இன்றைய நம்முடைய
வாழ்வில் பரிகாசம் செய்வதும் அவ்வாறு பரிகசிப்பதைப் பார்த்து இரசிப்பதும் சகஜமான ஒன்றாகிவிட்டது,
அரசியலிலோ பரிகாசமே
ஒரு பெரும் பிரச்சார உத்தியாகிவிட்டது. நன்றாக பரிகாசம் செய்யத் தெரிந்தவர்கள் உத்தமர்களாகிவிடுகிறார்கள்.
நம்முடைய மார்க்கம்
எல்லா வகையான பரிகாசங்களையும் தடை செய்திருக்கிறது,
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ (1)
இந்த வசனத்திற்கு
பொது வாக புறங்கூறி கோல் பேசித்திரிபவர்கள் என்று அர்த்தம் சொல்லப்படுகிறது என்றாலும்
அது மட்டுமே அர்த்தமல்ல.
முகத்துக்கு
நேரேயும் முதுகுப்பின்னாலும் – வெளிப்படையாகவும் சாடையாகவும் குறை பேசுகிற அனைவரையும்
இது எடுத்துக் கொள்ளும் என்பதே முபஸ்ஸிர்களின்
கருத்து.
وَقَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ: وَيَهْمِزُ بِلِسَانِهِ وَيَلْمِزُ
بِعَيْنِهِ. وَمِثْلُهُ قَالَ ابْنُ كَيْسَانَ: "الْهُمَزَةُ" الَّذِي
يُؤْذِي جَلِيسَهُ بِسُوءِ اللَّفْظِ وَ"اللُّمَزَةُ" الَّذِي يُومِضُ
بِعَيْنِهِ وَيُشِيرُ بِرَأْسِهِ، وَيَرْمُزُ بِحَاجِبِهِ وَهُمَا نَعْتَانِ
لِلْفَاعِلِ
கேலி கிண்டல்
நையாண்டி மிமிக்ரீ செய்பவர்களையும் இது எடுத்துக்
கொள்ளும் என முப்தீ முஹம்மது ஷபீ சாஹிப் அவர்கள் மஆரிபுல் குர் ஆனில் கூறுகிறார்.
முஃமின்கள் அனைத்து வகைப்பட்ட பரிகாசங்களை விட்டும்
விலகி இருக்க வேண்டும்.
இந்தக் குற்றங்களுக்கு சொல்லப்பட்ட தண்டனை அத்தகையது,
ويل என்றால் நரக வாசிகளின்
சீழ் வாந்தி யால் நிரம்பி வழிகிற ஓடை என்று பொருள் என் தப்ரீ கூறுகிறார்.,
الوادي يسيل من صديد أهل النار وقيحهم
திருக்குர்
ஆன் இன்னொரு உண்மையையும் மனிதர்களான நம்முடைய புத்திக்கு படுகிற வகையில் உணர்த்துகிறது,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَى
أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ
خَيْرًا مِنْهُنَّ
அடுத்தவர்களை
நீங்கள் பரிகசிக்க அவர் உங்களை விட
சிறந்தவராக இருக்கவோ இனிமேல் அப்படி ஆகவோ
கூடும்.
