வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 12, 2015

ஒத்துழைப்பில் நிலைக்கும் வெற்றி

ஒத்துழைப்பு .
وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان5; 2

பீகார் மாநில தேர்தல் முடிவுகள் நமது நாட்டில் ஜனநாயகத்தை நேசிக்கும்
மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக நாட்டில் மக்களிடையே வெறுப்பையும் பிளவையும் உண்டு பண்ணும் நோக்கில் ஒரு காட்டாட்சி தர்பாரை மத்தியை ஆளும் அரசின் ஆதரவோடு பலர் நடத்திக் கொண்டிருந்தனர்

சகிப்புத்தன்மைக்கு மாற்றமான கொடுரமான பல நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வந்தன.

·         தாத்ரீ ஒரு இராணுவ வீரரின் தந்தை படு கொலை செய்யப்பட்டது.
·         ஜம்முவுல் ஒரு லாரீ கிளீனர் உயிருடன் எரித்துக் கொல்லப் பட்டது.
·         அசாமில் ஒரு தலித் குடும்பத்திற்கு தீவைக்கப்பட்டு இரண்டு சிறுமிகள் கொல்லப்பட்டது.
·         கர்நாடாகாவில் எழுத்தாளர் கர்புர்கீ கொலை செய்யப்பட்டது,

என பல அக்கிரமச் செயல்களை  இந்த்துத்துவா வெறியர்கள் சர்வ சாதரணாமாக நிகழ்த்தி வந்தனர்.

மத்தியை ஆட்சி செய்கிற பாரதீய ஜனதா அரசு அவர்களை காபந்து செய்து வந்தது. தேசத்தின் வரலாற்றில் அதிகம் பேசுகிற பிரதமர் என்று பெயர் பெற்ற பிரதமர் இந்த அக்கிரமங்கள் குறித்து எதையும் பேச வில்லை,

பாடகி ஆஷா போஸ்லேயின் மகன் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் இந்தப் படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலோ இரங்கலோ தெரிவிக்க வில்லை,

இத்தகைய அராஜகப் போக்கினால் மனம் வெறுத்துப் போயிருந்த மக்களுக்கு பீகார் மாநில தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோற்றது பெரிய ஆறுதலை தந்திருக்கிறது.
நாட்டின் ஜனநாயக கட்டமைப்பின் மீது அழுத்தமான நம்பிக்கை கொண்டவர்கள் என்ற அடிப்படையில் முஸ்லிம்களுக்கும் இதில் ஓரளவு மகிழ்ச்சிதான்.  பீகார் மக்கள் தொகையில் 15 சதவீதத்தை கொண்ட முஸ்லிம்கள் 243 சட்ட மன்ற தொகுதிகளில் 24 தொகுதியில் வென்றுள்ளனர்,


பீகார் மாநிலத்தில் ஜனநாயக சக்திக்கு இம்மாபெரிய வெற்றி கிடைத்ததற்கு ஒரு முக்கியக் காரணம்.

ஜனநாயக – சமயச் சார்பற்ற மதநல்லிணக்கத்தை விரும்பும் சக்திகள் தம்மிடையேயுள்ள போட்டி பூசலையும் சண்டை சச்சரவுகளையும் மறந்து ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைத்து நின்றதாகும்.

இதற்கு முன்பு கூட்டணியில் இணைந்த இந்த அரசியல் தலைவர்கள் தமது அகம்பாவம் – ஒத்துழையாமை போக்கினால் – பல முறை கூட்டணியை கேலிக்குரியதாக ஆக்கியிருந்தனர்.

இந்த முறை மஹா கட்பந்தன் என்ற மஹா கூட்டணி அமைந்த போது இது எத்தனை நாளைக்கு ? என்றுதான் அரசியல் விமர்சகர்களும் மீடியாக்களும் கேலி பேசினார்,

ஆனால் இந்த முறை அந்த மாற்றம் வெளிப்படையாகவே தெரிந்தது,

கூட்டணியில் இருந்து முதலில் பிர்ந்து சென்ற முலாயம் சிங்க் யாதவின் சமாஜ்வாதி கட்சி தவிர அனைத்து கட்சித் தலைவர்களும் தேர்தல் முடியும் வரை யாரும் ஒருவர் காலை மற்றவர் வாரிவிடாமல் மிகவும் அணுசரித்து ஒருவருகொருவர் ஒத்துழைப்பாக இருந்தனர்,

பல முறை பிகாரின் முதல்வராக இருந்த லாலூ முதல்வர் பதவியை நிதிஷ்குமாருக்கு விட்டுக் கொடுத்தார். அதே நேரத்தில் தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருக்க வில்லை. அதே போல காங்கிரஸ் கட்சியும் நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருக்க வில்லை. அதிசயமான குண இயல்புடையவர்கள் தேர்ந்தல் முடியும் வரை ஒருவருகொருவர் அணுசரனையாக இருந்தனர்.

