இஸ்லாமிய வாழ்வியலில் நீதியை நிலை நாட்டுதல் சட்டப்படியான வாழ்க்கையை உறுதி செய்தல் என்பது மிக முக்கியமான ஒரு அம்சமாகும்.
சட்டத்தை
மீறிய எந்த ஒரு அம்சமும் ஏற்புடையது அல்ல;
சரியாக
கால்களை கழுவாவிட்டால் ஒளு செல்லாது. அது போல தப்பான சம்பாத்தியத்தில் செய்த தர்மம் செல்லாது. அது போல கைப்பற்றாத பொருளை வியாபாரம் செய்வது செல்லாது.
عن ابن
عباس قال: قال رسول الله ﷺ: من ابتاع طعاما فلا
يبعه حتى يقبضه
என்பது
போன்ற ஒவ்வொரு காரியத்திலும் சட்டத்தின் தலையீடும் அதிகாரமும் இருக்கிறது.
சட்டத்தின் ஆட்சியை நடைமுறை நிலைநாட்டுவதற்கு ஏற்ப முறையாக நியமிக்கப் பட்ட நீதிபதிகளும் அவர்களுக்கான வழிகாட்டுதல்களையும் 1400 ஆண்டுகளாக இஸ்லாம் இந்த உலகிற்கு வழங்கியுள்ளது.
நவீன
ஜனநாயக அமைப்புக்கள் தோன்றுவதற்கு முன்னரே இப்போதைய அரசுகளிடம் இருப்பதை விட மிக நேர்த்தியான நீதிமிக்க சட்ட அமைப்பை இஸ்லாம் கொண்டிருந்த்து. ஒரு மதமாக வேறு எந்த மதத்திடமும் இத்தக்கய சிறப்பு மிகு சட்டத்தின் நீதி இருந்ததில்லை.
இஸ்லாமின்
நீதியை நிலை நாட்டும் பொறுப்பு காஜிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இஸ்லாமிற்கு முன்னர் பஞ்சாயத்து செய்வதற்கு என்று சிலர் பெயர் பெற்றிருந்தனர். மக்கள் அவர்களிடம் சென்று நீதி கேட்டுக் கொண்டனர். ஜாஹிலிய்யா காலத்து அரபுகளிடம் أكثم بن صيفي التميمي என்பவர் பிரபலமான நீதி சொல்லும் பிரபலமான மனிதராக இருந்தார்
மக்களுக்கிடையே நீதமாக தீர்ப்புச் செய்யுமாறு அல்லாஹ் அவர்களுக்கு வழிகாட்டியிருந்தான்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மாகாணங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்த போது அவர்களை நீதிபதிகளாகவும் நடந்து கொள்ள அறிவுறுத்தினார்கள்.
முதல் காழி நியமனம்
இஸ்லாமிய
வரலாற்றில் முதன் முறையாக
நீதிபதி - காழி என்ற பதவியை
ஏற்படுத்தியவர் உமர் ரலி அவர்கள் ஆவார்.
فكان أوَّل من عيَّن القضاة في الإسلام،
முதல் காழிகள்
وسلمان بن ربيعة الباهلي على القادسيَّة ثم المدائن،
وأبا أميَّة شريح بن
الحارث على قضاء الكوفة،
காழிகளிடத்தில் இந்த
இரண்டும் முக்கியமும். சட்டமும் தெரிந்திருக்க
வேண்டும். சமயோஜிதமும்
இருக்க வேண்டும்.
உமர் ரலி அவர்கள் كعب بن
سور الأزديஅவர்களை
பஸராவின் காழியாக் நியமித்த வரலாறு. கஃபு ரஹ் சஹாபி அல்ல. பெருமானாரின் காலத்தில் வாழ்ந்திருந்த போதும் கூட பெருமானாரை சந்தித்ததில்லை. அவர் ஒரு தாபியீ ஆவார்.
