أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ
وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ(21) nahl
தர்கா
சியாரத் ஒரு சுன்னத்
இஸ்லாம்
பல வகையான வணக்கங்களை நமக்கு வலியுறுத்தியுள்ளது.
அதில்
கப்ருகளை ஜியாரத் செய்வதும் ஒன்று. இது ஒரு வணக்கமே என்பதில் இஸ்லாமிய சமூகம் ஒன்றுபட்டிருக்கிறது. (இஜ்மா)
நபி
(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
فعن عبد الله بن بريدة عن أبيه رضي الله عنه قال :
قال رسول الله صلى الله عليه وسلم : ( كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ
الْقُبُورِ فَزُورُوهَا) رواه مسلم ، وفي لفظ عند الترمذي (1054) : (فَإِنَّهَا
تُذَكِّرُ الْآخِرَةَ) .
قال ابن عبد البر رحمه الله : " في هذا الحديث من الفقه : إباحة الخروج إلى المقابر وزيارة القبو
وعن عائشة رضي الله عنها قالت : كان رسول الله صلى الله عليه وسلم
يخرج إلى البقيع فيقول : ( السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ ،
وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ ، غَدًا مُؤَجَّلُونَ ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ
بِكُمْ لَاحِقُونَ ، اللَّهُمَّ اغْفِرْ لِأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ) رواه مسلم
(974) .
இது ஜிப்ரயீலின் உத்தரவு
قد روي مسلم عن عائشة رضي الله عنها قالت: إن
جبريل أتاه. فقال: إن ربك يأمرك أن تأتي أهل البقيع فتستغفر لهم. قالت: قلت: كيف
أقول لهم يا رسول الله؟ قال: "قولي: السلام على أهل الديار من المؤمنين
والمسلمين ويرحم الله المستقدمين منا والمستأخرين، وإنا إن ش
لاحقون. نسأل الله لنا ولكم العافية
لاحقون. نسأل الله لنا ولكم العافية
وقال النووي رحمه الله : " اتفقت نصوص الشافعي والأصحاب على أنه
يستحب للرجال زيارة القبور , وهو قول العلماء كافة ; نقل العبدري فيه إجماع
المسلمين
அல்லாஹ்
இதை திருகுகுர்ஆனில் இன்னொரு விதமாகச் சொல்லுகிறான்.
وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ
مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ
وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ(84)
முனாபிக்குகளின் கப்ருக்கு
அருகில் நிற்க கூடாது என்றால் முஃமின்களின் கபருகளுக்கு அருகில் நிற்கலாம் என்பதும் அவர்களி சிறந்தவர்களாக இருப்பின் நிற்க வேண்டும் என்பதும் திருக்குர் ஆனின் அறிவுறுத்தலாகும்,
பெருமானார்
(ஸல்) ஜியாரத் செய்ய சொல்லி இருக்கிறார்கள். ஜியாரத் செய்தார்கள், கலீபாஅக்கள் ஜியாரத் செய்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்களுடைய மனவிமார்கள் ஜியாரத் செய்துள்ளார்கள்,
كان النبي يقوم
بزيارة قبور الشهداء في أحد وبدر ويدعو لأصحابها وزيارة قبر أمه صلى الله عليه
وسلم
சஹாபாக்களின் ஜியாரத்
وكانت
سيدتنا الزهراء بنت رسول الله صلى الله عليه وسلم تزور قبر عمها حمزة رضي الله عنه
ومعها بعض النساء،
و كانت
عائشة رضي الله عنها تزور قبر أخيها عبد الرحمن بن أبي بكر رضي الله عنهما.
