( கேரளாவில் ஒரு முஸ்லிம் நீதிபதி இஸ்லாமிய ஷரீ அத்திற்கு எதிராக பேசுகிறார், தமிழகத்தில் ஒரு அநாமத்து அரசியல் வாதி முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகளுக்கு எதிராக பேசுகிறார், தமது சுய இலாபத்திற்காக தீனையும் உம்மத்தையும் கொச்சைப்படுத்துகிற இத்தகையோரிடமிருந்து அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தையும் நமது நாட்டையும் பாதுகாப்பானாக! இத்தகைய தரங்கெட்ட ஒரு சூழ்நிலைக்கு ஆளாகிவிடாதவாறு நம்மை பாதுகாப்பானாக! ) இஸ்லாமிய ஷரீஅத்
அல்லாஹ்வால் பரிபூரணப்படுத்தப்பட்டு 15 நூற்றாண்டுகளாக மக்களின் வழக்கத்தில் இருந்து
வருகிறது.
இந்த உலகில் இத்தனை
நூற்றாண்டுகளாக நடப்பில் இருந்துவரும் சட்ட அமைப்பு இன்னொன்று கிடையாது.
அல்லாஹ்வின் சட்டம்
பரிபூரணமானது. திருத்தங்கள் எதுவும் தேவையற்றது.
குற்றச் செயல்களுக்கான
தண்டனை பலர் பார்க்க நிறைவேற்றப்பட வேண்டும் என ஷரீஅத் கூறுகிறது.
அமெரிக்காவின்
மாநில ஆளுநர் ஒருவர் மத்திய அரசிடம் போதைப் பொருட் கடத்தல் குற்றவாளிகளுக்கு மின்சார நாற்காலி மூலம் மரண தண்டனை வழங்கும் போது
அதை வீடியோ படம் பிடித்து மக்களிடம் காட்ட அனுமதிக் கேட்கிறார். இதனால் இத்தகைய குற்றங்கள்
குறைய வாய்ப்புள்ளது என்று எழுதியிருக்கிறார்,
போதைப் பொருள்
கடத்தலை மட்டும் அவர்கள் பெரிய குற்றமாக பார்க்கிறார்கள், இஸ்லாமோ திருட்டு விபச்சாரம்
கொலை போன்ற எல்லா வகை அத்துமீறல்களையும் பெருங்குற்றமாகவே பார்க்கிறது.
இஸ்லாமிய ஷரீஅத்திற்கு
எதிராக அவ்வப்போது இடையூறுகள் செய்யப்பட்டாலு அதை ஒவ்வொரு காலத்திலும் இஸ்லாம் வென்று
வருகிறது.
1917 ரஷ்யாவில்
கம்யூனிச புரட்சி ஏற்பட்ட பிறகு அதன் கட்டுப்பாட்டிற்கு நிர்பந்தமாக கொண்டு வரப்பட்ட
பழமை வாய்ந்த இஸ்லாமிய மரபுகளின் தொட்டில் பூமியாக திகழ்ந்த தஜகிஸ்தான் கஜகிஸ்தான்
போன்ற பல நாடுகளிலும் ஷரீஅத்தின் அத்தனை நடை முறைக்கும் தடை விதித்தார்கள்,
ஆனால் என்ன நடந்தது,
பல்வேறு பட்ட கொடூரமான அடக்கு முறைகளுக்கும் பிறகு இஸ்லாமின் வாடை கூட நுகர்ந்திராத
புதிய தலைமுறை இஸ்லாமிய ஷரீஅத்தை தமது வாழ்வியலாக எடுத்துக் கொண்டு நடை போடுகிறது.
பள்ளிவாசல் அதிகரித்து
வருகிறது, உலகம் முழுவதிலும் தாடி பர்தா போன்ற இஸ்லாமிய அடையாளங்களை - தமது
வாழ்வில் வெளிப்படுத்தக் கூடிய மக்கள் நெருக்கடிகளை தாண்டி உறுதியோடு நடைபோடு கிறார்கள்,
இந்த தீனும் ஷரீஅத்தும்
இன்றை உலகின் தீமைகளிலிருந்து தம்மை பாதுகாப்பதாக வெளிப்படையாக கூறிவருகிறார்கள்.