வரலாற்றில்
நிறைய உதாரணங்கள் உண்டு,
பரிகசித்தவர்கள்
பரிதபமன நிலைக்கு ஆளாகியுள்ளனர்,
وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِنْ قَوْمِهِ
سَخِرُوا مِنْهُ قَالَ إِنْ تَسْخَرُوا مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا
تَسْخَرُونَ
أن عائشة زوج النبي صلى الله عليه وسلم أخبرت قال رسول الله صلى الله
عليه وسلم: كان نوح مكث في قومه ألف سنة إلا خمسين عاماً يدعوهم إلى الله ، حتى
كان آخر زمانه غَرس شجرةً، فعظمت وذهبت كلَّ مذهب، ثم قطعها، ثم جعل يعمل سفينة،
ويمرُّون فيسألونه، فيقول: أعملها سفينة ! فيسخرون منه ويقولون: تعمل سفينةً في
البر فكيف تجري ! فيقول: سوف تعلمون (الطبري )
நபிமார்கள்
எல்லோரையும் எதிர்கள் அவர்களுடைய எளிமையை சாமாணிய நிலையைக்
கண்டு பரிகாசமும் கிண்டலும் செய்திருக்கின்றனர், இறுதியில் நபியின் வெற்றியும் எதிரிகளின்
அழிவும் உறுதிப்பட்டிருக்கிறது,
·
وَلَقَدْ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا
مِنْهُمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُون(10)
·
يَاحَسْرَةً عَلَى الْعِبَادِ مَا يَأْتِيهِمْ مِنْ
رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُون(30)
நபிமார்களை
கேலி பேசியவர்கள் யார் தெரியுமா ? பக்கா தீயவர்கள்!
உலகிலேயே மிக
அநாகரீகமான நடை முறையை கொண்டிருந்த லூத் அலை அவர்களின் மக்கள் லூத் நபியை கேலி செய்தார்கள்
“ இவர் ரொம்ப
பரிசுத்தவான் “
فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا
أَخْرِجُوا آلَ لُوطٍ مِنْ قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ(56)
எத்தகைய பரிகாசத்திற்குரிய மக்கள் ? எவ்வளவு
கொடூரமான தண்டனையைப் பெற்றவர்கள் ? யாரைக் கேலி செய்தார்கள் பாருங்கள்!\
பிறரை கேலி செய்கிற போது நாம் இப்படி ஒரு நிலைக்கு
ஆளாக நேரிடும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
ஒரு உண்மையை அறிந்து கொள்ளுங்கள்!
பெரும் பாலும் கேலி கிண்டல் செய்யும் இயல்புடையவர்கள்
இப்படித்தான் இருப்பார்கள்! அவர்களிடமே கேலிக்குரிய வாழ்க்கை இருக்கும்.
அல்லாஹ் சொல்லுகிற அருமையான வார்த்தை இது عَسَى
أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ
அவர் நம்மை விட சிறந்தவராக இருக்க கூடும்.
இந்த ஒரு வாசகத்தை நாபகத்தில் வைத்துக் கொண்டால்
யாரையும் கேலி செய்ய மனம் வராது,
மட்டுமல்ல,
இதே வாசகத்தை இன்னும் சற்று விரிவுபடுத்தி அவர்
நம்மை விட சிறந்தவராக ஆகக் கூடும் என்று எடுத்துக் கொண்டால் பிறரை கேலி செய்வதைப் பற்றிய
ஒரு அச்சம் கூட ஏற்படும்.
கேலி செய்பவர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு செய்தியை
திருக்குர் ஆன் சொல்கிறது,
கேலி செய்பவர்கள் பெரும்பாலும் கொஞ்சம் பலமான
இடத்தில் இருப்பார்கள், பணம் பதவி ஆள்கூட்டம் ஆகியவை அவர்களுக்கு கேலிக்கான ஊக்கத்தை
கொடுக்கலாம், அல்லாஹ் எச்சரிக்கிறான்.
அவர்கள் கேலி செய்கிறார்கள், அல்லாஹ் அவர்களைப்
பார்த்து நகைக்கிறான், அவர்கள் பிடி படும் போது எப்படிப் துடிப்பார்கள் ? அதற்காகவே
இன்னும் சற்று அதிகமாக பரிகாசத்தில் அவர்களை திழைக்க விடுகிறான்,
اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ(15)
ஒரு சின்ன சருக்கலில் பரிகாசத்தின் மொத்த பலனும்
தம்மையே நோக்கி திரும்பி விட வாய்ப்பிருக்கிறது என்பதை யாரும் நாபகத்தில் வைத்துக்
கொள்ல வேண்டும்.
