வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 18, 2016

இப்னு உமர் (ரலி) நவீன உலகிற்கு ஒரு முன் மாதிரி

இப்னு உமர் (ரலி)

இன்றைய மக்களுடைய வாழ்விலும் மார்க்கத்தை பின்பற்றும் ஆர்வம் இருக்கிறது
ஆனால் நம்மில் ஒவ்வொருவரும் அவரவர் விரும்பிய படி மார்க்கத்தை நடைமுறைப்  படுத்த நினைக்கிறோம்.

நாம் விரும்பிய படி தொழுகை,
நாம் விரும்பிய படி ஜகாத்,
நாம் விரும்பிய படி குர்பானி,
நாம் விரும்பிய படி ஹஜ், உம்ரா என ஒவ்வொன்றையும் நாம் விரும்பிய படியே நிறைவேற்றுகிறோம்.

உதாரணத்திற்கு பெண்கள் ஹஜ்  உம்ரா செய்ய வேண்டுமானால் மஹ்ரமின் துணை அவசியம். மஹ்ரம் கிடைக்காவிட்டால் ஹஜ் கடமையே ஆகாது.  ஆனால் இன்று மஹ்ரமைப் பற்றிய சிந்தனை ஒரு பொருட்டே அல்ல, நமக்கு விருப்பம் தோன்றிவிட்டால் அதை நிறைவேற்றிவிட முடிவெடுத்து விடுகிறோம்.

யாரையும்  குறிப்பிட்டு குறை சொல்லும் நோக்கம் இல்லை, இந்தக் குறை நம் அனைவரிடமும் இருக்கிறது

ஒரு விழிப்புணர்வுக்காகவும் நல்லதை நினைவூட்டு வதற்காகவுமே கூறுகிறோம்

அருமையானவர்களே! 

நாம் மார்க்கத்தைப் பின் பற்ற வேண்டும். மார்க்கம் விரும்பியபடி மார்க்கத்தை பின்பற்ற வேண்டும். அல்லாஹ் அதற்குரிய தவ்பீக்கை எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக!

தீனைப் பின் பற்றுவதில் மகத்தான முன்னோடியாக திகழ்ந்தவர் உமர் ரலியின் மகனார் அண்ணல் அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்கள் . சுருக்கமாக இப்னு உமர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இன்று அன்னாருடைய வரலாற்றைப் பார்க்க இருக்கிறோம். அதன் வழி நமது ஈமான் உறுதிப்படும். தீனைப் பின்பற்றுவதில் ஊக்கம் ஏற்படும். அல்லாஹ் கிருபை செய்வானாக! 

இன்றைய நவீன உலகம், இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என ஆசைப்படுமானால் தனது சிந்தனையையும் போக்கையும் அன்னாரின் வழியில் சீர் படுத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் நபியாக தேர்வு செய்யப்பட்டதற்கு நான்கு வருடங்களுக்குப் பிறகு இப்னு உமர் (ரலி) பிறந்தார். அப்போது அவரது தந்தை உமர் இஸ்லத்திற்கு வரவில்லை, ஒருவருடம் கழித்து உமர் (ரலி) இஸ்லாமைத் தழுவிய போது அவரது குடும்பத்தினரும் இஸ்லாமைத் தழுவினர். குழந்தை அப்துல்லாஹ்வின் இஸ்லாமும் அதன் தொடர்ச்சியாகவே நிகழ்ந்தது.

சுமார் பத்து வருடம் கழித்து அப்துல்லாஹ் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது இஸ்லாத்துடனான அப்துல்லாஹ்வின் தொடர்பு இறுக்கமானது.