இதுவே இந்த தேர்ந்தலின் வெற்றிக்கு பிரதாண காரணமாகும்.

இதே இயல்பு இனி வரும் நாட்களிலும் தொடர வேண்டும். தொடர்ந்தால் தான் பிகார் மக்களுக்கு சிறப்பான ஆட்சி கிடைக்கும். நாட்டு மக்களும் இந்துத்துவாவுக்கு எதிரான இத்தகைய சக்திகள் மீது நம்பிக்கை பிறக்கும்.

இந்தக் கூட்டணியில் இது வ்ரை காணப்பட ஒத்துழைப்பு ஒரு மித்த குரலும் எந்த வகையிலாவது சீர் குலையும் என்றால் அது இந்தச் சிறப்பான வெற்றியை கேலிப் பொருளாக்கி விடும். நாட்டில் வகுப்புவாத தீய சக்திகளுக்கு சார்பாக ஆகிவிடும்

இந்தக் தேர்ந்தல் முடிவில் முஸ்லிம் உம்மத்திற்கு அதன் சிக்கலான கட்டத்தில் முக்கியமான ஒரு வழி காட்டுதல் கிடைத்திருக்கிறது,

நம் கண் முன்னே நிகழ்கிற ஒவ்வொரு நிகழ்விலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டியது முஃமினின் ஈமானிய  இயல்பாகும்.

ஒரு நபித்தோழர் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். தெரு வழியே ஒருவர் மாடு ஒன்றை ஓட்டி வந்தார். திடீரென் மாடு தெருவில் படுத்துக் கொண்டது, மெதுவாக அதை எழுப்பிப் பார்த மாட்டுக்காரர் அது கட்டுப்படாமல் போகவே கையில் வைத்திருந்த சவுக்கால் ஓங்கி அடித்தார். மாடு துள்ளி எழுந்தது, வாசல் படியில் உட்கார்ந்திருந்த சஹாபியும் துள்ளி எழுந்தார். நான் புரிந்து கொண்டேன். என அரற்றினார். அல்லாஹ்வுக்கு கட்டுப்படாவிட்டால் இப்படித்தான் எனக்கும் தண்டனை கிடைக்கும் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றார்.

அல்லாஹ் குர் ஆனில் பல நிகழ்வுகளை சொல்லிக் காட்டுகிறான்,

அவற்றில் ஒன்று ஒன்று ஆதம் அலை அவர்களின் இரணடு மகன்கள் தொடர்பான நிகழ்வு .

அதை ஆரம்பிக்கிற போது  وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ  என்று கூறுகிறான். இதிலுள்ள பில் ஹக் என்ற வார்த்தைக்கு படிப்பினை பெறுவதற்காக என ஒரு பொருள் உண்டு என இமாம் ராஜி (ரஹ) தன்னுடைய தப்ஸீர் கபீரில் கூறுகிறார்கள்

எந்த ஒரு நிகழ்விலிருந்து படிப்பினை நாம் தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இப்போதைய பீஹார் தேர்தல் முடிவு நாம் தேடித் துருவாமலே நமது வாசலில் ஒரு பாடத்தை விட்டுச் சென்றிருக்கிறது,

நாம் ஒருவருக்குகொருவர் ஒத்துழைபாக இருந்தால் வெற்றி கிடைக்கும் எந்த சூழலும். ஒதுழைப்பை தவற விட்டால் தோற்போம். எந்தச் சூழலிலும்.

இன்றைய நமது சமூக அமைப்பில் நம்மில் ஒவ்வொருவரும் இந்த இயல்பை நாம் பந்தப்பட்ட ஒவ்வொரு விசயத்திலும் கடை பிடிக்க வேண்டும்.