وكذلك كان
العديد من كبار الصحابة يفعل
روي أن علي
بن أبي طالب رضي الله عنه لما رجع من صفين ودخل أوائل الكوفة، رأى قبرا. فقال قبر
من هذا؟ فقالوا: قبر خباب بن الارت. فوقف عليه وقال: "رحم الله خبابا. أسلم
راغبا. وهاجر طائعا. وعاش مجاهدا. وابتلى في جسمه أخرا. ألا وإن الله لا يضيع أجر
من أحسن عملا" ثم مشى: فإذا هو بقبور. فجاء حتى وقف
عليها، وقال: السلام عليكم أهل الديار الموحشة والمحال المقفرة، أنتم لنا سلف ونحن
لكم تبع، وبكم عما قليل لاحقون، اللهم اغفر لنا ولهم وتجاوز عنا وعنهم طوبى لمن
ذكر الميعاد وعمل ليوم الحساب وقنع بالكفاف ورضى عن الله تعالى. ثم قال: يا أهل
القبور أما الأزواج فقد نكحت. وأما الديار فقد سكنت وأما الأموال فقد قسمت. وهذا
ما عندنا. فما عندكم؟ ثم التفت إلى أصحابه وقال: أما أنهم لو تكلموا لقالوا: وجدنا
غير الزاد التقوى.
فقد روي أن
الإمام الشافعي رضي الله عنه كان يزور قبري الإمامين أبي حنيفة وموسى الكاظم رضي
الله عنهما ويدعو لهما ويدعو عندهما. وكذلك كان يفعل الإمام احمد بن حنبل رضي الله
عنه الذي كان يزور قبر معروف الكرخي. وكان الحسن الخلال يزور قبر موسى الكاظم وكان
சட்ட
நூல்கள் என்ன சொல்கின்றன.
قال الإمام
ابن حزم رحمه الله تعالى في المحلي: ونستحب زيارة القبور، وفرض ولو مرة، ولا بأس
بأن يزور المسلم قبر حميمه المشرك الرجال والنساء سواء.
தேவ்பந்தின் நீண்ட கால முஹ்தமிம் களீல் ஒருவரான காரி தய்யிப்
சாஹிப் தனது குத்பாத்தில் அஜ்மீர் காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி ரஹ் அவர்களை ஜியாரத்திற்கு
செய்ய சென்றதையும் , அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட மக்கள்
பயான் செய்யுமாறு கேட்டதையும். அதனால் பயணத்தை இரத்து செய்து
விட்டு இரண்டு மணி நேரம் ஜிஸ்தியைப் பற்றி பயான் செய்தத்தையும் குறிப்பிடுகிறார்,
(குத்பாத்தே ஹக்கீமுல் இஸலாம்.)
பெற்றோர்களை ஜியாரத் செய்வதை மார்க்கம் அதிகம் வலியுறுத்தியுள்ளது,
وقال الصنعاني رحمه الله : " وهو أمر ندب اتفاقاً ، ويتأكد في حق
الوالدين لآثار في ذلك " - سبل السلام" (2/114) .
தமது வாழ்நாளில் பெற்றோரை சரியாக கவனித்துக் கொள்ளாத பிள்ளைகள்
மவ்திற்கு பிறகு அதிகமாக ஜியாரத் செய்தால் அது கப்பாரா வாக ஆக வாய்ப்பு உண்டு,
பெருமானார் (ஸல் ) அவர்கள் ஜியாரத்
செய்திருக்கிற போது, சஹாபாக்களும் மார்க்கத்தின் முன்னோடிகள்
அனைவரும் ஜியாரத் செய்திருக்கிற போது, அதை தர்கா வழிபாடு என்று
சிலர் சொல்வார்களானால் அவர்கள் எத்தகையவர்கள் என்பதை சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களது சொல்லைக் கேட்டு யாராவது ஜியாரத்தை மறுத்து அல்லது
ஒதுக்கி வாழ்வார்கள் எனில் அவர்கள் தம் மனோ இச்சையையே மார்க்கமாக்கிக் கொண்டவர்கள்
என்பதை தவிர வேறில்லை.
ஒரு எதார்த்தமான உண்மையை பாருங்கள்!
ஒரு முஸ்லிம்
வசதி வாய்ப்புப்
பெறுகிற போது
கப்ரு ஜியாரத்த்தை
தவிர்க்கவே முடியாது.