பத்ரு யுத்தத்தின் போது அதில் பங்கேற்க வேண்டும் என அப்துல்லாஹ் ஆசைப்பட்ட போதும் பெருமானார் (ஸல்) அவர்கள் அவர் சிறுவர் என்பதாக் அனுமதிக்க வில்லை. அதற்கடுத்த வருடம் நடைபெற்ற உஹது யுத்ததிலும் இதே காரணத்திற்காக அவர் அனுமதிக்கப்பட வில்லை,
ஹிஜ்ரீ 4 ம் ஆண்டு நடை பெற்ற அகழ்யுத்தமே அப்துல்லாஹ் ரலி கலந்து கொண்ட முதல் யுத்தமாக இருந்தது,
பெரிய்வரான நிலையில் அப்துல்லாஹ் பின் உமர் நபித்தோழர்களில் மதிப்பு மிக்க ஒருவராக திகழ்ந்தார்.
2630 ஹதீஸ்களை அறிவித்தார். இதன் மூலம் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இரண்டாமவராக திகழ்கிறார்.
நபித்தோழர்களில் பகீஹ் ஆகவும் திகழ்ந்தார்
நல்ல மனம் படைத்தவர்
எதீம் ஒருவரை சேர்த்துக் கொள்ளாமல் அவர் உணவு உண்டதில்லை.
لا يأكل إلا وعلى مائدته يتيم يشاركه الطعام.

ஒரு போதும் அவர் ஒப்பந்தங்களை மீறியதில்லை. வார்த்தைகளை மாற்றிப் பேசியதில்லை.
குழப்ப வாதிகளுக்கு உடன்பட்டதில்லை
அவரது இன்னொரு இயல்பு அவர் எவ்வளவு நல்லவர் என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது? உறங்கும் ஒருவரை அவர் எழுப்பியதில்லை.

அப்துல்லாஹ் ரலி கூறுகிறார்,
لقد بايعت رسول الله صلى الله عليه وسلم..
فما نكثت ولا بدّلت الى يومي هذا..وما بايعت صاحب فتنة..ولا أيقظت مؤمنا من مرقده

சுமார் என்பத்து ஐந்து ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்த ஒருவர் கடைபிடித்த பாலிஸிஎத்தகை சிற்ப்புமிக்கது என்பதை இன்றைய நவீன உலகு நினைவில் கொள்ள வேண்டும்.

நவீன் உலகின் நாகரீகம் பேசுகீற நாம் அரை மணி நேரத்திற்குள் ஆறேழு தடவை பேச்சு மாறுகிறோம். குழ்ப்பம் செய்கிறவர்களுடன் - குறைந்த பட்சம் அவர்களை அஞ்சி - அவர்களுடன்  தொடர்ந்து உறவாடுகிறோம். பிறரின் உணர்வுகளை மதிப்பதில் சற்றும் பெரிதாக நமக்கு அக்கறை எதுவும் இருப்பதில்லை.

இன்று நாம் நாம் விரும்பிய படி இஸ்லாமிய வாழ்வு வாழ ஆசைப்படுகிறோம். அப்துல்லாஹ் (ரலி) யோ நபி விரும்பிய படியே தன் வாழ்நாள் மொத்தத்தைய்ம் கழித்தார்.
ஒரு நாள் இப்னு உமர் ரலி ஒரு கனவு கண்டார். ஒரு பட்டுத்துணி அவரை சொர்க்கத்தில் அவர் விரும்புகிற இடங்களுக்கெல்லாம் எடுத்துச் செல்வதாக கனவு கண்டார். பெருமானார் (ஸல்) அவர்களிடம் இதற்கான விளக்கத்தை அறிந்து சொல்லுமாறு தன்னுடைய சகோதரியும்  பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹப்ஸா அம்மையாரிடம் கோரினார். ஹப்ஸா அம்மையார் பெருமானாரிடம் இதை எடுத்துக் கூறிய போது  நபி (ஸல்) அவர்கள்
نِعْمَ الرجلُ عبد الله، لو كان يصلي من الليل فيكثر
என்று சொன்னார்கள், அதை செவியேற்ற நாளிலிருந்து இப்னு உமர் ரலி தஹஜ்ஜுத் தொழுகையை விட்டதில்லை. இரவில் அதிக நேரம் உறங்கியதும் இல்லை.
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் உன்னத மனிதர்களின் உயர்தர வணக்கமான தஹஜ்ஜுத் தொழுகையைப் பற்றிய பாடத்தில் இப்னு உமர் ரலி அவர்களைப் பற்றிய இந்த ஹதீசை பதிவு செய்துள்ளார்கள்,