இந்த பீஹார் தேர்ந்தலைப் போல
·         ஒரு குடும்பத்தில் அதன் உறுப்பினர்களிடையே
·         தொழில் நிறுவன பார்ட்னர்களில் உழியர்களில்
·         ஜமாத் உறுப்பினர்களிடம்
·         சேவை அமைப்புக்களிடம்
ஒத்துழைப்பு இருக்குமானால் அது மிகச் சிறப்பான முடிவுகளைத் தரும்.

ஒத்துழைப்பு என்றால் ஒரு நல்ல சரியான காரியத்தில் கூட்டாக இறங்கும் போது அற்ப காரணங்களுக்காக பிணங்கிக் கொண்டு நிற்காமல் – அகம்பாவம் விடுத்து  இணைந்து நிற்பதாகும்.

ஒத்துழைப்பு பல வகையில் அமையும்

உதவியால் செய்கிற ஒத்துழைப்பு இருக்கிறது,
உறுதுணையாக இருந்து செய்கிற ஒத்துழைப்பு இருக்கிறது,
உபத்திரவம் செய்யாமல் இருந்து ஒத்துழைப்பதும் இருக்கிறது.

ஒத்துழைப்பின் அற்புதமான் உதாரணங்களாக நபித்தோழரக்ள் இருந்தார்கள்.

ஹிஜ்ரத்தின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் தனது படுக்கையில் படுத்துக் கொள்ளுமாறு அலி (ரலி) அவர்களிடம் கூறிய போது “ என் உயிருக்கு என்ன உத்தரவாதம் ? என்று அலி (ரலி) கேட்கவில்லை.

فأمر علياً أن ينام على فراشه ويتشح ببرده الأخضر وأن يتخلف عنه ليؤدي ما كان عند رسول الله صلى الله عليه وسلم من الودائع إلى أربابها فامتثل أمره فكان أول من شرى نفسه ابتغاء مرضاة الله ووقى بنفسه رسول الله صلى الله عليه وسلم – محمد رسول الله – رشيد رضا


அன்னாருக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக! மிகுந்த தைரியத்தோடும் பொறுமையோடும் அந்த நிகழ்வை எதிர் கொண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்களோ அவை அனைத்தையும் செய்து முடித்த பிறகே அலி (ரலி) மக்காவிலிருந்து புறப்பட்டார்கள்.

பத்று சஹாபாக்களுக்கு மார்க்கத்தில் ஒரு தனி முக்கியத்துவம் இருக்கிறது, பெருமானாரும் சஹாபாக்களும் அவர்களை எந்த இடத்திலும் முன்னிலைப் படுத்தினார்கள் காரணம்

பத்று சஹாபாக்கள் பெருமானார் சல் அவர்களுக்கு மிக நெருக்கடியான கட்டத்தில் –ஒத்துழைத்தார்கள் ,

எங்களால் முடியாது என்று ஒதுங்கி கொள்வதற்கான நியாயங்கள் அவர்களிடம் இருந்தது. காரணம் ஆயுதம் இல்லை, தயாரிப்பு இல்லை, அத்தத்தோடு யுத்ததிற்காக என்று வரவில்லை,ஆட்கள் எண்ணிக்கையோ மிகவும் குறைவு இந்தை நிலையில் ஒரு யுத்தமா என அவர்கள் கேட்டிருந்தால் அது நியாயமான கேள்வியாகவே இருந்திருக்கும். எனினும் அவர்கள் அவ்வாறு கூறவில்லை. மூஸா விடம் அவரது தொண்டர்கள் சொன்னது போல நாங்கள் சொல்ல மாட்டோம். என்றார்கள்

இவை எல்லாம் சஹாபாக்கள் தம் உயிரால் வழங்கிய ஒத்துழைப்புக்களாகும்.

தாதிஸ் ஸலாஸில் யுத்ததிற்காக அம்ருப் னு ஆஸ் ரலி அவர்களை 400 பேருடன் பெருமானார் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள், பிறகு அவருக்கு உதவியாக அபூஉபைதா ரலி அவர்களை 200 பேருடன் அனுப்பி வைத்தார்கள். இருவரும் சந்தித்த போது தலைமை பற்றிய சர்ச்சை எழுந்தது, படை வீரர்கள் அபூ உபைதா (ரலி ) அவர்களையே தலைவராக இருக்க விருப்பம் தெரிவித்தார்கள் எனினும் அபூ உபைதா ரலி அவர்கள் அம்ருப் பின் ஆஸ் ரலிக்கு உடன்பட்டார்கள்.