யாராவது ஒருவர்
மதீனாவிற்கு செல்லும்
வாய்ப்புக்கிடைத்து பெருமானாரை
ஜியாரத் செய்யாமல்
வந்தார் என்று
சொல்ல முடியுமா
? ஒரு வேளை ஒருவர்
மதீனாவிற்கு சென்றும்
ஜியாரத் செய்யாமல்
திரும்பினார் என்றால்
அவரை இஸ்லாமிய
உலகம் என்ன
பார்வையில் பார்க்கும்.
?
மார்க்கத்தில் குழப்பம்
உண்டுபண்ணுகிறர்வர்கள்
இத்தகைய வாதங்களை எழுப்புகிற போது அதற்கு சார்பாக தெரிவது போல சில ஆதாரங்களை முன் வைக்கிற போது, முஸ்லிம் சமூகம் குழம்பி விடக் கூடாது, நடப்பு விசயங்களிலும் முன்னோர்களின் நடை முறைகளை சற்று நிதானமாக அராய்ந்தால் போதுமானது. தெளிவு தானாக கிடைத்து விடும், யூதக் கைக் கூலிகளின் தந்திரம் பலிக்காது,
முஹம்மது
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் கப்ரு உயர்த்திக் கட்டப்ப்பட்டிருக்கிறது, அதற்கு மேல் மாடமும் எழுப்பப் பட்டிருக்கிறது,
அவ்வாறு
செய்தவர்கள் மார்க்கம் அறியாதவர்கள் என்ற முடிவுக்கு நீங்கள் வருவீர்கள் என்றால் உங்களை விட சிறந்த முட்டாள்கள் இந்த உலகில் இல்லை என்றே அர்த்தமாகும்.
மதீனாவிற்கு செல்வது
எதற்காக
பெருமானாரின் கப்ரை
ஜியாரத் செய்வதற்காகவே மதீனாவிற்குச் செல்கிறோம்.
சிலர் இதை மாற்றி
மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலில் தொழுவதற்காக என்கிறார்கள், அவர்கள் சத்தியத்தை சல்லடையால்
மறைக்க முயல்கிற புத்திசாலிகள்.
மஸ்ஜிதுன்னபவிக்காகத்தான் மதீனா ஜியாரத் என்றால் ஒரு இலட்சம் நன்மை தருகிற மக்காவை விட்டு விட்டு ஒரு ஆயிரம் நன்மை தருகிற மதீனாவிற்கு
போக வேண்டியதென்ன?
வஹாபிகளின் கூடாரமான
சவூதி அரசாங்கத்தி
பத்வா உண்மைய
மறைக்கமுடியாமல் வெளிப்படுத்துகிறது.
فقد ذهب كثير من أهل العلم أو أكثرهم إلى استحباب قصد قبر النبي صلى
الله عليه وسلم بالزيارة، وذهب بعضهم إلى المنع من شد الرحال لزيارة قبره صلى الله
عليه وسلم، ونصر هذا القول شيخ الإسلام ابن تيمية
இப்னு தய்மிய்யாவின் கருத்தை அவரது காலத்து
பேரறிஞரான இமாம் சுப்கீ மிக் அழகாக அதை மறுத்துக் கூறியுள்ளார்கள்,
இதை சிலர் மறுத்துள்ளனர் என இப்னு தய்மிய்யா கூறும் ஆட்கள் அடையாளமற்றவர்கள். ஏற்றவர்களோ
மிகப் பிரபலமான நிபுணர்கள்.
சில
ஹதீஸ்கள் தர்காக்களுக்கு எதிராக வந்திருப்பதாக சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வழிகெடுப்போர்
அவர்கள்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنْ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ لَعَنَ
اللَّهُ الْيَهُودَ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسْجِدًا قَالَتْ
وَلَوْلَا ذَلِكَ لَأَبْرَزُوا قَبْرَهُ غَيْرَ أَنِّي أَخْشَى أَنْ يُتَّخَذَ مَسْجِدًا
இது
போன்ற ஹதீஸ்களின் பொருள் என்ன தெரியுமா?
யூதர்களும்
கிருத்துவர்கள்
இந்துக்களும் மற்ற சில சமூகத்தார்களும் கப்ருகளில் இருப்பவர்களை வழிபட்டார்கள், அவர்களையே வணங்கினார்கள். இதையே பெருமானார் (ஸல் ) அவர்கள் தடை செய்துள்ளார்கள்
முஸ்லிம்கள்
கப்ருகளை வணங்குவதில்லை.
