வதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்களின் கால் தூசுக்கு நாம் சமமாக முடியாது என்ற சத்தியத்தை  அவர்கள் விளங்கிக் கொள்ளத் தயாராக இல்லை,

உமர் ரலி அவர்களினால் – இஸ்லாமைத் தழுவியோர் எண்ணிக்கை என்ன? நமது பிரச்சாரத்தின் தாக்கம் என்ன என்பதை அணுவளவேனும் யோசிக்கிறவர்கள் உமர் ரலிக்கு எதிராக – மற்ற சஹாபாக்களுக்கு எதிராக - கருத்துச் சொல்வது எத்தகைய மாபாதகம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்,

வரலாற்றுப் பேராசான் வாகிதி சொல்கிறார்:  உமர் ரலி அவர்களுக்கு சிங்கம் பாதுகாப்பாக இருந்தது, ஹிர்கலின் ஏற்பாட்டில் அவரைக் கொல்ல வந்தவர் இஸ்லாமை ஏற்றார்.

وفي رواية أخرى للواقدي نفسه قال: عند ما خطب هرقل قام اليه جبلة بن الأيهم وقال: يا عظيم الروم! انما قتال هؤلاء العرب بقتل خليفتهم عمر بالمدينة فلو أنت أرسلت اليه رجلا من آل غسان يقتله فيكون سبب فشلهم وانتزاع الشام من أيديهم فقال هرقل هذا شيء لا يصح أمله ولكن تطيب النفس عند سماعه فافعل ما اردت قال فأرسل جبلة من قومه رجلا يقال له واثق بن مسافر الغساني وكان جريئا مقداما في الحروب فقال له انطلق الى يثرب فلعلك تقتل عمر ووعده على قتله ما أراد  و طلب من الأموال فانطلق واثق بن مسافر حتى دخل المدينة ليلا فلما كان الغد صلى عمر بن الخطاب رضي الله عنه بالناس صلاة الصبح ودعا وخرج الى ظاهر المدينة يتنسم اخبار المجاهدين بالشام قال فسبقه المتنصر وجلس له بأعلى شجرة من حديقة بن الدحداح الانصاري واستتر بأغصانها ثم إن عمر قام عن ظاهر المدينة حين حميت الرمضاء وعاد وهو وحده فقرب من الحديقة ودخلها ونام في ظلها فلما نام هم المتنصر بالنزول من الشجرة وجرد خنجره وإذا هو بأسد أقبل وطاف حول عمر وجلس عند قدميه يلحسهما وأقام حتى استيقظ فعندها نزل المتنصر وقبل يد عمر وقال له: يا عمر! قدعدلت فأمنت والله من الكائنات تحفظه والسباع تحرسه والملائكة تصفه والجن تعرفه ثم حدثه بأمره وأسلم على يديه

பாரசீகப் பேரரசன் ஹெர்முசான் உமர் (ரலி) அவர்களின் எளிமையைப் பார்ர்த்து இஸ்லாமை ஏற்றார்.

وري أصحاب السير أنه جيء إلى عمر  رضي الله عنه  بالهرمزان ملك الأهواز أسيرا في سنة سبع عشرة ومعه وفد فيهم أنس بن مالك والأحنف بن قيس فلما وصلوا به إلى المدينة ألبسوه كسوته من الديباج المذهب ووضعوا على رأسه تاجه وهو مكلل بالياقوت ليراه عمر والمسلمون على هيئته التي يكون عليها في ملكه فطلبوا عمر فلم يجدوه فسألواعنه فقيل هو في المسجد فأتوه فإذا هو نائم فجلسوا دونه فقال الهرمزان: أين هوعمر؟ قالوا: هو ذا" قال: فأين حرسه وحُجَّابُه؟ قالوا: ليس له حارس ولا حاجب، فنظر الهرمزان إلى عمر  رضي الله عنه وقال:عدلت فأمنت فنمت واستيقظ عمر لجلبة الناس فقال: الهرمزان؟ قالوا: نعم يا أمير المؤمنين، فقال: الحمد لله الذي أذل بالإسلام هذا وأشباهه
இந்த தீனுக்கு நீங்களும் நானும் இப்படி எல்லாம் பங்களித்து விட்டோமா?
இவர்களை விட தம்மைச் சிறந்தவர்களாக கருதிக் கொள்ளும் முட்டாள் தனத்தை என்னவென்று சொல்வது?

இந்தப் பெருமக்களின் நடவடிக்கைகளை புரிந்து கொள்கிற அளவுக்கு கூட அறிவும் திரணும் அற்றவர்களாக இருந்து கொண்டு சஹாபாக்களை தீனுக்கு முரண்பட்டவர்களாக காட்டுபவர்கள் தீனுக்கு எதிரான சதிகாரர்களே!

சஹாபாக்கள் விசயத்தில் சற்றேனும் முகம் சுளிப்பாக பேசுகிறவன் விசயத்தில் சமுதாயம் எச்சரிக்கை அடைய வேண்டும். 

நிச்சயம் அத்தகையவன் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது.

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! முன்னோடிகளான உமர் ரலி அவர்களைப் போன்ற சஹாபாக்கள் வழி தீனைப் பின்பற்ற அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!




4 comments:

  1. புதிய ஆண்டின் புதிய சிந்தனையான கட்டுரை

    ReplyDelete
  2. தங்களின் ஒவ்வறு வரியிலும் உயிர் உள்ளது ஹழ்ரத் !

    ReplyDelete
  3. ஆமீன்! அல்லாஹ் இதன் மூலம் வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் நம் சமூகத்தில் உள்ள இளைஞர்கள் & பெரியவர்களுக்கு ஹிதாயத்தை வழங்கி அருள்வானாக! ஆமீன்!

    ReplyDelete