தமிழகத்தில் நீண்ட நாள் ஆட்சியில் இருந்த ஒருகட்சி
ஒரு தேர்தலில் தோலிவியை சந்தித்தது, புதிதாக் ஆட்சிக்கு வந்தவரைப் பார்த்து முன்னர்
ஆட்சியில் இருந்தவர் இளக்காரமாக இது சப்பிட்டுப் போட்ட எச்சில் இலைதான் என்றார், புதியவர்
எழுந்தார். நிதானமாக சொன்னார், இந்த இலையைப் பார்க்கிற போது தான் நீங்கள் எவ்வளவு சாப்பிட்டுருக்கிறீர்கள்
என்பது தெரிகிறது
கேலியின் என்பது இரு முனையிலும் கூரான கத்தி
எந்த நிமிடத்திலும் நம்மை நோக்கி அது திரும்பி விடும்.
கேலி கிண்டல் நையாண்டி
பரிகாசத்திற்கான கூலியும் பலனும் இங்கேயே கிடைத்து விடும் - அத்தோடு அது மிகப் பரிதாபமாக இருக்கும் என்பது இங்கு
மட்டுமல்ல.
மறுமையிலும் அப்படித்தான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
கஷ்டத்தோடு நடந்து வருவார்கள் வாசல் மூடப்படும்.
உண்மையாக திறக்கும் போது நடந்து வர மாட்டார்கள்.
أخرج البيهقي :
عَنِ الْحَسَنِ رَضِيَ اللَّهُ
عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
" إِنَّ الْمُسْتَهْزِئِينَ بِالنَّاسِ يُفْتَحُ لأَحَدِهِمْ بَابٌ مِنَ
الْجَنَّةِ ، فَيُقَالُ : هَلُمَّ هَلُمَّ فَيَجِيءُ بِكَرْبِهِ وَغَمِّهِ ،
فَإِذَا جَاءَ أُغْلِقَ دُونَهُ ، ثُمَّ يُفْتَحُ لَهُ بَابٌ آخَرُ ، فَيُقَالُ
لَهُ : هَلُمَّ هَلُمَّ ، فَيَجِيءُ بِكَرْبِهِ وَغَمِّهِ ، فَإِذَا جَاءَ
أُغْلِقَ دُونَهُ ، فَمَا يَزَالُ كَذَلِكَ ، حَتَّى إِنَّ الرَّجُلَ لِيُفْتَحُ
لَهُ الْبَابُ ، فَيُقَالُ لَهُ : هَلُمَّ هَلُمَّ ، فَمَا يَأْتِيهِ
"
பரிகாசம் கேலி கிண்டல்
வேலையில் ஈடுபடக் கூடாது என்பது மட்டு மல்ல.
இவ்வாறு பரிகாசம் செய்யப்படுகிற
சபைகள் கூட்டாளிகளை விட்டும் கூட விலகிக் கொள்ள வேண்டும். சும்மா கேட்டுக் கொண்டு வேடிக்கை
பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்தாலும் அவர்களைப் போலவே நாமும் குற்றவாளிகளாகிவிடுவோம்
என குர் ஆன் எச்சரிக்கிறது,
وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ
اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ
حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ
إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا(140)
என்வே நாம் எல்லா நிலையிலும் இந்த பரிகாசப் பாதையிலிருந்து விலகி நின்று விட
வேண்டும்.