ஜியாரத் செய்கிறார்கள். இது பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த வாழ்வியலாகும்.
ஜியாரத்தை
வழி பாடு என்று சொல்லுகிறவனை விட மோசடிப் பேர்வழி யாரும் இல்லை.
சுயநலத்திற்காக சந்தையில்
மாட்டுக்கறியை
ஆட்டுக் கறி என்று சொல்லி விற்பவனைப் போன்ற குற்றவாளி இவர்கள்.
மக்கள்
தர்காக்களுக்குச்
சென்று அவலியாக்களிடம் கோரிக்கை வைக்கின்றனர் என்று குற்றம் சாட்டுகிறார்கள் சிலர்.
கோரிக்கை
வைப்பதால் அது ஷிர்க் ஆகி விடும் என்றால் மூன்றாம் தர அரசியல் வாதிகளிடம் இரகசியாமாக கோரிக்கை பேரம் நடத்த மாநாடு நடத்துகிறவர்களை விட பெரிய முஷ்ரிக்குகள் யாரும் இருக்க முடியாது,
அவ்லியாக்களிடம் கேட்பதும்
ஆட்சியாளரிடம்
கேட்பதும் ஒன்றா என்று ஒரு கேள்வி எழலாம்.
ஆமாம்
ஒன்று தான்,
இறப்பு
என்பதன் பெருள் இந்த உலகில் அவர்கள் இல்லை என்பது மட்டும் தானே தவிர. அவர்களின் மரியாதையும் சக்தியும் அறவே இல்லாமல் போய்விட்டது என்பதல்ல.
وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ
وَلَكِنْ لَا تَشْعُرُونَ(154
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا
بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ(169)3
எனவே கப்ருகளில்
அடக்கமாகி இருப்பவர்களை
முழுக்கவே ஒன்றுக்கு
மற்றவர்கள் என்று
கருதுவது இஸ்லாமியம்
அல்ல. அப்படி நினைப்போர் தான் தோன்றித்தனத்தை
மூலதனமாக கொண்ட
தீவிரவாதிகளே அன்றி
சரியான இஸ்லாத்ததை
புரிந்து கொண்டவர்கள்
அல்ல!
கப்ருகளை
ஜியாரத் செய்கிற போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பெருமானார் (ஸ கற்றுத் தருகிறார்கள்.
ஆயிஷா
ரலி அறிவிப்பில்
இந்த செய்தி இருக்கிறது, கப்ருக்கு அருகில் செல்லும் போது நாம் சொல்லுவோம்.
السلام عليكم دار قوم المؤمنين ، انتم السلف إنا إنشاء الله للاحقون
சற்று கவனித்துப் பாருங்கள் இந்த சலாம் இரண்டு செய்திகளை தெரிவிக்கிறது,
ஒன்று, நமது சலாமை கப்ராளிகள் கேட்கிறார்கள், கேட்கமாட்டார்கள்
என்றால் ஏன் சலாம் சொல்லவேண்டும். மரத்திற்கும் கல்லுக்கும் சலாம் சொல்லுவோமா?
இரண்டாவது வாசகத்தை கவனியுங்கள்.
இது கப்ராளிகளுக்கு
ஆறுதலை தறுகிற வார்த்தைகளாகும்.
இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடுகிற போது நாங்கள்
உங்களை வந்தடைவோம் என்ற வார்த்தை தனிமையுலிருக்கிற அவர்களுக்கு ஆறுதலை தருகிற வார்த்தையாகும்.
வெளிநாட்டில் வாழ்கிற மனிதர் தம் உறவுகளுக்கு சொல்வது போல். லீவு கெடச்ச உடன வந்துருவேன்.
