وَأَنزَلْنَا مِنْ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ
فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ(18) – المؤمنون
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பெய்த பலத்த மழைக்கு, இதுவரை, 77 பேர் பலியாகி உள்ளனர். (தினமலர் 17 நவ 2015)
கடலூர் மாவட்டம் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. கடலூரில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் தமது வாழ்விடங்கிலிருந்து வெளியேறியுள்ளனர்.
பலர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் தகுந்த ஆறுதலை தந்தருள்வானக! பொறுப்பானவர்களை இழந்து தவிப்போருக்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்வானாக! பாதிக்கப்பட்டுள்ளவர்களின் துயரை அல்லாஹ் விரைவாக துடைத்தருள்வானாக! சீர்குலைந்துள்ள நகரங்களும் கிரமங்ககளும் விரைவாக சீரடைய அல்லாஹ் கிருபை செய்வானாக!
யா அல்லாஹ் எங்களுக்கு மழை வேண்டும்! ஆனால் பாதுகாப்பான மழையை தந்தருள்வாயாக!
கனமழை தொடர்வதால், பல மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 23 தேதி வரை விடுமுறை அளிக்கப்பள்ளது,
சமீப காலங்களில் நடைபெற்ற இய்றகை பாதிப்புக்களில் ஒரு முக்கிய நிகழ்வாக இந்த மழைக்காலம் அமைந்துவிட்டது,
விளம்பரங்கள் கூட நீர்ப்பாதைகளை தடுக்காதீர்கள் என மக்களுக்கு உபதேசம் செய்கின்றன, வகை வகையான கருத்துக்கள் மானாவாரியாக கொட்டப்படுகிறது,
3 மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவ மழை மொத்தமும் 3 நாட்களில் கொட்டித்தீர்த்தால்
நாம் என்ன செய்ய முடியும் என்று முதலமைச்சர் கூறுகிறார்.
நாம் சிந்திப்பதற்கு பல செய்திகளை இந்த
மழை விட்டுச்
சென்றுள்ளது,
வெயில் அதிகரித்து
நீர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைந் கொண்டிருக்கிற போது பொதுப்பணித்துறை அதிகாரிகள்
இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே அணையிலிருந்து தண்ணீர் கிடைக்கும் அதன் பிறகு வறட்சி
ஏற்படும் என அச்சுறுத்துவார்கள்,
இத்தகைய செய்தியை
படிக்கிற போதெல்லாம் மனசுக்குள் ஒரு கோபம் கொப்பளிக்கும். இந்த நீர் தேக்கம் முழுக்க
தண்ணீரை இவர்களா நிரப்பி வைத்தார்கள்?, அல்லது நாளை தண்ணீர் தீர்ந்து விட்டதென்றால்
இவர்களால் அதை நிரப்ப போகிறார்கள், எதுவும் இல்லை, பிறகு வறட்சி பற்றி மக்களை பயப்படுத்த
வேண்டிய அவசியம் என்ன?
என்ன நடக்கும் தெரியுமா ?
அதிகாரிகள் வறட்சியை அச்சுறுத்திய சில நாட்களில் மழை பொழியும். நீர்த் தேக்கங்கள் நிரம்பி வழியும்.
இப்போதும் அப்படித்தான் கடும் கோடையின் அச்சுறுத்தலுக்குப் பிறகு மழை பொழிந்து தீர்த்து விட்டது.
இவை மனிதன் எதிர்ப்பார்க்காததாக இருக்கலாம், இவை அனைத்தும் அல்லாஹ்வின் தீர்க்கமான திட்டங்களே.
إِنَّا
كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ(49) القمر
விதிக்கப் பட்ட
ஒரு சொட்டு நீரும் பூமியில் விழாமல் இருப்பதில்லை, அவன் நிர்ணயித்த படி மழை பொழிகிறது,
நிர்ணயித்த அளவில். நிர்ணயித்த காலத்தில்.