அவ்வாறு விலகி நிற்கிற ஒரு பழக்கம் நமக்கு ஏற்பட்டு
விடும் என்றால் நாம் பாக்கிய சாலிகள் தான்,
இந்தியாவில் தீன் பரவ காரணமாக இருந்த முதல்
மார்க்கப் பிரச்சாரகர் மாலிக் பின் தீனார் (ரலி) ஜபூரிலிருந்து ஒரு செய்தியை மேற்கோள்
காட்டுகிறார்,
وأخرج أحمد عن مالك بن
دينار قال : في الزبور مكتوب، وهو أول الزبور :
طوبى لمن لم يسلك سبيل الآثمين، ولم يجالس الخطائين، ولم يقم في هم
المستهزئين،
துரதிஷ்ட வசமாக இன்று மார்க்கத்தை பேசுகிறோம்
என்று புறப்பட்ட பேர்வழிகள் கேலியையும் கிண்டலையும் பரிகாசத்தையுமே மூல தனமாக வைத்திருக்கிறார்கள்,
அது மட்டுமல்ல
அவர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கிற ஒரு மடக் கூட்டம், இந்த கேலியும் கிண்டலும் மார்க்கம்
விசயத்தில் கூடாதல்லவா என்பதை பற்றி சிறிதும் யோசிக்காமல் அந்த கிண்டலையும் கேலியையும்
இரசித்துக் கொண்டிருக்கிறதும்
இல்லை, இல்லை, தம்முடைய ஈமானையும் ஹிதாயத்தைய்ம்
தொலைத்துக் கொண்டிருக்கிறது,
மாக்கத்தை விளங்கிக் கொள்ள முய்ற்சிக்கிற யாரும்
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
நபி மார்கள் ஒரு போது கேலி கிண்டல் பரிகாசத்தை
தமது வழி முறையாக கொண்டதில்லை,
நபிமார்கள் மட்டுமல்ல், உலக அளவில் நல்லவர்கள்
யாருக்கும் அந்தப் பழக்கம் இருந்ததில்லை,
கேலி நையாண்டி பரிகாசம் என்பது முட்டாள்களின்
நடவடிக்கை,
திருக்குர் ஆன் இந்த உண்மையை மூஸா அலை அவர்கள்
மூலமாக உணர்த்துகிறது,
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا
بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنْ
الْجَاهِلِينَ
இந்த பரிகாச இயல்பையும் அதை இரசிக்கிற் இழிவான
மனிதர்களின் கூட்டமும் தான் இன்றைய தமிழ் முஸ்லிம் சமூகத்தில் முஸ்லிம்களாக இருந்த
பலர் இஸ்லாத்திலிருந்தே வெளியேறிவிட்ட பிளவுகளுக்கு காரணமாகும்
மெளலூது ஓது கிற போது சில இடங்களில் ஓதப்படுகிற
மெட்டுக் களைப் பற்றி ஓதுகிற ஆட்களுக்கோ அல்லது அதை கேட்கிற மக்களுக்கோ சினிமா பாட்டுக்கள்
ஒரு போது ம் நாபகம் வந்ததில்லை,
அற்புதமான கருத்துக்களை உடைய மெளலூதின் வரிகளை
ஒட்டகத்தை கட்டிக்கோ என்ற சினமா பாடலின் மெட்டில் பாடியதை கேட்டு இரசித்தவர்கள் அவ்வாறு
கேலிக் கூத்துக் காட்டியவர்களின் பின்னே மார்க்கம் என்று சென்றவர்கள் முட்டாள்களே!
அல்லாஹு காலிகுனா அல்லாஹு ராஜிகுனா என்ற அற்புதமான
பாடலை இழுத்து இழுத்து பாடி விட்டு இதென்ன குண குணா என்று பாடுகிறார், இவர் கமலின்
ரசிகரா என்று ஷிர்க் மாநாட்டில் கேலி பேசியதை இரசித்தவர்கள் முட்டாள்களே
மார்க்க சட்ட நூல்களை கேலி செய்து பேசியதை இரசித்தவர்கள்
முட்டாள்களே!
மிருகங்களை புணர்ந்த மனிதனைப் பற்றிய சட்டம்
சட்ட நூலில் இருக்கிறது, பல சட்டங்களை சொல்லி விட்டு அவன் மீது குளிப்பு கடமையாகாது
என அறிஞர்கள் கூறுகின்றனர், அதற்கு காரணம் குளிப்பு என்பது ஒரு வணக்கம், அந்த வணக்கத்திற்கு
இந்த அசிங்கம் பிடித்தவன் தகுதியானவனல்ல என்று சட்ட நூல்கள் கூறினால் .