சிலர் திருக்குர்
ஆனிய வசனங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள்
وَمَا يَسْتَوِي الْأَحْيَاءُ وَلَا الْأَمْوَاتُ
إِنَّ اللَّهَ يُسْمِعُ مَنْ يَشَاءُ وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ(22)
கப்ராளிகளை நாம் கேட்க வைக்க முடியாது அல்லாஹ்வே கேட்கச் செய்கிறான் என்பது தான் இதன் பெருளாகும்.
பத்ரில் கொல்லப்பட்ட எத்ரிகளை அடக்கம் செய்து விட்டு பெருமானார் (ஸல்) சொன்ன வார்த்தைகள் பிரசித்தமானவை .
கப்ருகளில்
அடக்கமாகி இருப்பவர்கள் தம்மைச் சுற்றி நடப்பவைகளை அல்லாஹ் நாடிய அளவுக்கு உணர்கிறார்கள். தம்மைச் சார்ந்து நிற்பவர்களுக்கு பிரார்த்தனை புரிகிறார்கள். அல்லாஹ்விடம் மன்றாடுகிறார்கள்.
அல்லாஹ்
தன் நல்லடியார்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வான் என்பது தான் தர்காக்களில் ஜியாரத்து செய்துவிட்டு பிரார்த்தனை செய்பவர்களின் எண்ணமாகும்.
ஆட்சியாளாரானாலும் சரி
அவ்லியாவும் சரி தமது சொந்தச் சக்தியில் காரியங்களை நிறைவெற்றித் தருவதாக ஒரு போதும் முஸ்லிம் நம்ப மாட்டான், அல்லாஹ்வின் நாட்டமும் உத்தரவுகளுமே காரியத்ங்களை நிறைவேற்றி தருபவை என்று எண்ணுகிற முஸ்லிமுக்கு அடியார்களிடம் வைக்கிற கோரிக்கை ஆழமும் அழுத்தமும் புரியாமல் போகாது.
அவலியாவோ
ஆட்சியாளரோ தமது சொந்த சக்தியில் காரியங்களை நிறைவேற்றித் தருகிறார்கள் எவரேனும் நம்புவார் எனில் அவர் ஒரு போதும் முஸ்லிமாக இருக்க முடியாது.
ஒரு
எதார்த்தம் என்ன வென்றால் இன்று தர்காக்களுக்கு எதிராக பேசுகிறவர்கள் அல்லாஹ்வை விட ஆட்சியாளர்களை அதிகம் பயன்படுகிறார்கள் என்பதே உண்மையாகும்.
தாங்கள்
கூட்டிய ஒரு மாநாட்டிற்கு பத்து இலட்சம் பேர் திரண்டதாக தொலைக்காட்சியில் மக்களின் முன் திரும்பத் திரும்பக் கூறியவர்கள் , ஆட்சித் தலைவியிடம் போய் ஒரு இலட்சம் என்று நா கூசாமல் மாற்றிக் கூறினார்கள். மக்களிடம் ஒரு பேச்சு ஆட்சியாளர்களிடம் ஒரு பேச்சு என்று பேசுகிற இவர்களை அல்லாஹ்வை நம்புகிறவர்கள் என்று சொல் வதா ? நாத்திகர்கள் என்று சொல்வதா?
தர்காக்களில்
சில தவறுகள் நடப்பதை மறுக்க முடியுமா என்று சிலர் குறுக்கு கேள்வி கேட்பதுண்டு?
தூய்மை
வாதம் பேசிய உங்கள் அமைப்பில் தவறுகள் நடக்க வில்லையா? அந்த தவறுகளின் நாற்றம் குடலை பிடுங்கி எடுக்க வில்லையா?
அதற்காக உங்களை எல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று யாரேனும் முடிவெடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
எங்கும்
சீர் செய்யப்பட வேண்டிய சில அம்சங்கள் இருப்பது போல் தர்காக்களிலும் சீர் செய்யப்பட வேண்டிய சில விசயங்கள் உண்டு,
ஆனால்
தர்காக்களின் மீது மரியாதை அற்றவர்கள் அது குறித்து பேச துளியும் அருகதை அற்றவர்கள்.
சாக்கடைகளில்
உழல்பவர்கள் பூக்ககடைகளை விமர்ச்சிக்க என்ன உரிமை இருக்கிறது?