அப்போது அருகிலிருந்த
கஃபு பின்
சுவர் அவர்கள்
:” தலைவரே! இந்தப்
பெண் தங்களிடம்
முறையிட வந்தார்.
அவரை நீங்கள்
புகழ்ந்து திருப்பி
அனுப்பி விட்டீர்கள்
என்றார். அந்தப்
பெண்ணை திருப்பி
அழைத்து “ நீ
ஏதோ மூறையிட வந்த்தாக
இவர் கூறுகிறாரே
அது சரியா? “
என உமர் ரலி
கேட்டார். ஆமாம்
எனது கணவர்
என்னுடன் படுக்கையை
தவிர்த்து விடுகிறார்
என்று அந்தப்
பெண்மணி கூறினார்.
அவருட்டய கணவர்
வரவழைக்கப்பட்டார்.
உமர் (ரலி)
அவரக்ள் கஃபு
(ரஹ்) நோக்கி”
இந்த பிரச்சினையில்
நான் புரியாத்தை
நீங்கள் புரிந்து
கொண்டிருந்தீர்கள் எனவே
நீங்கள் தீர்ப்பளியுங்கள்
என்றார்.
ஒரு பெண்ணுக்கு
மேலே 3 பெண்களை
திருமணம் செய்ய
ஒரு ஆணுக்கு அனுமதியுள்ளது
.அந்த அடிப்படையில்
நான்கு நாளுக்கு
ஒரு நாளை அந்த
பெண்ணுக்காக அவரது
கணவர் ஒதுக்க
வேண்டும் என்று
கஃபு (ரஹ்)
தீர்ப்பளித்தார்.
உங்களது ஒவ்வொரு
தீர்மானமும் ஆச்சரியமாக
இருக்கிறது என்று
கூறிய உமர்
ரலி அவர்கள் அவரை
பஸராவின் காழியாக
நியமித்தார்கள்.
أن كعب بن سور كان جالساً
فجاءت امرأة، فقالت: يا أمير المؤمنين: ما رأيت رجلاً قط أفضل من زوجي إنه ليبيت ليلة
قائماً، ويظل نهاره صائماً في اليوم الحار ما يفطر، فاستغفر لها وأثنى عليها. وقال:
مثلك أثنى الخير...وقال: واستحيت المرأة فقامت راجعة.فقال كعب: يا أمير المؤمنين، هلا
أعنت المرأة على زوجها أن جاءتك تستعديك؟ قال: أو ذاك أرادت؟ قال: نعم... فردت، فقال:
لا بأس بالحق أن تقوليه، إن هذا زعم أنك جئت تشتكين زوجك، أنه يجتنب فراشك.
قالت: أجل إني امرأة شابة،
وإني أتتبع ما يتبع النساء، فأرسل إلى زوجها فجاءه. فقال لكعب: اقض بينهما، فإنك فهمت
من أمرهما ما لم أفهمه. فقال كعب: أمير المؤمنين أحق أن يقضي بينهما، فقال: عزمت عليك
لتقضين بينهما قال: فإني أرى كأنها امرأة عليها ثلاث نسوة هي رابعتهن فأقض له بثلاثة
أيام ولياليهن، يتعبد فيهن، ولها يوم وليلة (ليس له فيها إلا أداء الفريضة) فقال عمر:
والله ما رأيك الأول بأعجب من الآخر، اذهب فأنت قاض على أهل البصرة.
உலகின் தலை சிறந்த நீதிபதி
உமர்
ரலி அவர்களால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் மிகவும் புகழ் பெற்றவர் காழி சுரைஹ் – அவரும் பெருமானார் (ஸல்) அவரக்ளது காலத்திலேயே இஸ்லாமை ஏற்றுக் கொண்டார் என்றாலும் பெருமானாரை அவர் சந்தித்த்தில்லை அதனால் தாபியீ ன்களில் ஒருவராக கருதப்படுகிறார்..