என்ன கேவலமான சிந்தனை பாருங்கள்! என்று பரிகசித்ததை
ஏற்றுச் சிரித்தவர்க முட்டாள்களே!
நம்முடை முன்ன்னோர்களை - இமாம்களை - அறிஞர்களை இந்த கிதாபுகளின்
ஆசிரியர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
உங்களை விட வும் உங்களுடைய யோக்கியதையை விடவும்
தாழ்ந்தவர்கள் எனறா நினைத்தீர்கள் ?
சற்றேனும் இந்த இமாம்கள் நூலாசிரியர்களின் எதார்த்தமான
வாழ்க்கையையும் அந்த வாழ்க்கை குறித்து வரலாறு கூறும் சான்றுகளையும் சற்று யோசித்திருப்பீர்களானால்
இவ்வாறு சிரிக்கவும் இரசிக்கவும் தோன்றுமா?
இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் மிருகத்துடன் புணர்பவன் என்ற தலைப்பின் கீழ் பின்வரும் ஹதீஸைப் பதிவு செய்துள்ளார்கள்.
மிருகத்துடன் புணர்பவனையும் அம்மிருகத்தையும் கொன்று விடுங்கள் என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூற்கள் : அபூதாவூத் 4 : 159, அஹ்மது 1 : 359, பைஹகீ 12 : 462)
இந்த
ஹதீஸில் மிருகத்துடன் உறவு கொள்பவன் பற்றி செய்தியுண்டு.
விலங்குகளுடன்
உறவு என்பது பற்றி விக்கீ பீடியா தரும் தகவல்களை பாருங்கள்!
·
விலங்குகளுடனான பாலுறவு (Zoophilia) என்பது மாந்தர் ஒருவர் மனிதரல்லாத விலங்குகளுடன் பாலுறவு கொள்ளுதல் ஆகும். ஜூப்பியா என்ற கிரேக்க வார்த்தைக்கு விலங்குகளுடன் காதல் கொள்ளுதல் என்று பொருள். பெஷ்ட்டியாலிட்டி (Bestiality) என்பது மனிதன் விலங்குகளோடு பாலுறவு கொள்ளுதல் ஆகும்.
·
விலங்களுடனான பாலுறவு கொள்ளுதலை "மனச்சிதைவு நோயின் வெளிப்பாடு" என ஆராய்சியாளர் Stephanie LaFarge தெரிவிக்கிறார். இவர் நியூ ஜெர்சி மருத்துவ பள்ளியில் துணை பேராசிரியாக இருப்பவர். இவ்வாறான பாலுறவு கொள்ளும் நபர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தினைக் குறிப்பிடுகிறார். இது ஒரு மன நோய் என்றும், இவ்வாறு செய்பவர்களை மனநோயாளிகள் என்றும் கூறுகிறார். மற்றொரு ஆராய்சியாளர் Kinsey நான்கு சதவீத ஆண்களும், மூன்று புள்ளி ஐந்து சதவீத பெண்களும் இவ்வாறான உறவில் ஈடுபடுவதாகக் குறிப்பிடுகிறார்.
·
8000 BC லிருந்து இந்த விதமான உடல் உறவு இருந்ததற்கான அத்தாட்சியாக வடக்கு இத்தாலியில் காணப்பட்ட ஓவியம் உள்ளது. இந்தியாவில் உள்ள கஜோரோ கோயில் வெளிப்புறத்தில் உள்ள சிற்பத்தில் ஒரு குதிரையுடன் ஒரு ஆணின் இணைவுக் காட்சி உள்ளது.