அருமைச்
சகோதரகளே தர்காக்கள் விசயத்தில் மக்களை குழப்பிவிடலாம் என்று நினைக்கிற நச்சவரங்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
தர்காக்களில்
ஜியாரத்தை வழிபாடு என்று சொல்லுகிறவர்களை நாம் ஒரு போதும் ஆதரிக்கவோ அனுசரித்து விடவோ கூடாது,
காரணம்
என்ன தெரியுமா? தர்கா தர்கா என்று பேசுகிறவர்ன் நமக்கு பக்கத்திலிருக்கிற அவ்லியாக்களைத் தான் பேசுகிறான் என்று தப்பாக நினைத்து விடாதீர்கள்,
மஸ்ஜிதுன்னபவியில் முஹம்மது
(ஸல்) அவர்களின் கப்ரும் தர்காவாகத்தான் இருக்கிறது .
உங்களூரில்
உள்ள ஒரு தர்காவை நோக்கி விரல் நீட்டுகிற எவனும் மஸ்ஜிதுன்னபவியில் இருக்கிற தர்காவை பின்னணியாகக் கொண்டே பேச வருகிறான் . இதை நாம் மறந்து விடக் கூடாது,
இவர்கள்
சூர்யனைப் பார்த்துக் குறைக்கிற நாய்கள். ஒரு போதும் வெளிச்சத்தை தடுத்து விட முடியாது, என்றாலும் சாமானிய மக்களை தடுமாற்றத்திற்குள்ளாக்க
முயற்சி செய்கிறார்கள். மக்கள் விழிப்படைய வேண்டும்,
தர்கா சியாரத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை
இருக்கிறது,
நாம்
செய்யும் வணக்கங்கள் எதுவும் இறைவனுக்கு தேவையில்லை.. அல்லாஹுஸ்ஸமத்
அவன்
தேவைகளற்றவன். நாம் கொடுக்கிற உணவும் அவனுக்கு தேவையில்லை. நாம் செய்கிற வணக்கங்களும் அவனுக்குத் தேவையில்லை.
வணக்கங்கள்
ஒவ்வொன்றும் நம்மை பக்குவப்படுத்துவதற்காகவே கடமையாக்கப்பட்டுள்ளது. பணிவை பழக்கப்படுத்துவதற்காக தொழுகையும் , கருணையை பழக்கப்படுத்த ஜகாத்தும் சகோதரத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் பழக்கப்படுத்த ஹஜ்ஜும் கடமையாக்கப்பட்டது போல் ஜியாரத்துல் கப்ரு எனும் சுன்னத்தும் யாரை நாம் ஜியாரத் செய்கிறோமோ அவர்களை நினைப்பதற்க்காகவும் நம்முடைய நிலையும் இப்படி ஒரு நாள் அமையும் என்பதை சிந்தித்துக் கொள்வதற்காகவும் ஜியாரத்தை மார்க்கம் சுன்னத்தாக்கியது,
இது
இரண்டும் ஈமானிய வாழ்விற்கு அவசியம்.
நல்லடியார்களை ஜியாரத் செய்கிற போது அவர்களை
மதிக்கிறோம். எதற்காக மதிக்கிறோம்.
அவர்கள் செய்த மார்க்கப் பணிக்காகவே அவர்களை
மதிக்கிறோம். அவர்கள் அரசர்கள் என்பதற்காகவோ தலைவர்கள் என்பதற்காகவோ செல்வந்தர்கள்
என்பதற்காகவோ அல்ல.
தர்காக்களில் அடங்கியிருப்போர் என்ன செய்தார்கள்
?
அஜ்மீர் காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி ரஹ் ஈரான்
நாட்டுக் காரர். இந்தியாவில் இஸ்லாமை பரப்புவதற்காக வந்தார். அவர் மூலம் 90 இலட்சம்
பேர் இஸ்லாமை தழுவினர்,
ஏற்வாடியில் அடங்கியிருக்கிற ஷஹீத் செய்யது
இபுறாகீம் வலியுல்லாஹ் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர். ஆயிரக்கணக்கானோருடன் இந்தியாவிற்கு
இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய வந்தவர் அவர். அவரால் ஏராளமானோர் இஸ்லாமை தழுவினர்.