ஒரு
நாள் உமர் ரலி ஒரு கிராமத்து அரபியிடம் ஒரு குதிரையை விலைக்கு வாங்கியிருந்தார். அதில் ஏறி அவர் சவாரி செய்து பார்த்த போது அந்த வேகத்தின் காரணமாக குதிரை நொண்டியது. உமர் ரலி குதிரை நொண்டி எனவே வேண்டாம் என்றார். வியாபாரி அதை திருப்பி வாங்க முடியாது தான் கொடுக்கும் போது அது சரியாகத்தான் இருந்தது என்றார். நீ உனக்கு பிடித்தமான ஒரு வரை தேர்ந்தெடு அவரது முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன் என உமர் ரலி கூறினார். அந்த வியாபாரி காழி ஷுரைஹை தேர்வு செய்தார். அவரை தன் வீட்டுக்கு அழைத்து வருமாறு உமர் ரலி கூறினார்.
بعد هذه
الواقعة وما رآه عمر بن الخطاب رضي الله عنه في شريح من عدل وحكمة بعثه إلى الكوفة
واستقضاه عليها
60 ஆண்டு கால காழி
ஹிஜ்ரி 18 ம் ஆண்டில் உமர் (ரலி) அவர்களால் கூபா வின் காழியாக நியமிக்கப்பட்ட அவர், ஹிஜ்ரீ 77 ம் ஆண்டில் உமய்யா அரசர் அப்துல் மலிக் பின் மர்வான் ஆட்சி காலம் வரை நீதிபதியாக செயல்பட்டார். ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அவரை பதவியிலிருந்து அகற்றினார். அதற்கு அடுத்த வருடம் அவர் இறப்பெய்தினார். அப்போது அவருக்கு வயது 108 .
அலீ
ரலி அவர்கள் கடைத்தெருவில் ஒரு கிருத்துவர் தனது வாளை வைத்திருப்பதை கண்டார்கள். அவரை காழி சுரைஹிடம் அழைத்துச் சென்று இந்த வாளை நான் விறகவும் இல்லை. இவருக்கு அன்பளிப்பாக கொடுக்கவும் இல்லை என்றார். அந்த கிருத்துவரே இந்த வாள் என்னுடையது ஆனால் நான் முஸ்லிம்களின் அரசரை பொய்யர் என்று சொல்ல மாட்டேன் என்றார். உங்களிடம் ஆதாரம் ஏதும் இருக்கிறதா என அலீ ரலி யிடம் நீதிபதி கேட்டார். எனது மகன் ஹஸன் அதற்கு சாட்சி என்றார். தந்தைக்கு சார்பாக மகனுட்டய சாட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்த காழி சுரைஹ் வேறு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டார். இல்லை
என அலி ரலி பதில் அளித்ததும் வாள் கிருத்துவருக்குரியது என்று காழி சுரைஹ் தீர்ப்பளித்தார்.
“முஸ்லிம்களின் அரசர் என்னை நீதிபதியிடம் அழைத்துச் செல்கிறார். நீதிபதியோ அரசருக்கு எதிராக தீர்ப்பளிக்கிறார்.
- فقال شريح للنصراني: "ما تقول فيما
يقول أمير المؤمنين؟".
- فقال النصراني: ما الدرع إلا درعي، وما
أمير المؤمنين عندي بكاذب.
- فالتفت شريح إلى سيدنا علي رضي الله عنه
وقال: "يا أمير المؤمنين، هل من بينة؟".
- فقال عليٌّ رضي الله عنه: "ما لي
بينة"، فحكم شريح القاضي بالدرع للنصراني.
- فقال النصراني متعجِّبًا: "أمير
المؤمنين قدَّمني إلى قاضيه، وقاضيه يقضي عليه!".