இந்த மழைக்கு நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் குறிப்பிட்டது போல
தமிழகத்திற்கான மழைக்காலமே 33 லிருந்து 50 நாட்கள் தான். இந்தக் காலங்களில்
கிடைக்கிற மழையின் அளவும் 900 மில்லி மீட்டர்தான், இது தேவையை விட மூன்றில் இரண்டு
மடங்கு குறைவாகும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் 44 சென்டி மீட்டர் பருவ மழை பொழிய வேண்டும். அதுவே குறைவு நமது தேவை 200 செ மீ ஆகும்
கடந்த 2104 ல் 40 சென்டி மீட்டர் தான் மழை பொழிந்தது தமிழகத்தின் வட
மாவட்டங்களில் போதிய மழை இல்லை, ஏரிகள் குளங்கள் நிரம்ப வில்லை அன்று போன வருடம் பத்ரிகைகள் குறைப் பட்டுக் கொண்டன (தினமணி 16
December 2014)
இந்த வருடம் மழை அதிகமாக கிடைக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது, அது போலவே அல்லாஹ்வின் அருள் பொழிந்து தீர்த்துள்ளது.
ஒரு மில்லி மீட்டர் மழை என்றால் ஒரு சதுர மீட்டரில் (சதுர கிலோ மீட்டர் அல்ல) 10 லிட்டர் மழை பொழிந்துள்ளது என்று பொருளாகும்.
சென்னையின்
பரப்பளவு 174 சதுர கிலோ மீட்டராகும்.
ஒரு சதுர கிலோமீட்டர் 1,000,000 பத்து இலட்சம் சதுர மீட்டர்களுக்குச்
சமமானதாகும் அதாவது சென்னையின் சதுர மீட்டர் என்பது 17 கோடியே 40 இலட்சமாகும். அதனடிப்படையி சென்னையில் ஒரு எம் எம் மழை பெயதது என்றால் நூற்றி எழுபத்து
நான்கு கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு
கிடைத்தது என்பது பொருளாகும். ஒரு லிட்டர் தண்ணீர் சென்னை சென்ட்ரலில் 4 ரூபாயுக்கு கிடைக்கிறது, அதன் படி ஒரு எம் எம் மழை பொழிகிற போது சென்னைக்கு
கிடைக்கிற இலாபம் 6960,000,000 . ஆறுநூற்று தொன்னூற்றூ
ஆறு கோடி ரூபாய், ரூபாய் ஆகும்
கடந்த 4 நாட்களில் மட்டும் சென்னையில் மட்டும் 357
மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது.
கடந்த 11 நாட்களில் 407 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது, அதாவது 40 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது, ( அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் தரும் தகவல்)
சென்னையில் மட்டும் பெய்கிற
ஒரு மில்லி மீட்டர் மழையினால் கிடைக்கும் தண்ணீரின் மதிப்பே பன்னூற்றூக்கணக்கான கோடியாக
இருக்கிற போது தமிழகம் முழுவதிலும் பெய்கிற மழையின் மதிப்பு எத்தனை பில்லியன்களாகும்
. நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நம்முடைய கணக்கு எதையும்
பணத்தால் கணக்கிட்டு மதிப்பிடுகிற கணக்கு அதனால் தான் இந்தக் கணக்கை போட்டுக் ப்பார்த்தோம்.
நமக்கு கிடைத்த மழை அல்லாஹ்வின்
பேரருளே !
ஆனால் இரவையும் பகலாக்கி வாழ்கிற நமது வாழ்க்கை போங்கின் காரணமாக தண்ணீர் தேவை என்றிருந்தாலும் மழை அசெளகரியமானது என்று கருதுகிறோம்.
இது சரியான சிந்தனை அல்ல, மழையை சளிக்க கூடாது,
மழை பொழிகிற போது இது ரஹ்மத் என்று சொல்வது சுன்னத்து . அல்லாஹ்வின் அருள் காரணமாக மழை பொழிகிற து என்று சொல்வது ஈமானிய இயல்பு
عائشة – رضي الله عنها- أن النبي –صلى الله عليه وسلم- كان يقول إذا رأى المطر
"رحمة" رواه مسلم (899).
عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ
رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ فَأَصَابَنَا مَطَرٌ ذَاتَ لَيْلَةٍ فَصَلَّى لَنَا
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا
فَقَالَ أَتَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ
فَقَالَ قَالَ اللَّهُ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِي فَأَمَّا
مَنْ قَالَ مُطِرْنَا بِرَحْمَةِ اللَّهِ وَبِرِزْقِ اللَّهِ وَبِفَضْلِ اللَّهِ فَهُوَ
مُؤْمِنٌ بِي كَافِرٌ بِالْكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِنَجْمِ كَذَا
فَهُوَ مُؤْمِنٌ بِالْكَوْكَبِ كَافِرٌ بِي - البخاري
4147
மழை நிறைய வேண்டும். ஆணால் பாதுகாபபான மழை வேண்டும் என பிரார்த்திக்க பெருமானார் (ஸல்) கற்றுக் கொடுத்தார்கள்.
أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ أَصَابَتْ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ قَامَ أَعْرَابِيٌّ
فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَ الْمَالُ وَجَاعَ الْعِيَالُ فَادْعُ اللَّهَ لَنَا
أَنْ يَسْقِيَنَا قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَدَيْهِ وَمَا فِي السَّمَاءِ قَزَعَةٌ قَالَ فَثَارَ سَحَابٌ أَمْثَالُ الْجِبَالِ
ثُمَّ لَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حَتَّى رَأَيْتُ الْمَطَرَ يَتَحَادَرُ عَلَى
لِحْيَتِهِ قَالَ فَمُطِرْنَا يَوْمَنَا ذَلِكَ وَفِي الْغَدِ وَمِنْ بَعْدِ الْغَدِ
وَالَّذِي يَلِيهِ إِلَى الْجُمُعَةِ الْأُخْرَى فَقَامَ ذَلِكَ الْأَعْرَابِيُّ أَوْ
رَجُلٌ غَيْرُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ تَهَدَّمَ الْبِنَاءُ وَغَرِقَ الْمَالُ
فَادْعُ اللَّهَ لَنَا فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَدَيْهِ وَقَالَ اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا قَالَ فَمَا جَعَلَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ مِنْ
السَّمَاءِ إِلَّا تَفَرَّجَتْ حَتَّى صَارَتْ الْمَدِينَةُ فِي مِثْلِ الْجَوْبَةِ
حَتَّى سَالَ الْوَادِي وَادِي قَنَاةَ شَهْرًا قَالَ فَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ
إِلَّا حَدَّثَ بِالْجَوْدِ - البخاري 1033
இன்றைய
இந்த சூழலிலும் நன்மக்கள் செய்கிற நல்லறங்களே அல்லாஹ்வின்
அருள் மழையை குறைவின்றி கொண்டு
வந்து சேர்க்கின்றது,
வானம் அடை மழை
பொழிவது அல்லாஹ்வின் பரிசே
وقال تعالى حكاية عن هود عليه وعلى نبينا
الصلاة والسلام: "وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ
يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَاراً وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ
وَلا تَتَوَلَّوْا مُجْرِمِينَ" [هود:52]
தமிழில் அடை மழை என்ற வார்த்தை மக்களை வீட்டிற்குள் அடைத்து வைக்கிற மழை என்ற அர்தத்ததிலேயே சொல்லப்பட்டது,
அந்த அடை மழையின் போது இது நிஃமத் என்பதை உணராமல் வீட்டிற்குள் அடை பட நேர்ந்ததறகாக
வருத்தப்படவும் அதீத்மாக கவலை வெளிப்படுத்திக் கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.
நல்ல மழை பொழிகிற நேரம்
துஆ க்கள் அங்கீகரிக்கப்படும் நேரங்களில் ஒன்று என்பது மார்க்க அறிஞர்கள் பலரின் கருத்தாகும்.
அதே நேரம் அடை மழை பொழிகிறபோது இது அல்லாஹ்வின் அதாப் வேதனையாக ஆகிவிடக்கூடாதே
என்று அச்சப்ப்ட வேண்டும், அதற்காக அல்லாஹ்வை பிரார்த்திக்க வேண்டும்.