அவரது இறுதி நிமிடம் வரை இந்த நிலை தொடர்ந்தார். அவரது படுக்கைக்கு அருகே தொழுகை விரிப்பு எப்போதும் விரித்த வண்ணமே இருக்கும். இஷா தொழுகைக்குப் பின் வீடு திரும்பியதும் தொழ ஆரம்பித்துவிடுவார். சிறிது நேரம் உறங்கி விட்டு மீண்டும் தொழ ஆரம்பிப்பார். ஒரு இரவில் ஐந்தாறு முறை உறங்குவதும் தொழுவதுமாக இருப்பார்.
இப்னு உமர் (ரலி) இரவு நேரத்தில் தொழுவார், திக்ரு செய்வார். குர் ஆன் ஓதுவார். இரவின் பெரும்குதியை ஊரில் இருக்கிற போதும் பயணத்திலும் இவ்வாறு கழிப்பது இப்னு உமர் ரலி யின் நடை முறையாக இருந்தது. இதனால் இரவின் நண்பராக இப்னு உமர் இருந்தார் என வரலாறு சொல்கிறது,
பெருமானார் (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றுபவராக இப்னு உமர் ரலி இருந்தார் என்பது மிகப் பிரபலமான செய்தியாகும்.
       كان الرسول عليه الصلاة والسلام يصلي.. فيصلي ابن عمر في ذات المكان..
       وهنا كان الرسول عليه الصلاة والسلام يدعو قائما, فيدعو ابن عمر قائما...
       وهنا كان الرسول يدعو جالسا, فيدعو عبدالله جالسا..
       وهنا وعلى هذا الطريق نزل الرسول يوما من فوق ظهر ناقته, وصلى ركعتين, فصنع ابن عمر ذلك اذا جمعه السفر بنفس البقعة والمكان

ஒரு தடவை பெருமானார் (ஸல்) அவர்களின் ஓட்டகை செல்ல வேண்டிய வழியிலிருந்து விலகி வேறு வழியில் சென்றது, அதை அறிந்த பெருமானார் (ஸல்) ஒட்டகையை திருப்பினார்கள் அப்போது அங்கிருந்த ஒரு மரக்கிளையில் அவர்களது தலைப்பாகை மாட்டியது, அதை எடுத்து பெருமானார் (ஸல்) அணிந்து கொண்டார்கள்,
இப்னு உமர் (ரலி) பிற்காலத்தில் அந்த வழியே செல்லுகிற போது பெருமானாரின் ஒட்டகை சென்ற வழியே தன்னுடைய ஒட்டகை செலுத்தி பெருமானார் (ஸல்) திரும்பிய இடத்தில் தானும் திரும்பி தன்னுடைய தலைப்பாகையை அந்த மரக்கிளையில் எடுத்து மாட்டி திரும்புகிறவராக இருந்தார்.

ஒரு தடவை பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னுடைய ஒட்டகையிலிருந்து இறங்கி இரண்டு ரக்க் அத் தொழுததையும் பெருமானார் (ஸல்) அவர்கள் இறங்குவதற்கு முன் அவர்களது ஒட்டகை அந்த இடத்தில் இரண்டு முறை வட்டமடித்தையும் இப்னு உமர் ரலி பார்த்தார்கள், அதற்குப் பிறகு அந்த இடத்திற்கு சென்று தன்னுடைய ஒட்டகையை இரு முறை வட்டமடிக்கச் செய்த பிறகு கீழே இறங்கி பெருமானார் (ஸல்) அவர்கள் தொழுத இடத்தில் தொழுதார்,

ليذكر أن ناقة الرسول دارت به دورتين في هذا المكان بمكة, قبل أن ينزل الرسول من فوق ظهرها, ويصلي ركعتين, وقد تكون الناقة فعلت ذلك تلقائيا لتهيئ لنفسها مناخها.
لكن عبدالله بن عمر لا يكاد يبلغ  ها المكان يوما حتى يدور بناقته, ثم ينيخها, ثم يصلي ركعتين للله.. تماما كما رأى المشهد من قبل مع رسول الله..(رجال حول الرسول(

அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி எப்படி எல்லாம் பெருமானாரைப் பார்த்தாரோ அப்படி எல்லாம் செயல்படுபவராக இருந்தார்,
நபி (ஸல்) அவர்கள் மஞ்சள் நிறத்தில் தாடிக்கு சாயம் அணிந்ததைப் பார்த்த அப்துல்லாஹ் அப்படியே தானும் சாயம் பூசிக் கொண்டார்.
عن زيد بن أسلم : أن ابن عمر كان يصفر حتى يملأ ثيابه منها ، فقيل له : تصبغ بالصفرة ؟ فقال : إني رأيت رسول الله - صلى الله عليه وسلم - يصبغ بها
தொழும் போது வேட்டியை நெகிழ்த்தி விடுவார். காரணம் ?