- فأسلم وقال: "أشهد أن لا إله إلا
الله، وأشهد أّنَّ محمدًا عبده ورسوله، الدرع والله درعك يا أمير المؤمنين
--
تنازع علي بن أبي طالب وهو أمير المؤمنين مع يهودي على درع، فاحتكما إلى القاضي شريح، الذي قال: «يا أمير المؤمنين هل من بينة؟» قال: «نعم الحسن ابني يشهد أن الدرع درعي»، قال شريح: «يا أمير المؤمنين شهادة الابن لا تجوز»، فقال علي: «سبحان الله رجل من أهل الجنة لا تجوز شهادته؟» فقال «يا أمير المؤمنين ذلك في الآخرة، أمّا في الدنيا فلا تجوز شهادة الابن لأبيه»
காழி
மிகவும் விழிப்புணர்வுமிக்கவராக இருந்தார். சட்டென்று தீர்ப்பளிப்பவராக இருக்கவில்லை.
பிரபல
தாபீயி ஹதீஸ் கலை அறிஞருமன சுஅபீ கூறுகிறார்.
ஒரு
நாள் ஒரு பெண் ஒரு நபரை பற்றி குறை கூறி மிகவும் அழுதபடி ஷுரைஹிடம் வந்தார். அந்த அழுகையை
பார்த்து. “இந்தப் பெண் நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று நான் கூறினேன் . காழி
சுரைஹ் சொன்னார். யூசுப் நபியின் சகோதர்ர்கள் அவரை கிணற்றில் போட்டு விட்டு அழுதபடி
தமது தந்தையிடம் வந்தார்கள் என்று குர் ஆன் கூறுவது உங்களுக்கு தெரியாதா ? அதனால் அழுகையை
வைத்து நீதியை தீர்மாணிக்க முடியாது.
وقال الشعبي شهدت شريحًا وقد
أتته امرأةٌ تُخاصم رجلًا وتبكي بكاءً شديدًا، فقلت: "يا أبا أميَّة ما
أظنُّها إلَّا مظلومة"،. فقال: يا شعبي إن إخوة يوسف جاؤوا أباهم عشاء يبكون
அப்பாஸீய
கலீபா ஹாரூன் ரஷீத் முதன் முறையாக இமாம் அபூயூசுப் ரஹி அவர்களை தலைமை காழியாக நியமித்தார்.அவர்
காழிகளின் நடைமுறைகளை தொகுத்தளித்தார்.
இஸ்லாமி
நீதித்துறையின்
மதிப்புமிகு இந்தப் பாரம்பரியத்தில் தொடர்ந்து காஜிகள் முஸ்லிம் சமூகத்தை இஸ்லாமிய சட்ட்த்தின் படி வாழ துணை செய்கிறார்கள்.
ஒரு
முஸ்லிம் அவருடைய வாழ்வில் காழியின் துணை இன்றி வாழ முடியாது. திருமணம் விவாகரத்து, போன்ற தனி விவகாரங்கள் என்றாலும் நோன்பு பெருநாளை தீர்மானிப்பது போன்ற சமூக விவகாரங்களிலும் காழியின் பங்கு முக்கியமானது.
அதனால்
இஸ்லாமிய அரசுகள் நடை
பெற்ற அனைத்து பகுதிகளிலும் காழிகளின் நியமனம் முக்கிய இடம் பிடித்திருந்தது.
நம்முடைய
நாட்டிலும் இஸ்லாமிய அரசுகள் நடைபெற்ற காலத்தில் அரசால் நியமிக்கப்பட்ட காழிகள் முஸ்லிம்களின் விவகாரங்களில் தீர்ப்பளித்தனர்.
இந்தியாவை
ஆங்கிலேயர்கள்
கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில் முஸ்லிம்களின் திருமணம் போன்ற உள்விவகாரங்களில் தீர்ப்பளிப்பதற்காக காழிகளை நியமித்துக் கொள்ளும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு அளித்து 1880 ஆம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றினர்.
இந்த
சட்டம் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களுடைய திருமணம் போன்ற உள் விவகாரங்கள்ள கவனித்துக் கொள்வதற்காக காஜிகளையும் நாயிப் காஜிகளையும் நியமிக்கலாம் என்றும் அவர்களை நீக்குவதற்கும் அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் . அரசால் நியமிக்கப்படாத மக்கள் வழக்கில் இருக்கிற காஜிகள் செய்து வைக்கிற திருமணங்களுக்கும் செல்லும் அதனால் காஜி ஒரு திருமணத்திற்கு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அந்த சட்டம் கூறியது.