வானத்தில் மேகங்கள் கருத்து நிற்கிற போது பெருமானாரின் நிலை.
அச்சப்படுவார்கள், மழை பொழிந்தால் சந்தொஷப் படுவார்கள், அது நன்மையான மழையாக இருக்க
துஆ செய்வார்கள்.
عن عائشة –رضي الله
عنها- قالت: كان النبي -صلى الله عليه وسلم- إذا رأى مخيلة في السماء أقبل وأدبر ودخل
وخرج وتغير وجهه، فإذا أمطرت السماء سري عنه فعرفته عائشة ذلك فقال النبي صلى الله
عليه وسلم: "ما أدري لعله كما قال قوم عاد (فلما رأوه عارضًا مستقبل أوديتهم)"
الآية. رواه البخاري (3034).
وعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان إذا رأى ناشئًا من أفق من آفاق السماء ترك عمله وإن كان في صلاته، ثم يقول: "اللهم إني أعوذ بك من شر ما فيه" فإن كشفه الله (حمدا لله) وإن مطرت قال: "اللهم صيبًا نافعًا" رواه أحمد (6/190) والبخاري في الأدب (686) والنسائي في الكبرى (1829).
அதீத மழையின் ஒரு முக்கிய அடையாளம் இடி! அதனால் இடிச் சப்தத்தை கேட்கிற போது இப்படி பிரார்த்திக்க பெருமானார் (ஸல்) கற்றுக் கொடுத்தார்கள்'
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ وَالصَّوَاعِقِ قَالَ اللَّهُمَّ
لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ - الترمذي 3372
என்வே மழை பொழிகிற போது அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என அல்லாஹ்வை கேட்க வேண்டும்.
ஏன் கேட்க வேண்டும் என்றால்?
மழை பெரு மழை ஆனால் பாடுபட்டு வளர்த்த பயிர்களை நாசம் செய்து விடக்கூடும். ஆபத்தாகவும் அமையக்
கூடும். அல்லாஹ்வின் வேதனை மழையின் வடிவிலும் இறங்க கூடும்.
மனிதர்கள் நேசிக்கிற ஒன்றைக் கொண்டே அவர்களை அதாபுக்குள்ளாக்குகிற ஆற்றல் அல்லாஹ்வுக்கு
உண்டு,
மழையின் மூலம் அல்லாஹ் நூஹ் நபியின் சமூகத்தை அழித்தான்.
·
فَدَعَا رَبَّهُ أَنِّي مَغْلُوبٌ فَانْتَصِر فَفَتَحْنَا أَبْوَابَ السَّمَاءِ
بِمَاءٍ مُنْهَمِرٍ وَفَجَّرْنَا الْأَرْضَ عُيُوناً فَالْتَقَى الْمَاءُ عَلَى أَمْرٍ
قَدْ قُدِرَ وَحَمَلْنَاهُ عَلَى ذَاتِ أَلْوَاحٍ وَدُسُرٍ تَجْرِي بِأَعْيُنِنَا جَزَاءً
لِمَنْ كَانَ كُفِرَ" [القمر:10-14].
ஆதுகளை அழித்தான்
·
وأمطرنا عليهم مطرًا فساء مطر المنذرين
சபா வாசிகளை அவர்கள் கட்டிவைத்திருந்த அணையை உடையச் செய்து அல்லாஹ் அழித்த்தான்
·
فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ" [سـبأ: من
الآية16]،
அதே போல அந்த
மழையை நனமையை விளைவிக்க கூடியதாக ஆக்கித் தருமாறும் அல்லாஹ்வை கேட்க வேண்டும். ஏனெனில்
மழை பொழிந்து விட்டதனாலேயே அது நன்மையானதாக ஆகிவிடாது,
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَتْ السَّنَةُ بِأَنْ
لَا تُمْطَرُوا وَلَكِنْ السَّنَةُ أَنْ تُمْطَرُوا وَتُمْطَرُوا وَلَا تُنْبِتُ الْأَرْضُ
شَيْئًا
மழை
பெய்யாமல் இருப்பதல்ல வறட்சி, மழை பெய்தும் பய்ன் இல்லாமல் போவதே வறட்சி என்ற அற்புதமான
தத்துவததை பெருமானார் (ஸல்) அவர்கள் மிக அற்புதமாக கூறியுள்ளார்கள்.