فَبَعَثَ إلَيْهِ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ أَبَا عُبَيْدَةَ بْنِ الْجَرّاحِ فِي الْمُهَاجِرِينَ الْأَوّلِينَ فِيهِمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَقَالَ لِأَبِي عُبَيْدَةَ حِينَ وَجّهَهُ لَا تَخْتَلِفَا ؛ فَخَرَجَ أَبُو عُبَيْدَةَ حَتّى إذَا قَدِمَ عَلَيْهِ قَالَ لَهُ عَمْرٌو : إنّمَا جِئْتَ مَدَدًا لِي ؛ قَالَ أَبُو عُبَيْدَةَ لَا ، وَلَكِنّي عَلَى مَا أَنَا عَلَيْهِ وَأَنْتَ عَلَى مَا أَنْتَ عَلَيْهِ  وَكَانَ أَبُو عُبَيْدَةَ رَجُلًا لَيّنًا سَهْلًا ، هَيّنًا عَلَيْهِ أَمْرُ الدّنْيَا ، فَقَالَ لَهُ عَمْرٌو : بَلْ أَنْتَ مَدَدٌ لِي ؛ فَقَالَ أَبُو عُبَيْدَةَ يَا عَمْرُو ، وَإِنّ رَسُولَ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ قَالَ لِي : لَا تَخْتَلِفَا ، وَإِنّك إنْ عَصَيْتَنِي أَطَعْتُك ، قَالَ فَإِنّي الْأَمِيرُ عَلَيْك ، وَأَنْتَ مَدَدٌ لِي ، قَالَ فَدُونَك . فَصَلّى عَمْرٌو بِالنّاسِ . )سيرة إبن هشام)

தலாயிலுன்னுபுவ்வாவில் இன்னும் ஒரு செய்தி இருக்கிறது,
அப்துல்லாஹ் பின் புரைதா அறிவிக்கிறர்கள்
(இதே யுத்ததிற்கான பயணத்தில் ஒரு இடத்தில் இரவு நேரத்தில்) எங்கும் நெருப்பு மூட்ட வேண்டாம் என அம்ரு பின் ஆஸ் (ரலி) உத்தரவிட்டார்கள், இதனால் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக உமர் (ரலி) அவர்களுக்கு கோபம் ஏற்பட்டது இவ்விசயத்தை மறுப்பதற்காக எழுந்தார்கள். அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் அவரை தடுத்து அவர் போர் தந்திரங்கள் தெரிந்தவர் என்பதால் தான் பெருமானார் அவரை தலைவராக நியமித்திருக்கிறார்கள் எனவே அவருக்கு கட்டுப்படுங்கள் என்றார்கள். உமர் (ரலி) அமைதியாக இருந்து விட்டார்,

عن عبد الله بن بريدة ، عن أبيه رضي الله عنهما قال : " بعث رسول الله صلى الله عليه وآله وسلم عمرو بن العاص في غزوة ذات السلاسل ، وفيهم أبو بكر وعمررضي الله عنهما ، فلما انتهوا إلى مكان الحرب أمرهم عمرو أن لا ينوروا نارا ، فغضب عمر وهم أن ينال منه ، فنهاه أبو بكر رضي الله عنه ، وأخبره أنه لم يستعمله رسول الله صلى الله عليه وآله وسلم عليك إلا لعلمه بالحرب ، فهدأ عنه عمر رضي الله عنه  


தொல்லை தராமல் இருப்பதே கூட ஒரு வகை ஒத்துழைப்புத்தான். அதுவும் சிறப்பானதே! அதற்கும் சிறப்பான கூலி கிடைக்கும்.  

பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு யுத்ததிலிருந்து திரும்பு கிற வழியில் ஒரு மரத்தினடியில் தனியே படுத்திருந்தார்கள், திஃசூர் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த வாளை எடுத்து பெருமானரின் கழுத்துக்கு நேரே நீட்டி என்னிடமிருந்து உன்னைக் காப்பது யார் என்று கேட்டார். பெருமானார் (ஸல்) அல்லாஹ் என்றார்கள்அவன் கையிலிருந்து வாள் கீழே விழுந்தது என்ற செய்தி நம் அனைவருக்கும் தெரியும் தன்னை மன்னிக்குமாறு அவர் கேட்டார் அப்போது அவர் ஒரு வாக்கு கொடுத்தார். என்னை மன்னித்தீர்கள் எனில் உங்களுக்கு எதிராக இனி நான் செயல்பட மாட்டேன் என்றார். பெருமானார் (ஸல்) அவரை மன்னித்து விடுதலை செய்தார்கள்.