وعن زهير بن أسلم قال : رأيت ابن عمر يصلي محلول الإزار ، وقال رأيت رسول الله  محلول الإزار 
குறிப்பிட்ட மரத்தடியில் உறங்குவார். காரணம்?
وعن ابن عمر رضي الله عنهما أنه كان يأتي شجرة بين مكة والمدينة فيقيل تحتها ، ويخبر أن رسول الله r كان يفعل ذلك   = الترغيب والترهيب

அரபாவுக்கு முஸ்தலிபாவுக்கு இடையே யுள்ள குறுகிற இடத்தில் இயற்கை தேவையை கழிக்க நினைத்தார்.  காரணம்
عن ابن سيرين قال : كنت مع ابن عمر رضي الله عنهما بعرفات فلما كان حين راح رحت معه حتى انتهى إلى المضيق دون المأزمين (1648) ، فأناخ وأنخنا ونحن نحسب أنه يريد أن يصلي فقال غلامه الذي يمسك راحلته : إنه ليس يريد الصلاة ولكنه ذكر أن النبي  لما انتهى إلى هذا المكان قضى حاجته فهو يحبُّ أن يقضي حاجته .
பெருமானாரின் வழிமுறைகளை கடைபிடிப்பதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்த்த ஆயிஷா (ரலி) கூறினார்கள்
وقد روى ابن سعد عن عائشة ، قالت : ما كان أحد يتبع آثار النبي - صلى الله عليه وسلم - في منازله ، كما كان ابن عمر يتبعه .

وروى أبو نعيم عن نافع ، قال : لو نظرت إلى ابن عمر إذا اتبع أثر النبي - صلى الله عليه وسلم - لقلت : هذا مجنون 

ஒரு பார்வைக்கு இது தேவையற்ற பின்பற்றுதல் என்று நமக்குத் தோன்றலாம். அல்லாஹ் பாதுகாப்பானாக சஹாபாக்களைப் பற்றிய இத்தகைய எண்ணங்களை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பெருமானார் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதில் சஹாபாக்கள் காட்டிய அக்கறையின் ஆழ அகலத்தை புரிந்து கொள்ளாமல் வருகிற சிந்தனை அது.
ஒரு நபித்தோழர் பெருமானார் (ஸல்) அவர்களை பார்த்த போது பெருமானார் (ஸல்) சட்டையின் மேல் பட்டனை போடாமல் ஆடை அணிந்திருந்தார்கள், அந்த நபித்தோழரும் அவரது வம்சத்தினரும் தமது சட்டையின் முன் பட்டணை அணிந்தததில்லை,
மார்க்கத்தில் அல்லாஹ் ரஸூலை பின்பற்றுவதில் காட்ட வேண்டிய ஆழ அகலத்தை இந்த சஹாபாக்கள் நமக்கு புரிய வைத்திருக்கிறார்கள் என்று இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உலக சுகங்களை அனுபவிப்பதிலும் பெருமானார் (ஸல்) அவர்களை அப்படியே பற்றினார்.
அவரது தந்தை உமர் ரலி காலத்தில் இஸ்லாம் உலகளாவ பரவி உலகின் செல்வங்களெல்லாம் தந்தையின் முன் கொட்டப்பட்டுக் கிடந்த போதும் கூட மற்ற சாதாரண முஸ்லிம் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படியே நட்ந்து கொண்டார் இப்னு உமர் (ரலி)