அமெரிக்காவிலிருந்து
செயல்படுகிற கத்தோலிக் ஆன்லைன் நிறுவனம் உலகின் பல நாடுகளில் தமது அமைப்பின் மூலம்
நடத்திய ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது. (http://www.catholic.org/news/international/middle_east/story.php?id=50757)
a vast majority, or three quarters of all poll
respondents in the Middle East and North Africa, South Asia and Southeast
Asia say they want legal issues to be resolved in Sharia courts.
மத்தியக் கிழக்கிலும்.
தெற்கு ஆப்ரிக்காவிலும், மேற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வில் பங்கேற்றவர்களில் நான்கில் மூன்று பங்கு மக்கள் ஷரீ ஆ சட்டத்தின் மூலமே தங்களது
பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதை விரும்புகின்றனர்,
அந்த ஆய்வு தொடர்ந்து
கூறுகீறது,
பாலுறவு ஒழுக்கம்
சார்ந்த கட்டுப்பாடுகள் மீதான் நம்பிக்கை முஸ்லிம்களிடம் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது,
நிலமை இப்படி இருக்க
இஸ்லாமிய ஷரீஅத்தின் மீது முஸ்லிம் சமூகத்தைச் சார்த ஒருவரே – அதுவும் பொறுப்பான நீதிபதி
பதவியில் இருப்பவரே குறை கூறி பகிரங்கமாக பேசிய ஒரு செய்தி கடந்த வாரம் பத்ரிகைகளில்
வெளியானது.
கடந்த
மார்ச் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு -
கோழிக் கோட்டில்
முஸ்லிம் பெண் வழக்கறிஞர்கள் அமைப்பு
என்ற போர்வையில் இயங்குகிற ‘நிஸா’ என்ற அரசு சாரா நிறுவனம் "அரசியலமைப்பு -
பாலின சமத்துவம் -
நம்பிக்கை’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தியது.
கருத்தரங்கில் பேசிய கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கமால் பாஷா ஷரீ
அத் சட்டம் குறித்து முறைகேடாகவும் முஸ்லிம்களின் மனம் புன்படும் விதத்திலும் ஒரு
நீதிபதியின் தரத்திலிருந்து கீழிறங்கியும் பேசியிருக்கிறார் என்பதோடு
உச்சநீதிமன்றத்தையும் வம்புக்கிழுத்திருக்கிறார்.
முஸ்லிம் ஷரியத் சட்டம் பெண்களுக்கு எதிராகவே பயன்
படுத்தப்பட்டு வருகிறது
ஆண்கள் 4 முறை
திருமணம் செய்து கொள்ள உரிமை அளிக்கப்படுகிறது. அந்த உரிமை பெண்களுக்கு
மறுக்கப்படுவது ஏன்?
திருமண விவகாரங்களில் தீர்ப்பு வழங்கும் மதத் தலைவர்கள், தங்களுக்கு தீர்ப்பளிக்கும் தகுதி உள்ளதா என்பதை சுய
பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மக்களும் அவர்களது தகுதி குறித்து விவாதிக்க
வேண்டும்.குர்ஆன் புனித நூலில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் கூட
பறிக்கப்படுகின்றன.
குர்ஆனில், திருமணம்
மற்றும் விவாகரத்து போன்ற விஷயங் களில் முடிவெடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கும்
வழங்கப்பட் டுள்ளது.
முஸ்லிம் ஷரியத் சட்டத்தில் ஆண் - பெண் பாரபட்சம்
காட்டப்படுகிறது. சம உரிமை மறுக்கப்படுவதுடன், சொத்துரிமை உட்பட பல பிரச்சினைகளில் பெண்களின் உரிமைகள்
மறுக்கப்படுகின்றன.
பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது நியாயமற்றது. இந்த
விஷயத்தில் உச்ச நீதிமன்றம் கூட தயக்கம் காட்டி வருகிறது.
இந்த அநீதிக்கு முடிவு கட்ட பெண்கள் முன்வரவேண்டும்.
பொறுப்பான ஒரு பதவியில் இருக்கிற நீதிபதி பெண்களின்
உரிமைகள் தொடர்பாக சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை பேசுவதை விடுத்து
ஷரீஅத்தை தொட்டதற்கு காரணம் இன்றைய சூழ்நிலையில் இஸ்லாமை குறைபேசினால் அதுவும்
முஸ்லிம் பெயரில் இருந்து கொண்டு இஸ்லாமை குறை கூறினால் தற்போது
ஆட்சியிலிருக்கிறவர்களிடம் நற்பெயர் பெற்று அதன் மூலம் அரசியல் இலாமப் அடையலாம்
என்பதை தவிர வேறு இல்லை.
உளறல்களுக்கு முக்கியத்துவம் தறுகிற மீடியாக்களுக்கு தீனி
பேடும் ஒரு நோக்கமும் இதில் இருக்கலாம்/
இதில் உண்மையோ நியாயமோ சிறிதும் இல்லை. நீதிபதியின் பேச்சு
வெறும் சீண்டல்.
பெண்கள் ஏன் 4 ஆண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற சீர்திருத்தக் கேள்வியை அவருடைய மனைவியிடமிருந்து தொடங்குவாரா என்று திருப்பிக்
கேட்டால் நீதிபதியின் இலட்சணம் வெளியே தெரிந்து விடும்.
பலதார மணத்தை இஸ்லாம்
அங்கீகரிதது குறித்து தொடர்ந்து வேண்டுமென்றே உண்மையை புரியாமல் ஒரு தரப்பாக குற்றம்
சுமத்துகிற வேலையை சிலர் செய்து வருகிறார்கள்.
உண்மையில் பலதாரமணம்
தொடர்பாக இஸ்லாம் செய்த சீர்திருத்தங்களை சிந்திக்கிற
அனைவரும் அதை பாராட்டவே செய்வர், அது மட்டுமல்ல அது பெண்களின் உரிமையை வலுவாக பேணுகிற
ஒரு திட்டமும் ஆகும்.
பலதாரமணத்தை இந்த
உலகிற்கு இஸ்லாம் முதன் முதலாக அறிமுகப்படுத்தவில்லை,
அது பன்னெடுங்காலமாக
நடை முறையில் இருந்து வந்துள்ளது,
இந்து மதத்தின்
கடவுள்களுக்கு பல மனைவியர் உண்டு.. மட்டுமல்ல புராண கதாபாத்திரங்களுக்கு பல நூறு மனைவியர்
உண்டு, இராமனின் தந்தை தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள் இருந்தனர்,
தாவூது அலை சுலைமான்
அலை போன்றோருக்கு ஏராளமான மனைவியர் இருந்தனர் என திருக்குர் ஆன் விரிவுரைகளில் கூறப்பட்டுள்ளதூ.
فهذا نبي الله سليمان كان له تسعون امرأة ،
இஸ்லாத்திற்கு
முந்தைய அரபுச் சமூகத்திலும் கணக்கற்ற பெண்களை திருமணம் செய்து கொண்டு கவனிக்காமல்
விட்டு விடுகிற பழக்கம் இருந்தது,
இதில் இஸ்லாம் சீர்திருத்ததை கொண்டு வந்து சிறப்பாக நடை முறைப்படுத்தியது.
ஒரு மனிதர் நான்கு
பெண்கள் வரை மட்டுமே திருமணம் செய்து கொள்ளலாம்.
அதுவும் சக்தி
இருந்தால் மட்டுமே அனுமதி
அனைவரிடமும் நீதமாக
நடந்து கொள்ள வேண்டும்.
இந்த அனுமதியும்
நியதிகளும் திருக்குர் ஆனிலும் ஹதீஸிலும் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.