இன்றைய இந்த ச் சூழலில் இந்த ஹதீஸ் கூறும் நியதியை புதிய வழியில் நாம் சிந்திக்க கடமைப் பட்டிருக்கிறோம்.
மழை நீரை பயன்பாட்டுக்கு ஏற்றவாறு தேக்கி வைக்க நாம் முயற்சி செய்யாவிட்டால் அதுவும் வறட்சிக்கு சம்மே
இப்போது பெய்கிற மழையினால் மக்களின் சகஜ வாழ்வு பாதிப்படைகிறது என்பது மட்டுமல்ல, கிடைத்திருக்கிற அருமையான செல்வமான மழை நீர் வீணாகியும் போகிறது,
இது இரண்டுக்கும் காரணம்
மழையை தேக்கி வைக்கும் வழிகளை நாம் அலட்சியப்படுத்தியதும்,
தண்ணீர் வடிகால் வசதி குறித்து நாம் காட்டுகிற அலட்சியமும் ஆகும்.
2005 ம் ஆண்டு 139 சென்டி மீட்டர் மழையை தாக்குப் பிடித்த சென்னை நகரம் 10 வருடங்களில்
17 சென்டி மீட்டர் மழையைக் கூட தாக்குப் பிடிக்க முடியாத அளவு மாறிவிட்டது என்கிறார்
அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ்
பருவ காலத்தில் தேவையான அளவு அல்லாஹ் மழை பொழியச்செய்கிறான். அதே நேரத்தி ல் மழை நீர் மக்களுக்கு பயனுள்ள வகையில் வழிந்தோடவும் –தேங்கி நிற்கவும் அல்லாஹ்வே ஏற்பாடும் செய்தான்.
குளங்கள் ஊருணிகள் ஏரிகள் ஓடைகள் என அல்லாஹ் இயற்கையாக அமைத்த நீர்த்தேக்கங்களே உலகில் அதிகம். மனிதர்கள் தம் தேவைக்கு அமைத்துக் கொண்டவை சில.
எந்த நதியும் மனிதன் உருவாக்கியதில்லை,
மக்கள் வாழுமிடங்கள் வழியே செல்லும் நதியை அல்லாஹ் நல்ல தண்ணீரஆகவும் ஆக்கினான். இவை அனைத்தும் அல்லாஹ்வின் வல்லமையே!
ஆனால் மக்கள் காலப் போக்கில் இயற்கையின் அமைப்பில் கை வைத்தார்கள். பல வழிகளிலும் இயறகையை அழித்தார்கள்.
குளங்கள் ஆற்றுப்படுகைகள் ஓடைப்பகுதிகள் பெரும் ஆக்ரமிப்புக்குள்ளாகியிருக்கின்றன,
ஊட்டி நீலகிரி பகுதிகளில் மட்டும் சுமார் 30 ஆயிரம் ஓடைகள் காணாமல் போய்விட்டன
என ஓசை அமைப்பு கூறுகிறது,
சமீப காலமாக கால்வாய் தூர்வாருதல், ஆற்றங்கரையோரப்பகுதிகளை, குளங்களை கண்காணித்தல் போன்றவேலைகளில் எந்த அரசும் அக்கறை எடுக்க வில்லை.
மக்கள் இந்த தேவை குறித்து துளியும் சிந்திக்கவே இல்லை,
இப்போது தண்ணீர் தலைக்கு மேல் போய்விட்ட சூழ்நிலையில்
அரசாங்கத்திடம் இலவசங்களை கேட்காதீர்கள் அடுத்த தலைமுறையை வாழ வைப்பதற்கான நீர் ஆதாரங்களை கேளுங்கள் என விளம்பரங்கள் செய்கிறார்கள்.