·
சில நாடுகளில் விலங்குகளுடனான பாலுறவு கொள்ளுதல் தடை செய்யப்படா விட்டாலும், பெரும்பாலான நாடுகளில் மிருக வதைச் சட்டத்தின் கீழும், இயற்கைக்கு மாறான குற்றம் என்ற வகையிலும் இவ்வகைப் பாலுறவு சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தியத் தண்டனைச் சட்டம் IPC377 ல் இவ்வாறான பாலுறவுக் குற்றம் என கூறப்பட்டுள்ளது.
·
இந்து, கிறித்துவ மக்களின் திருமணச் சட்டத்தில் தகாத உறவுகளோடு விலங்குகளோடு வைத்துக் கொள்ளும் புணர்ச்சியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு இழிவான நடை முறை குறித்து சட்டங்களை பேசி வருகிற போது குளிப்பு கடமையாகாது என்று சொன்னதற்கு காரணம் எனன கூறுகிறார்கள் என்பதைக் கூறாமல்
என்ன அசிங்கம் பாருங்கள்! எவ்வளவு கீழ்த்தரமான யோசனை பாருங்கள் என்று கேலி பேசுவதும அதை கேட்டு சிரிப்பதும் சட்டநூல்களின் தரத்தை அறியாத முட்டாள்களின் இயல்பே !
இது போல வே மார்க்க சட்ட நூல்களில் உள்ளதாக எழுப்பட்ட அனைத்து கேலிகளும் கிண்டல்களும் எந்தக் கோணத்தில் எதற்காக் சொன்னார்கள் என்பதை விவரிக்காமல் ஏதோ ஆபாசப் பிரியர்களாக வக்கிரம புத்திக் காரர்களாக முன்னோர்களை கருதிச் சிரிப்பவர்களை விட தற்காலத்தில் முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது,
இந்திய குற்றவியல் சட்டத்தில் கற்பழிப்புக்கான
சட்டம் குறித்து பேசுகையில் பல வகையான சொற்கள் இடம் பெற்றிருக்கிறது, குற்றங்களுக்கான
தண்டனைகளை விளக்கும் சமயத்தில் அதில் சொல்லப்படும் வார்த்தைகளை ஆபாசமாக பார்க்கிறவர்கள்
பால் கொடுக்கும் தாயை ஆபசக் கண்ணோடு பார்ப்பவர்களை போன்றவர்களே!
அது
போல இமாம் அபூஹனீபா ரஹ்
அவர்கள் 55 ஹஜ் செய்தார்கள் என்ற
மத்ஹபு சட்ட நூலின் தகவலை
தமது சுய விருப்பத்தின் படி
கேலியும் கிண்டலும் செய்யப்பபட்ட போது
அதை இரசித்தவர்கள் முட்டாள்களே!
70 வயது வாழ்ந்த
மனிதர் – தன்னுடை 7 வது வயதில் தந்தையுடன் முதல் ஹஜ்ஜு செய்தவர் 55 ஹஜ்ஜு செய்தார்
என்பதை ஏற்பதில் கேலிக்கு என்ன இடம் இருக்கிறது,
·
سقيان بن عيينة
–
·
عطاء بن أبي
رباح
·
ابوعامر خداش
النيسابوري – احد شيوح البيهقي
போன்ற பெருமக்கள் – ஹதீஸ் கலை அறிஞர்கள் –
70 தடவை ஹஜ்ஜு செய்துள்ளார்கள் என்று வரலாறு கூறுகிறது,
فرحم الله سفيان بن عيينة فإنه قد قيل إنه في آخر سنة حج قال: جاوزت
هذا الموضوع سبعين مرة، وأقول في كل مرة: الله لا تجعله آخر العهد في هذا المكان،
وإني قد استحييت من الله من كثرة ما أسأله ذلك، فرجع فتوفي في العام القابل ودفن
بالحجون بمكة.
இதற்கு
மேல் அல்லாஹ்விடம் கேட்க வெட்கப்படுகிறேன் என்ற
சுப்யான் (ரஹ்) அந்த வருடம்
வபாத்தானார்கள்.