وَإِنْ خِفْتُمْ أَلاَّ
تُقْسِطُواْ فِي الْيَتَامَى فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى
وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ
أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلاَّ تَعُولُواْ
قد احل الإسلام تعدد الزوجات ولكن بشروط فإن لم يكن الرجل يملك هذه
الشروط فلا يحق له التعدد ومن أهم هذه الشروط :
·
العدل
العدل هو أهم الشروط : ((فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ
فَوَاحِدَةً)) [النساء 3] فإن كان الإنسان غير قادر على العدل فلا يحق له التعدد
ويكون العدل في كل الصور في الماكل والمشرب والملبس والمسكن فلا يُفَرِقْ بين
الاولى والثانية في المال او المبيت
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ مَنْ كَانَتْ لَهُ امْرَأَتَانِ فَمَالَ إِلَى إِحْدَاهُمَا جَاءَ يَوْمَ الْقِيَامَةِ
وَشِقُّهُ مَائِل – البخاري
عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْسِمُ فَيَعْدِلُ وَيَقُولُ اللَّهُمَّ هَذَا قَسْمِي
فِيمَا أَمْلِكُ فَلَا تَلُمْنِي فِيمَا تَمْلِكُ وَلَا أَمْلِكُ قَالَ أَبُو دَاوُد
يَعْنِي الْقَلْبَ– ابوداوود
ஒரு பெண்ணை
புதிதாக திருமணம் செய்கிற போது முதல் தடவையக தங்குவதில் மட்டும் சலுகை
‘عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِنَّ لِلثَّيِّبِ ثَلَاثًا وَلِلْبِكْرِ سَبْعًا
பயணத்தில்
உடன் அழைத்துச் செல்வதில்
أَخْبَرَنَا إِسْمَعِيلُ
حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ
عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا
سَافَرَ أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا مَعَهُ- الدارمي
ثانياً : القدرة على
الإنفاق على الزوجات :
والدليل على هذا الشرط قوله تعالى : ( وليستعفف الذين لا يجدون نكاحاً
حتى يغنيهم الله من فضله ) النور/33. فقد أمر الله في هذه الآية الكريمة من يقدر
على النكاح ولا يجده بأي وجه تعذر أن يستعفف ، ومن وجوه تعذر النكاح : من لا يجد
ما ينكح به من مهر ، ولا قدرة له على الإنفاق على زوجته
.
ஒரு தாரமே சிறந்தது,
ஒன்றுக்கு மேற்பட்ட
பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கிடையே நீதமாக நடந்து கொள்ள முடியாது என்கிற
போது ஒரு தாரத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற திருக்குர் அனிய கட்டளையை விமர்சகர்கள்
பலரும் கவனிப்பதே இல்லை.
பலதார திருமணத்திற்கான
அனுமதி என்பது தேவையின் பொருட்டு அனுமதிக்கப்படுவதே அன்றி எப்படியும் என் ஜாய் பண்ணுங்கள்
என்று தரப்பட்ட அனுமதி அல்ல.
பல தார மணத்தை
அனுமதிப்பதற்கு ஒரு காரணத்தை திருக்குர் ஆன் சுட்டிக்காட்டாவிட்டாலும் கூட அது பொதுவாக
ஆண்களின் தேவை என்ற அளவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளது,
ஆண்களுக்கு அத்தைகைய
தேவை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
·
முதல் மனைவியில் திருப்தி இன்மை
·
அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளுதல்
·
உறவுகளை பெருக்கிக் கொள்ளுதல்
·
சமூக அல்லது அரசியல் ரீதியான உறவுகளை வலிமைப்படுத்திக் கொள்ள
இந்தக் காரணங்களின்
நியாயம் என்பது ஆழ்ந்து யோசிக்கப்பட வேண்டியதாகும்.