இது
காஜிகளுக்கு மிக குறைந்த அளவிலான அதிகாரத்தை அளித்தது. அதாவது அவர்கள் திருமணத்தை நட்த்தி வைத்து அதற்கு சாட்சியாக முடியும் இது தவிர அவர்களுக்கு சட்ட பூர்வமான எந்த அதிகாரமும் கிடையாது என்று வரையறுத்தது.
Section 4 provides that these
Kazis have no judicial or administrative powers, and their presence in every
marriage ceremony is not essential. The local Kazis (who are not so appointed)
are allowed to function.
இந்த
அடிப்படையில் தான் இப்போது நம்முடைய நாட்டில் ஏராளமான காழிகள் முஸ்லிம்களின் விவகாரங்களை
எளிதான முறையில் தீர்வுகளை கொடுத்து வருகிறார்கள்.
இந்த
காழிகள் இல்லை என்றால் அரசு நிறுவனங்களை நமது திருமணம் விவாகரத்து பாகப்பிரிவினை போன்ற
விவகாரங்களுக்கு பதிவுத்துறையை அல்லது நீதிமன்றங்களை அனுகிச் செல்ல வேண்டியிருந்தால்
என்ன வாகும் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் ?
எவ்வளவு
அலைச்சல்? எவ்வளவு செலவுகள்? எவ்வளவு நிபந்தனைகள்? எத்தனை இடை தரகர்கள் ? எவ்வளவு இலஞ்சம்?
யோசித்தால்
தலை சுற்றி விடும்.
காழிகளில்
சிலரும் தவறாக செயல்படுகிறார்கள் என்பது உண்மை தான். எந்த பயிரிலும் சில களைகள் இல்லாமல்
இருக்காது. ஆனால் பெரும்பான்மை நோக்கில் காழி என்பவர் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு அருள்
தான்.
அந்த
வகையில் தமிழக மக்களுக்கு ஒரு பேர் அருளாக கிடைத்தவர் தான் தமிழக அரசின் தலைமை காஜி
சலாஹுத்தீன் முஹம்மது அய்யூபி அவர்கள்.
அவரது
நீண்ட கால சேவையை பாராட்டி சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை அவருக்கு கடந்த திங்கட்
கிழமை அன்று சாதனைச் செம்மல் விருது வழங்கி கவுரவித்தது.
நோன்பும், பெருநாளும்
வருகிற போதெல்லாம் பிறையைப் பற்றி பேசுவதை விட தமிழகத்தின் தலைமை காஜியை பற்றி சிலர்கள்
விமர்சனம் செய்வதை அதிகம் பார்க்கலாம்.
ஆனால் நமது தலைமை காஜி அவர்களின் பாரம்பரியத்தையும் , அவர்களின் அறிவுத் திறனையும் தெரிந்து கொள்ளாமல் பேசப்படுகிற
பேச்சுக்கள் அவை.
தமிழகத்தின் தலைமை காஜி ஸலாஹுதீன் அய்யூபி அவர்கள் அபூபக்கர்
சித்திக் (ரலி) அவர்களின் வம்சாவளியில் வந்த கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
.
அரபு நாட்டில் இருந்து சுமார் 700 வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்த அரபு வம்சாவளியினரின் குடும்பத்தினர்
இவர்கள் "நவாயத்" என்று அழைக்கப் படுகின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்
குடியேறிய இவர்கள் 1700 களில் தமிழகத்தின்
ஆற்காடு பகுதியிலும் பிறகு சென்னை பகுதிகளில் குடியேறினர். மார்க்க அறிஞர்கள் நிரம்பிய
இவர்களின் குடும்பம் "காஜி" என்ற பெயராலேயே அழைக்கப்பட்டது.