பிற்காலத்தில் இஸ்லாமிய உலகிலும் முஸ்லிம்களின் வீடுகளிலும் செல்வம் பெருக்கெடுத்து பாய்ந்த போதும் இப்னு உமர் அதில் துளியும் நாட்டம் கொள்ள வில்லை.
கிடைப்பதை எல்லாம் தனக்கென மிச்சம் வைத்துக் கொள்ளாமல் கொடுத்து  வழங்கினார்
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தயாள குணமும் பிரசித்தி பெற்றதாகும்.
அவர் சிறந்த வியாபாரியாக இருந்தார். அரசாங்கத்திடமிருந்து கிடைத்த மானியமும் ஏராளமாக இருந்தது, எதையும் தனக்கென அவர் வைத்துக் கொள்ள வில்லை,
وكان ابن عمر رضي الله عنه, تاجرا أمينا ناجحا شطر حياته, وكان راتبه من بيت المال وفيرا.. ولكنه لم يدخر هذا العطاء لنفسه قط, انما كان يرسله غدقا على الفقراء, والمساكين والسائلبن
முதல் நாளில் தனக்கு கிடைத்த நாலாயிரம் திர்ஹத்தையும் ஒரு துணியையும் தர்மம செய்து விட்டு அடுத்த நாள் தன்னுடைய குதிரைக்கான உணவை கடனாக வாங்கிக் கொண்டிருந்தார்,  
அய்யூப் பின் வாயில் எடுத்துக் காட்டும் அற்புத காட்சி இது.
       . يحدثنا أيوب بن وائل الراسبي عن أحد مكرماته, فيخبرنا أن ابن عمر جاءه يوما بأربعة آلاف درهم وقطيفة..
       وفي اليوم التالي, رآه أيوب بن وائل في السوق يشتري لراحلته علفا نسيئة – أي دينا- ..
       فذهب ابن وائل الى أهل بيته وسالهم أليس قد أتى لأبي عبد الرحمن – يعني ابن عمر – بالأمس أربعة آلاف,وقطيفة..؟
       قالوا: بلى..
       قال: فاني قد رأيته اليوم بالسوق يشتر علفا لراحلته ولا يجد معه ثمنه..
       قالوا: انه لم يبت بالأمس حتى فرقها جميعها, ثم أخذ القطيفة وألقاها على ظهره, خرج.. ثم عاد وليست معه, فسألناه عنهتا. فقال: انه وهبها لفقير..!!
       فخرج ابن وائل يضرب كفا بكف. حتى أتى السوق فتوقل مكانا عاليا, وصاح في الناس:
       " يا معشر التجار..ما تصنعون بالدنيا, وهذا بن عمر تأتيه الف درهم فيوزعها, ثم يصلح فيستدين علفا لراحلته"..؟؟!!

தனது அடிமைகளில் யாராவது அதிக பக்தியை வெளிப்படுத்தினால் அவரை உரிமை விட்டு விடுவார் இப்னு உமர் (ரலி) .  இவ்வாறு செய்தால் அடிமைகள் போலியாக பக்தியை வெளிப்படுத்தி உரிமை பெற்று விடுவார்களே என்று நண்பர்கள் கூறுவர். அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித்தானே ஏமாற்றுகிறார்கள், பிழைத்துப் போகட்டும் என்று சொல்வார் இப்னு உமர் (ரலி)
நவீன உலகின் முதல் நாட்டம் உணவு
இப்னு உமரோ வயிறு புடைக்க சாப்பிட்டால் தானே மருந்து வேண்டும்? என்றார்/
ஒரு நண்பர் பை நிறைய ஜீரணத்திற்கான மருந்தை இராக்கிலிருந்து கொண்டு வந்து அன்பளிப்பாக கொடுத்தார்.
  وأهداه يوما صديق وعاء مملوءا..وسأله ابن عمر: ما هذا؟قال: هذا دواء عظيم جئتك به من العراق.قال ابن عمر: وماذا يطبب هذا الدواء..؟؟قال: يهضم الطعام.. فالتسم ابن عمر وقال لصاحبه:" يهضم الطعام..؟ اني لم أشبع من طعام قط منذ أربعين عاما".!!

நுகர்வு கலாச்சாரத்தில் அடிமைப்பட்டுக் கிறது இன்றைய உலகு பார்ப்பதை எல்லாம் வாங்கிக் குவிக்கிறது,

இப்னு உமர் (ரலி) பெரும் வசதி படைத்தவராக இருந்த அவரது வீட்டில் நூறு திர்ஹத்திற்கு அதிகமான பொருட்கள் இல்லை

ويقول ميمون بن مهران: " دخلت على ابن عمر, فقوّمت كل شيء في بيته من فراش, ولحاف وبساط. ومن كل شيء فيه, فما وجدته تساوي مئة ردهم"..!!



எனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்வதை பெருமையாக கருதுகிறது இன்றைய உலகு,

பிறருக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கவும் நம்ப வைக்கவும் முயல்கிறது இன்றைய நாகரீகம்,

இப்னு உமர் ரலி அவர்களே தனக்கு தெரியாததை தெரியாது என்று சொல்லிவிட்டு அதற்காக கையடித்து மகிழ்ந்தார்.

كما كان شديد الحذر والحرص في الفُتيا، فقد جاءه يومًا سائل يستفتيه في سؤالٍ، فأجابه قائلاً: "لا علم لي بما تسأل". وذهب الرجل إلى سبيله، ولا يكاد يبتعد بضع خطوات عن ابن عمر حتى فَرَك ابن عمر كفيه فرحًا، ويقول لنفسه: "سُئل ابن عمر عمّا لا يعلم، فقال لا يعلم".

பதவி ஆசை இன்றைய மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது. எந்த தகுதி இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு பதவி வேண்டும் என மக்கள் ஆசைப்படுகிறார்கள், நாகரீகத்தின் எந்த எல்லையையும் கடந்து ஏதாவது ஒரு பதவியை பெற்றுக் கொள்ள வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் ,

இப்னு உமர் (ரலி) சிறு பிராயத்தின் காரணமாக பத்ரு உஹது யுத்தங்களில் அனுமதிக்கப்பட வில்லை என்ற போதும் அகழ் யுத்ததில் அனுமதிக்கப்பட்டார் அதற்கு பிந்தை அனைத்து யுத்தங்களிலும் இப்னு உமர் (ரலி) பங்கேற்றார், அபூபக்கர் சித்தீக் ரலி ஆட்சி காலத்தில் முஸைலமாவிற்கு எதிராக நடைபெற்ற யமாமா யுத்தத்திலும் பங்காற்றினார்,  

தீனுக்காக எந்த அளவு அர்ப்பணித்தாரோ அதை துளியும் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள அவர் நினைக்கவில்லை,

இப்னு உமர் ரலி அவர்களோ தன்னுடைய தந்தை மாபெரும் ஜனாதிபதியாக , அமீருல் முஃமீனீனாக – தன்னுடைய சகோதரி பெருமானாரின் மனைவியாக அதன் மூலம் தான் பெருமானாருக்கு மைத்துனராக இருந்த போதும் கூட எந்த பதவி குறித்தும் இறுதி வரை ஆசைப்படாதவராக இருந்தார்கள்,

உஸ்மான் ரலி அவர்கள் இப்னு உமர் (ரலி) அறிவாற்றல் காரணமாக அவரை நீதிபதி பதவியை ஏற்குமாறு கூறினார்கள், ஆனால் மிக அழகாக  அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்து விடுங்கள், உங்களுக்கு மாறு செய்வதாக நினைக்க வேண்டாம் என்று கூறி அதை மறுத்து விட்டார் இப்னு உமர் (ரலி) .

அது பொறுப்பை தட்டிக் கழித்தது அல்ல, தன்னை விட சிறப்பானவர்கள் இருக்கும் போது தனக்கு அது தகாது என்று நினைத்தாகும் என்கின்றனர் மார்க்க முன்னோடிகள்

طلب منه عثمان أن يشغل منصب القضاء فاعتذر، وألحَّ عليه عثمان فثابر على اعتذاره، وسأله عثمان  : "أتعصيني؟" فأجاب ابن عمر  : "كلا، ولكن بلغني أن القضاة ثلاثة: قاضٍ يقضي بجهل فهو في النار، وقاضٍ يقضي بهوى فهو في النار، وقاضٍ يجتهد ويصيب؛ فهو كفاف لا وزر ولا أجر، وإني لسائلك بالله أن تعفيني". وأعفاه عثمان   بعد أن أخذ عليه عهدًا ألاَّ يخبر أحدًا؛ لأنه خشي إذا عرف الأتقياء الصالحون أن يتبعوه وينهجوا نهجه.