ஒரு பெண்ணில் திருப்தியில்லை
என்ற ஆணுக்கு மாற்றுவழி தரப்பட வில்ல எனில் அவன் இலகுவாக விபச்சாரத்தில் விழுந்து விடுவான்,
அது வைப்பாட்டி
வைப்பதை நியாயப்படுத்தும். நம்முடைய நாட்டின் சட்டம் அப்படித்தான் வைப்பாட்டி மகனை
சட்ட பூர்வ மகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறது,
இன்றும் பலதார
மணத்தை எதிர்க்கிறவர்கள் வைப்பாட்டி நடை முறை எதிர்ப்பதில்லை என்பது ஒரு எதார்த்தமாகும்.
அதே போல விதவைகளின்
பிரச்சனைகளை பெருமளவில் உருவாகுமானால் அதை தீர்ப்பதற்கும் பலதார மணம் உதவியாக இருக்கும்.
அதே போல குழந்தை
பேரிண்மைக்காக இன்னொரு பெண்ணின் வயிற்றை வாடகைக்கு எடுக்கும் வாடகைத் தாய நடை முறை
எனும் அநாகரீகமான மனிதாபிமற்ற நடைமுறைய விட
பல தார மணம் என்பது சிறந்த வழிமுறையேயாகும்.
பலதார மணம் என்பது
வைப்பாட்டிகளாக சட்ட பூர்வமற்ற மனைவிகளாக வாழும் பெண்களின் உரிமையையும் மகிழ்ச்சியையும்
பாதுகாக்கிற ஒரு சிறந்த வழி முறையாகவே இஸ்லாம் இதை அனுமதித்தது,
அது மட்டுமல்ல
எதிர்கால சந்ததிகளின் பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் அதற்கு முக்கிய பங்கு இருக்கிறது,
நெப்போலியன் ஆசை
ஆசையாய் ஜோசபைன் என்ற விதவையை காதலித்து திருமணம் செய்திருந்தான், பிற்காலத்தில் அரச
இலாபத்திற்காக ஆஸ்திரிய இளவரசி மரிய லூயிசை மணக்க வேண்டி வந்தது, திருச்சபை அனுமதி
அளிக்காத்தால் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்தான்,
எனினும் முதல் மனைவியின் நினைவாகவே வாழ்ந்தான், செயிண்ட் ஹலீனா தீவில் அவன் சிறையிலிருந்த
போது ஜோசபைன் என்று முணகிக் கொண்டிருந்தான் என வரலாறு கூறுகிறது,
ஆனால் முஹம்மது
நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியரில் எவரையு ம் விவாகரத்து செய்யாமலே யூத சமூகத்தினருடன்
சமரசமான ஒரு போக்கிற்ற்காக சபிய்யா அம்மாவை திருமணம் செய்தார்கள்.
பல தார மணம் என்பது
ஒரு மறுமலர்சித்தலைவராக பெருமானாருக்கு பல வகையிலும் உதவியது,
பெருமானார் (ஸல்)
அவர்கள் கடைசியாக மைமூனா அம்மாவை திருமணம் செய்தார்கள் , அது காலித் பின் வலீத் – அம்ரு
பின் ஆஸ் (ரலி) போன்ற பெரும் தலைவர்கள் இஸ்லாமை ஏற்க காரணமாக இருந்தது என்பதை வரலாறு
காட்டுகிறது
எனவெ பலதார மணம்
என்பது ஆண்களுக்கான ஒரு இயற்கையான தேவையாக இஸ்லாம் கருதுகிறது,
பெண்களுக்கு அந்த
தேவை இயற்கையாக இல்லை, என்பது மட்டுமல்ல உலகின் இதுவரைக் கூட எந்தப் பெண்ணும் தனக்கு
பல ஆண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி வேண்டும் என்று கேட்கவில்லை,
உனக்கென்ன அப்படி
ஒரு விசேச அனுமதி என ஆண்களைப் பார்த்து கேள்வி கேட்கும் பெண்ணிய வாதிகள் கூட இதுவரை
எங்களுக்கும் அப்படி அனுமதி வேண்டும் என்று கேட்க வில்லை,
பல திருமணம் செய்து
கொள்வது ஆண்களுக்கு ஒரு வசதியாகவும் அதுவே பெண்களுக்கு பெரும் தொல்லையாகவும் இருப்பதை
எதார்த்த சிந்தனை உணர்த்து கிறது,
குழந்தைகளுக்கு
பொறுப்பேற்குதல் குடும்பத்தை கட்டமைத்தல் ஆகிய விசயங்களில் ஒரு பெண் பல ஆண்களை பகிர்ந்து
கொள்வது பெரும் குழப்பத்தையும் சச்சரவுகளையுமே தோற்றுவிக்கும்.