1800 ம் ஆண்டில் தற்போதைய காஜி சலாஹுத்தீன் அய்யூபியின் பாட்டனார்,
காஜி முஹம்மது உபைதுல்லா நக்ஷபந்தீ சென்னை மாகானத்தின் முதல் காஜியாக நியமிக்கப்பட்டார்.
அந்த வகையில் சுதந்திரத்திற்குப் பிறகும் பாரம்பரியமாக காஜி
பொறுப்பு அந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
அறிஞர் சலாஹுத்தீன் முஹம்மது அய்யூபி
தற்போது தலைமை காஜியாக இருக்கும் சலாஹுத்தீன் முஹம்மது அய்யூபி
அவர்கள் மெட்ராஸ் யூனிவர்சிட்டியில்
அரபிக் M.A, Mphil ,Phd முடித்தவர்
ஆவார்.
உலகப் புகழ்பெற்ற எகிப்தின் அல் அஸ்ஹரி பல்கலைக்கழகத்தில் ஆலிம்
பட்டமும், முஃப்தி பட்டமும்
பெற்றவர் ஆவார்.
சென்னை நியூ காலேஜில் பல வருடங்களாக அரபி பேராசிரியராக இருந்து
ஓய்வு பெற்றார்..
முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது.
நமது மாநிலத்தின் தலை காஜி பார்ப்பதற்கு எளிய தோற்றமாக இருந்தாலும் அவரது கல்வியறிவு
அபரிமிதமானது. அவரது கல்விச் சேவையும் சிறப்பானது.
அவரது தகுதி குறித்து விமர்சிக்கிற எந்த இயக்க வாதியும் இந்த தகுதிக்கு அருகில்
நிற்க கூட தகுதியற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
இக்லாஸ்
அவரை அறிந்த எவருக்கும் தெரியும். அவர் மிக எளிமையானவர். அவருடைய அலுவலகம் இருக்கிற
பள்ளிவாலுக்கு சென்றால் ஒரு சாதரண பணியன் அணிந்த நிலையில் அவரை சந்தித்து பிரச்சனைகளை
கூறி விட முடியும்.
அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கும் ஊதியம், அரசு வழங்கிய தலைமை அலுவலகம் என தனது பொறுப்புக்காக அரசு வழங்கும்
எதையும் பெறாதவர்.
உறுதிமிக்கவர்
அவர் அரசுக்கு பணிந்து
போகிறார் என சில பேர்வழிகள் குற்றம் சாட்டுவதுண்டு.
ஆனால் எந்த செல்வாக்கிலும்
தீனை விட்டுக் கொடுக்காதவர் என்பதே தலைமை காஜி முப்தீ சலாஹுத்தீன் அய்யூபியின் பெருமையாகும்.
அதிமுக ஆட்சி காலத்தில்
அமைச்ச்சராக இருந்த ஒரு முஸ்லிமின் திருமணம் நடைபெற்றது . அந்த திருமணத்தை ஜெயல்லிதா
அம்மையார்
நடத்தி வைப்பதாகவும் அந்த
ரிஜிஸ்டரில் அவர் கையெழுத்திட்டதாகவும் செய்தி வெளியானது.
காஜி அவர்கள் அதை ஏற்றுக்
கொள்ள முடியாது என்று உறுதி பட தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் முன்னிலையில்
முஸ்லிம் இயக்கப் பேர்வழிகள் கூழைக்கும்பிடு போட்ட வரலாற்றை தமிழகம் அறியும்.
பணம்
காஜி அவர்கள் பெட்டி வாங்கிக்
கொண்டு அரசிற்கு சார்பாக நடந்து கொண்டார் என்று சிலர் பேசியதுண்டு.
ஆனால் சலாஹுத்தீன் முஹம்மது
அய்யூபி அவர்கள் பணத்திற்கு எந்த நிலையிலும் மசிபவர் அல்ல என்பது அவை அனுகிப்பார்த்த
எவருக்கும் தெரியும்.