அம்ரு
பின் மைமூன் அல் அவதி
நூற்றுக்கு அதிகமான ஹஜ் உம்ரா
செய்திருக்கிறார்கள்
قال أبو إسحاق : حج عمرو
بن ميمون ستين مرة من بين حجة وعمرة وفي رواية ، مائة مرة – سير اعلام النبلاء
நாம்
வாழ்கிற இந்தக் காலத்தில் நாற்பது
ஹஜ் செய்தவர்களை சாமானியமாக பார்க்கிற போது இமாம் அபூஹனீபா
கூபா வில் இருந்து 55 தடவை
ஹஜ் செய்திருப்பதில் என்ன கேலி வேண்டிக்
கிடக்கிறது,
இந்தப்
பரிகாசம் மொத்ததிற்கும் காரணம் அல்லாஹ் இத்தகைய
மனிதர்களிடமிருந்து ஹிதாயத்தின் நஸீபை எடுத்து விட்டதே
காரணமாகும்.
இதே போல இமாம்
அபூஹனீபா நாற்பது வருடங்கள் இஷாவுக்கு செய்த ஒளுவைக் கொண்டு சுபுஹ் தொழுதார்கள் என்று
ஒரு தகவல் கிடைத்தால் அது அந்தப் பெருந்தகையை பற்றி பெருமிதமாக சொல்லப்பட்ட ஒரு தகவல்
என்பதை எப்படி ஏற்றுக் கொள்ளனுமோ அப்படி ஏற்றுக் கொள்ளவேண்டும்,
நான் 30 வருடமா
துபாயில் இருக்கிறேன் என்றால் அவர் தன் சொந்த ஊருக்கு ஒரு முறை கூட போனதில்லை என்று
அர்த்தமல்ல, அதை எப்படி எடுத்துக் கொள்ளனுமோ அந்த முறையில் இந்த சிறப்பை எடுத்துக்
கொள்ளாமல் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டதை யார் இரசித்தார்களோ அவர்கள் முட்டாள்களே!
நாங்கள் இமாமை
கேலி செய்ய வில்லை இமாமின் பெயரால் இத்த்கைய செய்திகளை சொன்னார்களே அவர்களை கேலி செய்கிறோம்
என்று சொல்கிறார்கள்.
அடி முட்டாள்களா
? உங்களை சிரிக்க வைக்கீற கோமாளியை விட இந்த கிதாபின் ஆசிரியர் ஒன்றும் மோசமாக இருக்க
முடியாது என்று ஏன் சிந்திக்க தவறினீர்கள்
اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ(15
ஆலிம்களை
கேலியும் கிண்டலும் செய்து பேசியதை இரசித்த
இளைஞர்கள்
முட்டாள்களே!
ஷிர்க் மாநாட்டில்
ஒருத்தன் பேசினான், ஆயிரக்கணக்காணோர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.
ஒரு ஆலிமை பார்க்கப்
போனேன், பாதம் பிஸ்தா டப்பா டப்பாவா வச்சிருந்தார், உங்களுடைய கொறஞ்ச வருமானத்திலே இதெல்லாம் எப்படி என்றேன்,
இது மெளலூது
சீஸன் தானே! மெளலூதுக்கு போகும் போது பாதமும் பிஸ்தாவும் சீரணியா வெச்சிருப்பாங்க இடையிலே
கரண்ட் போகும் போது கையை போட்டு எடுத்துக்குவேன், என்று அந்த ஆலிம் சொன்னார் என்ற காமெடியை
கேட்டு இரசித்தவர்கள் முட்டாள்கள் அல்லாமல் வேறு யார்?
நீங்கள் கேலி
பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா ? லூத் அலை அவர்களின் மக்கள் லூத் நபியைப் பார்த்து
கேலி பேசியதை ப் போன்ற தல்லவா உங்களுடைய கேள்வி.
பீஜேவுக்கு அவருடைய முன்னாள் கூட்டாளி பஜ்லே இலாஹி
கடிதம் இப்படிப் போகிறது,
நண்பராக பழகின காலத்தில் லுஹா சொன்னவை எல்லாம் உண்மையா பொய்யா?