திஃசூருக்கு மன்னிப்பு மட்டும் கிடைக்கவில்லை, பின்னாட்களில் ஒரு பெரும் கூட்டத்துடன் பெருமானார் (ஸல்) அவர்களை நேரில் சந்தித்து இஸ்லாமை தழுவும் பாக்கியமும் கிடைத்தது. دعثور  ரலியல்லாஹு அன்ஹூ எனும் சிறப்பிற்குரியவர் ஆனார்
.
ஒத்துழைப்பினால் ஏற்படுகிற நன்மைக்கு இன்னும் நிறைய உதாரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போக முடியும்,
இஸ்லாமிய வரலாற்றில் அதற்கு பஞ்சமே கிடையாது,

முஸ்லிம்களின் சகோதரத்துவ உணர்வும். ஒத்துழைக்கும் மனப்பான்மையும் உலகப் பிரசித்தி பெற்றவை
பேரரசர்கள், சாமாணிய அரசர்கள் அல்ல, பேரரசர்கள் அவர்களாக விரும்பி சிலரை நீதிபதிகளாக நியமித்தார்கள், அந்த நீதிபதிகள் சில கட்டங்களில் அரசரகளை கண்டித்த போது அரசர்கள் அந்நீதிபதிகளின் தீர்ப்புக்கு உடன்பட்டு ஒத்துழைத்த வரலாறுகளை இஸ்லாம் ஏராளமாக கொண்டுள்ளது,

காழி شريك بن عبيد الله   (மறைவு ஹிஜ்ரீ 177) வை அப்பாஸிய மன்னர் மஹ்தீ கூபாவின் நீதிபதியாக நியமித்தார். கூபாவின் ஆளுநராக மன்னரின் சிறிய தந்தை மூஸா ப்னு ஈஸா இருந்தார். அவர் ஒரு பெண் மணியின் தோட்டத்தை விலை பேசினார். அந்த அம்மையார் விற்க மறுத்தார். அதிகார பலம் வேலை செய்தது, அந்தப் பெண்மணியின் தோட்டத்து மதிற்சுவர்கள் இடிக்கப்பட்டு அடையாளமில்லாமல் ஆக்கப்பட்டு கவர்ணரின் தோட்டத்துடன் இடிக்கப்பட்டது,
பாதிக்கப்பட்ட பெண் மணீ நீதிமன்றத்தில் முறையிட்டார், நீதிபதி கவர்ணரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறினார். கவர்ணர் அதை மறுத்து இது விசயத்தில் தலையிடாது ஒது ங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்த நீதிபதியிடம் சில ஆட்களை அனுப்பினார். அந்த ஆட்கள் நீதிமன்றத்திற்கு வந்த போது அவர்களை கைது செய்து சிறையிலடைத்தார் நீதிபதி. தன்னுடை அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய ஆட்களை சிறைக்கூடத்திலிருந்து விடுதலை செய்தார் மூஸா ப்னு ஈஸா .
நீதிபதி உடனடியாக பயணம் மேற்கொண்டு பஃதாதுக்கு வந்து கலீபா மஹ்தியைச் சந்தித்து தன்னை நீதிபதி பதவியிலிருந்து விடுவிக்குமாறு கூறினார்,
மன்னரின் உத்தரவுக்குப் பிறகு நீதிபதி ஷுரைக் சந்தித்த மூஸா தயவு கூர்ந்து மன்னித்து விடுமாறு கூறினார். அவர் அரசரின் சிறிய தந்தை என்ற போதும் நீதிபதி அதை ஏற்றுக் கொள்ள வில்லை. கைது செய்யப்பட்டவர்களை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும். அதே போல அந்தப் பெண்ணுடன் கவர்ணர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் இதுவே தீர்வு என்றார்.
மன்னர் மஹ்தி அதற்கு நீதிபதியின் தீர்ப்புக்கு முழு ஒத்துழைப்பு நல்கினார். அப்பெண்மணியின் நிலம் அவரிடம் திருப்பித் தரப்பட்டது,

ஒரு நீதிபதிக்கு அரசர் அளித்த ஒத்துழைப்பு என்பது அவரை வரலாறு நினைவு கூறும் மனிதராக ஆக்கி விட்டது,

இதே போல பிற்காலத்தில் ஸ்பெயின் மன்னராக இருந்த அப்துன்னாஸீர் அவர்கள் முந்திர் பின் சயீத் என்ற அறிஞரை தலை நகர் குர்துபாவின்  நீதிபதியாக நியமித்திருந்தார். அந்நகரின் ஜாமி பள்ளிவாசலின் இமாமாகவும் முந்திர் பணீயாற்றினார். அவர் ஒரு சிறந்த சொற்பொழிவாளர்.