தலைமை காஜி அலுவலகம்.
1800 களில் ராயப்பேட்டை
திவான் தோட்டத்தில் "மதரஸா முஹம்மதியா" என்ற பெயரில் பள்ளிவாசலுடன் இணைந்த
மார்க்க கூடத்தை இவர்களது முன்னோர்கள் நடத்தி வந்துள்ளனர். அதுவே தற்போதைய நமது தலைமை
காஜியின் அலுவலகமாகவும், இருப்பிடமாகவும்
உள்ளது. இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடம் காஜியின் குடும்ப
சொத்தாகும். அரசு மானியம் அல்ல.
இங்கு அரிய வகை நூல்களை கொண்ட நூற்றாண்டுகளை கடந்த ஒரு நூலகம்
இயங்கி வருகிறது. சென்னையின் பழமையான நூலகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். உருது, பார்சி, அரபி மொழிகளின்
பழமையான மேனுஸ்கிரிப்ட் என்று சொல்லப்படும் குர்ஆன், மார்க்க, வரலாற்று நூல்களை
தேடி உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள்,
ஆராய்ச்சி மாணவர்கள் அன்றைய காலத்தில் இந்த நூலகத்திற்கு வந்து சென்றிருக்கின்றனர்.
தலைமை காஜியின் கட்டுப்பாட்டில்
இருக்கும் சென்னை ராயபுரம் மஸ்ஜிதும் அதை சுற்றி இருக்கிற இடமும் எவ்வளவு மதிப்பு மிக்கவை
என்பது பலருக்கும் தெரியும்.
ஆனால் காழி சலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் இதில் எந்த பெருமையையும்
எங்கும் வெளிப்படுத்திக் கொள்ளாதவர் ஆவார். இது தலை நகரிலுள்ள செல்வந்தர்கள் பலருக்கும்
தெரியும்.
இது தான் தலைமை காஜியின்
குணமாகும்.
தமிழகத்தில் மிகப்பெரிய
குழப்பத்தை ஏற்படுத்திய போலி தவ்ஹீதிய அமைப்புக்கள் அவரிடம் எவ்வளவு கேவலமாக நடந்து
கொண்ட போதும் அவரிடம் எத்தகை முரட்டு தனத்தை வெளிப்படுத்திய போதும் காஜி முஹம்மது சலாஹுத்தீன்
அய்யூபி எதற்கும் அஞ்சியவர் அல்ல. மிக நேர்மையாகவும் உறுதியாகவும் அவர்கள அவர் சமாளித்தார்.
அவர்களோடு அவர் சண்டையிட்டுக்
கொண்டிருக்க வில்லை. தன்னுடைய உறுதியான திர்ப்புக்களை கறாறாக வெளியிட்டு விட்டு சென்று
விடுவார்.
தமிழக முஸ்லிம்கள் அவரது
தீர்ப்பையே பின்பற்றினர்.
கொள்கை பிடிப்பு
முப்தீ சலாஹுத்தீன் அய்யூபி
சுன்னத் ஜமாத் கோட்பாட்டில் உறுதி மிக்க வராக இருந்தார்க
படித்தவர்கள். பெரிய பொறுப்பில்
இருப்பவர்கள். ஏன் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலின் நிர்வாகிகளே கூட முகஸ்துதிக்காவும் பெருந்தன்மையாக
காட்டிக் கொள்வதற்காகவும் சில நேரங்களின் இயக்கப் பேர்வழிகளின் மிரட்டலுக்கு பயந்தும்
சுன்னத் ஜமாத் கொள்கையை விட்டுக் கொடுத்து விடுகிற போது எந்த நிர்பந்த்திற்கும் பணியாமல்
படிப்பு, அந்தஸ்து, அதிகாரம் என்ற அனைத்து நிலையிலும் காஜி முஹம்மது சலாஹுத்தீன் அய்யூபி
சுன்னத் ஜமாத்தின் கொள்கையில் நிலை பட நின்றார்.