உஸ்மான் (ரலி) ஷஹீதாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் முந்தைய ஜனாதிபதியின் மகன் பெரும் அறிவாளி மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி பதவிக்கு முன்வருமாறு மக்கள் பல வகையிலும் அவரை நிர்பந்தப் படுத்தினர், ஒரு கட்டத்தில் இல்லை எனில் கொன்று விடுவோம் என்றும் கூட மிரட்டினர், ஆனால் மிக உறுதியாக தான் அதற்கு பொருத்தமானவனல்ல என்று கூறி விலகி விட்டார் இப்னு உமர் ரலி

يقول الحسن رضي الله عنه:
" لما قتل عثمان بن عفان, قالوا لعبد الله بن عمر: انك سيّد الناس, وابن سيد الناس, فاخرج نبايع لك الناس..
قال: ان والله لئن استطعت, لا يهراق بسببي محجمة من دم..قالوا: لتخرجن, أ, لنقتلنكك على فراشك.. فأعاد عليهم قوله الأول..فأطمعوه.. وخوّفوه.. فما استقبلوا منه شيئا"..!!

பின்னர் அலி (ரலி) அவர்களுக்கும் முஆவியா ரலி அவர்களுக்கும் இடையே சண்டை வளர்ந்த போது எந்த தரப்ப்போடும் சேர முடியாது என உறுதியோடு நின்று விட்டார் இப்னு உமர் ரலி). இந்த நடை முறைக்காக சிலர் தன்னை தூற்றிய போதும் தனது நிலையை மிக உறுதியாக வெளிப்படுத்தினார் இப்னு உமர் (ரலி). அப்போது அவர் உதிர்த்த வார்த்தைகள் மிக கனமானவை,

من قال حي على الصلاة أجبته..ومن قال حي على الفلاح أجبته..ومن قال حي على قتل أخيك المسلم واخذ ماله قلت: لا".!!
இப்படி அவர் அதிகாரப் போட்டியை விட்டு விலகி நின்ற போதும் கூட அசத்தியத்தை எதிர்க்க எந்த நிலையிலும் அவர் தயங்கவில்லை,
தந்தையின் தைரியத்திற்கு சற்றும் சளைக்காத தனயனாக அவர் திகழ்ந்தார்,

ஒரு நாள் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அப்துல்ல்லாஹ் பின் சுபைர் ரலி அவர்களைப் பற்றி தவறாக பேசிய போது பொது இடம் என்றும் பாராமல் ஹஜ்ஜாஜின் கொடுமைக்கு அஞ்சாமல் பதிலளித்தார் இப்னு உமர் (ரலி). மக்கள் ஹஜ்ஜாஜை எச்சரித்தார்கள், அவருக்கு ஏதேனும் தீங்கு செய்தால் உன்னைப் போல முட்டாள் யாரும் இருக்க முடியாது,

وذات يوم, وقف الحجاج خطيبا, فقال:" ان ابن الزبير حرّف كتاب الله"!
فصاح ابن عمر في وجهه:" كذبت, كذبت, كذبت".
فمضى الحجاج يتوعد ابن عمر بشرّ جزاء..
ولوذح ابن عمر بذراعه في وجه الحجاج, وأجابه الناس منبهرون:" ان تفعل ما تتوعد به فلا عجب, فانك سفيه متسلط"..!!


மற்றொரு முறை ஹஜ்ஜின் போது ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அதிக நேரம் குத்பா வில் பேசிக் கொண்டிருந்த போது உமக்காக நேரம் காத்திருக்காது என இப்னு உமர் ரலி கூறினார்,

இப்னு உமர் ரலி அவர்கள் மீது சினமுற்ற ஹஜ்ஜாஜ் ஒருவனை ஏவி இப்னு உமர் ரலீ கால் மீது விஷ அம்பை ஏவுமாறு செய்தான்

அதனால் இப்னு உமர் ரலி அவர்கள் தன்னுடைய 84 வயதில் வபாத்தானார்கள்,

இறுதியில் தன்னை மக்காவிலேயே அடக்கம் செய்யுமாறு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள், ஆனால் அதைக் கூட ஹஜ்ஜாஜ் ஏற்காத காரணத்தால் தீ துவா என்ற இடத்தில்  ஹிஜ்ரீ 73 ல் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்