அரசர் அப்துன்னாஸீர் ஆடம்பர மாளிகைகள் கட்டுவதில் அதீத கவனம் செலுத்திக் கொண்டிருந்ததால் மூன்று ஜும் ஆவுக்கு வரவில்லை. நான்காவது ஜும் ஆவுக்கு வந்த போது அவர் வந்த்தைப் பார்த்த முந்திர் அவரைக் கண்டித்து திருத்தும் வகையில் சில குர் ஆனிய வசனங்களை ஓதினார். இந்த வசனங்கள் யாருக்காக நினைவூட்டப்படுகின்றன என்பதை அங்கு வந்திருந்தோர் அனைவரும் அறிந்து கொண்டனர்.  இதனால் புண் பட்ட அரசர் அமைதியாக தொழுகை முடித்த பிறகு வீடு திரும்பினார். இனி முன் திர்க்குப் பின் நான் தொழச் செல்ல மாட்டேன் என சபதமிட்ட்டார்..

அரசரின் மன வருத்ததிற்கான காரணத்தை அறிந்த அவரது மகன் அல் ஹிகம்காழி முந்திர் இமாமாக இருப்பதும் அதை தடுப்பதும் உங்களது கையில் தானே இருக்கிறது, அவரை நீக்கி விட்டு வேறொருவை இமாமாக நியமித்து விடுங்கள் என்றார்.
கலீபா அப்துன்னஸீருக்கு கோபம் வந்து விட்டது, மகனிடம் அவர் சொன்னார்.

هذا ما لا يكون ، بل يصلي بالناس حياتنا وحياته إن شاء الله

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வரிகள் ஒத்துழைப்பு என்பதன் கனபரிமாணத்தை

வீடு, தொழில், சமூக வாழ்கை அனைத்து துறைகளிலும் நாம் ஒத்துழைப்புணர்வோடு செயல்படுவது என்று நான் தீர்மாணித்துக் கொண்டோம் என்றால் நம்மை போல நிம்மதியான மனிதர்கள் வேறு யாரும் இருக்க முடியாது, நம்மை போல வெற்றியாளரும் வேறு யாரும் இருக்க முடியாது,

முஸ்லிம் உம்மத்தின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவருக்கும் இன்றைய காலத்தில் தேவைப்படுகிற மிக அத்தியாவசியமான உணர்வு இது,

நாம் ஓத்துழைப்பதை நமது கடமையாக கருதாமல் பிறருக்கு நாம் செய்கிற பேருபகாரமாக நினைக்கிறோம்.

அதனால் ஒத்துழைப்பதற்கு பெரிய நன்றியையும் பிரதிபலனையும் எதிர்பார்க்கிறோம்.

அது கிடைக்காமல் போகிற போது ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்கிறோம்.

பல கட்டத்தில் அகம்பாவம் தற்பெறுமை குழு மனப்பான்மை காரணமாக நமது சமூக அமைப்புக்கள் ஜமாத் அமைப்புக்களுக்கு இடையே அடிப்பபடையான சிறு ஒத்துழைப்புகள் கூட நடப்பதில்லை

இது வேதனையானது,

பீஹா மாநிலத் தேர்ந்தலின் வெற்றி நமக்கு தருகிற பாடம், விட்டுக் கொடுத்து ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புணர்வுடன் நடந்து கொண்டால் வெற்றி எந்தக் காலத்திலும் நமக்கு நிச்சயம்.

இனி நமது தனி விவகாரங்களும் சமூக விவகாரங்களிலும் ஒத்துழைப்பாக நடந்து கொள்வதில் முந்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கிருபை செய்வானாக!

1 comment:

  1. அல்ஹம்துலில்வாஹ்

    நல்ல தகவல்

    ReplyDelete