இன்று வரை நிற்கிறார்.
நம்முடைய தலைமை காஜி அவரக்ள்
செழிப்பான இஸ்லாமிய காஜி பாரம்பரியத்தின் ஒரு மதிப்பு மிகு தொடராக இன்று வரை பணியாற்றிக்
கொண்டிருக்கிறார்.
ஒரு முஸ்லிமாக தமிழக அரசு
தலைமை காஜியை பற்றி நிற்கிற கடமை தமிழகத்தில் இருக்கிற முஸ்லிம்களான நம் அனைவருக்கும்
இருக்கிறது.
சில
நேரங்களில் ஜமாத்துக்கள் தெரிவிக்கும் பிறை அறிவிப்பை காஜி பொருட்படுத்துவதில்லை என்று
சிலர் குறை சொல்வதுண்டு.
ஒரு
எதார்த்தம் என்ன வெனில் இந்திய ஒன்றியத்திலுள்ள ஒரு மாநிலத்தின் காழியாக பிறை அறிவிப்பு
விசயத்தில் என்ன நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற இஸ்லாமிய சட்ட விதிகள் இருக்கிறதோ
அதையே அவர் பின்பற்றுகிறார். பொய்யான ஆட்கள் அவரிடம் கொண்டு செல்கிற போலியான ரிகார்டுகளை
ஏரளமாக கணடவர் அவர். எனவே தனது அறிவுக்கு உரிய நேரத்தில் வந்து சேர்கிற எடுத்துக் கொள்ளத்
தக்க தகவல்களின் அடிப்படையிலேயே அவர் முடிவு செய்கிறார்
நாம்
பிறை கண்டது உண்மையாக நமக்கு தெரிந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும்
அவருக்கு சில அளவுகோல்கள் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது. எனவே நமது
செய்தியை அவர் ஒப்புக் கொள்ள வில்லை என்பதை வைத்து அவரை தவறாக எடை போடவும் கூடாது.
தலைமை
காஜி அவர்களுக்கு பிறை விசயத்தில் கட்டுப்பட்டு நிற்பதே சரியான இஸ்லாமிய வழியாகும்.
நீங்கள்
தலைமை காஜியை குறை கூறித்திரியும் அமைப்புக்களை கவனித்துப் பாருங்கள். அவர்கள் ஒவ்வொருவரும்
அவர்களது அமைப்பின் பிறை அறிவிப்பை தான் ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு ஊரில் அவர்களுடைய
ஆட்களில் அல்லது முஸ்லிம்களில் யாராவது ஒருவர் பிறை பார்த்து விட்டு சொன்னால் அதை ஒப்புக்
கொள்வதில்லை. அவர்களது அமைப்பு சொன்ன பிறகு தான் ஒப்புக் கொள்கிறார்கள்.
எனவே போலி தவ்ஹீதிய அமைப்புக்கள் பிறை விசயத்தில் உண்டு பண்ணும் குழப்பங்களுக்கு நாம் பலியாகாமல் இருக்க வேண்டுமானால் தலைமைக் காஜியின் அறிவிப்புக்கு கட்டுப்படுதல் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
அவர் மீது குரோதம் கொண்டு
குற்றச் சாட்டுக்களை முன் வைக்கிற எவருக்கும் அவர் அளவுக்கு சுத்தமான வாழ்க்கையும்
இல்லை. சீரான கல்வியும் இல்லை.
எனவே நாம் அரசு தலைமை
காஜி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூபியை தொடர்ந்து வாழ்த்துவோம்.
அல்லாஹ் அவரது கல்வியிலும்
ஆயுலிலும் பரக்கத் செய்யட்டும்.
நிக்காஹ் பதிவு, பிறை
போன்ற விவகாரங்களில் அவரைப் பின்பற்றி நாம்
ஒன்று படுவோம்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteகாலத்திற்கு ஏற்ற பதிவு