இதே போல நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம்
அவர்கள் மாணிக்கபூரிலிருந்து மார்க்கப் பிரச்சாரத்திற்கு வந்தவர்
திருச்சி தப்லே ஆலம் பாதுஷா அவர்கள் அரபு நாட்டுக்காரர்
. இஸ்லாத்தின் மிகத் தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரச்சாரத்திற்கு வந்தவர்.
உங்களது ஊரில் ஒரு சின்ன தர்கா இருந்தாலும்.
அது பற்றி விசாரித்துப் பாருங்கள், அவர் அந்தப் பகுதிக்கு மார்க்கப் பிரச்சாரம் செய்ய
வந்தவராக, அல்லது மக்களை சீர்திருத்த வந்தவராகவே இருப்பார்.
இந்த நல்லோர்கள் எல்லோரும் மக்களை கொத்துக்
கொத்தாக இஸ்லாமை ஏற்கச் செய்தனர்,
இன்று தஃவா என்ற பெயரில் பிரம்மாண்டத்தை காட்டி
விளம்பரம் தேடிக்கொள்கிறவர்கள் இப்பெரியோர்களின் சாதனைகளுக்கு முன் வெகு சாமாணியர்களே!
இந்தப் பெரியார்கள் அனைவரிடம் இன்னொரு சிறப்பம்சம்
இருந்ததும் , இவர்களை தேடி வந்து, இவர்களின் முகம் பார்த்து ம் மக்கள் மார்க்கத்தை
ஏற்றனர்.
இன்றும் இம்மகான்களைத் தேடி இலட்சக்கணக்கில்
பிறமத சகோதரர்கள் தமது சொந்தக் காசை செலவு
செய்து கொண்டு வருகின்றனர்,
அவர்களுக்கு தீனையும் நல்வழிகளையும் எடுத்துச்
சொல்ல வேண்டியது நம்முடைய கடமை, வலிமார்களை தேடிவருபவர்களிடம் நாம் நமது கடமையை செய்வதை
மறந்து விட்டு வலிமார்களை குறை பேசிக் கொண்டி திரிகிறோம்.
ஜியாரத்தினால் நமக்கு கிடைக்கிற முதல் நன்மை.
இறைநேசர்களை நாம் மதிப்பதால் அவர்களுடைய பரக்கத்தும் , அவர்களுடை பண்புகளும் கிடைக்கிறது.
இரண்டாவது ஜியாரத் நம்முடைய வாழ்க்கையை எண்ணிப்
பார்க்க வைக்கிறது, நாமும் ஒரு நாள் இப்படி மண்ணறைக்கு வரவேண்டியவர்களே என்ற் சிந்தனையை
தருகிறது, ஒரு மனிதரிடம் இந்த்ச் சிந்தனை வரும் என்றால்
நாளை எனது வீடு ஒரு சின்ன பெட்டி அளவே இருக்கும்
. அதுவும் நாலா புறமும் அடைக்கப்பட்டிருக்கும். எந்த உறவும் பக்கத்தில் இருக்காது,
அந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி என்று ஒரு மனிதன் யோசிக்க ஆரம்பித்தால்
இஸ்லாம் எப்படி ஒரு மனிதனை வாழ் வைக்க நினைக்கிறதோ அந்த விழுமியங்கள் அனைத்தும் அவனிடம்
வந்து விடும்.
ஜியாரத்தை அனுமதித்தன் காரணத்தை சொல்லும் போது
இந்த விசயத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவதை நாம் அறிந்திருக்கிறோம்.
ஜியாரத் என்பது நம்மை எல்லா வகையிலும் பண்படுத்துகிற
பக்குவப்படுத்துகிற ஒரு வணக்கமாகும்.
இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் ஜியாரத்தில் தவ்ஹீதிற்கு
மாற்றமான சிந்தனை வரலாம் என்பதால் பெருமானார் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தார்கள்.