இஸ்லாம் நான்கு
பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்றாலும் நான்கு மனைவியர் வைத்திருக்கும் முஸ்லிம்களின்
எண்ணிக்கை மிகவும் குறைவு அதே போல ஒன்றுக்கும்
மேற்பட்ட மனைவியரின் எண்ணிக்கை அரபு நாடுகளில் பரவலாக காணப்பட்டாலும் கூட பெரும்பாலும் ஒரு மனைவியை கொண்டிருப்பவரே அதிகம்.
மற்ற நாடுகளைப்
பொருத்தும் ஒரு கணக்கெடுப்பு நடத்தப் படுமானால் முஸ்லிம்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட
பெண்மணிகளோடு வாழ்பவர்கலின் எண்ணிக்கை மிக
மிக குறைவுதான்,
பல பெண்களை திருமணம்
செய்து கொள்ள ஆண்களுக்கு இஸ்லாம் பொதுவான அனுமதியை கொடுத்திருக்கிறது என்று முஸ்லிம்கள்
நினைப்பார்கள் எனில் அதுவும் தவறாகும்.
இஸ்லாம் கொடுத்த
தேவைக்கான அனுமதியை முறையற்று முஸ்லிம்கள் பயன்படுத்துவார்கள் எனில் அது மறுமையில்
அல்லாஹ்விடம் பாவமாகும் இம்மையில் இஸ்லாமிய மார்க்கத்தை குறைப்படுத்தும் செயலாகவும்
அமைந்து விடும்.
அதே போல பல தார
மணத்திற்கான அனுமதியை வழங்கிய இஸ்லாம் ஒரு பெண்மணியை திருமணம் செய்து நடப்பில் இருக்கும்
போது அவளுடைய சகோதரியையோ அல்லது அவளது சின்னம்மாக்களையோ திருமணம் செய்து கொள்ளக் கூடாது
என்றும் உறுதியாக உத்தரவிட்டிருக்கிறது, அவ்வாறு செய்தால் அது செல்லாது, அது விபச்சாரமாகிவிடும்.
இவ்வாறான பல்வேறு
உத்தரவுகள் மூலம் பல தார மணத்தின் மூலம் பெண்களின் உரிமைகளும் உணர்வுகளும் பாதுகாக்கப்படுவதற்கான்
ஏற்பாட்டை இஸ்லாம் செய்திருக்கீறது,
மீண்டும் நியாபகப்படுத்து
கிறேன் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் தூண்ட வில்லை, தேவை எனில் செய்து
கொள்ள அனுமதி வழங்குகிறது
இது மனித உணர்வின்
நியதிக்கேற்ற விசயமாகும்.
இன்று நாடாளுமன்றம்
உச்சநீதிமன்றத்திற்கு வழங்கியிருக்கிற ஒரு கருத்து பத்ரிகைகளில் பதிவாகி இருக்கிறது,
கணவன் மனைவியை
நிர்பந்தமாக உறவு கொண்டால் அதை குற்றமாக ஏன கருதக் கூடாது என உச்சநீதிமன்ற மத்திய அரசை
கேட்க அவ்வாறு குற்றமாக கருதினால குடுமப அமைப்பை காப்பாற்ற முடியாது என மத்திய அரசு
கூறியிருக்கிறது,
இதில் ஒரு மனித
தர்மம அடங்கியிருக்கிறதென்றால் இஸ்லாம் பலதார மணத்திற்கு அனுமதி அளித்ததிலும் ஒரு சமூக
தர்மம் அடங்கியிருக்கிறது,
எந்த வகையிலும்
அது ஆண்களின் வக்கிரத்திற்கு துணை போவதல்ல. ஆணாதிக்கச் சிந்தனையும் அல்ல, ஒருவகையில்
சொல்லப் போனால் அது பெண்ணுரிமையை பாதுகாப்பதேயாகும்.