நண்பராக பழகின காலத்தில் லுஹா சொன்னதில் எதுவெல்லாம் பேச்சுக்கு சொன்னது என்பதையும்அவரிடம் கேட்டு பதில் எழுதுங்கள். சிரமம் என்றால் ஒவ்வொன்றாக கேட்டு எழுதுங்கள்.
மதுரையில் 2000ல் நடந்த மாநாட்டின் போது பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும்பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜே. கிடந்தார். மதரஸா மாணவிகளையேசுற்றி சுற்றி வந்தார். மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என பி.ஜெ.யை சுற்றிச் சுற்றிவந்தார்கள். எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் சுலைமானும்நானும் இர்ஷாத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம்.இவ்வாறு ஷம்சுல்லுஹா பழகின காலத்தில் என்னிடம் கூறினார்.
இவ்வாறு சுட்டிக்காட்ட எண்ணற்ற செய்திகள் இருக்கின்றன,
ஆலிம்களை மத்ஹபு நூல்களின் ஆசிரியர்களை இமாம்களை சஹாபாக்களை பரிகசித்தவர்கள் வந்து
நின்ற இடம் எது தெரியுமா ?
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களையே அவர்கள் கேலி செய்ய தொடங்கிவிட்டனர்,
அவர்களுடன் இருந்து விட்டு சமீபத்தில் வெளியான அப்பாஸ் அலி பேசுகிறார்;
பிஜே வும் அவருடைய ஆட்களும் ஹதீஸ்களை களங்கமாக சித்தரித்து – தறி கெட்டத்தனமாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கேலி
கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்,
இது முஃமினுடைய நல்ல குணமா?
தெருவில்
போற அயோக்கியனை எப்படி பார்போமோ அப்படி ரஸூலைப் பார்க்கிறார்கள்,
ஹதீஸ்களை பொருந்தாத இடங்களில்
பொருத்துவது – கேலி செய்வது முஃமினுக்கு பொருத்தமன வேலையல்ல,
அந்த வேலைய இவர்கள்
செய்து கொண்டிருக்கிறார்கள்
இவர்களோடு
தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது பழகக்கூடாது.
எல்லா இமாம்களும் ஹதீஸ்கலை அறிஞர்களும் ஏற்றுக் கொண்ட
ஹதீஸ்கள் ஒருத்தருக்கு
மட்டும் அசிங்கமா தெரியுது அப்படீன்னா அவருடைய சிந்தனையிலே அசிங்கம் இருக்குது என்பது தான் அர்த்தம்
அப்பாஸ் அலி இன்னும்
நிறைய கூறுகிறார், இந்த சிறு பகுதி நமக்கு போதுமானது,
நம்முடைய நோக்கம் யாரையும் பரிகசிப்பதல்ல.
பரிகசிப்பவர்கள் நல்லவர்கள் அல்ல. சத்திய மார்க்கத்தை
பிரச்சாரம் செய்கிறவர்களிடம் இத்தகைய குணம் இருக்காது. பரிகாசம் செய்கிறவர்கள்
முட்டாள்களாகவும் . இழிந்தவர்களாகவும் இருப்பார்கள் என்பதை சுட்டிக்காட்டுவது
தான்,
இத்தகைய குணம் கொண்டவர்கள். இத்தகைய குணததை இரசிப்பவர்கள் இதன் பின்னே செல்கிறவர்கள்
முட்டாள்களே எனபதையும் சுட்டிக் காட்டுவது தான்,
அல்லாஹ் நம்மையும் நமது சந்ததிகளையும் இத்தீய பழக்கத்திலிருந்தும் இத்தீய சக்திகளிடமிருந்தும்
பாதுகாப்பானாக!
ORU ARUMAYANA AAKKAM BARAKALLAHU ILMAKA
ReplyDelete