அரசாங்கத்திடம் இலவசங்களை கேட்காதீர்கள் அடுத்த தலைமுறையை வாழ வைப்பதற்கான நீர் ஆதாரங்களை கேளுங்கள் என விளம்பரங்கள் செய்கிறார்கள்.
மக்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நீர்த்தேக்கங்கள் குளங்கள் ஏரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்க வேண்டும். நடப்பதோ தலை கீழாக இருக்கிற்து, நகரங்களில் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க நீர் நிலைகள களவாடப்படுகின்றன,
நீர்த்தேக்கங்கள் இருக்கிற அளவு நீர்வழித்தடங்களும் வடிகால்களும் தண்ணீர் நிர்வாகத்திற்கு
மிக அவசியமானவை,
சென்னையிலும் தமிழகத்திலும் அபரிமிதமாக பொழிந்த அல்லாஹ்வின் அருள் மக்களுக்கு ஆப்த்தாக மாறிய காரணம் அல்லாஹ இதை அதாபாக ஆக்கியதால் அல்ல, மக்கள் தங்களது வாழ்விடங்களை இப்படி ஆக்கிக் கொன்டதே காரணமாகும்.
வடிகால் வசதி பற்றிய சிந்தனையை அறவே மறந்த சமூகமாக நாம் மாறிப்போனோம். வீடு கட்டுவதிலிருந்து தெருவில் சாக்கடை அமைப்பது வரை எதிலும் வடிகால வசதி பற்றிய சிந்தனை நம்மிடம் கவனத்திற்குரிய அளவில் இல்லை.
மேட்டிலிருப்பவர் கணுக்கால் அளவு தண்ணீரை ம்ட்டுமே தடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் வ்ழிந்தோட இடம் தரவேண்டும் என பெருமானார் உத்தர்விட்டார்கள். தண்ணீரின் ஓட்ட்த்தை தடுக்கிற வகையில் செயல்படக் கூடாது என்பது இஸ்லாமின் கட்டளை இது காட்டுகிறது..
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُمْنَعُ فَضْلُ
الْمَاءِ لِيُمْنَعَ بِهِ الْكَلَأُ - البخاري
أَنَّ رَجُلًا مِنْ قُرَيْشٍ كَانَ لَهُ
سَهْمٌ فِي بَنِي قُرَيْظَةَ فَخَاصَمَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فِي مَهْزُورٍ يَعْنِي السَّيْلَ الَّذِي يَقْتَسِمُونَ مَاءَهُ فَقَضَى
بَيْنَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْمَاءَ إِلَى
الْكَعْبَيْنِ لَا يَحْبِسُ الْأَعْلَى عَلَى الْأَسْفَلِ - ابوداوود
தண்ணீர் வடிந்தோட
அனுமதிக்க வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பது இந்நபிமொழிகளின் கருத்தாக அமையும்.
வடிகால் வசதி சரியாக செய்யப் படாவிடில் சிறிய மழையும்பெரிய
ஆபத்தாக முடியக் கூடும். அல்லாஹ் இயறகையாகவேஆச்சரியமான முறையில் வடிகால் வசதியைஏற்படுத்தியிருக்கிறான்.
வீடுகள் தோட்டங்கள்
அமைப்போரும் அதை பாதுகாக்க சிறந்தவடிகால் வசதியை ஏற்படுத்துவதை பார்க்கிறோம்.
மேட்டூர் அணையை கட்டிய
பிரிட்டிஷ் இன்ஞினியர்கள்தமிழகத்தின் தஞ்சை பட்டுக்கோட்டை முத்துப்பேட்டைபகுதிகளுக்கு
கால்வாய் வெட்டி நீர்ப்பாசனத்திற்கு வழி வகை செய்த போது ஒரு கால்வாயை நீர்ப்பாசனத்திற்கு
என்றும் இன்னொரு கால்வாயை வடிகாலுக்கு என்றும் வெட்டியிருக்கிறார்.