நீதிபதி கமால்பாட்சா
ஷரீஅத் சட்டம் பெண்களுக்கு பாதகமாக இருக்கிறது என்கிறார் ‘
நமது ஷரீ அத் சட்டம்
பெண்களின் உரிமைகளை எந்த அளவுகளில் பாதுகாக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
பெண்களுக்கான சொத்துரிமையில்
எல்லா இடத்திலும் ஆண்களுக்கு கிடைப்பதில் பாதி என பலரும் நினைக்கிறார்கள்,
அது தவறு ஒரு சில
இடங்களில் மட்டுமே தக்க காரணத்தோடு அவ்வாறு பங்கிடப்பட்டுள்ளது,
இஸ்லாமிய வாரிசுரிமை
என்பது ஆண் பெண் என்ற சிந்தனியிலானது அல்ல, பொருளாத கடப்பாடுடையவர்கள் என்ற அடிப்படையிலானதாகும்.
பல கட்டங்களிலும்
ஆண்களுக்கு நிகரான சொத்து பெண்களுக்கு உண்டு,
وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِنْ
كَانَ لَهُ وَلَدٌ
وَإِنْ كَانَ رَجُلٌ يُورَثُ كَلَالَةً أَوْ امْرَأَةٌ وَلَهُ أَخٌ أَوْ
أُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسُ
இன்றை மனித உரிமைச்
சிந்தனையாளர்கள் சொல்லுகிற ஒரு முக்கிய விசயம் எந்த ஒரு மனிதனும் சட்ட பூர்வ உரிமை
பெற்றிருப்பதாகும்.
இஸ்லாத்தை பொறுத்த
வகையில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான சட்டபூர்வ மரியாதை தரப்பட்டிருக்கிறது , இன்றை சமூக
அமைப்பிலும் அது நடப்பில் இருக்கிறது,
பெண்ணின் சாட்சியை
1400 வருடங்களுக்கு முன்பே ஷரீஅத் ஏற்றுள்ளது, \
وَاسْتَشْهِدُوا شَهِيدَيْنِ
مِنْ رِجَالِكُمْ فَإِنْ لَمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّنْ
تَرْضَوْنَ مِنْ الشُّهَدَاءِ أَنْ تَضِلَّ إِحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا
الْأُخْرَى
ஒரு முழு சாட்சியக பெண்ணக் கருத முடியாததற்கு காரண்ம் அதன் மூலம்
தீர்மாணிக்கப்படுகிற விசய்ம பெரிதாக இருக்க கூடும். தடுமாறும் இயல்புள்ள பெண்களின்
சாட்சி இதற்குரிய நியாயத்தை நிறறவேற்ற முடியாது என்பதேயாகும்.
இன்று காவல் துறையில் பெண்கள் அனுமதிக்கப்பட்ட போதும் இரண்டு ஆண்
காவலர்கள் இருக்கிற இடங்களில் நான்கு பெண் காவலர்களும் அதே போல பெண் காவலர்களுக்கு
துணையாக ஆண் காவலர்கள் அனுப்பப் படுவதும் எதார்த்தமாகும்.