யூதர்கள் கிருத்துவர்கள் இந்துக்களை போல தர்காவில் அடங்கியிருப்பவர்களை மக்கள் வணங்க
ஆரம்பித்து விடக் கூடும என்பதால் தடை செய்திருந்தார்கள்.
மக்களிடம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக்
கூடாது என்ற சிந்தனை உறுதிப்பட்டு விட்ட பிறகு ஜியாரத்திற்கு அனுமதித்தார்கள், தானும்
ஜியாரத் செய்தார்கள்.
இதுவரை தடை செய்திருந்தேன் இனி ஜியாரத் செய்யுங்கள்
என்ற பெருமானாரி வார்த்தை தடைக்கு பின் வந்த அனுமதி என்பதால் அது வலியுறுத்தப்பட்ட
ஒரு அறிவுரை என மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டதன் சிறப்பு என்ன வென்றால்,
பன்னூற்றுக் கணக்கான தர்காக்கள் இருந்த போதும் மக்களில் ஆக அடி மட்டத்தில் இருக்கிற
ஒரு வர் கூட தர்காவில் அடக்கமாகி இருக்கிற நல்லவரை அல்லாஹ் – இறைவன் என்று கருதுவதிலிருந்து
பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.
முஹம்மது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது சன்னிதியிலே
சென்று சலாம் செல்லுகிற போது கூட முஸ்லிம்கள் அஷ்ஹது அன்ன்னக்க அப்துஹு வரஸூலுஹு என்றே
சொல்கிறார்கள்,
நீங்கள் தான் எங்களுடை ரப்பு என்றோ தெய்வமே
என்றோ ஒரு மஜ்னூன் கூட அழைப்பதில்ல.
இது இஸ்லாம் தன்னுடைய தனித்துவமான ஏகத்துவத்தை
எந்த இடத்திலும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பதை பறை அறிவிக்கிறது.
பெருமானாரின் இந்த வலியுறுத்தப்பட்ட சுன்னத்
ஏகத்துவத்திற்கு எதிரானதாகும் என்று சிலர் பேச முற்பட்டிருக்கிறார்கள் எனில் அவர்கள்
அல்லாஹ்வின் ரஸூலுக்கு அப்பால் ஒரு புதிய மார்க்கத்தை தம் மனோ இச்சைப் படி உருவாக்க
முயற்சிக்கிறார்கள் என்றே அர்த்தமாகிறது,
இத்தகைய வழி கெட்ட கூட்டங்கள் அனைத்தை விட்டும்
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
தர்காவை எதிர்ப்பது தான் தமது இலட்சியம் என்று
பேசுவோர். போலிகளே! கோழைகளே! மக்களை தெளிவாக குழப்பும் மோசடிப்பேர்வழிகளே!
அது தான் இலட்சியம் என்று இருக்குமானால் ஒரு
தர்காவை எதிர்த்து அவர்கள் அந்த ஊரில் ஒன்று கூடட்டுமே பார்க்கலாம்
வலிமார்களின் சக்தி எப்படிப்பட்டது என்பது அப்போது
தெரிந்து விடும்.
What a fantastic ARTICLE wah. Wah. Masha Allah Iam making dua for barakath. In your. Knowledge
ReplyDeleteما شاءالله. جزاك الله خيرا كثيرا MGS மஹ்ழரி.
ReplyDeleteالسلام عليكم
ReplyDeleteالحمد لله
بارك ألله لكم
நல்ல அருமையான கட்டுரை.
ماشاء الله كبيرا
ReplyDeleteNalla thelivan vilakkam nadunilaiyodu ithai vasithal ziyarth islamin oru avasiyaman angam enbathai purinthu kolla mudiyum. Allah thangl penavin munaikku menmealum atralai tharuvanaga aameen..
ReplyDeleteما شاء لله بارك الله في علمك وطول الله عمرك في الأعمال الصالحة
ReplyDeleteMashallah arumaiyyana pathivu
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ், அருமையான கட்டுரை. இது போன்ற அகீதா சம்மந்தமான கட்டுரைகளை எதிர்பார்கிறோம்.
ReplyDelete