உலகின் ஆகப் பழைய நாகரீகமான மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரீக காலத்தில் வாழ்ந்த மக்கள் சிறந்த வடிகால் வசதிகளை கொண்டு வாழ்ந்ததற்கான அடையாளங்களை சிந்து சம்வெளி நாகரீகத்தின் கூறுகள் நமக்கு இனறைக்கும் எடுத்துக் கூறுகின்றன,
நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக நம்புகிற நம்மிடம் அது பற்றிய சிந்தனை அறவே இல்லை என்பது வேதனையுலும் பெரிய வேதனையாகும்.
சென்னையில் மழை பெய்த அதே நேரத்தில் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் கூட கன மழை பொழிந்துள்ளது, ஆனால் அங்கு இயல்பு வாழ்க்கையை அது பாதிக்க வில்லை,
யூ டூப் வீடியோ வில் அங்குள்ள வடிகால் ஏற்பாடுகள் காரணமாக கண மழை பெழிந்தாலும் கூட சாலையில் ஓடுகிற தண்ணீர் வடிகாலில் பெருக்கெடுத்து கடலில் கலக்கும் ஏற்பாடு சிறப்பாக செய்யப்பட்டிருப்பதை காட்டுகிறது, ‘
வடிகால்கள் சரியாயக் இல்லாவிட்டால் ஆபத்து தான்.தண்ணீர் தடம் புரள்வதையும் ஊரை அழிப்பதையும் தவிர்க்கமுடியாது.
மனிதன் தண்ணீருக்கு முன்னால் எதுவும் செய்ய முடியாமல்கை கட்டி நின்று புலம்பத்தான் வேண்டியது வரும்.
வடிகால்கள் நீர்தேக்கங்களை முறையாக கவனிப்பது - பராமரிப்பது விசயத்தில் மக்களுக்கும் உள்ளூர் அமைப்புக்களுக்கும் கூட முக்கியப் பங்கு உண்டு,.
இப்போதெல்லாம் வடிகால்களை
ஓடை புறம்போக்குநிலங்களை ஆக்ரமிப்பது சாதாரண இயல்பாக இருக்கிறது.
யார் ஆக்ரமிக்கிறார்கள் என்பதல்ல கேள்வி? யார் தான்ஆக்ரமிக்கவில்லை என்பதே கேள்வி!
உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஓடைப் புறம் போக்கு நிலம்இருந்தால் அது உங்களுக்கு சொந்தம்ல்ல மழைக்குச் சொந்தம்.அதை நீங்கள் சொந்தம் கொண்டாடினால் மழை நீர் ஒருநாளில் உங்கள் சொந்தமாக்கிவிடும் என்ற எச்சரிக்கையைகடந்த கால்நூற்றாண்டுகளாக மக்கள் கவனிக்கதவறிவிட்டார்கள்.
கடலூரில் காள்வாய்களிலும் ஓடைகளிலும் தீடீரென வெள்ளம் பாய,தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பல்ரும் குடும்பத்தோடு அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். சில நிமிட இடைவெளியில் பலரதுவாழ்க்கை நடுத்தெருவிற்கு வந்து விட்ட்து.
வடிகால் நிலங்களையும் நீர்த்தேக்கங்களையும் பாதுகாக்க் அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆபத்து காலத்தில் மட்டுமே ஒலிக்கிற சைரனாக இருக்க கூடாது, நம்முடைய சிந்தனையில் என்றேன்றும் அது உறைத்து நிற்கவேண்டும். அது நம்முடைய அடிப்படை தேவையாக உணரப்பட வேண்டும், உணர வைக்க வேண்டும்
மழையோ மழை என வானம் பொழிந்தாலும் குய்யோ முறையென நாம் கதற வேண்டிய சூழ்நிலைக்கு நாமே காரணமாகும்.
மழையைப் பற்றி மழையாய் பொழிந்து விட்டீர் ஷுக்ரன் ஜஸாகல்லாஹு கைரன்
ReplyDelete