பெருமானார் (ஸ்ல்) அவர்களது நபித்துவத்தின் புதிதில் பிறந்து பின்னர் பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் கலீபாக்களுக்கும் மிக்க துணையாக இருந்து அதற்குப் பிந்தைய குழப்பம் நிறைந்த காலகட்டத்திலும் தனித்துவத்ததோடு வாழ்ந்து மறைந்த பெருந்தகை அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்களது வரலாற்றில் இன்னும் ஏராளமான நிகழ்வுகளை குறிப்பிட்டுச் சொல்வதற்கு உண்டு என்றாலும் இப்போது குறீப்பிடப்பட்ட செய்திகளை நாம் ஜீரணித்துக் கொள்வதற்கே அதிக நேரம் தேவை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்,

நிறைவாக ஒன்றை குறிப்பிடுகிறேன். 12 ஆண் குழந்தைகள் நான்கு பெண் குழந்தைகளுக்கு சொந்தக்காரராக மக்களின் மிகுந்த மரியாதைக்குரியவராக நீண்டு நெடிய வாழ்ந்த அந்தப் பெருந்தகை தாங்கள் வாழும் காலம் வரை வாழ வேண்டும் என தலை முறை தாண்டி மக்கள் துஆ செய்தார்கள்

عن محمد قال قال رجل اللهم أبق عبد الله بن عمر ما أبقيتني أقتدي به فإني لا أعلم أحدا على الأمر الأول غيره


ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் உமர் ரலிக்கு ஒரு கடிதம் எழுதி அறிவு மொத்ததையும் தனக்கு எழுதித்தறுமாறு கேட்டார், இப்னு உமர் ரலி எழுதினார்கள்
وكتب رجل إلى ابن عمر   فقال: "اكتبْ إليَّ بالعلم كله". فكتب إليه ابن عمر: "إن العلم كثيرٌ، ولكن إن استطعتَ أن تلقى الله خفيفَ الظهر من دماء الناس، خميص البطن من أموالهم، كافًّا لسانك عن أعراضهم، لازمًا لأمر الجماعة فافعلْ، والسلام".
நீ அல்லாஹ்வை சந்திக்கும் வரை மக்களின் இரத்ததை சிந்தும் பாவச் சுமையிலிருந்து உன் முதுகை பாதுகாத்து, அநீதமாக அவர்களின் சொத்துக்களை சாப்பிடுவதிலிருந்து உன் வயிற்றைச் சுருக்கி, அவர்களாது மானத்தை கெடுப்பதிலிருந்து உனது நாவை தடுத்து, முஸ்லிம்களின் ஜமாத்தை பற்றிக் கொண்டு முடிந்த வரை இரு முய்றசி செய்!


அறிவு மிகைத்து விட்டதாக கொக்கரித்துக் கொண்டிருக்கும் உலகிற்கு என்ன அற்புதமான வழிகாட்டுதல் !

ஒரு அற்புதமான இஸ்லாமிய வாழ்வுக்கு முன்னுதாரணம் ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி)
அவர்களது வரலாற்றில் பல படிப்பினைகள் நமக்கு உண்டு என்றாலும் நாம் இன்றைய நிலையில் பிரதானமாக எடுத்துக் கொள்ள வேண்டியது,

மார்க்கத்தை பின்பற்றுகிற போது இப்னு உமர் ரலி அவர்கள் செய்தத்து போல மார்க்கத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே நாம் பின் பற்ற வேண்டும். மார்க்கத்த பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு நமது விருப்பத்திற்கேப மார்க்கத்தை வளைக்க மார்க்க தத்துவங்களுக்கு புது விளக்கங்கள் கொடுக்க முயற்சிக்க கூடாது,

அல்லாஹ் கிருபை செய்வானாக!




  1.  

2 comments:

  1. Mega arumai bayan seyya very easy

    ReplyDelete
  2. அருமையான தகவல்

    கட்டுரைகளை முடிந்தளவு

    வியாழன் அன்றே வெளியானால்

    மிக உதவியாகயிருக்கும்

    வஸ்ஸலாம்

    ReplyDelete