ஆனால் அதே நேரத்தில் பெண்கள் மட்டுமே அறிய முடிந்த விசயங்களில்
ஒரு பெண்மணியின் சாட்சியே போதுமானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
تجوز شهادة المرأة الواحدة فيما لايطلع عليه الرجال
تجوز شهادة المرأة الواحدة في
الرضاعة
ويقبل في الولادة والبكارة والعيوب بالنساء في موضع لا يطلع عليه
الرجال شهادة إمرأة واحدة
நபி
(ஸல்) அவர்களின் அரசியல் நிர்வாகத்தில் பெண்கள்
ஆலோசனை சொல்ல அது ஏற்றுக்
கொள்ளப்பட்டிருக்கிறது,
ஜமல் யுத்ததில்
ஒரு சத்திய கோரிக்கைக்காக அன்னை ஆயிஷா ரலி
அவர்கள் ஆலி ரலி க்கு எதிராக
போரிடும் அளவிற்கு தயாராகி இருக்கிறார்கள் . இவை
அரசியல் அரங்கில் பெண்களின் பங்களிப்பை இஸ்லாம் தடை செய்ய
வில்லை என்பதை புலப்படுத்துகிறது,
பெருமானாரின்
போர்களிலேயே பெண்களுக்கு தக்க அளவில் பணிகள் வழங்கப்பட்டுள்ளன,
இன்றும் முஸ்லிம்
நாடுகள் என்று சொல்லப்படுகிற பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானில் தான் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள்
அதிகம். உலகிலேயே இந்த எண்ணிக்கை வேறு எங்கும் கிடையாது, நம்முடைய இந்தியாவிலும் இல்லை,
ஆனால் இன்று
நாம் அவர்களை காட்டு மிராண்டிகள் என்று கேலி பேசிக் கொண்டிருக்கிறோம்.
கேரள உயர்நீதிமன்ற
நீதிபதி அவர்கள் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கேட்ட தோடு உச்சநீதிமன்றம்
அதற்கு செவி சாய்க்காமல் இருக்கிறது என்றும் பேசியிருக்கிறார்,
இது இந்திய
நீதித்துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரும் அவமானம். அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்கும்
மதிப்பளிக்க வேண்டிய நீதிபதிகள் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சமூகத்தாரின்
மனதை புண்படுத்தும் வகையில் பொது இடத்தில் பேசி இருக்கீறா,
ஷரீ அத் சட்டம்
பேசுவோர் தங்களுக்கு அதற்குரிய தகுதி இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும் என்றும் அதே
போல மக்களும் இது குறித்து யோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கீறார்,
நீதிமன்றங்களுக்கும்
இந்தக் கேள்வி ஏன் பெருந்தாது என்பதை அவர் எண்ணிப் பார்க்க வில்லை, மதுவுக்கும் பணத்துக்கு
அடிமையாகிவிட்ட துறைகளில் நீதித்துறையும் ஓன்று,
நீதிபதிகள்
கருத்துச் சொல்வதற்கு முன் அந்தப் பதவிக்கு வந்ததை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்ளாமல்
சமூகத்தின் ஆழிய மதிப்பீடுகளையும் புரிந்து பேச வேண்டும்.
இந்த நாட்டில்
சொந்த அக்கா மகளை திருமணம் செய்வதே சரி என்று சொல்கிற இந்துக்களும் அது கூடவே கூடாது
என்று சொல்கிற முஸ்லிம்களும் இணைந்தே வாழ்கிறார்கள், அதே போல இறைச்சி உணவு சாப்பிடுகிறவர்களும்
அதை அறவே வெறுப்பவர்களும் சேர்ந்தே இருக்கிறார்கள், வெயிலுக்காக தலைக்கு முக்காடு இடுகிற
இராஜபுத்திர பெண்களும். மார்க்க கட்டளைக்காக முக்காடு போடுகிற முஸ்லிம் பெண்களும் கலந்தே
உறவாடுகிறார்கள்,
இந்தக் கட்டுச்
சோறுக்குள் சுண்டெலியை விட நினைக்கிற திட்டமே பொது சிவில் சட்டம், அது சாத்தியமாகாது
என்பது தான் உச்சநீதிமன்றத்தின் தயக்கத்திற்கு காரணம்,
அது வரை இஸ்லாமிய
ஷரீ அத்தை வம்புக்கிழுக்காமல் இருப்பது நீதிபதிகளுக்கு நல்லது,
No comments:
Post a Comment